போயிட்டுவந்து 'அளக்கறது' அவுங்கவுங்க இஷ்டம். நான் சொல்லவந்தது என்னன்னா....? முன்னேற்பாடு. அது தெரியாதாங்காட்டியும்? எந்த ஊருக்கு/நாட்டுக்குன்னு முடிவுசெய்யணும், அந்த ஊர் நிலவரம் தெரிஞ்சுக்க எதாவது புத்தகம் கிடைச்சா( லைப்ரரிபின்னே என்னாத்துக்கு இருக்கு?) ரெண்டு மாசத்துக்கு அதைக் காவிக்கிட்டு வந்துரணும்.ஒரு மாசம்தான் வச்சுக்க முடியுமா? கவலை இல்லை. வீட்டுலே இருக்க மத்தவங்க பேருலேதிரும்பக் கொண்டு வந்துருங்க. முக்கியமா அந்த இடங்களிலே யாராவது வலைப்பதிவர்கள்இருக்காங்களான்னு பார்த்துக்குங்க. இவ்வளவு தூரம் போறது போறீங்க, அப்படியே ஒருமாநாட்டை நடத்திறலாமுல்லே?:-)
அதுக்கப்புறம் ட்ராவல் ஏஜண்டைப் பார்த்தமா, பட்ஜெட் போட்டமா, கிளம்புனமான்னு இருப்பீங்க.பாஸ்போர்ட், டிக்கெட், க்ரெடிட் கார்டு, ட்ரவலர்ஸ் செக், கொஞ்சம் காசு. எல்லாம் எடுத்து வச்சாச்சு.வீட்டுலே கூட்டுக்குடும்பம்( இந்தக் காலத்துலேயா? அட!) இருந்தாக் கவலையே இல்லை. கால்லேசெருப்பை மாட்டுனமா, பொட்டியைத் தூக்குனமான்னு போய்க்கிட்டே இருக்கலாம். அப்படி இல்லாம..
தனிக்குடித்தனமா? ப்ளேன்லே ஏறி உக்காந்தபிறகு 'அடடா... கேஸ் சிலிண்டரை மூடுனமா? அடுக்களைப் பக்கம் ஜன்னல் திறந்தேனே, திருப்பி மூடுனேனா? .............' இப்படி எதாவது ஒண்ணு மண்டையைக் குடைஞ்சுரும்.
இப்படித்தான் ஒரு சமயம் 44 மைலுக்கு அந்தப்பக்கம் இருக்கற ஒரு இடத்துக்கு அவசரமாப் போகவேண்டியதாப் போச்சு.கடையை மூடுறதுக்குள்ளே போய் ,'தமிழ்ப்படம் கேஸட்' வாங்கிக்கிட்டு வரணும்.பாலைக் காய்ச்சிவச்சுட்டுப் போயிரலாம்னு மில்க் குக்கரை அடுப்புலே ஏத்திட்டு, குழந்தையை ரெடிசெஞ்சு வண்டியிலே உக்காரவச்சுட்டு, அப்படியே கிளம்பியாச்சு. படத்தைக் கையிலே வாங்கிக்கிட்டு,மறுபடி வண்டியிலே ஏறும்போதுதான் ஞாபகம் வருது 'ஸ்டவ்வை அணைச்சேனா'ன்னு! அதுவரைக்கும்'சினிமா மோகம்' புடிச்சு ஆட்டிக்கிட்டு இருந்துருக்கு. இவர்கிட்டே சொன்னதும், அடிச்சுவிரட்டிக்கிட்டு வண்டியை ஓட்டுனார்.
'வீடு பத்தி எரிஞ்சுக்கிட்டு இருக்குமோ? வாடகை வீடாச்சே.... ஓனர் என்ன சொல்வார்? எல்லா சாமானும் எரிஞ்சுபோயிருக்குமே(-: நம்ம பாஸ்போர்ட் போயிருச்சுன்னா என்னா செய்யறது? எல்லா சாமான்களிலேடிவியும் அடக்கமாச்சே? அதுவும் போயிருந்தா?பின்ன எதுலே படம் பார்க்கறது? பால் குக்கர் புதுசாச்சே? 'கடவுளே, ஆபத்து இல்லாமக் காப்பாத்திரு. பால்குக்கர் காசை உனக்குத் தரேன்'னு நடுவிலே பேரம் வேற.
வீடு இருக்கும் தெருவுக்குள் திரும்பும்போது மனசு 'திக்திக்'ன்னு இருக்கு. கூட்டமா ஜனங்கள் இருக்குமோ?
அப்படி ஒண்ணும் இல்லையே! எல்லாம் வழக்கம் போல இருக்கு. வண்டியைப் பார்த்ததும் நம்ம நாய்கள் மட்டும் தூக்கத்துலே இருந்து எழுந்து ஓடிவருதுங்க.
ஒரு பயத்தோட கதவைத் திறக்குறோம். லைட் சுவிச்சைப் போடாதீங்கன்னு சொல்(கத்த)றேன். எங்கெங்கோ எப்பெப்பவோ படிச்ச 'விபத்தைத் தவிர்க்க' குறிப்புகள் எல்லாம் கரெக்ட்டா ஞாபகம் வருது. முதல்லே எல்லா கதவு, ஜன்னல்களையும் திறந்து வச்சாச்சு. 'மோப்பம்' புடிச்சா 'கேஸ்' வாசனையைக் காணோம். டார்ச் அடிச்சுப் பார்த்தா, அடுப்புலே பர்னர்நாப் ஆன்லேதான் இருக்கு. பால்குக்கர் மூடியைத் திறந்தா உள்ளெ அசங்காம இருக்கு பால்.
