'ஹைட் பார்க்' இல்லாத வெள்ளைக்கார நாடே இருக்காதோ? பிரிட்டிஷ் மக்கள்ஸ் எங்கெல்லாம்இடம் புடிக்கிறாங்களோ அங்கெல்லாம் அவுங்களுக்குப் பழக்கமான பேர்களே வச்சுக்குவாங்க.அப்பத்தானே 'ஹோம்சிக்' வராம போற இடத்துலேயே வேர் ஊணி 'குஜாலா' இருக்கலாம்?
விதிகளுக்குட்பட்டு இங்கேயும் ஒரு ஹைட் பார்க். அதையொட்டி ஒரு பழங்காலக் கட்டிடம்.சரித்திர முக்கியத்துவம் வாய்ஞ்சதுன்றது அதை வெளியே இருந்து பார்த்தாலெ தெரியுது.ஆஸ்த்ராலியன் ம்யூஸியம். போய்ப் பார்க்கலாமுன்னு கிளம்புனேன். எல்லாம் மூணு தெரு தள்ளித்தான் இருக்கு. இந்த மியூஸியத்துக்கு அந்தப் பக்கம் ஒரு எட்டு வச்சா செயிண்ட் மேரி தேவாலயம். அதை ஒட்டியே பொட்டானிக்கல் கார்டன். இது ரொம்பப் பெருசு. இடது பக்கம் நடந்துக்கிட்டே இருங்க, ஓபெரா ஹவுஸ்க்குப் போயிருவீங்க.
எப்பவுமே 'கோணல்பாதைப் போய்த்தான் வழக்கம்'ன்றதாலே கடைகளுக்குள்ளெ நோட்டம் விட்டுக்கிட்டுப் போனப்ப, ஒரு பழக்கடை. அய்யோடா.... குண்டுகுண்டுடாய் ஞானப்பழங்கள். 'முருகா, நீ கோச்சுக்கிட்டுப்போய் மலைமேலே நின்னுட்டியே, இங்கே வந்து பார் முருகா. உனக்கொண்ணு, எனக்கொண்ணு, இன்னும் நம்மவலைஞர்கள் எல்லாருக்கும் ஒவ்வொண்ணு'ன்னு குவிஞ்சு கிடக்கு. ஒண்ணு வாங்குனா 4.50, ரெண்டுன்னா 8.முக்காக்கிலோ இருக்கும் போல. தூக்கிட்டு அலைய வேணாம், திரும்பிப் போகும்போது வாங்கிக்கலாம். ஜிகேவின் பரம்பரைக்கு ஒரு 'குட் மார்னிங்' சொல்லிட்டு எலிஸபெத் தெருவைக் கடந்து ஹைடு பார்க்குலே தடம் பதிச்சேன்.
இந்த மாசம் அங்கே சிட்னியிலே 'சாப்பாட்டு மாசமாம்'. விழா நடக்குது' என்னுடைய பயணம், ஆஸிகளுக்கு இவ்வளோ முக்கியத்துவம் வாய்ந்ததா? அடடா......... என்ன பெருந்தன்மை. ஹைடு பார்க்லே நிறைய நாற்காலிகளைப் போட்டு வச்சுருக்கு. அங்கங்கெ கூடாரம். அக்டோபர் மாசம் முழுசும் தினம் சாயந்திரம் சாப்பாட்டு விழா. நூடுல்ஸ்தான் முக்கிய உணவுன்னு தெரிஞ்சதும் நான் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்.
அங்கே இருக்கும் நீர் ஊற்றுலே சிமெண்டுச் சிற்பங்கள். ஐரோப்பா ஞாபகம். கூடவே ஆமைகள். ஆமா.... அப்பப் பழமொழி பொய்யா? எதோ கான்ஃபரன்ஸ்க்கு வந்த ஜப்பானியர்கள் கூட்டம் சிற்பங்கள் முன்னாலே நின்னு படம் எடுத்துத் தள்றாங்க.அப்ப நம்ம கை ச்சும்மா இருக்குமா? க்ளிக் கிளிக் க்ளிக்.....
