Monday, November 18, 2019

ஊர்சுத்தலை இன்றோடு முடிச்சுக்கணும்..... (பயணத்தொடர், பகுதி 170 )

சென்னையில் இருந்து நாளைக் காலையிலேயே கிளம்புவதால், நம்ம சென்னைச் சுத்தலை இன்றோடு முடிச்சே ஆகணும். ஒரு ட்ராவல் வண்டிக்கும் சொல்லியாச்சு.  இந்த அஞ்சுமணிக் கணக்கு கொஞ்சம் பேஜார்தான்.  அதுலேயும் வரப்போகன்னு ஒரு மணியைக் கழிச்சுட்டா, மீதி நாலு மணி நேரம் எப்படிப் போதும்?  அதனால்  ரெண்டு அஞ்சுமணிக்கு எடுத்துக்க வேண்டியதுதான்.
நிதானமாக் கிளம்பலாம். பத்துமணிக்குத்தான் வண்டி வருமுன்னார்'நம்மவர்'.  எட்டேமுக்காலுக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போனோம். வரவேற்பில் 'நம்ம பொண்கள்' வந்துருந்தாங்க.  காலை எட்டரை முதல் மாலை ஆறுவரைதான் பெண்கள். மற்ற சமயங்களில் ஆண்கள்னு இப்பப் பெண்களுக்கான வேலை நேரம் ஆகி இருக்காமே!
நாளைக்குக் காலையில் நாம் கிளம்பும்போது  இவுங்க வந்துருக்க மாட்டாங்க என்பதால்  ரெண்டு க்ளிக் ஆச்சு:-)
'சுத்தல் அதிகம், கொஞ்சம் நல்லா சாப்புட்டுக்கோ'ன்னு 'வழக்கம் போல்' சொன்னார் 'நம்மவர்' :-)

பத்துமணிக்குக் கிளம்பி நேராப் போனது  நம்ம அடையார் பதுமநாபன் தரிசனத்துக்குத்தான். 'நெஜமாவே நாளைக்குக் கிளம்பறோம்'னு சொல்லி விடை வாங்கிக்கிட்டேன். சரின்னு  தலையைத் திருப்பிப் பார்ப்பானா என்ன?  விட்டேத்தியா மேலே பார்த்துக்கிட்டுக் கிடந்தான்.

'கிடக்கட்டும்...போங்க'ன்னுட்டு புதுசாக் கட்டி இருக்கும்  சிவன் சந்நிதிக்கும் போய்  விடை வாங்கிக்கிட்டேன்.

கொஞ்சநேரம் கோவிலில் இருக்கும் பெஞ்சில் உக்கார்ந்தால்.... இனி எப்போன்னு மனசு பொங்குனது உண்மை....  ப்ச்..... ஒவ்வொரு  முறை வந்து போகும்போதும் இதே கதை.... அரசமர சிவன் சந்நிதியாம்!   திருவிதாங்கூர் மஹாராஜாவின் அறிக்கை ஒன்னு  தமிழிலும் இங்லிஷிலுமா ரெண்டு ஃப்ரேம் செஞ்சு மாட்டி இருக்காங்க கோவிலில். புதுசு, இதுவரை நான் பார்க்காதது.

கொஞ்சநாட்களா ஹிந்துமத எழுச்சி வர்றதைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். சனம் நீண்ட உறக்கத்தில் இருந்து  விழிச்சு எழுந்துருச்சு  போல!  நல்லா இருக்கட்டும்......  எப்படிப் பார்த்தாலும் மக்கள் தொகையில் பெரும் அளவு ஹிந்துமத ஆட்கள்தானே?  இப்ப இருக்கும் மற்ற மதக்காரர்களின் முன்னோர்களும் ஒருகாலத்தில் ஹிந்துக்களா இருந்தவங்கதானே?  முந்தியெல்லாம்  மதம் மனிதர்களைப் பிரிச்சதே இல்லை. அவரவர் மதம் வேற, மனிதம் வேறன்னுதானே இருந்தோம்.  எப்ப, எப்படி, இப்படியெல்லாம் ஆச்சுன்னு நினைச்சுப் பார்த்தால் தலை சுத்தாமல் இருக்காது.....

இந்தக் கோவில் கொஞ்சம் அதிர்ஷ்டம் செஞ்சுருக்கு.  கோவில் வருமானத்தைக் கோவிலுக்காகவே செலவு செய்யும் நிர்வாகம் அமைஞ்சதால்.....  எப்பப் போனாலும்  நல்ல அபிவிருத்திகள் கண்ணுலே படும். பளிச்ன்னு சுத்தமான கோவில்.  வாஹனங்கள் எல்லாம்  தும்பு தூசி படியாமல், இந்த விநாடிக்குள் ரெடின்றமாதிரி இருக்கும். முக்கியமா பட்டர்கள் எல்லோரும் வேற மாதிரி !!!!!

நிறைவான தரிசனம்  கிடைச்சது!

நம்ம தோழி நைன்வெஸ்ட் கல்யாணி ஷங்கர் தரிசனம் அடுத்தபடியாக !  ஒரே இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கு நமக்கு!  வாழ்க்கையில் முதல்முறையா ரக்ஷாபந்தனுக்கான ராக்கி 'நம்மவருக்கு' !  ஹைய்யோ !!!! இப்ப  அவுங்க  தோழி ஸ்தானத்துலே இருந்து 'நாத்தனார்'  ஆகிட்டாங்களே......  கொஞ்சம் மிரட்டிப் பார்க்கலாமா?  ஹாஹா.....

