கொடி ஏத்தி முடிக்கும்போதுதான் கண்ணைத் திறந்தேன். வழக்கம்போல் (!) கொடி க்ளிக் ஆச்சு. இந்த எதிர்வாடைத் தோட்டத்துக்குப்பின்னால் இருக்கும் ஒரு கட்டடத்தின் சீனக் கூரை மேல் எனக்கொரு இது :-) என்னவோ பொம்மை வரிசை இருக்கேன்னு முதல்நாளே (பொல்லாத முதல்நாள்... முந்தாநேத்துதானாக்கும்!) கிட்டக் கொண்டாந்து பார்க்கும்போது நாய்கள் உக்கார்ந்துருக்கோன்னு சம்ஸயம்.
கால் வலி, கொஞ்சம் தேவலைன்னாலும்... இருக்கு. அதுக்காக ஊர் சுத்த வந்த இடத்தில் அறையிலேயே அடைபட்டுக் கிடக்கலாகுமோ? அமெரிக்கத்தோழி (மருத்துவர்) பரிந்துரைத்த ஐஸிஹாட் பாம் கையோட கொண்டுவந்துருந்ததால் ராத்திரி தூங்குமுன் காலில் நல்லாத் தேய்ச்சுக்கிட்டேன். டைகர் பாமின் இடத்தை இப்போ இது பிடிச்சுக்கிச்சு :-)
வெளியே கிளம்பணுமுன்னா அதுக்கொரு காரணம் வேணும் எனக்கு!
இப்ப?
அதான் இருக்கே... வெண்ணை வேட்டை!
அந்த 'நடக்கும் தெரு'வுக்குப் போனோம். இது நம்ம ஹொட்டேலுக்குப் பின்பக்கம்தான் :-) நேத்து நம்மை டூரிஸ்ட் பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டப்பயும் இதே வழியாத்தான் வந்தோம். அப்பவே சில க்ளிக்ஸ் எடுத்துருந்தேன். அந்த இடங்களைத் திரும்ப ஒருக்காப் பார்த்துக்கிட்டே உணவுப்பொருட்கள் விற்கும் கடை கண்ணில் படுதான்னு போய்க்கிட்டு இருக்கோம். தீனிக்கடைகள் ஏராளம். ஆனால் நோ வெண்ணை. என்ன ஒரு ஆறுதல்ன்னா.... நான் வெண்ணை டான்ஸ் ஆடிக் காமிக்க வேணாம் :-)
ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டில் எழுதி வாங்கின துண்டுச்சீட்டு கைவசம் இருக்கே! அதைப் பத்திரமா வச்சுருக்கார் 'நம்மவர்'. கடைக்குள் நுழைஞ்சதும் புன்முறுவலோடு நம்மை நோக்கி வரும் கடைக்காரரிடம், பர்ஸிலில் இருக்கும் துண்டுச்சீட்டைப் பவ்யமா எடுத்துக் காமிப்பார். கடைக்காரர் ஒரு கால்நொடி சீட்டை முறைச்சுட்டுச் சின்னக் கண்களை அகலமா விரிச்சு தலையை இடவலதா வேகமா ஆட்டுவார். முடிஞ்சது விஷயம். இனி அடுத்த கடை.. :-)
வாங்ஃப்யூஜிங் தெருவில் குறுக்கும் நெடுக்குமா நடந்து போறதுமில்லாம, பக்கவாட்டில் பிரியும் தெருக்களுக்குள்ளும் எட்டிப் பார்த்தாச்சு ! வெண்ணெய் கிடைக்கும் வழியே இல்லை. ஆனால் க்ளிக்ஸ் ஏராளமாக் கிடைச்சது :-)
அந்த அஞ்சு மாடு இருக்கே.... அதைக் கிட்டப்போய்ப் பார்த்தேன். செப்புத்தகட்டால் செஞ்சுருக்காங்க. ஒவ்வொன்னும் ஒவ்வொருவிதமாப் பார்க்குது! காளை மாடுகள்! தகடும் நிறைய பொத்தல்களோடு இருக்கு. ஒருவேளை உள்ளே லைட்ஸ் இருக்குமோ? இருட்டுனதும் ஒருக்கா வந்து பார்க்கணும்.
