Friday, November 22, 2019

ப்ரேக்ஃபாஸ்ட் பை சீனு, லஞ்ச் பை கண்ணன் !!! (பயணத்தொடர், பகுதி 174 )

நம்ம பதிவர் கோவி கண்ணனை உங்களுக்கெல்லாம் நினைவிருக்குதானே?   இல்லை.....  'காலம் ' தான் பதில் சொல்லணுமோ? நம்ம குடும்ப நண்பர்னு சொல்றதைவிட  நம்ம குடும்பத்தில் ஒருவர்னு சொல்றதுதான் சரி.  பதிவுலகில் பல ஆண்டுகள்  இருந்தவர், இப்போ  ஃபேஸ்புக்கில் மட்டும் இருக்கார்.  நேரக்குறைவுதான் காரணமாக இருக்க வேண்டும். சொந்த பிஸினஸ்ன்னா சும்மாவா?

அவரை சந்திக்கத்தான் நாம் பிஸினஸ் பார்க் வரை வந்துருக்கோம். டாப் ப்ளஸ் இன்டியா மார்ட் கடை நடத்தறார்.   நாங்க கடைக்குள் நுழைஞ்ச ரெண்டாவது நிமிட் வரை முதலாளி கடையில் இல்லை.  நல்ல உத்யோகத்தை உதறித் தள்ளிட்டுக் கடை வைக்க நல்ல நெஞ்சுரம் வேணும். 'நம்மவருக்கு' இப்படிக் கடை வைக்கணுமுன்னு ரொம்பவே ஆசை.  நாந்தான் முட்டுக்கட்டை போட்டேன்னு ஒரேடியான்னு சொல்ல முடியாது.... கடைன்னா ஓக்கே.... ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் வச்சேன்.  அந்தக் கடை நகைக்கடையா இருக்கணுமுன்னு.....   ஆள் அதுக்குப்பின் கப்சுப்...  :-)
கண்ணன் ரொம்பவே இளைச்சுப்போயிட்டார், ஆனால் ஆரோக்யமாவும், சந்தோஷமாகவும் இருக்கார்.  இதுலேயும் ஸ்ட்ரெஸ் இருக்குன்னாலும் இது வேற மாதிரி.
தொழில் பரவாயில்லாமப் பிக்கப் ஆகி இருக்காம். நல்லா இருக்கட்டும்.!  கொஞ்ச நேரம் கடையைச் சுத்திப் பார்த்தோம்.  முதல்முறை போறதால் சம்ப்ரதாயத்துக்கு ஒரு ஸீரோ வாங்கினார் 'நம்மவர்'. ரொம்ப சென்ட்டிமண்ட்டு....  பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் இருக்கு!


பக்கத்துலே இருக்கும் ஃபுட்கோர்ட் (மாதிரி ) போய்  எல்லோரும் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம். உபயம்  நம்ம கண்ணன் :-)

சாப்பிட்டு முடிக்கும்போதே மணி ரெண்டேகால் ஆகிருச்சு.  அங்கிருந்தே  கோவியாரிடம் விடை வாங்கிக்கிட்டு, கீழ்த்தளத்தில் இருக்கும் எம் ஆர் டி  ஸ்டேஷன் எக்ஸ்போ விலிருந்து திரும்ப லிட்டில் இண்டியா எம் ஆர் டி வந்துட்டோம். ஒரு முக்கால் மணி நேரப்பயணம் !
பஃபெல்லோ ரோடில் நடந்து வரும்போது,  பழைய  மார்கெட்க்குள் நுழைஞ்சது, பலாப்பழம் கிடைக்குமான்னு பார்க்க.  முக்கனியும் இருக்கவே  கொஞ்சம் வாங்கினோம்.  வாங்காத பழங்களை க்ளிக்கி வச்சுக்கிட்டேன் :-)


எதோ சீன விசேஷம் போல....  ஊதுபத்தியும், பலவகைப் பலகாரங்களுமா இருந்துச்சு. நம்மைப்போல்தான் ஊதுபத்தியைக் கொளுத்தி வைக்கிறாங்க. ஆனால் கட்டுக்கட்டா.... கொளுத்தி வச்சாலும்  வாசனையே இருக்காது.  நம்ம ஊதுபத்தி வாசனைகள்தான் எத்தனை வகை இல்லே?

இளநீர் ஒன்னு வாங்கிக் குடிச்சோம்.  இங்கெல்லாம் நம்மூர் மாதிரி உள்ளே இருக்கும் தேங்காய்/வழுக்கைக்காகக் காயை ரெண்டாவெட்டி எல்லாம் தரமாட்டாங்க. ஒரு நீள ஸ்பூன்  கொடுப்பாங்க. நாமே முடிஞ்ச அளவு அதன் மூலம் சுரண்டி எடுத்துத் தின்னு  தீர்க்கலாம் :-)
ஒரு சின்ன கிஃப்ட் வாங்கிக்க வேண்டி  நகைக்கடைக்குள் புகுந்து வந்தேன். அக்கம்பக்கத்துக் கடைகளில் எல்லாம் அழகழகான பொம்மைகள் இருந்தும்..... நிக்கற லக்ஸ் கிடைக்கலைப்பா.....

அறைக்குத் திரும்பிட்டோம்.  கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் இன்னொருக்கா ஊர் சுத்தக் கிளம்பலாம். ஓக்கேதானே?

தொடரும்......... :-)

6 comments:

said...

படங்களுடன் பகிர்ந்த விதம் வழமைபோல் அருமை.வாழ்த்துக்கள்

said...

கண்ணன் பள்ளிக்கூட பையன் போலவே இருக்கின்றார்.

said...

.. கடைன்னா ஓக்கே.... ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் வச்சேன். அந்தக் கடை நகைக்கடையா இருக்கணுமுன்னு..... ஆள் அதுக்குப்பின் கப்சுப்... :-)...



ஆஹா.....


ஓடி வந்து 14 பதிவுக்கும் கமெண்ட் போட்டாச்சு...

said...

. கடைன்னா ஓக்கே.... ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் வச்சேன். அந்தக் கடை நகைக்கடையா இருக்கணுமுன்னு..... ஆள் அதுக்குப்பின் கப்சுப்... :-)...




ஆஹா...


ஓடி வந்து 14 பதிவுக்கும் கமெண்ட் போட்டாச்சு ..



said...

அறிமுகத்திற்கு மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துகள்.
தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

said...

கோவை கண்ணன் சந்திப்பு வாழ்துகள். அடடா...சிங்கப்பூர் பயணத்தில் மிஸ்பண்ணி விட்டோமே.