Wednesday, November 15, 2006

Plane-ல் வந்த Train

ஒரு ஊர்லெ ஒரு மருந்துகளை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் இருக்கார்.அவர் வேற ஊர்லே ஒரு கான்ஃப்ரன்ஸ்லே கலந்துக்கிட்டு தன்னுடைய ஊர் (Rome)ரோமுக்கு திரும்பும்போது லேட்டா வந்து ப்ளேனைக் கோட்டை விட்டுட்டார். வேற வழி இல்லாம ரயிலில் போகும்படியாஆச்சு. நிறைய நேரம் போகணுமே, மனுஷ மனசு ஒண்ணையும் நினைக்காம ச்சும்மா இருக்குமோ?


என்னென்னவோ நினைப்பு. அவரோட பசங்க, பேரன் பேத்தி, இறந்துபோன மனைவி எல்லாம் வந்துபோறாங்க. கூடவே இப்ப அவரோடு வேலை செய்யும் ஒரு பெண்மணியும். அந்தம்மா மேலெ இவருக்கு ஒரு ஈர்ப்பு. அதை அவுங்ககிட்டே சொல்ல ஒரு தயக்கம். எப்படியாவது சொல்லணும்? ஆனா நேரில் சொல்ல திராணி இல்லை. பேசாமக் கடிதம் மூலம் சொல்லிறலாமுன்னு இருக்கு. இதுதான் சரியான சமயம். ஒரு மின்னஞ்சல் தட்டி விட்டுறலாம். மடிக்கணினியை எடுத்து மடல் தட்ட ஆரம்பிக்கிறார்.

மேடம்...... (ச்சீ.. இது என்ன அஃபிஷியல் கடிதமா? )

அன்புள்ள..... (ரொம்ப சாதாரணமா இருக்கே....)

என் பிரியமுள்ள...... (இதுவும் சுமார்தான் . ஒரே வார்த்தையிலே என் மனசைச் சொல்றமாதிரி வேணுமே...)

என் உயிரே......., ( இது ஜோர். இப்படியே இருக்கட்டும்)



ஒருவழியா எதையோ போட்டு எழுத ஆரம்பிச்சாச்சு. முடிச்சப்பிறகு அதை படிச்சுப் பார்த்தா நல்லாவே இல்லை. ஒரே சொதப்பல். டிலீட் செஞ்சுட்டு இன்னொரு தடவை, இன்னொரு தடவைன்னு தட்டித்தட்டிவெளியே கொட்டிக்கிட்டு இருக்கார். ஆயாசமா இருக்கு. லேசாக் கண்ணயரலாமுன்னு தூங்குனா அதுலேயும் கனவு போல ஒண்ணு. ஒரு மெல்லிய இருட்டான அறைக்குள்ளெ ஒரு ச்சின்னப்பொண்ணு பியானோவாசிக்குது. அதோட முகம் சரியாத் தெரியலை. ஆனாலும் எங்கியோ பார்த்த உருவமா இருக்கு. இது கனவா, இல்லே நினைவான்னு தெரியாத மயக்கம்............



குண்டு அம்மா ஒருத்தர். எக்ஸ் ஆர்மி ஜெனரலின் மனைவி. அவுங்களும் எதோ ராணுவ விழா நிமித்தம் ரோமுக்குப் போறாங்க அதெ ரயிலில். குண்டுன்னா குண்டு பயங்கர குண்டு. நடக்க, குனிய, கோட்மாட்டிவிடன்னு எல்லாத்துக்கும் உதவி இல்லாம முடியாதுன்ற நிலை. கூட மாட உதவியா இருக்க ஒரு 23 வயசுப்பையன் கூடவே வரான். சின்னச்சின்னக் குற்றங்கள் செஞ்சு மாட்டிக்கிட்டு, இப்ப அவனுக்கு இத்தனை மணி நேரம் கம்யூனிட்டி சர்வீஸ் செய்யணுமுன்னு தண்டனை கிடைச்சிருக்கு. அந்த வகையிலெதான் இவன் இந்த குண்டம்மா கிட்டே வந்து சேர்ந்துருக்கான். அம்மாவோ ஒரு நிமிஷம் அவனை உக்கார விடாது.தண்ணி கொண்டு வா, காபி வாங்கிட்டுவா,அந்தப் பெட்டியை திறந்து இதைக் கொடு, அதைக்கொடுன்னு ஓயாததொணத் தொணப்பு.



அம்மா கொஞ்சம் அடாவடிதான். வேற யாருக்கோ ரிஸர்வ் செஞ்ச பெட்டியிலே முதல் வகுப்புலெ வந்து உக்கந்துக்கிட்டு அதிகாரம் செய்யறாங்க. அந்த இடம் பதிவு செஞ்சவங்க வந்து சொன்னாலும் கேக்கற ஆள் இல்லை அம்மா. எல்லாரையும் ஒரே விரட்டு. டிக்கெட்டுப் பரிசோதகர் வந்து பார்த்துக் கெஞ்சிக்கேட்டும் அம்மா மசியலை. கடைசியில் ஆள் இல்லாம இருக்கற ஒரு கூப்பெ-லே அம்மாவுக்கு இடம் போட்டுக் கொடுத்து சமாளிக்கிறார்.