Han Huang (AD 723-787)என்னும் கலைஞர் வரைஞ்ச அஞ்சு காளை மாடுகள் பெயின்டிங்கைத்தான் இப்போ இங்கே செஞ்சு வச்சுருக்காங்க. அஞ்சும் அஞ்சு வித செல்வங்களைக் குறிக்குதாம். வாழ்க்கையில் முன்னேற மனுஷனுக்கும் இவை முக்கியமான தேவைகள்தானாம்! Longevity, Wealth, Tranquility, virtue, success !
இவரோட ஒரிஜினல் பெயின்டிங், பல செல்வந்தர்கள், மன்னர்கள் கை மாறி , இப்போ பேலஸ் ம்யூஸியத்துலே பாதுகாத்து வச்சுருக்கறதாக் கேள்வி! இந்த மாடுகள் நிக்கற ஸ்டைலுக்கும் பார்க்கும் பார்வைக்கும் கூட விலாவரியாப் பொருள் சொல்லி வச்சுருக்கறாங்கப்பா !
ஆர்வம் இருக்கறவங்க இந்தச் சுட்டியில் போய்ப் பாருங்க!
https://patricksiu.wordpress.com/five-oxen-%E4%BA%94%E7%89%9B%E5%9C%96-by-han-huang-%E9%9F%93%E6%BB%89/
எது எப்படியோ..... காளைகளுக்கும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கும் புதுசா ஒரு கனெக்ஷனையும் இப்போ கண்டுபிடிச்சுட்டாங்க. ஒரு பெண்மணி, இந்த வாக்கிங் ஸ்ட்ரீட் மாடுகளைத் தடவிக் கொடுத்த தினம், வால் ஸ்ட்ரீட் ஷேர்கள் விலைஎல்லாம் எக்கச் சக்கமா எகிறிடுச்சாம்! வாலைத் தடவிக் கொடுத்துட்டாங்க போல :-) சும்மாத் தடவுனதுக்கே இப்படின்னா.... நான் தடவிக்கொடுத்து, க்ளிக்கும் பண்ணியிருக்கேன்! என்ன ஆகி இருக்குமோ, பெருமாளே!
மாடுகள் இல்லாம.... இன்னும் சில வெங்கலச் சிலைகளை நடக்கும் தெருவில் வச்சுருக்காங்க. கை ரிக்ஷா இழுப்பவர், சலூன் கடைக்காரர், ம்யூஸிக் மேன் இப்படி....
(பின்னலைப் பின்னின்றிழுப்பார்.....)
நாம் தேடிப்போன 'வேட்டை' தோல்வி அடைஞ்சதும் அதே பொடிநடையில் அறைக்குத் திரும்பி, பகல் சாப்பாடா எம்டிஆர் வெண்பொங்கலை முடிச்சுக்கிட்டு அடுத்த ரவுண்ட் கிளம்பினோம்.
எதுத்தாப்லெ இருக்கும் சீனக்கூரை நாய்களை (!) விடக்கூடாது. அது என்ன கட்டடமுன்னே தெரியலையேன்னு போய்ப் பார்த்தால்.... அதுவும் ஒரு தங்கும் விடுதியாம். மேலே இருக்கறது நாய் போலத்தான் தெரியுது. வெவ்வேற இன நாய்கள்?
பெரிய சாலை ஒன்னு இப்போ குறுக்கே! அதைக் கடந்து இடது பக்கம் போனால் இன்னொரு ரொம்பவே அகலமான மெயின் ரோடு. எட்டு லேன் ட்ராஃபிக். இங்கே ரைட் எடுத்துக்கிட்டு நேராப் போகணும். ரொம்பவே அகலமான ப்ளாட்ஃபார்ம். தெரு அகலத்துக்கு இருக்கு. நடுநடுவில் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் போக சுரங்கப்பாதைகள். இதுவே மூணு இடத்துலே வருது. நல்ல கூட்டமா மக்கள் போய்க்கிட்டு இருக்காங்க. பெரிய மதில் சுவரும் அங்கங்கே ராணுவக் காவலுமா ஒருபக்கம்.
கூட்டமாப் போகும் மக்களை வரிசைப்படுத்தத் தங்கக் கம்பித்தடுப்புகள் வச்சுருக்காங்க. எல்லாம் சக்கரம் வச்ச வேலிகள். இழுத்து நீட்டலாம், குறுக்கலாம். அப்புறப்படுத்திக்கலாம் இப்படி.... என்ன ஒன்னு..... எல்லாத்துலேயும் தாமரை! தங்கத்தாமரை!
