Monday, November 13, 2006

அரை (???) முகம்

அறிமுகம்:

ஏங்க என்னாத்தைன்னு சொல்றது? ம்ம்......

பெயர்: துளசி

என் மறுபாதி: கோபால்.

நான் ஒரு நாடோடிங்க. காலுலே சக்கரமுன்னு சொல்வாங்க பாருங்க அது.

வயசு, என்ன ஒரு ரெண்டு வயசு எட்டுமாசம். எழுத்து வயசைத்தானே சொல்லணும்:-))


எழுதவரலேன்னா என்ன ஆகியிருப்பீங்கன்னு யாராவது கேட்டா....? என்ன, இன்னும்யாரும் கேக்கலையா? அட, பரவாயில்லை கேளுங்க. ம்ம்ம்ம்ம் கேட்டாச்சு(தானே?)டாக்டராகி இருப்பேன். ( இப்படித்தானேங்க சொல்லணும்) நல்லவேளையா நோயாளிகளுக்கு ஆயுசு நூறா இருக்கணும்.


புனைப்பெயர் ஒண்ணும் பொருத்தமாக் கிடைக்காத காரணத்தால் 'சொந்தப்பெயரில்' எழுதறேன்.


பிடிக்காததுன்னு அவ்வளவா ஒண்ணும் இல்லாததாலே, பிடிச்சது எல்லாமும்.


என்னுடைய பலம் & பலவீனம் ரெண்டுமே ஒண்ணுதான்.
'நினைவுகள்'


மன்னிக்கும் குணம் இருக்கு,ஆனா முயன்றாலும் மறக்க முடியாது.


அநேகமா நம்ம தமிழ்மண நண்பர்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும்( ஆ.... என்ன ஆணவம்?)


தெரியாதவங்க, தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தா பழைய பதிவுகளை ஒரு நோட்டம் விடுங்க.தெள்ளத் தெளிவா எல்லாமே அங்கே இருக்கு.

வணக்கம்.

இன்னிக்கு என்னவோ ஒரு குழப்பம் நடந்துருச்சு போல. அறிமுகத்துக்கு எழுதுனதும் அரை முகமாப்போயி, அரைவாசிதான் வந்துருக்கு:-)அதனாலே அதையே இங்கே ஒரு பதிவாப் போட்டுறவேண்டியதுதான் ,இல்லையா?

87 comments:

said...

வாங்கக்கா.. நட்சத்திர வாழ்த்துக்கள்.. எத்தனையாவது முறையா நட்சத்திரமாகறீங்கன்னும் அப்படியே சொல்றது.. :)))

said...

வாழ்த்துக்கள் துளியக்கா.இந்த வாரம்,
ஆரவாரம் ஆக்கிருங்க.

said...

வாங்க பொன்ஸ்.

நன்றி.

நீங்கதான் 'போணி':-))))

யாவாரம் நல்லா நடக்கணும் எஞ்சாமி!

என்ன, ரெண்டாம் முறைதான் கடை திறந்துருக்கு:-)))

said...

இளா,

வாங்க. என்னத்தை ஆரவாரம்?
அறிமுகத்துலேயே 'கத்தி' வச்சுட்டாங்கப்பா. :-)))
விடுவனா? இல்லே விட்டுறத்தான் முடியுமா?
அதான் முதல் பதிவுக்குப் பதிலா 'அதையே' முதல் பதிவாப் போட்டுத் தாளிச்சுட்டேன்.

said...

இரண்டாவது முறை நட்சத்திரமாகியிருக்கும் துளசியக்காவுக்கு வாழ்த்துக்கள்.

:))

said...

நீங்க என்னிக்குமே நட்சத்திரம் தான்.... இது எதுக்குப் புச்சா இந்த வார நட்சத்திரம்னு?

said...

வண்ணமயான வாரத்திற்க்கு வாழ்த்துக்கள் ...

said...

வாழ்த்துகள் துளசிம்மா

எத்தனை வாட்டி தமிழ்மணத்தில நட்சத்திரமாகலாம். சொல்லுங்க.

ஏங்க ஒருமுறை கூட கடை தெறக்காதவங்க எவ்வளவு அன்பா வர்றோம். நல்லா வியாபாரம் நடக்கும். நடத்துங்க:-)

said...

