Monday, May 21, 2018

ஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14

எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து  வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது   கண்ணில் பட்டது.   சட்னு அந்தக் கடைக்குள் நுழைஞ்சேன்.  மூணு ஜோடித் தந்தம்  வாயில் வச்சுருக்கும் யானை மேலே,  தண்டோடு இருக்கும் தாமரையை ஏந்தியபடி 'சாமி' உக்கார்ந்துருக்கார்!  யார் ,என்ன,  என்பதற்கு  விளக்கம்  இல்லை. கேட்டால் மட்டும்.................  என்ன பதில் வருமுன்னு தெரியாதா ? புத்தா.....  இங்கே எங்கும் எதிலும் இருப்பார், அவர் யாரோ..............  பு  த் தா....


கால்குலேட்டர் பேரம் படிஞ்சு அவரை வாங்கியாச்:-)
கடைவீதியில் அங்கங்கே முடிச்சு முடிச்சாச் சின்னக்கூட்டம். எட்டிப் பார்த்தால் Mahjong விளையாட்டு போலதான் இருக்கு!   சின்ன மேஜை போட்டு அதுலே அடுக்கி வச்சுருக்கும்  அட்டைகளை வச்சு விளையாடறாங்க. நாலுபேர் விளையாட நாப்பதுபேர் அவுங்களைச்சுத்தி நின்னு ஊக்கு விக்கறாங்க.  இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவரின் செல்லங்கள் ,  அங்கேயே உக்கார்ந்து அப்பாக்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்குதுகள்! விளையாட்டில் பெண்களும் கலந்துக்கறது மகிழ்ச்சியே!

அஞ்சு நிமிட் நாமும் நின்னு வேடிக்கை பார்த்தோம். கேம்  ரூல்ஸ் ஒன்னும் புரியலையே..... 


எனக்குக் கொஞ்சம் 'பூக்கள்' வாங்கிக்கணும்.  வீட்டு உள் அலங்காரத்துக்குத்தான். 'இங்கே ஸில்க் மார்கெட் போயிடலாம்....  அங்கே கிடைக்குமு'ன்னு 'நம்மவர்' அடிச்சுச் சொன்னதால் ஒரு டாக்ஸியை நிறுத்தி, 'ஸில்க் மார்கெட்'ன்னு சொன்னதும்  ஓட்டுநர், மீட்டரைப் போட்டார். அட! மீட்டர் இருக்கா? ஆஹா.... நம்ம பக்கங்கள் மாதிரி  நம்ம கண்ணுக்கு முன்னால் இல்லாமல்,  ரியர்வியூ மிரருக்குப் பின்பக்கம் இருக்கு!

இருவது  நிமிசத்துலே  ஸில்க் ஸ்ட்ரீட் மார்கெட் கட்டடத்தாண்டை  வந்துட்டோம்.  மீட்டர் இருபத்தியெட்டு காமிச்சது.  முப்பதாக் கொடுத்ததும், ரெண்டு ஆரெம்பி திருப்பிக் கொடுத்தார்!  நியாயவான்கள் இருக்காங்க ! 

எட்டடுக்கு மாளிகை !  பூக்களைத் தேடிக் கொஞ்சம் அலைஞ்சோம். கிடைக்கலை.  ஆனால் அட்டகாசமா பொம்மைக் கடைகள் ஏராளம்!  லிட்டில் புத்தாஸ் ஒரு கடையில் விலை விசாரிச்சால் நானூத்தி எம்பதாம்.  ஹாஹா..... கால்குலேட்டரில் முப்பதுன்னு போட்டேன்.


