கப்பல் நகர ஆரம்பிச்சதும் மனசுக்குள்ளே ஒரு பயம் வந்துச்சு. 'மாத்திரை எப்போ போட்டுக்கணும்'னு கேட்டதுக்கு..... 'இப்ப வர்றமாதிரி இருக்கா'ன்னார் நம்மவர்! சேச்சே.... இல்லை. ச்சும்மா ஒரு பயம்....
சரி, நாம் போய் ஒரு டீக்குடிச்சுட்டு வரலாமுன்னு (கையோடு நம்ம குட்டி ஃப்ளாஸ்கையும் எடுத்துக்கிட்டு ) டீக்கடை நோக்கிப்போனோம். அதே பதினாவது மாடிதான். ஓஷன்வ்யூ கேஃபே. கப்பல் மாடி எண்களில் பதிமூணு கிடையாது. அச்சானியமாம் ! (உண்மையில் இது பதிமூணுதானே....? பதினாலுன்னு போட்டுட்டா ஏமாந்து போயிருமா அந்த அச்சானியம் ? )
காஃபி, டீ, ஜூஸுக்குன்னு ஒரு இடம் ரெஸ்ட்டாரண்டுக்குள்ளே தனியாக இருக்கு. 24 மணி நேரமும் திறந்தேதான் இருக்குமாம் ! கப்பலில் இருக்கும் ரெஸ்ட்டாரண்டுகள் எப்பப்பத் திறந்துருக்குமுன்னு விவரங்கள் இருக்கு, தினப்படிப் பயணத்துக்கான நியூஸ் லெட்டரில்.
அந்தக் கணக்குப்படி ஓஷன்வியூ கேஃபேவில் காலை ப்ரேக்ஃபாஸ்ட் 7:30 - 10, லஞ்ச் 11.30 - 2: 30, டின்னர் சாயங்காலம் 6 - 9:15. பின்னே ஸ்நாக்ஸ் டைமுன்னு பார்த்தால் மாலை 4 முதல் 5 டீ . பாஸ்தா, பீட்ஸா & ஸாலட் பார் , பகல் 12 முதல் ராத்ரி 1 மணிவரை, ஐஸ்க்ரீம் & ஃப்ரோஸன் தயிர் பகல் 12 முதல் ராத்ரி 10 வரை, இதெல்லாம் தவிர செஃப்'ஸ் லேட் நைட் செலக்ஷன் ராத்ரி 10 முதல் 1 மணிவரை.
' இதெல்லாம் இருக்கு.... உனக்கு எது வேணுமோ அப்பப்போய் தின்னுக்கோ'
ஆனால் நமக்கோ இருப்பது ஒரு வயிறு. அதுவும் வயசான வயிறு..... ப்ச்....
இன்னும் நாலைஞ்சு ரெஸ்ட்டாரண்டுகள் இருந்தாலும் நம்ம சாய்ஸ் ஓஷன்வ்யூதான். இதுக்குன்னு தனியா ஆடை அலங்காரம் பண்ணிக்கிட்டுப்போக வேணாம். நேரம் புக் பண்ணிக்க வேணாம். கப்பல் க்ரூவே இங்கேதான் சாப்பிடறாங்க என்பதால் வயிறுக்கு ஆபத்தில்லாத உணவு. முக்கியமாத் தனியா காசு கொடுக்க வேணாம். ஆங்.... சொல்ல மறந்துட்டேனே....
கப்பலில் எதுக்கும் உடனே கைக்காசைக் கொடுக்க வேண்டியதே இல்லை. நம்ம ரூம் சாவியா இருக்கும் அட்டைதான் எல்லாத்துக்கும். குடியோ, ஸ்பெஷல் தீனியோ, நகையோ, நட்டோ எதுக்கும் இந்த அட்டைதான். பதினாலு Bபார் இருக்குன்னா பாருங்க..... கப்பலை விட்டு இறங்குமுன் கணக்கு செட்டில் பண்ணால் போதும்!
டீக்கடையில் வச்சுருக்கும் பால்களில் எதுவுமே சூடா இருப்பதில்லை. பச்சைப்பால்தான். அதைக் கலந்தால் டீ ஆறித்தான் போகுது. நமக்கோ இது அவ்வளவாப் பிடிக்கறதில்லையே.... சூடான பால் வேணுமுன்னு பணியாளரைக் கேட்டதும் பாரில் கிடைக்கும், வாங்கிக்குங்க என்றார். அங்கே கப்புச்சீனோ செஞ்சு கொடுக்கப் பாலைக் காய்ச்சும் மெஷீன் இருக்குல்லே ! நம்ம ஃப்ளாஸ்கை (சின்னதுதான்) நிறைச்சுக் கொடுத்தாங்க. கூடவே ஒரு பேப்பர் கப்பிலும். அப்புறம் அந்த உதவியாளரே.... பாரில் பாலுக்குத் தனியா சார்ஜ் உண்டு. நீங்க பேக்கரி செக்ஷனில் சூடு பால் எடுத்துக்கலாமுன்னு உபாயமும் சொன்னார் ! நோட்டட் !