இரண்டாம் வருடத்தில் இரண்டாம் முறை நட்சத்திரமாகியிருக்கும் எங்கள் அன்பிற்குறிய வலைப்பதிவருக்கு வாழ்த்துக்கள்!! இனிவரும் வாரம் இனிமையாக இருக்கும் .

said...

தமிழ்மண வரலாறில் முதன் முதலாக இரண்டாவதுமுறையாக நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்களா ?
வாழ்த்துகள்.

said...

பிரகாசரை,நானும் வழிமொழிகிறேன்.

கா..த்..த்..த்..தி..ரு..க்..கி..றோ..ம்..

said...

என்னது துளசியா.. இது எத்தனாவது முறைங்க?

அறி(ரை)முகம் நல்லாத்தான் இருக்கு..

இதுவரைக்கும் ஒங்கள தெரியாதவங்க யாராச்சும் தமிழ்மணத்துல இருந்தா தெரிஞ்சிக்கிறட்டுமேன்னுதானே..

கலக்குங்க..

said...

வாழ்த்துக்கள் துளசி...
கலக்குங்க

said...

வாழ்த்துக்கள் டீச்சர்,

மக்களே இரண்டாம் முறையாக நட்சத்திரமாகியுள்ள டீச்சரை பாராட்டும் விதமாக ஒரு பெரிய போடுங்க..... (சாரி மேடம் ஸ்கூல், காலேஜ் ஞாபகம் வந்திருச்சு... ஹி ஹி!!!)

'ஓ' போட்ட எல்லாபேத்துக்கும் டீச்சர் விர்சவல் மிட்டாய் கொடுப்பாங்க... சமர்த்தா வரிசைலே வந்து வாங்கிகங்க.... ;)

said...

துளசி மேடம்,

நட்சத்திர பதிவரானாதற்கு வாழ்த்துக்கள். இந்த வாரம் விசேஷமா இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

நா.ஜெயசங்கர்

said...

நட்சத்திரமாக மின்னுவதற்க்கு வாழ்த்து
(க்)கள்.

said...

நட்சத்திரமா?
ஸ்டாரா?
சொக்கா........
பஞ்சு பொதியும் டிங்சர் பீப்பாவும்
நாட்லே விலையேறப் போவுதே....


'Twinkle twinkle little star
How i wonder what you are...'

said...

///அநேகமா நம்ம தமிழ்மண நண்பர்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும்( ஆ.... என்ன ஆணவம்?)///


இது ஆணவம் இல்லைம்மா:-)))))
அன்பாய் அரவணைக்கும் மனோபாவம்
அதனால் ஆன அறிமுகம்

said...

ஓ! ராம் ஓ போடச்சொன்னாருல்லே..
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

said...

திருப்பதிக்கே லட்டு கொடுக்கலாமா...
திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்கலாமா.....
மதுரைக்கே மல்லியா....
நட்சத்திரத்துக்கே நட்சத்திரமா....

என்ன தைரியம் இருந்தால் இப்படி செய்வார்கள்....கொஞ்சம் கூட நல்ல இல்லை....ஒத்துக்கவே மாட்டேன்....

தமிழ்மணத்தாரின் அடாத செயலை கண்டிக்கிறேன்...ஹி..ஹி..

வாழ்த்துக்கள் மேடம்....

said...

நாமக்கல் சிபி,

வாங்க.

முதல்தடவை லைட் சரியா எரியலைன்னு
ரெண்டாந்தரம் தூக்கிப்போட்டுருக்காங்களோ?

வாங்க பிரகா(ச்)சரே.
இப்படிப் 'புச்சா'க் காச்சறிங்க பாருங்க. அங்கதான் நிக்கறீங்க:-)

அய்யோ இன்பா,

//வண்ணமயான வாரத்திற்க்கு வாழ்த்துக்கள் //

'மயான' வாரமுன்னு தெரிஞ்சுபோச்சா? (-:

ச்சும்மா:-)))


வாங்க மது.

//எத்தனை வாட்டி தமிழ்மணத்தில நட்சத்திரமாகலாம். சொல்லுங்க.//

நீங்க மட்டும் 'உம்'னு சொல்லுங்க, நீங்கதான் எங்க 'நிரந்தர நட்சத்திரம்'.
சினிமாலேயே வந்துட்டீங்க. அதுவும் ஒலகநாயகன் படத்துலே!
எங்களுக்கெல்லாம் எம்மாம் பெருமையா இருக்கு தெரியும்லே?

