Monday, April 23, 2018

பொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2

சுமார் ஒரு கிலோ அரிசி, பருப்புப்பொடி, எம்டிஆர் தயாரிப்பான ரெடி டு ஈட் ... வெண்பொங்கல், பாவ்பாஜி மசாலா, வெஜ் பிரியாணி , தட்கா தால், கூடவே புளியோதரை மிக்ஸ், உண்மையான இன்ஸ்டன்ட் காஃபி( பால், சக்கரை, காஃபித்தூள் எல்லாமே சேர்ந்துருக்கு) பாவ் பாஜிக்கான பாவ் வேணாமா... அதுக்கு பர்கர் பன், கொஞ்சம் உ.சிப்ஸ், ரெண்டு பிஸ்கெட் பாக்கெட்ஸ், ஒரு மத்ராஸ் மிக்ஸர் பொட்டலம், கொஞ்சம் உப்புன்னு ஒரு ஸூட்கேஸுக்குள்ளே அடைச்சுட்டு, போனாப் போகுதுன்னு கொஞ்சம் துணிமணிகளை அதுலே எடுத்து வச்சார் 'நம்மவர்' 

என்ன இதுன்னு முழிச்சேன்..... நீ தாங்கமாட்டேன்னார் !
அதுக்குத்தான் கிச்சன் இருக்கும் அப்பார்ட்மென்ட் புக் பண்ணியிருக்கேன்னதும்..... ஆ.... அப்படியா அப்ப அடுப்பில் இருந்து விடுதலை இல்லையா.......ன்னுட்டு என் பங்குக்கு ஒரு மைக்ரோவேவ் ரைஸ்குக்கர். ஒரு எவர்ஸில்வர் டம்ப்ளர், எடுத்து அதே பொட்டியில் வச்சேன்:-)

பெய்ஜிங் ஏர்ப்போர்ட் அட்டகாசமா இருக்கு! ஹைய்யோ.... எம்மாம் பெருசு! இமிகிரேஷன் முடிஞ்சதும் (ஏன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு இருக்காங்க......ஙே.....) ரயிலடிக்குப் போகணும். ரெண்டு மூணு ஸ்டேஷன் தாண்டி நம்மைக் கொண்டுபோயிருது ரயிலு. அங்கெபோய் நம்ம பொட்டிகளை எடுத்துக்கணும்.

இவ்ளோ தீனி இருக்கேன்னு சின்னதா பயம் வந்தது உண்மை. நியூஸியில் எதாவது தீனி கொண்டு வந்தா.... பாதிதான் வீட்டுக்கு வரும். மீதியை அங்கேயே குப்பையில் அவுங்களே கடாசிருவாங்க. என் சுண்டைக்காய் வத்தலும், நார்த்தங்காய் உப்பிலிட்டதும் குப்பைக்குப் போனப்பக் கண்ணாலே ஜலம் விட்டேன்....

இங்கே ஒன்னுமே செக் பண்ணலை.... போன்னுட்டார்!

வெளியே வரும்போதே நம்ம பெயரைக் கொடியாப் பிடிச்சுக்கிட்டு ஒருவர். டாக்ஸிக்காரர். நியூஸியில் இருந்தே ஒரு கம்பெனிக்குப் பணம் கட்டியிருந்தோம். முக்கால் மணி நேரப்பயணம்.


இம்பீரியல் மேன்ஷன், மேரியட் எக்ஸிக்யூடிவ் அபார்ட்மென்ட் வசதியாத்தான் இருக்கு! ஆறாவது மாடியில் நம்ம குடித்தனம் 





107 சதுர மீட்டராம். கிச்சன், ஸிட்டிங் ரூம், பெட்ரூம், பாத்ரூம், ரெண்டு டாய்லெட் எல்லாஞ்சரி. ஆனால்....குந்தம் போல ஒரு பெரிய க்யூப் ஏன் நட்ட நடுவிலே உக்கார்ந்துருக்குன்னு எட்டிப் பார்த்தால்... பாத் டப்பாம்! கிழிஞ்சது போ.... 

பொழுது விடிஞ்சதும் பார்த்தால் கொடி ஏத்தறாங்க!
எதிரில் அழகான ஒரு தோட்டம். எதுத்த கட்டடத்துக்குச் சொந்தமாம்! இருந்துட்டுப் போகட்டும்.....
 தொடரும்...... :-)

13 comments:

said...