அண்டங்காக்கா ஒண்ணு ஓரப்பார்வை பார்த்துக்கிட்டே வந்து முன்னாலே உக்காந்துச்சு. நானோ காக்கா இல்லாத ஊர்க்காரி.காக்கா பிடிக்கலாமுன்னு ஃபோகஸ் பண்ணறென், பறந்து போச்சு(-: வலையில் முகம் காட்ட விருப்பம் இல்லையாம்.ஐபிஸ்ன்னு ஒரு பறவை. கூட்டமா நின்னு அங்கே இருக்கற குப்பைத் தொட்டிகளைத் திறக்க முயற்சி செய்யுதுங்க.நாரைப்போல நீண்ட மூக்கு, அதுவும் மூக்கு மட்டும் கறுப்புக்கலர். அழுக்கு வெள்ளை உடம்பு, வால் பக்கம் ஒரு தீற்றல் கறுப்பு.அழகே இல்லாத பறவையாம். சல்லியமாம். ஸ்கேவஞ்சராம். ஏகப்பட்டக் கெட்ட பேரைச் சம்பாரிச்சு வச்சுருக்கு.
தனியா வெக்குவெக்குன்னு ம்யூஸியம் போகப் பேஜாரா இருந்துச்சு. 175 வருச சேகரிப்பு உள்ளெ இருக்கு. அப்புறம் ஆவட்டுமுன்னு பார்க் தெருவழியா வந்து 'டேவிட் ஜோன்ஸ்' டிப்பார்ட்மெண்ட்(டல்) ஸ்டோருக்குள்ளெ நுழைஞ்சேன்.மார்கெட் தெருவுக்குக் குறுக்காலே பாலம் போட்டு ரெண்டு கரையையும் இணைச்சிருக்கு. 'பயந்துறாதீங்க, இந்தக் கடையிலே எல்லாமே விலை உயர்ந்தே இருக்குமுன்னு தப்புக் கணக்குப் போட்டுறாதீங்கப்பா. எல்லாம் மலிவுதான்'ன்னு அங்கங்கே அறிவிப்பு வேற வச்சுருக்கு. அடுக்கு மாடிகள், பலதரப்பட்ட மக்களுக்கான விலைகள், மாவுக்கேத்த பணியாரங்கள். கொட்டிக்கிடக்கு.
ஃபர்னிச்சர் பிரிவு நல்லாவெ இருக்கு. அங்கே காலநிலை நல்லா இருக்கறதாலெ அதுக்கேத்தமாதிரி வகைகள். இங்கே நியூஸியில் குளிருக்கு எப்பவும் ஹீட்டர்கள் போட்டு வைக்கறதாலே சில மரச்சாமான்கள் எல்லாம் காலப்போக்கில் வளைஞ்சும், நெளிஞ்சும் கோணலா ஆயிருதுன்னு சில குறிப்பிட்ட மரங்களை மட்டுமே பயன்படுத்தறாங்க. ஒவ்வொரு மாடியா விண்டோ ஷாப்பிங் செஞ்சுக்கிட்டேஅடுக்களைச் சாமான்களுக்கு வந்து சேர்ந்தேன். ஒவ்வொருத்தருக்கு ஒரு பலகீனம்(???) இருக்காமே. எனக்கு இந்தக்கிச்சன் காட்ஜெட் பலவீனம் ரொம்பவே கூடுதல். 'எனக்கு நல்லா சமைக்க வராத காரணம், பொருத்தமான உபகரணங்கள் இல்லாததாலே'(!!!)ன்னு தீர்மானமா நம்புற ஜீவன் நான். தேடுனப்பக் கிடைச்சது வெங்காயம் வெட்டி. என்னா பெரிய வெங்காயம்?
