Tuesday, June 24, 2008

ஒளிரும் புழுக்கள் ( தொடரின் நிறைவுப் பகுதி)

அந்த மலைப்பாதை முழுசும் ரெண்டு பக்கங்களிலும் பெயர் தெரியாத ஏதேதோக் காட்டுப்பூக்கள், பல வண்ணங்களிலும் 'கொல்'ன்னு பூத்துருந்துச்சு.
இன்னொரு படகில் ஏறுனதும் சாப்பாடு ஆச்சு. அதுதான் சவுண்டுப் பயணம்.



வழி நெடுக அங்கங்கே சின்னக் குன்றுகளில் கடல் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாப் படுத்துருக்குங்க. அதனால் கரையை ஒட்டி ரொம்ப ஓரமா இல்லாம நடுவிலேயே படகு போகுது. கொஞ்சம் குறுகலான இடம். ரெண்டு பக்கமும் மலைகள் கைக்கு எட்டும் தூரத்தில். இங்கேயும் சின்னச் சின்னதா நீர்வீழ்ச்சிகள் எல்லாப் பக்கங்களிலும். எதுவுமே கூடிப்போயிட்டால் ஒரு அலட்சியம் வந்துருமில்லே? அதேதான்.... அதோ...நீர்வீழ்ச்சி! இருந்துட்டுப் போகட்டுமே.........



ஒரு பெரிய குளம் போல இருக்கும் இடத்துக்கு வந்ததும், 'இங்கே டால்ஃபின்கள் இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாமுன்னு கேப்டன் சொன்னார். சுத்திவரப் பார்த்துப் பார்த்து ஏமாற்றமா ஆயிருச்சு. ஒன்னும் காணலை. கேப்டன் படகின் எஞ்சினை நிறுத்தினார். யாரும் பேசிக்கலை. நிசப்தமா இருக்கும் சூழலில் திடீர்னு ஒரு 'க்ளக்'ன்னு மெலிசாக் கேட்டுச்சு.'



அட! டால்ஃபின்! குதிச்சு மறைஞ்சது. ஒரு நிமிசம் மறுபடி நிச்சலனம். இப்பப் படகைச் சுற்றி எல்லாப் பகுதிகளிலும் 'க்ளக்' சப்தமும் துள்ளலுமா அங்கே ஒரு நாட்டிய நாடகம். ஆஹாகாரமும் ஊஹாகாரமுமா நாங்க எல்லாரும். பலே பலே பேஷ் பேஷ் சபாஷ்.......கைதேர்ந்த இயக்குனரின் கட்டளைக்கு ஆடும் நடன மங்கையர்கள். முதல்லே வந்து பார்த்துட்டுப்போனது பைலட். ஆடியன்ஸ் எல்லாரும் வந்தாச்சான்னு பார்த்து அரங்கத்தை ஸ்டடி பண்ணுமோ?


அங்கிருந்து படகு கிளம்பி ரொம்ப மெதுவா( டால்ஃபின் ஏதும் அடிபட்டுக்காத வேகம்) ஓட்டிக்கிட்டே டாஸ்மன் கடலுக்கு வந்துட்டோம். குளம் மாதிரி இருந்த சூழல் மாறி தண்ணீர் தூக்கித்தூக்கி அலையா ஆட்டுது. எனக்கு ஸீ சிக்னெஸ் உண்டு. தாக்குப் பிடிக்க முடியாமல் தலை சுத்துது. வாந்தி வரும்போல வயித்தைப்பிரட்டிக் குமட்டல். ஓடிப்போய் பாத்ரூம் சிங்லே தலை குனிஞ்சவள்தான். திரும்ப மலை அடிவாரப் படகுத்துறை வரும்வரை அங்கேயே இருக்கவேண்டியதாப் போச்சு(-:



காத்து நின்ன பஸ்ஸில் ஏறி மலைக்கு இந்தப் பக்கம் இன்னொரு படகுத்துறையில் கொண்டுவந்து விட்டாங்க. அஞ்சு நிமிசத்துலே காலையில் இங்கே கொண்டுவந்து விட்டுப்போன படகு வருவது தூரத்துலே கண்ணுக்குப் பட்டது. அதுலே ஏறி மானாபுரி துறைக்கு வந்து சேர்ந்தோம். காலையில் அங்கே நிறுத்திட்டுபோன காரில் அறைக்கு வந்தாச்சு.