திடும்னு ப்ளாட்ஃபாரத்துலேயே ஒரு கட்டடமும் அதுக்குள்ளே போக நாலு வாசலுமா! நான்கூட ஏதோ ட்ரெய்ன் ஸ்டேஷனின் நுழைவு வாசலோன்னு பார்த்தால்.... இல்லை. ப்ளாட்ஃபாரத்தின் அடுத்த பகுதிக்கு இதுவழியாப்போகணும்.
உள்நாட்டு மக்கள் கூட்டம்தான் 99.99 சதம். வெளிநாட்டு மக்கள் என் கண்ணில் பட்டவங்க ஒரு நாலு பேர்தான் அப்போ! அவுங்கெல்லாம் வாசலில் வச்சுருக்கும் ஒரு மெஷினில் அவுங்க ஐடி கார்டை வச்சு எடுத்துட்டு, உள்ளே போனதும் ஸ்கேனர்லே கைப்பை இன்னபிற சாமான்களை வைக்கணும். செக்யூரிட்டிகள் தடவிப் பார்த்து, நாலு கேள்விகளையும் கேட்டுட்டு அடுத்த பக்கம் அனுப்பறாங்க.
இது என்னடா நட்ட நடுரோடுலே நடைபாதையிலே செக்கிங்னு திகைச்சேன். நம்மகிட்டே வேற, கார்டு இல்லையே.... பாஸ்போர்ட்தான் காமிக்கணுமுன்னு கையில் எடுத்து வச்சுக்கிட்டார் நம்மவர். கையில் வாங்கிப் பார்த்துட்டு ஸ்கேனரைக் கைநீட்டிக் காமிச்சாங்க. நோ பேச்சு அட் ஆல்! பயணங்களில் 'நம்மவர்' ஒரு Bபேக் Pபேக் எடுத்துக்கிட்டே வருவார். தண்ணி பாட்டில், டிஷ்யூஸ் :-)
அடுத்த பக்கம் போனதும் பார்த்தால்.... இதே ப்ளாட்ஃபார்ம் தொடர்ந்து போகுது! நமக்கு வலப்பக்கம் பெரிய தோட்டமும் மதில் சுவருமா.... இடப்பக்கம் ட்யனமென் ஸ்கொயர்! ஐயோ...... எத்தனை உயிர்கள் போன இடம்..... (அரசு இன்னும் சரியான கணக்கைச் சொல்லலை , தெரியுமோ?) இப்ப நாம் நிக்குமிடம் மெரிடியன் கேட் வாசல். இதுக்கு நேரா இருக்கறதுதான் ட்யனமென் சதுக்கம். பெரூசு. அதுலே ரொம்ப தூரத்துலே நட்ட நடுவா ஒருக் கட்டடம். ரொம்பவே முக்கியமானது!
சாலையை மனுஷன் குறுக்கே கடந்து அந்தாண்டை போக முடியாது. ரெண்டு பக்கமும் கம்பித்தடுப்புகள். ஆனால் சாலையில் வண்டிகள் அதுபாட்டுக்குப் போறதும் வாரதுமா போக்குவரத்து நடந்துக்கிட்டுத்தான் இருக்கு!
'நாம் அந்தாண்டைப் பக்கம் இன்றைக்குப் போறதா இல்லை'ன்னார் இவர். மெரிடியன் கேட் கட்டடமே பெருசாத்தான் இருக்கு. மூணு அகழிப் பாலம், அஞ்சு வாசல் ரெண்டு மாடி. முகப்பு சுவரில் சேர்மன் மாவோ!
வெளியே ரெண்டு பக்கமும் சிங்கங்கள்! பெரிய சைஸ்! 2.2 மீட்டர் உயரம். தலையை லேசா ஒருபக்கம் சாய்ச்சு, வெட்கத்தோடு சின்ன சிரிப்பைக் காமிக்கும் முகம்! ஹைய்யோ...... சிங்கம் சிரிக்குதே! வலது முன் பாதத்துலே ஒரு பந்து வேற !
இந்தக் கிழக்குப் பகுதியில் இருக்கும் ரெண்டுபேரும் பையன்களாம்! மேற்கு வாசலில் ரெண்டு பொண்ணுங்க, புள்ளை வளர்த்துக்கிட்டு இருக்குன்னு தகவல் சொல்லுது பார்த்தீங்களா?
அலங்காரப் பளிங்குத் தூண் தனியா ஒரு மேடையில்! 9.57 மீட்டர் உயரம்! தூணைச்சுத்தி மேடையில் நாலு சிங்கங்கள்!
