Wednesday, November 29, 2006

வாத்தியாரின் வீட்டுப்பாடம்

இந்த ஹோம் வொர்க்கைத்தாங்க இப்படிச் சொன்னேன். அக்கா பொண்ணுச் சின்னக்குழந்தையா இருந்த சமயம். (என்ன? ஒரு ஏழு வயசு இருக்கும் அப்ப)
மாமாவோ தீவிர தமிழ் அன்பர், தமிழ்ப் பித்தர். தமிழரசுக் கழகமுன்னு ஒண்ணு அப்ப இருந்துச்சுங்க.(இப்பவும் இருக்கான்னு விவரம் தெரியாது) ம.பொ. சிவஞானகிராமணியார்தான் அதோட தலைவர். அவரை எல்லாரும் ம.பொ.சின்னு குறிப்பிடுவாங்க. நம்ம தமிழ்ப் பித்தர் தன்னையும்மா.து.சின்னே சொல்லிக்கிட்டு இருந்தார். எல்லாத்துலேயும் தமிழே தமிழ்தான் அவருக்கு.பொண்ணு வீட்டுப்பாடம் சரியாச் செய்யலைன்னு இவர், பொண்ணோட டீச்சருக்கு ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தனுப்புனார், பொண்ணுகிட்டே.

"சிலம்பரசி( பொண்ணோட பேர்) வீட்டு வேலைகள் ( ஹோம் ஒர்க்) சரியாகச் செய்வதில்லை. கொஞ்சம் கண்டித்து வையுங்கள்."


டீச்சர், உடனே சிலம்பரசி கிட்டே என்ன சொன்னாங்க?


" இதோ பாரும்மா. உங்க அப்பா இப்படிச் சொல்லி யிருக்கார். நாளையிலே இருந்து பள்ளிக்கூடத்துக்குவர்றதுக்கு முன்னாலேயும், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போன பிறகும் அம்மாவுக்கு உதவியாவீட்டு வேலைகள் எல்லாம் செஞ்சு தரணும். சரியா? "


" என்ன வேலை டீச்சர்?"


" வீட்டுலே எவ்வளோ வேலை இருக்கும்? மாவு ஆட்டறது, தண்ணி பிடிச்சு வைக்கிறது, கடைக்குப் போறது,தம்பி தங்கச்சிங்களைத் தூக்கி வச்சுக்கறதுன்னு. எல்லாத்துலேயும் உதவி செய் ஆமாம்"


ஏழு வயசுக்குழந்தை என்னங்க வீட்டு வேலை செய்யும்? அதுவும் வீட்டு வேலைக்குன்னெ பெரியவுங்க நாலு பேர் இருக்கற வீடு, கூட்டுக்குடும்பம்.


பொண்ணு வீட்டுக்கு வந்து சொன்னதும், அப்பா முகத்தைப் பார்க்கணுமே:-))))))))))))


சரி. அதுபோகட்டும். நம்ம 'சுப்பையா வாத்தியார்' சுற்றுலா விஷயமா உங்களுக்கெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்துருக்கார். அவர் அனுப்புனதை இங்கே அப்படியே போடப்போறேன்.


எல்லாத்தையும் கவனமாப் பார்த்துட்டு, உங்களுக்கு விருப்பம் இருக்கற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்லுங்க. போற போக்கைப் பார்த்தா, ஒரு நாலைஞ்சு பஸ் ஏற்பாடு செஞ்சுக்கிட்டு, ' தமிழ்மணம் சுற்றுலா'ன்னு'பேனர்' கட்டிக்கிட்டு நாமெல்லாம் போற மாதிரி ஒரு கனவு கண்முன்னால் விரியுது!


***** ***** *****


சகோதரி துளசி கோபால் அவர்களுக்கு,நீங்கள் கேட்டுக்கொண்டபடி தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான, பார்க்க வேண்டிய இடங்களைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.


நீங்கள்தான் துவங்கி வைத்தீர்கள் - ஆகவே அவற்றை நீங்களே பதிவாக்கிவிடுங்கள்.


