Monday, June 16, 2008

கமல் படத்தை நானும் பார்த்துட்டேன்.

கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமுன்னு. 'கமலோட படம் இருக்கு. வாங்கிட்டு வரட்டுமா?' முந்தாநாள் கோபால் மலேசியாவிலே இருந்து ஃபோன் செஞ்சப்ப , 'வெல்லம் வேணான்னு சொல்லமுடியுமா?' கட்டாயம் வாங்கியாங்க. ஆனால் எல்லாம் கள்ளக்காப்பியா இருக்கப்போகுது. ப்ரிண்ட் எப்படி இருக்கோ? நல்லாச் செக் பண்ணிட்டு வாங்குங்க. நல்லாத்தான் இருக்கு. கடைவச்சே விக்கறதாலே பிரச்சனை இருக்காது'ன்னார்.


இப்படி இங்கெ ஒரு வீடியோக் கடையில் நிறையப் படங்கள். எல்லாம் மலிவா( நியூஸிக் காசுக்கு) இருக்கு. சில பெயர்களைச் சொல்லி வாங்கிவரேன்னு சொன்னார். ஆசைஆசையா விவரமெல்லாம் கேட்டுட்டு, 'கொண்டுவந்துருங்க'ன்னுட்டேன்.


கொண்டுவந்ததில் இதுவரைப் பார்க்காத படம் ஒன்னு இருக்கு. அதுதான் இன்னிக்கு:-)

முதல்நாள் முதல் காட்சி(நம்ம வீட்டில்!)


சென்னைத் தெருக்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு. கடற்கரையில் கூட்டமே இல்லை. ஒரு சின்னப் பொண்ணுப் பாடிக்கிட்டேக் கைமுறுக்கு வித்துக்கிட்டுப் போறாள். ஈவ் டீஸிங் ஒன்னும் இல்லை.அவனவன் பாட்டுக்கு அவனவன் சோலியைப் பார்த்துக்கிட்டு இருக்கான்.


தர்மநியாயம் எல்லாம் தவறாமக் கடைப்பிடிக்கும் ஊர் மக்கள். நாயகி பஸ் ஏறும்போது கீழே விழுந்த புத்தகத்தை நாயகன் எடுத்துத் தர்றான். இதுலே என்ன அதிசயம்? நிதானமா அவன் எடுத்துத் தரும்வரை பஸ்ஸைக் கிளப்ப விசில் கொடுக்காம, 'சாவு கிராக்கிகளா...சீக்கிரம் ஏறுங்க. இது என்ன ஒங்கப்பன் வீட்டு வண்டியா?'ன்னு கேக்காம பொறுமை காக்கும் கண்டக்டர் உலக மகா அதிசயம் இல்லையா?


"சரிதான்.மெட்ராஸ்க்குப் புதுசுன்னு சொல்லி இருப்பான். டாக்ஸிக்காரன் சுத்தோ சுத்துன்னு சுத்தி மீட்டர் 20 ரூபாய் ஆனதும் கொண்டுவந்து விடுவான்'
இப்படி(யும்) ஒரு வசனம்!!!!


கதாநாயகனைவிட விஜயகுமார் முகத்தில் நல்ல களை. ஹேண்ட்சம்!
மெட்ராஸில் முதல் சூப்பர் மார்கெட் டி யூ சி எஸ்.
படத்தோட கதை புஷ்பா தங்கதுரை.


வெறும் 32 வருசத்துலே ஊரையே நெரிசலாப் பண்ணி அசிங்கம் செஞ்சுவச்சுட்டாங்களேன்னு இருக்கு. முட்டுக்காடு படகு ஜோர்.


ஆமாம். ......கறுப்பு வெளுப்புப் படத்தில் ஊதாப்பூ எங்கே தெரியுது?

72 comments:

said...

டீச்சர்..

பாட்டெல்லாம் பிரமாதமா இருக்குமாமே..? கேள்விப்பட்டிருக்கேன்.. நானும் பார்த்ததில்லை..

பாத்திட்டு அப்படியே ரிட்டர்ன் அனுப்புங்க..

said...

படம் பேரே இப்ப தான் கேள்விபடறேன்.

said...

