ஒரு தடவை.... லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்ப்போர்ட்டில் இறங்கி, லண்டனில் இருந்து 'நம்மவர்' வரும் விமானத்துக்காகக் காத்திருக்கேன். அப்பவும் அதே க்வான்டாஸ் ஃப்ளைட்தான். பதினாறு மணி நேரம் லொடக் லொடக்குன்னு ஒரு சத்தம் கேட்டு தலைவலி மண்டையைப் பிளக்குதேன்னு ஒரு காஃபி ஷாப்பில் அஞ்சு டாலர் கொடுத்து காஃபி வாங்கறேன். ஸ்ட்ராங்கா வேணுமான்னு கேட்டப்பத் தலையையும் ஆட்டியாச். வந்தது டபுள் ஸ்ட்ராங்கா வெறும் டிகாக்ஷன். ஐயோன்னு அப்புறம் கொஞ்சம் வெந்நீர் வாங்கிக் கலந்து கட்டங்காப்பியாக் குடிச்சது இப்ப எதுக்கு நினைவுக்கு வரணும்? மனசே..... அடங்கமாட்டியா? இருபத்தியிரண்டு வருசக் கதை இப்போ ஏன்?
கதவுலேயே போட்டுருக்காங்க..... எல்லா அளவுக்கும் ஒரே விலை! அதுவும் ஒரே ஒரு டாலராம்! பரவாயில்லையே...
உள்ளே போனால்.... காஃபி மெஷீன்களின் வரிசையில் நம்ம கப்புச்சீனோவும் இருக்கு! நாமே போட்டுக்கணும். பத்மாவும் நம்மவரும் மீடியம் கப், ப்ளாட் ஒயிட் வாங்குனாங்கன்னு நினைவு. எனக்கு பெரிய கப்பில் கப்புச்சீனோ! பால் வேற ப்ரெஷ் பாலாவே இருக்கு! ஒரே சொல்லில் சொன்னால்....'அட்டகாசம்' !
காபியைக் குடிச்சுக்கிட்டே விர்ர்ர்னு காரில் போய்க்கிட்டு இருக்கோம். ஒரு இருபத்திமூணு மைல் பயணம். கோவில் வளாகத்துக்குள் நுழையும்போது மணி பதினொன்னு அம்பது.
'குருவாயூரப்பனுக்கு நம்மை சந்திக்கக் கொடுத்து வைக்கலை.' பதினொன்னரைக்கே கதவை சாத்திக்கிட்டான். அதுக்கெல்லாம் சோர்ந்து போக முடியுமா? வாசலில் யானை இருக்கே அது போதும்.
சும்மாச் சொல்லக்கூடாது..... வளாகமும் பெருசு! கோவிலும் பெருசு! அஞ்சு நிலை ராஜகோபுரம்! ரெண்டு மாடி உயரத்தில் இருக்கும் கோபுர வாசலுக்குப் படிகளேறிப் போகணும்! படிகளின் ஆரம்பத்தில் நம்ம யானைகள்! அழகான படிகள். ஏறிப் பார்த்துருக்கலாமேன்னு இப்போ தோணுது.......
த்வஜஸ்தம்பமும் நல்ல உயரமா, பளபளன்னு மின்னுது! கொஞ்சம் தள்ளி யாகசாலை!
ரொம்பவே அழகாவும் அம்சமாவும் கட்டி இருக்காங்க. வெளியிலேயே இப்படின்னா உள்ளேயும் ரொம்ப அழகாத்தான் இருக்கணும்!
வளாகம் இருபத்தியொன்பது ஏக்கர் பரப்பு! 1988 வது வருஷம் இந்தக் கோவில் வந்துருக்கு! இந்த இருபத்தியொன்பது வருஷத்துலே அபார வளர்ச்சி! உபநயனம், நிச்சயதார்த்தம், கல்யாணம், சீமந்தம், காதுகுத்து, புதுவண்டிக்குப் பூஜைன்னு நம்மாட்களுக்கு வேண்டிய அத்தனை சமாச்சாரத்தையும் கோவிலிலே நடத்திக்கலாம்! வாவ்............. ஊருக்குப்போய் செய்யணுமுன்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டுக் காத்திருக்க வேண்டியது கூட இல்லை. துலாபாரம் கூட இருக்காம்! அடடா....
