சமையல் குறிப்பு:-)))) turnip
எங்கெங்கியோ சுத்தி என்னென்னவோ தின்னாலும் வீட்டுக்கு வந்து அக்கடான்னு ஒரு ரசம் வச்சுச் சோறுத் தின்னாதான் ஒடம்பு ஒரு நிலைக்கு வருது...இல்லீங்களா?
அதுக்காக ரசத்தின் செய்முறை வேணுமுன்னு கேக்கப்போறீங்களா? ஆங்.......?இல்லைதானே?
இன்னிக்குக் கடைத்தெருப்பக்கம் ஒரு மலேசியக் கடைக்குப் போனப்ப இது கிடைச்சது. சீனக்கடைகள் போல இல்லாம இந்தக் கடை ரொம்ப நல்லா சுத்தமா இருக்கும். இதே இடத்தில் இதுக்கு முந்தி ஒரு சீனர் கடை வச்சுருந்தாங்க. அப்ப, அதுக்கும் முன்னே?
Fresh for less என்ற பெயரில் வெள்ளைக்காரர் ஒருத்தர் காய்கறிக் கடை வச்சுருந்தார். ரொம்ப வயசானவர். அவர்கிட்டே இருந்து தான் யாவாரம் சீனருக்குக் கைமாறுச்சு. கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதி முழுசும் ஒரே துர்நாற்றம் ஆகிப்போச்சு. காய்கறி & பழங்கள் விற்கும் கடையில் மீன், இறைச்சி எல்லாம் வச்சா? அதுக்குண்டான குளிர் சாதன வசதி எல்லாம் வேணுமுல்லே?
அதுவுமில்லாம இந்தப் பகுதியில் முதியோர்கள் நிறைய இருக்காங்க. தனியா இருக்கறதாலேக் கொஞ்சமா ஒரு ஆளுக்கு வேணுங்கற காய்கறிகளை மட்டும் வாங்கிக்குவாங்க. சீனர் கடையில் என்ன செஞ்சாங்கன்னா..... கெட்டுப்போன காய்களில் கெட்ட பகுதியை மட்டும் வெட்டித் தூரப்போட்டுட்டு, நல்ல பகுதிகளை அழகா நறுக்கி ஒரு சின்ன ட்ரே பாக்கெட் செஞ்சு 'ரெடி டு பாட்'ன்னு வித்துருவாங்க. விசயம் தெரியாம இதை வாங்கித் தின்னவங்களுக்குச் சொகமில்லாமப் போச்சு.
அக்கம்பக்கம் எல்லாம் குற்றஞ்சாட்டுனதுலே அவுங்க கடையைக் காலி செஞ்சுட்டாங்க. இதை இப்ப நடத்துறது இந்த மலேசியத் தம்பதிகள். படு நீட்டா இருக்கு. ஒரே ஒருமுறை ஆஸ்தராலியன் மாம்பழம் கூட வந்துச்சு. விலை என்னவோ கொஞ்சம் தீ பிடிச்சாப்புலேதான். ஆறு வெள்ளி. ஆனால் ஆசைக்கு அணை போட முடியுதா?
அந்தப் பக்கம் போகும்போதுக் கட்டாயம் கண்டுக்க வேண்டிய கடை இது. அங்கேதான் இந்த நூக்கலைப் பார்த்தேன். இது பேர் இதுதானா? அதே ஒரு சந்தேகமாத்தான் கிடக்கு.அதை வச்சு இன்னிக்கு ஒரு குருமா செய்யப்போறோம்.
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
ஒரு நூக்கல் (450 கிராம் எடை இருந்துச்சு)
உருளைக்கிழங்கு பெருசா 2 ( 150 கிராம் இருக்கலாம்)
ஒரு குடைமிளகாய் - உங்களுக்கு எந்த நிறம் கிடைக்குதோ அது.
(நான் சிகப்பு நிறம்)
(நான் சிகப்பு நிறம்)
வெங்காயம் பெருசு 1 ( தோலுரிச்சு நறுக்குனது. பொடியா அரியணுமுன்னு அவசியமில்லை)
பச்சை மிளகாய் 4
பூண்டு 6 பல்
இஞ்சி ஒன்னரை இஞ்சு நீளம்( தோல் சீவிக்குங்க)
தக்காளிப்பழம் 3
எண்ணெய் 1 தேக்கரண்டி ( மொத்தம் 3 தேக்கரண்டி எண்ணெய் தேவைப்படும்)
பாதாம் பருப்பு 7 அல்லது 8
குருமா மசாலா 1 மேசைக்கரண்டி ( நான் பிரியா குருமா மசாலா சேர்த்தேன்)
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லித்தழை
தாளிக்க:
கருவேப்பிலை
ஒரு அரைத் தேக்கரண்டி சோம்பு
ஒரு அரைத் தேக்கரண்டி சோம்பு
ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்.
