Monday, July 29, 2024

பப்படத்தின் புகழைப் பரப்பியாச் ......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 21 )

பொதுவா சாயங்காலம் டீ குடிக்கும்போது எதாவது நொறுக்குத் தீனிக்கு நாக்கு அலையுது. சின்னபுள்ளை காலத்தில் பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு ஓடிவந்ததும், கறுக்குமுறுக்குன்னு நொறுக்ஸ் தின்னுவோமே..... அப்போ ஆரம்பிச்ச பழக்கம்தானே !
டீ வேற ஒரே ஒரு வாய் கொள்ளும் அளவு ! ஒரே தம்லே குடிப்பதால் தம் டீன்னு பெயர் வந்துருக்குமோ ?

ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு ஓஷன்வ்யூ கேஃபே போனோம்.  இங்கே  தினமும் பகல்  12 முதல் ராத்ரி ஒரு மணிவரை 'பாஸ்தா, பீட்ஸா, ஸாலட் பார்' திறந்துதான் வைக்கறாங்க. காஃபி டீ ஜூஸ் எல்லாம் 24 மணிநேரமும் !  ஒரே ஒரு ஸ்லைஸ் பீட்ஸாவை உள்ளே தள்ளிட்டு, ஒரு முழு டீயும் குடிச்சதும்தான் தெம்பு  வந்துச்சு.
கப்பலில் இருந்து  இறங்கி ஊர்சுத்திப்பார்க்க எல்லோரும் போறதில்லை.  விருப்பம் இருப்பவர்கள் மட்டுமே போறோம்.. அதிலும் பலர் ச்சும்மா ஓய்வெடுக்கத்தான் க்ரூய்ஸ்லே வர்றாங்களாம். ஆஹா.... நல்ல ஐடியா ! ஒரு வாரத்துக்கு வீட்டுவேலை, சமையல் கவலை எல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கலாம். துணி துவைச்சுக்கத்தான் கொஞ்சம் சிரமம். இங்கே லாண்ட்ரி சர்வீஸ் இருக்குன்னாலும் செலவு அதிகமுன்னு நினைக்கிறேன்.  சின்னப் பிள்ளைகளோடு பயணம் என்றால் பயன்படுத்திக்கலாம். 
தினசரி நிகழ்ச்சிகள் எல்லாம் எதுவுமே முடங்காமல்  காலை 7 மணிக்கு ஆரம்பிச்சால் நடுராத்ரி தாண்டியும் போய்க்கிட்டேதான் இருக்கு. 18 வயசு முடிஞ்சால் 24 மணிநேரமும்  கொண்டாட்டம்தான் !

நமக்கானது  என்ன இருக்குன்னு பார்த்தால்  வயலின் நிகழ்ச்சி ஒன்னு ஏழுமணிக்கு ஸோல்டைஸ் தியேட்டரில்.  அதுவரை வலைமேய்ஞ்சோம். கடலம்மா அமைதி காத்தாள்.
David Klinkenberg என்ற அமெரிக்கர், வயலின் விற்பன்னர். ஒன்னரை மில்லியன் ரெகார்ட் வித்துருக்காம் ! நமக்காக இங்கே ஒரு மணிநேரம் வாசிக்கிறார்.  ஏழுமணிக்கும், ஒன்பதுக்குமா ரெண்டு ஷோ !  

  

" நீ கொஞ்சநேரம்தான்   முழிச்சுருந்தே. அப்புறம் தூங்கிட்டே"

"இல்லையே.... நான் க்ளிக் செஞ்சுக்கிட்டு இருந்தேனே "

"பாரு... உம் ஃபோனை"

அட !  7.13க்குப்பின் 7. 41 க்குத்தான் அடுத்தபடம் !   கொஞ்சநேரம் வாசிப்பில் மெய்மறந்துருக்கேன் :-)

ஜன்னல்வழியாப் பார்த்தப்ப, இன்னொரு கப்பல் தூரத்தில் !  மெதுவாப் போகுது ! ஹாலண்ட் அமெரிக்கா லைன்.  இப்ப ஒரு புதுக்கவலை.....  வெளியே போனவங்க எல்லோரும் திரும்பி வந்துருப்பாங்கதானே ? 