வாங்க மணியன்,

வாழ்த்துகளுக்கு நன்றி

said...

என்னங்க லதா நீங்க வேற 'வரலாறு' அது இதுன்னு 'காட் மதராட்டம் ' சொல்றீங்க:-)))

நம்ம டோண்டுதான் இந்தப் புகழை ஏற்கெனவே அடைஞ்சு 'வரலாறு' படைச்சுட்டாருங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி


வாங்க சுதர்சன்,

உங்க 'ஓ'வை அங்கே ஒருத்தர் போட்டுக்கிட்டு இருக்காரு.
நீங்க காப்பிரைட் எடுத்துக்கலையா? :-)))


வாங்க டிபிஆர்ஜோ.

என்னங்க இது 'வெறும்' ரெண்டாம் 'முறை வாசல்' தாங்க.

மங்கை,

வாங்க. நீங்க பாட்டுக்குக் 'கலக்குங்க'ன்னு சொல்லிட்டீங்க.
இங்கே 'கலங்கி' நிக்கறேங்க.


ராம், நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.
உங்ககிட்டே நான் ஏற்கெனவே கொடுத்துவச்ச முட்டாய் பையிலே இருந்து
ஒருத்தர் விடாம எல்லாருக்கும் நீங்கதான் தரணும்,ஆமா.


வாங்க ஜெயசங்கர்.
வாழ்த்துகளுக்கு நன்றி

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்...

//இன்னிக்கு என்னவோ ஒரு குழப்பம் நடந்துருச்சு போல//

எனக்கு
உறக்கத்தில் உளரும்
பழக்கமுண்டு..

நடந்து பழக்கமில்லை..

ஹி ஹி

said...

நன்மனம்,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.


சிஜி,

கொஞ்சம் பொறுத்துக்குங்க. இந்த டிங்சர் & பஞ்சு வியாபாரத்துக்கு
நானே ஏஜன்ஸி எடுக்க மனுப்போட்டுருக்கேன். அநேகமா வந்துரும்:-)))
( காற்றுள்ள போதே 'தூற்றி'க்கொள் )
'ஓ'வுக்கும் ஒரு நன்றி


என்ன பங்காளி நீங்க?
வராதுவந்த மாமணியா வந்துருக்கீங்க. அந்த 'அல்வா, லட்டு , மல்லி' எல்லாத்தையும்
கூ (டை)ட எடுத்து வைப்பீங்களா இல்லே சவால் விட்டுக்கிட்டு இருப்பீங்களா?
அப்புறமா பங்கு போட்டுக்கலாம் பங்காளி:-)))

said...

வாங்க பூங்குழலி.

//எனக்கு
உறக்கத்தில் உளரும்
பழக்கமுண்டு..//

ஆமாமாம். 'நான் இந்து இல்லை'ன்னு 'உளறி'க்கிட்டே நீங்க நடந்துபோறதைப் பார்த்தனே,
அது இல்லீங்கறீங்களாக்கும்? :-)))


மது,

//இது ஆணவம் இல்லைம்மா:-)))))
அன்பாய் அரவணைக்கும் மனோபாவம்
அதனால் ஆன அறிமுகம் //

கவிதாயினி சொன்னாச் சரியாத்தானிருக்கும். இல்லே?
நன்றி மது. இன்னிக்குக் காற்று(வெளி) நம்மூட்டாண்டை வீசுது:-)))

said...

வாழ்த்துகள் டீச்சர். நட்சத்திரம் ஒரு முறைதானா வரும்? திரும்பத் திரும்ப வரும் என்பதை நிரூபிக்கும் முகமாக மீண்டும் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

said...

வணக்கம்...துளசி.... நட்சத்திர வாழ்த்துக்கள்...

கலக்குஙக...... இந்த வாரத்தில்...........

said...

வாழ்த்துக்கள் துளசிம்மா, கலக்குங்க வழக்கம் போல்:-)

said...

வாழ்த்துக்கள்...ஜொ(கெ)லிக்க வாழ்த்துக்கள்...!!

said...

ammaavukku vaazhththukkal.

GK romba kovakaararo ippadi muraikkiRaar?

said...

ரெண்டாவது முறையாவா!
ம்ம் வாழ்த்துக்கள் துளசியம்மா!

இந்த வாரத்தில மேலும் சுவையா எழுதி எல்லாரையும் அசத்த போறிங்க!