டீ குடிச்சுட்டு, இதே மாடியின் வெளிப்பகுதிக்குப்போய் வேடிக்கை பார்த்துட்டுக் கீழே கொஞ்சம் சுத்தலாமேன்னு அஞ்சாம் மாடிக்குப் போனால் ஒரு பெரிய க்யூ நிக்குது. என்ன ஏதுன்னு விவரம் கேட்டால் ஃப்ரீ சார்ம் கலெக்ஷனாம். என்னன்னு புரியாம நாமும் வரிசையில் போனோம்.
லாக்கெட் ஆஃப் லக்ஸரீ ன்னு பெயர். அந்த லாக்கெட்டில் நிரப்பும் சார்ம். லாக்கெட் எங்கேன்னு கேட்டதுக்கு உங்க ரூமில் வச்சுருக்கோம்னு சொல்றாங்க. அப்படி என்னதான் சார்ம்னு பார்த்தால் நம்ம ஸ்டிக்கர் பொட்டு மாதிரி ஒன்னு. (ஙே) இது ஒரு நகைக்கடை ! நல்ல ஸ்டெர்லிங் ஸில்வர் ப்ரேஸ்லெட்டும், அதுலே போட்டுக்க அஞ்சு சார்ம்ஸும் விக்கறாங்க. அறிமுக விலைன்னு பத்தே டாலர் ! ( கப்பலுக்குள் எல்லாம் அமெரிகன் டாலர்தான் ) நல்லாதான் இருக்கு. மகளுக்கு வாங்கியாச்.
நாகாபரணங்கள் சூப்பர் ! வாங்கலை. க்ளிக்ஸ் மட்டுமே ! நம்ம நாகம்மாவுக்கு இவுங்களும் நாகான்னே பெயர் வச்சுருக்காங்களே !!!
கீழே க்ராண்ட் ஃபோயர்னு ஒரு இடம் மூணாவது மாடியில் இருக்கு ! மேலே 12 வது மாடிவரை தடை ஏதுமில்லாத உசரக்கூரை . லிஃப்டில் வரும்போது எந்த மாடியில் இருந்து பார்த்தாலும் தெரியறமாதிரி! நடு முற்றம்னு சொல்லலாம். அங்கே போய்ச் சேர்ந்துக்க ஒவ்வொரு மாடியிலும் படிகள் இணைப்பு இருக்கு. பயணம் வருமுன் வலையில் மற்ற கப்பல்களின் அலங்காரத்தைப் பார்த்ததில் இது ரொம்பவே சுமார்தான். ரொம்பப் பழைய கப்பலாச்சேன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன். அங்கே ஏதோ நிகழ்ச்சிக்கு தயார் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.
கொஞ்சநேரம் கெஸீனோவுக்குப்போய் மெஷீன்ஸ் எல்லாம் வேலை செஞ்சுக்கிட்டு இருக்குன்னு பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டேன்.
இன்னும் கொஞ்ச நேரத்துலே மேஜிக் ஷோ ஆரம்பிக்கப்போகுதுன்னு தியேட்டருக்குப் போயிட்டோம். சிங்கப்பூர்க்காரர் Jeremy Tan. மைண்ட் ரீடிங் போல நாம் எழுதி அனுப்பும் எண்களையெல்லாம் சொல்றார்! ஒரு மணிநேரம் ஷோ !
இப்ப கடைகள் எல்லாம் திறந்துருக்கு ! வாட்ச் கடையில் லக்ஸ்ரி கடிகாரங்கள். நம்ம நண்பர்களில் கடிகாரப்பிரியர்கள் நினைவு வந்தது உண்மை. முக்கியமா அபுல்கலாம் ஆஸாத் தம்பி. சீட்டுலே அறை எண்ணை எழுதிப்போட்டாக் குலுக்கலில் கடிகாரம் பரிசாம். ச்சும்மாப் போட்டுவச்சோம்.
கீழே கச்சேரி. பயணிகள் சிலர் ஆடிக்கிட்டு இருக்காங்க. பத்து நிமிட் நின்னு பார்த்துட்டு டின்னருக்குப் போயிட்டோம். வெஜி பீட்ஸா & ஐஸ்க்ரீம்.