விஷயம் புரியாமப் பேசாதீங்க. எனக்கா இதையெல்லாம் வாங்குறேன்? சம்பாரிச்சுப்போடுற புருஷன் கண் கலங்குனா நல்லாவா இருக்கு? முந்தி ஒருக்கா இப்படி ஆஸியிலே, வேறொரு ஊர்லே வெங்காயத்தை நழுவாமப் பிடிச்சு வெட்டஒரு சாதனம் பார்த்தேன். சுத்திப்பார்த்துட்டுத் திரும்ப இதேவழியா வரும்போது வாங்கிக்கலாமுன்னு நினைச்சு, தவறிப்போச்சு.அதையே இங்கே நம்மூர்லெ தேடித்தேடி ஒரு கடையிலே பார்த்து வாங்கிட்டொம்லே. உள்ளங்கை அகல மரக்கட்டை.அதுலே நீண்ட மெலிசான ஆணிகளைப்போல நிறையப் பதிச்சிருக்கும். வெங்காயத்தை ரெண்டா வெட்டிக்கிட்டு, அதைக் கவுத்துப்போட்டு இந்த ஆணிகளை அதுக்குள்ளே குத்தி இறக்கிக்கணும். அப்புறம் கத்தியாலே இந்த ஆணிகளுக்குள்ளேஇடைவெளியில் வெட்டினா பொடியா நறுக்கலாம். ( ஆமா.. இப்ப இது எங்கே இருக்குன்னு தெரியலை. யூசரைக் கேக்கணும்)
ஸீத்ரூ ஜார்லே நடுவிலே மூணு ப்ளேடுகள் வேற வேற உயரத்துலே இருக்கற வெங்காயம் ச்சோப்பர்கூட வாங்கித் தந்துருக்கேன்.அதோட தலை( மூடி)யிலே இருக்கறக் கைப்பிடியாலெ சுத்தணும். மேனுவல் ஆப்பரேஷன். புஜங்களுக்கு வலு உண்டாகும். இதெல்லாம் இருக்குன்னாலும், சதுரம்சதுரமா வெட்டுற இந்த சாதனத்தைப் பார்த்துட்டும் வாங்காமப் போனா எப்படி? செவ்வகமானபெட்டி. ஸீத்ரூ ப்ளாஸ்டிக். நல்ல கெட்டியான மூடி. மூடிக்கு உள்புறமா சதுரமா கட்டங்கட்டமா மேடுகள். பெட்டியின் நடுவிலே ஒரு தட்டு. அதுலெ ச்சின்னச்சின்ன சதுரமா 7x7செ.மீ அளவுலே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேடுங்க. வெங்காயத்தை ரெண்டா வெட்டிட்டு, அந்த ப்ளேடு மேலே கவுத்து வச்சுரணும். பெட்டியோட மூடியை இப்ப 'பச்சக்'னு மூடணும். குட்டிக்குட்டியா சதுரம் சதுரமாவெங்காயம் கீழே பெட்டியின் அடியிலே விழுது. எல்லா விவரமும் அட்டையிலேயே விலாவரியா இருக்கு. சுத்தம் செய்ய ஒரு சீப்புகூடவச்சுருக்காங்க. வெங்காயத்துலே எவ்வளோ விஷயம் இருக்கு பாருங்க! (வீட்டுக்கு வந்தப்புறம் நல்லா வெட்டுச்சான்னு யாரும் கேக்க வேணாம், ப்ளீஸ்)
கடையின் அடித்தளத்துக்கு வந்து சேர்ந்தேன். David Jones Food Hall. நிறைய வகைகள். மக்கள்ஸ் வாங்கிக்கிட்டு வெளியே போய் சாப்புடறாங்க. நடுநாயகமா இங்கேயும் ஒரு பழக்கடை. ஞானப்பழம் கொட்டி வச்சுருக்கு. மூணு வாங்குனா பத்து டாலர்தான். வாங்கிக்கிட்டு வாழைப்பழத்தை நோட்டம் விட்டால் 17$ கிலோ. என்ன ஆச்சு இதுக்கு?
நியூஸிக்கு ஞானப்பழம் மெக்ஸிகோலே இருந்து வருது. சரியாப் பழுக்காத, புளிப்பான பழம்தான் கிடைக்கும். சின்னதா வேற இருக்கும். விலையும் மலிவு இல்லை. வாழையோ ஈக்வெடர். எப்பவுமே அதன் தலை எழுத்து 2.69. சேல் வரும்போது இன்னும்குறைஞ்ச விலைதான். ஆஸிக்கும் வாழைக்கும் என்னவோ இருக்கு. அதைத் தெரிஞ்சுக்கறவரை மன சமாதானம் இல்லை.