கடவுளின் கருணையே கருணைன்னு நினைச்சுக்கிட்டு, இன்னும் அரைமணி நேரம் போனதும் தமிழ்ப்படம் பார்க்க ஆரம்பிச்சுட்டோம்.( அப்படி ஒரு வெறி! அதான் தமிழ்ப் படங்கள் கிடைக்காம காய்ஞ்சு இருந்தமே!)ஒரு மூணு மணிநேரப் பயணத்துலேயே இந்தக் கூத்து!
எல்லாம் ஒரு கவனக்குறைவுன்னாலும் இந்த ஞாபகமறதி வந்து 'கப்'னு ஆளைக் கவுத்துருதே.
அதுக்கப்புறமாவது தேறினோமான்னு பார்த்தா..... ஊஹூம்.இல்லையே, எல்லாம் தேறாத கேஸ்(-:
பார்த்துப்பார்த்துச் செஞ்சாலும், 'வீட்டுலே போடற செருப்பை எடுத்துக்கலை. சீப்பை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வச்சுட்டு எடுக்க மறந்துட்டேன், கம்மலைக் கைப்பையிலே வச்சுக்கலாமுன்னு எடுத்துத் தனியா வச்சுட்டு...இப்ப..?
வெளிநாடுன்னு இல்லே, உள்நாட்டுலேயே ஒரு நாலுநாள் எங்கியாவது போய்வரணுமுன்னாலும் இப்படிஎடுக்க மறந்து போனது, செய்ய மறந்து போனதுன்னு ஏராளம். பயணத்துக்கு மூணு( மறதி) நிச்சயம்!
என்ன செய்யலாமுன்னு யோசிச்சுப் பார்த்தப்ப 'ஒரு செக் லிஸ்ட்' போட்டுக்கலாமுன்னு தோணுச்சு.என்னோட லிஸ்ட்டைப் பாருங்க. பயணத்தோட நீளத்தை அனுசரிச்சு இதுலே ஒண்ணுரெண்டு மாற்றம் வரலாம்.
கிளம்பறதுக்கு சிலநாட்கள் இருக்கும்போதே செய்ய வேண்டியது.
வீட்டுத் தோட்டத்துக்கு, வாரத்துலே சிலநாளாவது தண்ணீர் ஊத்த ஏற்பாடு செஞ்சுரணும். புல்வெளி காய்ஞ்சு போச்சுன்னா,அப்புறம் ரொம்ப பேஜார். நெருங்கிய நண்பரை உதவி கேக்கலாம். அவர் ஊருக்குப் போகும்போது, இதே கைமாறு நாமும் செஞ்சுறணும் ஆமா.
வீட்டுக்குள்ளே இருக்கற செடிகளுக்கும் தண்ணீர் வேணுமே. அதே நண்பரைக் கேட்டுக்கலாம் உதவிக்கு. ஆனா அவர்மறக்காம வீட்டுக்குள்ளே வந்து அலாரம் ஆஃப் செஞ்சு, திரும்பப்போகும் போது மறக்காம ஆன் செஞ்சுட்டுப் போகணும்.'கோட் எண்' எல்லாம் கொடுத்தாப் பரவாயில்லை. வந்து வேற 'கோட்' மாத்திக்கலாம். ஆனா இதெல்லாம் 'த்ரீ மச்'ன்னுதோணுச்சுன்னா, வெளியே கொஞ்சம் நிழல் & காத்து ரொம்ப வீசாத பாகமாப் பார்த்து எல்லா இண்டோர் செடிகளையும்(கிருஷ்ணார்ப்பணம்னு)வச்சுட்டு, வெளியே தோட்டத்துக்குத் தண்ணீர் விடும்போது இதுகளுக்கும் கொஞ்சம் ஊத்தச் சொல்லலாம்.
அப்புறம் மெயில் பாக்ஸ். முதல்லே 'NO Junk Mails/ No Circulars ஸ்டிக்கர் வாங்கி மெயில் பாக்ஸ்லே ஒட்டிறணும்.( அதுலேதான் எல்லா விளம்பரமும் சேலும் வருது. வாங்கலேன்னாலும் நாட்டு நடப்பு தெரியணுமே)
இப்ப நம்ம தபால்பெட்டியிலே வர்ற உண்மையான கடிதங்கள் ( முக்காவாசி பில்லுங்கதான்) கொஞ்சமா இருக்கும்.அக்கம்பக்க வீட்டுக்காரங்க நண்பர்களா இருந்தா அவுங்ககிட்டே சொல்லி எடுத்து வைக்கச் சொல்லலாம். இல்லையா தோட்டத்துக்குத் தண்ணீர் ஊத்தவரும் நண்பர்கிட்டே சொல்லலாம். ஆனா கட்டாயமா யாராவது 'க்ளியர் செய்யணும்' இது ரொம்ப முக்கியம். ஓவர்ஃப்ளோ ஆற மெயில் பாக்ஸ், திருடர்களை விருந்து வச்சு அழைக்குமாம்.
அலாரம் கம்பெனிக்கு நாம இருக்கமாட்டோமுன்ற விஷயத்தைச் சொல்லணும். அவசரமா தொடர்பு கொள்ள நம்பிக்கையான நண்பர் தொலைபேசி எண் தரணும். மேற்படி நண்பருக்கும் சொல்லிரணும்.