கடைக்காரப்பொண்ணுக்குக் கண்ணில் ஒரே வியப்பு! கால்குலேட்டரை எங்கிட்டே இருந்து பிடுங்கி 'நம்மவர்' கையில் திணிச்சதும்..... இவர் முப்பத்தியஞ்சுன்னு மாத்தினார்.
'இப்ப என்ன சொல்றெ?'  என்ற பாவத்துடன் கால்குலேட்டர் என் கைக்கு வந்தது. நான் முப்பதுன்னு போட்டேன். ஆங்..........  இந்த மனுசர் எவ்ளோ நல்லவர். நீ ரொம்ப மோசம்னு  சட்னு  அந்தாண்டை தாவி, கிளிபோல் இவர் தோளில் தொங்கினாள் அந்தச் சுட்டி :-)  சின்னப்பொண்ணுதான். என்னம்மா வியாபாரம் செய்யுது பாருங்க....

நான் தேடும் புத்தா இது. கீழே படம்.
கடையில் இருப்பதில் கைக்கெட்டுனதை எடுத்து ஒரு அட்டையில் வச்சுப் பார்த்தேன். இவ்ளோவுமா வேணும்?  (இவர் பயம் இவருக்கு!) இல்லை. ஒரு ஆறு போதும்....
இவர் கணக்குப்படியே வந்த மொத்தத்தொகையில் இன்னும் பத்து கழிச்சுட்டு (ரவுண்ட் அப்!) இருநூறாக் கொடுத்து வாங்கியாச்.  அப்பதான் காலையில் நாம் வாங்குன யானை விண்ட்ச்சைம் பார்த்தேன். விலை அதிகமில்லை. எண்ணூறுதானாம்! பொண்ணு பேரம் பேசக் கால்குலேட்டரை நீட்டுனதும்,  காலையில் ஸிக்ஸ்டிக்கு வாங்கிட்டேன்னு சொன்னேன். நானும் ஸிக்ஸ்டிக்குத் தரேன்னு டபக்னு இறங்கி வந்தது வேடிக்கை. பாருங்க..... எவ்ளோ விலை வச்சு விக்கறாங்கன்னு.....
'நீங்க போனால்.... நல்லா பேரம் பேசி வாங்கணும் கேட்டோ! ஏமாந்துடக்கூடாது'ன்னுதான் இங்கே விளக்கமாச் சொல்லிக்கிட்டுப் போறேன்.

மேல் மாடியில் எதோ 'சூப்பர் மார்கெட் & இன்ட்டர்நேஷனல் ஃபுட்'ன்னு போர்டு பார்த்துட்டு அங்கே போனால்.... சூப்பர் மார்கெட்தான். 'நம்மவர்' ரொம்ப பவ்யமா 'சீனத்து வெண்ணைய் பேப்பரை' எடுத்து செக்கவுட்டில் இருந்த பெண்ணிடம் காமிக்கிறார். நான் சூப்பர்மார்கெட்டைப் பார்த்ததும்.... விடுவிடுன்னு உள்ளே போனால்..... டெய்ரி செக்‌ஷன் அதோ இருக்கு. ஓடிப்போய்ப் பார்த்தால் ஆப்ட்டது வெண்ணெய்!  ஆனாலும் நியூஸி வெண்ணைய் இல்லை. ஜெர்மெனி சமாச்சாரம் கிடைச்சது.
ஹைய்யோ.... ஆப்ட்டதுன்னாலும் இன்னும் ரெண்டுநாள்தான் இங்கே தங்கல். அதனால் சின்ன அளவில் கிடைக்குமான்னு பார்த்து குட்டிக்குட்டி டப் ஆறு இருக்கும் பொதி வாங்கியாச் :-) ஆறு ஸ்பூன் தான் மொத்தமும்!  ஹொட்டேலில் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு வச்சுருப்பாங்களே, குட்டியூண்டா...  அதே மாதிரி.... மினி பட்டர்.
எங்கூர்லே  அரைக்கிலோ அஞ்சே டாலர்னு சீப்படும்....

