Wednesday, June 04, 2008

போய்யா வெண்ணை......

போய்யா வெண்ணை...... இருடீ.... ராஜம்மா வரட்டும்.
அப்ப இருக்கு உனக்கு!

வண்ணம் இல்லாமல் சோகையா வெளுத்துக்கிடக்கும் இது என்ன?
பார்க்க அச்சு அசலா நம்ம பீன்ஸ் போலத்தானே இருக்கு? ஆஹா....
'கப்'னு புடிச்சுட்டீங்களே. இங்கே இதுக்குப் பெயர் 'பட்டர் பீன்ஸ்'
செஞ்சுதான் பார்க்கலாமுன்னுக் கொஞ்சம் வாங்கியாந்தேன்.
அந்தக் காலத்தில் நம்ம வீட்டுலே எப்பவும் பீன்ஸ் பொரியலுன்னாவே அது பருப்பு, தேங்காய் எல்லாம் போட்டதுதான். இதுக்காகவே பருப்பைச் சும்மா அடுப்பிலே வேகவிடுவேன். நோ குக்கர்.( அது நம்மகிட்டே இல்லைன்றதும் ஒரு காரணம்) முக்கால்வாசி வெந்ததும் பாத்திரத்தில் வேகும் பருப்பில் முக்கால்வாசியை ஒரு ஜல்லிக் கரண்டியால் வடிகட்டி எடுத்துத் தனியா வச்சுக்குவேன். மீதி இருக்கும் கொஞ்சூண்டுப் பருப்பு வெந்து கரையட்டுமுன்னு விட்டுருவேன். அதுலேதான் ரசம் வைக்கிறது. அது கிடக்கட்டும்.பொரியலில் பச்சைநிற பீன்ஸ், மஞ்சள் நிறத்துலே பருப்பு, வெள்ளையாத் தேங்காய்ச் சில்லு தட்டிப்போட்டது, தாளிச்சுக் கொட்டுன சிகப்பு மொளகாய் வத்தல்ன்னு கலரே ஆளைத் தூக்கும்.சரி.இப்ப இந்த 'வெள்ளையனைப் பார்க்கலாம்'. அது ஒரு வகைன்னா இது இன்னொரு வகை. ஆனாலும் பார்க்கவும் அம்சமா இருந்தாத்தானே திங்கவும் தோணும்.
ராஜம்மா எங்கடீ இருக்கே? கொஞ்சம் வாயேன். 'தோ'ன்னு ஃப்ரீஸர்லே இருந்து குதிச்சாள் நம்ம ராஜ்மா. ஒருமாதிரி 'மூளையைப் பயன்படுத்தி(??)
ஆக்கி முடிச்சேன்.
இது உங்களுக்கான செய்முறை:பட்டர் பீன்ஸ் : 250 கிராம்


சிகப்பு கிட்னி பீன்ஸ்: 100 கிராம்.


