Wednesday, June 11, 2008

தண்ணிக்குள்ளே என்னைப்பாரு

"நெசமாவா சொல்றாங்க?"


ஒவ்வொருபடியாக் கவனமா இறங்கிக்கிட்டே கேட்டேன்..

"இல்லியா பின்னே அதான் அச்சடிச்சுக் கொடுத்துருக்குல்லே?"

எதாவது சொன்னா, மொதல்லே வர்ற பதில் ' எங்கே போட்டுருக்கான்?'

ஏன் எவனாவது போட்டாத்தானா? நானே சொன்னேன்னா நம்ப முடியாதா?

"ஐய்யே......அச்சுலே இருப்பதெல்லாம் அப்படியே உண்மைன்னு நினைக்கும் ஒரு அப்பாவி மனுசன்."

எங்க வீட்டுலே...... எங்க தெருவுலே, எங்க பேட்டையிலேன்னு போயிப்போய் இப்ப எங்கநாட்டுலே ன்னு இருந்ததைத் தூக்கிச் சாப்பிடுறமாதிரி 'உலகத்துலேயே இது ஒன்னுதான் இருக்கு'ன்னு விளம்பரம் பார்த்தா சந்தேகம் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க.

என்னத்தைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு புரியலைதானே?

ஆ..........ங்.......

நம்மூர் திரைப்படங்களிலே ( எந்த மொழிப்படம் என்றது பிரச்சனையே இல்லை) வெளிநாட்டுப் படப்பிடிப்புன்னு இங்கே நியூஸிலாந்து வர்றவங்க எதுக்கு ஆளரவம் இல்லாத நடுத்தெரு, மக்கள் கூட்டமாப் போய்வந்துக்கிட்டு இருக்கும் ஷாப்பிங் மால், மிஞ்சிப்போனா ஏரிக்கரை, பனிமலை இதைமட்டும் படம் புடிச்சாந்துக் காமிச்சுடறாங்க இல்லை!

உண்மையான இயற்கை அழகுக் கொட்டிக்கிடக்கும் இடங்கள் ஏன் இவுங்க 'கேமெராக் கண்களுக்கு'த் தெரிவதில்லை? கிறைஸ்ட்சர்ச் பன்னாட்டுவிமான நிலையத்தில் வந்து இறங்குனவுடனே.... குவீன்ஸ் டவுன் என்ற ஊர்வரை மட்டுமே இவுங்க பயணம்& படப்பிடிப்பு இருக்கும். போற வழியில்தான் போன பாராவில் இருக்கும் இடங்களில் நாவ்வாலு வரிகளுக்கு ஆடி படம் புடிச்சுக்குறது.

நான் உங்களை அந்தக் குவீன்ஸ் டவுனில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் கூட்டிப் போகலாமுன்னு இருக்கேன். அங்கிருந்து வடமேற்கு நோக்கிப் போகலாம். இதுவே உழக்கு மாதிரி சின்ன நாடு. இதுலே கிழக்காவது மேற்காவதுன்னு நினைச்சுக்கிட்டீங்களா?

ஒரு மூணு மணிநேரம் (172 கி.மீ) பயணம் செஞ்சு டெ அனா(வ்) என்ற இடத்துலே கேம்ப் போட்டுக்கலாம். சுத்துப்பக்கம் எல்லா இடம் பார்க்கவும் இது நடுசெண்டர்:-) இந்த ஊரே ஒரு ஏரிக்கரையில் தான் இருக்கு. இந்த ஏரியின் பெயரேதான் ஊருக்கும். 300 சதுர கி.மீ. பரப்பு உள்ள நீர்நிலை.இது நியுஸியின் ரெண்டாவது பெரிய ஏரி. ( முதலாம் ஏரி வடக்குத்தீவில் இருக்கும் Lake Taupo டா(வ்)போ ஏரி. 616 சதுர கி.மீ. இதுக்கு இன்னொரு நாள் போனாப் போச்சு) இங்கிருந்து மில்ஃபர்ட் சவுண்டு என்ற இடம் போறோம். 121 கி.மீ தூரம். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பாமப் போனா ரெண்டரை மணி நேரம். ஆனா.... கண்ணைக் கட்டிக்கிட்டுப் போக முடியுதா என்ன? போற வழியெல்லாம் மாயாஜாலம் மாதிரி அற்புதமா இருக்கு. போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சுற்றுலாப் பயணிகளுக்காகவே போற வழியில் என்னென்ன இருக்குன்னு பட்டியல் போட்டு அச்சடிச்சுக் கையில் கொடுத்துருவாங்க.

