இன்றைக்கு இந்திய சுதந்திரநாள் ! ஆகஸ்ட் 15 என்பதால் தேசிய விடுமுறை ! இன்னும் முக்கியமானவர்கள் சந்திப்பு நமக்கு பாக்கி இருக்கு. இன்றைக்கு லீவுநாள் என்பதால் குறைஞ்சபட்சம் சிலரையாவது பிடிச்சுடலாமுன்னு காலையில் தோழியிடம், 'வரலாமா'ன்னு கேட்டேன். என்ன பதில் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க ?
ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குக் கீழே போனால், டைனிங் ஹால் காலியாக் கிடக்கு. நாமே கொஞ்சம் லேட்டாத்தான் போயிருந்தோம். ஆனாலும் பாருங்க.... நாம்தான் முதலாம் ! அட! நேத்துவரை இங்கே தங்கி இருந்த கூட்டம் முழுசும், சுதந்திரம் கொண்டாட ஊருக்குப் போயிட்டாங்களா என்ன?
ஒரு ட்ராவல் வண்டி எடுத்துக்கிட்டு, முதலில் போனது சாலிக்ராமம். நம்ம பாபு வீட்டுக்குத்தான். அவரோட பையனுக்குத்தான் இன்னும் நாலு வாரத்தில் கல்யாணம். அதுவரை இந்தியாவில் தங்கி, நம்மால் கலந்துக்க முடியாது.... ப்ச்...... சரி. மாப்பிள்ளைப்பையனை சந்தித்து வாழ்த்தலாமுன்னு வந்தால், பையன் கோவிலுக்குப் போயாச்சு. மயிலை ஆதிகேசவப்பெருமாள் பக்கத்துலே இருக்கும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானக் கோவிலில் இளைஞரணியில் முக்கிய புள்ளியாக்கும் கேட்டோ !
(மேலே படம்: பாபு தம்பதியருடன். இவர் நம்ம பூனா மாமியின் மகன்)
வாங்கிப்போன கண்ணனையும் ராதையையும் புள்ளியிடம் நம் சார்பில் கொடுக்கச் சொல்லிட்டு நம்ம நாப்பத்திரெண்டு வருஷ நட்பையும் கொஞ்சம் வளர்த்துட்டு, அதே ஏரியாவில் இருக்கும் தம்பி அருணாசலம் வீட்டுக்குப் ஃபோன் போட்டால் வீட்டில் ஆள் இல்லை. சுதந்திர தின விழாவுக்குப் போயிருக்கார். மத்திய அரசில் முக்கியமான வேலைன்னா... ச்சும்மாவா?
நாம் வழக்கமாப் போகும் நம்ம ஸ்ரீ காவேரி விநாயகர் கோவிலுக்குப் போகலை. கோவிலைப் புதுப்பிக்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் மூணு மாசத்தில் கும்பாபிஷேகம்!
ராத்திரி பேய்ஞ்ச மழையில் , வடபழனியெல்லாம் வெள்ளக்காடு. மழை பேய்ஞ்சதும் தண்ணீர் எல்லாம் சட்னு வடியும்படி சாலை அமைச்சு என்ன பயன்? இந்த ப்ளாஸ்டிக் பைகள் போய் அடைச்சுக்கிச்சுன்னு அதைத்தான் குற்றம் சொல்லுது சனம்.... ப்ச்....
சுமார் ஒருமணி நேரப்பயணத்தில் நகரின் மறுபக்கம் போயிருந்தோம். தலைகள் நமக்காகக் காத்திருந்தனன்னு சொல்லணுமோ? உண்மையில் பெரிய தலையும், தோழியும் என்னோட நண்பர்கள்ன்னா... 'இளந்தலைக்கு வேண்டப்பட்டவர் நம்மவர்'தான்! அதென்னமோ தெரியலை, எப்பவும் அப்படியே ஒட்டிக்குவாங்க :-)இப்பவும்... அதே அதே...
நல்லா இருக்கில்லே!!!!! வாவ்.....