கனத்தைத் தூக்கிக்கிட்டு அலையவேணாமுன்னு அறைக்கு வந்து பையைப் போட்டுட்டு மறுபடி வெளியே போய்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு மணி ஒண்ணு ஆகப்போகுதேன்னு 'தலை கொடுத்தானை'ப் பார்க்கப் போனேன். மினி வலைப்பதிவாளர் சந்திப்பு நடக்கப் போகுதுன்னு அப்ப எனக்குத் தெரியாது.
கடிகாரத்துக்கு எதிர்ப்பக்கம் 'மழை'! முதல்முறையா 'காட்சி' பார்க்க வந்துட்டு காலக் கிரமப்படிப் பார்க்காம எதிர்வரிசையிலேநின்னா? நானே அந்தப் பக்கம் போயிக் குரல் கொடுத்தேன். 'விக்டோரியாக் கிராஸ்' யார்யாருக்குக் கொடுத்தாங்கன்ற விவரத்தை ஊன்றிப் பார்க்கறாங்களாம்:-)))) சாப்பாடு ஆச்சாம். அங்கே இருந்த ஒரு கடையிலே ஹாட் சாக்லெட்குடிக்கிற சாக்குலெ உக்கார்ந்து கொஞ்ச நேரம் அளந்தோம். வலைஞர்களில் பெண்கள் எத்தனை பேர்? ரெண்டு மணிக்கு லஞ்சுமுடிஞ்சு வேலைக்கு(???) போணுமாம். இன்னொரு நடை அவுங்ககூடவே போய், அவுங்களை ஆஃபீஸ்லே விட்டுட்டு,(மறுநாள் லஞ்ச் டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. அதே இடம்( தலைதான்) அதே ஒரு மணி.) திரும்புனேன்.
ப்ளாட்பாரத்துலே ஒரு மர ஸ்டேண்டை வச்சு லஞ்ச்க்கு பழ விற்பனை நடக்குது.தக்காளி ஒண்ணு 1 டாலர். இன்னும் சில பழங்கள். அங்கேயும் வாழைப்பழம் மட்டும் ஒண்ணு, ரெண்டு டாலர்.(-:என்னவோ இருக்கு.
யோசனையோட நடந்துக்கிட்டே இருக்கேன்,திடீர்னு பார்த்தா இலவசக் கொத்தனார் . Museum of Freemasonary. பேருக்குத் தகுந்தாப்போல அனுமதியும் இலவசம்தான். இந்த ஊர்லெ எங்கே பார்த்தாலும் ம்யூஸியமே ம்யூஸியம். இன்னொரு பக்கமா இதுவரை போகாத தெருவை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே போய் மறுபடி பார்க் ப்ளாஸாலெ ஒரு ரவுண்டு. எது எடுத்தாலும் ரெண்டு டாலர் மாதிரி ஒரு கடை. ஹிந்திப் பாட்டு வேற முழங்குது. ஒரே ஜில்லாலி பில்லாலி ரகங்கள். ஒரு இண்ட்டர்நெட்கஃபே நல்லா இருந்துச்சு. வட்டவட்டமான கண்ணாடி மேஜை. அடித்தட்டுலே லேப் டாப். காபி, டீ எதுவும் தவறிக் கொட்டினாலும் பிரச்சனை இருக்காது. நீட் ஐடியா. இதுவரைக்கும் நான் இதைப் பார்த்ததில்லை. பத்து நிமிஷத்துக்கு ரெண்டரை, அரை மணிக்குஅஞ்சு, ஒரு மணிக்கு ஏழரைன்னு விலை விவரம். ப்ராட் பேண்டாம்.
பகல் மூணு மணிக்கு இன்னொரு தோழியுடனான சந்திப்பு. வீட்டு, குடும்ப விஷயங்கள்ன்னு மூணு மணி நேரம்ஓடியே போச்சு. ச்சைனீஸ் கார்டன் போற திட்டம் இன்னிக்கும் முடியலை. அறைக்குத் திரும்புனா, இவர் ராத்திரி சாப்புடறதுக்கு இடங்களை நெட்லே தேடிக்கிட்டு இருக்கார். மலபார் குஸீன். சவுத் இண்டியன் சாப்பாடு. அது இருக்கற இடம்தான் கொஞ்சம் யோசனை. விக்டோரியாத் தெரு,டார்லிங்ஹர்ஸ்ட். 'கோக் ஸைன்' லே இருந்து வலப்பக்கம் திரும்பணும். இந்த 'கோகா கோலா' விளம்பரம் ரொம்பப் பெருசு. 'பலான பலான' விஷயங்கள்நிறைஞ்ச தெரு. உள்ளூர் ஆளுங்களுக்குத் தெரியும். இப்ப அங்கே எல்லாம் 'க்ளீன்' செஞ்சுட்டாங்கன்னு கேள்வி.துணிஞ்சு போனோம்.