மறுநாள் இடத்தைக் காலி செஞ்சுறப்போறோமேன்னு கேம்பின் உள்ளே கொஞ்சம் சுத்துனால்..... பசங்க விளையாட ப்ளேன் எல்லாம் வச்சுருந்தாங்க. வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தையே அழகான சிம்மாசனமா செஞ்சு வச்சுருக்காங்க. நானும் அதில் அமர்ந்து அருள் பாலிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஒருநாள் பயன்படாமலா போயிரும்? அழகான அமைதியான இடம். முக்கியமா இங்கே டிவியில் ஒரு சேனல் மட்டுமே வேலை செய்யும்.




( மேலே உள்ள படத்தை ஸ்கேன் பண்ணச் சோம்பல்பட்டுக்கிட்டு ஃபோட்டோ எடுத்துப் போட்டுருக்கேன்)



மறுநாள் காலையில் 10 மணிக்குக் கிளம்பி டெ அனா(வ்) வந்தோம். 15 நிமிஷ ட்ரைவ்தான். கடைசி அட்ராக்ஷன்ன்னு க்ளோவொர்ம் கேவ்ஸ் பார்க்கணும். டெ அனாவ் ஏரியில் படகுத்துறையில் காத்து நிற்கும் படகில் பயணம்.. அரைமணி போல இருக்கலாம். மேற்குக்கரையில் ஒரு கட்டிடம் போல இருந்த இடத்துலே இறங்குனோம். எங்களுக்கு முன்பே வந்த ஒரு கூட்டம் அங்கே நிக்குது. வழிகாட்டி ஒருத்தர் வந்து குகையின் கதையைச் சொன்னார். மவொரிகளின் வச்ச பெயராம் இந்த டெ அனாவ் என்பது. குகையும் அதுக்குள்ளே கொப்புளிச்சுப்போகும் வெள்ளமும் என்று பொருளாம். அவுங்க ஆங்கிலத்தில் சொன்னது இதுதான்னு நினைக்கிறேன்.



முக்கியமா போட்டோ எடுக்க அனுமதி இல்லையாம். ஃப்ளாஷ் வெளிச்சம் அந்த ஒளிரும் புழுக்களுக்கு ஆபத்தாம். சத்தம்கூட இதுகளுக்குப் பிடிக்காதாம்.
(அங்கே தண்ணீர் போடும் சத்தத்தை விடவா?)1950களின் இறுதியில்தான் இந்தக் குகையை வெளியாட்கள் வந்து பார்த்துப்போகும் வசதிகளைச் செஞ்சாங்களாம்.



ஏழெட்டுப்பேர் மட்டுமே ஒருமுறை உள்ளே போகலாமாம். குகைக்குள்ளே கொண்டு போனார். மெலிசான வெளிச்சத்தில் இரும்புக் கிராதிகளைப் பிடிச்சுக்கிட்டே நடக்கறோம். சில இடம் ரொம்பவும் குறுகலா இருக்கு. தண்ணீர் சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. குகையின் கூரையிலிருந்து வெள்ளி நூல்நூலா இறங்கிவருது. இது limestone குகையின் stalagmites போல இருப்பதில் எங்கிருந்தோ ஒரு மெல்லிய வெளிச்சம் வந்து விழுவதால் ஜொலிப்பு தூக்குது.