எல்லாமே மிங் பேரரசில் செதுக்குனவை. 1420 ஆம் வருசம்!
அகழிப்பாலத்துலே ஆர்மி ஆட்கள். காவல் படை! அப்பதான் ட்யூட்டி முடியுது போல.... பொறுப்பெடுக்க வந்தவர் நாலெட்டு அப்படி, நாலெட்டு இப்படி, அங்கே ஒரு சல்யூட், இங்கெ ஒரு சல்யூட்ன்னு சம்ப்ரதாயம் முடிச்சுட்டுச் சின்னப்பலகை மேலே ஏறி நின்னார். அதுவரை பலகையில் இருந்தவர் அவர் செஞ்சாப்டி இவரும் செஞ்சு நாலெட்டுப் பின்வாங்கி அப்புறம் திரும்பி நடந்து போனார்! சேஞ்சிங் ஆஃப் கார்ட், ச்சைனா !
இது அஞ்சுவாசலில் நடு வாசல். அரசர்கள் மட்டுமே இதன் வழியாப் போகலாம்!
நாங்களும் வலது பக்கம் இருக்கும் அகழிப்பாலம் கடந்து அந்தாண்டை 'கேட் கட்டடத்துக்குள்' போறோம். கோட்டை வாசல்! அடுத்த பகுதியிலும் ஒரு அலங்காரத்தூண். வாசலில் பார்த்த தூணின் ஜோடி!
சீனக்கூரையின் மேல் நிறைய பொம்மைகள்.... கிட்டக் கொண்டு வந்தேன். எல்லாம் ட்ராகன் போலத் தெரியுதே.... ஒருவேளை சிங்கமோ.... கூரையும் மஞ்சள் நிறத்தில் இருக்கு!
பிரமாண்டமான பெரிய முற்றம். இன்னும் உள்ளே போக, அங்கேயும் ஒரு வாசல் கட்டடம் கடக்கணும். அரசர்கள் எல்லாம் பெருசு பெருசா பிரமாண்டமாக் கட்டி வச்சுருக்காங்க. ஃபர்பிடன் சிடி(Forbidden City) என்னும் பகுதி இது! ஒரு காலத்தில் அரச குடும்பங்களைத் தவிர வேற யாருமே உள்ளே தலை காட்ட முடியாது. பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட இடம். அந்தக் காலத்து மனிதர்கள் யாருமே பார்த்திருக்காத இடம்!
ரெண்டு பேரரசுகளும் இதுக்குள்ளேயேதான் குடித்தனம் பண்ணி இருந்துருக்காங்க. பதினைஞ்சாம் நூற்றாண்டு ஆரம்பம் முதல் இருவதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரை! கடைசியாக இருந்த அரசர் 1924 வரை இங்கெதான் இருந்தாராமே! ஜப்பான் படையெடுப்பு காரணம், அவரை வேறெங்கோ இடம் மாத்தி ஒளிச்சு வச்சுருந்ததாக் கேள்வி....
அப்புறம்தான் இதை பேலஸ் ம்யூஸியமா மாத்திப் பொதுமக்களும் பார்வையிடும் வகையில் செஞ்சாங்கன்னாலும்.... சீனப்புரட்சிக்குப்பின்தான் நிறைய 'அவுங்க சனமே' வந்து பார்க்க முடிஞ்சுருக்காம்.
1987 ஆம் வருசம், உலகநாடுகளின் பாரம்பரியப் பட்டியலில் யுனெஸ்கோ இதைச் சேர்த்துருக்கு! அப்புறம் பழுது பார்த்துச் சரிப்படுத்த பதினாறு வருசங்கள் ஆச்சாம்!
இந்த ரெண்டாவது முற்றத்துக்குள்ளே வந்தால் சுத்திவர ஏகப்பட்ட கட்டடங்கள் !
ஏழுலட்சத்து எம்பதாயிரம் சதுர மீட்டர் வளாகமும், அதுலே ஒரு லட்சத்து அறுபத்தியேழாயிரம் சதுரமீட்டர் கட்டுமானமும் இருக்கும் இங்கே எட்டாயிரத்து எழுநூறு அறைகள் இருக்குன்னு சொல்றாங்க. ஒருநாள் உக்கார்ந்து எண்ணிப் பார்க்கணும் :-)
மூணாவது முற்றம்தான் இன்னும் விசேஷம். அங்கே போக ஒரு கட்டணம் உண்டு. டிக்கெட்டுகள் எல்லாம் ஆன்லைனில் அவுங்கவுங்க ஐடி எண்ணைப் பதிஞ்சு வாங்கிக்கணுமாம். அதுக்குண்டான QR Code என்னன்னு அங்கங்கே போர்டு போட்டு வச்சுருக்காங்க. அதுவும் அட்வான்ஸ் புக்கிங் ஒரு நாளைக்கு முதலே ! நாள் ஒன்றுக்கு எம்பதாயிரம் பேருக்குத்தான் அனுமதி!