நாம இல்லாத நேரத்துலே வரப்போற மின்சாரம், போன் பில்களுக்கு முன்னாடியே ஒரு தோராயமான தொகையை செக் அனுப்பிரலாம். பாங்க் மூலம் ஆட்டோமாடிக் பேமெண்ட்ன்னு இருந்தாத் தொல்லை இல்லை.( இங்கே எங்களுக்குக் குறிப்பிட்ட கடைசிநாளுக்கு முன்னாலே மின்சார பில் அனுப்புனா 10% கழிவு உண்டு)
அங்கங்கே வெவ்வேற அறைகளில் வெவ்வேற நேரத்துலே விளக்கு எரிஞ்சு அணையும்படி டைமர் பொருத்தணும்.( அது சரியான நேரத்துலே வருதான்னு முதல்நாளே பரிசோதிக்கணும்.இல்லேன்னா போட்டு என்ன பயன்?)இது திருடரை ஏமாத்தவாம்:-))))
பயணம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டதுன்னா ஃப்ரிஜ்ஜைக் காலி செஞ்சு துடைச்சுட்டு, கதவை கொஞ்சம் இடைவெளிவிட்டு மூடி வைக்கணும். ஃப்ரீஸர் கதவு நல்லா அழுத்தி மூடி இருக்கான்னு பார்த்துக்குங்க.
வீட்டுலே இருக்கும் ச்செல்லப் பிராணிகளுக்கு என்ன ஏற்பாடு செஞ்சு இருக்கீங்களோ அதை இன்னிக்கு முடிச்சுறணும். அதுங்க ஹாஸ்டல் போறதா இருந்தா, முதல் நாளே கொண்டுபோய் விடணும்.
போற இடத்துக்குத் தகுந்தாப்புலே ப்ளக் அடாப்டர், கேமெரா சார்ஜர், செல்போன் சார்ஜர் எல்லாம் எடுத்து மறக்காமப் பையிலே வச்சுக்குங்க. கண்ணாடி போடுற ஆளுங்கன்னா ஒரு ஸ்பேர் கண்ணாடி இருக்கணும்.
கிளம்புற நாள் செய்யவேண்டியது:
டாய்லெட்ரி எல்லாம் இருக்கான்னு பாருங்க.பல் விளக்கற ப்ரஷ்& பேஸ்ட் முக்கியமா வேணும்.மத்த அலங்காரப்பொருள் அவுங்கவுங்க தேவைக்கு.
கதவு ஜன்னல் எல்லாம் சரியா மூடி இருக்கான்னு பார்க்கணும்.
வேண்டாத மின்சார உபகரணம், மைக்ரோவேவ் & டிவி சுவிட்சுகளை அணைக்கணும். கம்ப்யூட்டரை மறந்துறாதீங்க:-)
கேஸ் அடுப்பு & சிலிண்டர் கனெக்ஷனை மூடணும்.
வீட்டுக்குள்ளே இருக்கும் வாட்டர் ஃபவுண்டனை நிறுத்திறணும்.
எல்லா லைட்களும் அணைச்சாச்சான்னு பார்க்கணும். குறிப்பாப் பூஜை அறை எண்ணெய் விளக்குகளை அமர்த்தணும். மறந்துபோய் மெயின் சுவிட்சை அணைச்சுறாதீங்க. அப்புறம் அலாரம் வேலை செய்யாது(-:
வீட்டுக்குள்ளே எல்லாக் குழாய்களும் சரியாப் பூட்டி இருக்கான்னு பார்த்துக்குங்க. சிங்குகளில் அடைப்பு( ப்ளக்) போடவேணாம். தண்ணீர் சொட்ட ஆரம்பிச்சா அப்புறம் வெளியே வழிஞ்சு.......
கதவைப் பூட்டறதுக்கு முன்னாலெ,
செக் லிஸ்ட்டை எடுத்து ஒரு பார்வை பாருங்க. எல்லாத்துக்கும் செஞ்சு முடிச்ச கையோட ஒரு 'டிக்' பண்ணிக்கிட்டே வந்துருப்பீங்கதானே? எது டிக் இல்லாம இருக்கோ அதை இன்னொருதடவை சோதிச்சுப் பாருங்க.
ரொம்ப முக்கியமான குறிப்பு. செக் லிஸ்டை எழுதுன கையோடு அது தொலைஞ்சுராமப் பார்த்துக்கணும். இப்ப எல்லாம் யாரு கையாலே உக்காந்து எழுதிக்க்ட்டு இருக்காங்க.?இதுலே சொல்லி இருக்கும் பல விஷயங்கள் எப்ப ஊருக்குப் போனாலும் நிரந்தரமாக் கவனிக்க வேண்டியதுதானே?பேசாம கம்ப்யூட்டர்லே சேமிச்சு வச்சுட்டு ஒரு ப்ரிண்ட் எடுத்துக்கிட்டாப் போச்சு.ஃப்ரிஜ் கதவுலே ஒட்டீ வச்சுருங்க.