தமிழ் மட்டுமா? இல்லையே..... சுந்தரத்தெலுகையும் விட்டுடலை..... எப்படியோ ஏகலைவன் போலச் சுயமாக் கத்துக்கிட்டு இப்படிக் கொளுத்திப்போட்டால் எப்படி ! (நானும்தான் படிக்க மட்டுமாவது கத்துக்கலாமுன்னு பல வருஷங்களாத் தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்கேன்..... கனிவமுதன் கிட்டேதான் ட்யூஷனுக்குப் போகணும்..... )
ஆரவாரமில்லாத அன்பான வரவேற்பு.... மனம் நிறைஞ்சு போச்சு! ஒரு இடத்துக்கு ஒரு மணி நேரம் என்று கணக்கு. அதன்படி அந்த அளவு நேரத்துக்கு எவ்ளோ முடியுமோ அவ்ளோ பேச்சு :-)
அடுத்துப்போனது இளைய மச்சினர் வீடு. நம்ம ஜின்னா வேற என்ன சொல்வாளோ? மறந்துருப்பாளோ? இல்லையாம். 'வா வா இப்படி வந்து உக்காரு. மல்லியைப் பிச்சுப்போட்டு ரொம்ப நாள் ஆச்சு'ன்னாள் :-)
அண்ணனும் தம்பியும் குடும்ப விஷயங்களைப் பேச, நாங்கள் பறவை உலகில் இருந்தோம். ஜின்னாவுக்குத் தனி அறை இருக்கு ! அறைக்குள் போய்த்தான் நாம் சந்திக்கவேணும் :-)
நாலரை மணி போல் கிளம்பி தி நகர். எதிர்பாராத விதமா எனக்கு அடிச்சது லக்கி ப்ரைஸ். பூர்விகாவில் ஒரு S9+ !
அப்போ அதுதான் ரொம்பப் புகழோடு இருந்துச்சு. (இந்தப் பதிவு எழுதும்போது... S11+ வந்துருக்காம். வந்து வாங்கிக்கோ... உன் ஃபோன் பழசாப் போயிருச்சுன்னு ஸாம்ஸங்காரன் மெயில் அனுப்பி இருக்கான் !) பழைய S5 வில் இருந்த சிம் கார்டை இதுலே போட்டதும் அது செஞ்ச முதல்வேலை நம்ம அட்ரஸ் புக்கில் இருந்தவர்களில் முக்கால்வாசிப் பெயர்களை முழுங்கினதுதான்.... அகோரப்பசி ! லோட்டஸுக்குப்போய் நிதானமாப் பார்க்கலாம். எங்கேயும் போயிருக்காதுன்னு நம்மவர் ஆறுதல் சொன்னார்.
பூர்விகாவில் ப்ரகாஷ் & விநாயகமூர்த்தி இருவரும் (விற்பனையில்) ரொம்பவே உதவியாக இருந்தார்கள். புள்ளையாரே உதவிக்கு வரும்போது... கவலை ஏன்? புதுசெல் கெமெராவில் படம் சரியா வருதான்னு க்ளிக் பண்ணிப் பார்த்தேன் :-)
ஏழரை மணி போல, நம்ம சீனிவாசன் நம்மை சந்திக்க வந்தார். 'நீங்க இல்லாம இந்தப் பயணம் ரொம்பவே சுமாராத்தான் போச்சு'ன்னு ஒரு பாட்டம் புலம்பினேன். ட்ராவல் வண்டி வேலையை விட்டுட்டு, ஒரு தொழிலதிபர் காருக்கு ட்ரைவராப் போயிருக்கார். அலைச்சல் கிடையாது. மாத சம்பளம் ஓரளவு நல்லாவே இருக்கு. பையனும் படிப்பை முடிச்சுட்டு, நல்ல வேலைக்குப் போயாச்சு. இனி வாழ்க்கையைக் கொஞ்சம் ரிலாக்ஸா நடத்தினால் என்ன தப்பு? அதான் இப்படி. ஊர் ஊரா அலையாம நிம்மதியா ஒரே இடத்தில் இருக்கலாம். வீட்டம்மாவுக்கும் டென்ஷன் இல்லை.
ரொம்ப நல்லதுன்னேன். கொஞ்சநேரம் பேசிட்டுக் கிளம்பிப்போனார்.
இத்தனை வருஷப்பழக்கத்தில் நமக்கு ஒரு குடும்ப நபர் போலத்தான் ஆகி இருக்கார். நல்லா இருக்கட்டும்! தொடர்பில் இருப்போம்.
இன்றையப்பொழுது இப்படி ஆச்சு !
தொடரும்..... :-)

5 comments:
மிக அருமை, நன்றி.
நண்பர்கள் சந்திப்பும்,S9+ புதிதாக வந்த உறவும், நன்றாக அமையட்டும்.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க மாதேவி.
S9+ வந்ததில் இருந்து கெமெராவைத் தனியா எடுத்துக்கிட்டுப்போகும் அவசியம் இல்லாமல் போயிருச்சு.
இப்ப S11+ வந்துருச்சே..... கேட்டால் குடும்பத்துலே சண்டை வராது? :-)
எத்தனை எத்தனை சந்திப்புகள் ....மகிழ்ச்சி மா
Post a Comment