நேரத்துக்கு தகுந்த பதிவு! அதுக்குள்ள திருட்டு வட்டு வந்துருச்சான்னு பாத்தா... பம்மாத்து!

//ஆமாம். ......கறுப்பு வெளுப்புப் படத்தில் ஊதாப்பூ எங்கே தெரியுது?//

இது நச்! ஆமா, நீங்க விஜயகுமார் ரசிகையா?

said...

இப்படியெல்லாம் தலைப்பு போட்டு நம்ப வச்சு ஏமாற்றலாமா ?

:)

நியூசியில் (புது) தமிழ்படம் திரையரங்கிற்கு வராதா ?

said...

அவனவன் பாட்டுக்கு அவனவன் சோலியைப் பார்த்துக்கிட்டு இருக்கான்//

அங்கே எப்பவுமே அப்படித்தானா?

நான் அங்கே இருந்த போது இது என்ன இப்படி இருக்காகன்னு நினைச்சுகினு இருந்தேன். :)

said...

துளசி,
நியாயமே இல்லை.:)

இது சரியான தலைப்பு மாயமா இருக்கு.

கறுப்பு பூவாத் தெரிஞ்சுது இல்ல??
அதுதான் ஊதாப்பூ. நீங்க ஊதிவிட்ட பூ:))))

said...

நான் சிவாஜி படத்துக்கு விமர்சனம் எழுதிய பொழுது செய்த அதே சித்து வேலையை தசாவதார விமர்சனம் செய்த பொழுது மீண்டும் செய்து உங்கள் நடுநிலமைவியாதியை நிலைநாட்டிக் கொள்ளலாம் எனப் பகல் கனவு கண்டுகொண்டு இப்பதிவை இட்ட ரீச்சர் சமூகத்திற்கு கொத்ஸ் எழுதிக் கொள்வது என்னவென்றால் அன்றைக்கு நீங்கள் பின்னூட்டமாய் இட்டபடி இல்லாமல் இன்று நீங்கள் பதிவாய் போடுவதற்குக் காரணம் கமல் என்பவரின் மேலும் அவரின் பிறப்பின் மேலும் அவரின் நிறத்தின் மேலும் தாங்களுக்கு இருக்கும் அதிக பட்ச வாஞ்சையும் பிரியமும்தான் என்பது எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் பூனைக்குட்டி, சரி உங்க வீட்டில் அந்த வார்த்தைப் பிரயோகம் சரி வராது, புலிக்குட்டி வெளியே வந்து கூத்தாடும் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்.

said...

போச்சுடா!! நீங்களுமா? என்று பயந்துவந்தேன். :-)

said...

போச்சுடா!! நீங்களுமா?? என்று வந்தேன்.
நல்ல வேளை தப்பித்தேன்.

said...

நல்ல வேளை! துளசி மேடம் ரொம்ப நல்லவங்க.தலைப்பு மட்டும் தான் பயமுறுத்தும் படி இருந்துச்சி :-))))

said...

டீச்சர், இந்தப் படம் நல்லாருக்கும். புதுமையான கதை. இன்னைக்கும் கூட. அன்னைக்கு எப்படியிருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. காதலி கூட ஒரு நாள்...அதாவது பகல் மட்டும் வாழனும்னு காதலன் நெனைக்கிறான். அந்தக் காதலிக்குக் கல்யாணம் ஆயிருச்சுன்னு தெரிஞ்சும்...

பாட்டெல்லாம் ரொம்ப நல்லாயிருக்குமே டீச்சர். ஆண்டவன் இல்லா உலகமிதுன்னு ஒரு பாட்டு டி.எம்.எஸ், வாணி ஜெயராம் பாடியிருப்பாங்க. சூப்பரா இருக்கும். மத்த பாட்டுகளும் நல்லாயிருக்கும். ஆனா மறந்து போச்சு. தட்சிணாமூர்த்தி இசைன்னு நெனைக்கிறேன்.

said...