நமக்குத்தான் என்ன செய்யலாமுன்னு பார்க்கணும். மேலும் உள்ளே போனால் விஸ்தாரமாப் பார்க்கக் குறைஞ்சபட்சம் மூணரை மணி நேரம் ஆகும். இப்ப மணி மூணாகப்போகுதே. குளிர்வேற கூடிக்கிட்டே போகுது.... நிறைய நடக்க வேண்டி இருக்கும்.... (நமக்கெல்லாம் காரணம் கண்டுபிடிக்க முடியாதா என்ன? ) இன்னொருநாள் காலையில் வந்து பார்க்கலாம். இப்போ வெளியே போறதுக்கு என்ன வழின்னு பார்க்கணும். வந்த வழியே போகணுமுன்னால்.... ரொம்ப தூரம் உள்ளே வந்துருக்கோமே.......... ஐயோ...
கிழக்கு வாசல்னு ஒன்னு மூணாம் முற்றத்துக்கு வலதுபுறம் இருந்ததைப் பார்த்துட்டு அங்கே அதன் வழியா வெளியே வந்தால் அது ஒரு தோட்டத்து வழியாப் போகுது! நமக்கிடது பக்கம் எட்டு மீட்டர் உயர மதில் சுவர். வலதுபக்கம் அகழி ! இந்தப் பாதையிலே (சுமார் ஒன்னரை கிமீ இருக்கலாம்) நடந்து நடந்து ஒருவழியா வெளியே வந்துட்டோம். முதல்லே எங்கே இருக்கோமுன்னே புரியலை :-)
கடைவீதியாட்டம் இருந்த இடத்தை நோக்கி நடந்து ஒரு யூகத்துலே தெருமூலையில் திரும்பினால்.... எதோ பரிச்சயமான சுவர் தெரியுதேன்னு அதையொட்டியே நடந்து போய் கடைசியில் நாங்க சாலையைக் கடந்த இடம் தெரிஞ்சதும்..... அப்பாடான்னு ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
வர்ற வழியில் சில கடைகளில் வெண்ணை வேட்டையாடவும் மறக்கலை. ஒரு கடையில் மாம்பழமும், வாழைப்பழமும் கிடைச்சது!
சீனாவில் ப்ளாஸ்டிக் அரிசின்னு கேட்டதுமுதல் எதை எடுத்தாலும் ப்ளாஸ்டிக்கோன்னு சம்ஸயம் இருந்துக்கிட்டே இருக்கு. இந்த மாம்பழமும் வாழைப்பழமும் ப்ளாஸ்டிக்தானோ?
'நம்மவர்' சொல்றார்.... 'இங்கே உள்நாட்டுலே அரசின் கண்காணிப்பும் கண்டிப்பும் நிறைய. அப்படியெல்லாம் செஞ்சு இங்கே விக்கமுடியாது'
எல்லாம் நடராஜா சர்வீஸ் என்பதால் கால் வலி பின்னி எடுத்துருச்சு போங்க. இனி இன்றைக்கு வேற எங்கேயும் போகக்கூடாது.
ரெஸ்ட் தான். எங்கே அந்த ஐஸிஹாட்?
தொடரும்....... :-)

13 comments:
கட்டிடங்களில் சீன வாசனை நன்றாய்த் தெரிகிறது. ஸார் வைத்திருக்கும் துண்டு (சீனத்தில் ) சீட்டில் என்ன எழுதி இருக்கும்? சில படங்கள் சினிமாஸ்க்கோப் மாதிரி வித்தியாசமா போட்டிருக்கீங்க...
Icy hot is vey good. Try bio freeze as well
வாங்க ஸ்ரீராம்.
ஹாஹா.... வெண்ணை ன்னு சீன எழுத்தில் எழுதி இருந்துச்சு. திரும்பி வந்தவுடன் பேப்பரை எடுத்துக் கடாசிட்டார் இவர் :-( வச்சுருந்தால் எழுதியாவது பழகி இருக்கலாம்.....
