Tuesday, November 14, 2006

எடுத்தவுடனே ஒரு புதிர்.



எப்பவும் போலவே ஒரு இலை, தழை,பூவைக்காட்டி இது என்னன்னு கேட்டுட்டுப் போயிருவேன்னு நினைச்சீங்கன்னா.........


அடடா....


இந்த முறை இது என்ன செடின்னு கண்டு பிடிச்சுக் கரெக்ட்டாச் சொன்னா ஒரு பரிசும் உண்டு.


பரிசு என்னமோ ஏதோன்னு கன்னாபின்னான்னு குளம்ப வேணாம்.

நீங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத பரிசுன்னு சொல்லிக்கறேன்.

83 comments:

நன்மனம் said...

வெள்ளை நிறத்தில் பூ இருக்கும்.

"நந்தியா வட்டை"??

ramachandranusha(உஷா) said...

நந்தியாவெட்டை/ அடுக்கு நந்தியாவெட்டை மாதிரி இருக்கு, இலையை கிள்ளினா பால் வந்தா அதேதான்

துளசி கோபால் said...

வாங்க உஷா & நன்மனம்.

விடை= தவறு.(-:

நன்மனம் said...

"நார்தங்காய்"

டிபிஆர்.ஜோசப் said...

தெரியலையே..

கோச்சிக்காதீங்க..

சொன்னாலும் நீயுஜியிலருந்து பரிச அனுப்பவா போறீங்க:)

நன்மனம் said...

எலுமிச்சை.

இன்னிக்கு விடறதா இல்ல :-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

க்ளூ ப்ளீஸ்!
இல்லின்னா நாலு ஆப்ஷன் ப்ளீஸ்!!
:-))

ramachandranusha(உஷா) said...

நன் மனம் சிட்ரஸ் வெரைட்டியாய் இருந்தால், ஆரஞ்சு, துளசி சரியா

இன்பா (Inbaa) said...

//விடை= தவறு.//

நீங்களே விடையை சொல்லிட்டீங்க போல ...

ஷைலஜா said...

எலுமிச்சை அல்லது பம்ப்ளிமாஸ்?:)

ramachandranusha(உஷா) said...

நன் மனம், நார்த்தங்காயின் இலை நீளமாய் இருக்காது, கொஞ்சம் வட்டமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.ஆனா
சந்தேகமாய்தான் இருக்கு, மாங்காய் இலை போலவும் தோணுது

நாகை சிவா said...

மாங்காய்

கதிர் said...

தொட்டி தெரியுது, கூடவே செடி, செடியோட இலையும் தெரியுது, சேர் தெரியுது ஆனா செடியோட பேரு மட்டும் தெரியல!

மாஞ்செடியா இருக்குமோ??

ஹி ஹி

இருக்காது!

நாகை சிவா said...

//மாஞ்செடியா இருக்குமோ??

ஹி ஹி

இருக்காது! //

தம்பி எதாச்சும் ஒன்னு சொல்லுய்யா, இருக்குமோ சொல்லிட்டு அப்புறம் இருக்காதுனா என்ன அர்த்தம். பிச்சு

Hariharan # 03985177737685368452 said...

தேயிலைக் கன்று மாதிரி இருக்கே!
கார்டன் ஃப்ரஷ் டீ டீச்சருக்கு பிடிக்கும்ன்றதாலயா?

இந்த விடைக்குத் தகுந்தமாதிரி படம் இல்லை தப்புன்னா மாத்திக்குங்க. பரிசு எனக்குத்தான் தரணும் துளசியக்கா!

துளசி கோபால் said...

நன்மனம் x 2, KRS., உஷா x 2, ஷைலஜா, நாகை சிவா x 2 ,
தம்பி & ஹரிஹரன்,

நீங்க எல்லாரும் சொன்ன விடை சரி இல்லீங்களே (-:


இன்பா,

செடிக்கு வேற பேர் இருக்குதுங்க:-)))


டிபிஆர்ஜோ,

என்னங்க இப்படி நம்பிக்கை இல்லாமக் கேட்டுட்டீங்க?
நீங்க மட்டும் சரியான விடை சொல்லுங்க, நான் நேரில் வந்தே அந்தப் பரிசைக்
கொடுத்துருவேன், ஆமா.

G.Ragavan said...

என்ன டீச்சர் இது....நட்சத்திர வாரத்துல போட்டியா?

சரி. அது வாதுமைக் கன்று.

நன்மனம் said...

குரோடன்ஸ் வகை!

கதிர் said...