எதாவது விட்டுப்போயிருந்தா அனுபவஸ்த்தர்கள் சொல்லுங்க. துணிமணிகளைப் பத்தி இங்கே சொல்லலை.இது கட்டாயம் எடுத்து வச்சுக்குவோம் தானே? தேவைக்கு மேலே சில உள்ளாடைகள் மட்டும் எக்ஸ்ட்ராவா எடுத்துக்குங்களேன், இருந்தா ஊசிப்போகாது.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....... களைப்பா வருதே.இவ்வளவு வேலை இருக்கா, எங்கியாவது போகணுமுன்னா? பேசாம காசு மிச்சம்னு எங்கியும் போகாம இருந்துறலாமான்னு இருக்குல்லே?
இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? கதவை நல்லா இழுத்துப் பூட்டியாச்சான்னு ஒருதடவைப்பூட்டை இழுத்துப் பார்த்துட்டுக் கிளம்புங்க.
எஞ்சாய் யுவர் ஹாலிடேஸ்!!!!
( ஆமாம், கைத்தொலை பேசி எடுத்துக்கிட்டீங்களா? )
பயணக்கட்டுரை எழுதும் 'ஸ்பெஷலிஸ்ட்' பயணக்குறிப்பு எழுதுனது நியாயம்தானே?
Friday, November 17, 2006
பயணம் போறிங்களா?
Posted by துளசி கோபால் at 11/17/2006 07:39:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
எப்படி-எப்படிக்கா இப்படி யொசிக்கரீங்க..ம்ம் எல்லாம் அனுபவஞானமோ..இத கண்டிப்பா ப்ரின்ட் எடுத்து ரூம்க்கு நாலுன்னு ஒட்டி வைக்கணும்...அடெங்கப்பா... எங்கேயோ பொயிட்டீங்க
எங்கயோ ஊருக்குக் கிளம்பியாச்சு. உங்க அவருக்கு கொடுத்த வேலைகளை கொஞ்சம் மாத்தி ஒரு பதிவா போட்டு ஒப்பேத்தியாச்சு. போயிட்டு வந்த ஒரு நீண்ட தொடர் வரும். இப்போ எந்த நாட்டோட தலை உருளப் போகுது?
நாங்களும் இந்த மாதிரி குக்கர் அணைக்கலை வீடு பூட்டலை அப்படின்னு அடிச்சுப் பிடிச்சு வந்திருக்கிறோம். (சரியான வார்த்தைப் பிரயோகம் - வரவைக்கப் பட்டிருக்கிறோம். ஆனா அதைச் சொன்னா சாப்பாடு கிடைக்குமோ?)
துளசி..
கோவையிலுருந்து வெளியூருக்கு போறப்போ இது மாதிரி பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறது, மத்தெல்லாம் ஓரளவுக்கு செய்யறது உண்டு.. ஆனா இங்க வந்தப்புறம்.. ஊருக்கு போறது தான் முக்கியமா தெரியுதே தவிர வேறெதுவும் புலப்படறது இல்லை..:-))
வாங்க தீபா.
எல்லாம் பட்டறிவுதான்:-))))
ஆனா எல்லாம் 'பட்டியல் ' போட்டப்புறம் டென்ஷன்
இல்லாம இருக்குன்றதென்னவோ நிஜம்.
//அடெங்கப்பா... எங்கேயோ பொயிட்டீங்க//
எனி உள்குத்து? :-)))
வாங்க கொத்ஸ்
நாலுபேருக்கு நல்லது நடக்குமுன்னா இப்படிச் சொல்றது
தப்பே இல்லை.
//இப்போ எந்த நாட்டோட தலை உருளப் போகுது? //
நிச்சயமா 'ஜெர்மெனி'க்கு இந்த அதிர்ஷ்டம் இல்லை:-))))
//வரவைக்கப்பட்டிருக்கிறோம்//
வீட்டுக்கு வீடு & நாட்டுக்கு நாடு வாசப்படிகள்:-)))
//அடெங்கப்பா... எங்கேயோ பொயிட்டீங்க//
எனி உள்குத்து? :-)))
துளசியக்கா..உள்க்குத்து எல்லாம் இல்லை, அபூர்வ-சகோதரர்கள் தாக்கல் தான். அந்த படம் பார்த்தப்புறம் இப்படி ஆயிட்டேன்
மிக நல்ல பதிவு, உபயோகமான தகவல்கள். அதும் வெளிநாடு போகிற போது என்ன எடுத்டுட்டு போகனும்னு போயிட்டு வந்த நாலு பேரு கிட்ட கேட்டிங்க ஆளுக்கு ஒன்ன சொல்லி உங்கள பைத்தியம் ஆக்கிருவாங்க.
