Tuesday, November 26, 2019

எழுப்ப வராதேன்னால் நான் என்ன செய்ய ? (பயணத்தொடர், பகுதி 176 )

நேத்துத் தூங்கப்போகும்போது, நாளை(க்கும்) காலையில் கோவிலுக்குப் போகணும், எழுப்புங்கன்னு சொல்லி வச்சதுதான். எனக்கே முழிப்பு வந்துருச்சுக் காலையில்.  'நம்மவரை' எழுப்பினால்....ம்ம்ம்ம் ...னுட்டுத் தூங்கிட்டார். 'நல்லாத் தூங்கறவங்களை' எழுப்புவது பாவம் என்பதால் பொறுமை காத்து, வலை மேய்ஞ்ச நான்  .... அப்படியே தூங்கிப்போயிட்டேன் போல...

'அவன்' வரவேணாமுன்னுட்டான். திடுக்னு எழுந்தப்ப மணி ஏழேகால் . போயிட்டுப்போகுது போன்னு குளிச்சு ரெடி ஆனோம். பயணங்களில் நான் வழக்கமாக் கொண்டுபோகும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் (பெரிய எழுத்து) புத்தகத்தைப் பையில் எடுத்துக்கிட்டுக் கிளம்பினோம். காளியம்மன் கோவிலாண்டை இருக்கும் பூக்கடை மட்டுமே திறந்துருக்கு. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பூக்கடை!

வாசலில் இருந்தே காளியம்மனுக்குக் கும்பிடு போட்டதும் நேராக் கோமளவிலாஸ். ரெண்டு இட்லி, ஒரு வடை அண்ட் காஃபி.  ( சிங்கையில் வடைகள் ரொம்பவே பெரூசு!)





செராங்கூன் ரோடு கடைகள் திறக்காததால்  நடைபாதைகள் ஜிலோ..... ஒரு கடைவாசல் புள்ளையார் பூச்சூடி இருந்தார்.

சீனு கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தப்பக் காலை அமர்க்களம் எல்லாம் ஓய்ஞ்சு போய் கொயட்டா இருக்கு. மணி ஒன்பதாச்சே....

கோவில் வளாகத்தில் (தாற்காலிக) யாகசாலை ஒன்னு முளைச்சுருக்கு!  ஹோம குண்டத்தில் லேசாப் புகை. காலையில் நடந்துருக்கு...

பெருமாள் தரிசனம், ஏகாந்த ஸேவையில்.  கொஞ்ச நேரத்தில் பட்டர்  வந்ததும்  துளசி கொடுத்தார்.  உற்சவர் திருமஞ்சனம்,அலங்காரம் எல்லாம் முடிஞ்சு ஜொலிக்கிறார். அவர் காலடியில் ஒரு கல்யாணப் பத்திரிகை.  அப்போ கல்யாண வீட்டுக்காரர்களின் விசேஷ பூஜையாக இருந்துருக்கவேணும், இந்த ஹோமம் எல்லாம்!

ஆனந்த் என்ற வீரதம்பிவேல் அண்ட் மணிமொழி, இன்னும் ரெண்டு வாரத்தில் பட்டுக்கோட்டையில் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க. அநேகமா மாப்பிள்ளை சிங்கப்பூரில் வேலை செய்யலாம்..... நல்லா இருக்கட்டும்!  நாமும் வாழ்த்தினால் ஆச்சு!


தாயாரைக் கும்பிட்டதும்,  முதலில் புள்ளையாரில் ஆரம்பிச்சுக் கோவிலை வலம்வந்து, ஆண்டாளம்மாவுக்குத் தூமணி பாடிட்டு, கொடிமரத்தாண்டை வந்தேன். 'நம்மவர்'  வழக்கம்போல்  விறுவிறுன்னு வலம் வந்துட்டு, 'அவருடைய' தூணில் சாய்ஞ்சு உக்கார்ந்துருந்தார். ரெண்டுபேருமாச் சேர்ந்து சன்னக்குரலில் ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம் வாசிச்சு முடிச்சோம். அரைமணி நேரம்தான் ஆகும்.


நம்ம ஆஞ்சியும் குளிச்சு முடிச்சுப் பளிச். பக்தர்களுக்கு ஸேவை சாதிக்க கடவுளர்கள் அனைவரும் தயார்!   பளிச்ன்னு ரொம்பவே சுத்தமா இருக்கும் கோவிலைப் பார்க்கப்பார்க்கப் பரவசமா இருக்கு!






ஒன்பதே முக்கால் வரை கோவிலில் இருந்துருக்கோம். (அவ்ளோதானா? )

திரும்ப ஹில்டன் கார்டன் வரும்போது மணி பத்து.  இன்றைக்கு நமக்கு எழுத்தாளர் சிங்கை சித்ரா ரமேஷ்  வீட்டில் பகல் சாப்பாடு.   ஞாயிறு என்பதால்  வீட்டில் எல்லோரையும் சந்திக்க முடியும்.  லிட்டில் இண்டியாவில் ரயில் பிடிச்சு Pasir Ris  ஸ்டேஷன் வரை போனோம். ரமேஷ் வந்து வீட்டுக்குக் கூட்டிப்போனார்.
சித்ரா, ரமேஷ்  ரெண்டுபேருமே மரத்தடி கால நண்பர்கள். வலைப்பதிவர்கள்.  என்ன நேரக்குறைவோ.... இப்பெல்லாம் எழுதறதில்லை. சித்ரா, சிங்கை எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருக்காங்க.  நம்ம தமிழ் எழுத்தாளர்கள் பலரும்  அடிக்கடி சிங்கை வந்து போறாங்கதானே....  அவர்கள் வருகையின் போதும் சரி, அவர்களை விழாவுக்காக வரவழைக்கும்போதும் சரி  சித்ராவின் பங்கு  அதிகம்தான்!

பேரக்குழந்தைகள் ஒட்டிக்கிட்டாங்க .

அருமையான சாப்பாடும்,  குடும்பப்பேச்சுமா நேரம் போனதே தெரியலை. மூணரை மணிக்குக் கிளம்பினோம். தங்கமகன், ஸ்டேஷனில் கொண்டு விட்டார்.

தொடரும்......... :-)


2 comments:

said...

அருமை நன்றி.

said...

கோமளாவும் சீனுவும் சிங்கைபயணத்தில் பலதடவை சந்திக்கும் நண்பர்கள்தாம்.