//தம்பி எதாச்சும் ஒன்னு சொல்லுய்யா, இருக்குமோ சொல்லிட்டு அப்புறம் இருக்காதுனா என்ன அர்த்தம். பிச்சு //

ஒன்னுதாய்யா சொன்னேன் புலி!

என்னான்னு கேக்குறியா?

தெரியாது.

நாகை சிவா said...

ஆலங்கண்ணு

நாகை சிவா said...

//என்னான்னு கேக்குறியா?

தெரியாது. //

நான் கேட்கவேயில்லையே, நீனா எதுக்கு பதில் சொல்லுற.....

நாகை சிவா said...

//தேயிலைக் கன்று மாதிரி இருக்கே!
கார்டன் ஃப்ரஷ் டீ டீச்சருக்கு பிடிக்கும்ன்றதாலயா?//

ஏன் ஹரி, தேயிலை இலை இவ்வளவு பெரிசாவா இருக்கும். !!!!

சந்தனமுல்லை said...

முல்லை

துளசி கோபால் said...

ராகவன் & நன் மனம் & நாகை சிவா,

உங்கள் விடை சரி இல்லைங்களே (-:

தம்பி, நீங்களும் புலியும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்க்கறதுக்கு நன்றி:-))))

துளசி கோபால் said...

வாங்க சந்தனமுல்லை.

முல்லை?
ஊஹூம். இல்லை(-:

சந்தனமுல்லை said...

முடக்கத்தான் கீரை

துளசி கோபால் said...

விடையை முடக்கத்தான் இந்தக் கீரையா? :-)

சந்தனமுல்லை said...

மாதுளை கன்று

துளசி கோபால் said...

சந்தனமுல்லை.

ஊஹூம். நோ ச்சான்ஸ்(-:

Viji said...

நித்திய கல்யாணி செடிதானே அது. எதோ மருத்துவகுணம் இருக்குன்னு சொல்லுவாங்க.

நன்மனம் said...

டீச்சர், பேர மறந்துட்டு கண்டுபிடிக்கற டெக்னிக் மாதிரி தெரியுது :-)))))

கைப்புள்ள said...

கனகாம்பரம்

நாகை சிவா said...

//தம்பி, நீங்களும் புலியும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்க்கறதுக்கு நன்றி:-)))) //

தம்பிண்ணன், நான் தான் சொன்னனே, அவங்க நம்ம துளசியக்கா ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டங்கனு. நீ தான் ரொம்ப பயந்த.... எங்கன இருக்க சீக்கிரம் வந்து சேரு....

நாகை சிவா said...

//நித்திய கல்யாணி செடிதானே அது. எதோ மருத்துவகுணம் இருக்குன்னு சொல்லுவாங்க. //

என்ன விஜி, செடி பெயர் கேட்டா ஏதோ ராகம் பெயர் சொல்லுறீங்க....

இதை ஸ்போடிவா எடுத்துக்கோங்க, சண்டைக்கு வராதீங்க... நம்ம வாதம் தான் அப்பவே முடிஞ்சு போச்சே...:-)

சந்தனமுல்லை said...

ஆப்பிள் மரம்

மங்கை said...

துளசி

நானும் நித்திய கல்யாணின்னு தான் நினைக்குறேன்..

இல்லைன்னா, அது என்னது, பிரியாணி இலை.. அந்த செடியா..

குழந்தைகள் தினத்தன்னக்கி இப்படியா ஒரு டீச்சர் எங்களை drill வாங்குவாங்க....

சந்தனமுல்லை said...

வால் நட்

சந்தனமுல்லை said...

ஆலிவ்

dubukudisciple said...

Thulasi akka
idhu oru insulin plant vagai.. diabetesku nallathu.. correct thane..

Eppadi theriyala appadingartha suthi suthi sollitomla

Meenapriya said...

badam maram

Anonymous said...

துளசியக்கா!!
இதுButter Fruit எனும்; அவோக்டட்(avocat) கன்றா!!!!;இலை அதைப்போல் உள்ளது.
யோகன் பாரிஸ்

ramachandranusha(உஷா) said...

பலா கன்று. சரியா????
இப்படிக்கு,
விடா கண்டி

ரவி said...

ஆலமரக்கன்று...

இலவசக்கொத்தனார் said...

தெக்கு கன்னு டீச்சர்.