மிளகாய்த் தூள்: முக்கால் தேக்கரண்டி


மல்லித்தூள் : முக்கால் தேக்கரண்டி


மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி


உப்பு : முக்கால் தேக்கரண்டி


வறுத்த வேர்க்கடலை: 1 மேசைக்கரண்டி


எண்ணெய் : 2 தேக்கரண்டி


கடுகு & உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி


கருவேப்பிலை : ஒரு இணுக்கு.பீன்ஸ் தலையையும் வாலையும் நீக்கி நார் இருந்தால் எடுத்துறணும். அதை ஒரு ரெண்டரை செ,மீ. நீளத்துண்டுகளா அரிஞ்சுக்கணும்.முதல் நாள் இரவே கிட்னி பீன்ஸைத் தண்ணீரில் போட்டு ஊறவச்சுக்கணும். அதை இன்னிக்கு கழுவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வச்சு மூணு விசில் வரும்வரை வேகவச்சு எடுத்துக்குங்க. வெந்த கிட்னி பீன்ஸை மட்டும் எடுத்துக்கிட்டு அந்தச் செம்மண் நிறத் தண்ணீரை கீழே ஊத்திறலாம்.ஐயோ வேஸ்டா? ஆமாம். அதுலே வேண்டாத விஷச் சத்து இருக்குமாமே..... ஆங்.....
அரிஞ்ச பீன்ஸை கொஞ்சமா ஒரு அரைக்கப் தண்ணீரில் அரைத் தேக்கரண்டி உப்புடன் வேகவச்சு எடுத்துக்குங்க. இதுலேயும் ரெண்டு மேசைக்கரண்டி தண்ணீர் வேஸ்ட் ஆகும்தான். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா ஆகுமா?
அடுப்பில் வாணலியை வச்சு அந்த ரெண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டுக்காய்ஞ்சதும் அந்தக் கால் தேக்கரண்டி கடுகு உளுத்தம்பருப்புத் தாளிச்சு, அதுலேயே கருவேப்பிலையை உருவிப்போட்டு மி, ம & ம தூள்களைப்போட்டு லேசா வறுத்துக்கணும். எல்லாம் அந்தப் பச்சை வாசனை போறதுக்குத்தான். மீதி இருக்கும் கால் தேக்கரண்டி உப்பையும் சேர்த்து ஒரு கிளறு கிளறிட்டு பீன்ஸ் & கி. பீன்ஸ் சேர்த்து லேசாக் கிளறிவிடுங்க. அடுப்பு எப்பவும் சிம் லே இருக்கணும். நோ தீவட்டி:-)ஒரு நாலைஞ்சு நிமிசம் ஆகட்டும். வறுத்த வேர்க்கடலையை ஒன்னுரெண்டாப் பொடிச்சு பீன்ஸ்களின் மேலாகத் தூவிக்குங்க.

அவ்ளோதான். ஆச்சு நம்ம வெள்ளைனும் ராஜம்மாவும்.
மி,ம பொடிகளுக்குப் பதிலா முக்கால் டீஸ்பூன் குழம்புப்பொடியும் போட்டுக்கலாம்.

உங்களுக்குக்குத்தான் இந்த விஸ்தாரமெல்லாம். எனக்கு? 'சட்'னு வேலை ஆகணும். (பதிவெழுத நேரம் வேணுமே)

ராஜ்மா( ரெட் கிட்னி பீன்ஸ்) ஊறவைக்கும்போது ஒரு அரைக்கிலோ போல ஊறவச்சு மறுநாள் வெந்து வடிகட்டிய பின் ஒரு நாலைஞ்சு பங்கு பிரிச்சுச் சின்னக் கண்டெய்னரில் ஃப்ரீஸரில் வச்சுக்குவேன். தேவைப்படும்போது ஒரு டப்பா எடுத்து வெளியில் வச்சோ அல்லது மைக்ரோவேவில் 'டீஃப்ராஸ்ட்' செஞ்சோ எடுத்துக்கலாம். இதுவும் 'டூ மச்'ன்னு நினைச்சால்....
சூப்பர்மார்கெட்டில் மெக்ஸிகன் ஃபுட் பகுதியில் டின்னில் கிடைக்கும் ரெட் கிட்னி பீன்ஸ் வாங்கித் தண்ணீரை வடிகட்டிட்டு நல்ல தண்ணீரில் ஒரு அலசு அலசிக்கிட்டுப் பயன்படுத்தலாம். டின்னில் வருவதை வாங்கிக்க மாட்டேன். நான் கொஞ்சம் 'சிக்கனம்' பாக்கும் ஆளு. ஒரு டின் வாங்கும் செலவில் இந்தியன் கடைகளில் ராஜ்மா அரைக்கிலோ வாங்கிக்கலாம்.