குனிஞ்சு வாங்கன்னு எச்சரிக்கை வருது. தலையை இடிக்கும் பாறைகள். வளைவில் திரும்புனதும் பொங்கிவரும் தண்ணீர்.
அதுலே ஆடும் படகு. ரொம்பச் சின்னது. கவனமா ஒவ்வொருத்தரையும் கையைப் பிடிச்சு படகில் ஏத்துனாங்க. கனமான இரும்புக் கயிறு(கேபிள்) குகையின் சுவர்களில் இணைச்சிருக்கு. அதைப் பிடிச்சுக்கிட்டேப் படகை நகர்த்தறார் படகோட்டி. தலையைக் குனிஞ்சுக்குங்கோன்னு ஒரு கட்டளை. சின்னதா இருந்த ஒரு இடைவெளியில் படகு நுழைஞ்சது. ஒரே இருட்டு. கண்ணே தெரியலை. எல்லாரும் குனிஞ்ச தலை நிமிராம மூச்சை அடக்கிப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம்.


மேலே பாருங்கன்னார். அட! நம்ம பாரதியார், வந்துட்டுப் போனாரா என்ன?

பட்டுக் கருநீலம் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி


இதைவிட வேற யாராவது விளக்க முடியுமா?





திரும்ப இரும்புக்கயிறு வழிகாட்டப் படகு வெளியில் வந்தது. கவனமா இறக்கிவிட்டதும் கைப்பிடிக் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே வெளியில் வந்தோம். மறுபடி படகுத்துறை, படகுச் சவாரின்னு டெ அனாவ் ஊர்ப்பக்கம் கரைக்கு வந்து சேர்ந்தோம். இதுக்கே 3 மணி நேரம் ஆச்சு.



இந்தப் புழுக்கள் பார்க்க எப்படி இருக்குமுன்னே தெரியலை. சாதாரணப்புழுக்கள் மாதிரிதான் இருக்குமாம். பிசுபிசுன்னு அதுங்க வெளியேத்தும் ஒருவிதமான திரவத்தில் மேற்கூரையோடு ஒட்டிப்பிடிச்சுக் கிடக்குமாம். எதாவது சின்ன பூச்சிகள் இதோட வெளிச்சத்தால் கவரப்பட்டு அங்கே போனால் அந்த பிசினில் ஒட்டிக்கும். அதை இதுகள் ஸ்வாஹா செஞ்சுரும். நகர்ந்துக்கிட்டே போகுமுன்னு சொன்னாங்க. பார்த்தா அப்படித் தெரியலை.


படங்கள் எடுக்க அனுமதி இல்லாததால் இங்கேபோய்ப் பாருங்க. அவுங்களே சில படங்களைப்போட்டு வச்சுருக்காங்க.



குவீன்ஸ் டவுன் வழியா கிறைஸ்ட்சர்ச்சுக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட 10 மணி நேர ட்ரைவ். வரும் வழியில் வழக்கம்போல் எங்களைக் கண்டுக்கிட்ட கூட்டம் (உண்மையான கூட்டம் இதுதாங்க. எங்க ஒவ்வொருத்தருக்கும் 14 ஆடுவீதம் இருக்கு!!)



கூடவே வந்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.


பி.கு: சின்ன சைஸில் இருக்கும் 3 கு(பு)கைப்படங்கள் சூடா இருக்கும். பார்த்துக் கவனமா இருங்க. சுட்டதாச்சே.......:-)))))


இன்னொரு விஷயம் சொல்ல விட்டுப்போச்சு. இந்தப் பயணம் போய்வந்தது சமீபத்தில்தான், ஒரு 13 வருசமாச்சு. இன்னும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கு. மலையை நகர்த்திவைக்க யாரால் முடியுது? நம்ம சின்ன அம்மிணியைத் தவிர:-))))




40 comments:

said...

BBC- குகையில்(நிகழ்ச்சி) இதைப்பார்த்தேன்.
இப்புழு இரையை முழுங்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது.

said...

வாங்க குமார்.

நீங்க பார்த்தீங்களா? அடடா......

கைவசம் இருந்தா வலை ஏத்துங்களேன்.

Anonymous said...

//இன்னும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கு. மலையை நகர்த்திவைக்க யாரால் முடியுது? நம்ம சின்ன அம்மிணியைத் தவிர:-))))// துளசியாந்தமயி எனக்கு அருள் பாலித்ததால் பிழைத்தேன். ஹிஹி

said...