உள்ளே அலங்காரம் பரவாயில்லை. முழுத் தென்னை மரமும், வாழையும் இருந்துச்சு. கூடவே யானைகளும். இருட்டுன்னா அப்படி ஒரு இருட்டு. கருநீலத்துலே ஆரஞ்சு எழுத்து மெனு கார்ட், ரொம்ப சுத்தம். பார்கிட்டேமட்டும் கொஞ்சம் கூடுதல் வெளிச்சம். சுவத்துலே ஒரு 42 இஞ்ச் ப்ளாஸ்மா டிவி. அதுலெ படம் ஓடுது.மக்கள்'வெறுங்காலிலே' என்னென்னவோ வேலைகள் கட்டடம் கட்டுறதுலே இருந்து, பழுக்கக் காய்ச்சுன இரும்பை சம்மட்டியாலெ அடிக்கிறது வரை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கொதிக்கிற தார் ரோடுலே ரிக்ஷா இழுத்துக்கிட்டு, மாட்டு வண்டி ஓட்டிக்கிட்டுன்னு இண்டியன் ஸீன்கள். 'உலகமக்கள்'ன்னு ஒரு டிவிடியாம்.போச்சுரா, நிம்மதியாச் சாப்புடவும் முடியாது.
அஞ்சு(ம்)வகைத் தோசைகள் கிடைக்குது. பெங்களூர் பொடி தோசைன்னு ஒண்ணு வாங்குனோம். ரசம், சாம்பார், கறிகள்னு ஒரு வெஜிடேரியன் தாலி மீல்ஸ். விலையும் பரவாயில்லை. வெளியே வந்து டாக்ஸி எடுக்க நின்னா, வந்து நின்ன வண்டியிலே இருந்து ரெண்டு குடிமகள்கள். ச்சின்னப் பொண்ணுங்க. தடுமாறிக்கீழே விழறவரைக்கும் ஊத்திக்கிட்டு இருக்காங்க. 'ட்ரைவர் ரொம்ப நல்லவர்'னு எங்களுக்குப் பரிந்துரை வேற. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.சரி. நாம் பொழுதோட 'வீட்டுக்கு'ப்போய் ஞானப்பழம் திங்கணும். தின்னு முடிக்கவேண்டிய கட்டாயம்.
மறுநாள் பொழுது விடிஞ்சப்ப, என் கேள்விக்குப் பதில் கிடைச்சது.
தொடரும்........
Wednesday, November 01, 2006
ஞானப்பழம் (A t d - பகுதி 6)
Posted by துளசி கோபால் at 11/01/2006 08:59:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இப்ப புரிஞ்சுது ஏன் என் சமையல் சுவையாக இல்லை என்று.:-))
பாத்திரம் சரியில்லை!!
ஆஸ்திரேலியாவில் வாழைப்பழம் வியாபாரம் செய்வதற்கு நல்ல இடம் போல..செம லாபம் பண்ணலாம் போல.
நீங்க சொன்ன சீ த்ரு பெட்டியில் வெங்காயம் மாத்திரம் இல்லாமல் பீட் ரூட்டும் அழகாக வெட்டலாம்.இங்கு S$19.90 க்கு கிடைத்தது.
தமிழ்மணத்தில் இல்லை;
தேன்கூட்டில் உண்டு
அது என்ன?
குமார்,
எல்லாம் மேட் இன் ச்சைனா தான்:-))))
உலகம் பூராவும் கிடைக்கும்:-)))
பீட்ரூட்? ஆஹா.... வெட்டிப்பார்த்துருவேன். தேங்க்ஸ்.
வாழைப்பழம் அங்கேயே பயிரிட்டு விக்கணுமாக்கும்:-))))
சிஜி,
விடை: துளசி தளம்.