குறிப்பிட்டுள்ள 33 இடங்களில் 19 இடங்கள் கோவில்களாகும்.இறை நம்பிக்கையுள்ளவர்களும், இறைநம்பிக்கையில்லாதவர்களும் கூட பார்க்கவேண்டிய இடங்களாகும் அவைகள். தொன்மைக்காகவும், சிற்பக்கலைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும், கற்திருப்பணிகளுக்காகவும் பார்த்து ரசிக்கப் பட வேண்டியவை அவை. அது போன்று நூற்றுக் கணக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் நான் பத்தொன்பது கோவில்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன்


தேக்கு மரத்தாலான, பிரம்மாண்டமான கட்டிடக் கலைக்கான வீடுகள் செட்டி நாட்டில் நிறைய உள்ளன. எல்லாம் நூறு வருடங்களுக்குமேல் தொன்மையாவை. அவற்றில் இரண்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவைகள் காட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்குத்தெரிந்த இடங்கள், பிடித்த இடங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.


1. மெரினா கடற்கரை, சென்னை

2. குடவரைக் கோவில்கள், மகாபலிபுரம்

3. காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம்

4. நடராஜர் கோவில், சிதம்பரம்

5. பிட்சாவரம், சிதம்பரம் அருகில் உள்ளது

6. அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை

7. பட்டீஸ்வரர் கோவில், பேருர் - கோயமுத்தூர்

8. இயற்கைச் சூழலில் உள்ள சிறுவாணி அணை

9. உதகமண்டலம்

10. பழநி தண்டாயுதபாணி கோவில் ( அதன் தொன்மைக்காக - போகர் ஸ்தாபித்தது)

11. ஸ்ரீரெங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம்

12. திருவானைக் கோவில், திருச்சி

13. பிரஹதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்

14. தியாகராஜர் கோவில் - கமலாலயம் , திருவாரூர்

15. ராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி

16. இளையாற்றங்குடி கைலசநாதர் கோவில்

17. செட்டிநாடு பேலஸ், கானாடுகாத்தான்

18. ராவ் பகதூர் வீடு, கொத்தமங்கலம்

19. மீனாட்சியம்மன் கோவில், மதுரை.

20. நாயக்கர் மகால், மதுரை

21. காளீஸ்வரர் கோவில், காளையார் கோவில்

22. கோமதியம்மன் கோவில், சங்கரன் கோவில்

23, நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

24, சண்முகர் கோவில், திருச்செந்தூர்

25. குற்றாலம் அருவி

26. கன்னியாகுமரி

27. முட்டம் கடற்கரை

28. தாணுமாலயன் கோவில், சுசீந்திரம்

29, கொட்டாரம் கிராமம், நாகர்கோவில் அருகில்

30. ராமநாதசுவாமி கோவில்,ராமேஸ்வரம்

31. கொடைக்கானல்

32. தேக்கடி

33. திருவீசர் - சிவகாமவல்லி, கற்பகவிநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி - குடவரைக் கருவரையில் உள்ள பிள்ளையார்.


நன்றி, வணக்கத்துடன்,SP.VR. சுப்பையா


***** ******* ******


இதுலே நான் வாங்குன மார்க் 20 தான். ( பாஸ்? )

நீங்க?எனக்கும் இப்படி ஒரு சுப்பையா வாத்தியார் இருந்தார். அவரைப் பத்தி இங்கே:-)))))

43 comments:

said...

நான் ஒழுங்காக ஊர் சுத்தாததால் 10 தான் வருகிறது.
:-))

said...

எனக்கு 18 மார்க்தான். நானும் பாஸ். ஹைய்யா.

கிருஷ்ணன்

said...

நான் 19 மார்க்தான். :(

said...

நாம 18 இடங்கள் பார்த்திருக்கோம்..

'வீட்டுவேலைகள்' மாதிரியே....
1965-66 ல் சென்னை, காசிமேடு பகுதியில் நான் பார்த்தது.......
"மணைவிமார்கள் உபயோகிப்போர்
கூட்டுறவு சங்கம்"
Housewives Consumers Cooperatives ன் மொழிபெயர்ப்பாம்!

said...

வாங்க குமார்.

என்ன 10 தானா? அப்ப ஃபெயில்தானா? :-))))

பேசாம லிஸ்ட்டைக் கம்ப்ளீட் செஞ்சுருங்க, ஆமாம்:-)))

said...

வாங்க கிருஷ்ணன்.

18 மார்க் பாஸ்தான்:-))))

ஆனா.....வாத்தியார்கிட்டேதான் கேக்கணும், பாஸ் ஆகக் குறைஞ்சது
எத்தனை வேணுமுன்னு!

said...

என்னங்க கொத்ஸ்,

இவ்வளவு கம்மியா இருக்கு உங்க மார்க்! எதிர்ப்பார்க்கலை(-:

said...

சிஜி,

நம்ம கொத்ஸைவிடக் கம்மியா? அடடா.....