நூக்கலைத் தோல் சீவிட்டு பெரிய துண்டுகளா நறுக்கி வச்சுக்குங்க.இதே சைஸில் கழுவிய உருளைக்கிழங்கையும் துண்டு போட்டுக்கணும்.
நூக்கலைத் தோல் சீவிட்டு பெரிய துண்டுகளா நறுக்கி வச்சுக்குங்க.இதே சைஸில் கழுவிய உருளைக்கிழங்கையும் துண்டு போட்டுக்கணும்.
குடமிளகாயை நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளைக் கடாசிட்டு அதையும் பெரிய துண்டா நறுக்கி வச்சுக்கணும்.
ஒரு வாணலியை அடுப்பில் வச்சு ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊத்தி நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் இஞ்சி பூண்டு, தக்காளி எல்லாம் போட்டு நல்லா வதக்கிக்கணும். அடுப்பு மிதமா எரியட்டும். கரிச்சு வச்சுறாதீங்க. நல்லா வதங்கணும். எடுத்து ஒரு தட்டுலே வச்சு ஆற விடுங்க.
அதே வாணலியில் மஞ்சள் பொடி & குருமா மசாலா சேர்த்து லேசா சூடானதும்( வாணலியில் வெங்காயம் வதக்குன எண்ணெய் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கும் அதுவே போதும்)கொஞ்சம் தண்ணீர் (ஒரு கப்) சேர்த்து உருளைக்கிழங்கு & நூக்கலைப் போட்டு வேகவிடுங்க. அதுபாட்டுக்கு வேகட்டும். அதுக்குள்ளே ஆறவச்ச வதக்குன சாமான்களை சட்னி ஜாரில் போட்டு மைய்யா அரைச்சுக்கணும்.
காய்கள் வெந்துருச்சான்னு பாருங்க. இப்ப இந்த அரைச்ச கலவையை அதில் சேர்த்துக் கொதிக்க விடுங்க. ரொம்பத் திக்காக் கட்டியா இருந்தா இந்த ஜாரில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு சுத்துச் சுத்தி அதையும் காய்களில் சேர்க்கணும். இப்ப அந்தக் குடமிளகாய்த் துண்டங்களையும் வாணலியில் சேர்த்துக்கலாம். சட்னு வெந்துரும். ஆச்சா....
பாதாம் பருப்புக்களை அதே சட்னி ஜாரில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைய்யா அரைச்சுக்குங்க. ஊற வச்சு அரைச்சால் நல்லது. நான் கடைசி நிமிசத்துல்லேத் 'தேங்காய்க்கு பதில் பாதாம்'னு முடிவு செஞ்சேன்:-)
எதுக்கு? நம்ம கொத்ஸ்க்குத் தேங்காயைக் கண்ணுலேயே காட்டக்கூடாதாம். அவரோட தங்கமணியின் கண்டிப்பு. ரெஸிபியில் தேங்காய்னனு படிச்சாலே லபோதிபோன்னு கூச்சலா ஆயிருது அங்கேன்னு நினைக்கிறேன்:-))))
எதுக்கு? நம்ம கொத்ஸ்க்குத் தேங்காயைக் கண்ணுலேயே காட்டக்கூடாதாம். அவரோட தங்கமணியின் கண்டிப்பு. ரெஸிபியில் தேங்காய்னனு படிச்சாலே லபோதிபோன்னு கூச்சலா ஆயிருது அங்கேன்னு நினைக்கிறேன்:-))))
குழம்பு நல்லா திக்கா வந்துக்கிட்டு இருக்குதானே? மைய அரைச்ச பாதாமை காய்களில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடுங்க. கொத்தமல்லித் தழையைக் கிள்ளி மேலாகப போட்டுவையுங்க.
