Monday, November 11, 2019

பெரிய அத்தையும் பின்னே அனந்தும், அநந்தும் !!!!! (பயணத்தொடர், பகுதி 167 )

கவுன்டௌன் ஸ்டார்ட்டட்..........  இன்னும் நாலு நாள்தான் சென்னையில். அதுக்குள்ளே..........  கட்டாயமாப் போய்ப் பார்த்து ஆசிகள் வாங்கிக்கணும் எங்காத்து வேளுக்குடியான  பெரிய அத்தையிடம். குடும்பத்தில் மூத்தவர்,  இவுங்களைப் பார்க்காமல் பயணம் பூர்த்தியாகாது.
நம்மவருக்கு பேங்கில் எதோ வேலை இருக்காம்.  நேரில் போய்ப் பார்த்துக் கேட்கணுமாம்.  முதலில் அந்த வேலையை முடிச்சுக்கலாமுன்னு சொன்னார். பேங்க் வாசலில் நம்மை வரவேற்றார் பெரிய திருவடி ! ஆமாம்.... இவர் எதுக்கு இங்கே? திருமகளுக்குக் காவலோ?  டிஸ்ட்ரிப்யூஷன் இன்சார்ஜ்?

'நம்மவருக்கு' ஆஃபீஸ் போகணுமாம். இவர் கன்ஸல்டன்ட்டா இருக்கும் ஒரு கம்பெனிக்குத்தான். நம்ம சொந்தப் பயணத்தில் வேலையைச் சேர்த்துக்கிட்டா எனக்குப் பிடிக்காதுதான். ஆனால்  திரும்ப வேலைக்காக அவ்ளோ தொலைவில் இருந்து வந்து போகணுமே....   மீட்டிங் முடிச்சுட்டு நாலு மணிக்குள்ளே வந்துர்றதாச் சொல்லிட்டுப் போனார்..... அதே போல் வந்தார்.   எனக்குத்தான் இடைப்பட்ட மூணு மணி நேரம் என்ன செஞ்சுக்கலாமுன்னு  தெரியலை.  இதுதான் நல்ல சான்ஸ், கடைகளுக்குப் போலாமுன்னா.....   எதையாவது வாங்கும்போது, இவர் 'எதுக்கு, வேணாம், உங்கிட்டேதான் இருக்கே 'என்றதுபோல  மங்கலச் சொற்களை வாரி விடும்போது, சரி சரின்னு தலையை ஆட்டிக்கிட்டே அவைகளை வாங்கிக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சி தனி ரகம்.

போகட்டும்..... அதான்  வலை இருக்கேன்னு  இருந்துட்டேன்.

நடைபாதைகள் நடப்பதற்கு இல்லையாமே.....  என்னதான் அழகாக் கட்டி விட நினைச்சாலும்.....  அதுக்கப்புறமும்  இந்த அழகில்தான்.....   சுத்தம் செய்யும் பணியாளர்களைக் குற்றம் சொல்ல முடியாது......    ப்ச்...

'நம்மவருக்கு' ஆஃபீஸ் போகணுமாம். இவர் கன்ஸல்டன்ட்டா இருக்கும் ஒரு கம்பெனிக்குத்தான். நம்ம சொந்தப் பயணத்தில் வேலையைச் சேர்த்துக்கிட்டா எனக்குப் பிடிக்காதுதான். ஆனால்  திரும்ப வேலைக்காக அவ்ளோ தொலைவில் இருந்து வந்து போகணுமே....   மீட்டிங் முடிச்சுட்டு நாலு மணிக்குள்ளே வந்துர்றதாச் சொல்லிட்டுப் போனார்..... அதே போல் வந்தார்.

  எனக்குத்தான் இடைப்பட்ட மூணு மணி நேரம் என்ன செஞ்சுக்கலாமுன்னு  தெரியலை.  இதுதான் நல்ல சான்ஸ், கடைகளுக்குப் போலாமுன்னா.....   எதையாவது வாங்கும்போது, இவர் 'எதுக்கு, வேணாம், உங்கிட்டேதான் இருக்கே 'என்றதுபோல  மங்கலச் சொற்களை வாரி விடும்போது, சரி சரின்னு தலையை ஆட்டிக்கிட்டே அவைகளை வாங்கிக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சி தனி ரகம்.

வலை இருக்கேன்னு  இருந்துட்டேன்.

திரும்பப் பாண்டிபஸார் வந்து கீதாவில்  காஃபியைக் குடிச்சதும் குமரனுக்கு ஒரு விஸிட்.  ஒரு புடவை வாங்கணும். எனக்கில்லை.   எனக்கு வாங்கணுமுன்னாலே  பத்து நிமிட்க்கு மேல் ஆகாது.  ஆறுமணிவாக்கில் தாம்பரம் போய்ச் சேர்ந்தோம். அத்தைக்கு ஏற்கெனவே தகவல் சொல்லி இருந்ததால் காத்துக்கிட்டு இருந்தாங்க.  போனமுறை பார்த்ததுக்கு உடம்பு ரொம்பவே தளர்ச்சிதான். வயசும் ஏற ஏற...  உடல் சொன்ன பேச்சைக் கேக்குதா?

ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால் இவுங்களைப்பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன். இவுங்க  மகம் பிறந்த மங்கை !   அப்போதைக்கிப்போது உடல் ரொம்பவே  தளர்ந்து போயிருக்கு..... பெருமாளே..... காப்பாத்து!
நம்ம குடும்பங்களில் இவுங்களை முன்னிறுத்திதான் சகல விசேஷங்களும் !  பெரியவங்க வந்தால் பெருமாளே வந்த மாதிரிதான்!
 நாம் போய் வந்த கோவில்கள் பற்றி எல்லாம் விசாரிச்சாங்க.
எந்தக் கோவில் என்றாலும்  சட்னு அதைப் பற்றிய விவரங்களைச் சொல்லிருவாங்க. மருமகளையும் நல்லாவே ட்ரெய்ன் பண்ணிட்டாங்க.  இப்போ அவுங்களும் அடுத்த வேளுக்குடியா மாறிக்கிட்டு இருக்காங்க.  வீட்டு, நாட்டு விஷயங்களைப் பேசிட்டு, அப்படியே  ராத்திரி சாப்பாடும் அங்கேயே ஆச்சு. மெத் மெத்துன்னு இட்லீஸ் !

ஊருக்குக் கிளம்பவேண்டிய நேரம் வந்துருக்குன்னு சொல்லி ஆசிகள் வாங்கிக்கிட்டோம். திரும்ப ஓலா புக் பண்ணி லோட்டஸ் வந்து சேரும்போது மணி பத்து.

மறுநாள் காலை எல்லாம் வழக்கம்போல!   ஒன்பதரை மணிக்கு என் உ.பி.ச அனந்து,  வரேன்னு சொல்லி இருந்தார். ஒடம்பொறந்தாளைப் பார்க்க வெறுங்கையா வரமாட்டார்.  லைட்டா சாப்பிடன்னு  பிஸ்கட்களும் பூக்களும்.




வீட்டு விஷயங்களும் பயண விஷயங்களுமாப் பேசுனதில் ஒரு மணி நேரம் ஓடியே போச்சு...... துளசிதளத்தின் நீண்டகால வாசகர்.  இவர் குடும்பமே நம்மேல் அன்பைப் பொழியும்!   மீண்டும் மீண்டும் 'என்ன தவம் செய்தனை' தான்!  மனநிறைவான சந்திப்பு. அனந்து  ஆஃபீஸுக்குக் கிளம்பிப்போனவுடன் நாமும் அடையாறுக்குக் கிளம்பினோம். அங்கேயும் ஒரு  அநந்து நமக்காகக் காத்திருப்பாரே!

உச்சிகால பூஜைக்கு முன்  கோவிலுக்குள்  போயாச்சு. இங்கேயும் மனநிறைவான தரிசனம்.  இன்னொருக்கா வரணும் என்றாலும் கூட, இன்னைக்கே 'பயணநாள் நெருங்கும் விவரத்தை'க் காதில் போட்டு வச்சேன். சரி, போயிட்டு வான்னு சொன்னாப்லெ தோணுச்சு.


தொடரும்............. :-)


8 comments:

said...

அருமை நன்றி.
சந்தியா பப்பிளிகேஷன்ஸ் விசிட் அடுத்ததா ?

said...

இன்னும்பயணத்திலா பெங்களூர் மறந்து போய் விட்டதா

said...

வாங்க விஸ்வநாத்,

அட! ஆமாம்லெ!!! :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

பெண்களூருக்கு இந்த முறை வந்து போகச் சரியான நேரம் அமையலை. மைஸூர் பக்கம் போயிட்டோம். அதுக்குப்பின் இந்த மே மாசம் பெங்களூர் பயணம் இருந்தது. உங்க வீட்டுக்கு எங்களோடு வந்தாங்களே அந்த மச்சினர் மகனின் கல்யாணம். கடைசியில் வர முடியாமப் பயணத்தைத் தள்ளி வைக்க வேண்டியதாகப்போச்சு, கோபாலின் கண் சர்ஜரி காரணம். ப்ச்....

said...

பெரியவர் ஆசீர்வாதமும்,அநந்தபத்மநாதரின் தரிசனமும் , மகிழ்சியே.

said...

வாங்க மாதேவி,

ரொம்பச் சரிப்பா..... அடுத்த பயணம்வரை இந்த மகிழ்ச்சியைத் தக்க வச்சுக்க வேணும்.

said...

நிறைவை தரும் சந்திப்புகள் ...மகிழ்ச்சி மா..

மூன்றாவது பாரா இருமுறை வருகிறதே மா ...

said...
This comment has been removed by the author.