//நான் பார்த்தது.......
"மணைவிமார்கள் உபயோகிப்போர்
கூட்டுறவு சங்கம்"
Housewives Consumers Cooperatives ன் மொழிபெயர்ப்பாம்! //

இதெல்லாம் கண்ணுலே 'டாண்'ன்னு பட்டுருக்குமே:-)))))
இப்பவாவது மாத்துனாங்களா?

said...

14 :(

அக்கா, ஏற்பாடு செய்யறதுன்னா சொல்லுங்க.. நான் வரேன்..

said...

என் மார்க் 26!
ஆத்தா, நான் பாசாயிட்டேன்@

மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு!

said...

பதிவைச் சுறுசுறுப்பாக உடனே பதிவிட்டமைக்கு நன்றி சகோதரி!
இதில் மதிப்பெண்களுக்கெல்லாம் இடமில்லை!
உள்நாட்டைலிருப்பவர்களும், வெளிநாட்டிலிருந்து தாயகம் வருபவர்களும்ளும் வருடத்திற்கு ஆறு இடங்கள் என்று வைத்துக்கொண்டு சென்று பார்த்தால் எல்லா இடமுமே நெஞ்சில் பதிந்துவிடும்
அப்போது உங்கள் மனது போடும் பார்த்த இடங்களுக்கான மதிப்பெண்களை!
அதுதான் முக்கியம்!

said...

பதிவைச் சுறுசுறுப்பாக உடனே பதிவிட்டமைக்கு நன்றி சகோதரி!
இதில் மதிப்பெண்களுக்கெல்லாம் இடமில்லை!
உள்நாட்டைலிருப்பவர்களும், வெளிநாட்டிலிருந்து தாயகம் வருபவர்களும்ளும் வருடத்திற்கு ஆறு இடங்கள் என்று வைத்துக்கொண்டு சென்று பார்த்தால் எல்லா இடமுமே நெஞ்சில் பதிந்துவிடும்
அப்போது உங்கள் மனது போடும் பார்த்த இடங்களுக்கான மதிப்பெண்களை!
அதுதான் முக்கியம்!

said...

பொன்ஸ்,

என்னங்க இங்கே? 'அங்கெ' அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்கன்னு பார்த்தேன்.
அடிச்ச அடியிலே பந்து ஸ்டேடியம் விட்டு வெளியே பறந்துபோச்சு. அந்த இடைவெளியில்
இங்கே வந்து எட்டிப்பார்த்தீங்கன்னு வச்சுக்கவா? :-)))))

ரெடின்னா சொல்லுங்க. ஒரு ஏற்பாடு நிஜமாவெ செஞ்சுறலாம்.

said...

வாங்க எஸ்.கே.

26 ஆஆஆஆஆஆஆஆஆஆஆ?
இன்னும் எழுதான் பாக்கியா?
நீங்கதான் இப்போதைக்கு முதல் இடம்( எப்போதைக்கும் என்பதுதான் உண்மை!)

said...

வாங்க வாத்தியார் ஐயா.

இந்த மார்க்கெல்லாம் சும்மா ஒரு வேடிக்கைக்காகத்தான்.
பசங்க விளையாடிக்கிட்டுப் போட்டும்.:-)))))

ஊருக்கு வரும்போது 100 வேலைகள் வந்துருது. அப்படியும் அடிச்சுப் பிடிச்சு
சில இடங்கள் போறதுதான் எல்லாரும்:-)

said...

15 இடங்கள் இப்போதைக்கு அடுத்தமுறை சவுத் பெல்ட்டை கவர் செஞ்சு ஒரு பத்தை தேத்திட வேண்டியதுதான்!

போட்டோல பார்த்ததெல்லாம் செல்லுபடியாகுமா? சரின்னா இப்பவே இன்னொரு பத்து கூட்டிக்கலாம்! :-))

said...

சே... எனக்கு 3 தான் தேறுது.....

said...

துளசி , நானும் முதல் முறையா வந்துட்டேன் உங்க ப்ளாக்கிற்க்கு,உங்கள் வருகைக்கு நன்றி, உங்க பதிவுகள் எல்லாம் படிச்சுடு பின்னூட்டமிடுகிறேன்

said...

//உங்க பதிவுகள் எல்லாம் படிச்சுடு பின்னூட்டமிடுகிறேன்//

அப்போ ஒரு ஆறு மாசம் எட்டு மாசம் கழிச்சுதான் பின்னூட்டமா? பின்ன கிட்டத்தட்ட 500 பதிவு படிக்கணமுன்னா சும்மாவா?

said...

