வீரமாகாளியம்மன் தரிசனம் முதலில். அவளைத் தாண்டித்தான் போகணும் என்னும்போது கோவிலுக்குள் கால்கள் தானாக நுழைஞ்சுருதுல்லே?
சந்தனக்காப்பில் ஜொலிச்சுக்கிட்டு இருக்காள். உற்சவர் மீனாக்ஷி அலங்காரத்தில் ! நல்ல கூட்டம் ! கும்பிட்டு வலம் வந்து கோமளவிலாஸில் காஃபி. இந்தக் குடி இல்லைன்னா தலைவலி ஒருபக்கம்...... பிடுங்கி எடுத்துருது..
இதுவரை சிங்கையில் மாறாதது ஒன்னு இருக்குன்னா... அது நம்ம கோமளவிலாஸ் (ஒரிஜினல் - பழசு)தான். அதுக்குள்ளே போனால் ஒரே ஒரு மாற்றம்தான் கண்ணில் படும். அது விலைவாசி ஏற்றம் :-)
பொடிநடையில் செராங்கூன் தெருவின் அந்தக் கோடியில் இருக்கும் சிங்கைச்சீனு கோவிலுக்குப் போக இருவது நிமிட் ஆச்சு. நடுநடுவில் வேடிக்கை வேற இருக்கே.... விண்டோ ஷாப்பிங் :-)
சாயரக்ஷை பூஜை முடிஞ்சு கொஞ்சம் விஸ்ராந்தியா இருந்தார் சீனு. நிம்மதியான தரிசனம். என்னடா கூட்டமே இல்லையேன்னா, சின்னக்கூட்டம் ஆஞ்சி சந்நிதியில் !
கொஞ்சம் பெரிய கோவிலாக இருப்பதால் சட்னு பார்த்தால் கூட்டம் தெரியாது.
அர்ச்சனை ஒன்னு செஞ்சு, துள்ஸிக்கு மஞ்சள் ரோஜா கொடுத்தார் பெருமாள் ! ஓக்கே.... மஞ்சள் ரோஸ் ஃப்ரெண்ட்ஷிப்புக்கானது! ஸ்நேகமா இருந்தாச் சரிதான் !
சந்நிதிகளில் வலம் வந்து தாயாரை ஸேவிச்சு, ஆண்டாளம்மாவுக்குத் தூமணி மாடம் எல்லாம் ஆச்சு!
எட்டேமுக்கால்வரை கோவிலில் உக்கார்ந்துருந்தோம். பெரிய திருவடிகிட்டே உத்தரவு வாங்கிக்கிட்டுத் திரும்பப் பொடிநடையில் நம்ம ஹொட்டேலுக்கு.....
வீரமாகாளி கோவிலில் இன்னும் நல்ல கூட்டம் இருக்கு!
தொட்டடுத்தாப்போல இருக்கும் கைலாஷ் பர்பத்தில் பேல்பூரியும், தஹிபூரியுமா டின்னரை முடிச்சுக்கிட்டு அறைக்குப் போயிட்டோம். சைக்கிளில் சவாரி செஞ்சுக்கிட்டு வந்த பேல்பூரி நல்லாத்தான் இருந்துச்சு.
தொடரும்......... :-)
சந்தனக்காப்பில் ஜொலிச்சுக்கிட்டு இருக்காள். உற்சவர் மீனாக்ஷி அலங்காரத்தில் ! நல்ல கூட்டம் ! கும்பிட்டு வலம் வந்து கோமளவிலாஸில் காஃபி. இந்தக் குடி இல்லைன்னா தலைவலி ஒருபக்கம்...... பிடுங்கி எடுத்துருது..
இதுவரை சிங்கையில் மாறாதது ஒன்னு இருக்குன்னா... அது நம்ம கோமளவிலாஸ் (ஒரிஜினல் - பழசு)தான். அதுக்குள்ளே போனால் ஒரே ஒரு மாற்றம்தான் கண்ணில் படும். அது விலைவாசி ஏற்றம் :-)
சாயரக்ஷை பூஜை முடிஞ்சு கொஞ்சம் விஸ்ராந்தியா இருந்தார் சீனு. நிம்மதியான தரிசனம். என்னடா கூட்டமே இல்லையேன்னா, சின்னக்கூட்டம் ஆஞ்சி சந்நிதியில் !
கொஞ்சம் பெரிய கோவிலாக இருப்பதால் சட்னு பார்த்தால் கூட்டம் தெரியாது.
அர்ச்சனை ஒன்னு செஞ்சு, துள்ஸிக்கு மஞ்சள் ரோஜா கொடுத்தார் பெருமாள் ! ஓக்கே.... மஞ்சள் ரோஸ் ஃப்ரெண்ட்ஷிப்புக்கானது! ஸ்நேகமா இருந்தாச் சரிதான் !
சந்நிதிகளில் வலம் வந்து தாயாரை ஸேவிச்சு, ஆண்டாளம்மாவுக்குத் தூமணி மாடம் எல்லாம் ஆச்சு!
எட்டேமுக்கால்வரை கோவிலில் உக்கார்ந்துருந்தோம். பெரிய திருவடிகிட்டே உத்தரவு வாங்கிக்கிட்டுத் திரும்பப் பொடிநடையில் நம்ம ஹொட்டேலுக்கு.....
வீரமாகாளி கோவிலில் இன்னும் நல்ல கூட்டம் இருக்கு!
தொட்டடுத்தாப்போல இருக்கும் கைலாஷ் பர்பத்தில் பேல்பூரியும், தஹிபூரியுமா டின்னரை முடிச்சுக்கிட்டு அறைக்குப் போயிட்டோம். சைக்கிளில் சவாரி செஞ்சுக்கிட்டு வந்த பேல்பூரி நல்லாத்தான் இருந்துச்சு.
தொடரும்......... :-)
6 comments:
டிஸம்பர் இரண்டாம் வாரம் செங்கை செல்லும் உத்தேசமிருக்கு.உங்கள் பதிவுகளே நல்ல வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறேன்.ர
வெகு சிறப்பு அருமை நன்றி
தொடர்ந்து இடுகைகளைப் படிக்கிறேன். சிலவற்றிர்க்கு பின்னூட்டம் இட நேரம் கிடைப்பதில்லை.
வீரமாகாளியும் ,சீனுவும் இனிபதரிசனம் கண்டு மகிழ்ந்தோம். அழகிப இடம் .மனதுக்கு அமைதியும்.
இனிய தரிசனம் ....அருமை மா
Post a Comment