வேர்க்கடலைக்கு மெனெக்கெடாம.... ஸ்நாக்ஸ்க்கு வாங்கிவச்ச மசாலா வேர்க்கடலையைப் பொடிச்சுத் தூவினேன்.

பி.கு: ருசி பரவாயில்லாம இருக்கு. ஓஹோன்னு சொல்ல முடியாது. ஒரு மாற்றத்துக்குச் செஞ்சுக்கலாம். (வேற வழி? செஞ்சாச்சு. தின்னுதானே ஆகணும்)

48 comments:

said...

வந்துட்டேன். செஞ்சு பார்த்துருவோம்.

said...

டின்னில் கிடைக்கும் ராஜம்மா மற்றும் வெண்ணையனை (கூடவே அன்னிக்கு மூடுக்கு ஏத்த மாதிரி கொண்டையன், பிண்டோ) எல்லாம் சேர்த்து கொஞ்சம் ஸ்பினாச் கீரையோட சேர்த்து ஆலிவ் ஆயில், ஷ்ரெட்டட் சீஸ் போட்டு சாப்பிட்டா லஞ்ச் ஆச்சு!! :)))

Anonymous said...

தலைப்பை படித்து கொஞ்சம் பயந்திட்டேன். பதிவு வழமைபோல் அருமை தான். :)
முயற்சி செய்துபார்க்கிறேன்.நன்றி :)
(உங்க வீட்டு நாய்க்குட்டி ரொம்ப அழகு)

said...

aakaa aakaa ஆகா ஆகா - வெண்னையனும் ராஜம்மாவும் அடிக்கற கூத்து தாங்கலே - இப்பவே எனக்கு ( எங்கலுக்கும்) வேணும். இப்பவே விசா எடுக்கட்டா ?

இவ்வளவு நகைச்சுவையா ஒரு செய்முறை துளசியால மட்டும் தான் சொல்ல முடியும் - செய்ய முடியும்

நாங்க எல்லாம் சாப்படறதுக்கு தான் வருவோம்

said...

பேசாம நீங்கள் ஒரு புக் போடலாம், இல்ல போட்டாச்சா?

said...

// பி.கு: ருசி பரவாயில்லாம இருக்கு. ஓஹோன்னு சொல்ல முடியாது. ஒரு மாற்றத்துக்குச் செஞ்சுக்கலாம். (வேற வழி? செஞ்சாச்சு. தின்னுதானே ஆகணும்)//

கோபாலு எதுக்கு இருக்காரு ?
யாம் பெற்ற இன்பம் வையகமும் பெற அவரையும் இரண்டு நாளைக்குத்
தொடர்ந்து சாப்பிடச்சொல்லுங்க..
ஏதாவது சொன்னா
இந்த டிஷ்லே நிறையா ப்ரோடினும் அயர்னும் இருக்குன்னு சொல்லுங்க.
இருக்கட்டும்.
செய்யும்போது குழம்புப்பொடிக்கு பதிலா ஆச்சி மசாலாப் பொடி
போட்டுப்பாருங்க. அமோகமா இருக்கும்.
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.

said...

/////டின்னில் கிடைக்கும் ராஜம்மா மற்றும் வெண்ணையனை (கூடவே அன்னிக்கு மூடுக்கு ஏத்த மாதிரி கொண்டையன், பிண்டோ) எல்லாம் சேர்த்து கொஞ்சம் ஸ்பினாச் கீரையோட சேர்த்து ஆலிவ் ஆயில், ஷ்ரெட்டட் சீஸ் போட்டு சாப்பிட்டா லஞ்ச் ஆச்சு!! :)))///

இது சைட் டிஷ்தானே! கொத்தனாரு இதையே எப்படி மெயின் (லஞ்ச்) டிஷ்ஷிங்கிறாரு?
ஒரே குழப்பமாயிருக்கே ரீச்சர்?

said...

வாங்க பிரேம்ஜி.