//நானும் அதில் அமர்ந்து அருள் பாலிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். //


துளசி அம்மா,

நியூசியில் அருள்பாலிக்க மற்றொமொரு அம்மே. கூடவே அங்கே வந்த அம்...மே (ஆடுகள்) கூட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள். பெருங்கூட்டத்தை உடனே கூட்டவேன்றுமென்றால் அதுதான் உடனடி தீர்வு.

கோட்டானந்தமயி (Goataanthamaye) என்று பெயரெடுக்கலாம்.

:)

said...

தொடரைப் பற்றி ...

படிக்கும் போது சுற்றிப்பார்த்த எபெக்ட் இருக்கு என்று பொய் சொல்ல முடியாவிட்டாலும்... படங்களும் செய்திகளும் அழகான இயற்கை இடங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பாராட்டுக்கள் அம்மா !

said...

Thanks thanks thanks..

மெய் சிலிர்க்குது..அருமையான படங்கள்..மர சிம்மாசனம் அழகிய தர்பார்..
Grand Canyon போனபோது இரவில் eco friendly lodgeல் தங்கிய போது பட்டுக்கரு நீலப்புடவை பதித்த நல் வைரம் தான் நினைவுக்கு வந்தது..

இன்னும் பல இடங்களுக்கு சென்று பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

said...

அருள் பாரும் தெய்வ மாதாவே:)
நான் அப்பவே கண்டு பிடிச்சிட்டேனே இது முன்னால போயிட்டு வந்ததுன்னு:)

அம்மா நல்ல இளமையா இருக்காங்களே.:)
மகாப் பொறுமையா நோட்ஸ் எடுத்து பதிவும் போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்மா.

said...

வாங்க சின்ன அம்மிணி.

எல்லாத்துலேயும் 'ஆனந்தம்' இருக்கணுங்கறீங்க....
அது:-))))

said...

வாங்க கோவியாரே.

//படிக்கும் போது சுற்றிப்பார்த்த எபெக்ட் இருக்கு என்று பொய் சொல்ல முடியாவிட்டாலும்... //

இது ரொம்பச் சரி. நம்ம ஒவ்வொருத்தருக்கும் பார்க்கும் பார்வைகள் வெவ்வெறு இல்லையா?

ஒரே சமயத்துலே ஒரே பயணத்துலே இருந்த என்னோட 'கெமெராக் கண்ணும்', கோபாலின் வீடியோ கெமெராக் கண்ணும் ஒன்னாவா இருக்கு:-))))

said...

வாங்க வெற்றிமகள்.

நீங்களும் உங்க அனுபவங்களை எழுதுங்க.

ஒன்னொன்னும் ஒருவிதமில்லையா?

said...

வல்லி வாங்கப்பா.

அச்சச்சோ.......

13 வருசத்துலே 'படுகிழவி'யா ஆகிட்டேனா? :-)))))

said...

அட! டால்ஃபின்! குதிச்சு மறைஞ்சது. ஒரு நிமிசம் மறுபடி நிச்சலனம். இப்பப் படகைச் சுற்றி எல்லாப் பகுதிகளிலும் 'க்ளக்' சப்தமும் துள்ளலுமா அங்கே ஒரு நாட்டிய நாடகம். ஆஹாகாரமும் ஊஹாகாரமுமா நாங்க எல்லாரும். பலே பலே பேஷ் பேஷ் சபாஷ்.......//


இத படம் எடுக்கலையா:((

said...

நானும் அதில் அமர்ந்து அருள் பாலிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஒருநாள் பயன்படாமலா போயிரும்? //

காவிகலர் ட்ரெஸ்ல எடுத்திருந்தா அச்சா அசல் சாமியார் போல இருந்துருக்கும்.

நியூஜி சாமின்னு வச்சிக்குவம்.

said...

வாங்க டிபிஆர்.

நாட்டியம் வீடியோவில் நல்லா பதிவாகி இருக்கு. ஃபோட்டோவில்
சரியா வரலை. மேலும் இந்தப் பக்கம் அந்தப் பக்கமுன்னு ஓடி ஓடிப்போய்ப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.


சிம்மாசனம் இருக்கும் விஷயம் தெர்ஞ்சுருந்தா காவி உடுப்பு கொண்டு போயிருக்க மாட்டேனா என்ன?

