Friday, November 10, 2006

வல்லிக்கண்ணன்

பிரபல எழுத்தாளர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் மறைந்துவிட்டார் ன்னு
இப்பத்தான் தினமலரில் படிச்சேன்.

சாகித்திய அகடமி விருது பெற்றவர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
வயது 86.

சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, அதன்பின் மரணம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும், அபிமான வாசகர்களுக்கும்
எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

( அவரோட புத்தகங்கள் ஒண்ணும் இதுவரை வாசிச்சதில்லை)

20 comments:

கானா பிரபா said...

வல்லிக்கண்ணன் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்,
நல்லதொரு திறனாய்வாளர்.
இவர் திருமணம் முடிக்காமலேயே தொடர்ந்த எழுத்துப்பணி செய்தவர், அன்னாருக்கு என் அஞ்சலிகள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வ.க என்று தான் குறிப்பிடுவார்கள்!
அவரின் சில கட்டுரைகளை வாசித்துள்ளேனே தவிர, அவர் எழுதிய சிறுகதைகளோ, கவிதைகளோ இது வரை படித்ததில்லை.

க.நா.சு மற்றும் வ.க. திறானாய்வுக் கட்டுரைகள் மிகவும் ஆழமான அலசல்களாக இருக்கும்.

அன்னாருக்கு அஞ்சலி!

மணியன் said...

// அன்னாரின் குடும்பத்தினருக்கும், அபிமான வாசகர்களுக்கும்
எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.//
என்னுடைய அஞ்சலிகளும்.

G.Ragavan said...

வல்லிக்கண்ணன் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த சமையல் கலைஞர் என்றும் கூற வேண்டும். இலக்கியத்திற்காகவே வாழ்ந்து மறைந்த அவரது ஆன்மா அமைதியுற இறைவனை வேண்டுவோம்.

துளசி கோபால் said...

வாங்க, கானா பிரபா,KRS, மணியன் & ராகவன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராகவன்,

அவர் சமையலிலும் கலைஞரா? அட! இது ஒரு புது செய்தி எனக்கு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!!
அப்பப்போ இந்தியா ருடேயில் இவர் பற்றி வாசித்துள்ளேன். அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
யோகன் பாரிஸ்

ENNAR said...

தங்களுன் நானும் சேர்ந்து அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

✪சிந்தாநதி said...

வல்லிக்கண்ணன் குறித்த பதிவுகள்.

http://valai.blogspirit.com/archive/2006/11/10/வல்லிக்கண்ணன்-நினைவுகள்.html

http://aim.blogsome.com/2006/11/10/p10/

sooryakumar said...

ஐயோ.. அந்த அருமையான தீபம் அணைந்து விட்டதா..? சில ஆண்டுகள் முன் சென்னையில் அவரைப் பார்த்தேன். எவளவு நல்ல மனிதர். எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கியவர். பரந்த ஆழ்ந்த படிப்பாளியும் படைப்பாளரும்..அவர்..!!அவர் எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆக்கம் தமிழுலகிற்கு கிடைத்த பொக்கிசம்..!அவர் பெயர் என்றும் வாழ்க.

இராதாகிருஷ்ணன் said...

வருத்தத்திற்குரிய செய்தி. தகவலுக்கு நன்றிகள்!

siva gnanamji(#18100882083107547329) said...

சமகால இலக்கியவாதிகளின் எண்ணிக்கை அருகிவருகின்றது.....
வ.க விற்கு அஞ்சலிகள்!

மு.கார்த்திகேயன் said...

துளசி, வல்லிகண்ணனின் சிறுகதைகள் சில படிச்சிருக்கேன்.. நிகழ்கால எழுத்தாளர்கள்ல உணர்ச்சிகளை படம் பிடித்து காட்டுறதுல இவர் முன்னால நிற்பவர்..
அன்னாருக்கு என் அஞ்சலி.. அவரோட எழுத்துக்கள் என்றைக்கும் வாழும்..

தி. ரா. ச.(T.R.C.) said...

இலக்கியவாதியின் மறைவுக்கு தலை தாழ்த்தி இரங்கலில் பங்கு கொள்கிறேன்

முனைவர் அண்ணாகண்ணன் said...

http://tamil.sify.com/fullstory.php?id=14328569

http://tamil.sify.com/amudhasurabi/fullstory.php?id=13523470

துளசி கோபால் said...

யோகன், என்னார், சிந்தாநதி, சூரியகுமார்,
ராதாகிருஷ்ணன், சிஜி, கார்திகேயன்,
தி.ரா.ச., & அண்ணாகண்ணன்

வருகைக்கும், சுட்டிகளுக்கும் நன்றி.

Sri Rangan said...

துளசி,உங்களோடிணைந்து நானும் அமரர் வல்லிக் கண்ணனுக்கு அஞ்சலிக்கின்றேன்!

✪சிந்தாநதி said...

இன்னொரு இணைப்பு

http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_4282.html

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீரங்கன்.

நன்றி.

சிந்தாநதி,

சுட்டிக்கு நன்றிங்க.

Sud Gopal said...

வ.க விற்கு அஞ்சலிகள்!

துளசி கோபால் said...

வருகைக்கு நன்றி சுதர்சன்