கொஞ்சம் சுத்தியடிச்சுட்டு அறைக்குப்போய், மகளுடனும், நண்பர்களுடனும்  பேசிக்கிட்டு இருந்தோம். இந்த ஸாடிலைட் வைஃபை இல்லேன்னாக் கஷ்டமாத்தான் இருந்துருக்கும் !
சரியா  ஒன்பதுக்குக் கப்பல் கிளம்பிருச்சு.  நாமும் ராச்சாப்பாட்டுக்குப் போனோம். அதே பருப்பு, வேற பெயரில் ! பப்படம்  பார்த்தப்  பக்கத்து டேபிள் மக்கள், அது  என்னன்னு கேட்டாங்க.  கொஞ்சம் விளக்கம் சொல்லி , ஒரு துண்டு பப்படம் எடுத்து நீட்டினேன்.  சாப்பிட்டுப் பார்த்தவங்க.... எழுந்து போய் ஒரு தனித்தட்டில் நிரப்பிக்கிட்டு வந்தாங்க.  கொஞ்ச நேரத்தில் அக்கம்பக்கத்து மக்கள்  எல்லாம் அப்பளருசியை அனுபவிக்கத் தொடங்கிட்டாங்க. ! 







பொதுவா டைனிங் ஹாலில்  எதிரே இருக்கும் மக்களிடம் சின்னபேச்சு நடக்கும்போது.... அவுங்க கேட்கும் முதல் கேள்வி...  எங்கெ இருந்து வந்துருக்கோம் என்பதே !  நான் நியூஸிலேண்ட் என்று சொல்லிருவேன்.  மக்கள் கண்களில் வியப்பு தெரியும்.  நியூஸியில் எல்லோரும் தலையில் பூ வச்சுக்குவாங்க,  உடையும் விநோதமா இருக்கும்னு நினைச்சுருக்கலாம் !அந்த வியப்பை நான் அனுபவிக்க விடாமல் ஊடே புகும்  நம்மவர், 'நாங்க இந்தியமக்கள். ஆனால் நியூஸிலாந்தில் வசிக்கறோமு'ன்னு  சொல்லுவார். 

இவரே... நாம் இந்தியப் பயணத்தில் இருக்கும்போது யாராவது (முக்கியமாக் கடைக்காரர்கள் )  கேட்டால் இங்கே லோக்கல்தான்னுருவார். (வெளியூர்னு தெரிஞ்சா விலையேத்திருவாங்களாம்! ஹாஹாஹாஹா )

இதுவரைக் கப்பலில் வேற  நியூஸி மக்களைப் பார்க்கலை.  நாலைஞ்சு இந்தியக் குடும்பம் பார்த்தோம். யாருமே இந்திய உடைகளில் இல்லை.  எல்லோரும் அமெரிக்கா மக்கள்.   இன்னும் பலர் கனடாவில் இருந்தே வந்துருக்காங்க.  அதிலும் வன்கூவரில் இருந்தே வந்துருக்கும் கனடியர்களே அதிகம். க்ரூய்ஸ் கப்பல்களில் பலசமயம்,  டிக்கெட் , ரொம்பக் குறைஞ்ச விலைக்கே கிடைக்குதாம்.   ஓய்வெடுக்க  நல்ல சான்ஸ்.  வேறெங்காவது போனால் ஏழு நாட்கள் ஹொட்டேல் வாடகையே  ஆளை அமுக்கிடுதே ! அப்புறம்  மூணு வேளை சாப்பாடு, வெளியே போகவர டாக்ஸி,  பொழுதுபோக்கு , அது இதுன்னு  கூட்டிப்பார்த்தால்   க்ரூயிஸை  விட  மலிவு வேறொன்னுமில்லைதான் !  