யோசிக்கறதுக்குள் 'இதோ உனக்கும்'னு என் கையிலும் ஒரு ராக்கி! வாயை அடைச்சுட்டாங்கப்பா..... 
லேடீஸ் ராக்கி வந்துருச்சுன்னு நம்ம அமைதிச்சாரல் சொன்னாங்க.  ஜிமிக்கி வச்செல்லாம் இருக்காமே!  வாவ்.....
ராக்கி கட்டுன கையோடு 'மூ மீட்டா கரோ'ன்ற நியமம் ஒன்னு இருக்கே....    நெய் மணக்கும் ரவாலாடு !
இன்னும் கொஞ்சம் இன்ப அதிர்ச்சி பாக்கி இருக்கு!  பொதியைத் திறந்து பார்த்தால் இன்னொரு 'வாவ்'!  இதுவரை நானுமே கூட நினைச்சுப் பார்க்கலை !
ஹைய்யோ ஹைய்யோ.....  ஐடியாக்களின் மன்னி !

நம்ம கல்யாணி இருக்காங்க பாருங்க..... இவுங்கதான்  என் வாழ்க்கையில் முதல்முதலாகப் பூங்கொத்து கொடுத்தவங்கன்னு சொல்லி இருக்கேனில்லையா? இப்படித்தான் எல்லாத்திலும் முந்திக்கிறாங்க! நல்லா இருக்கணும்!
மனநிறைவோடு லோட்டஸுக்குத் திரும்பினதும்,  'யம்மா.....  வந்துட்டீங்களா'ன்னு குரல். பூரி போகப்போறேன்னு சொன்னது முதல் முகத்தில் பூரிப்பு !   இருக்காதா பின்னே......  பொறந்த  ஊரை விட்டு வந்து இருவது வருஷமானால்தான் என்ன?  ஆரம்பகாலத்துலே கொஞ்சம் தடுமாற்றம், இப்பச் சென்னைத்தமிழ் நல்லாவே வந்துருச்சு!!

ஹௌஸ்கோட்டைக் கழட்டிட்டா....   ஹௌஸ்கீப்பிங் டிபார்ட்மென்ட்ன்னு யாரும்  சொல்லவே முடியாது !  நமக்கும் பலவருஷப்பழக்கம் இருக்கே!
சாப்பாட்டுக்குப் போகலாமுன்னு கிளம்பினால், முதலில் நம்ம புது செல்லுக்கு ஒரு  ஸ்க்ரீன் கவர் போட்டுக்கணுமுன்னு சொல்றார்.  ரொம்ப விலை கொடுத்து வாங்கின பொருள்....   காப்பாத்த வேணு(மா)ம்....  போனமுறை நம்மவரின் புது செல்லுக்குப் போட்ட இடத்துக்கே இப்பவும் போனோம். அந்த வேலையை அழகா முடிச்சுக்கொடுத்தார் கடை ஓனர் !  நம்ம ஃபோனுக்குத் தங்கக் கவர். ஆனாலும் அப்படியே உள்ளே இருக்கும் திரை தெரியுது. அதே சமயம், முகம்பார்க்கும் கண்ணாடியாகவும் பயன்படுது !  கையிலே தங்க பிஸ்கெட்தான் இனி !   தங்கமகளா கீதா கஃபேக்குப்போய் லஞ்ச் ஆச்சு.

இதுதான் இந்தப் பயணத்தில் கடைசி லஞ்ச் என்பதால்.....  எனக்கும் சென்னை மீல்ஸ்.   ஆடம்பரம் இல்லாத, அந்தக் கால ஸ்டைலில்  கீதா ! வயித்துக்குக் கேடு வராத உணவு இங்கே.
நம்ம பதிப்பாளரைப் போய்ப் பார்த்துட்டு வரணும்.  வரலாமான்னு கேட்டுட்டு நம்ம சந்தியா பதிப்பகம் போனோம்.  சந்தியா நடராஜன் அன்பா வரவேற்றார். கொஞ்சம் பயணத்தைப்பற்றிப் பேசிட்டுக் கிளம்பினோம்.

ஏராளமான புத்தகங்கள், கண்ணை இழுத்தாலும்,  எடை காரணம் ஒன்னுமே வாங்கிக்கலை.....  அப்ப்ப்பா..... என்ன நெஞ்சுரம் !



லோட்டஸ் திரும்பி, செய்ய வேண்டிய பேக்கிங் ஆச்சு. ஏழுமணி வாக்கில் கிளம்பி வேளச்சேரி. மச்சினர் வீட்டுக்குத்தான்.
குடும்பத்தோடும் , ஜின்னாவோடும்  பேசி ( என்னத்தைப் பேசறது?  ஆளைப் பார்த்ததும்  தோளில் பறந்து வந்து உக்கார்ந்து பூவைப் பிய்ச்சுப்போடணுமாம். இதுக்காகவே தலையில் பூ வைச்சுக்கணும்) முடிச்சு, அங்கேயே ராச்சாப்பாடாக தோசையைப் பிய்ச்சு  முழுங்கிட்டு பைபை சொல்லிட்டு லோட்டஸ் வந்தாச்சு.

தொடரும்........... :-)


5 comments:

said...

மிக அருமை. நன்றி.

said...

இறைதரிசனம் ,நண்பர்கள் சந்திப்புக்களுடன் இனிதான நாள்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

வருகைக்கு நன்றிப்பா !

said...

சூப்பரான gifts...வாவ்