Thursday, November 16, 2006

வோ பந்த்ரா யா பீஸ் மினிட்ஸ்


'நான் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து உன் கையிலே கொடுத்துடறேன். எனக்குவேண்டியது ரெண்டு நேரக் காப்பி, ரெண்டு வேளை சோறு. அப்புறம் ராத்திரி தூங்கறதுக்குமுன்னாலே ஒரு அரைமணி நேரம் என் கூடப் பேசிக்கிட்டு இருக்கணும். இதுதாம்மா என் தேவை'ன்னு சொல்வார்.


ரொம்பப் பழைய படம். விசுவோடது. ( டெளரி கல்யாணம்?) மனைவியா நம்ம ஸ்ரீவித்யா வருவாங்க.(என்ன அழகான கண்ணு அவுங்களுக்கு. பாவம்... இவ்வளோ சீக்கிரமா அவுங்களுக்கு முடிவு வந்துருச்சு பாருங்க. ஹூம்...)


திடீர்னு எனக்கு இந்த விஷயம் ஞாபகம் வந்தது ஒரு பூஜைக்கு நடுவிலே!
ஒரு 'அன்னக்கூட்' விழா நடந்துச்சு. நம்மையும் கூப்புட்டு இருந்தாங்க.இது தீபாவளிக்குமறுநாள். வடக்கத்திக்காரங்களுக்கு இது புதுவருஷ ஆரம்பம். குஜராத்திகளுக்கும் வருசப்பிறப்புதான்.


நமக்கு முடிஞ்ச எதாவது ஒரு பலகாரத்தைச் செஞ்சு கொண்டு போகலாம். அங்கே ஸ்வாமி நாராயண் விக்கிரகம் வச்சு பூஜை நடக்கும். எல்லாரும் கொண்டு வரும் பிரசாதங்கள் கடைசியில் விநியோகம்செஞ்சுருவாங்கன்னு சொன்னாங்க.


நாலைஞ்சு அடுக்களா பிரசாதங்கள் வச்சிருந்தாங்க. நண்பர் ஒருத்தர் பக்தியோட பஜனைப்பாடல்கள்பாடிக்கிட்டு இருந்தார். அதுக்கப்புறம் இந்த விழாவை ஏற்பாடு செஞ்ச ஆன்மீக சங்கத்தின் தலைவர் எல்லாரையும் வரவேற்று நன்றி சொல்லி, புதுவருஷ வாழ்த்துகளையும் சொன்னார். விசேஷ விருந்தினரா வந்த ஒருத்தரின் அருமையா ஒரு சொற்பொழிவுதான் எனக்கு விசுவை ஞாபகப்படுத்திருச்சு. முழுக்க முழுக்ககுஜராத்தி மொழியிலேதான் பேசுனார். (ஆனாலும் ஒரு வார்த்தை விடாம எல்லாமெ புரிஞ்சுருச்சேங்க). இவர்'நாஸா'லே சயிண்டிஸ்ட் வேலை செஞ்சு இப்ப வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். வயசும் ஒரு 65 இருக்கும்.இந்த ஸ்வாமி நாராயண் குழுவிலே சேர்ந்து, அவுங்க வெவ்வேற நாடுகளிலே நடத்துற வகுப்புகள்/சேவைகளுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருக்காராம்.



"தீபாவளி சமயம், ( நரக சதுர்த்திக்கு முந்தினநாள்) 'தந்தேரஸ்' அன்னிக்கு எல்லாரும் மகாலக்ஷ்மியைப்பூஜிக்கிறோம். தன் தேரஸ்( Dhan- தனம்- செல்வம்)ன்னு வேண்டறோம். உண்மையிலே இது தனம் வேண்டிச் செய்யும் பூஜை இல்லை. நம்ம கிட்டே இருக்கும் காசு பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, நம்மைவிட ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு 'தானம்' செய்யவேண்டியது நம்ம ஒவ்வொருவருடைய கடமை. இந்த 'தான்' எப்படியோ இப்ப 'தன்'னாகிப் போச்சு. மக்களும் விடாம சாமிகிட்டே எனக்கு இதைக்கொடு, அதைக்கொடுன்னு பேரம் பேசிக்கிட்டே இருக்கோம்."( ஒரு வேளை சாமிக்கு மட்டுமே இது 'தான்' , நமக்குக் கொடுக்கற நாளோ?)



தீபாராதனை முடிஞ்சதும் சாப்பாடு. எனக்குத் தெரிஞ்சவரை பொதுவா குஜராத்திகள் விசேஷங்களிலே சாப்பாட்டுக்குமுன்னுரிமை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்தான். ஆம்புளைங்க எல்லாம் 'தண்ணி'யிலே லேசா நீச்சல் போடும் வழக்கம் இருக்கே. அந்தக் கச்சேரி முடிஞ்சுதான் இதுக்கு வருவாங்க. இங்கே (மேற்படி விஷயம் இல்லாததாலேயோ?)ஆண்களுக்கு முன்னுரிமையாம். ஸ்வாமிநாரயண் சத்சங்க மண்டலியில் இதுதான் 'நியமம்'.