க்ராண்ட் ஃபோயரில் ஏதோ ம்யூஸிக்....  அங்கே பாடும் பாட்டில் அரைவாசியை பாடகரும் மீதியை ரசிகர்களுமாப் பாடி முடிக்கணுமாம் ! நாம் வேடிக்கை மட்டும்!  லாக்கெட்ஸ் ஆஃப் லக்ஸரி ன்னு அன்றைய ஃப்ரீ சார்ம்  இன்றைக்கு ரெண்டு முறை,    பகலிலும் இரவிலுமா பத்தரை முதல்  12 வரை.     

பகலில் நிறையப்பேர் வெளியே போனதால்.... கெஸினோ, நகைக்கடை எல்லாம் ராத்ரி பத்துக்குமேல் திறந்தாங்க.  கடைகள்  எல்லாம் ஒவ்வொரு நாளும் வெவ்வேற டைம்லே !


கிடைச்ச இண்டு இடுக்குகளில் எல்லாம் ஷோ கேஸ் சமாச்சாரங்கள்.... வேணுமுன்னால் வாங்கிக்கலாமாம். கண்ணாடி உலை சமாச்சாரங்கள் நல்லாதான் இருக்கு ! நாம் செஞ்சதை நாமே எடுத்துக்கலாம் !

தொடரும்............ :-)

8 comments:

said...

அருமை நன்றி

said...

வயலின் நிகழ்ச்சி , பாட்டு பெயின்டிங் படங்கள் என கண்ணுக்கும் காதுக்கும் விருந்து.

அத்துடன் உணவும் . பப்படம் சமாச்சாரம் நீங்கள் கூறியவுடன் தட்டுகாலியாகி இருக்கும். மீண்டும் பப்படம் பொரித்து போட்டிருப்பார்கள்.நாளைக்கு பொரிக்க கைவசம் வைத்திருப்பார்களா:) தெரியவில்லை.

கண்ணாடி உலையும் நன்றாகவே இருக்கிறது.

said...

ஓய்வு எடுப்பதற்காகவே கப்பலில் பயணம் - நல்ல ஐடியா தான்.

பப்படம் புகழ் பரப்பியாச் - ஆஹா... மகிழ்ச்சி. இங்கே பாப்பட்! :)

படங்களும் தகவல்களும் சிறப்பு.

said...

வயிற்றுக்கும் காதுக்கும் உணவு... கப்பல் பிரயாணம் மெல்லிய தூளியாட்டலாய் தூக்கம்... அனுபவி ராஜா அனுபவி என்று பாடினீர்களா?

said...

வாங்க விஸ்வநாத், நன்றி

said...

வாங்க மாதேவி,

என்ன ஒன்னு பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு ரொம்பவே போர்தான். பழக்கமில்லாத சங்கீதம் பாருங்க......
மறுநாளும் பப்படம் வச்சுருந்தாங்க. நிறைய ஸ்டாக் இருக்கணும் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

எனக்கும் அந்த ஐடியா ரொம்பவே பிடிச்சுருந்தது ! நியூஸி டு ஃபிஜி ஒரு க்ரூய்ஸ் இருக்கு. மனசுலே வச்சுருக்கேன். என்ன ஒன்னு அதெல்லாம் ஓப்பன் ஸீ..... டேஷ் பயம்தான்.

said...

வாங்க ஸ்ரீராம்,

தூளியாட்டமெல்லாம் இல்லை. சாதாரணமா தரையில் நடப்பதைப்போல்தான். அன்று பகலில் நடை அதிகமாப் போனதாலும், சின்னப் பகல் தூக்கம் இல்லாமல் போனதாலும் உடல் தளர்வு. வயசாகுதே....