Monday, April 23, 2018

அவிச்ச கீரை ! சீனதேசம் - 1

முஸ்கி:  முதலில் ஃபேஸ்புக்கில் மட்டும் போடலாமேன்னு ஆரம்பிச்சேன்.

நம்ம ஷ்டைலுக்கு ஒத்துவரலை. அதனால்  நம்ம துளசிதளத்துலேயே போட்டு வச்சுட்டு, அங்கே போய் லிங்க் கொடுத்தால் ஆச்சு. அதுதான் வசதியும் கூட !

முதல் ரெண்டு பகுதிகளை இப்போ போடறேன்.

மூணாம் பகுதி முதல் செவ்வாய், வியாழன், சனியில் வெளியிட உத்தேசம்.

இப்ப நம்ம தியேட்டரில் ஓடிக்கிட்டு இருக்கும் அமெரிக்கப் பயணம்  கிட்டத்தட்ட முடிவடையும் நிலை. என்ன இன்னும் ஒரு பத்துப்பனிரெண்டு பதிவுகள் (!!!!) வரலாம் :-)
வழக்கம் போல்   உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,

உங்கள் துளசி டீச்சர்!

=========================================================

 சாமியைக் கும்பிட்டுட்டுப் பசங்களுக்கு டாடா சொல்லிட்டு,
வீட்டில் இருந்து கிளம்பின இருபத்தியஞ்சாவது மணி நேரத்தில் சீனதேசத்தில் காலடி வைத்தேன்........
பயணம்.... அதே க்வான்டாஸில்தான்......





மூணு வேளை சாப்பாட்டுக்கும் அவிச்ச கீரை கொடுத்தாங்கப்பா..... 



ஸிட்னியில் இருந்து  க்வான்டாஸ் வச்சுருக்கும்  ஆதிகாலத்து பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய விமானத்தில் பெய்ஜிங்.  உள்ளங்கை அகலத்தில் ஒரு மானிட்டர்.  அதுலே உத்து உத்துப் பார்த்தால்.... 


இலவச இணைப்பா.... ஒரே லொடலொட சத்தம்......

16 comments:

said...

சீனப் பயணம் என்றதுமே இரண்டாம் தர விமானம்தான் கிடைத்ததா?

சாதம், அவித்த கீரை - ஆரம்பமே பலே ஜோர்.. அங்கு போய் சாப்பாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்றும் அறிய ஆசை.

said...

உங்களுக்கு இல்லாத ஆதரவா? எத்தனை டன் வேணும்னு சொல்லுங்கோ. ஏர் இண்டியாவில் “டு பே” யில் அனுப்பிச்சசிடறேன்.

said...

அவிச்ச கீரை உடம்புக்கு நல்லதுதான். தொடர்கின்றேன். (உங்கள் பதிவுகளை வலைத்தளத்திலேயே முதலில் போட்டுவிட்டு, சுட்டியை மட்டும் facebook இல் இணைக்கவும். நான் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறி விடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்)

said...

ஆஹா அடுத்து சீனப் பயணமா? சும்மா அடிச்சு ஆடுங்க.. பார்க்க/படிக்க நாங்க ரெடி.

said...

வாங்க நெ.த.

ஆமாங்க. இந்த செக்டரில் மட்டும் அப்க்ரேட் பண்ணவேஇல்லை இந்த க்வான்டாஸ்.... அக்ரமமா இருக்குல்லே?

ஸிட்னியில் எத்தனை இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. இப்படி உப்பு கூடப் போடாமல் அவிச்ச கீரையைக் கொடுத்தால் எப்படி?

அமெரிக்கப் பயணமும் இதே க்வான்டாஸ்தான். அதுலே கொஞ்சம் பரவாயில்லாம இருந்ததே....

இனி மலிவு மலிவுன்னு கூப்பிட்டாலும் க்வான்டாஸில் போகக்கூடாதுன்னு ஒரு தீர்மானம்.

said...

அடுத்து சீனமா? அருமை. சீனாப்பட்டு நல்லாருக்கும்னு கேள்விப்பட்டு ஆசைப்பட்டு விருப்பப்பட்டு சிந்தனைவயப்பட்டு சீனாவுக்குப் பட்டு வாங்கப் போனீங்களா? :)

சீனாவில் சோறும் அவிச்ச காய்கறியும் பாதுகாப்பு. எதுல என்ன இருக்கும்னு சொல்ல முடியாது. உங்க அனுபவங்களைத் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

ஏர் இந்தியா வேணாம். வேற எந்த ஏர்லைன்ஸ் என்றாலும் சரியே!

said...

வாங்க தமிழ் இளங்கோ,

வலையில் போட்டு ஃபேஸ்புக்கில் லிங்க் கொடுக்கலாச்சு. அதுதான் வசதியாகவும் இருக்கு!

ஆமா... அவிச்ச கீரை உடம்புக்கு நல்லதுதான்.... அதுக்காக மூணு வேளையுமா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு பயணம் இருக்கு. அதுக்குள்ளே அமெரிக்காவையும் சீனாவையும் எழுதி முடிச்சுட்டாத் தேவலை......

போற இடங்களில் கொஞ்சம் பிஸியாத்தான் இருக்கப்போறேன் :-)

said...

pearl S buck ன் தெ குட் எர்த் வாசித்திருக்கிறீர்களா சீனரின் வாழ்க்கை முறை தெரிய வரும்

said...

தாமதமாய்ப் படிப்பதற்கு மன்னிக்கவும். கவனிக்கலை, though I saw in FB. எப்பொழுதும்போல் தொடர்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

பட்டு பட்டுன்னு பட்னு சொல்லிட்டீங்க :-)

சாப்பாட்டில் கவனமாத்தான் இருக்கவேண்டி இருக்கு. இதுலே ப்ளாஸ்டிக் அரிசின்னு வேற பயமுறுத்தி வச்சுருக்காங்க.....

எதைப் பார்த்தாலும் ப்ளாஸ்டிக்கோன்னு ஒரு சந்தேகம் வராமலில்லை :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

குட் எர்த் வாசிக்கலை. ஆனால் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் புத்தகங்களில் பல சீன வாழ்க்கையையும், குறிப்பாக பெண்களின் நிலையையும் அழுத்தமாச் சொல்லுதே!

said...

வாங்க விஸ்வநாத்.

தாமதமா? நோ ஒர்ரீஸ். வலையில் இது ஒரு வசதி! நேரம் கிடைக்கும் போது வாசிக்கலாம் !

said...

/முஸ்கி: முதலில் ஃபேஸ்புக்கில் மட்டும் போடலாமேன்னு ஆரம்பிச்சேன்./

அப்படி எல்லாம் வகுப்பை விட்டுட்டுப் போனா சும்மா இருக்க மாட்டோம். என்ன விளையாடறீங்களா? ரீச்சராப் பொறுப்பா இருக்கும் வழியைப் பாருங்க.

இவண்
பொறுப்புக்காரன்

said...

அட முதல் பதிவை பார்த்தாச்சு...

அருமை சீனாவை பார்க்க...