ஆனாலும் உங்களுக்கு மனவலிமை ஜாஸ்தி:-)))))

பி.கு. பார்க்கலையா?

said...

வாங்க கொத்ஸ்.

சீஸ் எல்லாம் அலவுடா?

அப்ப உங்களுக்காக(வே) ஒரு ரெஸிபி போட்டுட்டா ஆச்சு:-)))

said...

வாங்க தூயா.

நேத்தெல்லாம் உங்க நினைவுதான்.

நாலைஞ்சு கடைகளில் ஃபிங்கர் கார்டு தேடினேன்.

என்னதான் விண்டோஷாப்பிங்ன்னு சொல்லிக்கிட்டாலும் எதாவது ஒரு நோக்கம் வேணும் இல்லையா பொருட்களை நோட்டம்விட:-)

ஆமாம். எந்த நாய்க்குட்டி? எப்பப் பார்த்தீங்க?

said...

வாங்க சீனா.

விஸா எடுத்துருங்க. ரிட்டர்ன் டிக்கெட்டைக் காமிச்சாப் பிரச்சனை இருக்காது:-)

said...

வாங்க முரளிகண்ணன்.

புத்தகம் போட்டுறலாமுன்னு சொல்றிங்களா?

செஞ்சுறலாம். வாங்கறதுக்கு ஆளுங்களை ரெடி செய்யணுமேப்பா:-)))

said...

ஆமாநாவல் முதல்லயா சமையல் குறிப்பு முதல்லயா ?

said...

//நோ குக்கர்.( அது நம்மகிட்டே இல்லைன்றதும் ஒரு காரணம்) //

என்ன கோபால் சார் இதையெல்லாம் நீங்க கவனிக்கிறதில்லையா?
டீச்சர்,பேசாம அவரை இன்னிக்கே கிச்சன் ஐடெம்ஸ் விக்குற கடைக்குக் கூட்டிட்டுப் போங்க.. :)

என்னது?? டீச்சர் சும்மா சொல்றாங்கன்னு எப்படி சொல்றீங்க கோபால் சார்?

//இன்னிக்கு கழுவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வச்சு மூணு விசில் வரும்வரை வேகவச்சு எடுத்துக்குங்க. //

இத வச்சுத்தான் :P

said...

வாங்க மீனாட்சி பாட்டி.

ப்ரோட்டீன் அயர்ன் இப்படியெல்லாம் சொன்னா..... விடுங்க....அது ஒரு சோகக் கதை.....


அதுசரி. ஆச்சிக்கு நான் எங்கே போவேன் ஆச்சி?

நமக்கு இங்கே கிடைப்பது ப்ரியாவும், மங்களும்தான்.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

சைட் டிஷ்ஷை மெயினா எப்படி மாத்துவோமுன்னா.....

கூடவே ஒரு கார்லிக் ஃப்ரெட் ஸ்டிக் வச்சா ஆச்சு:-)

ஒருமுறை ஜப்பானிய உணவகம் போயிட்டு, அங்கே எனக்கு (வெஜிடேரியன்னு சொன்னதும் அந்த வெயிட்ரெஸ்ப் பொண்ணு நடுங்கிருச்சு)

மூணு கோர்ஸ் மீலுக்கும் ஃப்ரைய்டு டோஃபூ கொண்டுவந்து விதவிதமான அழகுத் தட்டுகளில் அலங்காரமா வச்சதை எங்கே போய் சொல்லி அழுவேன்(-:

said...

வாங்க கயலு.

'அடீ'ங்கறதுக்கு ஆம்படையாளைக் காணோம். புள்ளைங்க எத்தனைன்னு கேட்டானாம்'

கிவாஜ. தொகுத்தளித்த பழமொழிப் புத்தகம்:-)

said...

ரீச்சர்..

தலைப்பை பார்த்தவுடனேயே யாரோ போலி துளசி ரீச்சரா இருக்குமோன்னு சந்தேகப்பட்டு ஓடோடி வந்தேன்..