நான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி பிரான்ஸ் கெளப்பரப்ப் பட்ட பாடு இருக்கே. நம்ம வலைப்பதிவுல தேடுனா ஒன்னையும் கானோம், சரினு google ல தேடுனா எல்லா வேற ஊர்க்காரனுங்க பயணக் கட்டுரைதா இருக்கு. எப்படியோ அடிச்சி புடிச்சி ஒரு லிஸ்ட் தயார் பன்னி இங்க வந்தாச்சு. அது மத்தவங்களிக்கு பயன்படும்னு நினைக்கிறேன். தமிழ் படுத்த நேரம் இன்மையால் அப்படியே இணைக்கிறேன். ஏண்டா இதெல்லாம் வெளிநாட்டுல கெடைக்காதா? இங்க இருந்து தூக்கிட்டு போகனுமானு கேக்காதிங்க. இங்க வந்து வெலைய யூரொ to RS மாத்தி நம்ம ஊரு வெலைக்கு compare பன்றதுக்கு, இந்த லிஸ்ட்ல இருக்கறத எடுத்டுட்டு போறது நல்லதுனு தோனுது. நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
Check List
1. Passport
2. Other Travel Docs-
Tickets
3. Bank documents
4. ID Card
5. Credit (2), ATM
6. Cash - Euros
7. Certificate Copy File
8. Laptop with converter plug points
9. Pens,Refill (5), Pencil & Leads
10.Mobile with accessories
11.Pants -
12.Shirts -
13.Shorts - (2)
14.Jeans -
15.Inner - (2)
16.UG 6 Pairs
17.Blazer- Grey/ Blue
18.Gloves
19.Leather Jacket
20.Socks – Woolen (2),
Cotton (3), Nylon (3)
21.Handkerchiefs (3) + (1)
22.Monkey Cap
23.Muffler
24.Sweater
25.T Shirts – (3) + 1
26.Trouser - Blue (1)
27.Towel
28.Sports Shoe
29.Semi Formal Shoes
30.Slipper
31.Hand Bag – Backpack
32.Locks
33.Delsy Bag
34.Shaving Blades (3
Packs) +
35.Shaving Stick
36.Shaving Cream
37.After Shave
39.Listerine
40.Soap (3)
41.Detergent
42.Deodorant
43.Tooth Brush
44.Tooth Paste
45.Scissors
46.Medicines with
Prescriptions
48.Travel bag
49.Masala items(if
intrested in cooking)
50.Ready to eat food
items for one or two day like 2 mins maggi, MTR fast foods
வேலைக்கென்றே ஊரை சுத்துவதால் தனியாக சுற்ற அவ்வளவு ஆசையில்லை.என்ன மலை,மனிதர்கள், சூழல் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்,இதை இங்கேந்து அங்க போய் பாக்கனுமா?என்ற எண்ணம்.தனிப்பட்ட எண்ணம்.
கேஸ் என்றதும் சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்திருந்த எனது உறவினர் மூடும் குப்பியை தவறான திசையில் திருப்பிவிட்டு தூங்க போய்விட்டார்கள்.அன்று இரவு முழுவதும் அது கசிந்து காலை நான் எழுத்ததும் பார்த்தேன்.ஜன்னல்கள் திறந்திருந்ததால், வேறு ஒன்றும் நடக்கவில்லை.
நல்ல பதிவு!
நீங்க இந்தியா-தமிழ்நாடு பற்றியும்
புதிசா கொஞ்சம் படிச்சுக்கங்க...ஏன்னா
சக பயணிகள் நம்ம நாட்டைப் பற்றியும் கேட்பாங்கள்ளே...........
idhu eppadi irukku
புரட்சிக் கவிஞர் போற்றிய பாடல்
அடிக்கடி பயணம் செய்பவர் பயணத்திற்கான பொருள்களை, கடைசி நேரத்தில் தேடும் சிரமத்தைத் தவிர்க்க பட்டியல் தயாரித்து வைப்பார்கள் அல்லவா? அது போன்றவொரு பட்டியலை ஒரு பாடலில் பார்க்கலாம். இது பழைய காலத்தில், இன்று போல போக்குவரத்து வசதியில்லாமல் கூண்டு வண்டி கட்டிக் கொண்டு நெடும்பயணம் செய்கையில் வழியில் சமைத்துச் சாப்பிட அதற்கான பொருள்களுடன் செல்பவர்க்கான நினைவுப் பட்டியலாக உள்ளது.
விவேகசிந்தாமணியின் பாடல்
அயல் ஊருக்குப் பயணம் போகும் ஒருவன், அரிசி, மிளகுத் தூள், புளி, உப்பு, தாள்¢த்தற்குரியவை, பாத்திரங்கள், கயிறு, நீரின் ஆழத்தைக் காட்டும் ஊன்றுகோல், ஆடைகள், தீ உண்டாக்கும் சக்கிமுக்கிக்கல், கைவிளக்கு, அரிவாள், கண்ணாடி, பூசைக்குரிய பொருள்கள், செருப்பு, குடை, பணியாள், சிற்றுண்டிகள், கம்பளம், ஊசி நூல், வெற்றிலைப்பை, சுண்ணாம்புக் குப்பி, எழுத்தாணி, உப்பில் ஊறிய காய், கரண்டி, நல்லெண்ணெய், காசுகள், பூட்டு, கைக்கத்தி, என்று இவற்றைக் குறைவில்லா மல் திருத்தம் செய்து சேர்த்துக் கொண்டு பெண்களின் துணையுடன், பொருந்திய ஊர்தியுடன் புறப்பட்டு, இடையில் நீர்நிலை, நிழல், சமைப்பதற்குரிய விறகு, மற்றும் விரும்பத் தக்கவை ஆகியவை உள்ள இடங்களில் இறங்கித் தங்கிச் சமையல் செய்து உண்டு, பிறகு புறப்பட்டு கருதிய இடத்துக்குச் செல்லுதல் சிறப்பாகும்.'
எவ்வளவு தீர்க்க தரிசனமான முஸ்தீபு! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதைப் பின் பற்ற யாருக்கு அவசியம் ஏற்படப் போகிறது? இதை உத்தேசித்துத்தானோ என்னவோ இந்தப் பாடலைப் பின்பற்றி இன்றைய தேவைக்கேற்ப ஒரு பட்டியல் கொண்ட பாடலை எழுதியுள்ளார்
பாவேந்தர் பாரதிதாசன்.
'சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டிக் கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.'
source:
http://ninaivu.blogspot.com/2005_03_01_ninaivu_archive.html
Now yours is internet era requirement.
மங்கை வாங்க.
நானும் முந்தி ஒரு காலத்துலெ இப்படித்தான் இருந்தேன். துணிமணி எடுத்துக்கிட்டுப்
போறது மட்டுமே.
காலத்தின் கட்டாயம், மாறிப்போன வாழ்க்கை முறைகள் ( இன்னும் அதே குழம்பு ரசம்தான்:-) )
ஆனதுக்கப்புறம் எல்லாம் கொஞ்சம் மாறிடுச்சு.
இப்பவும் இந்தியாவுக்கு வர்றப்ப ரெண்டு மூணு செட் உடையோடு மட்டும் வருவேன்.
அதான் அங்கே வாங்கிக்கலாமே!
தீபா,
ச்சும்மா...:-)))
வலை உலகத்துலே இப்ப இந்த உள்/வெளி/நடு/சைடு குத்துகள் பிரபலமாகி
வருது.
விஜி,
வாங்க. நல்ல பட்டியல்தான் போட்டுருக்கீங்க. பாதி டென்ஷன் இதாலயே
குறைஞ்சுரும். இன்னும் பலருக்கும் இது பயன்படும்.
புது இடத்துலே எல்லாமெ கிடைக்குதுன்னாலும், போய் இறங்குனவுடனே
இதைத் தேடி அலைய முடியாதுல்லையா?
பின்னூட்ட நீளத்தைப் பத்திக் கவலையை விடுங்க. நாலு பேருக்கு இது
உதவுனாச் சரி.
வாங்க குமார்.
நீங்க வேலையிலேயே உலகம் பார்க்கலாம். அப்ப வீட்டம்மா?
அதுக்குத்தான் அலுவல் இல்லாத இடங்களிலேயும் சுற்றுலா
போகணும். பிள்ளைகளுக்கும் இது ஒரு அனுபவமாச்சே.
ஆமாங்க சிஜி.
உண்மைக்குமே இப்ப இந்தியாவுலே என்ன நடக்குதுன்னு பத்திரிக்கை வழியாப்
படிச்சாலும், நேரில் வந்து பார்த்துத் தெரிஞ்சுக்கறதுதான் உத்தமம்.
செஞ்சுறலாம்:-))))
சூப்பர்சுப்ரா,
வாங்க. எப்படி இருக்கீங்க?
பாரதியாரும், பாரதிதாசனும் இப்படி பட்டியல் போட்டுருக்காங்கன்னு
இப்பத்தான் உங்க மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.
எவ்வளவு அருமையா ஒவ்வொண்ணையும் கவனிச்சு
எழுதி இருக்காங்க பாருங்க.
//..........பெண்களின் துணையுடன்,
பொருந்திய ஊர்தியுடன் புறப்பட்டு,......//
ஏன், ஆம்பிளைங்க சமைக்கக்கூடாதான்னு
அப்ப யாரும் கேக்கலைபோல:-)))
எப்பா கண்ணைக் கட்டுதே, ஒரு நல்ல பதிவுங்க துளசியக்கா, கண்டிப்பா இதை இரு நகல் எடுத்து இப்போவே வெச்சுகிறேன் (அடிக்கடி ஊர் சுத்தற ஆளுங்க நாம). நட்சத்திரத்துல நட்சத்திர பதிவு இது.
பிகு: அவள் விகடனுக்கு போட்டுற வேண்டியதானே?
[சங்கம் இந்தப் பதிவை பரிந்துரைக்கிறது]
//அதுவரைக்கும்'சினிமா மோகம்' புடிச்சு ஆட்டிக்கிட்டு இருந்துருக்கு//
எல்லா லிஸ்ட்டும் போட்டாலும், கடைசியில் அதைத் தொலைச்சிட்டு அலையிறது என் மாதிரி ஆட்கள்
துளசியக்கா! as usual...நல்ல பதிவு...உங்க ஊக்கமும், உற்சாகமும், என்னை கொஞ்சம் முயற்சிகள் எடுக்க வைத்துள்ளன. Please visit and help me grow. அப்புறம் உங்க ஆசியினால், அகத்தீ ஆயிட்டோம்ல? மிக்க நன்றி
துளசி
இப்ப அவசர நிலைக்கான பெட்டி ஒன்னை தயாரா வச்சிருக்க சொல்றோம். அதில என்ன சாமான் இருக்கனும் எத்தனை மாசத்துக்கு ஒருமுறை பழச தூக்கி போட்டு புதுசு வச்சி தயாரா இருக்கணும் என்ற விவரம் போட்டு வீடு வீடா அனுப்பறோம். அதுக்கேத்தா மாதிரி உங்க பயனுள்ள பதிவு.
சூப்பர்சுப்ரா,
அடடா.... நீங்க சொன்ன விவேகசிந்தாமணி பாடலை நம்ம பாரதியார் பாட்டுன்னு
தவறாப் புரிஞ்சுக்கிட்டேன். உண்மையான மனவருத்தம்(-:
மேற்படிப் பாட்டை பாரதிதாசன் அவர்கள் பாராட்டுனது மட்டுமில்லாமல்
அவர் காலத்துக்கு ஏற்றபடி அவரும் ஒரு பயண லிஸ்ட் போட்டுருக்கார்.