அங்கே போயும் அம்மா, அந்தப் பையனை விரட்டிக்கிட்டு இருக்கு. அம்மா அசந்த ஒரு நேரம் பையன் வெளியே வந்து ரயிலுக்குள்ளே நடக்கறான். அப்ப அவனைச் சில பசங்க அடையாளம் கண்டுக்கறாங்க. எல்லாரும் இவனைவிடச் சின்ன வயசு. 'ஏண்ணே, இங்கே என்னா செய்யறே? ரோமுக்குத்தானெ வர்றே? ஊர்லெ உன் சிநேகிதி இன்னும் உன்னையே நினைச்சு உருகிக்கிட்டு இருக்கு'ன்னு விவரம் சொன்னாங்க. இவனுக்கு நம்பவெ முடியலை. 'இது என்னாடா....... ஊரைவிட்டு வந்து நாலைஞ்சு வருசம் ஆச்சு. இன்னுமா அந்தப் பொண்ணு நம்மையே நினைச்சுக்கிட்டு இருக்கு? இவனுங்க கதை விடுறானுங்களொ?'


"ரீல் விடாதிங்கடா.... உங்களுக்கு எப்படித் தெரியும்? அதைச் சொல்லுங்க."

"ஆமாண்ணே. இப்ப அவுங்க பல் வைத்தியரா வேலை செய்யறாங்க. நாங்க அங்கெதான் போய் 'பல்லைக் காட்டிக்கினு' இருக்கோம். நீ, நம்ம தெரு ஆளாச்சே.... எதாவது விவரம் இருக்கா உன்னப்பத்தின்னு எப்பவும் எங்களாண்டை கேக்கறதுதான்."


"மெய்யாலுமாடா மெய்யாலுமா...." அடடா.... ஏந்தான் நான் அவளை விட்டுட்டு இங்கே வந்துட்டெனோ? இப்பவேப் போய்ப் பார்க்கணுமுன்னு நெஞ்சு துடிக்குதே............. ஆஹா,, ஐடியா வந்தாச்சு. பேசாம ரோமுலே இறங்குனதும் குண்டம்மா கூடப்போகாம சைலண்ட்டா கம்பி நீட்டிறலாம்.


இன்னொரு ரயிலு பொட்டியிலே அல்பேனியாவுலே இருந்து வந்துக்கிட்டு இருக்கற ஒரு ஏழைக் குடும்பம். கைக்குழந்தையோட ஒரு அம்மா, இன்னும் மூணு பெரிய பசங்க. அதுலே ஒரு பையனுக்கு டிக்கெட் இல்லை. வித்தவுட்லெ வரான். உள்ளுக்குள்ளெ திக்திக்.அவுங்க எதுத்த வரிசையிலே மூணு இளவட்ட ஆளுங்க, எல்லாரும் ஸ்காட்லாந்துக்காரங்க. ஒரு கால்பந்து விளையாட்டைப் பார்க்க ரோமுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க.


உற்சாகபானத்தை ஒரேடியா ஊத்திக்கிட்டு 'கெக்கெபிக்கே'ன்னுஒருத்தரோடு ஒருத்தர் கலாட்டா செஞ்சுக்கிட்டு வராங்க. அதுலே ஒருத்தர், நம்ம வித்தவுட்டைக் கவனிக்கிறார்.சின்னவனாச்சேன்னு பேச்சுக் கொடுத்துக்கிட்டே தன்னோட, விளையாட்டைப் பார்க்கப் போற அனுமதிச்சீட்டை எடுத்துக்காமிச்சு கொஞ்சம் பெருமை அடிச்சுக்கிட்டு இருக்கார். அப்பப் பார்த்து அவரோட ரயில் டிக்கெட் கீழே வுழுந்துருது. வித்தவுட் அதைப் பார்த்துட்டு நைஸா அமுக்கிடறான்.


இன்னொரு இந்தியத் தம்பதிகள் அந்தப் பொட்டியிலே பயணம். அதெப்படி இந்தியர்கள்ன்னு தெரியும்? அதெல்லாம் ரொம்பவே சுலபம். கோட்டு ஒண்ணைப் போட்டுவுட்டு ஒரு தலைப்பாகையை வச்சாப்போச்சு. இந்தியன் ஆக்ஸெண்ட்டுன்னு ஒன்னை இவுங்களா ஏற்படுத்திருவாங்க. அவுங்களோட ஒரு பொண் குழந்தை, பத்து வயசு இருக்கும்.