ரொம்ப சுத்தியாச்சு. போதுமுன்னு அறைக்குப்போனோம்.
படுக்கை விரிப்புகளையெல்லாம் சரியாக்கி நீட்டாக்கி வச்சுட்டு, மறுநாளைக்கான நியூஸ் லெட்டர், என்ன செய்யலாம் என்றவைகள் இருக்கும் அச்சிட்ட தாள்களை வச்சுட்டுப்போயிருக்கார் , நம்மை கவனிச்சுக்கறவர் ! ரொம்ப நல்லது. படிச்சுப் பார்த்து நமக்கானவைகளைத் தெரிவு செஞ்சுக்கலாம். தினமும் அன்னாடச் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செஞ்சு அனுப்பறது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு !
வெராந்தாவில் நின்னால் கும்மிருட்டில் கடல்.
தொடரும்........:-)
9 comments:
கும்மிருட்டில் கடல்... ஆஹா...
ஒரு முறை அந்தமான் பயணத்தில் இப்படி மாலை சூரிய அஸ்தமனம் சமயத்தில் கடலில் பயணம் செய்தோம் - நம் கண்முன்னே கடலில் சூரியன் மறையும் காட்சி - என்றைக்கும் மறக்க முடியாத அனுபவம்.
கடலில் பயணித்தபடியே கப்பலில் இருந்த அனுபவம் - தொடர்கிறேன், இன்னும் தெரிந்து கொள்ள.
அருமை நன்றி
உள்ளே எவ்வளவு கடைத்தெரு ஜாலிக்கல் இருந்தாலும் கடலுக்கு நடுவே சென்று கொண்டிருக்கிறோம் என்பதே த்ரில். இது உங்களுக்கு எத்தனையாவது கடல் பயணம்? பணியின் ஆரம்ப கட்டத்தில் ஆறு மாதங்களுக்கு கப்பலில் வேலை என்ற ஆஃபர் ஒன்று வந்தது. விண்ணப்பித்தேன். கிடைக்கவில்லை!
வாங்க வெங்கட் நாகராஜ்,
சூரிய உதயமும் அஸ்தமனமும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அதுவும் எந்த தடையும் இடையில் இல்லாமல் கடலில் என்றால் அதற்கீடு உண்டோ !!!!
ஆஹா...........
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஸ்ரீராம்,
கடலைப் பார்த்தபடியே இருந்தால்தான் கடலில் இருக்கோம் என்ற த்ரில் வரும். கண்ணில் படவில்லை என்றால் பெரிய கட்டடம் / மால் வகைகளில் இருப்பதைப்போல்தான் உணர்வோம். என்ன ஒன்னு கப்பல் ஆடாமல் போகணும். பெரிய குலுக்கல் என்றால் டேஷ் நிச்சயம்.
நிறைய முறை ஃபெர்ரியில் போயிருந்தாலும் அதிகப்பட்சம் போனது மூணரை மணி நேரம்தான். அதிலெல்லாம் கூட எனக்கு டேஷோ டேஷ்தான்.
கப்பல் வேலை என்றால் ஆறுமாசம் வேலை, ஆறுமாசம் லீவு என்பது கவர்ச்சியாக இருந்தாலுமே கொஞ்சம் போர்தான் என்பது என் எண்ணம்.
// கப்பல் வேலை என்றால் ஆறுமாசம் வேலை, ஆறுமாசம் லீவு என்பது கவர்ச்சியாக இருந்தாலுமே கொஞ்சம் போர்தான் என்பது என் எண்ணம். //
உண்மைதான். ஆனால் அது சீசனல். முஸ்லிம்களின் யாத்திரையோடு சம்பந்தப்பட்டது. ஆனாலும் அந்த அலர்ஜிகளிலிருந்து கடவுள்தான் என்னை காப்பாற்றி இருக்க வேண்டும்!
// கப்பல் வேலை என்றால் ஆறுமாசம் வேலை, ஆறுமாசம் லீவு என்பது கவர்ச்சியாக இருந்தாலுமே கொஞ்சம் போர்தான் என்பது என் எண்ணம். //
உண்மைதான். ஆனால் அது சீசனல். முஸ்லிம்களின் யாத்திரையோடு சம்பந்தப்பட்டது. ஆனாலும் அந்த அலர்ஜிகளிலிருந்து கடவுள்தான் என்னை காப்பாற்றி இருக்க வேண்டும்!
கப்பல் பயணமும் மேஜிக் ஷோ , கடிகாரம் பரிசுகள் என நாமும் சுற்றி வந்தோம்.
Post a Comment