இந்தப் படத்தை நானும் விஜய் டீவீல போடும்போது ஒரு தரமாவது பாக்கனும்னு நினைப்பேன் ஆனா, கரண்ட் கட்டு, அக்கா பையனுக்கு ஹாப்ப டேனு எதனாலயாவது பாக்க முடியாது. நான் போன வருஷம் கல்யாணமாகி இங்க வந்ததிலிருந்து கேர் du நோர்த்இல் உள்ள கடைகளில் என்னன்ன படங்களோட dvd பார்த்திருக்கேன் ஆனா இந்தப் படத்தை பார்த்ததில்லை. வீட்ல பார்த்த ரெண்டு தடவையும் கமல் ஜெயில்ல இருந்து ரிலீசாகி சுஜாதா வீட்டுக்கு வர்ற சீனைத்தான் பாத்திருக்கேன்.

said...

ஆனாலும் சந்துல சிந்து பாடிட்டீங்களே மேடம். உங்களுக்கு ஆனாலும் நக்கல்தான்!

said...

வாங்க உண்மைத் தமிழன்.

ஒரு பாட்டுதாங்க மனசுலே நின்னுச்சு.

'ஆண்டவன் இல்லா உலகமெது?
ஆசைகளில்லா இதயம் எது?'

கண்ணதாசன் வரிகளுக்குக் கேக்கணுமா?

இந்தப் பாட்டு சீனுக்கு நடிச்சவங்க யாருன்னா ஆச்சரியமா இருக்கும்.கள்ளபார்ட் நடராஜனும், ப்ரேமி(இப்ப அம்மா, டாக்டர், டீச்சர்ன்னு வந்துக்கிட்டு இருக்காங்க)யும். அதுவும் ப்ளவுஸ் போட்டுக்காம. மீனவக்கூட்டமாம்!!!!!

said...

வாங்க அம்பி.

இது நீங்கெல்லாம் பிறக்கறதுக்கு முன்னாலே வந்த படம்.

ஆமாம்...பேருன்னதும் நினைவுக்கு வருது? புள்ளைக்கு என்ன பேரு வச்சீங்க?

said...

வாங்க முகவை மைந்தன்.

முகவைன்னா அது எந்த ஊர்?

விஜயகுமார் அழகா இருக்கார்தானே? நல்ல லக்ஷ்ணமான களையான முகம்.

ரசிகைன்னு இல்லேன்னாலும் பழைய விஜயகுமார் நம்ம வீட்டில் எல்லாருக்குமே பிடிக்கும்.

(ஒலக)நாயகன் ரசிகர்கள்தான் இப்போது வீட்டில் மகள் உட்பட. ஆனால் அப்போதையக் கமல் ஒட்டி உலர்ந்த கன்னங்களுடன் ஒரே பரிதாபம் போங்க:-)

said...

வாங்க கோவியாரே.

ஆக்லாந்து நகரில் குறிப்பிட்ட சில படங்களைத் திரையிடுவாங்க. அங்கே தமிழ் ஆட்கள் கூட்டம் நிறைய இருக்கு. அதுவும் இந்தப் படம் ரெண்டு வீகெண்ட் தொடர்ந்து போடறாங்களாம்.

இங்கே நம்மூரில் படம் போட நாந்தான் அதாரிட்டி:-)))))

குறைஞ்சது தியேட்டர் வாடகையோடு1500 டாலர் செலவாகும். இருக்கும் தமிழ்க்குடும்பங்கள் சுமார் 30. எல்லாரும் கண்டிப்பாப் படம் பார்க்க வந்து, குடும்பம் 50 டாலர் கொடுத்தால் படம் போடலாம்:-))))

சிவாஜியைப் பெரிய ஸ்க்ரீனில் போட்டதுக்கு (தமிழ்ச்சங்கத்தின் ப்ரொஜெக்டர் கடன் வாங்கினோம்) எனக்குக் கிடைச்ச காசு வெறும் ஏழரை டாலர். படம் வாங்குன காசும் தேறலை(-:

உழுதவன் கணக்குப் பார்த்தால்.......

said...

வாங்க புதுகைத் தென்றல்.


இப்படி இருந்தாலே பிரச்சினை ஒன்னும் இருக்காதேப்பா:-)))

said...