நட்சத்திர பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்.

தம்பி

said...

வாங்க ராகவன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. 'திடீர்' சாம்பார், ரசம் மாதிரி நான் திடீர் ஸ்டார்:-)))

ஆமாம். விருந்து வச்சுருக்கீங்க, நம்மகிட்டே ஒரு வார்த்தை சொல்லலை பாருங்க(-:

கானா பிரபா & சின்னகுட்டியார்,
கலக்குங்கன்னு சொல்லி, அப்புறம் நானும் ஒரேடியாக் கலக்கிறப் போறேன்.
கலங்கல்தான் மிச்சம் இருக்கும் ஆமா:-))))

செந்தழல் ரவி,

வருகைக்கு ந்ன்றி. கடன் வாங்கியாவது ஜொலிச்சுறமாட்டேனா என்ன? :-)))

பெங்களூரு மாநாட்டுக்கு பலத்த கூட்டம் சேருது போல:-)))
ம்ம் நடக்கட்டும்.


வாங்க டீக்கடைக்காரரே.

அவர் நம்ம ஜிகே இல்லைங்க. இது அம்மாவோட பூனை. ( அதான் கோவமா இருக்கோ?)
ஜிகே அய்யாவுது:-)))


வாங்க தம்பி.

அதான் 'தம்பி' யுடையாள் பதிவுக்கு அஞ்சாள்'னு புது மொழி இருக்காமே!

said...

வாழ்த்துக்கள்.

said...

THulasi,
vaazththukkaL.
english greetings.
thamiz sirappu starukku.

Anonymous said...

அட இந்தவாரம் "கலக்கப்போவது" நம்ம அக்காவா!!!!
யமாயுங்க அக்கா!!!!;யாரக்கா புளக்கர் படத்தில என்ன?? கம்பீரம். அடட புரியுது கம்பீரத்தின் காரணம்;
புளக்கர் எழுத்துலக ராணி வீட்டில் இருக்கும் மிதப்பு!!!
நடக்கட்டும்.
வாழ்த்துக்கள் அக்கா!!!
யோகன் பாரிஸ்

said...

துளசிம்மா!

//'திடீர்' சாம்பார், ரசம் மாதிரி நான் திடீர் ஸ்டார்:-))) //

புரிந்தது. ஏதோ தகத்திமிதா ஆகிப்போனதென்று. காலைல வேலைக்குப்புறப்படும் போது பார்த்தபோது வெறொரு பெயர் இருந்தது. திரும்பி வந்து பார்த்தால் நம்ம துளசிம்மா ....ஹையா!!:)))
அப்புறமென்ன இந்த வாரம் தக்கதிமிதா தான்.

வாழ்த்துக்கள்!

said...

பத்மா,

நன்றி.


வல்லி,

நன்றி.

யோகன்,

உண்மையிலே படத்துலெ இருக்கறவங்கதான் ராணி. நான் 16 வருஷம்
அவுங்களுக்கு கூஜாவா இருந்தேன்:-)


மலைநாடான்,

இந்த 'தக்கத்திமித்தா' எல்லாம் எழுத்துலகத்துலே 'சகஜமப்பா':-))))

said...

கழுத்தில் மாலையுடன்
எழுத்தில் தேர்ச்சியுடன்
வாருங்கள் துளசி கோபால் அவர்களே
தாருங்கள் நல்பதிவுகளை நட்சத்திரமாய்!

said...

அநியாயம் அக்கிரமம். தினசரி நட்சத்திரத்தை ஒரு வார நட்சத்திரமாய் கடலை குடத்தில் அடக்க முயலும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திடீர் நட்சத்திரமாகி எங்கள் வயிற்றில் பால் வார்த்தீர்கள். நான் நட்சத்திரமான உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்காதீர்கள். எல்லாம் காரணமாத் தான் சொல்றேன். :-)

எப்பவும் எழுதுற மாதிரி சுவையா இந்த வாரமும் எழுதப் போறீங்க. இதுல வாழ்த்துகள் என்ன சொல்றது? சரி. போனா போகட்டும். உங்க வழக்கப்படி வாழ்த்து(க்)கள் சொல்லிடறேன். வாழ்த்து(க்)கள் அக்கா. :-)

said...

இந்த வாரதாரகை அக்கா துளகிக்கு வாழ்த்துகள் அதிகமாக எழுதுங்கள் சுவையாக எழுதுங்கள் சுப்பையா ஆசிரியர் ஒரு வாழ்து(ப்)பா படியுள்ளார்.

said...