(தேக்குன்னு எழுத வந்தேன் தெக்குன்னு ஆயிடிச்சு, என்ன கன்னா இருந்தாலும் அங்க இருக்கறதுனால் தெக்கு கன்னுதானே. சரியான விடையைச் சொன்ன எனக்கே பரிசு. டீச்சர், வெளியூரில் இணைய இணைப்பு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு கிளாசுக்கு வந்திருக்கேன். கொஞ்சம் பார்த்து மார்க் போடுங்க.)

மலைநாடான் said...

துளசிம்மா!

கனகாம்பரம். ஓகேயா?

சந்தனமுல்லை said...

தேக்கு
பாக்கு மரக்கன்று

Viji said...

//என்ன விஜி, செடி பெயர் கேட்டா ஏதோ ராகம் பெயர் சொல்லுறீங்க....

இதை ஸ்போடிவா எடுத்துக்கோங்க, சண்டைக்கு வராதீங்க... நம்ம வாதம் தான் அப்பவே முடிஞ்சு போச்சே//

ஹலோ சிவா,
உண்மையிலே அப்படி ஒரு செடி இருக்குதுங்க. அது ஆஸ்த்துமா நோய்க்கு பயன்படுத்தர மூலிகைச் செடி.
அப்புறம் நீங்க என்ன வேனும்னாலும் சொல்லுங்க ஸ்போடிவாவே எடுத்துகிறேன். நான் சண்டைக்கோழி இல்லீங்க. o.k.

துளசி கோபால் said...

ஓ மை டியர் ஸ்டூடண்ட்ஸ்....


நீங்க யாருமே இதுவரை சரியான விடையைச் சொல்லலை.

பரவாயில்லை. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் தரேன்.
நல்லா நிதானமா யோசிச்சுப் பாருங்க.

இதை சிவாஜி, மனோரமா இல்லெ இன்னும் வேற யாராவது சொல்ற மாதிரி
படிச்சுப் பாருங்க. :-))))


யோகன்,
அவகாடோன்னதும் ஞாபகம் வருது ஒரு விஷயம். அந்தக் கொட்டையை நட்டு
வச்சால் முளைக்கும். முயற்சி செஞ்சு பார்க்கலாம்.

Hariharan # 03985177737685368452 said...

//ஏன் ஹரி, தேயிலை இலை இவ்வளவு பெரிசாவா இருக்கும். !!!!//

நாகை சிவா,

புது ஹைபிரிட் தேயிலை ஒரு இலையெலேயே 10 சாயா போட வர்ற மாதிரி கோபால் அங்கிள் துளசிஅக்காவின் சிரமம் தீர்க்க வாங்கினதா இருக்குமோன்னு ஒரு ஆங்கிள்ல யோசிச்சதாலே... சரி நம்ம டீ இலை தீர்க்கதரிசனம் தீஞ்சு போச்சு!

எப்படியும் பாட்டனி க்ளாஸ் ரேஞ்சுக்கு இருக்குற செடி பேரல்லாம் தெரிஞ்சுடும் இன்னிக்கு! நல்ல வேளை இது மால்வேஸி பாமிலி செடியா, பெபெஸி குடும்பமா, சொலனேசி யான்னு சொல்லுங்கன்னு சொல்லலை டீச்சரக்கா!

மக்கள் இல்லைன்னா இந்நேரம் கோதாவுல இருந்து ஓடியிருப்பாங்க!

சந்தனமுல்லை said...

சீதாபழம்

சந்தனமுல்லை said...

சப்போட்டா

சந்தனமுல்லை said...

காப்பி செடி

ஷைலஜா said...

செண்பகமே! செண்பகமே!
சரியா? சரியா?:)
ஷைலஜா

மலைநாடான் said...

ஹையா..மனோரஞ்சிதம்

சந்தனமுல்லை said...

மிளகு

Hariharan # 03985177737685368452 said...

துளசியக்கா,

சும்மாதான் நட்சத்திர வாரம் என்பது அந்த வலைப்பூ வீட்டு விசேஷமாச்சே! இதுவரைக்கும் நீங்க மற்ற வலைப்பூக்கு எழுதிய பின்னூட்டமெல்லாம் மொய்யா திரும்பி சரியா வந்திருக்கான்னு கேட்டு என்சார்பில் கூடுதல் பின்னூட்டம் நட்சத்திரமாகி 100 அடிக்கலைன்னா சரிவருமா?

Anonymous said...

சந்தன முல்லை சொல்வது போல் காப்பிச் செடியோ???
யோகன் பாரிஸ்

சுஜா செல்லப்பன் said...

"மாதுளை" ?????

ALIF AHAMED said...