டிக்கெட் பரிசோதகர் ஒவ்வொரு பொட்டியாப் பார்த்துக்கிட்டு வர்றார். எல்லோரும் முன் ஜாக்கிரதையா அவுங்கவுங்க டிக்கெட்டை வெளியே எடுத்து வச்சுக்கறாங்க. அப்பத்தான் தன்னோட டிக்கெட்டைக் காணொமுன்னு தெரிஞ்சுக்கறார் கேம் பார்க்கப்போற இளைஞர். நல்லா யோசனை செஞ்சுபார்த்தப்பச் சின்னப் பையன்கிட்டே ஃபுட்பால் மேட்ச் டிக்கெட்டைக் காமிக்கிறப்ப ரயில் டிக்கெட்டும் கூடவே இருந்த நினைவு. மெதுவாப் போய் அந்தப் பையன்கிட்டே கேட்டதும், அவன்'ஆமாம், கீழே இருந்துச்சு. நான் எடுத்துக்கிட்டேன்'ன்னு உண்மையைச் சொல்லிடறான்.



மூணு இளைஞர்களில் ஒரு ஆள் கொஞ்சம் முரட்டுத்தனமானவர். அவர் அந்தப் பையன்கிட்டே இருந்து டிக்கெட்டைப் பறிச்சுக்கரார். பையனோட அம்மாவுக்கு அழுகை. துக்கத்தோட கையிலே காசில்லாத நிலமையைச் சொல்றாங்க. 'இவனோடஅப்பா எவ்வளோ கஷ்டப்பட்டு, போஸ்னியாலெ இருந்து ரோமுக்கு வந்துட்டார். நாங்களும் அவரை அங்கெ சந்திக்கத்தான் போய்க்கிட்டு இருக்கோம். இப்ப மட்டும் பரிசோதகர் இவனைப் புடிச்சுட்டா , எங்களாலே பயணத்தைத் தொடர முடியாது.இறக்கி விட்டுருவாங்க. தயவு செஞ்சு அந்த டிக்கெட்டை இவனுக்குக் கொடுங்க'ன்னு கெஞ்சி அழுவறாங்க. ஒத்து ஊதறாப்பலே கைக்குழந்தையும் பசி தாங்காம ஒரே அழுகை.

தட்டுத்தடுமாறி பையைக் குடைஞ்சு பால்பாட்டிலை வெளியே எடுக்கறான் பையன்.


முரட்டு இளைஞர் மட்டும் முடியவே முடியாதுன்னு தாம்தூம்னு குதிக்கிறார். மத்தவங்க ரெண்டு பேரும் போனாப் போகுதுன்னு சொன்னாலும் இவர் மட்டும் கேக்கற வழியா இல்லை. கடைசியில் மனசு மாறி தன்னுடைய டிக்கெட்டையே அந்தப் பொடியனுக்குத் தந்துடறார்.



இவ்வளவு கலாட்டாவுலே 'பேண்ட்ரி கார்'லே இருந்து வந்த ஒரு பணக்காரர் அசைஞ்சு அசைஞ்சு நடந்து போறப்ப அவரோட கை, பையன் மேலே தட்டுனதுலே பாலெல்லாம் கொட்டிருது. குழந்தைக்கோ அழுதுஅழுது மயக்கமே வந்துருச்சு. மருந்து ஆராய்ச்சியாளர் இதையெல்லாம் டைனிங் கார்லே இருந்து பார்த்துக்கிட்டே இருக்கார். கடைசியில் அவர் ஒரு க்ளாஸ் பால் அங்கே இருந்து வாங்கிவந்து குழந்தையின் அம்மாகிட்டே கொடுக்கறார்.


இதுக்குள்ளெ பரிசோதகர் வந்துட்டார். முரட்டு இளைஞரைப் போலீஸில் ஒப்படைக்கப்போறேன்னு சொல்லிடறார்.( ஃபைன் கட்டி இருக்கலாமுல்லே?அதெப்படி? இருந்த காசெல்லாம்தான் 'சரக்கு'லே போயிருச்சே) ரோம் ரெயில்வே ஸ்டேஷன் வந்து எல்லாரும் கீழே இறங்குனாங்க. குண்டுப் பெண்மணியைக் கொஞ்சமும் கண்டுக்காம, கூடவந்த 23 வயசு (இளைஞர்) பையன், தன்னுடைய பழைய தோழியைப் பார்க்க ஒரே ஓட்டமா ஓடிடறான்.


அல்பேனியாக் குடும்பத்தைக் கூட்டிக்கிட்டுப் போக உண்மையாவே அவுங்க அப்பா வந்து காத்துக்கிட்டு இருக்கார். குடும்பம் ஒண்ணு சேர்ந்துருது.