Pole Star பாத்தா சரியான பாதை தெரியு. உடனடி தேவைக்கு இன்னிக்கு இந்த ஸ்டார் போல.

வந்து கலக்குங்க.

said...

இந்த வார நட்சத்திரமாய் கூடுதல் ஒளியோடு ஜொலிக்கும் தமிழ்வலைப்பதிவுலக மகாராணி துளசியக்காவுக்கு,


மணற்புயலடிக்கும் பாலைவன தேசத்திலிருந்து கொஞ்சம் லேட்டான புயலாக வந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

மண்வாசனையுடன்.

ஹரிஹரன்

said...

தினமும் வலை பதிவுகள் ஒழுங்காக நடக்கிறதா என்று உங்கள் பதிவு / பின்னூட்டம் பார்த்து தான் தெரிந்து கொண்டிருந்தோம்.இப்போது இன்னும் கொஞ்சம் உற்சாகமாக எதிர்பார்க்கலாம்.
நடத்துங்க!! உங்கள் கலக்கலை.
சற்று முன் தான் ஹோட்டலில் சாப்பிடும் போது கோவி.கண்ணன் கேட்டார் "இந்த வார நட்சத்திரம் யார் என்று?"
இங்கு மதியம் தான் தெரியும் என்பதால் நான் பார்க்கவில்லை என்றேன்.
அது நீங்கள் என்று பார்த்தவுடன் "சந்தோஷங்கள்"

said...

நேத்து ராத்திரி கொஞ்சம் சீக்கிரமா, என் கடையை மூட வேண்டியத போச்சு. இருந்தாலும், யோசிச்சேன் யாரா இருக்கும் என் க்ரீடத்தை இறக்கி அவங்க தலையில் ஏற்றிக் கொள்ள போவதுன்னு. இப்பத்தான் தெரியுது அது வலையுலகின் முடிசூடா மன்னி துள்சி யென்று. என் பெயரை காப்பாற்றி விடுங்கள் (ரெண்டு மூணு எழுத்துப் பிழைகளாவது விட்டுவைத்து,,,) :-))))

வாழ்த்துக்கள்!!!

said...

வாழ்த்துகள் மேடம். உங்க ராணி அமர்ந்திருக்கும் தரை அட்டகாசமாக உள்ளது

said...

நட்சத்திர நாயகிக்கு வாழ்த்துக்கள்!

said...

துளசி மேடம்

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் !!

said...

துளசி அக்கா,

நீங்கள் தான் இந்த வார நட்சத்திரமா ? மனம் நிறை வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

துளசி அக்கா,

நீங்கள் தான் இந்த வார நட்சத்திரமா ? மனம் நிறை வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

வாழ்த்துக்கள் டீச்சர்!! எப்பவும் போல இந்த வாரமும் ஆரவாரம்தானே ;)

said...

துளசி நாச்சியார்,வாழ்க நலமுடன்-வளர்க தமிழ் மணத்துள்!

வாழ்த்திக்கொள்கிறேன்,மீண்டும் நட்ஷத்திரமாகவுதித்தற்கு!!

அன்புடன்,
ஸ்ரீரங்கன்

said...

வாழ்த்துக்கள்.இரண்டவது முறையும் நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றதற்கு.

said...

இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரத்துக்குப் பெருமை சேர்க்க வந்துள்ள எங்க டீச்சருக்கு..ஜே!

said...

ஆ...G....GAAAA...

யக்கா.. வந்துட்டீங்களா? வாங்க வாங்க.

நம்மத் தமிழ்மணம்..
கலகலக்கும்
எங்க துளசியக்கா
(இவ்)வார நட்சத்திரமானா

(அம்மன் கோவில் கிழக்காலே பாலு பாடியிருக்கும் 'நம்ம கடைவீதி' மெட்டில் பாடிக்கொள்க!)

கலக்கல் வாரத்திற்கு வாழ்த்துகள்!

said...

பின்னூட்ட நாயகியை வருக வருக என வரவேற்கிறேன்.
இங்ஙனம்
சயந்தன்
முன்னாள் தென்துருவ வலைப்பதிவர் சங்க செயலர்

said...