"எல்லாத்தையும் படைச்சுட்டு, அதை ஏழைபாழைகளுக்குத் தானே கொடுக்கணும். இங்கெ என்ன நம்ம மக்களே சாப்புட்டுடறோம்?"இது எங்க இவரோட விசாரம். " இங்கெல்லாம் நாம்தான் ஏழைங்க லிஸ்ட்டுலே இருக்கோம்" -நான்.45 நாடுகளிலே ( அதானே... குஜராத்திகள் இல்லாத நாடும் உண்டோ? ஒரு விதத்தில் இவுங்க நம்ம கேரள அன்பர்கள்போலத்தான். இல்லையா? )இந்த சத்சங்கம் நடக்குதாம். குறைஞ்சபட்சம் இந்தியாவுலே படையல்களை அன்னதானம் செய்வாங்கன்னு நினைக்கிறேன்.



லண்டனில் ஒரு பெரிய பிரமாண்டமான கோவிலைக் கட்டி, அது 2000 வருஷ கின்னஸ் புத்தகத்துலேயும் வந்துருக்கு.இந்தியாவுலே அக்ஷர்தாம் கோவில்கூட இவுங்க கட்டுனதுதானாம். இங்கெ நியூஸி, ஆக்லாந்து நகரிலேயும் ஒரு அழகான கோயிலைக் கட்டி இருக்காங்க. தூண் முதக்கொண்டு இந்தியாவுலெயே செஞ்சு கொண்டு வந்து இங்கெ பொருத்தி இருக்காங்க. உள்ளே எல்லா குஜராத் கோயில்களைப் போலவே பளிங்குச்சிலைகள். (கற்சிலைகளிலெ கடவுள் நம்ம தென்னிந்தியாலே மட்டுமோ? இல்லேன்னா, நவநாகரிக காலமாச்சேன்னு மார்பிள் சிலைகளா? ) ராதாகிருஷ்ணா சிலைகளில் நம்ம ராதாவுக்கு ஒரு சம்கி வேலைப்பாடுகள் நிறைஞ்ச ஷிபான்புடவை கட்டி, கையிலெ ஒரு 'ஹேண்ட் பேக்'கும் கொடுத்துருந்தாங்க. சில வருசங்களுக்கு முன்னே ஒரு தடவை'கோயில் சிக்' ஆகி, ஒரு நாள் காலையிலே முதல் ப்ளைட் புடிச்சு ஆக்லாந்து போய், அங்கே 7 கோயில்களுக்குப் போயிட்டுக் கடைசி ப்ளைட்லே திரும்புனோம். இன்னும் ரெண்டு கோயில்கள் விட்டுப்போச்சு. இன்னொரு 'சிக்' வரும்போது போகலாம்.



"இந்த அவசர உலகத்துலே உண்மையான தேவை என்னன்னா, ஒருத்தரோடு ஒருத்தருக்குள்ள கம்யூனிகேஷன்.இதுலேயும் நண்பர்கள், கூட வேலை செய்யும் ஆட்கள்ன்னு மத்தவங்களோடு பேச நேரம் இருக்கும்.ஆனா குடும்பத்துலே இருக்கறவங்களோட பேச மட்டும் பலருக்கு நேரமே கிடைக்காது.


வீட்டுலே இருக்கறவங்களோடு தினம் ஒரு 15 இல்லே 20 நிமிஷம் பேசுங்க.
A small change in the attitude will make a big difference"


அவர் சொன்னதை யோசிச்சுக்கிட்டெ இருந்தேன்.


குடும்பத்துலே சந்தோஷம் நிம்மதி இருந்தாத்தான் இப்படி தானம் கொடுக்க மனசு வரும். தானம்னு சொல்றதே மனம் கோணாம, 'அய்யோ இப்படிக் காசெல்லாம் கரையுதே'ன்ற புலம்பல் இல்லாம சந்தோஷமாக் கொடுக்கறதுதான்.



இந்த குடும்ப நிம்மதி எப்படி வரும்? குடும்பத்துலே பெண்களுக்கு சம அந்தஸ்த்தும், உரிமையும் கொடுக்கறதாலே வரும்.இரண்டு மாடுகளைப் பூட்டிய வண்டி எப்படிக் கஷ்டம் இல்லாம சுமைகளை இழுத்துட்டுப் போகுதோ அதே போல கணவன் மனைவி இருவரும் குடும்ப பாரத்தை சரிசமமாப் பகிர்ந்து இல்லறத்தை நடத்தணுமுன்னு ச்சும்மாச் சும்மா கல்யாண வீட்டு மேடைகளில் மட்டும் முழங்குனா ஆச்சா?