கேம் பார்க்க வந்த மூணு இளைஞர்கள் மட்டும் அங்கேயே திருதிருன்னு நின்னுக்கிட்டு இருக்காங்க. டிக்கெட் பரிசோதகர் அந்தமூணுபேரில் ஒருவரான முரட்டு இளைஞரை போலீஸில் ஒப்படைக்கறதுக்காக, அவரோட செல் ஃபோனில் போலீஸுக்கு ஃபோன் செஞ்சுக்கிட்டு இருக்கார்.



அதே சமயம், இன்னொரு ரயில் பெட்டியிலிருந்து திமுதிமுன்னு ஒரு பெரிய கூட்டம், எல்லாரும் இந்த ஃபுட்பால் கேம் பார்க்கவந்த விசிறிகள். பேனர் எல்லாம் பிடிச்சுக்கிட்டு கோஷங்கள் போட்டுக்கிட்டுக் கும்பலா வெளியே போறாங்க. இதைவிட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு நைஸா இந்த மூணுபேரும் கூட்டத்துலே கலந்துக்கிட்டு நழுவிடறாங்க.



"கதை முடிஞ்சது கத்தரிக்காய் காய்ச்சது."


"இது என்ன கதை? என்ன சொல்ல வர்றாங்க? "


'முரடனா இருக்கறவங்களுக்கும் இரக்க குணம் இருக்கு'ன்னா?


"இருக்கலாம். ஆனா இதுலே வெவ்வேறு வழியிலே அன்பைப் பத்திச் சொல்லி இருக்குன்னு நினைக்கிறேன்."


"எப்படி? எப்படி?"


"முதல்லே அந்தப் பெரியவர் கூட வேலை செய்யும் பெண்ணிடம் காதல் கொள்கிறார்."


"அப்ப காதலுக்குக் கண்ணு இல்லைன்றதுபோல வயசு வரம்பும் இல்லை. அப்படித்தானே?"


"ச்சீச்சீ.... காதலை முதல் முதல் சம்பந்தப்பட்டவங்ககிட்டே சொல்லும்போது ஒரு தயக்கம் எல்லாருக்குமே இருக்குன்ற உண்மையைச் சொல்றாங்க "


"எதுக்குத் தயங்கணும்?"


"நிராகரிப்பு பயம்தான் காரணமா இருக்கும். வேற என்ன?"


"ம்.அப்புறம்?"



"கம்யூனிட்டி சர்வீஸ் செய்யும் இளம் குற்றவாளி. சின்னவயசுக் காதல். அதான் பப்பி லவ்னு சொல்றோமேஅது சிலருக்கு உண்மையான காதலாவே அமைஞ்சுருது. அதைக் கண்டுக்கறதுலேதான் காலதாமதம் ஆயிருது!"


"ஓ... அதான் அந்தப் பையன் தன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கற தோழியைத் தேடி ஓடறான். முழு தண்டனையையும் அனுபவிக்காமப் போறான். அதுக்காக ஒருசமயம் மாட்டிக்கிட்டான்னா? பாவம், அந்தப் பொண்ணு."



"கடைசியா, உலகமே தூசுன்னு கொட்டமடிச்சுக்கிட்டு வந்த 'கேம்' பார்க்கவந்த இளைஞர்கள். அக்கம்பக்கம் கவனமில்லாம மத்தவங்களை முகம் சுழிக்க வைக்கிற அளவு திமிரா நடந்துக்கிட்டு வந்த அந்த முரட்டு இளைஞனுக்கும் மனசின் ஓரத்துலே இரக்கம் ஒளிஞ்சிருக்குன்றது."



"இந்தக் கணக்குலே பார்த்தா இளைய சமுதாயம் அவ்வளவு மோசமில்லை. லூட்டி எல்லாம் வயசுக்கோளாறு மட்டுமே. எதிர்காலத்துலே நல்ல மனுஷங்களாத்தான் முக்காவாசிப்பேரும் இருப்பாங்கன்ற நம்பிக்கை ஏற்படுது.அதானே சொல்ல வர்றீங்க?"



"கரெக்ட். சரியாச் சொன்னே."

* * * *



எங்க இவர் பயணங்களில், ஒருமுறை உலக சினிமாக்கள் பகுதியிலே ஒரு இத்தாலிய மொழிப்படம்(சப் டைட்டிலோடத்தான்)பார்த்துட்டு வந்து எனக்குச் சொன்ன கதை இது. படத்தோட பேர்தான் சரியா நினைவில்லையாம்( பார்றா) ட்ரெயின் டிக்கெட்டோ என்னவோ (வாம்)?




சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லே தமிழ்ப்படமுன்னு சொன்னா, ஸ்ரீகாந்தும், விஜய்யும் நடிச்சதுதான். செலக்ஷன் கமிட்டி மேற்படி நடிகர்களின் விசிறியோ?

36 comments:

said...

ஹைய்யா நாந்தான் பர்ஸ்ட்டா

said...