கண்ணாடி ஏரி ( Mirror lake) The Chasm, இப்படி 11 இடங்கள். எங்கே இடத்தைத் தவற விட்டுருவோமுன்னு அங்கங்கே அறிவிப்புப் பலகைகள். வரும்போது இருட்டிப்போகும். களைப்பா இருக்கும். அதனால் போகும்போதே முடிஞ்சவரை பார்த்துக்கிட்டே போகணும். பாதுகாப்பான பாதைகள். பயமில்லாமப் போகலாம்.

ரோடு நேராப்போய் ஒரு மலை அடிவாரத்துலே முட்டி நிக்கும். நாம் போகவேண்டிய இடம் இந்த மலைக்கு அப்பால். குகை ஒன்னு வெட்டி வச்சுருக்காங்க. இதுக்குப்பெயர் ஹோமர் டன்னல். 1.2. கி.மீ.நீளம். இருட்டுக்குகை. ஒரு பேருந்துலே போனமுன்னா மேற்கூரையை எங்கே இடிச்சுருமோன்னு பயம் வந்துரும்.
இந்தக் குகை இப்ப ஒரு 55 வருசமாத்தான் புழக்கத்தில் இருக்கு. 20 வருசம் கஷ்டப்பட்டுத் தோண்டுன குகைப்பாதை. ஏற்கெனவே மெதுவா நடந்துக்கிட்டு இருந்த வேலை, ரெண்டாம் உலகப்போர் வந்த சமயம் ஆள், பொருள் வசதிகள் சரியாகி கிடைக்காமப் பாதிக்கப்பட்டுச்சு. 1953 லே குகைவழி திறந்தாங்க.

இருட்டு முடிஞ்சு வெளியே வந்தால் ரொம்பக் கீழே சரிவா அடுத்தபக்கம் தெரியும். அதான் நம்ம வந்தவழி கடல் மட்டத்துலே இருந்து 945 மீட்டர் உசரத்துலே இருக்கே! இப்ப ஒரு அஞ்சாறு வருசம் முன்னே ஒரு விபத்து நடந்துபோச்சு. சிங்கைச் சுற்றுலாப்பயணிகள் வந்த பேருந்தில் தீப் பிடிச்சுக்கிட்டு, புகையும் இருட்டுமாச் சேர்ந்து குழப்பம். நல்லவேளையா ஒரு 150 மீட்டர் போனதும் இது நிகழ்ந்ததால் பயணிகள் இறங்கி திரும்ப வந்தவழியாவே வெளியே ஓடிவந்துட்டாங்க. ரெண்டு பேர் மட்டும் இருட்டுலே எந்தப் பக்கம் போறதுன்னு தெரியாம எதிர்ப்புறமா ஓடியிருக்காங்க. ஒருகிலோமீட்டருக்கும் அதிகமா ஓடுனவங்க வெளியே வந்தது மில்ஃபர்ட் பக்கம். யாருக்கும் உயிர் இழப்பு இல்லாமத் தப்பிச்சாங்க.
இந்த சம்பவத்துக்குப்பிறகு அங்கங்கே தீயணைப்புக் கருவிகளைப் பொருத்தி இருக்கு. சாடிலைட் ஃபோனும் வச்சுருக்காங்க. குகையின் மேற்கூரையில் சின்ன விளக்குகளையும் போட்டுருக்காங்க.
வெறும் க்ராவல் பாதையா இருந்ததையும் தார் ஸீல் செஞ்சு, டபுள் லேனாவும் கொஞ்சம் பெருசு பண்ணி இருக்காங்க. ஒத்தைப் பாதையா இருந்தப்ப ரொம்ப பேஜார். அங்கே இருந்து ஒரு வண்டி வந்தா, இங்கே இருந்து ஒன்னு போகும். இருட்டுக்குகையில் தப்பித்தவறி ரெண்டுவண்டி எதிரும் புதிருமா வந்துட்டா.....கதை கந்தல்தான்.

குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்போது குகை அப்படியே மூடிரும். அப்பப் பார்த்துப் பயணம் பண்ணா.... நாம எந்தப் பக்கமும் போகாம மாட்டிக்குவோம். கால நிலை, அங்கங்கே இருக்கும் அறிவிப்புகள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டுப் போகணும். அதெல்லாம் தகவல்கள் பக்காவா இருக்கும். உள்ளூர் ரேடியோவிலும் அறிவிப்புகள் தொடந்து வந்துக்கிட்டே இருக்கும்.

டெ அனா(வ்) லே இருந்து கிளம்பும் முன் வண்டியில் பெட்ரோல் இருக்கான்னு பார்த்து முழு டேங்க் நிரப்பிக்கணும். குளிர் காலமுன்னா( மே மாதம் முதல் நவம்பர் வரை) ஸ்நோ செயின் எடுத்துக்கிட்டுப் போகணும். பனி படர்ந்த ரோடுகள் வழுக்கி விட்டுருமுல்லே? இந்தச் சங்கிலிகள் பெட்ரோல் பங்குகளில் வாடகைக்குக் கிடைக்கும். குகை வாசலில் ட்ராஃபிக் லைட்ஸ் இருக்குன்னு போர்டு இருக்கே..... ஆஹான்னு நினைச்சீங்கன்னா இது கோடையில் மட்டுமே பயனில் இருக்கும். குளிர்காலத்துலே இது வேலை செய்யாது. பனிப்பெயர்வு ( அவலாஞ்ச்- இதுக்கு தமிழாக்கம் சரியா?) எப்ப நடக்குமுன்னு சொல்ல முடியாதுல்லே? பெருசா நிகழ்ந்துச்சுன்னா ஒரு 17 கிலோ மீட்டர் தூரம்வரை பனி விழுந்து ஒரு சுவர்மாதிரி அடைச்சுக்கும்.

குகை முடிஞ்சு 11 மைல் பயணிச்சால் மில்ஃபர்ட் சவுண்டு வந்து சேருவோம். இவ்வளவுக் கஷ்டப்பட்டு இங்கே வரணுமா?ன்னு கேட்டால்........

பின்னே? வராம? அற்புத உலகம் பார்ப்பது எப்படி?

தொடரும்......

கேபின் முன்னே மகளும் கோபாலும்.

நாங்க மானாபுரி ( நம்மூர் அம்புலிமாமா கதைகளில் வரும் பெயர் போல இருக்குல்லே? ) என்ற இடத்தில் தங்குனோம். இது டெ அனா(வ்) லே இருந்து 20 நிமிச ட்ரைவ் தூரம். இங்கே இருக்கும் மோட்டார் கேம்ப் மானாபுரி ஏரிக்கு முன்னாலே இருக்கு. நாம் தங்கியிருந்த கேபின் கூட அம்புலிமாமா ஸ்டைல்தான். ஏகாந்தமா ஏரிக்கு முன்னாலே உக்கார்ந்து தியானம் செய்யத் தோதான இடம்.

49 comments:

said...

ரொம்ப நல்லாருக்கும் போலயே ...

ம் மானாபுரி .. அம்புலிமாமால வர்ரமாதிரி தான் இருக்கு. :)

said...

அடுத்த அம்புலிமாமா இதழுக்குக் காத்திருக்கிறோம்.

said...

அவங்க நாட்டுல இருக்குற இயற்கையை இயற்கையா விட்டுவைக்கிறதுல அவங்க அவங்கதான். மற்றொரு பயணத் தொடர். தொடருங்க டீச்சர்.