இன்னொரு வால் கரண்டி எடுத்து அதை சூடாக்கி தாளிக்க எடுத்துவச்ச ரெண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊத்தி அது காய்ஞ்சதும் சோம்பு போட்டு வெடிச்சதும் கருவேப்பிலை போட்டு படபடன்னு ஓசை அடங்குனதும் வாணலியில் இருக்கும் காய்களில் சேர்த்துருங்க.
குருமா தயார்.
சப்பாத்தி, சாதம், தோசை, இட்லின்னு எல்லாத்துக்கும் பொருத்தமோ பொருத்தம்.
எண்ணெய் கொஞ்சமா சேர்த்துருக்கு. பயப்படாமச் சாப்பிடுங்க.
22 comments:
இங்கு எனக்கு தெரிந்தவரை நூக்கூல் கிடைப்பதில்லை.
குருமா பார்க்க நன்றாக இருக்கு,டேஸ்ட் எப்படி?
வாங்க குமார்.
ருசியும் நல்லாவே இருக்கு.
நம்மூரில் கிடைப்பதுபோல சின்ன சைஸுலே அதாவது பெரிய வெங்காயம் அளவில் இங்கே கிடைக்கலை. பெருசுபெருசா மொந்தையா இருக்கு ஒவ்வொன்னும்.
காலிஃப்ளவர் கூட கல்யாணத்துலே மணமக்கள் கையில் இருக்கும் பொக்கே மாதிரிதான் முக்காலடி விட்டம்.
//வடுவூர் குமார் said...
இங்கு எனக்கு தெரிந்தவரை நூக்கூல் கிடைப்பதில்லை.
//
குமார்,
முஸ்தபால நான் நிறைய தடவை வாங்கி இருக்கேன். சிவப்பு முள்ளங்கி கூட சமயத்தில் கிடைக்கும். ஹனீபா பக்கம் உள்ள காய்கறி கடைகளில் சீசனில் பனங்கிழங்கு, நுங்கு கிடைக்கும்.
துளசி அம்மா,
டர்னிப், நூக்கோல், பீன்ஸ் எனக்கும் விருப்பமான காய்கறிகள்...வாங்கினால் நான் தான் சமைக்கனும்
:)
பெங்களூரில் 'நூக்கோல்' என அழைக்கப் படுகிற இது எல்லா சீசன்களிலும் இளசாகவும் தாராளமாகவும் கிடைக்கிறது. சாம்பார், சட்னிக்குப் பயன் படுத்துவேன். குருமா செய்து பார்க்கிறேன்.
//நம்ம கொத்ஸ்க்குத் தேங்காயைக் கண்ணுலேயே காட்டக்கூடாதாம். அவரோட தங்கமணியின் கண்டிப்பு. ரெஸிபியில் தேங்காய்னனு படிச்சாலே லபோதிபோன்னு கூச்சலா ஆயிருது அங்கேன்னு நினைக்கிறேன்:-))))//
இலவசத்துக்கு ஒரு குறிப்பு:
எங்கள் வீட்டிலும் தேங்காய் நோ நோ-தான். கடுகு,உ.பருப்பு, மி.வற்றல் தாளித்து துருவிய நூல்கோலைச் சேர்த்து அதிலிருக்கும் நீர் வற்றி, நிறம் மாறும் வரை வதக்கி, பின் உப்பு, புளி சேர்த்து செய்யும் சட்னி சூப்பராக இருக்கும் இட்லி தோசைக்கு.
மிஸஸ் கொத்ஸ் இதைக் கவனிப்பாரா?
// பயப்படாமச் சாப்பிடுங்க !! //
நானும் அப்படித்தாங்க சொன்னேன். இருந்தாலும் குருமாவை
ஒரு தினுசா பாத்த எங்க வீட்டுக் காரரு "முதல்லே நீ சாப்பிடு,
ஒரு 2 மணி நேரம் கழிச்சு உனக்கு ஒண்ணும் ஆகலைன்னா
நான் சாப்பிடறேன்ன்னு சொல்றாரு."
ஏங்க ! கோபாலு இப்படியெல்லாம் சொல்வாறா என்ன ?
செஞ்சத சத்தம் போடாம சாப்பிட்டு போறாலில்ல ..
ம்... இவருக்கு எந்த ஜன்மத்திலே ...! !!
மீனாட்சி பாட்டி. (66)
பி.கு. (நான் சிகப்பு நிறம்)
அடி ஆத்தி !! நிசமாவா !!
