Thursday, July 25, 2024

மூணாம் நாள்தான் முதல் ஊர் .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 19 )


 காலை அஞ்சு மணிக்கே சூரியன் பளிச் !   
கொஞ்ச நேரம் ஆகட்டும்னு வெளியே ஒரு கண்ணும், வலையில் ஒரு கண்ணுமா படுக்கையிலேயே இருந்தால்..... இன்னொரு மிதக்கும் நகரம் கண்ணில் பட்டது !  ஹா....
Holland America Line.... நாம் போற இடத்துக்கு அவுங்களும் போறாங்க போல.... ரெண்டு நாளாக் கண்ணில் படாம இப்ப திடீர்னு பார்த்ததும் வியப்புதான் !
நேத்துப்போலவே காலை ஏழு மணிக்கு ஃபிட்னஸ், யோகா, மெடிடேஷன் இன்னபிற வகுப்புகள் ஆரம்பிச்சுருது.  நாங்க எட்டரைக்குக்கிளம்பி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு ஓஷன்வ்யூ கெஃபே போனோம். முதலில் இண்டியன் அப்புறம் மற்றவைன்னு போனால் கஞ்சி வச்சுருக்காங்க. கஞ்சிக்கே ஒரு ஸ்டேஷன் !


கஞ்சியும் கட்டித்தயிரும் அட்டகாசமா இருக்கு! முதல்முறையா இந்தமாதிரி ஒரு கஞ்சி !  ஊருக்குப்போனாட்டு செஞ்சு பார்க்கணும். அப்புறம் கொஞ்சம் பேக்கரி சமாச்சாரம்னு ஆச்சு எனக்கு.  நம்மவரோ பேக்கரி & ஃப்ரூட்ஸ்.


பத்து மணி ஆச்சுன்னு தியேட்டருக்குப் போனோம். Fire & Ice with Milos . நேத்து  இவருடைய விரிவுரைதான் கேட்டோம்.  Milos Radakovich . Science Educator & Coastal Biologist for more than 50 yrs. On-board Naturalist for Celebrity Cruises.   இவர் ஒப்பந்தப்பணியில் நியமம் னு நினைக்கிறேன்.இந்தக் கம்பெனி ஒரு பதினாலு க்ரூய்ஸ் கப்பல்கள்  வச்சுருக்கு. ஒன்னு மாத்தி ஒன்னுன்னு லெக்ச்சர் கொடுத்தால் ஆச்சு !  ரொம்பவே சுவாரஸ்யமான சமாச்சாரம் இன்றைக்கு.  உலகப் பாடம் ! கோண்ட்வானா காலத்துலே இருந்து ஆரம்பிக்குதுன்னு நினைச்சால்..... அதுக்கும் முன்னால்  Laurasia  ... 250 Millian Years ago..... !  ஒருவேளை க்ருத யுகம் ஆரம்பமாகவும் இருக்கலாம் !!!!    நமக்குத் திரும்பக் கல்லூரி காலம் நினைவுக்கு வந்தது ! சரியா  ஒரு மணி நேரம் !







வெளியே தியேட்டருக்கு எதுத்தாப்லெ Entertainment Court னு ஒரு இடத்துலே Bocce  Game  நடக்குது.  நாஞ்சொல்லலெ.... மணிக்கொரு ஆக்டிவிட்டின்னு மக்களை பிஸியா வச்சே ஆகணுமுன்னு ! அதேதான். இதை எங்கே வேணுமுன்னாலும் ஆடலாம்தான்.  நம்ம வீட்டிலும் கூட !   குட்டியா இருக்கும்  வெள்ளைப்பந்து பெயர் Jack.   எட்டு பெரிய பந்து நாலு ஜோடி. இதுக்குன்னு தனியான வகை.  ஒரு பக்கம் மட்டும் உள்ளே கனமாக் கொஞ்சம் வெயிட்   வச்சுருப்பதால், உருட்டிவிடும்போது ஒரு பக்கமா சாய்ஞ்சு  உருண்டோடும்.    இதுபோய்  வெள்ளைப்பந்தாண்டை நிக்கணும். இடிச்சாலும் சரி.  ஹாஹா

சின்ன இன்டோர் டென் பின் பௌலிங் செட் , வீட்டுலே விளையாடறோமே... அதைப்போலத்தான்.  போனவருஷம் இது ஒரு செட்,  பூனைக்கடையில் ஆப்ட்டதுன்னு வாங்கினேன்.  அதுலே மூணே மூணு பின்ஸ் எடுத்து, போனவருஷ புரி ரதயாத்ராவுக்கான  பலராமன், சுபத்ரா & க்ருஷ்ணன்  அலங்காரம் செஞ்சாச். இனி நம்ம வீட்டுலே செவன் பின் பௌலிங்தான். 