ஜஸ்ட் மிஸ்ஸுடு:-)))))

said...

//நானும் அதில் அமர்ந்து அருள் பாலிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.//

சிஷ்ய கேடிகள் தேவையா? என சைலஷ்ரி துளசியானந்தமயி திருவாய் மலரவும். :p

//இந்தப் பயணம் போய்வந்தது சமீபத்தில்தான், ஒரு 13 வருசமாச்சு.//

யப்பா! உங்க முயற்சி மலைக்க வைக்குது. கட்டுரையும் மிக அருமை. :)

said...

என்னாது சமீப்பத்துல போனதா?

எப்படி எல்லா சின்ன விஷயங்களும் ஞாபகம் இருக்கு? அந்த, தீடீர்னு கிடைச்ச மூன்று பிளாஸ்டிக் பைகள் உபயமா? :-))))

நல்லா, விவரிக்குறீங்க.பயணம் போன மாதிரியே இருக்கு...துள்சி மாதா!...:))))

said...

வாங்க அம்பி.

ஏற்கெனவே ஒரு தலைமைக் கேடி இருக்கார். சில அசிஸ்டெண்ட்ஸ் தான் தேவைப்படுகின்றார்கள்:-)

ஆ'சிரமம்' ஆரம்பிக்க நல்ல நேரம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

said...

புதுவண்டு,

இப்படிக் கையைக் கொடுங்க. க்ரேட். கண்டுபிடிச்சிட்டீங்களே. அதே அதே!
அதே மூன்று பைகள்தான்.

எல்லா ப்ரோஷரும் அதுலே இருந்துச்சு.
போட்டோ ஆல்பம் எடுத்துப் பார்த்தேன்.(அப்ப டிஜிடல் கேமெரா நம்மகிட்டே லேது)

'டடா....'

எல்லாம் அப்படியே ரீப்ளே. ஹோம் வீடியோ வேற இருக்கே.

வகுப்புலே கருத்தா இருந்ததுக்கு
உங்களுக்கு 30 மார்க் கூடுதலாப் போட்டுருக்கேன்.

வெல்டன்!

வாழ்க.

said...

அகில இந்திய ஆசிரமத்துக்கு தலைமை தாங்க என்னை அமர்த்துமாரு துளசியானந்தமயிக்கு வேண்டுக்கோள் விடுக்கிறேன்.. பொள்ளாச்சி பக்கத்துல இடம் வாங்கிப்போட்டு ஆசிரமம் அமைக்கனுன்னாலும் அதற்கு தக்க ஏற்பாடு செய்ய கைவசம் ஆள் பலம் இருக்கிறது ..
இப்படிக்கு
தங்கள் சிஷ்யை

said...

//முக்கியமா போட்டோ எடுக்க அனுமதி இல்லையாம். ஃப்ளாஷ் வெளிச்சம் அந்த ஒளிரும் புழுக்களுக்கு ஆபத்தாம். சத்தம்கூட இதுகளுக்குப் பிடிக்காதாம்.//

ம்ஹீம் என்னமோ போங்க..

// இந்தப் பயணம் போய்வந்தது சமீபத்தில்தான், ஒரு 13 வருசமாச்சு//

என்னது .............

ஆமா! இப்படி சலிக்காம எழுதி தள்ளறீங்களே இதுக்கே உங்களுக்கு ஒரு பட்டம் தரலாம்....

சரி கொஞ்ச நாளா சமையல் குறிப்பு எதையும் காணோமே !!

said...

பதிவு நல்லா இருந்துதுங்க. ஒளிரும் புழுக்கள் ஆச்சர்யம்தான். ஆனா நீங்க நம்ம மின்மினி பூச்சி பார்த்து இருக்கிங்களா? சினிமா படத்துல காட்ராங்க. ஆனா அது நெறைய கிராபிக் வேலைதான். நான் நிஜத்துல பார்த்து இருக்கேன். அதும் அம்மாவாசை கும்மிருட்டுல ஒரு மரமே சீரியல் செட் போட்டா மாதிரி இருக்கும் பாருங்க..அட....அட....அட.....

said...