//மிஸஸ் கொத்ஸ் இதைக் கவனிப்பாரா?//
அவங்க கவனிச்சு என்ன ஆகப் போகுது!! :P
நான் பார்த்தாச்சே!!
ரீச்சர், ரெண்டு வருஷமா சீசனில் நம்ம ஊர் மாம்பழம் கிடைக்குது. ஒரு பெட்டி (12 - 14 பழங்கள் இருக்கு) கிட்டத்தட்ட 25 டாலராம்!! போன வருஷம் ஆசைக்கு வாங்கியாச்சு, இந்த முறை கடையில் முகர்ந்து பாக்கறதோட சரி!! எங்களுக்குச் சின்ன வெங்காயமும் கிடைக்குதே!! :))
அதெப்படி இவ்வளவு ருசியா இருக்கு போட்டொலியே:)
செய்யறவங்க செய்தா நூல்கோல் கூட அழகாயிடும் போல.
இதையே உருளைக்கிழங்குன்னா எங்க வீட்டில விலை போகும்.
வாசனை போகிறதுக்கு என்ன செய்யணும்மா?
இது முட்டைக்கோஸ் எல்லாம் ஒரு வாசனை வருமே அதைச் சொல்றேன்.
நல்லா இருக்குப்பா. கோபால் சாப்பிட்டாரில்ல!!?
நல்லா பொறுமையாத்தான் பண்ணியிருக்கீங்க. லீவு நாள்ல தான் பண்ணிப்பாக்கணும். பாதாம் பருப்புக்கு பதில் கொஞ்சம் பொட்டுக்கடலை போட்டுப்பாருங்க. வித்தியாசமான சுவையோட நல்லாவே இருக்கும். பாதாம் பருப்புல இருக்க கொழுப்பு கூட கொஞ்சம் கம்மி. மிளகாய் பஜ்ஜி மிளகாய் மாதிரி இருக்கு. குடைமிளகாயா இல்ல பஜ்ஜி மிளகாயா??
வாங்க கோவியாரே.
முஸ்தாஃபாலே புடலைங்காய்கூட ஒரு சமயம் பார்த்தேன். நான் விட்ட ஏக்கப் பெருமூச்சு அன்னிக்கு உங்க ஊரையேத் தூக்கிட்டுப் போயிருக்கணும். தப்பிச்சீங்க:-)
நீங்க நல்லா சமையல் செய்வீங்கன்னு நம்பறோம். அடுத்தமுறை
பரிசோதிச்சுறலாமா? :-)))))))
வாங்க ராமலக்ஷ்மி.
சட்னி செஞ்சு பார்த்துருவோம். செய்முறைக்கு நன்றிப்பா.
வாங்க மீனாட்சி(அக்கா)
சோதனை எலிகள் நீண்ட நாள் வாழும் என்றதுக்கு உதாரணம் வேணுமா? :-))))))
எப்பப் பார்த்தாலும் சாம்பார், ரசமுன்னே தின்னா போரடிக்காதா?
சிகப்புதான் எனக்குப் பிடிச்சக் கலரு:-))))
ஆனால் அப்பப்பப் பச்சையும், ஆரஞ்சும், மஞ்சளும் வாங்கிப்பேன். பர்ப்பிள் கலருலேயும் வருது. சமைச்சாக் கருப்பா இருக்கு...யக்(-:
வாங்க கொத்ஸ்.
இங்கேயும் Shallot என்ற பெயரில் சின்ன வெங்காயம் கிடைக்குது. விலைதான் கூடுதல். ஒரு 6/7 வாங்குனாப் போதும் சாம்பாருக்கு ஆச்சு:-)
நம்மூர் மாம்பழம் இங்கே வர்றதில்லை. மெக்ஸிகோ, பெரு இங்கேயிருந்து வந்து 1.69க்குச் சீப்படும். ஸேல் வந்தா 99 செண்ட்ஸ்:-)
அதிர்ஷ்டம் இருந்தால் இனிப்புள்ளது நம்ம கையில் கிடைக்கலாம். கொஞ்சம் காயா இருப்பதை வாங்கி மாங்காய்ப் பச்சடி செஞ்சுக்குவேன்.
வாங்க வல்லி.
கோபால் சாப்பிடலைன்னா வேற யார் சாப்பிடுவா? கோபால கிருஷ்ணனா? :-))))
நம்மூட்டுலே குழம்புன்னா அது கோபாலுக்குத்தான்.