இங்க ஐரோப்பாவுலயும் ஊரூருக்கு ரெயில்வே ஸ்டேஷன்லயும் ஏர்ப்போர்ட்டுலயும் இன்பமேர்ஷன் செண்டர் வெச்சி...அதுல இப்பிடி பிட்டு நோட்டீசா அடிச்சுக் குடுத்துர்ராங்க. போகவும் பாக்கவும் ரொம்ப வசதியா இருக்குது. இப்பக் கூட நானு அப்பா அம்மா ஆஸ்திரியா போய்ட்டு வந்தோம். அங்கயும் இப்பிடித்தான்.

Anonymous said...

நானும் மிர்ரர் லேக் போட்டோ எடுத்தேன். ஆனா தண்ணியே இல்ல. வெறும் புதர் தான் இருந்துச்சு. நாங்க போகும்போதுதான் வெய்யக்காலம் ஆச்சே. நானும் அதுப்பத்தி பதிவு போடணும் நினைக்கறன். ஆனா காலம் கூட மாட்டேங்குது.

said...

இந்த மாதிரி ரம்மியமான இடங்களையெல்லாம் பார்க்கணும்னா கோடி புண்ணியம் செய்திருக்களும். ஏதோ உங்க புண்ணியத்துல் நியூ சிலாந்தத சுற்றிப்பார்த்த அனுபவம் ஏற்படுகிறது. புகைப்படங்கள் அருமை.
அன்புடன்,
விஜய்

said...

முன்ன ஒரு முறை உங்க நண்பர் படமெடுத்து அனுப்பினாரே அதுதானே மில்போர்ட் சவுண்ட்? இல்லை அது வேற சவுண்டா? மறந்நு போயி ரீச்சர்.

போட்டோவை சொடுக்கினா பெருசாத் தெரிய மாட்டேங்குதே!

said...

பயணக்கட்டுரை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.அடுத்த பதிவுக்கு காத்திட்டுருக்கேன்.

said...

உங்க புண்ணியத்துல அடுத்த சுற்றுலா...ஜாலி தான் ;)

said...

வாங்க கயலு.

நல்ல இடம்ப்பா அது. அந்த ஊரின் ஜனத்தொகை 300தான்!

நாங்க போன அன்னிக்கு 303:-))))

said...

வாங்க ராகவன்.

ஆஸ்ட்ரியா நல்லா இருந்துருக்குமே!

நாங்க இன்ஸ்ப்ரக் நகருக்குப்போயிருந்தோம். ராஜாவோட (அரண்மனை(?) ஓட்டு வீட்டுக்கு தங்கக்கூரை போட்டுருந்தாங்களாம். இப்ப அந்தத் தங்கமெல்லாம் களவாடப்பட்டு வெறும் தங்க முலாமுன்னு சொன்னாங்க:-))))

அந்தப் பக்கமெல்லாம் எல்லா ஊர்லேயும் ஒரு சதுக்கம் இருக்கு கவனிச்சீங்களா?

said...

வாங்க சின்ன அம்மிணி.

விரைவில் உங்க 'பார்வை' போடுங்கப்பா.

மிர்ரர்லேக்லே தண்ணி இல்லையா? என்னப்பா இது?

said...

வாங்க விஜய்.

நியூசியை அக்குவேற ஆணிவேறன்னுப் பிரிச்சு மேய்ஞ்சுட்டேன் ஏற்கெனவே:-)))

'நியூஸிலாந்து' என்ற தலைப்பில் 67 பகுதிகள் கொண்ட (தொடர்)பதிவுகள் போட்டுருக்கேன்.

said...

வாங்க கொத்ஸ்.

நண்பர் போனது வடகிழக்குலே மால்பரோ சவுண்டு.

நாம (வகுப்பில்)இப்பப் போய்க்கிட்டு இருப்பது தென்மேற்கில் இருக்கும் மில்ஃபெர்ட் சவுண்டு.

செட்டிங்க்ஸ்லே எதோ 'கடுபடு' பண்ணிடறேனோ என்னவோ....
சொடுக்குனா பெருசாகலை(-:

said...

வாங்க பிரேம்ஜி.

வாரம் ஒன்னு போடலாமுன்னு இருக்கேன். இந்தத் தொடர் மூணு இல்லேன்னா 4 பகுதிகள்தான்.

said...

வாங்க கோபி.

உங்க 'சூட்டுக்கு' இது இதமா 'ஜில்' லுன்னு இருக்குமே:-)

said...