கிடைச்சவரை லாபமுன்னு இருக்காம, என்ன விடுகதையா? :-)))
இன்று இந்தியாவில்தான் துளசிதளம் தமிழ்மணத்தில் வெளியீடு போல. அமெரிக்கர்களைக் கானோமே!
ஆஸியில் ஒருநாளுக்கு நிறைய நடந்திருக்கிறது; உங்கள் பதிவும் நீளமாக போய்விட்டது. ஐபிஸ் பார்க்க அழகாகத் தானே இருக்கிறது.
இந்த சமையல் சாதனங்கள் எபோதுமே விற்பவருக்கு அழகாக வேலை செய்யும், வீட்டில் வந்தால் நேராக பரணுக்குத் தான் :(
ஆஸிக்கு வாழைப்பழ ஏற்றுமதி வியாபாரத்தில் இறங்கினால் நல்ல இலாபம் என்றுச் சொல்லுங்கள் !அடுத்த பதிவில் தெரியுமா?
வாங்க மணியன்.
இந்தியாவுலேயும் தெரியலைன்னு நண்பர் சொல்லிக்கிட்டு இருந்தாரே.
பதிவு நீளத்துக்குக் காரணமே இந்த 'வெங்காயம்'தான்:-))))
இப்போ ஆப்பிள் கட் செய்யற ஹாண்ட் மஷின் மாதிரி ஆனியன்
கட்டரும் இருக்கெ.
அழகா தாமரை மாதிரியே
விரியும்.
பொடி போட்ட தோசையா.
இதுக்காகவே நான் அங்கே வந்து இருக்கணும்.
//ஆஸிக்கு வாழைப்பழ ஏற்றுமதி வியாபாரத்தில் இறங்கினால் நல்ல இலாபம் என்றுச் சொல்லுங்கள//
அது மட்டும் முடியாது மணியன். ஏனென்றால் உள்ளூர் உற்பத்திதான் விற்கணும். இல்லேன்னா இந்த பஞ்ச காலத்துலே (அதாங்க வா.பழப் பஞ்சம்) தென்னமெரிக்க நாட்டிலேருந்து இறக்கிருக்க மாட்டாங்க!! விவசாயிகள் இன்னும் நட்டப்படக்கூடாதுன்றதுக்காக. இத்தோட நிறுத்திக்கறேன்..இனிமே அடுத்த பதிவிலே துளசியே சொல்லுவாங்க.
வல்லி,
அழகாத் தாமரை மாதிரி விரிஞ்சா, அதை குழம்புலே எப்படிப்பா போட மனசு வரும்?
'அழுதுகிட்டே' பார்த்துக்கிட்டு இருக்கணுமா? :-)))
ஷ்ரேயா,
உங்க பின்னூட்டத்தைக் கொஞ்ச நேரம் கழிச்சுப்போடறேனே ,ப்ளீஸ்.
நீங்க சொன்ன,அதே விஷயத்தைத்தான் எழுதிக்கிட்டு இருக்கேம்பா.
வணக்கம் துளசிம்மா
வழக்கமா வாழைப்பழம் ஒரு டாலரில் இருந்து கிடைக்கும், ஆனா கடந்த வருஷம் குயுன்ஸ்லேந்து மானிலத்தை தாக்கிய நமீதா (அதாங்க சூறாவளி) எல்லா வாழைமரங்களையும் புரட்டிப் போட்டுடுச்சு. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் இந்த நாட்டு அரசின் தன்மானம் இடம் கொடுக்கலை.
மத்தப்படி நீங்க சிட்னி வந்ததற்கும் வாழைபழ விலையேற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லே:-)
//இன்று இந்தியாவில்தான் துளசிதளம் தமிழ்மணத்தில் வெளியீடு போல. அமெரிக்கர்களைக் கானோமே!//
இதோ ஓடியாந்துட்டோம் டீச்சர்;
சாரி டீச்சர்; வர வழியில ஒரே ஹாலோவீன் விழாப் பேய்களா இருந்துச்சா; அதாம் தப்பிச்சு வர கொஞ்சம் டைம் ஆயிடுச்சு. அதுகளையும் பள்ளிக்கூடம் வரச் சொல்லிக் கூப்பிட்டோம்; அதுங்க தனியா வந்து உங்க கிட்ட பாடம் கேட்குங்களாம் :-)
என்னாது
சாப்பாட்டு மாசமா?...வாரம் இல்லையா? மாசம் ஃபுல்லா சாப்பாடா? விரத மாசம்ன்னு ஏதாச்சும் இருக்கா? முன்னாடியே சொன்னீங்கணா, அந்த மாசம் மட்டும் உங்க வீட்டுக்கு வருவதைத் தள்ளிப் போட்டுடுவோம்!