//அந்த இடைவெளியில்
இங்கே வந்து எட்டிப்பார்த்தீங்கன்னு வச்சுக்கவா? :-)))))//
எங்க அடிச்சாலும் ஆடினாலும், ஓடினாலும், உங்க பதிவை விட்ருவோமாக்கா..:)))

இந்த featured of today post ஒண்ணு போட்டிருக்கீங்களே, "வணக்கம் - இப்போ குழப்பங்கள் தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன்" - செப் 2004 - இது என்னக்கா? இப்படி ஒரு இடுகை?, என்ன குழப்பம்? :))

said...

வாத்தியார் ஐயா வணக்கம்!

இது திட்டமிட்ட சதி:-)
லிஸ்டில் எங்கும் ஒரே தெற்காத் தானே இருக்கு!
வடக்கில் உள்ள ஒகனேக்கல், ஏற்காடு, ஏலகிரி, செஞ்சிக்கோட்டை, வேலூர் மற்றும் பல இடங்களை விட்டுட்டீங்க!

ஹஊம்ம்; தெற்கு வாழ்கிறது! வடக்கு தேய்கிறது! :-)))

said...

எலிவால்ராஜா,

மூணே மூணா...? எப்படிங்க?

said...

ஹரிஹரன்,

'போட்டோ'லே பார்த்ததா? இந்த அழுகுணி ஆட்டம் கூடாது. அப்புறம்
நெட்லே பார்த்ததுன்னு நானும் 33ஐயும் சொல்லிருவேன், ஆமா:-)))

said...

வாங்க திவ்யா.
கரெக்ட்டா 'மொய்' எழுதிட்டீங்களே:-)))

said...

34ஆவதாக சென்னையில் எங்கள் இனிய இல்லத்தையும் சேர்த்துக்கொள்ள வாத்தியார் அய்யாவிடம் பரிந்துரை செய்யும்படி டீச்சர் அக்காவைக் கேட்டுக்கொள்கிறோம்.
:-)

said...

கொத்ஸ்,

இப்படிப் பயமுறுத்தி அவுங்களை 'பின்' வாங்க வச்சுறாதீங்க:-))))

said...

பொன்ஸ்,
அந்தக் குழப்பமா? அப்ப கலப்பையிலெ சரியா உ( வி)ழத் தெரியாம திஸ்கியிலே
முதல் பதிவு வந்துருச்சு:-))))))

அப்புறம் நம்ம காசிதான் உதவிக்கு வந்தார். சமாளிச்சு எழுந்துட்டேன்.

said...

KRS,

அதானே? பேசாம நாமும் 'சென்னை'யிலெயே ஒரு 33 இடங்களைப் போட்டுறலாமா? :-))))
செத்தகாலேஜ், உயிர்க்காலேஜ், அண்ணா சமாதின்னு ஒரு 50 இடம் தேறாதா?
( நான் இன்னும் அண்ணா, எம்ஜிஆர் சமாதிகள் பார்க்கலை)

said...

வாங்க பாலராஜன்கீதா.

சொல்லிட்டீங்கல்லெ. தோ.....வந்துட்டோம்:-))))))

சென்னை லிஸ்ட்டுலெயும் சேர்த்துக்கவா? :-))))

said...

நான் அவ்வளவாக ஊர் சுற்றியதில்லை வெறும் 13 தான் வருது.

40 மார்க் எடுத்து ஜஸ்ட் பாஸ் செய்து விட்டேன் :) இருந்தாலும் :(.

இதுல மீனாக்ஷி அம்மன் கோவில் பற்றி விளக்கமா, அங்குலம் அங்குலமா வலைபூவில் பதித்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

said...

மிஸ்டர் கே ஆர் எஸ். எதற்கு கவலை - தெற்கு வடக்கு என்று?
துளசி அம்மையார் சொன்னமாதிரி சென்னையிலேயே 33 இடங்களைப்போட்டுவிடலாம்.
தஞ்சை மாவட்டத்திலேயே அற்புதமான கோவில்கள் 300க்கும்மேல் இருக்கிறது - உதாரணம் வைத்கீஸ்வரன் கோவில், கஙகைகொண்ட சோழாபுரம், மயூரநாதர் கோவில்,
கோவையை சுற்றி வேண்டுமென்றால் 33 இடஙளைக் குறித்துத தருகிறேன்
என் சிற்றறிவிர்க்குத் தெரிந்தவரை 33 இடங்களைக்குறித்துக் கொடுத்துள்ளேன் அவ்வளவுதான்

உங்களுக்கு இல்லாத இடமா இந்தியாவில்?
திருப்பதி ஒன்று போதாதா?
அல்லது வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவில் ஒன்று போதாதா?
உங்களுக்கு மனத்திருப்தி தருவதற்கு?
பார்த்துவிட்டு வந்து சிறப்பாக பதிவு போடுவதற்கு?

said...

