சிங்கைச் சித்ரா ரமேஷ் வீட்டிலிருந்து கிளம்பி லிட்டில் இண்டியா ஸ்டேஷன் வந்துட்டோம். எதோ சீன விழா நடக்குது போல.... ஏற்பாடுகள் பலம்!
இன்றைக்கு இனி வேறெங்கும் போக முடியாது. சாயங்காலமா நம்ம கஸ்தூரியும் சுப்ராவும் நம்மைச் சந்திக்க வர்றாங்க.
கஸ்தூரி அவர்கள்தான் முன்னொரு காலத்தில் நம்ம வீட்டுப் பூஜைகளுக்கான பண்டிட் தெரியுமோ? லேடி பண்டிட் என்னும் புரட்சியைச் செஞ்சவங்க நாங்கதானாக்கும் :-)
இவுங்க சிங்கை மக்கள்தான். ஆனால் நம்மூரில்தான் இருந்தாங்க. அப்புறம் ஆக்லாந்து நகருக்கு மாறினாங்க. இப்ப சிங்கையிலும், நியூஸி ஆக்லாந்திலுமா காடாறு மாசம் நாடாறு மாசம்னு ஓய்வு வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. (எது காடு, எது நாடுன்னு கணிப்பதுதான் கஷ்டம்! என்னைக்கேட்டால்... நியூஸியின் குளிர்காலம்தான் காடு. ) நியூஸியில் இருக்கும் சமயம், நம்மூர் வழியா எதாவது பயணமுன்னா, நம்மைக் கட்டாயம் வந்து பார்த்துட்டுத்தான் போவாங்க.
எக்கச்சக்கமான சமாச்சாரங்கள் இருக்கும் இவுங்களைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சேன்னா.... சாம்பிளுக்கு இங்கே பாருங்களேன் !
டான் னு ஏழுன்னா ஏழு மணிக்கு வந்து சேர்ந்தாங்க. கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்புறம் எங்கே போய் சாப்பிடலாமுன்னு யோசிச்சவங்க, ஆப்பம் சாப்பிடலாமான்னு கேட்டாங்க. ஹைய்யோ! உடனே கிளம்பினோம்.
நியூ வுட்லேண்ட்ஸ் ரெஸ்ட்டாரண்ட், அப்பர் டிக்ஸன் ரோடு. நம்ம கோமளவிலாஸை ஒட்டிப்போகும் குறுக்குத்தெரு. கடைமுதலாளி நம்ம சுப்ராவின் நண்பர் என்பதால் விஷேச கவனிப்பு நமக்கு:-)
மற்ற உணவு வகைகள் கிடைக்குதுன்னாலும் வுட்லேண்ட்ஸ்காரவுஹ (எப்படியோ) ஆப்பம் ஸ்பெஷலிஸ்ட்டா ஆகி, மூணு அடுப்பு வச்சுச் சுட்டுத்தள்ளிக்கிட்டு இருக்காங்க. ஆப்பம் வந்தது. அது என்ன கூடவே மிளகாய்ப்பொடின்னு நான் கொஞ்சம் மிரண்டபோது, அது சக்கரைன்னார் சுப்ரா! ஆஹா.... இப்படி அதிர்ச்சி வைத்தியம் ஏன் கொடுக்கறாங்களாம்? எனக்கு எப்பவும் ஆப்பமுன்னா கூடவே தேங்காய்ப் பால் (மட்டும்)தான் இருக்கணும்.
எனக்கான ஸ்பெஷலா இன்னொன்னும் கிடைச்சது :-) அதானே....
நல்லதா ஒரு ஃபில்டர் காஃபியும்! சாப்பிட்டு முடிச்சு ஹொட்டேலுக்கு வந்து இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். மூணு நாட்டு சமாச்சாரம் இருக்கே :-)
ஃபோட்டொ செஷன் ஆச்சு. பத்துமணி போலக் கிளம்பினாங்க. அடுத்த சந்திப்பு நியூஸியில் :-)
நாளைக்குக் காலையில் நீங்க வந்தாலும் வரலைன்னாலும் நான் கோவிலுக்குப் போறேன்னு 'நம்மவருக்கு ஒரு அறிவிப்பு' கொடுத்த கையோடு தூங்கிட்டேன்:-)
தொடரும்.......... :-)

2 comments:
வெகு சிறப்பு. அருமை. நன்றி.
"நாளை காலைபில்......" அறிவிப்பு நல்லாக இருக்கிறதே :))
Post a Comment