牛油
சில படங்கள் பனோரமா செட்டிங்ஸ்லே எடுத்தேன். அம்மாம்பெரிய இடத்தை வேறெப்படிக் கவர் செய்ய முடியும்? :-)
வாங்க தெய்வா.
நியூஸியில் ஐஸி ஹாட் கிடைக்கறதில்லை. இதை யூ எஸ்.ஏ பயணத்தில் அங்கிருந்து வாங்கி வந்தேன். ரெண்டு பேக் IcyHot patches கூட வாங்கி வந்தேன்.
பையோ ஃப்ரீஸ் கிடைக்குதான்னு தேடணும்.
நன்றி.
அருமை நன்றி .
//உள்நாட்டுலே அரசின் கண்காணிப்பும் கண்டிப்பும் நிறைய. அப்படியெல்லாம் செஞ்சு விக்கமுடியாது'// அந்த மாதிரி பிளாஸ்டிக் ரைஸ் / விஜிடபுள் ஐட்டங்களை விக்கத்தான் இந்தியா இருக்கே. பாவம் சீன மக்களை /நாட்டை எதற்கு நாசமாக்கணும்.
நான் போகாத தேசம். அருமையா படங்களும் எழுத்தும் அமைந்திருக்கு. என்ன ஒண்ணு, எல்லா இடத்திலும் ஆங்கிலத்தில் எழுதிவைக்கலை போலிருக்கு.
நீங்க பழங்களைத்தான் பிளாஸ்டிக்கோ என்று சந்தேகப்படறீங்க. நான் அங்குள்ள மனிதர்களும் பிளாஸ்டிக்கோ என்று வியக்கிறேன்.
எத்தனை எத்தனை தகவல்கள்....
பிரமிக்க வைக்கிறது சிலைகள்.
தொடர்கிறேன்.
@விஸ்வநாத்.
அங்கே தன் மக்களின் நலன் காக்கும் 'அரசு' இருக்குன்னு மகிழ்ச்சிதான்.நம்ம ஊரிலும் இப்படித்தான்.... 'தன் (சொந்தக் குடும்ப) மக்களின் நலனே முக்கியம். தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்பதைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டாங்க. தன் குடும்பத்தேவை முடிஞ்சாதானே குடி மக்களுக்கு...........
இம்மாம்பெரிய குடும்பத்துலே எந்தக்காலத்துலே அவுங்க தேவைகள் எல்லாம் முடியறது? ஹூம்....
வாங்க நெ.த.
ப்ளாஸ்டிக் மனிதர்களா? ஹாஹா.... சட்னு பார்த்தால் எல்லார் மூஞ்சும் ஒன்னுபோல இருக்கோ !!!
வாங்க வெங்கட் நாகராஜ்.
ரொம்பவும் பழமையான நாடுகளில் ஒன்னு இந்தச் சீனதேசம். தகவல்களுக்குக் குறைவேதுமில்லை!
வெண்கலச் சிலைகள் உண்மையிலேயே அட்டகாசமா இருக்கு!
என்ன கொடுமை இது? சீனாவுல வெண்ணைக்கு இவ்வளவு தட்டுப்பாடா? அந்த ஊர்ல பால் தயிர் மோர் வெண்ணெய் சாப்புடுற வழக்கமில்ல போல.
மாடுகள் அழகா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இருட்டுனதும் விளக்குகள் எரியும் போல.
எவ்வளவு பெரிய அரண்மனை. உலகத்துலயே இதுதான் மிகப் பெரிய வீடா இருக்கும்னு நெனைக்கிறேன். இந்த வீட்டையும் நிர்வாகம் பண்றதுக்கு ஒருத்தர்/ஒருத்தி இருப்பாங்கள்ள. அவங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும். எவ்வளவு அதிகாரங்கள் இருக்கும்.
கூரை மேல உக்காந்திருக்குறது நாய் மாதிரிதான் தெரியுது.
வாங்க ஜிரா.
தயிர் நிறைய சாப்பிடறாங்க. வெண்ணைதான் ஆகலை போல.....
இது தெரிஞ்சுருந்தா ஒரு வெண்ணைப்பொதி (அரைக்கிலோ) தூக்கிட்டுப் போயிருப்பேன் :-)
இந்த அரண்மனை வீட்டுலே யாரையாவது தேடணுமுன்னா எப்படி இருக்கும்!!!!
கூரையில் நாய் இல்லையாமே.......
நிறைய தகவல்களும்..
அழகான படங்களும்...
Post a Comment