வாங்க இளா,
என்ன அவள் விகடனா? சரியாப் போச்சு. இந்த வெகுஜனப் பத்திரிக்கைகளுக்குன்னு
ஒரு ஸ்டேண்டர்ட் இருக்கு. அதுலே நானு அடிபட்டுருவேன்:-)))) அதுவுமில்லாம
அவுங்க எடிட் செய்யறேன்னு 'துண்டாடிருவாங்க'ப்பா(-:
( கீ.வி.மீ.ம.ஒ!!!!) மீ இல்லைன்றது வேற விஷயம்:-)))
தாணு,
வாங்க. அதாலேதான் லிஸ்ட்டை பிரிஜ் கதவுலே ஒட்டி வச்சுரணும்.
இல்லேன்னா இருக்கவே இருக்கு கணினி. கம்ப்யூட்டரைத்
தொலைக்க மாட்டீங்கதானே? :-)))
வாங்க வைசா.
சிரிப்பானுக்கு( வார்த்தை உபயம் நம்ம கொத்ஸ்) நன்றி
சொக்காயி,
அப்ப ஓட்டத்துலே நீங்கதானே பள்ளிக்கூடத்துலே ஃபர்ஸ்ட்? :-)))
அகத் 'தீ'
வாங்க வாங்க. என் கணக்குலே தமிழ்மணத்துக்கு ஒரு பதிவரைக் கூட்டியாச்சு:-))))
அதெல்லாம் வளர்ந்துருவீங்க. கவலையை விடுங்க. நாங்கெல்லாம் எதுக்கு
இருக்கொம்? வளர்த்துருவொம்லெ:-))))
வாங்க பத்மா.
//அவசர நிலைக்கான பெட்டி //
நல்ல ஐடியாதான் பத்மா.
இங்கே டெலிஃபோன் டைரக்டரியிலே கடைசிப் பக்கத்துலே
அவசரத்துலே என்ன செய்யணுமுன்னு சிவில் டிஃபன்ஸ்க்கான
விவரமுல்லாம் போட்டு வருது.வெள்ளம், நிலநடுக்கம்,புயல்,
எரிமலை வெடிப்பு, Pandemic- worldwide disease outbreak
வகைகளுக்கு என்ன செய்யணுமுன்னு இருக்கு. கூடவே எமர்ஜென்ஸி
சர்வைவல் ஐட்டம்ஸ்னு ஒரு ச்சின்ன லிஸ்ட், எவக்குவேஷன் செய்யும்
நிலைன்னா, என்னென்ன கொண்டு போகணும்னு ஒரு லிஸ்ட்ன்னு இருக்கு.
இப்ப ரெண்டு வருஷமா, சுநாமி வந்தா அதுக்கு என்னென்னசெய்யணுமுன்னு
புதுசாச் சேர்த்துருக்காங்க.
பேசாம இதையே விவரிச்சு ஒரு பதிவு போட்டுறலாம்!
வாங்க கிறுக்கரே.
இங்கிலிபீஸுலே எழுதுனா என்னங்க, நல்ல வாக்கு சொன்னீங்களே! அதுக்கு
ரொம்ப நன்றி.
துளசி..ரொம்ப உபயோகமான பதிவு.. உங்க தமிழ் சினிமா பாத்த கதை ரொம்ப சுவரஸ்யமா இருந்தது.. ஹ்ம்ம்..எவ்வளவையும் ஏற்பாடு பண்ணிட்டு எங்கே போனாலும் எதோ ஒண்ணை மிஸ் பண்ணினதா உள்ளாற ஒரு உணர்வு இருக்கத்தான் செய்யும்..துளசி
வாங்க கார்த்திக்.
//எதோ ஒண்ணை மிஸ் பண்ணினதா உள்ளாற ஒரு
உணர்வு இருக்கத்தான் செய்யும்//
எல்லாம் மனுஷ மனசோட அஞ்ஞானம்தான்:-)))
எஞ்சாய் யுவர் ஹாலிடேஸ்!!!!//
இவ்வளவையும் செஞ்சுட்டு டயர்டாயிரும்.. இதுக்கப்புறம் எங்க எஞ்சாய் பண்றது?
கூட்டுக்குடும்பமாருந்தாக்கூட நம்ம மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்தனார் எல்லாரும் ஜம்முன்னு கைய வீசிக்கிட்டு கெளம்பிருவாங்க.. நாமதான் இதையெல்லாம் அப்பவும் பாக்கணும்.. இது ஒங்களுக்கு தெரிய சான்ஸ் இல்லே..
என் மனைவிக்கிட்ட கேட்டா சொல்லுவாங்க..
அதுக்கு புருஷன், மனைவி ரெண்டு குழந்தைங்கற குடும்பமே தேவலைங்க..
அதான சொல்ல போறீங்க.. ஓரளவுக்கு உண்மைதான்..
கூட்டுக்குடும்பம் கலகலப்பான குடும்பங்கறதும்..ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருப்பாங்கறதெல்லாம் அந்த காலங்க..
சரிஈஈஈஈ.. இங்க உள்ளூருக்கு டூர் போறதே கொஞ்சம்.. இதுல வெளிநாட்டுக்கு வேற போறமாக்கும்?
பூட்டலை அப்படின்னு அடிச்சுப் பிடிச்சு வந்திருக்கிறோம். //
கொத்தனார்..
