Friday, November 08, 2019

இன்றும் சந்திப்புகளே !!!!!! (பயணத்தொடர், பகுதி 166 )

இன்றைக்கு யானைகள் தினமாம்!   தோழிகள், யானைக்குக் கொடுத்த யானைகளைக் கிளிக்கி ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுக் கடமையை ஆத்தினேன் :-)
இந்த முறையும் பெங்களூரு செல்லும் வாய்ப்பு இல்லாமப் போயிருச்சு.  மைஸூர், தலக்காவிரின்னுதான் கர்நாடகாப் பயணம். மச்சினர், கிளம்பி வரேன்னு சொன்னார். ஞாயிறு காலையில் அங்கிருந்து கிளம்பி, சென்னைக்கு வந்து நம்மோடு லஞ்சு முடிச்சுக்கிட்டு சாயந்திரம் திரும்பப் போறார். இதேமாதிரி ஏற்கெனவே சிலமுறைகள் ஆகிப்போச்சு. பார்க்கலாம்.... அடுத்த முறை நமக்கு அங்கே போக வாய்க்குதான்னு.....

கடைசி மச்சினர் வீடுதான் ஹெட் க்வாட்டர்ஸ் :-) இங்கே லோட்டஸில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு, ஒரு கால்டாக்ஸியில் பத்துமணிக்கு வேளச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  அண்ணந்தம்பிகள் மூவரும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க.
கடைசி மச்சினருக்கு திங்கள்தான் வாரவிடுமுறை என்பதால்  வேலைக்குக் கிளம்பிப்போனார்.  நம்ம நாத்தனார் வீடு பக்கத்து ஏரியாவில்தான்.  நாங்க எல்லோருமாக் கிளம்பி  அங்கெ போய்க் கொஞ்சநேரம் இருந்துட்டு, எல்லோருமாச் சேர்ந்து  லஞ்சுக்குக் கிளம்பினோம். இப்பவே மணி ஒன்னரை.

குடும்பத்தினரின் சாய்ஸ்க்கு விட்டாச்.  ஜூனியருக்குப் போகலாமுன்னு சொன்னாங்க.  கேள்விப்பட்டுருக்கேன். இது ஜூனியருன்னா.... சீனியர் ஒன்னு இருக்க வேணாமோ?  எங்கே இருக்கு?  ஜூனியரில் அவரவர் தேவைக்குச் சாப்பிட்டு முடிச்சதும் அங்கிருந்தே நாங்க லோட்டஸுக்கு வந்துட்டோம்.  இங்கே சாப்பாடு ரொம்ப சுமார் ரகம்னு எனக்குத் தோணுச்சு. அதுவும் மசால்வடை...ப்ச்.... அவியல் அதுக்கு மேலே.....   தயிர் புளிப்பு.  ஆனால்   கூட்டம் அம்முது.....   அதானே... இந்தியாவில் எங்கெதான் கூட்டம் இல்லை?

 நாங்க வெஜ் என்பதால் அருமை தெரியலைன்னு தலையில் ஒரு குட்டு வேற !   பெங்களூரு மச்சினர், தம்பி வீட்டுக்குப் போய், அங்கிருந்தே சென்ட்ரல் போறார். 'பாசமலர்கள்' க்ளிக் ஒன்னு !
நாங்க ஒரு நாலுமணி போலக் கிளம்பி எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ போனோம்.  மாமி பேரன், கல்யாணத்துக்கு ஒரு கிஃப்ட் வாங்கணும். அங்கே போனா 'தாய் வீக்' நடக்குது. அழகான பொருட்களா இருந்தாலும், கல்யாணப்பரிசாக் கொடுக்க லாயக்கில்லைன்னு எனக்கொரு தோணல்.