நம்மளில் எத்தனைபேர் பிள்ளைகுட்டிகள், பெற்றோர்கள், தாத்தாபாட்டிகள், நம்முடைய மறுபாதின்னு கூடவே இருக்கும் சொந்தங்களோடு தினம் கொஞ்சநேரம் உக்காந்து பேசி இருக்கோம்? இதுக்குக் காசும்பணமா செலவு?( பேச ஆரம்பிச்சாலே, சிலர் அதுவேணும், இதுவேணுமுன்னு கேட்டு செலவு வச்சுருவாங்களோ)



பேசணுமுன்னு உக்காந்ததும், அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுராதீங்க.( புள்ளைங்க ஒட்டாது). பொதுப்படையாப் பேசுங்க.


வயசான முதியோர் வீட்டுலே இருந்தாங்கன்னா, இந்த பதினைஞ்சு நிமிஷப்பேச்சு எவ்வளவு அன்பை வளர்க்குமுன்னு சோதனை செஞ்சு பார்க்கலாமே. இவுங்ககிட்டே பேச என்ன இருக்குன்னு தப்புக் கணக்குப் போட்டுறாதீங்க. நிறையப் பெற்றோருக்கு, இந்த மாதிரிப் புள்ளைங்க வந்து பேசறதுலே கிடைக்கற ஆனந்தம் சொல்லி மாளாதாம்.



துணையோடு பேசும்போதும் அன்னிக்கு நடந்த நிகழ்வுகள், நாள் எப்படின்னு, ச்சின்னச்சின்ன பாராட்டுகள்னு( ஆனாஇது உண்மையானதா இருக்கணும். ச்சும்மா ஆஊன்னு அளக்கக்கூடாது) பேசிப்பாருங்க. நம்ம உண்மையா முயன்றால் நாம் எடுக்கும் ஒரு சின்ன முயற்சியே எவ்வளவோ மாற்றத்தைக் கொண்டு வரும்.



இதைத்தானேங்க, 'முயன்றால் முடியாதது இல்லை'ன்னு சொல்லி வச்சுருக்கு?



ச்சலோ, ஆஜ்ஸே பந்த்ரா யா பீஸ் மினிட், மன் கோல்கி பாத் கரூங்கா:-)))
---------------


எனக்குப் பேசலேன்னா 'பைத்தியமே' புடிச்சுரும். நல்லவேளையா இப்ப ப்ளொக் இருக்கு பேச:-))))


இந்தப் படம் அன்னிக்குப் பூஜையிலே எடுத்தது. முதல் படம் அழைப்பிதழ்

43 comments:

said...

இரண்டு மாடுகளைப் பூட்டிய வண்டி எப்படிக் கஷ்டம் இல்லாம சுமைகளை இழுத்துட்டுப் போகுதோ அதே போல கணவன் மனைவி இருவரும் குடும்ப பாரத்தை சரிசமமாப் பகிர்ந்து இல்லறத்தை நடத்தணுமுன்னு ச்சும்மாச் சும்மா கல்யாண வீட்டு மேடைகளில் மட்டும் முழங்குனா ஆச்சா?//

அதானே..

பேசறது ரொம்ப சுலபம்.. செயல்படுத்தறதுலதான் கஷ்டம்னுதான் பேசிட்டு மட்டும் போயிடறோம்!

said...

துளசியக்கா,

//வீட்டுலே இருக்கறவங்களோடு தினம் ஒரு 15 இல்லே 20 நிமிஷம் பேசுங்க.
A small change in the attitude will make a big difference"

அவர் சொன்னதை யோசிச்சுக்கிட்டெ இருந்தேன்.

குடும்பத்துலே சந்தோஷம் நிம்மதி இருந்தாத்தான் இப்படி தானம் கொடுக்க மனசு வரும். தானம்னு சொல்றதே மனம் கோணாம, 'அய்யோ இப்படிக் காசெல்லாம் கரையுதே'ன்ற புலம்பல் இல்லாம சந்தோஷமாக் கொடுக்கறதுதான்.

இந்த குடும்ப நிம்மதி எப்படி வரும்? குடும்பத்துலே பெண்களுக்கு சம அந்தஸ்த்தும், உரிமையும் கொடுக்கறதாலே வரும்.//

நம்ம நிம்மதிக்கு நாம
முதல்ல செய்ய வேண்டியதுன்னு என்னோட இந்தப் பதிவுல சொல்லியிருக்கேன்
தன்னோடு முதல்ல பேசணும் செய்ய ஆரம்பிச்சுட்டாலே சீக்கிரமாகவே உணர்வோம் A small change in the attitude will make a big difference" அப்படீன்றதை!

said...

துளசி மேடம்
நான் இரண்டாவது. சுண்டலாவது குடுங்க.