சென்ஷி,

வாங்க. ஆமா எந்த க்ளாஸ் டிக்கெட்டு
வேணும்? ட்ரெயினுக்குத்தான் கேக்கறேன்.:-))))

said...

உலக தமிழ்ப்பதிவுகளிலேயே முதல் முறையாக ஒரு இத்தாலி பட விமர்சனமா?

சம்பவங்கள் தனிதனியே இருந்தாலும் படம் நேரில் பார்த்தால் திரைக்கதையின் பலத்தில் நீங்கள் சுட்டும் உள்ளுணர்வுகளைத் தெளிவுபடுத்தியிருக்குமோ ?

said...

எப்படீங்க இப்படி எல்லாம்....

said...

நான் ரெண்டாவது!

டிக்கெட் எல்லாம் வேணாம்! நம்ம ட்ரெயினுக்கு எதுக்கு டிக்கெட் லாலுகிட்ட சொல்லிக்கிடலாம்!

பால் , டிக்கெட் இல்லாம வித்தவுட் பயணம்னு ஐரோப்பாமாதிரி இல்லியே ஸ்க்ரீன் ப்ளே டைரடக்கடு நம்ம பீகார்ல பால் கேன் கட்டின ரயிலுகம்பார்ட்மெண்ட் மாதிரியில்ல இருக்கு!

said...

வாங்க மணியன்.

கோபால் பார்த்துட்டு எனக்குக் கதையாச் சொல்லி ( பிட் பிட்டாக) நான் எழுதுனது.
அதான் அப்படி உணர்வுபூர்வமா இல்லை. கதை சொன்ன விதம் அப்படி:-)))))

எங்க அண்ணந்தாங்க சினிமாக் கதை சொல்றதுலெ மன்னன். ஒரு சமயம் சினிமாக் கொட்டாய்
இல்லாத ஊர்லே இருந்தப்ப, அண்ணன் சைக்கிள் எடுத்துக்கிட்டு பக்கத்தூருக்குப் போய் சினிமாப்
பார்த்துட்டு வந்து, ஒரு சின்ன சம்பவத்தையும் விடாம பாட்டோடு கதை சொல்வார். மூணு மணி
நேரப்படமுன்னா அவர் சொல்றதும் மூணு மணி நேரமா இருக்கும்.

நாங்க நேர்லெ பார்க்கவே வேணாம். ரொம்ப வருசத்துக்கு அப்புறம் எனக்கு அதெ படம் பார்க்கக்
கிடைச்சப்ப எனக்கு கொஞ்சம்கூட புதுசாவே தோணலை. அந்த நாள் ஞாபகம்........

said...

செங்கமலம்,

நீங்க மூணாவது.

said...

யாரோ,

எப்படி?
எது?
எல்லாம்?
?????

யாரோ.... இவர் யாரோ?????????

said...

ஹரிஹரன்,

வாங்க.

இத்தாலியிலேயும் 'ஆர்ட் படம்' எடுக்க மாட்டாங்களா? :-))))

said...

"எப்படி?
எது?
எல்லாம்?
?????"

அதாங்க இப்படி இந்த கதை எல்லாம் எப்படிங்க... புதுசா இருக்கே.. உங்களுக்கு "எப்படி இது எல்லாம்... தோணிச்சு..???

said...

ஏங்க யாரோ,
இத்தாலியிலே ஒரு மணிரத்தினமோ, இல்லே ஒரு ஒளி ஓவியரோ, இல்லே ஒரு பார்த்திபனோ
இருக்க ச்சான்ஸே இல்லைன்னு முடிவு பண்ணிட்டீங்களா? :-))))))))))

said...

அக்கா, நல்ல இருக்கீங்களா...?

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

இங்க நான் இருக்குற இடத்துல டெலிபோன் லைனும், இண்டர்நெட்டும் என்னைப் பாடா படுத்துது...!

ரொம்ப நாள் கழிச்சு வரும் போது உங்க பதிவைப் பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்குக்கா..

தூள் கிளப்புங்க அக்கா...

ஆமா... நான் இதுக்கு முந்திய பதிவுக்கு எழுதுன பின்னூட்டம் என்ன ஆச்சு...???

said...

ஆனாலும் உங்களுக்குப் பொறுமைதான்...

said...

//உலக தமிழ்ப்பதிவுகளிலேயே முதல் முறையாக ஒரு இத்தாலி பட விமர்சனமா?//

மணியன் சார்!

அதெப்படி முடீயும். நம்ம கானா. பிரபா சினிமா பாரடைசோ பற்றி ஏலவே எழுதியுள்ளாரே.

துளசிம்மா!

படம் பார்த்து விட்டு கதைசொல்வதற்குத் தனித் திறமை வேண்டும். சின்ன வயதில் டைட்டில் மியூசிக்கிலிருந்து பிலிம்பை பாரதிராஜா வரைக்கும் கதை சொல்லிய அனுபவங்கள் நமக்கும் உண்டு.