வாங்க வல்லி.

இந்த வாரம் தசா(வதாரம்)வாரம். கூடி இருந்து குளிர்ந்தேலோ & கும்மியடித்தேலோ ரெம்பாவாய்:-)))))

புன்னகைமன்னன், குரு, சிங்காரவேலன்( யாரும்மா அந்த மூனு பேரு டயலாக்குக்காகவே) வந்துருக்கு:-))))

said...

வாங்க கொத்ஸ்.

இப்படி நுணுக்கமா நுண்ணரசியலை(யே) பிரிச்சு மேய்ஞ்சா எப்படி?

பிறப்பையும் நிறத்தையும் பார்த்த நீங்க நடிப்பை விட்டுட்டீங்களே!

said...

வாங்க குமார்.

ஊரோடு சேர்ந்து நானும் கொண்டாடலாமேன்னுதான்:-))))

said...

வாங்க பிரேம்ஜி.

நம்ம சினிமா விமரிசனத்தில் எப்பவும் கதையைச் சொல்ற வழக்கமே இல்லைங்க. கொஞ்சமாக் கோடி காமிச்சுட்டு மீதியை

'வெள்ளித்திரையில் காண்க' தான்:-)))

said...

வாங்க ராகவன்.

இதையா புதுமையான கதைன்னு சொல்றீங்க!!!!!!

ஒரு நாள் வாழணுமுன்னு கேக்கறதே அபத்தமா இல்லை?

அதிலும் அந்த வாழ்க்கை எப்படி? காலையில் காஃபி போட்டுக் கொடுத்துக் குளிக்க வெந்நீர் விளாவி வச்சு, பொருத்தமான ஷர்ட் எதுன்னு சொல்லி,என்ன டிஃபன் வேணுமுன்னு ஒரு பேச்சுக்குக் கேட்டுட்டு (தானே) உப்புமா பண்ணித் தின்ன வச்சு நாயகன் ஆஃபீஸ் போனதும் மத்தியான சமையல் செஞ்சுவச்சு (வாழை இலைபோட்ட சாப்பாடு)......


ஆம்பிளைகளுக்குத் தெரிஞ்ச 'வாழ்க்கை' இதுதானா? த்சு த்சு த்சு.................



கதை முடிவிலும்கூட அவள்கூடவே வந்துட்டான்னா விஷம் குடிச்சுறணும்( சட்டைப் பாக்கெட்டுலே விஷம் என்று எழுதிய பாட்டில் இருக்கு)

அவள் மனம் மாறிக் கணவனுடன் போனதும் விஷத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுடறார் நாயகன்.
தன்னால்தானே நாயகிக்கு இத்தனை மனக்குழப்பம் என்று நினைச்சு, நாயகனே அந்த விஷத்தைக் குடிச்சுடரதா முடிச்சுருக்கலாம்ல்லே?


என்னவோ போங்க..........

said...

துளச்சிம்மா

இப்போது தான் ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது உங்க ஊர் தியேட்டல் போட்டாங்களா ;-)

அப்ப தசாவதாரத்துக்கு ஒரு முப்பது வருஷம் காத்திருக்கணும் போல.

said...

வாங்க ராப்.

மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்படவேண்டிய பிரமாதமான படம் இல்லை இது.

(எனக்கும் பார்த்த பிறகுதானே தெரிஞ்சது!!!!)

எஸ்பி முத்துராமன் இயக்கம். பாட்டு ஆட்டம் வைக்க நிறைய ஸ்கோப் இருந்தும் வைக்காம விட்டதுக்கே பாராட்டலாம்.

ச்சும்மா ஜெயிலில் இருந்து வந்ததை ஒரு வரியில் சொல்லாம ஜெயிலில் ஒரு க்ரூப் டான்ஸ், அங்கே ஒரு சண்டைக்காட்சி, நாயகனை விரும்பும் இன்னொரு கதாப் பாத்திரம் (கனவுப்பாட்டில் நாயகனுடன்ஆட்டம் போட்டுருக்கலாம்) தானே வலிய வந்தாலும் நாயகன் 'ச்சீ' என்று ஒதுக்குவது இப்படி நிறையச் சொல்லலாம்:-)

said...