ஏமாத்திட்டீங்களே..

இதையெல்லாம் தொகுத்து கொடுத்தா துளசி டீச்சரின் அற்புத சமையல்கலை என்கின்ற தலைப்பில் புத்தகமாக போடலாம்.. அனுப்பி வைங்க..

said...

வாங்க ரிஷான்.

இப்ப என்னமோ புரட்சிகரமுன்னு பல கருத்துக்கள் வந்துக்கிட்டு இருக்கே அதுக்கெல்லாம் முன்னோடிகளா நாங்க இருந்துருக்க வாய்ப்பு உண்டு.

அப்ப இருந்த நிலை அப்படி!

said...

வாங்க உண்மைத் தமிழன்.

ஓடோடிவந்த உங்களை ஏமாற்றும்படி ஆயிருச்சே...... அச்சச்சோ......

இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரணமாயிருது:-))))

said...

பாக்க, கேக்க நல்லாத்தான் இருக்கு... ஆனா அந்த ராஜ்மா (அதாங்க...கிட்னி பீன்ஸ்) அத்த கண்டாக்க கொஞ்சம் பயம்.. என்னா , அது தான் அபான மாஸ்டர்... (இருக்கிற, இல்லாத காஸ் எல்லாம் கிளப்பி விட்டுடும்)

- வெங்கி..

இங்கனயும் கொஞ்சம் வந்துட்டு போங்க...
http://keysven.blogspot.com/

said...

வாங்க வெங்கி.

பயணம் முடிச்சுட்டு வந்தாச்சா?

ராஜம்மா, கேஸம்மாதான். ஆனாலும்
புரோட்டீன், இரும்புச்சத்து,பொட்டாசியம் சோடியம் எல்லாம் இருக்கே.

அதுவுமில்லாம எப்பவாச்சும்தானே சமைக்கிறோம்.

நாம என்ன மெக்ஸிகோக்காரங்களா?

புரிட்டோ அது இதுன்னு வெளுத்துக்கட்ட? :-))))

உருளைக்கிழங்கில் இல்லாததா?

எல்லாம் அளவோடு இருக்கணும். அப்பப் பிரச்சனை இருக்காது.

said...

நல்லபடியா வந்து சேர்ந்து ரெண்டு பதிவும் போட்டுட்டேன்.. இந்த தமிழ் மணத்துல இணைக்கிறது, தேன்கூடுல இணைக்கிற விவகாரம் தான் சரியா புரியல்ல..யாராவது விளக்கினா சௌகர்யமா இருக்கும்,, நானும் என்னென்னமோ பண்ணி பாத்துட்டேன்..என் ப்ளோக் மாத்திரம் appear ஆக மாட்டேன்கிறது.. எதாவது அட்வைஸ் குடுங்க... (ஈமெயில் : keys.ven@gmail.com)

ஒண்ணு கவனிச்சேன்.. 2 சமையல் குறிப்பும் காஸ் இடேம் ஆகவே போட்டிருக்கீங்களே !! யார் மேலேயும் கோபமா ? :))

said...

////போய்யா வெண்ணை...... இருடீ.... ராஜம்மா வரட்டும்.
அப்ப இருக்கு உனக்கு!/////

துளசியம்மா எப்ப இப்படி ரௌடியம்மா(!??) ரேஞ்சுக்குப் போனாங்கன்னு ரொம்ப விசனமாப் போச்சு தலைப்பை படிச்சவுடனே...

அப்புறம்தான் இது 'தலைப்பு கயமைத்தனம்' அப்படின்னு புரிஞ்சது.

/////பி.கு: ருசி பரவாயில்லாம இருக்கு. ஓஹோன்னு சொல்ல முடியாது. ஒரு மாற்றத்துக்குச் செஞ்சுக்கலாம். (வேற வழி? செஞ்சாச்சு. தின்னுதானே ஆகணும்)////

வெண்ணை பார்க்க நல்லாதானே இருக்காரு..புசிக்க நல்லா இல்லையோ????

முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்..

said...

வெங்கி,

இந்தத் தமிழ்மனத்து முகப்புப் பக்கத்தில் இடது பக்கம் தமிழ்மணத்தில் இணைக்க ன்னு ஒன்னு இருக்கு பாருங்க.

அதுலே இருக்கும் ஒரு நிரலை உங்க டெம்ப்ளேட்டில் இணைக்கணும்.

அப்புறம் தமிழ்மணம் உதவி/தகவல்களில் எல்லா விவரமும் இருக்கு.

நான் ஒரு க.கை.நா.
அதான் ரொம்பச் சொல்லத்தெரியலை.


அப்புறம் இந்த ரெண்டு ஐட்டங்களும் வெவ்வேற காலக்கட்டத்தில் செஞ்சது. ஒன்னு ஃபிப்ரவரி. இன்னொண்ணு மே.

படங்களில் தேதி இருக்கு:-))))

செய்யும்போது படம் எடுத்துவச்சுக்கிட்டு ஆற அமர எழுதறேன்.

said...

//முதல் நாள் இரவே கிட்னி பீன்ஸைத் தண்ணீரில் போட்டு ஊறவச்சுக்கணும்//

உங்க படத்தை (நுரையை) பார்த்தவுடன் என்னடா இது ஸர்ப் போட்டு கழுவிட்டாங்களோன்னு பயந்துட்டேன் ஹீ ஹீ ஹீ

said...

Hey Thulasi,

This is Alpesh from Linq.in. I loved your blog and I thought I would let you know that your blog has been ranked as the Best Blog of All Time in the Languages Category.

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
We offer syndication opportunities and many tools for bloggers to use in there
web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.in

said...

//
வேற வழி? செஞ்சாச்சு. தின்னுதானே ஆகணும்

சைட் டிஷ்ஷை மெயினா எப்படி மாத்துவோமுன்னா.....

(வெஜிடேரியன்னு சொன்னதும் அந்த வெயிட்ரெஸ்ப் பொண்ணு நடுங்கிருச்சு)

விஸா எடுத்துருங்க. ரிட்டர்ன் டிக்கெட்டைக் காமிச்சாப் பிரச்சனை இருக்காது:-)
//

ரொம்ப ப்ராக்டிக்கலா, ஜோவியலா அத்தனையும் கலக்கல்ஸ்.

said...

//I thought I would let you know that your blog has been ranked as the Best Blog of All Time in the Languages Category.//

வாழ்த்துகள் ரீச்சர். உங்கள் தொப்பியில் இன்னும் ஒரு சிறகு!! :))

Anonymous said...

//துளசியம்மா எப்ப இப்படி ரௌடியம்மா(!??) ரேஞ்சுக்குப் போனாங்கன்னு ரொம்ப விசனமாப் போச்சு தலைப்பை படிச்சவுடனே...

அப்புறம்தான் இது 'தலைப்பு கயமைத்தனம்' அப்படின்னு புரிஞ்சது.
//
Repeeetai

said...

வாங்க அறிவன்.

'கயமை'யாப் போச்சேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கு.

வெள்ளைக்கு ருசி மட்டுதான்.

said...

Cheena said://இவ்வளவு நகைச்சுவையா ஒரு செய்முறை துளசியால மட்டும் தான் சொல்ல முடியும் - செய்ய முடியும்//

முற்றிலும் உண்மை.

பட்டர் பீன்ஸை தோலுடன் சமைக்கலாம் எனபதே எனக்குப் புதிய தகவல். வெள்ளையன் தோலை உரிச்சு (உப்புக் கண்டம்தான்:) உள்ளிருக்கும் பீன்ஸ் மட்டுமே பயன் படுத்துவேன். படத்திலுள்ளது போல இத்தனை இளசாக கிடைப்பதும் ரொம்ப அரிது.

said...