இத்தாலியர்களுக்கும் நமக்கும் பல விடயங்கள் ஒத்துப்போகும். அதில் சினிமாவையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையாகவே மிகச்சிறந்த சினிமாக்கலைஞர் களும், படைப்புக்களும், உள்ளநாடு இத்தாலி. இதுபற்றி பின் ஒருமுறை விரிவாகப் பேசலாம்.

நன்றி

said...

கோபால், பிளீஸ் இனிமே டிரிப் போகும் போதோ வரும் போதோ படம் ஏதாவது பார்க்காதீங்க. அப்படியே பார்த்தாலும் துளசிக்கு கதை சொல்லாதீங்க. அவங்க படற கஷ்டம் நாங்களும் படனும்னு இப்ப பதிவுல வேற. ப்ளீஸ்.
துளசி, மடல் பார்த்தீங்களா?

said...

///
"இருக்கலாம். ஆனா இதுலே வெவ்வேறு வழியிலே அன்பைப் பத்திச் சொல்லி இருக்குன்னு நினைக்கிறேன்."
///

துளசிம்மா ஆமாமா யுனிவர்சல் ட்ரூத் இல்லியாபின்னே.


///இந்தக் கணக்குலே பார்த்தா இளைய சமுதாயம் அவ்வளவு மோசமில்லை. லூட்டி எல்லாம் வயசுக்கோளாறு மட்டுமே. எதிர்காலத்துலே நல்ல மனுஷங்களாத்தான் முக்காவாசிப்பேரும் இருப்பாங்கன்ற நம்பிக்கை ஏற்படுது.///

உண்மைங்க:-)

said...

வாங்க முருகன்.

நலமா? இதென்ன நீங்களும் நம்ம கோவி.கண்ணன் மாதிரியே சொல்றீங்க? உங்க பின்னூட்டங்கள்
ஏதும் முந்தி வரலையே. மாடரேஷன்லேயும் வெயிட்டிங் இல்லை. அப்ப வேற எங்கே போயிருக்கும்?
ரெண்டும் ஜாலியாப் பேசிக்கிட்டே நடந்து வருதோ? :-))))
எப்படியோ, அக்கா வாரத்துலே சரியா வந்துட்டீங்க. அதுவே சந்தோஷம்.

said...

கொத்ஸ்,

//பொறுமை//

??? கதை கேட்டதுலேயா இல்லெ சொன்னதுலெயா?

நம்ம பூமாவுக்கு அப்புறம் ( அட, நம்ம பூமாதேவிப்பா) என் பேரைத்தான் பரிந்துரை
செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு கேள்வி:-))))))

said...

வாங்க மலைநாடான்.

கதை சொல்றதும் அதை ரசிச்சுக் கேக்கறதும் உண்மையாவே ஒரு கலைதான். இல்லே?
இந்த அவசர யுகத்துலே இதெல்லாம் காணாமப் போயிருச்சு(-:

//இத்தாலியர்களுக்கும் நமக்கும் பல விடயங்கள் ஒத்துப்போகும்.
அதில் சினிமாவையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையாகவே
மிகச்சிறந்த சினிமாக்கலைஞர் களும், படைப்புக்களும்,
உள்ளநாடு இத்தாலி. இதுபற்றி பின் ஒருமுறை விரிவாகப் பேசலாம்//

கட்டாயம். பதிவாப் போடுங்க.

said...

பத்மா வாங்க.

இப்பவும் கோபால் பயணத்துலேதான். என்ன கதை கொண்டு வரப்போறாரோ?
எல்லாம் 'நான் பெற்ற இன்பம்' தான்:-)))))

said...

மது,
அன்னைக்கே சொல்லிட்டாரேப்பா பத்துப் பாட்டுலே!
இது அந்தப் பத்து இல்லை. 'ச்சின்னப் பத்து':-))))

'அன்பிற்கும் உண்டோ அடக்கும் தாழ்'

இளைய தலைமுறையைப் பத்திக் கவலைப்படத் தேவை இல்லை. கவலைப்பட
வேண்டியதெல்லாம் நம்மைப் பத்திதான். எப்படி இந்த தேவையில்லாத கவலையை
விட்டுத்தொலைக்கறதுன்ற கவலையை:-)

said...

துளசியோட நட்சத்திர வாரத்தில தமிழ்நாட்டிலயே யாரும் கேள்விப்பட்டே இருக்காத (ரெண்டே ஷோவிலே தியேட்டரைவிட்டே ஓடிப்போன)தமிழ்ப்படத்தைப் பற்றி ஒரு பதிவு நிச்சயமா இருக்கும்னு நெனச்சேன். இத்தாலியப் படமா ))

நீங்க பாக்கலியா, அதானே பாத்தேன் ))

அவர் படம் பாத்து கதை சொன்னத அழகா எங்களுக்கு சொல்லிட்டீங்க.