வாங்க பிரபா.

கணக்குத் தப்புதேப்பா....
சரியாச் சொன்னா 32 வருசம்:-))))

said...

நானும் இப்படித்தான் திடீர்னு ஒருநாள் மூன்று முடிச்சு பாத்தேன்..

said...

அவ்வ்வ்வ்வ்வ்....

said...

இது தசாவதர வாரம்ன்னு சொல்லலாம். நீங்களுமா அப்பிடின்னு நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது. சூடான தலைப்பு என்று.
ஊதாப்பூ என்றால் எனக்கு டிசம்பர் பூ தான் ஞாபகம் வரும். நியுஸிலாந்தில் டிசம்பர் பூ இருக்கிறதா?

said...

துளசியின் இளமைக் குறும்பே குறும்பு

said...

ஆஹா, கலக்கிட்டீங்க :)

said...

இந்தப் படம் வெளிவந்த புதிதில் தியேட்டரில் (பின்ன, அப்ப வீட்லயா பாக்க முடியும்) சிறுமியாகிய நான் புரிந்ததும் புரியாமலுமாய் பார்த்திருக்கிறேன். பின்னர் இருக்கவே இருக்கே நம்ம சேனல்களின் கைங்கரியத்தில் பல ஆண்டுகள் களித்துப் பார்த்துப் புரித்து கொண்டேன்[ரொம்ப அவசியம்:))!]

Anonymous said...

ஆஹா கொஞ்சம் பிஸியாயிருந்துட்டேன். உங்க பதிவு பக்கமமெட்டிப்பாத்தா இப்படி ஒரு தலைப்பு, அதுக்குள்ள எப்படியும் தசாவதாரம் அங்கே வந்திருக்க வாய்ப்பு இல்லைன்னு தெரியும். எல்லாரையும் கலக்கிப்புட்டீங்க இல்ல

said...

ஆஹா...தசா....பத்திய என்னோட பதிவைப் பாத்தும் துள்சிக்கு புத்தி
வல்லையேன்னு பாத்தேன்....இலுப்பைப்பூ சர்க்கரையா? ஐயோ! பவம்!!!

said...

தமிழ்மணத்துல என்ன விசேசம்ன்னு மங்கை போன் பேசினப்ப, தசாவதாரம் தான் ..கமல் படம்ன்ன்னு போட்டிருக்காங்க துளசி வேற என்னபடம்ன்னு தெரியலன்னும் உள்ளேபோய் பாக்கனுன்னும் சொன்னேன் :)

said...

நீங்க ரொம்ப பழைய டீச்சர்...;))

said...

ஊரே திரண்டு வந்து 'அவதார' விமர்சனம் எழுதுகிறார்களே... டீச்சரம்மா என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆர்வமாக பார்க்க வந்தால்..ம்ம்!

said...

வாங்க தங்ஸ்.

இப்படித் திடீர்ன்னு பார்க்கும்போது பல சீன்கள் புதுசா இருக்கறதுபோலத் தோணும்.

இன்னிக்கு 'சிங்காரவேலன்' நம்ம தியேட்டரில். கருவாட்டுக்கூடையை இப்பத்தான் கவனிச்சோம்:-))))

said...

வாங்க ச்சின்னப் பையன்.

இதுக்குப்போய் அழுவலாமா? :-))))

said...

வாங்க இக்பால்.

இங்கே டிசம்பர் பூ இல்லை. ஆனா இந்த பர்ப்பிள் கலருலே வேற நிறையப் பூக்கள் இருக்கு.

நம்மூர் அந்திமந்தாரை இங்கே இருக்கு. நான் மஞ்சள் வகை வச்சுருக்கேன். நம்மூர்லே அது மாலை 4 மணிக்குப் பூக்கும். இங்கே ராத்திரியில் மலருது:-)

said...

வாங்க சீனா.

கொஞ்சம் குறும்பு உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்:-)

said...

டீச்சர் ! இதுக்கு கட்டையாலேயே என்னை ரெண்டு அடி அடிச்சி இருக்கலாம் ... இப்படி சூட ஒரு தலைப்பு .. நியூ ஜிய் லேர்ந்து கொடுத்துட்டு..மொக்கை போடுறதா ??

said...