க்ராண்ட் ஃபோயரில்  Bean Bag Toss  Challenge. Officers Vs Guests. இதை நான்  க்ரௌஸ் மௌன்ட்டென்,வன்கூவர்லே விளையாடியாச் !
Effy Boutique (நகைக்கடை)லே இலவச சார்ம் கலெக்‌ஷன் பத்தரை முதல் பனிரெண்டுவரை. கூடவே  யெல்லோ டைமண்ட் ஈவண்ட்டும். சார்ம் வாங்கப்போனால் அட்டகாசமான நகைகள்  வச்சுருக்காங்க. க்யூட்டா ஒரு நெக்லெஸ் இருக்கு ! ஆறாயிரமாம். இன்றைக்கு மூவாயிரத்துக்குத் தர்றாங்களாம். 'அட ! 'ன்னு  ஒரு சில க்ளிக்ஸ். (மட்டும்)

அறைக்குப்போயிட்டோம்.  நகையைப் பத்திப் 'பேசணும்' இல்லையா ?  :-)
கரை சமீபிக்குது போல..... தூரத்துலே மலைகள்,  மரக்கூட்டங்கள். சின்னப்படகுகளின் நடமாட்டம்.


மொட்டைமாடிக்குப்போய்ப் பார்க்கலாமுன்னு போனோம்.  திமிங்கிலம் பார்க்கத் தனிப்பட்டப் படகுகளில் மக்களை ஏத்திக்கிட்டுப்போய்க் காண்பிக்கும் படகுகள் அங்கங்கே !  ஒரு படகு திமிங்கிலத்தின் சமீபமாப் போகுது !  இதுகளும் பாருங்க....  தலையை வெளியே காட்டாமல் தண்ணீருக்கடியிலேயே  நீந்திப்போகுதுகள். எப்பவாவது  போனால் போகுதுன்னு கொஞ்சம் வாலைக் காமிக்கும் !  இந்தரெண்டு க்ளிப்பில் கூட முதல் வீடியோவில்  2.24  நிமிட்டிலும், இரண்டாவதில்  1.17 நிமிட்டிலுல் கொஞ்சம் வால் காட்சி ! 

https://www.facebook.com/1309695969/videos/1489559494971430/

https://www.facebook.com/1309695969/videos/1190552759025105/


கொஞ்ச தூரத்தில் இன்னொரு கப்பல் நங்கூரமிட்டு நிக்குது.  நம்ம ஸெலிப்ரிடி கம்பெனி கப்பல்தான். கொஞ்சம் சின்னது.  ஸெலிப்ரிட்டி சம்மிட் !
இன்றைக்கு நாம் ஐஸி  ஸ்ட்ரெய்ட் பாய்ன்ட் (Icy Strait Point  )என்ற  இடத்தில்  போய் இறங்கறோம். இங்கே    ரெண்டு வெவ்வேற இடத்தில்  இறங்கும் வசதி உண்டு.  Wilderness Landing Dock காட்டுப்பக்கம் போகும் மக்களுக்கான  வழி. இன்னொன்னு இறங்கி ஊருக்குள் போகும் வழி.  
இந்தப் பகுதி முழுக்க  நேடிவ் மக்கள் கட்டுப்பாட்டில் இருக்கு.  தனிப்பட்ட கப்பல்களுக்கான   நிறுத்தங்கள் இவை.

பகல் ஒன்னரை மணிக்கு இங்கே நம்ம கப்பல்  நிறுத்தம். அதுக்குப்பின் க்ளியரன்ஸ் சமாச்சாரங்கள் எல்லாம்  நடக்கணும்.  வெளியே நம்மை அனுப்பும் நேரத்தை அப்புறமாச் சொல்வாங்களாம். தனிப்பட்ட முறையில் சின்னப்படகுகளில் போய் திமிங்கிலம் பார்க்கவோ, கடலில் சுற்றிவிட்டு வரவோகூட சைட்ஸீயிங் டூர்,  நம்ம கப்பலில் இருக்கும் டூர் ஆஃபீஸில் புக் பண்ணிக்கலாம். இவுங்க படகுக்குள் இறங்க ஏறன்னு தனியா ஒரு பாலம் கூட இருக்கு !