வாங்க கிரி.

சுத்தபத்தமாச் சமைக்கணுமுன்னாக் கொஞ்சூண்டு சர்ஃப் போட்டால் தப்பா? :-)))))

said...

Hi Alpesh,

Thank you so much for the award.

I didn't know that you could read Tamil!

said...

கொத்ஸ்,

இனித் தொப்பி போட்டுக்கணுமா?

'கொத்ஸின் விருப்பம் அதுவானால்...அதுவானால்.....'
( மை.ம.கா.ரா. ஸ்டைலில் படிக்கவும்)


இல்லே அந்தச் சிறகைக் காது குடைய வச்சுக்கவா?:-)))))

said...

வாங்க சதங்கா.

நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லாமலிருந்தால்......

இந்நேரம் புல் முளைச்சு இருக்கும்!

'சிரித்து வாழவேண்டும் 'இல்லையா?

said...

வாங்க சின்ன அம்மிணி.

கயமை பண்ணிட்டேன்னு ஒருத்தர் 'பேசி'ட்டார்ப்பா.

said...

ஹை இங்கயும் வந்துட்டாரா அல்பேஷ்!!

நான் ஏதோ சைனீஸ் மாதிரி தெரியுதே விட்டு.....விட்டேன்.

//இந்தத் தமிழ்மனத்து முகப்புப் பக்கத்தில் இடது பக்கம் தமிழ்மணத்தில் இணைக்க ன்னு ஒன்னு இருக்கு பாருங்க.

அதுலே இருக்கும் ஒரு நிரலை உங்க டெம்ப்ளேட்டில் இணைக்கணும்.

அப்புறம் தமிழ்மணம் உதவி/தகவல்களில் எல்லா விவரமும் இருக்கு.

நான் ஒரு க.கை.நா.//
இந்தக் க,கை.நா செய்யற திறமையே இப்படி வளர்ந்திருக்குனா, இன்னும் கணினி படிச்சிருந்தா(இருக்கும்) எங்கேயோ போயிருக்குமே:)

பட்டர்பீன்ஸ் உள்ள இருக்கிற பீன்ஸ் தான் எங்க வீட்டில சுண்டலா ஆகிவிடும்.தோலிய விட்டுடுவோம்.:)

said...

வாங்க பொய்யரே.

உங்களது பின்னூட்டத்தில் ஒரு பகுதியை 'எடிட்' செய்து போட்டுருக்கேன்.


//திரு அல்லது திருமதி துளசி கோபாலுக்கு

நீங்கள் ஆணா, பெண்ணா என்பது எனக்குத் தெரியாது. உங்கள் பதிவின் தலைப்பை ஏதோ நகைச்சுவை என நினைத்து வெளியிட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். வெண்ணை என்பது வசவு வார்த்தை. மிகக் கேவலமான அர்த்தம் கொண்டது. மதுரை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ளது. வடிவேலு போன்றவர்கள் (எனக்குப் பிடித்த நகைச்சுவைக் கலைஞர்தான்) திரைப்பட ஊடகத்தில் இதை மிகச் சாதாரண வார்த்தையாக்கி விட்டனர். அதனால் உங்களைப் போன்ற பதிவர்களும் வெள்ளந்தியாகப் பயன்படுத்தி வருகிறீர்கள். ஒரு திரைப்படத்தில் பெண் வேடமிட்டு தப்பிக்கும் வடிவேலு, **************** என்று கூட ஸ்பஷ்டமாக சொல்வார். அதையும் பயன்படுத்திவிடாதீர்கள். அச்சமாக இருக்கிறது. //

அடடா.... இது வசவா? பாருங்க பதிவர்கள் உண்மையான வெள்ளந்திகள்தான்னு நிரூபணமாயிருச்சு.

