Monday, April 23, 2018

ஹைய்யோ........ ஹைய்யோ............. (@அமெரிக்கா.... கனடா 28)

நாலுமணிக்குத் தோழியை வரவேற்கத் தயாராக இருந்தேன். மரத்தடி காலத்தில் இருந்து பழக்கம்.  அநேகமாக தினமும்  பேசிக் கொள்வோம்.... ஆனால் நேரில் சந்திப்பது இன்றுதான் முதல்முறை!  எனக்குத்தான் முதல்முறை! 'நம்மவர்'  சில வருசங்களுக்கு முன்னே சந்திச்சுட்டு வந்தார். அதுலே அவருக்கு ஒரு பெருமை! இருந்துட்டுப் போகட்டும் :-)
கொஞ்ச நேரம் பேசிட்டு, அவுங்களோடு கிளம்பினோம்.  நமக்கு டின்னர் அவுங்க வீட்டுலெதான்!

போறவழியில் ஒரு இண்டியன் கடையில் நுழைஞ்சாச்சு.  எனக்கு எப்பவும் வேற ஊர்களில் இருக்கும் இண்டியன் கடை, காய்கறிக் கடை எல்லாம் பார்க்கப்பிடிக்கும். நம்ம ஊருலே கிடைக்காத பொருட்கள் என்னன்னு பார்த்துக் கண்ணாலே தின்னுட்டு வருவேன். இப்ப  நம்ம கெமெராவும் தின்னுது :-)






ஹைய்யோ..... வாழைப்பூ, ஹைய்யோ.... தொண்டைக்காய்....  ஹைய்யோ.....புடலங்காய்....   ஹைய்யோ .....  கொடுத்து வச்ச மக்கள் !   விலையும் ரொம்பவே குறைவு!

பவுண்டுலே இருக்கு, பார்த்துக்கோன்னார் 'நம்மவர்' .  அப்பவும் கிலோவுக்கு மாத்துனால் விலை குறைவே!  அதை விடுங்க.....  முதலில் இதெல்லாம் கூட கிடைக்குதே....!!!! ஹைய்யோ....
தோழி வீட்டில் நம்மை வரவேற்கும் யானைஸ்!
உள் அலங்காரம் அருமை!

கீழே படங்கள் : தோழியின் பெற்றோர் கைவண்ணம் ! ஹைய்யோ!!!!


வெளியே,  பின் முற்றத்தில் பேசிக்கிட்டு இருக்கும்போதே, 'உங்க வீட்டுக்கு மான்கள் வரும்னு சொன்னீங்களே... இன்றைக்கு வந்ததா'ன்னு கேட்டு வாய் மூடலை.... மான்கள்  விஜயம்!  ஹைய்யோ!!!!


சின்னதா ஒரு நிமிச வீடியோ க்ளிப்  எடுத்தேன். ஆனா அது என்னமோ பக்கவாட்டில் காமிக்குது....   :-(
 அப்புறம் அப்படியே ஃபேஸ்புக்கில்  ஏத்திவிட்டு உதவி கேட்டப்ப அதை நம்ம வடுவூர் குமார் நிமிர்த்திக் கொடுத்துட்டார்!   வடுவூராருக்கு என் நன்றிகள் ! 


அமெரிக்க வீடுகளில் ஒன்னு கவனிச்சப்ப.... நியூஸி போல வீட்டுக்குக் காம்பவுன்ட் சுவரோ, ஃபென்ஸோ போட்டுக்கறதில்லைன்னு புரிஞ்சது.  வீட்டுக்கு முன்னாலும் பின்னாலும்   வேலியே இல்லை!   அதனால்  மான்களும் அப்படியே வீடுவீடாத் தாவிப்போய்க்கிட்டே இருக்குதுங்க !

 புல்வெட்டும் சமயம் என்ன ஆகுமுன்னு  பார்க்கணும்? அப்படியே வரிசையா வெட்டிருவாங்களோ?   இல்லே   கவுன்ஸிலே வந்து வெட்டுதா என்ன? தோழியிடம் கேக்கணும்.  பனி காலத்தில் வீட்டு வாசலில் குவியும் பனியையும்  எல்லோருமாச் சேர்ந்து  அள்ளித் தள்ளுவாங்களோ?

தோழியின் கணவரும் நெடுநாள் நண்பர் போல ரொம்ப இயல்பா பழகினார்.  புதுசாப் பார்க்கிறோம் என்ற  உணர்வு அறவே இல்லை !!