அடுத்தமுறை (!) சீக்கிரமா வரணுமுன்னு நினைச்சுக்கிட்டேன்! நம்மைப்போலவே இன்னொரு குடும்பமும் கோவில் நேரம் தெரியாம வந்து வளாகத்தில் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.
அந்தப் பூஜை இல்லேன்னா என்ன, இன்னொரு பூஜையைப் பார்க்கலாமுன்னு பத்மா அடுத்து நம்மைக் கூட்டிப்போனது சாந்த் பேலஸுக்கு! இங்கே பேட் கி பூஜா ! பஃபேதான்! ஏகப்பட்ட வகைகள் !
கொஞ்சமா மெயின் கோர்ஸ் சாப்பிட்டுட்டு, டிஸ்ஸர்ட்டில் பூந்து விளையாடிட்டேன். சூப்பர் போங்க !
அன்றைக்கு மதியம் பத்மாவுக்கு ஒரு முக்கிய மீட்டிங் இருக்கு. எங்களோடு சுத்த வேணாமுன்னு பெரியமனசு பண்ணி அனுமதி கொடுத்துட்டோம் :-) எங்கே கொண்டு விட்டுட்டுப் போகன்னு கேட்டதுக்கு ரெடிமேட் பதில் மென்லோ பார்க் மால் :-)
'வேறெங்கியாவது போகணுமுன்னாலும் டாக்ஸி இருக்கவே இருக்கு. நீங்க கிளம்பிப்போங்க'ன்னு வற்புறுத்த வேண்டியதாப் போச்சு! டாக்ஸி வேணுமுன்னா இந்த நம்பரில் கூப்புடுங்கன்னு ஒரு ஃபோன் நம்பரும் கொடுத்தாங்க.
எங்களை மாலில் கொண்டு விட்டுட்டு, பத்மா போனதும், நாங்க மகள் கொடுத்த லிஸ்ட்படி ஒப்பனைப்பொருட்கள் வாங்க 'மேஸி'க்குள் போயிட்டோம். ஏற்கெனவே (1999 இல்) வந்த இடம்தான், இந்த மால். அப்போ பிரமாண்டமாத் தெரிஞ்சது, இப்போ சாதாரண அளவில்! நம்ம பார்வைதான் விரிஞ்சுப்போய்க் கிடக்கு இத்தனை வருசங்களில்...இல்லே?
மகளுக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டு அப்படியே ச்சும்மா ஒரு சுத்து வந்தால்.... க்ளோஸிங் டௌன் ஸேல்னு தாற்காலிகக்கடை ஒன்னு நடக்கும் வழியிலேயே..... எட்டிப் பார்த்ததால் என்னென்னவோ இருக்கு. விலை கூட ரொம்பவே மலிவு. ஒரு டாலர்தான் பலதும். ஒன்னுரெண்டு மட்டும் ரெண்டு மூணுன்னு! சின்னச் சின்ன அலங்கார நகைகள் கொஞ்சம் (!) வாங்கிக்கிட்டேன். கிஃப்ட் கொடுக்க வசதி!
கடைசியில் அதுலே நாலைஞ்சைப் போட்டுக்கிட்டு இருக்கறது யாருன்னு தெரிஞ்சால்.... ஆச்சரியம்தான் ! (அப்பாலிக்கா சொல்றேன்)
நம்ம அண்ணனும் அண்ணியும் இப்போ இங்கேதான் மகள்கள் வீட்டுக்கு வந்துருக்காங்க. அங்கே போய் எல்லோரையும் பார்க்கன்னு கொஞ்சநேரம் ஒதுக்கணுமுன்னு திட்டம். பாஸ்டனில் எதோ ஸ்போர்ட்ஸ் ஈவன்ட் (டென்னிஸ்?) இருக்குன்னு இந்த வீக் எண்ட் ரெண்டு குடும்பமும் கிளம்பிப் போறாங்கன்னு தெரியவந்துச்சு. இதெல்லாம் நாம் நியூஸி விட்டுக் கிளம்பறதுக்கு முன்னேயே அவுங்க ஏற்பாடு செஞ்சது. 'பரவாயில்லை. நீங்க போயிட்டு வாங்க. திங்கள் மாலைக்குள் வந்துட்டால் சந்திக்கலாம். இல்லைன்னா பிரச்சனை இல்லை'ன்னு சொல்லி இருந்தோம். இப்போ ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால்தானே மகள் கல்யாணத்துக்கு நியூஸி வந்துட்டுப் போனாங்க. வீட்டுக்குப் போன் செஞ்சால் யாரும் எடுக்கலை. இன்னும் வரலை போல.....