/"இந்த அவசர உலகத்துலே உண்மையான தேவை என்னன்னா, ஒருத்தரோடு ஒருத்தருக்குள்ள கம்யூனிகேஷன்.இதுலேயும் நண்பர்கள், கூட வேலை செய்யும் ஆட்கள்ன்னு மத்தவங்களோடு பேச நேரம் இருக்கும்.ஆனா குடும்பத்துலே இருக்கறவங்களோட பேச மட்டும் பலருக்கு நேரமே கிடைக்காது.


வீட்டுலே இருக்கறவங்களோடு தினம் ஒரு 15 இல்லே 20 நிமிஷம் பேசுங்க.
A small change in the attitude will make a big difference"/
உண்மை மேடம்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

அதான் முண்டாசே 'வாய்ச்சொல்லில் வீரரடி'ன்னு பாடிட்டாரே!

திருவள்ளுவரும்,

சொல்லுதல் யார்க்கும் எளியவாம் ........... னு சொல்லிட்டார்.
( முழுக்குறளையும் எழுதுனா, அதுக்கு அர்த்தம் சொல்லணுமுன்னு
ப்ளொக் நியதி இருக்காம்) :-))))))))))

said...

ஹரிஹரன்,

அந்தப் பதிவைப் படிச்சேந்தான். மனசைக் கட்டி நிறுத்தறது இருக்கே.......
அப்பப்பா...........

said...

வாங்க கடலாரே.

சொன்னா நம்பணும். இப்பக்கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் உங்களை நினைச்சேன்.
ஹோம் வீடியோ பார்த்துக்கிட்டு இருந்தப்ப, ஒரு ஸீன் 'போர்ட்'லெ எடுத்துருக்கு.
'எண்டீவர்' மரக்கலம் ( பழைய எண்டீவரின் ரிப்ளிகா) வர்றது எடுத்துருக்கோம்.
டெக் ஆவறதுக்கு முந்தி ரெண்டு பக்கமும் ரெண்டு படகுகள் நின்னு பெரிய த ஹோஸ்லே
தண்ணீர் மழை பொழிஞ்சு வரவேற்பு கொடுக்குது. நியூஸி கடற்படைக் கப்பல் கூடவே வருது.
ஏற்கெனவே போர்ட்லெ வந்துருந்த பாஸெஞ்சர் லைனர் 'மார்க்கொ போலோ'ன்னு
பார்த்ததும் உங்க பதிவுகளும் அதுலெ போடும் படங்களும் நினைவுக்கு வந்துச்சு.
இங்கே வந்து பார்த்தா.......... நீங்களே வந்துருக்கீங்க :-)))

அதுசரி. அங்கெ அவ்வளோ பிரசாதங்கள் இருக்கே. வேணுங்கறதை
எடுத்துக்க வேண்டியதுதானே? எல்லாம் செல்ஃப் சர்வீஸ்தான்:-))))

said...

துளசியக்கா,

நல்ல பதிவு.

//ச்சலோ, ஆஜ்ஸே பந்த்ரா யா பீஸ் மினிட், மன் கோல்கி பாத் *கரூங்கா*:-)))//

இது நீங்கள் சொல்லும் வாசகம்தானே.

பெண்பால் - தன்மையில் பேசும்போது 'கரூங்கி'தான் சரியானதாக இருக்கும். இருப்பினும், இது வங்காளப்பாணி என்று புரிந்துகொள்ளலாம்.

கொல்கத்தாவைச் சேர்ந்த மகளிர் சிலர் இப்படியும் தன்மையை 'ஆ' விகுதியைச் சேர்த்துச் சொல்வார்கள்.

'மன்கோல்கே' அல்லது 'மன்கோல்கர்'
என்பதே சரியானதாக இருக்கும் என்பது எனது கருத்து.

அன்புடன்
ஆசாத்

said...

துளசியக்கா,
நல்லா சொல்லி இருக்கீங்க.. இத்தனை பலகாரமா!! யம்மாடி!!

தந்தேரஸ்னா என்னன்னு தெரியாத நம்மூர்லயும் இந்த பேரைச் சொல்லி ஒரு விளம்பரம் வந்துகிட்டிருந்தது. காழியூர் நாராயணன்ங்கிறவர் வந்து பேசுவார் அதில் (காழியூர் குஜராத்தில் இருக்கா என்ன? இவருக்கு எப்படித் தந்தேரஸ் எல்லாம் தெரியும்? )

"வெள்ளைக்குரிய நாளான தந்தேரஸ் அன்னிக்கு வெள்ளைப் பிளாட்டினம் வாங்கிட்டுவாங்க"ன்னு அவர் சொல்லுறதைக் கேட்கும்போதே எரிச்சலா வரும்! பிளாட்டினம் விளம்பரம் செய்யவேண்டியது தான், அதுக்காக தந்தேரஸ் எல்லாம் எதுவுமே தெரியாத தமிழ்நாட்டுல கூடவா!

said...

