Monday, November 25, 2019

கண்ணன் எங்கள் கண்ணனாம்... (பயணத்தொடர், பகுதி 175 )

சிங்கையில் பார்க்காத இடங்கள் , கோவில்கள்னு மற்ற பேட்டைகளில் இருந்தாலும் கூட, எனக்கென்னமோ அங்கெல்லாம் போகணுமுன்னு தோணறதே இல்லை.....  குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்  போய் வந்தாப்போதுமுன்னு நினைக்கிற அல்ப சந்தோஷியா இருக்கேன்.  அப்படிப் போகலைன்னு வச்சுக்குங்க.... அதேதான் மனசைக் குற்றப்படுத்திக்கிட்டே இருக்கும்.
'கண்ணா இதோ வந்தேன்'னு சாயங்காலம் கிளம்பி, நேரா கிருஷ்ணன் கோவில். போற வழியிலேயே மல்லிப்பூ கிடைச்சது. நாலு இஞ்ச் இடைவெளிவிட்டுக் கட்டும் மல்லிச்சரம்தான் இங்கே எப்பவும் கிடைக்குமுன்னு அஸ்வாரஸ்யமா பூக்கடைக்குப் போனால், அடர்த்தியான சரம் எடுத்துக் கொடுத்தார் கடைக்காரர். ஹைய்யோ!!!


நமக்கு இப்போ வாட்டர்லூ தெருவரை போகணும். (பெரிய நெப்போலியன்  பாரு ..... வாட்டர்லூ வாருக்குப் போறாள்.... ) நம்ம ஹொட்டேலில் இருந்து ரெண்டு கிமீ தூரத்துக்கும் குறைவுதான். எனக்கு  சிங்கையில் நடப்பது சுகம். மெயின்ரோடு வழியாப் போகாம,  குறுக்குத்தெருக்களில் புகுந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே நடப்பது ரொம்பப் பிடிக்கும்.  அல்மோஸ்ட் எல்லாக் குறுக்கும் அத்துப்படி இங்கே செராங்கூன் ரோடு ஏரியாவில்.

எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட  நண்பர்களை நினைச்சுக்குவேன். இப்பவும் 'தேவி விளக்கு ' நானானியைக் கூட்டிவந்துச்சு.  போறபோக்கில் பழங்களைக் கெமெராக்கண்ணால் தின்னுக்கிட்டே ஸிம்லிம் ஸ்கொயர் போயிட்டோம்.


குறுக்கே புகுந்து   ஆல்பர்ட் மால் கடைகளை வேடிக்கை பார்த்தபடி சீனத்து அம்மன் கோவிலாண்டை போயிட்டோம். உள்ளே என்னமோ வேலை நடக்குதுன்னு  கேட் மூடி இருந்துச்சு. அடடா.... வழக்கமான ஸர்க்யூட் மிஸ் ஆகியில்லெ....   உள்ளே சந்நிதி திறந்துருக்குன்னார் நம்மவர். கேட் ரொம்ப உசரம்ப்பா.....  கெமெராக் கண்ணை அனுப்பி அம்மனை நம்மாண்டே அழைச்சுக் கும்பிட்டாச்சு.



 அடுத்த கட்டடம் நம்ம கிச்சாவோடது!
வாசலுக்கு ரெண்டு பக்கங்களிலும் பெரிய சிறிய திருவடிகள்!
நேராக் கருவறையில் குழலூதும் கண்ணன்!!!  இந்தக் கோவிலிலும்  நல்ல முன்னேற்றம்.. புதுசா ஸ்ரீ ராமானுஜர் வந்துருக்கார்.   நூத்தியெட்டு திவ்யதேச மூர்த்திகள்  சின்னச் சின்னதா அழகா ரெண்டு ஷெல்ஃபில் உக்கார்ந்துருக்காங்க. கோல்ட் ப்ளேட்டடாம், ஒரே மின்னல்!!! எல்லோருக்கும் யூனிஃபார்ம் தைச்சுப் போட்டதுபோல் ட்ரெஸ் !