முதல் படத்துக்கு பின்னாடி தென்னை...!!!

இரண்டாவது படத்துக்கு பின்னாடி நெல்லி..!!!


சோ...

பத்மா அர்விந்த் said...

Indoor Rubber palnt

Anonymous said...

Hello Thulasiakka...Vanakkam....Naan blog worldukku pudhusu...Tamilla blogga aasaithaan...but I dunno how to...aagavay indha Taminglishay konjam marandhu mannichu accept pannikonga..BTW..indha chedi ooru pakkam ennomo solluvainga...iruvaachiyo karuvachiyo...sari thanay...appram ennoda enlipisu blog padichittu unga thoughtsa share pannunga...thanks...I am at http://paradise-within.blogspot.com/

Premalatha said...

coffee plant.

Because I had one in my house (in pot).

:)

தி. ரா. ச.(T.R.C.) said...

atukku najavattai vellai

தி. ரா. ச.(T.R.C.) said...

TEA

ENNAR said...

டீச்சர்
அது மல்லிகை

Deiva said...

Curry Leaves (Kariveppilai)

சந்தனமுல்லை said...

பலா

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

Anitha(Nikki's mom) said...

செண்பகம்?

Anitha(Nikki's mom) said...

கொய்யா?

Machi said...

மல்லி அல்லது வாதுமை

துளசி கோபால் said...

விடையும் விளக்கமும் இதோ ஒரு பதிவாவே வருது.

நீண்டு போச்சுல்லெ?

Anonymous said...

I think it is "Idli Poo" or whatever the real name is.

Priya

Anonymous said...

I think it is "Idli Poo".

ஜெயஸ்ரீ said...

bamboo ????

Anonymous said...

sechhi mantharai illatti mano ranjithamnn correctungala.


Kandippa aaada thdoai illai.
Kanthal malar italgal ippdi irukkum ana sikapaa irukkum konjam so athuvum illai.

துளசி கோபால் said...

மஞ்சூராரே,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

துளசி கோபால் said...

ப்ரியா, பத்மா, அகில், ஜெயஸ்ரீ, பிரேமலதா, குறும்பன், அனிதா & தெய்வா

வாங்க வாங்க. நீங்க எல்லாம் எங்கே ஒளிஞ்சுருந்தீங்க. இப்பத்தான்
உங்க கமெண்ட்ஸ் எல்லாம் நம்ம மெயில் பாக்ஸ் காமிக்குது(-:

பிரேமலதா,
சரியான விடை! உங்களுக்குத் தெரியலைன்னாதான்
ஆச்சரியமா இருந்துருக்கும்.
எவ்வளவு பெரிய செடி வச்சுருக்கீங்க?
காய்க்க ஆரம்பிச்சுருச்சா?

நீங்களும் ஒரு வின்னர்னு 'விடை' யில் அறிவிச்சுடறேன்.

எப்ப நியூஸி வர்றீங்க? காஃபி குடிக்கத்தான்:-))))

துளசி கோபால் said...

சுடர்விழி,

வாங்க. உங்க விடை சரி இல்லை(-:

ஆமாம், ப்ரியா....
அதென்ன இட்லிப்பூ? நம்ம 'குஷ் பூ'வையாச் சொல்றிங்க? :-))))
புதுப்பேரா இருக்கே! ம்ம்ம்ம்...... தோசைக்காய்ன்னு ஒரு காய் இருக்கும்போது
இட்லிப்பூன்னு ஒரு பூ இருக்கக்கூடாதா என்ன? இருக்கும் இருக்கும்:-))))

வடுவூர் குமார் said...

சிங்கப்பூர் ஸ்டைலில்
"ஏதேனும் குலு(clue) இருக்கா?"
நெஜமாலுமே தெரியலீங்க.
:-))

துளசி கோபால் said...

குமார்,

இன்னும் கண்டு பிடிக்கலையா? 'நல்ல தமிழில்' இருக்கு! அதான் கண்டு பிடிக்கக்
கஷ்டமாப் போயிருந்துருக்கும்:-)))

ஓகை said...

//இன்னும் கண்டு பிடிக்கலையா? 'நல்ல தமிழில்' இருக்கு! அதான் கண்டு பிடிக்கக்
கஷ்டமாப் போயிருந்துருக்கும்:-))) //

நான் கவனித்தேன். அதை எழுத்துப் பிழைன்னு நினைச்சுட்டேன்.

தாரா வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

வாங்க ஓகை.

குளம்பியதே குழப்பறதுக்காகத்தான்:-)))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.