துள்சி, நான் பதிவெல்லாம் படிக்கவில்லை. "கொலு" பார்த்து பிரமித்துப் போயிட்டேன் .படத்த பார்க்கும்பொழுதே இப்படி
நாக்கு ஊறுதே, நிஜத்துல சாமிக்கு கீழே
இப்படி எல்லாம் படையல் வெச்சா, சாமியை நினைக்க தோணுமா
:-))))))))))))

said...

வாங்க ஆசாத் தம்பி. என்ன அதிசயமா இந்தப் பக்கம்.!

தமிழ் இலக்கணமே தகராறுன்றப்ப, ஹிந்திக்கு என்னான்னு சொல்வேன்?
நம்ம ஹிந்தியோ, மராத்தி, போஜ்புரி எல்லாம் கலந்துகட்டி அடிக்கிறது.
அதுனாலே ஸப் குச் 'சல்த்தா ஹை'ன்னு இருந்துறட்டுமா? :-)))))

said...

டீச்சர், டௌரி கல்யாணத்தைப் பத்தி நானும் ஸ்ரீராமன் ஸ்ரீதேவின்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். நீங்க கூட அதுல வந்து முழுசு முழுசா முந்திரிப்பருப்பு போட்ட ஜவ்வரிசிப் பாயசத்தை நினைவு படுத்துனீங்களே. :-)

அதென்ன அத்தன அடுக்கு. அத்தன வகை. ஆகாகா...பாக்கவே ஜொள்ளுன்னு இருக்கே.

said...

பொன்ஸ்,

ப்ளாட்டினத்துக்கெல்லாம் கூட ராசி வந்துருச்சா?
துபாய்லே ப்ளாக் கோல்ட்னு ஒண்ணு வந்துருக்குன்னு ஒருத்தர் சொன்னாங்க.
அப்ப, காளி பூஜைக்கு அதை வாங்கிறணுமா? இல்லே, சனி தோஷம் நீங்கவா?

காழியூரார் டிவியிலே வந்து சொன்னா, கொஞ்சம் கவனிச்சுப் பார்த்து எனக்குச் சொல்லுங்கப்பா:-))))))

said...

உஷா,

இந்த வருஷம் ரெண்டு நாளில் பூஜை இருந்துச்சு. வெவ்வேற
குரூப். அதனாலே எல்லாமே குறைஞ்சு போச்சுன்னாங்க. இல்லேன்னா
இதைவிட இன்னும் ரெண்டு மடங்கா இருந்துருக்கும்.

அந்த அடுத்த குரூப்லே பிரசாதத்தை எடுத்து 'சிலை'க்கு ஊட்டிவிடற மாதிரியெல்லாம்
செய்வாங்க.

said...

வாங்க ராகவன்.

இதுதான் அன்னக்கூட் பூஜையாம். அதென்ன கூட்? கூடையா இருக்குமோ?
அன்னக்கூடை?

இல்லாட்டா அன்னக்கூட்டம்? கூட்டமா பலகாரங்கள் இருக்கே:-))))

said...

தந்தேரஸ்ஸைச் சொல்கிறீர்களே, நம்ம அட்சய திருதியை மட்டும் என்னவாம் ? அதுவும் தானம் கொடுப்பதில் ஆரம்பித்து தனம் சேர்ப்பதில் முடிந்த கதை.

இரவு சாப்பாடுபோது அனைவரும் சேர்ந்து பேசியவாறு உண்ணுவது நாங்கள் கடைபிடிக்கும் வழக்கம். என் மைந்தர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

// கணவன் மனைவி இருவரும் குடும்ப பாரத்தை சரிசமமாப் பகிர்ந்து இல்லறத்தை நடத்தணுமுன்னு ச்சும்மாச் சும்மா கல்யாண வீட்டு மேடைகளில் மட்டும் முழங்குனா ஆச்சா?//

அப்படிங்கறீங்க? இனி நானும் என் மனைவியின் பாரத்தைக் கொஞ்சம் சுமக்கிறேன்.

said...

வாங்க மணியன்.

//இரவு சாப்பாடுபோது அனைவரும் சேர்ந்து பேசியவாறு உண்ணுவது
நாங்கள் கடைபிடிக்கும் வழக்கம். என் மைந்தர்களிடமிருந்து நிறைய
கற்றுக் கொண்டிருக்கிறேன். //

இது உண்மையாவே ரொம்ப நல்ல பழக்கம். இப்பதான் இந்த
நேரத்தை பல வீடுகளில் டிவி பிடுங்கிக்கிச்சு போல இருக்கே.(-:

இதுவரை மனைவிக்கு உதவலையா? நிஜமாவா சொல்றிங்க?

said...

ஊரில் சில வீட்டுக்கு எப்ப போனாலும் சாப்பாடு கண்டிப்பா இருக்கும்!