//உங்களுக்கு இல்லாத இடமா இந்தியாவில்?
திருப்பதி ஒன்று போதாதா?
அல்லது வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவில் ஒன்று போதாதா?//

வாத்தியார் ஐயா! உங்க மாணவர்கள் மனச நல்லாத் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க! திருமலையும், அரங்கமும், வில்லிபுத்தூரும் முடிந்த பின்னர் நேரா உங்க ஊருக்கு/வீட்டுக்கு ஓடியாந்துடறேன், பிரசாதத்தோட!

உங்க பதிவு அறுசுவையோடு, வீட்டு அறுசுவையும் சேர்த்தே சாப்பிட்டு, இரண்டு முக்கியமான இடங்களுக்கு மீண்டும் செல்லணும்! ரொம்ப நாளாச்சு இரண்டு அருமை நண்பர்களைப் பாத்து!

1. கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத்து இருக்கை சென்று, பொற்பதம் பணிய வேண்டும். அப்பன் தும்பிக்கையானிடம்!

2. குன்றக்குடி அழகனைக் காண நெடு நாள் அவா!

said...

வாங்க சிவமுருகன்.

உங்க 'மீனாட்சியம்மன் கோயில்' பதிவுகளும் படங்களும் அப்படி
மறக்கக்கூடிய விஷயங்களா என்ன?

உங்களுக்குச் சின்ன வயசு. இன்னும்நாள் இருக்கே. நிதானமாப் பாருங்க.
கொடுப்பனை இருந்தாப் போதும். அதுதான் வேணும், இல்லையா?

said...

வாத்தியார் ஐயா,

நானும் நம்ம கே.ஆர். எஸ்' கூடவே வந்துறலாமுன்னு இருக்கேன்.
அதென்ன குன்றக்குடி அழகன்? எங்கே இருக்கார் இவர்?

என்னுடைய ஃபேவரிட் உங்க பட்டியலில் 17 & 18. என்னதான் சினிமாக்களில்
பார்த்தாலும் நேரில் பார்க்கற மாதிரி வருமா?
பழங்கால விஷயங்கள்ன்னாலே எனக்கு அப்படி ஒரு 'ஆசை'

said...

ஆகா வாருங்கள் சகோதரி!

வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதரை அனைவருக்கும் தெரியும்.

அதே போல அவர் பிறந்த மண்ணில் சிறு குன்றின்மேல் கோவில் கொண்டுள்ள குன்றக்குடி முருகனையும் அனைவரும் அறிவார்களே சகோதரி.

குன்றக்குடி அடிகளார் என்ற பெரும் தமிழ் ஞானி வாழ்ந்த ஆசிரமும் அவ்வூரில்தான் இருக்கிறது. அங்கேயுள்ள அவரது சீடர்களும் நிறையத் தமிழ்த் தொண்டு செய்து வருகின்றார்கள்!

அந்தக் கொவிலில் முழுவதும் வைரம் மற்றும் அறிய ரத்தினக் கற்களாலான வைர வேல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு விலை மதிப்பில்லை - ஒரு பகதர் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உபயமாக செய்து கொடுத்தது.

விழாக்காலங்களில் குன்றக்குடி அழகன் ( அழகன் என்றாலும் முருகன் என்றுதான் பொருள்படும்) அந்த வேலோடு பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

பார்ப்பவர்கள் நெகிழ்ந்து விடுவார்கள்.

ஒரு விசேசம் அந்தக் கோவில் எங்கள் ஊரிலிருந்து (தேவகோட்டை) 25 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது

said...

Kunnakkudi Temple

Significance: Kunnakkudi is noted for its beautiful hill temple dedicated to Shanmuganathar. The name Kunnakudi is derived from the sacred Kunru(hill) housing the temple. Kunnakkudi is also known as Mayuragiri, Arasavanam and Mayuranagaram.