வாங்க வாத்தியாரைய்யா.
சுகமா இருக்கீங்களா?
பாமாலை எல்லாம் சூட்டறீங்க. பயமா இருக்கு,
உங்க எதிர்பார்ப்புகளுக்கு ஏத்தமாதிரி எழுத்து வருமான்னு
தெரியலை. அதான்//எழுத்தில் தேர்ச்சியுடன்...//ன்னு
பொடி வச்சுருக்கீங்க.


வாங்க குமரன்,

//வாழ்த்து(க்)கள் // இது நம்ம ஸ்டைல் இல்லைப்பா. எல்லாம் நம்ம
ராகவன்கிட்டே படிச்சது. நிம்மதியா யாருக்காவது வாழ்த்துச் சொல்ல முடியாம
எப்பவும் நம்ம ஜிரா () வந்து நிக்கறார்:-)

வாங்க என்னார்.
//சுப்பையா ஆசிரியர் ஒரு வாழ்து(ப்)பா படியுள்ளார்.//
அவருக்கென்னப்பா, 'ஆசிரியப்பா'வே பாடிருவார்.


கொத்ஸ்,

நானே இங்கே சவுத் போ(லி)ல் ஸ்டார்தாம்ப்பா:-)

வாங்க ஹரிஹரன்.
புயலாட்டம் உங்க பதிவுகளிலெ சுழன்று சுத்தறீங்க.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.


வாங்க குமார்.
//ஹோட்டலில் சாப்பிடும் போது கோவி.கண்ணன் கேட்டார்
"இந்த வார நட்சத்திரம் யார் என்று?"//
தமிழ்மண நட்சத்திரம் ( ரவுண்ட்) டேபிள்க்கு வர்ற அளவுக்கு முக்கியத்துவம்
ஆகிப்போச்சு:-))))

சந்'தோஷங்களுக்கு' நன்றி.

said...

வாங்க தெ.கா.

'முள்'கிரீடத்தை நம்மகிட்டே தள்ளிட்டீங்க:-)))
ரெண்டு மூணு எழுத்துப்பிழையோட நாலைஞ்சு கருத்துப்பிழையும்
சேர்த்துருவேன். கவலையை விடுங்க:-)

கால்கரி சிவா.

வாங்க. ராணியம்மா உக்கார்ந்துருக்கறது அடுக்களைத் தரை.
என்னோட கலர் செலக்ஷன். ( மற்ற பாதியை செலக்ட் பண்ண விட்டுருவனா?)

உதயகுமார் & சிவபாலன்,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

சொக்காய் யாருப்பா? புதுசா?
வருகைக்கு நன்றி. ப்ரொபைல் தெரியலையே(-:

எ.அ.பாலா,

நன்றி

கப்பி பய(லே)
நன்றிப்பா

said...

சொக்காயி. சொக்காய் அல்ல.

said...

ஸ்ரீரங்கன்,

வருகைக்கும் வாழ்த்துகளும் நன்றி.

தி.ரா.ச,

வாங்க வாங்க.
நன்றிங்க.

தருமி,

வாங்க.
//டீச்சருக்கு..ஜே! //ன்னு
பின்னாலெ திரும்பிக்கிட்டுச் சொல்றீங்க? :-)

வாங்க சுந்தர்,

பாடுனா கொஞ்சம் இழுக்குதே:-)))))


வாங்க சயந்தன்,

//முன்னாள் தென்துருவ வலைப்பதிவர் சங்க செயலர் //
அப்படீன்னா.... இந்நாளுக்கு யார்?

said...

//சொக்காயி. சொக்காய் அல்ல. //

சொக்காய் இல்லையா? அடடா... தப்பாச் சொல்லிட்டேன், 'சட்டை' பண்ணாதீங்க
யம்மா சொக்காயி.

ப்ரொஃபைல் கொஞ்சம் பார்க்க விடுங்கம்மா,தாயீ

(சொக்கா...இப்படிப் புலம்ப வச்சுட்டியே)

said...

//ப்ரொஃபைல் கொஞ்சம் பார்க்க விடுங்கம்மா,தாயீ//

ஏன் பார்க்க முடியவில்லையா? check பண்ணுகிறேன். அப்படியே பார்த்தாலும் சொல்லிக்கொள்கிறாற் போல் ஒன்றும் இல்லை.

said...

நல்லவேள, இந்த வாரம்பூரா பொட்டிக்கு முன்னாலதான்.
சுடச்சுட படிச்சுபோடலாம்.
துள்ளி விளையாடுங்க, துளசியக்கா!!!
மசால் வடை அனுப்பட்டுமா?

said...