அது போல எங்க துளசிதளம் வீட்டுக்கு எப்ப வந்தாலும் சாப்பிட ஏதாச்சும் கண்டிப்பா இருக்கே! ஆகா நான் என்ன சொல்ல!
அன்ன டீச்சர் சுகி பவ!
அந்தப் ஃபோட்டோவை எடுத்தவரும் சுகி பவ!
பின்னூட்டியவர் எல்லாரும் சுகி பவ!
பாத்துட்டு, சாப்பிடாமப் போனவரும் சுகி பவ!! :-)

said...

//இதுவரை மனைவிக்கு உதவலையா? நிஜமாவா சொல்றிங்க?//

உதவிக்குச் செல்வது வேறு, பாரத்தை பகிர்வது வேறு இல்லையா ? நாளும் செய்யும் வேலைகளில் நிச்சயம் உதவியிருக்கிறேன். ஆனால் வீட்டுப் பொறுப்பு அவங்க தான், நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விசு வசனம் போல.:))

said...

டீச்சர் அதென்ன

//"வோ பந்த்ரா யா பீஸ் மினிட்ஸ்" //

எதுக்கு "சாய்ஸ்" :-))

படம் பளிச்சுனு வந்திருக்கு.

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வீட்ட்ட்ட்ட்!படம்
வயசாகிட்டு வருதில்ல நகந்து போ என்று யாரோ திட்டுவது காதில் விழுகிறது.

said...

//இந்த அவசர உலகத்துலே உண்மையான தேவை என்னன்னா, ஒருத்தரோடு ஒருத்தருக்குள்ள கம்யூனிகேஷன்.இதுலேயும் நண்பர்கள், கூட வேலை செய்யும் ஆட்கள்ன்னு மத்தவங்களோடு பேச நேரம் இருக்கும்.ஆனா குடும்பத்துலே இருக்கறவங்களோட பேச மட்டும் பலருக்கு நேரமே கிடைக்காது.//ரொம்ப சரி.
ஆனா பாருங்க, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு பக்கம் வந்ததும் படையல் போட்டு சலனப் படுத்துறீங்களே!!

said...

//
வீட்டுலே இருக்கறவங்களோடு தினம் ஒரு 15 இல்லே 20 நிமிஷம் பேசுங்க.
//
இனிமேல் இதுபோல் தினமும் பதிவீர்கள்தானே ? (பதிவு எழுதியது எங்களுடன் பேசியது போலவே இருக்கிறது)

said...

வாங்க மணியன்.

அன்பான வார்த்தைகளே பாதி பாரத்தைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு சமம்தான்:-)

said...

KRS,

//ஊரில் சில வீட்டுக்கு எப்ப போனாலும் சாப்பாடு கண்டிப்பா இருக்கும்!//

இது ரொம்ப உண்மை. இப்படிக் கொசுவத்தி வாங்கியே 'திவால்' ஆயிருவேன்
போல இருக்கே!
7 வயசு இருக்கும்போது, பக்கத்துலெ ஒரு கிராமத்துக்கு விருந்தாளியாப் போனேன்.
( கிராமம். உஷா கவனிக்க)
தனியாத்தான். மாட்டுவண்டி சவாரி. ரெண்டு நாள் இருந்துட்டுத் திரும்பிவர்றதா ப்ளான்.
( பாருங்க நம்ம பயணம் அப்பவே ஆரம்பமாயிருக்கு!!)
கூட்டிட்டுப்போனது அம்மாவோட பேஷண்ட் குடும்பம். அந்த ஊர் முழுசும் ஒருத்தருக்கொருத்தர்
உறவுக்காரங்களாம். அந்த வீட்டுப்பிள்ளைகள் & ஊர்ப்பிள்ளைகளோடு சேர்ந்து வீடுவீடாப் போய்
விளையாடுறதுதான் பொழுது போக்கு. யார்வீட்டுக்குப்போனாலும்,'கூடு தினும்மா'தான். எல்லாம்
கம்பஞ்சோறு, களி வகைகள். எந்த நேரமா இருந்தாலும் கூடே கூடு!

நொறுக்குத்தீனிக்கு வழக்கப்பட்ட என் நாக்கு....செத்தே போச்சு.

24 மணி நேரத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியாம அழுது, ஆகாத்தியம் பண்ணி .......

பாவம், எனக்காகவே வண்டி கட்டிக்கிட்டுக் கொண்டுவந்து விட்டுட்டுப்போனாங்க.
அந்த ஊர் டெய்லரை விரட்டி ஒரு மணி நேரத்துலே எனக்குப் புதுக் கவுன் தச்சு வாங்கின்னு....
அமர்க்களம்தான் போங்க.

தனித்தனியா என்ன சுகி பவ? 'சர்வ ஜன'ன்னு போட்டுக்க வேண்டியதுதானே? :-))))

said...

வாங்க மணியன்.
அன்பான வார்த்தைகளே பாதி பாரத்தைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு சமம்தான்:-)

said...