//விஷயம் புரியாமப் பேசாதீங்க. எனக்கா இதையெல்லாம் வாங்குறேன்? சம்பாரிச்சுப்போடுற புருஷன் கண் கலங்குனா நல்லாவா இருக்கு? //
அடடா; உங்க பரந்த மனசைப் பாத்து ரொம்பவே மலர்ந்தோம் டீச்சர்! கண்கலங்காம பாத்துக்குங்கன்னு சொல்றது இது தாம் போல :-) வெங்காயமே, நீ வாழ்க!!
ஆமாம், நானும் பாக்கறேன், ஃபுட் கோர்ட், பழக்கடை, மரச்சாமான் கடைன்னு எல்லா இடமும் போறீங்க! அந்த மியூசியம் மட்டும் ஏன் போக மாட்டேங்கறீங்க? Excursionஇல் ஸ்கூல் பசங்க நாங்க மட்டும் போகணூமாக்கும்? :-)
டீச்சர் நம்ம ஃஹாலோவீன் பதிவுல அனாமிகா பூசணிக்கும் பரங்கிக்கும் வித்தியாசம் கேட்டு ரொம்பவே குரல் குடுக்குறாங்க; ஒரு எட்டு வந்து பூசணிக்காய உடைச்சுட்டு போனீங்கணா புண்ணியாமாப் போகும்; :-)
அதானே இந்தா மாசம் அங்கே உணவு மாசம்ன்னு வேற சொல்லிட்டீங்க! நீங்களே சொல்லாட்டா நான் பூசணிக்கா சங்கத் தலைவராமே அவர்கிட்ட தான் கேக்கோணும்! நமக்கு இந்த சங்கம் சிங்கம்ன்னாலே பயம் டீச்சர் :-)
பரவாயில்லையே, சிட்னி போய் ஹைட் பார்க் பார்த்தாச்சா, அந்த பக்கத்து ரோட்ல இருக்கும் கடை வீதியை பிராக்கு பாத்துகிட்டு நடந்தே அந்த ஃபெர்ரி ஹார்பருக்கருக்கு போறது ஒரு சுகம் தான்! உங்க பதிவு படிச்சோன் நான் சிட்னி போன ஞாபகம் வந்திடுச்சு!
KRS,
வாங்க. என்ன இப்படிப் பயமுறுத்துறீங்க....
வகுப்புலே 'இன்னும்' பேய்களா? ( நான் ஹாலோவீன் பேய்களைச் சொன்னேன்ப்பா)
அட என்னப்பா மியூசியம்? அதுதானே நம்ம 'செத்த காலேஜ்'?:-))))
அவுங்களுக்கு டைனோசார்ன்னா இங்கே எங்களுக்குன்னே ஒரு 'மம்மி' இருக்கு தெரியுமா?
அதை சில வருசத்துக்கு முன்னே எக்ஸ்ரே/ஸ்கேன் எல்லாம் செஞ்சு அதோட வயசைச் சொன்னாங்க.
நம்ம டூட்டன் காமன் இருக்காரே, அவருடைய 'மம்மி'யோ என்னவோ?:-))))
ஆமாம், இப்ப எதுக்கு பரங்கியா பூசணியான்னு குழப்பம்?
எதோ ஒண்ணு. 'பெயருலே என்ன இருக்கு'?
பழைய காலத்துக்கதைகளிலே அந்த மாமா/சித்தப்பா பரங்கிப்பழம்போல இருந்தாருன்னு வரும்.
இப்ப அதுக்கு அர்த்தம் யாராவது சொல்லுங்க.
அதுக்கப்புறம் பரங்கியா பூசணியான்னு பார்த்துறலாம் ஒரு கை.