நம்ம சாமிகளுக்குக் குறைவே இல்லை!!!!
இப்ப அந்த நேரம் நம் கையில்! ரொம்ப முக்கியமான ஒரு பெரிய ஆள் , நம்மை வா வான்னு கூப்பிட்டார்.
போகலாமேன்னு சட்னு தோணுச்சு.
பத்மா கொடுத்த நம்பரில் கூப்பிட்டு டாக்ஸியை மால் வாசலாண்டை வரச் சொன்னோம்!
தொடரும்........ :-)

16 comments:
படங்களுடன் வழமைபோல் பதிவு அருமை வாழ்த்துக்களுடன்
என்ன, பொசுக்குன்னு சீனாவிலிருந்து மறுபடி அமெரிக்காவுக்கு?
வாங்க ரமணி.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி !
வாங்க ஸ்ரீராம்.
அதையேன் கேக்கறீங்க...... ரெண்டு தொடர் ஒரே சமயத்தில் நம்ம தியேட்டரில் ஓடிக்கிட்டு இருக்கே....
ஒரு நாள் சீனா அடுத்த நாள் அமெரிக்கான்னு இங்கேயும் அங்கேயுமா அல்லாடிக்கிட்டு இருக்கேன் :-)
//கடைசியில் அதுலே நாலைஞ்சைப் போட்டுக்கிட்டு இருக்கறது யாருன்னு தெரிஞ்சால்.... ஆச்சரியம்தான் !// I can guess. வரலஷ்மி தாயார் பொம்மை ??
//கோபுர வாசலுக்குப் படிகளேறிப் போகணும்// கேரளாவுக்கு தகுந்த மாதிரி படி வைத்திருப்பார்கள் அங்கு, இங்கு எதுக்கு?
22 வருசத்துக்கு முன்னாடி குடிச்ச ஒரு காபி இன்னும் மறக்கல.... உங்களுக்கு ஏன் யானை பிடிச்சிருக்குன்னு இப்போ புரியுது ...😂😀😁😁
ஒரு நாள் சீனா ஒரு நாள் அமெரிக்கா! ஹாஹா நல்ல ஓட்டம்
படங்கள் அழகு.
விடாது துரத்தும் கருப்பு என்பது நினைவுக்கு வந்தது அதுவே இங்கும் விடாது துரத்தும் கோவில்கள் என்று நினைப்பும் வந்தது
இப்போ சீனச் சுவர்ல பார்த்துட்டு சடக்கென்று அமெரிக்காவா என்று கன்ஃப்யூஷன். இரண்டு தொடர்களும் ஒரே சமயத்தில்.
கோவில் உள்ளே எப்படி இருந்திருக்கும் என்று யோசனை.
வாங்க விஸ்வநாத்.
உங்க யூகம் ஃபெய்ல்டு :-)
வாங்க குமார்.
உண்மையில் குருவாயூரில் கோவிலுக்குள் போகப் படியே ஏற வேண்டாம் !
தரிசனக் க்யூதான் இப்பெல்லாம் மேலேயும் கீழேயுமா போகுது !
வாங்க ஆனந்த்.
'இந்த' யானையின் பலமும் பலவீனமும் இதேதான் ...
வாங்க வெங்கட் நாகராஜ்.
இருக்கற கால்வலியில் தினம் ஒரு நாடுன்னு இந்த ஓட்டம் தாங்குமா? :-)
வாங்க ஜிஎம்பி ஐயா.
பெருமாள் என்னைச் சீனாவிலும் கூட விட்டு வைக்கலையே :-)
வாங்க நெ.த.
உள்ளே அழகாத்தான் இருக்கணும்!
Post a Comment