நாங்க குக்கர அணைக்கறமோ இல்லையோ வீட்ட பூட்டி புருஷனும் பொஞ்சாதியும் நாலஞ்சுதரம் பூட்டை இழுத்து, இழுத்து, இழுத்து, இழுத்து.. நாலு முடிஞ்சிருச்சா.. சரி, அஞ்சாவது ஒருதரம் இழுத்துப் பார்த்துட்டுத்தான் கெளம்புவோம்..:)
எப்படி-எப்படிக்கா இப்படி யொசிக்கரீங்க..ம்ம் எல்லாம் அனுபவஞானமோ..இத கண்டிப்பா ப்ரின்ட் எடுத்து ரூம்க்கு நாலுன்னு ஒட்டி வைக்கணும்...அடெங்கப்பா... எங்கேயோ பொயிட்டீங்க /
ஒங்க பதிவ படிச்சிட்டு அப்படியே உணர்ச்சிவசப்பட்டுட்டாங்க போலருக்கு தீபா.. எத்தன எழுத்துப் பிழை பாருங்க:)
கோச்சிக்காதீங்க தீபா.. உங்கள சொல்லி குத்தமில்ல.. அப்படி உணர்ச்சிப்பிழம்பா ஆக்கிருச்சி துளசியோட பதிவு:)
*அப்பிடியே நீங்க போகிற நாட்டுக்கு விசா தேவையா எல்லா இடத்துக்கும் செல்லுபடியாகுமா?..என்று பாக்க மறந்திடாதிங்க,(சில விமாண நிலையத்தில் transit visa கூட தேவை!!!)
*அப்பிடியே உங்களுடைய காப்புறுதிகளையும் நீங்கள் போகிற இடத்துக்கு செல்லுபடியாகுமா, மற்றது ஏதாவது குண்டு வெடிப்பில் நீங்கள் மாட்டுப்பட்டால் (முக்கியமாக இலங்கை/ஈழ பிரையானிகள்)அப்புலன்ஸ் விமாணம் அடங்குதா, மற்றது எத்தனை நாற்களுக்கு என சரி பாத்துக்கொள்ளுங்க.!!
*நீங்கள் பாவிக்கும் மருந்துகள் தற்காலில நிவாறனிகள், மற்றும் தடுப்பு ஊசிகளை போட/எடுத்துச் செல்ல மறவாதீர்கள்!!!!
*உங்கள் நாட்டு தூதரகம்,விட்டு விலாசம், தெலைபேசி இலக்கம், கடவுச்சீட்டின் பிரதி, சர்வதேச SOS இலக்கம்(இந்த இலக்கத்தை உங்கள் காப்புறுதி நிறுவணத்திடம் கேட்டுவாங்கவும்), எப்பவும் உங்கள் பொக்கேற்றுக்குள் வைத்திருக்கவும்.
என்னங்க டிபிஆர்ஜோ,
//கூட்டுக்குடும்பமாருந்தாக்கூட நம்ம
மாமனார், மாமியார், கொழுந்தன்,
நாத்தனார் எல்லாரும் ஜம்முன்னு
கைய வீசிக்கிட்டு கெளம்பிருவாங்க..
நாமதான் இதையெல்லாம்
அப்பவும் பாக்கணும்.. //
சரியாப்போச்சு. அவுங்களை வீட்டுலே விட்டுட்டு நாம கிளம்பிறணும்.
பின்னே கூட்டுக்குடும்பம் என்னத்துக்கு இருக்கு?
//கூட்டுக்குடும்பம் கலகலப்பான குடும்பங்கறதும்..
ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா
இருப்பாங்கறதெல்லாம் அந்த காலங்க..//
ரொம்ப மாறிட்டாங்கல்லே மக்கள்ஸ் (-:
அப்புறம் நம்ம தீபா , அபூர்வசகோதரர்கள் பார்த்ததுலே இருந்து
( எப்படி இருந்த இவுங்க )இப்படி ஆயிட்டாங்களாம்:-))))
அதெல்லாம் பேச்சு 'வழக்குலெ' அப்பத்தான் வரும்:-)))
வாங்க நோநோ.
நீங்க சொன்னது சரியான பாயிண்ட்ஸ்.
விஸா வாங்கிக்கறது ரொம்ப முக்கியம்.
இங்கே எங்களுக்கு அநேகமா எங்கே போனாலும் விஸா தேவைப்படாது
( இந்தியாவைத்தவிர) என்பதாலெ அதைப் பத்தி நான் யோசிக்கலை.
சொன்னதுக்கு நன்றிங்க.
ட்ராவல் இன்ஷூரன்ஸும் முக்கியமாக் கவனிக்கணும்.
இப்ப இன்னொண்ணும் நினைவுக்கு வருது.
சூட்கேஸ்களில் வெளியே இருக்கும் zip உள்ள சின்னச்சின்ன கம்பார்ட்மெண்ட்டில்
யாராவது எதாச்சும் ( drugs) வச்சுறப்போறாங்கன்னு ஒரு புது பயம்
வந்துட்டதாலே அதுக்கெல்லாம் கூட ச்சின்னச்சின்ன பூட்டாப் பூட்டி வச்சுறணும்.
எதுக்குத்தான் இப்படி நாலைஞ்சு வச்சு, பெட்டிகள் தயாரிக்கிறாங்களோ?
ஒரு காலத்துலே வசதியா இருந்தது, இப்ப ஆபத்தாப் போச்சு.
Post a Comment