ஏரிக்கு முன்னாடி தியானமா? சத்தமாக இருக்காது?
பார்த்து அந்த டனலின் ரோட்டை மேம் படுத்துகிறேன் என்று ரோடு மட்டத்தை உயர்த்திட போறாங்க...அவ்வளவு தான் அப்புறம் இந்த மாதிரி பஸ்ஸெல்லாம் போக முடியாது. :-)

said...

வாங்க குமார்.

கரையில் காற்றால் ஒதுங்கும் மிகச் சிறு அலைகளால் உண்டாகும் மெல்லிய 'ச்ளக் ச்ளக்' சப்தத்தைத் தவிர அனக்கமே இல்லாத இடம்தான் இது.

நமக்குள்ளே பேசிக்கவே பயமா இருக்கும்:-)


இந்த டன்னலை விட்டால் வேற வழி ஒன்னுமே இல்லை என்ற காரணத்தால் கவனமாத்தான் செப்பனிடுவாங்க. இது ஸ்டேட் ஹைவே யில் ஒன்னு.

said...

டீச்சர் ,
ஓசியா எங்களுக்கு உங்கள் நாட்டை சூப்பரா சுத்தி காமிச்ச உங்களுக்கு எனது நன்றி .!
படங்களும் கண்ணை கவர்கின்றன !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

said...

வாங்க பாஸ்கர்.

மொதல்லே உங்ககிட்டே மன்னிப்புக் கேட்டுக்கறேன்.

நீங்க 'அருவை' என்றது புரியாம 'அறுவை 'ன்னு நினைச்சுக்கிட்டேன்(-:


இந்த ஊரை மட்டுமா...பக்கத்து ஊரான ஆஸியையும் கொஞ்சம் சுத்திக் காமிச்சுட்டேனேப்பா:-)

அதையெல்லாம் பார்க்கலையா?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அடுத்த 'இதழ்' இப்பத்தான் தயாராகுது. அதுக்கு முன்னால் எதாவது சமைக்கணுமே:-))))

said...

நா...எப்பவுமே கடசி பெஞ்ச்தான்.
சும்மாவே நியூசிக்கு வரனுமுன்னு ஆசையை தூண்டி விட்டுடிருக்கீங்க.
//போதாகுறைக்கு பொன்னம்மான்னு//(நல்லாருக்கு)
படங்களை வேற போட்டுத்தாக்குறீங்களே?
குகைக்குள் போற பஸ் சூப்பர்!

said...

படங்கள் அருமை துளசி.
அழகா இருக்கு.

said...

வாங்க நானானி.

வந்தீங்கன்னா சுட்ட பூண்டுக்கு நான் கேரண்டி. அதுதான் உங்களைப் பிடிக்க நான் வச்சுருக்கும் 'தூண்டில்':-))))

said...

வாங்க அறிவன்.

அடுத்த பதிவில் இன்னும் சில சுவையான படங்கள் வரப்போகுது:-)

said...

// ரெண்டு பேர் மட்டும் இருட்டுலே எந்தப் பக்கம் போறதுன்னு தெரியாம எதிர்ப்புறமா ஓடியிருக்காங்க //


அது நாங்கதாங்க. இன்னும் ஓடிக்கினே இருக்கோம்.

சீக்கிரம் வந்து எங்களைக் கூட்டிகினு போங்க.
ரொம்ப பசி வேற கீது.

சுப்பு ரத்தினம்.
மில் பர்ட் பக்கம்.

said...