விருந்து அட்டகாசம்! ஒன்பதுவரை  கதையடிச்சுட்டுக் கிளம்பினோம். தோழிதான்  ஹொட்டேலுக்குக் கொண்டுவந்து விட்டுட்டுப்போனாங்க.

மறுநாள் ஞாயிறு என்பதால் தோழிக்கு வழக்கமான வீட்டுக் கடமைகளை செஞ்சு முடிக்க நேரம் வேணுமேன்னு திங்களன்று சந்திக்கலாம்னு  ஒரு ஏற்பாடு நமக்குள்:-)

இவ்ளோ வேலைகளுக்கிடையிலும் எழுத்துலக விஐபிக்கள்  அங்கெ  வரும்போது, உபசரிச்சு, ஊரைச் சுத்திக்காட்டி, அவுங்க போக வேண்டிய இடங்களுக்குக் கொண்டுபோய்னு 'விருந்தோம்பலை' செஞ்சுக்கிட்டு இருக்காங்க நம்ம பத்மா அர்விந்த்!  இதுலே வயலுக்கு இறைத்த நீர் ....   இந்தப் புல்லுக்கும் கிடைச்சதுன்னு வச்சுக்கணும் :-)


இன்னொரு காரணமும் இருக்கு. 'நம்மவரின்' தங்கை மகர் நியூஜெர்ஸியில்தான்  இருக்கார்.  தங்கையும் இப்போது மகன் வீட்டுக்கு விஸிட் என்பதால் அங்கே போகவும் நேரம் ஒதுக்கணும் என்று  பயண ஆரம்பத்துலேயே பேசி முடிச்சிருந்தோம். ஞாயிறு  என்பதால் பிள்ளைகளுக்கும் பள்ளிக்கூட விடுமுறை.

காலையில் நாத்தனார் மகரே வந்து நம்மை வீட்டுக்குக் கூட்டிப்போவார்.

படம்: மாமனும் மருமகனும் !
நாங்கள் வழக்கம்போல் எழுந்து  கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு வந்தோம். இங்கே   இது அறை வாடகையில் சேர்த்தி இல்லை.  டைனிங் ஹாலை விட்டு வெளி வரும்போதே  குழந்தையும் (நாத்தனார் பேத்தி) அப்பாவுமா வந்துட்டாங்க.

கொஞ்ச நேரத்துலே கிளம்பிப்போனோம். சுமார் ஒரு மணி நேரம் ஆச்சு அவுங்க பேட்டைக்குப் போய்ச் சேர !
நாத்தனாரின் ஒரே அண்ணனும், செல்ல அண்ணியுமா நாங்க போயிருக்கும்போது  விருந்து தடபுடலா இருக்காதா என்ன? நம்ம வடை(யும்) இருந்தது  :-)

இவுங்க இருக்கும் ஏரியாவில்  அநேகமா எல்லோருமே இந்தியர்கள்!  வீட்டுக்குப் பின்னாலும் புழக்கடையில் வேலி இல்லாததால் பெருசா எதோ விளையாட்டுமைதானம்/பார்க் போல கிடக்கு!  எல்லார் வீட்டுப்பிள்ளைகளும் சகஜமா அங்கே ஓடி விளையாடுறாங்க!  (ஓ....லிட்டில் இந்தியா!)

குடும்பக் காரியங்கள் பேசி,  இந்தியாவில் இருக்கும் மற்ற மச்சினர்களோடு ஸ்கைப்பில் சமாச்சாரங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, சாப்பாடும் ஆனதும்,   மகரும், மனைவியும் எங்களைப் பக்கத்தூருக்குக் கூட்டிப்போனாங்க.




பிள்ளைகளுக்கு பேபி ஸிட்டர், நாத்தனார் :-)

சரித்திரப் புகழ் வாய்ந்த ஊர் !  சுமார் அரைமணி நேரப் பயணம்தான் :-)


தொடரும்......   :-)


18 comments:

said...

காய்கறிகள் கண்ணைப் பறிக்கின்றன - முள்ளங்கி தவிர!

லிட்டில் இந்ததியா வீடுகள் கவர்கின்றன!

said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

said...

இப்போது மூன்றாம் முறையாக இங்கு.ஆனாலும் தங்களைப்போல அருமையாக பயணக்கட்டுரை எழுதும் பாண்த்திடியம் இன்மையால்.கப்சிப்.படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை வாழ்த்துக்களுடன்

said...