பெருமாளும் தாயாரும் உற்சவர்களும் அமர்க்களம்! மாடங்களில் மூர்த்திகள் சூப்பர்!  எல்லாம் இருந்தும் எனக்கு (மட்டும்) ஒரே ஒரு குறை.  ரொம்ப வருஷங்களுக்கு முந்தி, கருவறையைச் சுத்தி வரும்போது, நமக்கிடப்பக்கம் இருக்கும் மூன்று பக்கச் சுவர்களிலும்  பப்பத்துன்னு முப்பது திருப்பாவைகளுக்கான புடைப்புச் சிற்பங்கள் வண்ணம் பூசி அழகா இருக்கும். இப்பவும் இருக்குதான். ஆனால் ஒவ்வொரு சிற்பத்துக்கும் கீழே பளிங்குக் கல்வெட்டில் இருந்த திருப்பாவை பாசுரங்கள் எல்லாம் காணாமப்போய் பல வருஷங்களாச்சு. எதுக்கு அவைகளைப் பெயர்த்தெடுத்தாங்க? புரியாத புதிர்.....  இப்பவும் பார்த்துப் பெருமூச்சு விட்டேன்தான்... ப்ச்...
சின்ன இடம்தான். அதுக்குள்ளில்  இவ்ளோ அழகான சிற்பங்களைச் செஞ்சு வச்சத்து  பாராட்டப்படவேண்டிய அம்சம். கோவில் நிர்வாகத்துக்கு ஒரு  சபாஷ் !
பாருங்க,  ரெண்டாவது கைப்பிடி  அவல் வாய்க்குள் போகாமல் தடுக்க  எப்படி ரெடியா நிக்கறாள்னு !





வலம் வரும்போதும் நமக்கிரு பக்கங்களிலும் வச்ச கண்ணை வாங்க முடியாதபடி  அட்டகாசமான அழகுடன்  சிலைகளோ சிலைகள்.  பரமபதத்தில் நால்வரோடு, பாம்புப்படுக்கையில் தனியாகப் பிக்கல் பிடுங்கல் இல்லாமல், நின்றும் இருந்தும் கிடந்தும்  தனியாக, ஜோடியாகன்னு  எல்லா விதங்களிலும்..... இதுலே  கோலாட்டமும் கும்மியும்கூட.... கூத்தடிக்கிறான் போங்க !
பாதிவலத்துலேயே ப்ரஸாதத்துக்குப் புடிச்சுப் போட்டுடறான்.  சக்கரைப்பொங்கல், கொத்துமல்லி சாதம், பாசிப்பருப்புப் பாயஸம்.  முடிச்சுட்டு மீதிவலம் வந்தோம். 
சிலை அழகென்ன.... தூணழகு என்ன..... எதைச் சொல்ல? எதை விட? அதிலும் அன்னபூரணி முகம் நம்ம ஸ்ரீவித்யாவை ஞாபகப்படுத்தியது உண்மை !



ஆண்டாளின் அழகைப் பார்த்தீங்களா?  கோபாலா..... வேணுகோபாலா.......

நிம்மதியான தரிசனம் முடிஞ்சதும் திரும்பி ரெண்டு கிமீ நடக்க சோம்பலா இருக்கேன்னு ஒரு டாக்ஸியில்   வந்து  வீரமாகாளி வாசலுக்கு வந்தோம்.


அப்படியே  எதிர்சாரிக்குப்போய் ஜோதிபுஷ்பக்கடையில்  ஒரு பார்வை.  கனகாம்பரமும் மல்லியும் கிடைச்சது.  'அஞ்சு மீட்டர்'  வாங்கினேன்.  எடைப் பிரச்சனை இருக்காது என்பதால் 'நம்மவர்' அமைதியாக இருந்தார் :-)

அறைக்குப்போய் முக்கனிகளில் சீக்கிரம் கெட்டுப்போகும் வாய்ப்பு இருக்கும் ஒரு கனியை முழுங்கிட்டுத் தூங்கணும்.

குட்நைட்

தொடரும்........ :-)


5 comments:

said...

108 திவ்யதேசங்கள்னா மூலவர் சிற்பங்களாக இருந்திருக்கும். கொஞ்சம் க்ளோசப்ல பொறுமையா படங்கள் எடுத்திருந்தால் என்னவாம்? சிலபல பெருமாளை ஐடென்டிஃபை செய்ய முடிந்தது. திருவனந்த பத்மனையும் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கணும். முக்திநாத் ஹரியைத் தேடணும்.

said...

மிக அருமை. நன்றி

said...

இனிய தரிசனம் ...

said...

எங்கு போனாலும் கோவில்களையும் உணவகங்களையும் நீங்கள் விடுவதாயில்லை

said...

இறைவணக்கமும் மல்லியும் கனகாம்பரமும் அழகு.