//ஏற்கெனவே ஒரு தலைமைக் கேடி இருக்கார். //

இருக்கேன். இருக்கேன். :))

said...

வாங்க கயலு.

சிஷ்யப்பிள்ளைகளுக்கு செலக்ஷன் நடக்கும்போது சொல்றேன்.

அப்ளிகேஷன் தயாரானதும் அதை 'வாங்கி' பூர்த்தி செஞ்சு அனுப்புங்க:-)

said...

வாங்க கிரி.

அங்கென்னன்னா ஒருத்தர் சமையல்கட்டை விட்டு வெளியே வாங்கன்னு சொல்றார். நீங்க சமையல் குறிப்பு வேணுமுன்னு கேக்கறீங்க.
நான் யாருக்குன்னு ஆடுவேன்?

:-)))))

அஞ்சாறு குறிப்புகள் ரெடியா இருக்கு.அப்புறம் ஒவ்வொண்ணா ரிலீஸ் பண்ணால் ஆச்சு.

said...

வாங்க விஜய்.

சின்ன வயசில் மின்மினிப்பூச்சியைப் பிடிச்சுப் பாட்டிலில் வச்சுக்கிட்டுக் காலையில் பார்த்தால் வெளிச்சமே வரலை. அது மண்டையைப் போட்டுருச்சு(-:

ஆனாலும் அது அநியாயத்துக்குச் சின்னதா இருக்கேன்னு அதிசயமாப் போச்சு.

said...

வாங்க கொத்ஸ்.

பணவசூலை ஒழுங்காக் கவனிச்சுக்கணும். ஆமாம்.

said...

////ஏற்கெனவே ஒரு தலைமைக் கேடி இருக்கார். //

இருக்கேன். இருக்கேன். :))// கொத்ஸ்

//அகில இந்திய ஆசிரமத்துக்கு தலைமை தாங்க என்னை அமர்த்துமாரு துளசியானந்தமயிக்கு வேண்டுக்கோள் விடுக்கிறேன்..// கயலு

சபாஷ். சரியான போட்டி. வாராசா வந்து பாரு.....எங்க "லேடிகேடி" கயலக்கா கிட்டியேவா....(பின்ன லேட்டா வந்ததுல எனக்கு சான்ஸு மிஸ்ஸூனா விடுவேனா. அதான் மூட்டி விட்டுட்டேஏஏன்.

அது செரி கயலக்கா அது என்னா

//இப்படிக்கு
தங்கள் சிஷ்யை//

அப்புடியா எழுதறது...ம்ம்.....இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள சிஷ்யைனு இல்ல எளுதணும்? (உண்மையுள்ள=ஒளா ஒளா காட்டிக்கி, சும்மா.....ஹி.....ஹி) நாராயண...நாராயண....

said...

ஆமா இந்த ஒளிரும் புழுக்கள் எப்படிங்க...மின்மினி பூச்சி மாதிரி ப்ளாஷ் லைட்டா? இல்ல...ரேடியம் பச்சை மாதிரி மழுப்பல் ஓளியா?

said...

விஜய்.. ஆனாலும் இது ஓவரு.. க்ளாஸில் நான் ஜூனியர் தாங்க கொத்ஸ் க்கு அவருகிட்ட எல்லாம் போட்டி போட முடியாது..

said...

கயல் & விஜய்,

இந்த லீவுலே நல்லா ஆலோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.

ஆசிரமத்துக்கான ஆக்கப்பூர்வமான ஐடியா எல்லாம் திரட்டுங்க.

பதவியைப் பத்தி அப்புறமா ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்:-)))

said...

கயலக்கா,

என்னா இப்பிடி ஹூக்(அதாங்க "பின்") வாங்கிட்டிங்க.... சரி. (அப்போ நாமளும் கழிட்டிக்க வேண்டியதுதான்.)

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....யார்ரா எங்க கொஸ்த் அண்ண்ன் பத்தி பேசினது.. அவரு "தல"டா (சைடு "தல" ஒன்னும் தேற"றல", இப்பக்கி ஜகா வாங்கிடுவோம்.)