நாமும் லஞ்சு முடிச்சுட்டு ரெடியா இருக்கணும், இல்லையா ? இப்பதான் தயிர் இருக்குமிடம் தெரிஞ்சு போச்சே.... எனக்குத் தச்சு மம்மு ! கொஞ்சம் காய்கறிகள் !  சாப்பாடானதும் திரும்ப மொட்டை மாடி(இதே பதினாலுதான் ! )
நிறையப்பேர்  இருக்கானுங்க. ஆனால்  தலையைத் தூக்காம ஒரே அடக்கமாப் போறானுங்க. 

ரெண்டரைக்கு வெளியே போகலாமுன்னு செய்தி கிடைச்சது. ரெண்டாம் மாடிக்குப் போகணும். அங்கே போனால் நாலைஞ்சு பேர் ஸ்கேன் பண்ணும் வேலையில் . நம்ம ரூம் சாவிஅட்டையைக் கொடுத்தால்....  கம்ப்யூட்டர் நம்ம ஜாதகத்தைப் ஃபோட்டோவுடன்  சொல்லுது. நம்ம மூஞ்சுதானான்னு செக் பண்ணிட்டு போகவிட்டாங்க. 
ஏற்பாடுகள் எல்லாம் பக்காவா இருக்கு !  பாஸ்போர்ட், விஸா, ட்ரைவிங் லைஸன்ஸ் போன்ற டாக்குமெண்ட் கையில் வச்சுக்கணும்.  எட்டரை மணிக்குள்ளே திரும்ப வந்து சேர்ந்துரணும்.  ஒரு வேளை அப்படி வராமல் போனால்.... கப்பல் உங்களுக்காகக் காத்திருக்காது. அடுத்த நிறுத்தத்துக்கு உங்க சொந்த காசுலே, நீங்களாவே  வாகனம் ஏற்பாடு பண்ணி வந்து சேரணும்.  (ஞாபகம் வச்சுக்குங்க.... சின்ன விமானமோ படகோ கிடைச்சால் உங்க அதிர்ஷ்டம் !)

சரி. சரின்னுட்டு வெளியே காலெடுத்து வச்சோம். !   

தொடரும்.......... :-)

8 comments:

said...

பொழுது போகத்தான் எவ்வளவு வழிகள் கப்பலில்...  திமிங்கிலங்கள் போனால் போகட்டும் என்று வேடிக்கை பார்க்கும் மக்களை விட்டு விட்டு போகின்றன போலும்.  ஜாஸ் திரைப்படம் போல ஆனால் என்ன ஆவது!

said...

ஸ்வாரஸ்யமான தகவல்கள். போனால் போகிறது என்று டால்ஃபின் பார்க்க அனுமதித்திருக்கிறது! எத்தனை எத்தனை பொழுதுபோக்கு வசதிகள் கப்பலுக்குள் - அவை இல்லை எனில் போரடித்துவிடுமே!

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

பொழுதுபோக்கும் வகைகள் இவ்வளவு இல்லையெனில், சனம் பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டாதா என்ன ?

என்ன ஒன்னு, இன்னும் கொஞ்சம் இளவயதாக இருக்கும்போதே போயிருந்தால் நாமும் இவைகளில் பங்கு பெற்று பொழுதைப் போக்கியிருக்கலாம் !

பொதுவாகத் திமிங்கிலங்கள் யாரையும் உபத்ரவிக்காத பிறவிதான் ! சுறா மட்டும்தான்....பயங்கரம் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஆஹா.... டால்ஃபின் கண்ணில் பட்டதா !!!

இந்தப் பதிவில் திமிங்கிலம் வால் தெரிஞ்சதோ ?

இவ்வளவு பொழுதுபோக்கில்லைஎன்றால் சனம் துடிச்சுரும்!!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

திமிங்கிலம் கண்ணாமூஞ்சி காட்டுகிறது போல் தெரிகிறது.

கப்பல் பயணமும் விளையாட்டுகளும் நல்ல பொழுதுபோக்குத்தான்.

said...

வாங்க மாதேவி,

திமிங்கிலங்கள் எப்போதும் தண்ணீருக்கடியிலேயேதான் ! வால் தூக்கிக் காண்பிப்பதுதான் அவைகளுடைய வரவேற்பு :-)