கோபால், மதுரைக்காரரா இருந்தும் இதைப் பத்திக்கேட்டால் இப்படியெல்லாம் இருக்கான்னு கேட்டு விழிக்கிறார். என்னமோ போங்க.

ஆனால் உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி.

said...

பாத்தீங்களா, வல்லியம்மாவுக்கும் வெள்ளையன் தோலை உரிச்சுட்டுதான் மறுவேலை!

அப்புறம் அந்த......க.கை.நா.......ப்ளீஸ்....?

said...

வாங்க வல்லி.

உரிக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் செய்யலைப்பா......
எல்லாம் படு இளசாத்தான் கிடைக்குது இங்கே:-)))

said...

ராமலக்ஷ்மி.

என்னங்க இதைப்போய்த் தெரியலைன்னுக்கிட்டு.....


கணினி கை நாட்டு :-)))))

நல்லவேளை. இதுக்கு எனக்கேதான் காப்பிரைட்டு.

said...

Hey thulasi,

Give thanks to your blog.

We at linq track all the indian popular and best blogs and give awards to those blogs only, to get the latest ranks,awards and votes of your blog add our WIDGET in your blog.

Thanks
Alpesh
www.linq.in

said...

இதுலாம் சாப்பிட ஆசதான் , ஒட்டல்ல கிடைக்காதே... ம்ம்
உங்க பதிவ படிச்சதே சாப்ட மாதிரி இருக்கு ,

நன்றி

said...

//என்னங்க இதைப்போய்த் தெரியலைன்னுக்கிட்டு.....
கணினி கை நாட்டு :-)))))
நல்லவேளை. இதுக்கு எனக்கேதான் காப்பிரைட்டு.//

விளக்கத்துக்கு நன்றி மேடம்.
இப்படிக்கு,
வ,கை.நா
(வலைப்பூவுக்கு கை.நா)

காப்பிரைட் எல்லாம் வேணாம். ரொம்ப நாளுக்கெல்லாம் யூஸ் பண்றதாயில்லை. அதான் தேறிட்டு வரேன்னு ஷொட்டு கொடுத்துட்டீங்களே:))!

said...

நல்ல வேளை பொய்யர் நிஜத்தை சொல்லீட்டார். இனிமே ஜாக்ரதையாக
இருக்க வேண்டும். பால், தயிர்,-------, மோர், நெய் என்று கூட அர்த்தம் தெரியாமல் சொல்லவேண்டாம்.
உஷார்!!!!!!
இவ்வகை பீன்ஸ் நான் ஸேஃப்வே-யில் பார்த்திருக்கிறேன். ஹையா!
யெல்லோ பீன்ஸ் என்று ஆசையாக
வாங்கப் போனேன். விலை என்னை
தூக்கி வாரி வெளியே எறிந்துவிட்டது.

இளசான பட்டர்பீன்ஸ்! இங்கு முத்தலாகத்தான் கிடைக்கிறது. இதை பட்டாணி போல் உறித்து பொரியல் கூட்டு, குருமா,பிரியாணி எல்லாத்துலேயும் போட்டு சமைக்கலாம்.

said...

வாங்க அதிஷா.

சில ஓட்டலில் செட் மெனுவா இல்லாம சீஸனில் வரும் காய்கறிகளையும் சமைக்கிறாங்க.

ஆனா நம்மூரில் கத்தரிக்காய் வெண்டைக்காய்க்கு எப்பவுமே ஒரே சீஸந்தான்:-))))

இப்பத்தான் உங்க திண்ணையில் போய் உக்கார்ந்துட்டு வந்தேன்.

பாவம் அந்தப் பாட்டி(-:

said...

வாங்க நானானி.

ஆமாம்ப்பா..... சாதா'ரண' ச் சொற்கள்!!!!

இங்கே முத்தல் இதுவரை கிடைக்கலை(-:

எனக்கும் உரிக்கணும்போல இருக்கு:-)