அண்ணேஎ, வாங்கண்ணே!!!!!!!

நல்லா இருகியளாஆ, கயலக்கா அந்த சேர் எடுத்து போடெங்கா....(பின்ன பயந்தா இதாங் கதி)

அண்ண்ணன் கொத்ஸ் வாழ்க!!!! வாழ்க!!!!!

ஏன் அண்ணே!!!! அந்த உபதலைவர் போஸ்ட்டு......நானாஆ... கேக்கல அண்ணெ, சே....சே எனக்கு எதுக்கண்ணே பதவி ஆசையெல்லாம்.. கயலக்காதான் ரொம்ப தொந்தரவுண்ணே...நீதான்டா அந்த போஸ்டுக்கு லாயக்குன்னு.....(கயலக்கா பின்வாங்கினா இதான் நிலமை)....ம்ம்ம்..ம்ம்....

said...

//அங்கென்னன்னா ஒருத்தர் சமையல்கட்டை விட்டு வெளியே வாங்கன்னு சொல்றார். நீங்க சமையல் குறிப்பு வேணுமுன்னு கேக்கறீங்க//

மேடம் எல்லாமே கலந்து இருக்கணும் (நான் சாப்பாட்டை கூறவில்லை) அப்ப தானே சுவையா இருக்கும். ஏதாவது ஒன்று மட்டுமே அதிகம் இருந்தால் போர் அடிக்குமே.. அதனால எல்லா வகையான பதிவும் போடுங்க.. அது தான் என் ஆசை.

ச்சே டேய் கிரி இப்படி உணர்ச்சிவச பட்டுட்டியே :))

அப்புறம் உங்க பின்னூட்டங்கள் ரொம்ப தாமதமாக வருது :-( ஐ மீன் உங்க பதிவை கிளிக் பண்ணினா ரொம்ப நேரம் கழித்து தான் பின்னூட்டங்கள் தெரியுது

said...

<==
இந்தப் பயணம் போய்வந்தது சமீபத்தில்தான், ஒரு 13 வருசமாச்சு. ==>
என்ன நீங்களுமா? டோண்டுவோட காப்பிரை வார்த்தையாச்சே. அவருகிட்ட அனுமதி வாங்கிக்கிடுங்க.

said...

வாங்க சாமான்யன் சிவா.

என்னங்க இது? சமீபத்தில் தான் கண்டுபிடிச்சீங்களா?

ஊரு உலகத்துக்கே தெரியும் இது அவரோட காப்பிரைட்ன்னு.

நாங்களும் இதை எழுதும்போதெல்லாம்
டோண்டுவை நினைச்சுக்குவொம்லெ.

said...

கிரி,

விடுமுறை முடியட்டும். 'ஆக்கி'றலாம்:-))))

said...

http://madavillagam.blogspot.com/2008/06/blog-post_28.html

இங்கு இருக்கு சலனப்படம்.

said...

என்னது..?என்னது...?/பதிமூணு வருசத்திலே படுகிழவி ஆயிட்டேனா?/

இது தங்களுக்கே கொஞ்சம் ஒவராத்
தெரியலே?

ஆனா மனசு படுஇளமையாயிருக்கே
துள்சி? அது போதாதா?

பசுமை நிறைந்த நினைவுகளுக்கு
வயதேது?
குகைப் பயணம் நல்லாருக்கு.
இதே போல் செயிண்ட் லூயிஸிலும்
நான் போன குகைப்பயணம் நினைவில் வந்தது.

said...

வாங்க நானானி.

ப்ரான்ஸ்லே இருக்கும் குகையா?

மேரிமாதா ஒரு சின்னப் பொண்ணுக்கு காட்சி கொடுத்தாங்களே அந்த குகையா?

அதைப் பத்தி எழுதுங்கப்பா.

நான் போகலை அங்கே(-:

said...

குமார்.
படத்துக்கு நன்றி.
நல்லா இருக்கு.

said...

கிட்டத்தட்ட 10 மணி நேர ட்ரைவ்.

----------------------
நிற்காமல் பயணித்தீர்களா?