//நம்மூர் திரைப்படங்களிலே ( எந்த மொழிப்படம் என்றது பிரச்சனையே இல்லை) //

நக்கல்ஸ் :-)))) சட்டை வண்ணம் ரொம்ப முக்கியம்

//நான் உங்களை அந்தக் குவீன்ஸ் டவுனில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் கூட்டிப் போகலாமுன்னு இருக்கேன்.//

இது போங்கு விளையாட்டு .. எங்களை நீங்க உண்மையாவே கூட்டிட்டு போகணும் ...ம்ம்ம் அதெல்லாம் முடியாது.. போடோவேல்லாம் ஒத்துக்க முடியாது :-((((

//நடுசெண்டர்:-) //

நீங்க குசும்பு தலைவி தானு ஒத்துக்குறோம் :-)

// (172 கி.மீ) , 300 சதுர கி.மீ. பரப்பு ,121 கி.மீ தூரம், 11 இடங்கள்,டன்னல். 1.2. கி.மீ.நீளம்,55 வருசமாத்தான் புழக்கத்தில் இருக்கு. 20 வருசம் கஷ்டப்பட்டுத் தோண்டுன , 1953 லே குகைவழி ,945 மீட்டர் ,150 மீட்டர் ,11 மைல் பயணிச்சால் //

கேப்டன் மாதிரி புள்ளி விவரமா அடிக்கறீங்களே :-)) லேடி கேப்டன் :D

//மேற்கூரையை எங்கே இடிச்சுருமோன்னு பயம் வந்துரும்//

ஆமா அப்படி தான் இருக்கு


//குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்போது குகை அப்படியே மூடிரும்.//

அய்யய்யோ

இப்படி எல்லாம் பீதிய கிளப்புறீங்களே :-(

said...

உங்கள் சுற்றுலா பதிவுகள் நன்றாக வருகிறது. படிப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டும் வண்ணம் எழுதுகிறீர்கள். கூடவே பயணக்குறிப்பு, தொலைவு மற்றும் செய்ய வேண்டியவை / வேண்டாதவை குறித்தும் நன்றாக எழுதுகிறிர்கள், நீங்கள் சுட்டிக் காட்டும் இடங்களுக்குச் செல்வோர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் தருகிறீர்கள்.

ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பாராட்டுகள்

said...

vanthu paarungal.. vithiyaasathai unarungal.. Click Here

anbudan
osai chella

said...

Mind blowing.. I must visit NZ in my life once !!

said...

(வழக்கம்போல) படங்கள் சூப்பர்.

டிரைவர், பஸ்ஸ சீக்கிரம் நகத்துப்பா, கூரை இடுச்சிடப்போவுது =)

said...

படம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. குடும்பத்தோட நியூஸிக்கு வேலைக்கு வந்துடலாம்னு தோணுதே. விசா கிசா எல்லாம் ரொம்ப கெடுபுடியோ? தனி மெயில் அனுப்பறேன். (ஐடி இருக்குனு நினைக்கறேன், இல்லாட்டி இருக்கவே இருக்காங்க நம்ம துபாய் லேடி வல்லியம்மா) :))


ஏரிக்கரையில தியானம் பண்ணலாம் தான் அமைதியா இருக்கும் தான். ஆனா நம் மனசுகுள்ள கேக்கற சவுண்டை என்ன பண்றது? :p

said...

சுட்ட பூண்டு சொருகிய தூண்டிலில்
சிக்கவா வேணாமான்னு யோசிச்சிக்கினு
இருக்கேன். ஏற்கனவே அழகழகான
நியூசி படங்களைத்தான் தூண்டிலில்
சொருகிட்டீங்களே!!!அப்புரம் என்ன?

said...

வாங்க சுப்பு ரத்தினம்.


உங்களுக்கு நல்ல பசின்னு தெரிஞ்சுதான் குருமா சமைச்சு (அடுத்த பதிவில்)வச்சுருக்கேன்.

வாங்க, சூடு ஆறுமுன் சாப்பிடலாம்:-))))

said...

வாங்க கிரி.

லாட்டோ பவர் பால் விளையாட்டில் இந்த வாரம் 12 மில்லியனாம். ஜெயிச்சா.... பதிவர்களையெல்லாம் இங்கே கூட்டிவந்து சுத்திக்காமிக்கலாம். என்ன.......ஒரே ஒரு பிரச்சனைதான்.

இந்த விளையாட்டெல்லாம் விளையாடுறதில்லை(-: டிக்கெட் வாங்குனாத்தானே வெற்றி & தோல்வி எல்லாம்!


விஜயகாந்த் எங்கூர்க்காரர். அதான் புள்ளி விவரம் தன்னாலே வந்துருது:-)

கோபாலுக்குக் கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்த் ன்னு தோழி ஒருத்தர் பெயர் வச்சுருக்காங்க:-))))

said...