நன்மனம்,

இந்தியர்கள்தான் போயிட்டு வரோமுன்னு சொல்லிட்டு, வீட்டு
வாசலில் நின்னு ஒரு மணி நேரம் பேசுவாங்களாமே:-)))
அதனாலேதான் இந்த 5 நிமிஷம் க்ரேஸ் டைம்.

said...

குமார்,

அது 'யாரோ' இல்லை. என் மனசாட்சி எனக்குச் சொல்லுது. கொஞ்சம் சத்தம் போட்டுச் சொன்னது
உங்க வரைக்கும் கேட்டுருச்சு:-))))

said...

தாணு,

எப்பப்பா வந்துதீங்க? கையில் 'டயட் சார்ட்' வேற இருக்கா?
கரெக்ட்டா வரக்கூடாத இடத்துலே வந்துட்டீங்க? எல்லாம் என் நேரம். கையும் களவுமா .....

ஆமாம். நல்லா இருக்கீங்களா? ஒரு 'பன்னெண்டு மாசம்' இருக்குமுல்லே 'பார்த்து'?

said...

லதா,

பதிவுலேயே பேசிறலாமுன்னு சொல்லிட்டீங்க, ததாஸ்த்து!

said...

//உண்மையிலே இது தனம் வேண்டிச் செய்யும் பூஜை இல்லை. நம்ம கிட்டே இருக்கும் காசு பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, நம்மைவிட ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு 'தானம்' செய்யவேண்டியது நம்ம ஒவ்வொருவருடைய கடமை//
அட, தில்லியில என்ன செய்வாங்கன்னா, தன் தேரஜ் அன்னக்கி உலோகப் பொருள் எதாவது வாங்கினா அது நிறைய சேருமுன்னு, வாங்குவாங்க. காசுள்ளவங்க மஞ்ச உலோகத்தையும்(அதுதாங்க, வூட்டுக்காரரு பாஷையில "தங்கம்") இல்லன்னா வெள்ளக்கல்லுலயும்((அதே, அந்த வைரந்தான்!!!) காசக்கோட்டுவாங்க. இல்லாதவங்க பாத்திரம் வாங்குவாங்க. இந்த பைத்தியம் பிடிச்சு, இங்க உள்ளீஸ்ல போயி பால்பாத்திரம் வாங்குனதுலம் வேற கதை.
நம்ம கிட்டே இருக்கும் காசு பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, நம்மைவிட பலமடங்கு பணம் இருக்கும் மக்களுக்கு இன்னும் கொடுக்கறதும் 'தானம்'தானே!!!!கடமை//
//இங்கே (மேற்படி விஷயம் இல்லாததாலேயோ?)ஆண்களுக்கு முன்னுரிமையாம். ஸ்வாமிநாரயண் சத்சங்க மண்டலியில் இதுதான் 'நியமம்'//
அக்காவ், எங்க ஊருல, இது மட்டுமில்ல ஆம்பிளைகளுக்கு தனியா, பொம்பளைகளுக்கு தனியான்னு வரிசை, இடம் வேற!!!

//ஆனா குடும்பத்துலே இருக்கறவங்களோட பேச மட்டும் பலருக்கு நேரமே கிடைக்காது.//
ம்ஹூம், எங்க வூட்ல இந்த பேச்சு விஷயமெல்லாம் தவறாம நடக்கும், என்ன, நான் பாத்திரத்தோட தண்ணி குழாய்கூடயும், அவரு ரிமோட்டோட டி.விப்பொட்டியோடும்தான்!!!!
இன்னைக்கி ஒரு முடிவு, இனிமே சாப்பாட்டு மேசையில புத்தகமெல்லாம் பகிஷ்கரிக்கப்படும். ஆமா, சாப்பிடும்போது பேசலாமா?

said...

டீச்சர்,
இங்க எங்க வீட்டு கிட்டேயும் ஒரு அக்ஷர்தான் கோயில் இருக்கு. தீபாவளிக்கு அடுத்த நாள் எல்லாம் பக்கமே போக முடியாது. அவ்வளவு கூட்டம். ஒரு பெரிய ஹால் நிறையா இந்த மாதிரி பதார்த்தங்கள் செஞ்சு வைப்பாங்க. போட்டோ தேடி அனுப்பறேன்.

said...

வாங்க கஸ்தூரிப் பெண்ணே.

//அட, தில்லியில என்ன செய்வாங்கன்னா, தன் தேரஜ்
அன்னக்கி உலோகப் பொருள் //

பூனாவிலே நாங்க இருந்தப்பயும் இப்படித்தான் குண்டுமணித் தங்கமாவது
வாங்கணும், அட்லீஸ்ட் ஒரு சின்னப் பாத்திரமாவது வாங்கணுமுன்னு
எல்லாரும் சொல்லி,( இதுதான் சாக்குன்னு) நானும் அந்த ஜோதியிலே
அஞ்சு வருஷம் ஐக்கியமாயிருந்தேன்:-))))

//அதுதாங்க, வூட்டுக்காரரு பாஷையில "தங்கம்"//

இது.................... :-)))))))))))))))))))))))))))

//இன்னைக்கி ஒரு முடிவு, இனிமே சாப்பாட்டு
மேசையில புத்தகமெல்லாம் பகிஷ்கரிக்கப்படும்.
ஆமா, சாப்பிடும்போது பேசலாமா? //

தாராளமாப் பேசலாம். ஆனா வாயிலே இருக்கறதை முழுங்கிட்டு..........:-)))

said...