மகளுக்கு ஒரு நகை செட் (!!!)  கிடைச்சது.  பொடிப்பொடியா வெள்ளைக்கற்கள் ஒட்டிப்பிடிச்சு ஜொலிப்பா இருக்குன்னு வாங்கினேன்.
(இங்கே கொண்டு வந்தபின் பார்த்தால் நிறையக் கற்கள்  உதிர்ந்து அந்த ப்ளாஸ்டிக் கவரில் கொட்டிக் கிடக்கு.  Gகம் சேர்த்து ஒருக்கா உருட்டி எடுக்கணும் போல.....   தாய் இப்படி ஏமாத்திருச்சே.... )  மாடிக்குப்போய் Indias Touch Art Emporium  என்ற கடையில்  கொட்டிக்கிடக்கும் பரிசுப்பொருட்களை நோட்டம் விட்டு, ராதாகிருஷ்ணனை வாங்கியாச். அவுங்கபாட்டுக்கு சந்தோஷமா ஊஞ்சல் ஆடட்டும்!   நம்ம வீட்டு ராதாக்ருஷ்ணனையும்  சில வருசங்களுக்கு முன்னே அங்கே இருந்துதான் வாங்கியாந்தோம்.
அப்படியே இன்னொரு கடையில்  குழந்தைக்கான கிஃப்ட் ஒன்னு. ஆயுஷ்ஹோமம் அழைப்பு இருந்தும்  பயணத்தில் இருந்ததால் கலந்துக்க முடியலை.
அடுத்த ரெண்டு நாட்களில் சுதந்திரதினம்  வர்றதால்  அலங்காரங்கள் செஞ்சுருக்காங்க. அதென்னவோ உலகநாடுகள் பூராவும்  மால்கள்தான்  விழா கொண்டாடுவதில் முன்னால் நிக்குது   :-)

ஆச்சு நம்ம ஷாப்பிங்.  நேரா  வத்ஸலா ஆராவமுதன் வீட்டுக்குத்தான்.  நம்ம பூனா மாமியின்  மகள். ஆன்மிக நாட்டம் அதிகமுள்ள தம்பதிகள்.  ஆராவமுதன் ஒரு குழுவாகக் கிளம்பி நம்ம தமிழ்நாட்டுக் கோவில்களில் ப்ரபந்தம் சொல்லப் போய் வர்றார்.  சாப்பிட வராமல் இப்படி ஃப்ளையிங் விஸிட் அடிக்கிறேன்னு கொஞ்சம் கோபம் :-) இவ்வளவாவது பார்க்கவும் பேசவும் கிடைச்சதேன்னு எனக்கு சந்தோஷம்.....

'வச்சுக்கொடுத்ததை' வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம். நியூஸி வந்தபின் பார்த்தால்.....   கொடுத்த கவரில் ஏகப்பட்ட காசு! எதுக்குன்னு கேட்டதுக்கு....  ட்ரெஸ் வாங்கிக்கவாம்.....   மாமியின் குணம் அப்படியே  மகளுக்கு........   (போனவாரம், துளசியின் தேசிகியுடன் பேசிக்கிட்டு இருந்தப்ப,  அவுங்க கும்பகோணம் கோவில்களுக்குப் போய் வந்ததாகவும்,  உப்பிலியப்பன் முன்னால் நிற்கும்போது சட்னு பூனா மாமியின் ஞாபகம் வந்ததுன்னும் சொன்னதும் ஆடிப்போயிட்டேன்! பூனா மாமியை தேசிகி பார்த்ததுண்டோ? ஊஹூம்..... துளசிதளத்தில் வாசித்ததுதானாம்!  நம்ம மாமி இப்படி நிறையப்பேர் மனசில்  இருப்பதை நினைக்கும்போது உண்மையான மனநிறைவு  வந்தது  உண்மை ! )

இப்படியாக இன்றையப்பொழுது ஓடியே போச்சு!

தொடரும்........ :-)


5 comments:

said...

மிக அருமை, நன்றி.

said...

உறவுகள்,நட்புகள்சந்திப்புகள் மகிழ்சி தரும்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

அடிக்கடி பார்க்காமல் இருப்பதுகூட அன்பை வளர்த்துருது :-)

said...

என்றும் மகிழ்ச்சி தரும் சந்திப்புகள் ...