ஆமா, வெள்ளைக்காரர்களை பற/பரங்கியர்கள்ன்னு ஏன் சொன்னாங்களாம்?
ஆமாம்ப்பா... இங்கே உணவு 'மாசமா' இருந்துச்சு:-))))
ஷ்ரேயா & கானா பிரபா,
உங்க ரெண்டு பேருடைய பின்னூட்டங்களையும் கொஞ்ச நேரம் நிறுத்தி வச்சதுக்கு மன்னிக்கணும்.
பூனை சாக்குலே இருந்து வந்துருமேன்னுதான்.............
உதயகுமார்,
வாங்க. நலமா?
மேன்லி, இன்னும் மத்த இடங்களுக்கெல்லாம் முந்தி போன பயணங்களிலே படகுலே போயிட்டு வந்தாச்சு.
பகுதி பகுதியா பல இடங்களிலும் பலமுறை மேய்ஞ்சாச்சு.இங்கே 19 வருசமா இருக்கோம். பக்கத்தூருக்குப்
போகாம இருக்க முடியுதா?
அதான் இந்த முறை வெறும் சிட்டி செண்ட்டர்.
மறுநாள் பொழுது விடிஞ்சப்ப, என் கேள்விக்குப் பதில் கிடைச்சது.
தொடரும்........//
அதென்ன நீங்களும் சஸ்பென்ஸ் வைக்க ஆரம்பிச்சிட்டீங்க? எல்லாம் பழக்க தோஷம், என்ன சொல்றீங்க?
அல்லது தி.பா தொடரின் தாக்கம்:)
// அதுலெ ச்சின்னச்சின்ன சதுரமா 7x7செ.மீ அளவுலே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேடுங்க. //
உங்க ஊர்ல 7 x 7 செ.மீ - ச்சின்னச் சின்ன சதுரமா ? :-(((
டிபிஆர்ஜோ,
சரியாச் சொன்னீங்க.
பூவோடு சேர்ந்த நார் மணக்குதுங்க:-)))
அதான் 200க்கு மேலெ படிச்சோம்லே:-)))
லதா,
என்னப்பா இப்படி ஒரு கேள்வி? :-)))
7x7 அளவுக்குள்ள பெரிய சதுரத்திலே
சின்னச் சின்னகுட்டிச்சதுரங்கள் 14 x 14 இருக்குது.
'எண்ண' வச்சுட்டீங்க பாருங்க.
துளசீ
நீ ஏனிப்படி
ஆஸ்திரேலியா சென்று
ஞானப்பழம் உண்டாய்
பழம் நீயம்மா
ஞானப் பழம் நீயம்மா
தமிழ் மணப் பழம் நீயம்மா
சபை தன்னில்
தமிழ்மணச் சபை தன்னில்
உறவோடு பொருள் கூறும்
பழம் நீயம்மா ஞானப் பழம் நீயம்மா!
வெட்டிடவும் கத்தி
அதில் போகும் துட்டு
அறியாத துளசியா நீ
எத்தனையே பெட்டி
வாங்கினாலும் வெட்டி
தெரியாத துளசியா நீ
ஏறு பிளேன் ஏறு
நீயுசிலாந்தை நாடு
ஏற்றுக் கொள்ளும்
கூட்டிச் செல்வார்
கோபாலுடன் ஓடி வா நீ!!!!!!!!!!!!!!!!!!!
அடடா.... அவ்வையார் எல்லாம் நம்ம ப்ளொக் படிக்க வர்றாங்களா?
முருகா..... என்ன தவம் செய்தனை துளசி.
வாங்க ராகவன். பாட்டு அருமை.
நல்லா இரு(ங்க) முருகா!
துளசி
நீங்க வந்த நேரம் நம்ம இடத்தில்வடக்கே புயல் வந்துதான் வாழை எல்லாம் அழிஞ்சு போச்சு. அதால தான் உந்த $17 அனியாய விலை போனது.
இப்போ கிலோ $2 தான். லேடீஸ்ஃபிங்கர் அதான் அந்த இதரைப் பழம்கூட $2 தான்.
நல்லயிருக்குங்க உங்க சிட்னி பயணக் கட்டுரை.
நன்றி
Post a Comment