Anonymous said...

Akka..agathee vandhurukken (or keerai effectla translation pannirukeenga...but still sounds good)...ungalukku, arumaiyana aural capacity...(adhudhaan ketkum thiran...konjam englipisu buildup venumulla)...paartha maadhiry kettathay ezhutha or thani thiramai venum...you have that...hats off and God bless..Akkov...konjam agaparlogathukku vandhuttu pongalen (adhu namma blog http://paradise-within.blogspot.com/...vera onnumillay unga agathee rangekku konjam try seithen adhuthaan...ha ha)

said...

ஜெயஸ்ரீ,

உங்களை ஏமாத்திருவேனா? பொறுங்க ஒரு 'இன்ப அதிர்ச்சி' வந்துக்கிட்டு இருக்கு
தமிழ்ப்பட விமரிசனமா:-)))))

said...

அகத் தீ ,

அடியாத்தி... இந்த அகத்தீ இப்ப ( அகத்திக்)கீரை லெவலுக்குப் போயிட்டாரு:-))))
'சொர்க்கத்தை'த் தேடி வந்துருவோம். அதுக்கு முன்னாலே தமிழ்மணம் பதிவுகளில்
விவசாயிகளுக்குத்தான் முன்னுரிமை. இ-கலப்பையைப் போட்டு உழுது பாருங்க.
விளைச்சல் அமோகமா இருக்கும், ஆமா:-)))))


பின் குறிப்பு: பரலோகம் போனவங்களுக்கு முதல்லே சோறு போட்டு அகத்திக்கீரைக் குழம்பு
ஊத்துவாங்களாம். எல்லாம் சொல்லக் கேள்விதான். இன்னும் நேரில் பார்க்கலை:-)))

said...

கோபால் பார்த்துட்டு எனக்குக் கதையாச் சொல்லி ( பிட் பிட்டாக) நான் எழுதுனது.
அதான் அப்படி உணர்வுபூர்வமா இல்லை. கதை சொன்ன விதம் அப்படி//

ஏன் கதைகேட்ட விதமும் 'அப்படி' இருக்கக்கூடாதா?

அதாவது நமக்கு பிடிச்ச விஷயங்கள் சொல்லும்போது விழிச்சிக்கிட்டிருக்கறது பிடிக்காத விஷயங்கள சொல்லும்போது தூங்கிப் போறது.. சகஜந்தானேங்க..

அப்புறம் அதே கதையே திருப்பிச் சொன்னா இப்படித்தான் disjointஆ இருக்கறா மாதிரி தெரியும்..

ஆனாலும் ஒரு இரயில் பயணத்தில் நாம் காணும் காட்சிகளில் கோர்வையோ பொருளோ அல்லது படிப்பினையோ இருக்க வேண்டும் என்றில்லையே..

ஒருமுறை பாரதிராஜா பாலசந்தரிடம் கேட்டாராம். எல்லா படங்களிலும் ஒரு பாடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன சார்?

அதற்கு பாலசந்தர் சொன்னாராம் ஒங்களுக்கு வயசாவுமில்ல அப்பத் தெரியும்னு..

ஒவ்வொருவருடைய நோக்கம் அப்படி..

கதைக்கு எதுக்குங்க பாடம், படிப்பினை எல்லாம்.. இலங்கைல சொல்றாமாதிரி பேசறதே கதைக்கிறதுதானே..

said...

கதைய மற்றவர் சொல்லி கேட்டதுக்கே இவ்ளோ அருமையா எழுதியிருக்கீங்க!
ஒருவேளை படத்தை நீங்களே பார்த்திருந்திங்கன்னா?

நல்லா இருக்கு!

வெவ்வேறு தளம். வெவ்வேறு மனிதர்கள் ஒரு கூண்டுக்குள் இருந்து வெளியேறுகிறார்கள்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

கதையைக் கேக்கற விதம்தான் சரியில்லையா/ இல்லே சொல்றது சரியில்லையான்னு பேசாம
ஒரு பட்டி மன்றம் வச்சுறவேண்டியதுதான்.

உக்கார்ந்து பேச/கேக்க நேரம் இருந்தாத்தானெ?
அதுக்குத்தான் அடுத்த பதிவு பதில் சொல்லுது:-))))

said...

வாங்க தம்பி.

நல்லவேளை இந்தப் படத்தை நான் பார்க்கலை:-))))

சப் டைட்டிலோட படம் பார்த்தா........ கண்ணு படத்தை விட்டுட்டு,கீழே
ஓடும் சப் டைட்டிலைத்தான் படிக்கும்.

said...