வாங்க கவிநயா.

ச்சும்மா....கும்மி:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எப்படியோப் புரிஞ்சாச் சரி:-))))

கதாநாயகனின் நிழலுக்கு 'உம்மா' கொடுக்கும் பெண். சட் என்று நகர்ந்து அந்த நிழலையும் நகரவைக்கும் உத்தி எல்லாம் புரிஞ்சதா?

டைரக்ஷன்!!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

வெலிங்டனில் 'திரையிடல்' உண்டா?

said...

வாங்க நானானி.

திரைப்படத்தைப் பொறுத்தவரை, நான் படம் பார்க்குமுன் படத்தின் விமரிசனங்களை ஒரு நாளும் படிக்க மாட்டேன்.

கொஞ்சம் எதிர்பார்ப்போடு இருக்கும் படங்கள்ன்னா கேக்கவே வேணாம்.

அதான் தசா ன்னு தொடங்கும் எதையும் இப்போதைக்கு......ஊஹூம்.....


எனக்குப் படம் வர ஒரு ரெண்டு மாசம் ஆகலாம். ஆகட்டுமே.....

said...

வாங்க கயலு.

ஊருலகம் போகும் வழி:-)))))

said...

வாங்க கோபி.

டீச்சரும் பழசு, படமும் பழசு:-))))

said...

டீச்சர் ! இங்கன போயி ஓசியிலே பாக்கலாம் தசாவதாரத்தை..


http://www.tubetamil.com/view_video.php?viewkey=d8d098a3be0f68356064

said...

வாங்க பாபு மனோகர்.

ஆடிக்காத்தில் அம்மியே பறக்குது. அதான் இந்தச் சருகும் கொஞ்சம்.....:-))))

said...

வாங்க வெங்கி

//இதுக்கு கட்டையாலேயே என்னை ரெண்டு அடி அடிச்சி இருக்கலாம் ... .//

கிளம்பி நியூஸிக்கு வாங்க.:-))))

ஓசியில் பார்த்துட்டு வமரிசனம் போடவா? :-)))))

(எங்கிட்டே 'அபிமன்யூ' இருக்கு)

said...

ரொம்ப நாள் கழிச்சி வந்து பார்த்தா

இது ஒங்களுக்கே ஓவரா தெரியல:-)))

said...

ரீச்சர் வேண்டாம் நிறுத்திக்குவோம்! ஒரு சமாதானத்துக்கு வருவோம்! என்ன சொல்றீங்க!!!!

said...

வாங்க டி பி ஆர்.

நலமா?

என்ன செய்யறதுங்க..... காலம் போற போக்கில் நாமும் ஓடவேணாமா? :-))))

said...

வாங்க அபி அப்பா.

அப்டீங்கறீங்க?

சரி. பேசித் தீர்த்துக்கலாம்:-))))

said...

இது அநியாயம்...அக்ரமம்...தலைப்புல இப்படியெல்லாம் நுண்ணரசியல் பண்ணக் கூடாது....
...................
..........................
........................
........................
அப்படின்னு எல்லாம் சொல்ல மேட்டேன். எனக்கு தான் மொதல்லேயே தெரியுமே டீச்சர் ரொம்ப நேர்மையானவங்க....ஏதோ பழைய கமல் படம் தான் சொல்லுறாங்கன்னு :D :D.....................................
..................................

பி.கு.:கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு....:-0.......யப்பாஆஆஆஆ ;-)

said...

வாங்க புதுவண்டு.

நல்லாத் தேறிட்டீங்க போல!

வலைஉலக நுண்ணரசியல் அத்துப்படி ஆகிருச்சா? பேஷ் பேஷ்:-)))))

said...

//முகவைன்னா அது எந்த ஊர்?//

இப்படட யாரரவது கஏக்க மாட்டாங்களான்னு இருந்தேன். என்ன செய்ய, எனக்கும் தாமதம் தான் பிடிக்கும். மன்னிச்சுக்குங்க.