ஆஹா.. பயண ஆரம்பமே கலக்குதே.. நான் பிலிப்பைன்ஸ் 1 வார டிரிப்புக்காக Gits brand புலாவ்/பாஜி போன்று பாக்கெட் பாக்கெட்டா வாங்கிச் சென்றேன். இதுல கேசரி பாத்தும் ஒரு பாக்கெட். அது என்ன அரிசியை பாதி சமைத்து வைத்திருக்கிறான், நாம 3 நிமிஷம் அவன்ல வச்சா சுடச் சுட ரெடியாயிடுது. இது உடம்புக்குக் கெடுதல்னு மனசுல தோணி அதை ரொம்ப உபயோகப்படுத்தலை.

மரியட் ஹோட்டல் அறை ரொம்ப பெரிசா இருக்கு. தொடர்கிறேன்.

said...

அடடே... இந்த தரம் சுடச்சுட பயணக்கட்டுரையா?

said...

தொடர்கின்றேன்.

said...

ஆஹா போகும் போதே இத்தனையும் கொண்டு போயாச்சா.... நல்லது தான். எத்தனை நாளைக்கு அவிச்ச கீரை சாப்பிட முடியும்.

தொடர்கிறேன்.

said...

போறப்ப அடுப்பாங்கரையவே கூட கூட்டீட்டுப் போறீங்க. சீனா அந்த அளவுக்கு மெரட்டியிருக்கு. சீனா போனதில்லைங்குறதால, எப்படியிருக்கும் என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்க நானும் ஆவலா இருக்கேன்.

பல வெளிநாடுகள்ள இமிகிரேஷன் ஆட்கள் சீருடை அணிஞ்சுதான் பாத்திருக்கேன். இந்தியாவில்தான் தேவையில்லை. நியூசியில் எப்படி?

பெய்ஜிங்னா சீனாவோட தலைநகரம் தான? ஹோட்டல் ரூம் நல்லாருக்கு.

அந்த மாட்டுக்கு தண்ணி காட்டுற தொட்டிதான் பாத்டப்பா? இவ்வளவு சிறுசா இருக்கே.

said...

வாங்க நெ.த.

இந்தியன் சாப்பாட்டுக்கடையை எங்கேன்னு போய்த் தேட? அதுதான் .... அவுங்களும் அனுமதிக்கிறாங்களே.... நியூஸின்னா சாப்பாட்டு வகைகள், ஏர்ப்போர்ட்டில் க்ளியரன்ஸ் ஆகிறவரை வயித்தில் நெருப்புதான் :-)

மேரியட்ஸ் அபார்ட்மென்ட் என்பதால் பெருசாவே இருக்கு.

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த முறை ரொம்ப நீட்டி வலிக்காம சட்னு பயணத்தொடர்களை முடிக்கணும். இன்னும் ஒரு பயணம் வந்துருக்கு... :-)

said...

வாங்க தமிழ் இளங்கோ.

தொடர்வதற்கு நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மற்ற இடங்களைப்போல் இல்லை.... மொழிப்பிரச்சனை அதிகம். அதான் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது வயிறு வாடாமல் இருக்க இந்த ஐடியா :-)

said...

வாங்க ஜிரா.

அந்தத் தொட்டியை அங்கிருந்து எடுத்துட்டு அடுக்களையைக் கொஞ்சம் பெருசா ஆக்கி இருக்கலாம். அதெல்லாம்..... இதுவே நம்ம வீடா இருந்தால் என்னென்ன செய்வோமுன்னு பேசி முடிச்சாச்சு :-)

எங்கூர்லேயும் சீருடை இருக்கு. ஆனால் போலீஸ்னு போட்டுருக்காது !

said...

நான் ஜப்பானுக்குப் போகும் போது பருப்புப்பொடியைக் கொண்டுபோயிருந்தேன் அவர்களதை மோந்து பார்த்துஏதாவது போதைப் பொருளா என்று விசாரித்தார்கள்

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஹாஹா.... மோந்து பார்த்துட்டு, தும்மலில் அவஸ்தைப் பட்டார்களா? :-)

said...

சாப்பாட்டு உணவுகள் எல்லாம் செம்ம..

பாத் டப் அழகாக இருக்கு...