Kunnakudi is located at a distance of 14 kms from Karaikudi. Located in the vicinity is the Tevara stalam Thiruppattur and the famous Karpagavinayakar Temple at Pillayarpatti. This temple has been revered by the Thirupugazh hymns of Arunagirinathar.

Legends: Legend has it that Vishnu and Bhrama once paid a visit to Skanda - at which time, the peacock mount of Skanda behaved with arrogance towards the guests. Skanda cursed the peacock to turn into stone. This peacock manifested itself as a hill and carried out penances towards Skanda, after which it was restored to its original form. Part of the rock is said to remain as Mayuragiri or Kunnakkudi, enshrining Skanda.

The Togaiyadi Vinayakar shrine is located at the foot of the hill. A flight of steps leads to the top of the hill. There is a shrine to Idumban enroute to the hill temple. The Kunnakkudi temple was built by the Marudu brothers of this area (Sivaganga Samastaanam), who are also associated with the major Shivastalams in this area.

Deities: The presiding deity is the six faced Shanmugar mounted on his peacock flanked by Valli and Deivayanai. The sanctum faces the east.

To the south of the sanctum is the impressive Alankara mandapam enshrining the festival image of Shanmugar. There are also shrines to Vinayakar, Kuzhandai Vadivelar, Meenakshi Sundareswarar, Dakshinamurthy, Natarajar, Chandeswarar and the Navagrahams. Images of Veerabahu and idumban are also seen at this temple. Much of this is a rock cut temple.
There is a cave temple dedicated to Shiva with a 5 tiered Gopuram at the foot of the hill. This cave temple is of great archeological significance. There are three caves here, dating back to the 8th century CE. There are three caves here. The first enshrines a Shivalingam. One of the walls bears a sculptured image of Vishnu, while the other bears an image of Lingapurnadeva, being worshipped by Bhrama (with a miniature swan above him) and a four armed Vishnu bearing a conch and discus. Also carved here are images of Durga and Harihara bearing attributes of both Shiva and Vishnu (as in Pillayarpatti). There is also a brilliant sculpture of Nataraja in this cave temple in addition to image of Vinayaka and Subramanya.

Festivals: Six worship services are offered each day here. The annual festivals are celebrated during Thaipoosam and PanguniUttiram. Many devotees circumambulate the hill during these occasions. Mondays, in the month of Karthigai are considered sacred here.
----------------------------
Text taken from a web site
SP.VR.Subbiah

said...

//வாத்தியார் ஐயா! உங்க மாணவர்கள் மனச நல்லாத் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க! திருமலையும், அரங்கமும், வில்லிபுத்தூரும் முடிந்த பின்னர் நேரா உங்க ஊருக்கு/வீட்டுக்கு ஓடியாந்துடறேன், பிரசாதத்தோட!//

ஆகா வாருங்கள்; உங்கள் வரவு நல்வரவாகுக!
உங்கள் பெயரில் கண்ணனும் இருக்கிறார், சங்கரனும் இருக்கிறார்
நானும் சந்தித்துப்பேச ஆவலாக உள்ளேன்!

said...

நம்ம மதிப்பெண் 27. நான் சேர்க்க விரும்பும் சில இடங்கள்:
1.டாப் ஸ்லிப், ஆனைமலை
2.முண்டன் துறை வனசரகம்
3.புதுச்சேரிகடற்கரை
4. ஹோகெனெக்கல் அருவி

said...

நமக்கு மார்க்கு கம்மி தான்! ஆமா இன்னைக்கு AIDS விழிப்பு நாளுன்னு பதிவு போட்டா ஏன் வர்ல்ல நீங்க!

said...

என்னங்க மணியன், 27 ஆஆஆஆ?

நீங்க சேர்க்கச் சொன்ன இடங்களும் அருமையானவைகள்தான். இதுலே
புதுச்சேரி கடற்கரை மட்டும்தான் பார்த்துருக்கேன்.

said...

உதயகுமார்,

கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலைகளிலே மூழ்கிட்டேன். அதான் 'மணத்தில்' மேயப்
பிந்திப்போச்சு.

said...

சின்ன வயசில் போனதாகக் கேள்விப்பட்டவற்றையும் சேர்த்தால்தான் 13 வருகிறது. எல்லாவற்றையும் ஒரு முறை பட்டியலுடன் சுற்றிப் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

வாங்க சிவகுமார்.

//சின்ன வயசில் போனதாகக் கேள்விப்பட்டவற்றையும்
சேர்த்தால்தான் 13 வருகிறது.//

இதெல்லாம் கணக்குலே சேருதா? :-)))))