கொத்ஸ்,

வாங்க. ஊர்ப் பயணம் முடிஞ்சதா? ஜெர்மெனியிலே எல்லாரும் நல்லா
இருக்காங்களா? மாதம் மும்மாரி பெய்யுதா?

உங்கூர்லேயும் 'தீனிக்கொலு' படம் எடுத்தா அனுப்புங்க.
இவுங்க 45 நாடுகளிலே கோயில் கட்டி இருக்காங்களாம்.

said...

என்ன துளசி.. இன்னைக்கி ஒன்னுமில்லையா?

சோகத்துடன்..

said...

//துணையோடு பேசும்போதும் அன்னிக்கு நடந்த நிகழ்வுகள், நாள் எப்படின்னு, ச்சின்னச்சின்ன பாராட்டுகள்னு( ஆனாஇது உண்மையானதா இருக்கணும். ச்சும்மா ஆஊன்னு அளக்கக்கூடாது) பேசிப்பாருங்க. நம்ம உண்மையா முயன்றால் நாம் எடுக்கும் ஒரு சின்ன முயற்சியே எவ்வளவோ மாற்றத்தைக் கொண்டு வரும்.//

ம்ம்ம்ம்..உண்மை...துளசி..இந்த பதிவு அருமை...

"( ஒரு வேளை சாமிக்கு மட்டுமே இது 'தான்' , நமக்குக் கொடுக்கற நாளோ?)

இப்படிதாங்க நாமெலே நம்மல சமாதானம் பண்ணிக்கறோம்..:-))

said...

வாங்க டிபிஆர்ஜோ.
இன்னிக்குக் கொஞ்சம் பிந்திப்போச்சு.(-:

பொருத்தமா ரெண்டு படத்தை வலையேத்த முயன்றதுலே ஒண்ணும்
வேலைக்காகலை. இப்பப் படம் இல்லாமத்தான் போட்டுருக்கேன்(-:
ஒருநாளைப்போல ஒரு நாள் இருக்கா என்ன?

said...

மங்கை வாங்க.

பதிவு பிடிச்சதுக்கு நன்றிங்க.

//இப்படிதாங்க நாமெலே நம்மல சமாதானம் பண்ணிக்கறோம்..:-)) //

இதெல்லாம்தான் நமக்குக் 'கைவந்த கலை'யாச்சேங்க :-))))

Anonymous said...

துளசி அக்கா, உங்க புன்னியத்துல eKalappaiல உழ ஆரம்பித்துள்ளேன். கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் பழகி விடுவேன் எண்ற ஒரு hope இருக்கு. ரொம்ப Thanks. ஒரு test பதிவு போட்டிருக்கேன். படிச்சுப் பாத்து சொல்லுங்க. Apart from that...ur post is great as usual..keep up the good work.

said...

அடி ஆ(அக)த்தீ,
அதுக்குள்ளே கலப்பை புடிச்சு கவிதை
எழுதிட்டீங்க!!!

எல்லாம் நன்மைக்கே:-)))

ஜமாய்ங்க.

said...

ஆனந்த் படம் பார்த்தீங்களா. அதில ராஜேஷ் கன்னா ஒரு குருவை பார்க்க போய் மனசுக்கு ஆசிர்வாதம் தா என்ரு கேட்பதும் தொடர்ந்து அடித்தவர் மனச துன்பப்படுத்தாத நல்ல இனிமையான பேச்சு பேச ஆசீர்வாதம் தா என்று கேட்பது நெகிழ வைத்துவிடும்.

said...

வாங்க பத்மா.
'ஆனந்த்' பார்த்த காலத்துலெ வசனமெல்லாம் ரொம்பப் புரிஞ்சுக்கற அளவுக்கு
ஹிந்தி மாலும் நஹி(-:

இனி எப்பவாவது படம் கிடைச்சாப் பார்க்கணும்தான்.

said...

ஒரு விமரிசனம் அப்ப போட்டுடுவோ.:) நானும் இப்பத்தான் ஆனந்த் பார்த்து புரிஞ்சுகிட்டேன். அடிக்கடி பார்க்கிற லிஸ்டில் உண்டு. பாட்டெல்லாம் அருமை.

said...

பத்மா,

நல்ல ஐடியா. விமரிசனம் போடுங்க பத்மா.
ஆனந்தே ஒரு ஆனந்த ஆரம்பமா இருக்கட்டும்.