வாசனை(????) ன்னதும் தோழியின் அப்பா ஞாபகம்தான். முட்டைக் கோசு என்பதற்கு (க் + உ) ன்னு உச்சரிப்பார்.
இந்த வாசனை போகணுமுன்னா ஒரு இஞ்ச் நீளமான இஞ்சியைத் தட்டிக் காயோடு வேகவச்சுட்டு அப்புறம் எடுத்து வெளியேப் போட்டுறலாம்.
முட்டைக்கோஸ்களை எப்பவும் நாலு நிமிசத்துக்குமேல் வதக்கக்கூடாது. இதுவும் ஒரு ரூல் ஆஃப் த தம்ப்:-))))
வாங்க சின்ன அம்மிணி.
இது குடை மிளகாய்தான். நீள வகை.
நம்ம வீட்டில் பொட்டுக்கடலை சட்னிக்கு மட்டும்தான். அதுவே யாருக்கும் பிடிக்கறதில்லை.
குழம்புலே அரைச்சுச் சேர்த்ததில்லை. ஒருமுறை செஞ்சுபார்க்கணும்.
செய்முறை சூப்பராயிருக்கு துள்சி!
படம் பார்த்தவுடன் ப்ளேட்டில் சப்பாத்தியோடு வந்து அள்ளிக்கலாம் போலிருக்கு.
நூக்கோலைப்பத்தி ரொம்ப நக்கலில்லாமல் சொல்லிருக்கிறீங்க. சபாசு!!
//நான் சிகப்பு//இது வேறயா?
நல்லாத்தான் இரட்டுற மொழிஞ்சிருக்கிறீங்க!!!
ஒத்த மாம்பழத்த படம் போட்டு.....பாவம்ங்க...இங்க வாங்க, சீசன்ல்ல? கொட்டிக் கிடக்குது
பங்கனப்பள்ளி!!
சாப்பிடுவதில் நான் 'போதும்'ன்னு
சொல்லாத ஒரே வஸ்து இதுதான்.
மாம்பழம் இல்லாம தயிர் சாதம்
இறங்குவேனாங்குது. 'போதாக்குறைக்கு பொன்னம்மான்னு'(உங்ககிட்ட கத்துண்டதுதான்) ஊரிலிருந்து வேற மாம்பழம் வந்திருக்குது. அதென்ன? ஹாங்! ஆர்கானிக்!!!
பிரசண்ட் டீச்சர்!
//நான் பிரியா குருமா மசாலா சேர்த்தேன்
//
அப்படியா! :D :D சரி! சரி! :))))))
பாதாம் பதில் ஊற வெச்ச கச கசகா.திக்னஸ் கொடுக்கத்தான்.ஆனால் தேங்காய் இல்லாமல், குருமா நல்ல ஐடியா!.
ஐ லைக் இட்!(இதத் தமிழ்ல எப்படிச் சொல்ல?)
வாங்க நானானி.
ரத்தக் கொதிப்புக் கூடுதலா இருக்கும் மக்கள். அதில் ஒருத்தருக்கு குழம்பு வேணும். இன்னொருத்தர் தயிர் பால் இருந்தாலே மகிழ்ந்துபோயிருவார். தொட்டுக்க மாம்பழம் இல்லாததால் முக்கனியில் ரெண்டாவது கிடைச்சாலே போதும்.
ஒரு ஆளுக்குன்னு சமைக்க ரொம்ப மெனெக்கெடப்படவேண்டி இருக்குப்பா.
கட்டில் சின்னதா இருந்தாலும் அதுக்கும் காலு நாலு வேணுமில்லையா? ( மலையாளப் பழமொழி)
மாமரத்தடியில் உக்கார்ந்து தின்னுதீர்த்த காலம் போயே போச் ஃபிஜியோடு(-:
வாங்க புதுவண்டு.
'பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு'ன்னும் சொல்லலாம்:-))))
சூப்பர் சமையல் டீச்சர்...
நான் இப்பவே வீட்டுக்குப்போறேன் :)
வாங்க ரிஷான்.
அக்கம்பக்கத்து ஆக்களை நட்புடன் புடிச்சு வச்சுக்குங்க. இப்படிச் சமைத்துப்பார்க்கும்(??)நாட்களில் (குடும்பம் இல்லாம தனி மனுசனுக்கான சமையலுன்னா) இவுங்க ஆதரவு தேவை:-)
Post a Comment