நல்ல வித்தியாசமா இருக்கு. ஒரு டிரெயினுக்குள்ளேயே நடக்குற கதை. மதராஸ் டூ பாண்டிச்சேரியும் இப்படிக் கதைதான். என்ன நம்ம சண்டைகளும் பாட்டும் வெச்சிருப்போம். அவங்க வெக்கலை. அவங்க ரசன அவ்வளவுதான். மன்னிச்சு விட்டுருங்க.

அந்த குண்டு பொம்பளை கிட்ட வேலை செய்ற பையன் தன்னோட காதலி தன்னையே தேடுறான்னு தெரிஞ்சதும் ஒரு கனவு டூயட்டு போட்டிருக்கலாம். டிரெயின்ல ஒரு திருடன் வர்ரதும். அந்த மொரட்டுப் பையன் சண்டை போடுறதும்னு ஒரு சண்டைக் காட்சி. வடிவேலுவை டிரெயினுக்குள்ள விசிடி விக்கிற ஆளா வெச்சிக் கொஞ்சம் காமெடி. ம்ம்ம்...கற்பனை பிச்சுக்கிட்டு போகுது. இந்த அளவுக்கு அவங்களுக்கு யோசனை போகலையே.

said...

ராகவன்,

இது சூப்பர்! யாராவது ப்ரொட்யூசர் கிடைச்சா நாமெ எடுக்கலாம்.
குண்டு பொம்பளை ரோல் எனக்குத்தான். யாருக்கும் கொடுக்க மாட்டேன்.:-))))
அப்ப அந்த 23 வயசுப்பையன்? பேசாம நீங்களே நடிச்சுருங்க.

தமிழ்மணத்துலே இருந்து மற்ற பாகங்களுக்கு ஆளுகளை எடுக்கலாம்:-))))

வடிவேலு = நம்ம கைப்பு.

said...

//கதை முடிஞ்சது கத்தரிக்காய் காய்ச்சது//

கதை முடியல; கத்ரீக்கா காயல!
//இன்னொரு இந்தியத் தம்பதிகள் அந்தப் பொட்டியிலே பயணம்//
இவங்க என்ன பண்ணாங்க-ன்னு சொல்லாம கதை எப்படி முடியும்?

சாரி டீச்சர்! மேக்கொண்டு கதைய கன்டினியூ பண்ணுங்க! நீங்க சீரியல்லாம் பாக்கறதில்லையா?:-)

said...

//குண்டு பொம்பளை ரோல் எனக்குத்தான். யாருக்கும் கொடுக்க மாட்டேன்.:-))))
அப்ப அந்த 23 வயசுப்பையன்? பேசாம நீங்களே நடிச்சுருங்க.//

இது அநியாயம்!
மொதல்ல அந்தக் கனவுக் காதலியா யார போடறீங்கன்னு சொல்லுங்க! ஷெராவத்து, த்ரிஷா, இப்படி ஏதாச்சும் பேர சொல்லுங்க!
அப்புறம் நானா இல்ல ஜிராவான்னு முடிவு பண்ணலாம் :-)

said...

அந்த ஆஃபீஸ் சிநேகிதிக்கு லெட்டர் எழுதி, எழுதி அலுத்துப் போற ரோல்ல நானு.. இல்லன்னா நம்ம ஜி! சே அதுவும் சரியில்லைன்ன நம்ம சீனியர் ராகவன்!

said...

KRS,

இந்தியத் தம்பதிகள் என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பண்ணாங்களா?

வண்டி நின்னதும் இறங்கிப்போயிட்டாங்க:-)))

சரியாப்போச்சு. ரயிலிலே பலதரப்பட்ட ஆட்கள் போறாங்கன்னு காமிக்கத்தான்
அந்த இந்தியன் குடும்பம் இருக்கு போல. ஒருவேளை , இப்படி 'இந்தியன் ஒரு ஆள்'
படத்தைப் பார்க்கப்போறாருன்னு முன்னாலெயே ஒரு தீர்க்கதரிசனம் டைரக்டருக்கு
வந்துச்சோ? :-)))

பி.கு: சீரியல்ஸ் பார்க்கறது இல்லை. ( தின்னுவதோடு சரி)

கனவுக்காதலி யாரா இருக்குமுன்னு யோசிக்கிறேன்.அதுக்கு முன்னாலெ
உங்க ரெண்டு பேருக்கும் மேக்கப் டெஸ்ட்,யாரு பல்லை ரொம்பக் காமிக்கிறாங்கன்னு!

( கனவுக்காதலி ஒரு டெண்டிஸ்ட்,ஞாபகம் இருக்குல்லே?)

said...

டிபிஆர்ஜோ,

வாங்க. உங்க மூணு பேருக்கும் 'மேக்கப் டெஸ்ட்' ப்ளீஸ்:-))
மடிக்கணினியிலே யாரு வேகமா தட்டச்சுறாங்கன்னு பார்க்கணும்.