வாங்க கோவியாரே.

சரியான தகவல் இல்லாம எழுதுனா அது பயணக்கட்டுரையாவா இருக்கும்? :-))))

said...

வாங்க செல்லா.

ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க வெங்கி.

இவ்வளவு பக்கத்து நாட்டுலே இருக்கீங்க..... இன்னும் இங்கே வரலையா?

கட்டாயம் வாங்க. இண்டர் நேஷனல் பதிவர் மாநாடு நடத்திப்புடலாம்:-))))


நானும் இன்னும் பெர்த் வரலை. பயணம் எல்லாம் இதுவரை நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ் லேண்ட், விக்டோரியாவோடுதான்.

said...

வாங்க சாமான்யன்.

இடிக்கிற 'மாதிரி' இருக்கும். ஆனா இடிச்சுறாது:-)

said...

வாங்க அம்பி.

அதான் குடும்பம் இப்ப +1 ஆகி இருக்கே:-)

மனசுக்குள் கேக்கும் சத்தத்தை நிறுத்தத் தெரிஞ்சா இப்படியா பதிவு எழுதிக்கிட்டு இருப்போம்?

மகா 'ஞானி'யா இருக்கமாட்டோமா?:-)

said...

அம்பி,

சொல்ல விட்டுப்போச்சு.

விஸா கெடுபிடி எல்லாம் இல்லை. எல்லாம் 'நேர்வழி' மட்டும்தான்.

வலையிலேயே விவரம் எல்லாம் இருக்கு.

said...

நானானி,

மார்கெட்லே சுட்ட பூண்டு (பொரிமாதிரி குவிச்சு வச்சுருக்குப்பா)
பார்க்கும்போதெல்லாம் உங்க ஞாபகம்தான்:-)

said...

என்னப்பா நான் போட்ட பின்னூட்டம் காணாமப் போச்சு.
மானாபுரி மாதிரி
மைலாபுரி இல்லையானு கேட்டு இருந்தேன்.
ம்ம் என்னவோ நடக்குது நூசில.:)

said...

வாங்க வல்லி.

ப்ளாக்கர்க்கு இருக்கும் குசும்பைப் பாருங்க. இப்படிதான் பின்னூட்ஸ் களை ஒழிச்சுருதுப்பா(-"

மைலாப்பூர் இல்லேன்னா என்னப்பா...எங்கூர்லே மந்தவெளி இருக்கே!!!

அதென்னவோ மாண்டவெல் ஸ்ட்ரீட்டாம்.
mandavelle street. எனக்கு மந்தவெளித் தெருவா ஆகிருச்சு:-)

said...

அப்டீன்னா?
நான் புல்லிலுமிருப்பேன்-சுட்ட
பூண்டிலுமிருப்பேன்.
என்கிறீகளா துள்சி?
எப்படியோ உங்கள் நினைவிலும்
இருப்பது சந்தோசமே!!!

said...

மந்தைவெளி இருக்கா. எங்க மீனாவும் இருக்கானு கேட்டுப் பாருங்க துளசி:)

said...

வாங்க வல்லி.

மீனா அங்கே ஆக்லாந்தில் இருக்காள்:-))))

தோழியின் பெண்!

said...

நானானி,
எனக்கும்தான் இப்படி ஏகப்பட்ட தோழிகள், தம்பி தங்கைகள், ஒரு அக்கா எல்லாம் வலையில் கிடைச்ச மகிழ்ச்சிதான்:-))),

said...

சுற்றுலா செல்வது போல அருமையாக இருக்கு
மூச்சு விடாம சொல்வது போல எழுது நடை அமைந்துள்ளது
கண்கொட்டாமல் முழுதும் படித்துவிட செய்யும் உங்களின் எழுத்து நடை அருமை
கூடவே பயணிக்கின்றோம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

said...

வாங்க சா கி ந.

முதல் வருகை!!!!

மிகவும் மகிழ்ச்சி.

தொடர் வருகைக்கு(??) இப்பவே நன்றி சொல்லிக்கிறேனே:-)