தமிழ்மணத்தின் நிரந்தர நட்சத்திரமான உங்களுக்கு என்னன்னு இந்த வாரம் புதுசா வாழ்த்து சொல்லன்னு தெரியலை.

உங்களை மாதிரி நல்லா எழுத தான் முயற்சி பண்ணணும்.

அன்புடன்
செல்வன்

said...

வாங்க க.பெ.

கேள்வியின் நாயகியே, மசால்வடை அனுப்பவான்னு என்ன கேள்வி?
அனுப்பிட்டு, 'அனுப்பிட்டேன்'னுல்லே சொல்லி இருக்கணும்:-))))
சூடா மசால்வடை தின்னுக்கிட்டே பதிவு எழுதுனா 'சூப்பரா' இருக்குமுல்லே?

said...

வாங்க செல்வன்.

அந்த 'புதிய கடவுளே' வந்து சொன்னது சந்தோஷமா இருக்கு:-))))

said...

congrats on being the star for the second time

but then.. you are a star all the time.

:)

said...

துள்சி மேடம், இப்பத்தான் கொஞ்சநாள் முன்னாடி மரத்தடிக்கு வந்தப்போ' எனக்கு அவ்வளவா எழுத தெரியாது' என்று அடக்கமா சொல்லி உள்ளே நுழைஞ்ச நீங்க இன்னிக்கு நட்சத்திரமா ஜொலிக்கறீங்க! காரணம் உங்க எளிமைதாங்க..வலைப்பதிவுக்குசமீபமா வந்திருக்கிற எனக்கு உங்களோட எதார்த்த எழுத்து ரொம்பபிடிச்சிருக்கு...துருவ நட்சத்திரமா எல்லார் மன வானிலும் இருக்கறீங்களே, வாழ்த்துகள்!
ஷைலஜா

said...

வாங்க ஷைலூ.

நலமா?

சவுத் போல் கிட்டே இருக்கனே, அப்ப துருவ நட்சத்திரம்தானே? :-)))))

இந்த ஜொலிப்பு எல்லாருக்கும் 'முறைவாசல்'தான் தெரியுமா? :-)))))

வாராவாரம் ஒரு தாரகைதான். எழுதர எல்லோருமே நட்சத்திரங்கள்தானப்பா .
இதுலே என்ன ஸ்பெஷல்?

கொஞ்சம் நடுவுலே போட்டு வைக்கறதாலெ ஒரு கூடுதல் கவனம் இந்த வாரம்.
அம்புட்டுதான்.

said...

வாங்க சிறில்.

அடடா.... நீங்களுமா.....?

எப்படியோ நீங்க எல்லாரும் வந்தது நிஜமான சந்தோஷம்தான்.
நன்றிங்க.

said...

நட்சத்திர டீச்சருக்கு ஒளிமயமான வாழ்த்துக்கள்!
அதுவும் குழந்தைகள் தினம் அதுவுமா, தமிழ்மண நட்சத்திரம்!

பொலிக!பொலிக!பொலிக!
Twinkle Twinkle Thamizmanam Star
How I wonder what you are!!!
:-)))

முதல் ஆளாய் வந்திருக்கணும்! அலுவலகத்தில் என்றுமில்லாத திருநாளா பணியோ பணி :-)

said...

//காலுலே சக்கரமுன்னு சொல்வாங்க பாருங்க அது//

பெருமாளுக்குக் கையிலே சக்கரம்னா,
"துளசி"க்குக் (துளசி டீச்சருக்கு) காலிலே சக்கரமா? ஆகா! ஓகோ!!

டாக்டர் துளசி டீச்சர் அவர்களே,
தமிழ் மணத்தில் வாரம் முழுதும் துளசீ மணம்! வடை மணமும் உண்டு அல்லவா?? :-))

said...

வாங்க KRS.

ஆளைக் காணொமேன்னு நினைச்சப்பயே சந்தேகப்பட்டேன். ஒண்ணு ஊர்லே இல்லை, ரெண்டு வேலையில்
பிஸின்னு. அப்படியே ஆச்சு.

நீங்க நம்மவீட்டு ஆள். எப்ப வந்தா என்னப்பா? வந்ததே போதும்.