இராமநாதபுரம் தான், முகவைன்னு தமிழ்ல சொல்லுவாங்க. விரைவில் (எப்பன்னு தெரியாது) எங்க மாவட்டத்து வரலாறும், பெருமையும் தம்பட்டம் அடிக்கப் படும்.

said...

படம் பேரே இப்ப தான் கேள்விபடறேன்.

said...

/
அபி அப்பா said...

ரீச்சர் வேண்டாம் நிறுத்திக்குவோம்! ஒரு சமாதானத்துக்கு வருவோம்! என்ன சொல்றீங்க!!!!
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்

said...

முகவை மைந்தனே,

இராமநாதபுரம் எப்படி முகவை?

கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க.

நம்ம அருவை பாஸ்கர் அருப்புக்கோட்டையாம். இது தெரியாம நான் அவரை அறுவைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்(-:

நம்ம தமிழ்மணத்தில் புதுவை, புதுகை
எல்லாம் இருக்காங்க.

இந்த முகவைதான் இன்னமும் புரியலை!

said...

வாங்க மங்களூர் சிவா,

இது நீங்கெல்லாம் பிறக்குமுன் 'வந்து போன' படம்:-)

said...

சிவா,

அது என்ன எதுக்கெடுத்தாலும் ஒரு ரிப்பீட்டு?

தீர்ப்பை மாத்திச் சொல்லக்கூடாதா? :-))))

said...

நினச்சேன். நினச்சபடிதான் பதிவு.

said...

வாங்க தருமி.

'பாம்பின் கால் பாம்பு அறியும்' :-)))))

said...

அது 'பாம்பி கால் ..' என்பதுதான் சரி என்று எப்போதோ வாசித்ததாக நினைவு. யாரிடமாவது கேட்டுச் சொல்லுங்களேன் - டீச்சருக்கு டீச்சரிடம்.

said...

தருமி,

நம்ம மருதைக்காரத் தமிழ்புலவர் செல்வி ஷன்கரைத்தான் கேக்கணும்.

கி.வா.ஜ. தொகுத்தத் தமிழ்ப் பழமொழிகள் புத்தகத்தில்

பாம்பின் என்றுதான் இருக்கு.

said...

தருமி மற்றும் துளசி

பாம்பின் கால்
பாம்பின கால்

இரண்டும் சரிதான்.

உரைநடையில் பாம்பின் கால் பாம்பறியும் என்பது பழமொழி.

பழமொழிப் பாடலில்:

பாம்பின கால் பாம்பறியும் - இதன் பொருள் - பாம்பினுடய என்பதாகும்.

said...

விளக்கத்துக்கு நன்றி சீனா.

ம.பா.வுக்கு எங்கள் நன்றியைச் சொல்லுங்க.


(ஆமாம். விளக்கம் சொன்னது அவுங்கதானே?)

said...

நன்றி சீனா
class recognizes class (ஒரு பாம்பை மற்றொரு பாம்பு அறிந்து கொள்ளும்) என்ற பொருளிலேதான் பாம்பின கால் பாம்பறியும் என்பதாகவும், இதில் கால் என்று வருவது பாம்பினுடைய கால் என்பதுபோல் கொஞ்சம் misleading என்பதாகவும், இங்கே அந்த 'கால்' உடல் உறுப்பான காலைப் பற்றியதல்ல என்பதாகவும் "அந்தக் காலத்தில்" வாசித்த நினைவு.

துளசி,
யார் அந்த ம.பா. & செல்வி ஷங்கர்? தெரிந்து கொள்ளலாமா?

said...

//துளசி,
யார் அந்த ம.பா. & செல்வி ஷங்கர்? தெரிந்து கொள்ளலாமா?//

ஆஹா...தாராளமா:-)

சீனா சாரின் மறு பாதியான செல்வி ஷங்கர். அவுங்களும் ஒரு பதிவர்தான்.

said...

தருமி

ஒரு பாம்பு சென்ற வழியை மற்றொரு பாம்பே அறியும். பாம்பின் கால் என்று பொருள் படுவதில்லை.

பாம்பின - பாம்பினுடைய வழி - காலல்ல .

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்