மரத்தடி காலத்திலிருந்து வழக்கம்...மிகவும் ரசித்தேன்.

said...

சுரைக்காய்க்கும் மாங்காய்க்கும் நடுவுல Galkaன்னு ஒரு காய் இருக்குதே. $2.99ன்னு விலை போட்டிருக்கே. அது என்ன காய்?

மாமாவும் மருமகனும் ஒரே ஜாடை. பளிச்சுன்னு தெரியுது. ரொம்ப நாள் கழிச்சு பாத்ததால வீட்ல எல்லாருக்கும் அன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கும். குழந்தைகள் முகத்துலயே அது தெரியுது.

மான் கூட்டங்கள் அழகோ அழகு. அந்த வீடுகளும்.

said...

அருமை நன்றி

said...

அட.. நானும் உங்களை மாதிரிதான் டீச்சர். எந்த ஊர் போனாலும், கடைகளுக்கு, அதுவும் காய்கறி, பழக் கடைகளுக்குச் சென்று நோட்டம் விடுவது மிகவும் பிடித்தமானது (நம்ம ஊருக்கு வரும்போதும்). நேந்திரம், வாழைப்பூ, நம்ம ஊர் வாழைக்காய் என்று பல காய்கறிகளைப் பார்க்கும்போதே உற்சாகமா இருக்கு.

வீடுகளின் படமும் அருமை, டேபிளில் இருக்கும் சாப்பாட்டு லிஸ்டும் நல்லா இருக்கு.

said...

எந்த ஊருக்குப் போனாலும் காய்கறி எனக்கும் பழக்கம் உண்டு. :)

இனிமையான சந்திப்புகள் தொடரட்டும்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஏன் முள்ளங்கி பிடிக்காதா?


அடுத்தடுத்து வீடுகள், அதிலும் நம்மாட்களே இருப்பதால் பல சௌகரியங்களும் பல அசௌகரியங்களும் உண்டு என்றாலும் பிள்ளைகளுக்கு ஏறக்குறைய அவர்கள் வயசுலேயே நண்பர்கள் கிடைச்சுருவாங்க. இது பெரிய ப்ளஸ் பாய்ன்ட்தான்!

நாங்க நியூஸி வந்தப்ப, மகளுக்கு வேறெந்த இந்தியன் குழந்தைகளுடனும் பழக வாய்ப்பே இல்லை :-( ப்ச்.....

said...

வாங்க ரமணி.

எனக்கும் இது மூன்றாம் முறைதான் ! முதலிரண்டு பயணகாலத்தில் வேறொரு ஜென்மம். தமிழ்மணம் எல்லாம் அப்போது இல்லை :-(

கோபால் பலமுறை வந்துபோயிருக்கார். ஹெட் ஆஃபீஸ் அங்கேதான்.

அதென்ன பாண்டித்யம்? ஹா ஹா....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மரத்தடி காலத்தில் எல்லோரும் மிக நெருக்கமாக உணர்ந்தோம். அது ஒரு பொற்காலம்!

said...

வாங்க ஜிரா.

அந்தக் காய் பீர்க்கங்காய் போல இருக்கும். ஆனால் மேலே அந்த மேடாக நிற்கும் வரிகள் இல்லை. நுரைப்பீர்க்கங்காய்னு சொல்வாங்கன்னு நினைவு.

மருமகன் அச்சு அசல் மாமனே :-) நம்ம பிள்ளைன்னா ஈஸியா நம்பிடலாம் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி

said...

வாங்க நெ த.

ஆஹா..... நம்மைப்போல் காய்கறி ப்ரேமி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... நீங்களுமா!!!


சப்ஸி மண்டி என்னோட ஃபேவரிட் எப்பவும்! சண்டிகரில் அதுக்குன்னே ஒரு செக்டர் உண்டு ! எல்லாம் பச்சைப் பசேல்!

said...

வாங்க TamilUS.

நல்ல சேதி. உங்க பக்கத்துக்குள் வந்து பெயரைப் பதியலாமுன்னு துளசிகோபால்னு போட்டாலும் எடுக்கலையே.....

said...

// ஏன் முள்ளங்கி பிடிக்காதா? //

நல்லாவே பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும். படத்தில் இருக்கும் முள்ளங்கி பார்க்க பளிச்சுனு இல்லை. அதனால் சொன்னேன்.

said...

@ ஸ்ரீராம்.

தோலைச் சீவினால் ஆச்சு :-)