அச்சச்சோ.... பெருமாள் கிட்டே இருக்கறது சுதர்ஸனம்.
நம்ம காலிலே 'ஸ்கேட்டிங் வீல்':-)))

வடை எல்லாம் உண்டு. அதான் கஸ்தூரிப்பெண் அனுப்பறேன்னு சொல்லிட்டாங்களே!
மிட்டாயெல்லாம் கூட நம்ம ராம் தர்றார்:-))))

said...

சிங்கையில் கண்டேன்
இன்றுதான் கண்டேன்
சிந்தை மகிழ்ந்தேன்
வாழ்த்துகள்!

said...

வாங்க S.K.

உங்க சிங்கைப்பயணம் நல்லபடி இருந்ததா?
நிறைய வலைஞர்களைச் சந்திச்சு இருப்பீங்க.
அதெல்லாம் எழுதுங்க.

வாழ்த்துகளுக்கும் கவிதைக்கும் நன்றிங்க.

'இன்றுதான் வந்தேன்'னு இருக்கணுமோ?

said...

வாழ்த்துக்கள் துளசி

said...

நான் அதிகம் லேட்டு..

வாழ்த்துக்கள்

said...

வாங்க பாலபாரதி.

இன்னிக்குப் பதிவுக்கு பர்த்டேயாமெ?

வாழ்த்து(க்)கள்.

வருகைக்கு நன்றிங்க.

said...

நன்றி வதனா.

பேத்திகளோடு நேரம் ஓடுமே!

said...

மெகா ஸ்டார் நட்சத்திரம் துளசியம்மாவுக்கு வாழ்த்துக்கள். !

பி.கு : நான் போட்ட இதே பின்னூட்டம் காணவில்லை !

ஒர வஞ்சனையா ? இருங்க உங்க ஜி.கே கிட்ட சொல்லி பிரண்டிவிட சொல்கிறேன்.
:)

said...

என்னங்க GK,

வாங்க. ஆமா எப்பப் போட்டீங்க பின்னூட்டம்? மாடரேஷன்லே கூட ஒண்ணும் பாக்கி நிக்கலையே(-:
இப்பத்தான் உங்க பின்னூட்டம் வந்துருக்கு?
மொதல்லே போட்டது காணொமுன்னா நம்ம ஜிகே கிட்டேதான் கேக்கணும்:-))))
எப்படியோ இப்பவாவது வந்தீங்களே. அதுக்கே சந்தோஷம்தான்.

said...

துளசிஜி, நட்சத்திர வாழ்த்துக்கள்...

லேட்..ட்டு தான்... ஆனாலும் நாங்கதான் லேட்டஸ்டு ன்னு அணில் சொல்ல சொல்லிச்சு..

said...

வாங்க கவிதா.

நலமா? அணில்குட்டிதான் 'மானத்தை 'வாங்குது போல:-)))

அம்மணிக்குப் பொறாமைன்னு கூவுது:-)))

அதான் நமக்கு வெளி ஆளுங்களே வேணாம். சொ.செ.சூ. வச்சுக்குவோம்:-))))
அணிலுக்கு ஒரு 'ஹை' சொல்லிருங்க.

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் துளசி கோபால் அவர்களே.

said...

வாங்க செந்தில் குமரன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

Anonymous said...

லேட் என்ட்ரி கொடுக்கறதுக்கு மன்னிக்கவும். புதிய வேலை, அதனால அதை ஒழுங்கா செய்யறதுல தமிழ் மணத்துக்குள்ள நுழைய முடியல! எத்தனையாவது முறை நட்சத்திரம் ஆறீங்கன்னு சொன்னா, எங்க மாதிரி ந்யூ என்ட்ரிக்கு கொஞ்சமேனும் எழுதணும்னு உத்வேகம் வரும். வாழ்த்துக்கள்!

said...

வாங்க ஜெய சந்திரசேகரன்.
ரொம்ப பிஸிங்களா?

முதல்லே நம்ம வயித்துப் பொழைப்பைத்தான் பார்க்கணும்.
தமிழ்மணம் எங்கே போகுது? எங்கே வருது? இங்கெ தானே இருக்கும்:-))

அதிகம் இல்லைங்க, இதான் ரெண்டாம் வாட்டி.

மொதல் வாட்டி சரியாச் செய்யலைன்னு இப்ப ரிப்பீட்டு.
இதையும் சொதப்பிட்டா.... இம்போஸிஷந்தான்:-)))