கீழே இறங்கி டாக்ஸி எங்கே கிடைக்குமுன்னு பார்த்தால்  ஒருத்தர் வந்து எங்கே போகணுமுன்னு கேட்டார்.
இந்த மாதிரி மொழி தெரியாத இடங்களில்  நம்ம லோக்கல் அட்ரஸ் இருக்கும் ஹொட்டேல் கார்டு வச்சுக்கணும் என்பது  ஒரு முக்கிய விதி. கார்டைக் காமிச்சதும் அறுவதுன்னார்.  அதிகமோன்னுட்டு வேண்டாமுன்னதும், சரக்னு இன்னொரு டாக்ஸி  நம்மாண்டை வந்து நின்னது.  'மீட்டர் போடுங்க'ன்னு சொல்லிக்கிட்டே நம்மவர் ஏறி உக்கார்ந்தாச்சு. கூடவே நானும்.

டாக்ஸியோட்டி சொல்றார், 'மீட்டர் போட்டால்  ஃபைவ் ஹன்ட்ரட் ஆகும்.  டு ஹண்ட்ரட் கொடு போதும்'னு!   ஙே......
'அது பரவாயில்லை....மீட்டர் போட்டா சரி. இல்லைன்னா நாங்க இறங்கிடறோம். வண்டியை நிறுத்து'ன்னு இவர் குரல் எழுப்ப (!) உர்ன்னு முகத்தை வச்சுக்கிட்டே வண்டியை நிறுத்தாம ஓட்டிக்கிட்டே போறார். 'மீட்டர் மீட்டர்'ன்னு இவர் அலற....  ஒன்னும் நடக்கலை. நான் எந்த விநாடியும் இறங்கத் தயாரா இருக்கேன்:-)
அறுபதுதான் தருவேன்னு இவர் சொல்லிக்கிட்டே இருக்கும்போதே வண்டி நம்ம ஹொட்டேலுக்குப் பக்கம் வந்து நின்னது. (நாலு கிமீ தூரம்தானாம்! அப்புறம் தெரிஞ்சுக்கிட்டது.)  எதிர்வாடையில் வரிசையா டாக்ஸி நிக்குது இங்கே.

நான் இறங்கி ரெண்டு க்ளிக் பண்ணும்போது  முறைச்சுப் பார்த்த டாக்ஸியோட்டி,  வண்டியின் பின்பக்கம் நம்பரைக் கிளிக்கப்போறேன்னு தெரிஞ்சதும் trunk cover ஐ சட்னு தூக்கினதோடே விர்னு பாய்ஞ்சு கிளம்பினார். என்ன திரிசமன் பாருங்க....

நம்மவர் வேற.... 'அவன் பார்த்து வச்சுக்கிட்டு மத்த டாக்ஸியோட்டும்  ஃப்ரண்ட்ஸ் மூலம் நம்மை அடிக்கப்போறான்'னார். இதுக்குத்தான் ஏகப்பட்ட ஜாக்கிச்சான் படங்களையெல்லாம் பார்க்கக்கூடாதுன்றது..... கேக்க மாட்டாரே...  :-)

இண்டுவை மட்டும் அடிக்கட்டும்.... அப்புறம் சீனப்போர்தான், ஆமாம்....

அறைக்கு வந்ததும்தான் மத்யானம் சாப்பாடை மிஸ் பண்ணது நினைவுக்கு வருது. சட்னு ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டு   அரை டம்ப்ளர் அரிசி களைஞ்சு மைக்ரோவேவில் வச்சேன்.  ரெண்டே நாளுக்குள் கொண்டுவந்த சாப்பாட்டு ஐட்டங்களைத் தீர்க்கணும்.  திருப்பிக் கொண்டு போக முடியாது. எங்கூர்லே  விடமாட்டாங்க.

என்ன இருக்குன்னு பார்த்தால்  வெஜ். பிரியாணி (எம் டி ஆர்) இருக்கு.  எனக்கு இதெல்லாம் அவ்வளவாப் பிடிக்காது.....  அதான் வெண்ணெய் வந்துருச்சே. பருப்புப்பொடி சாதம் மதி.  தொட்டுக்கப் புளிச்சட்டினி அண்ட் மாம்பழம்!  டிஸ்ஸர்ட் தயிர். ரெண்டு பேருக்கு ரெண்டு சமையல் !!!
இன்றைக்கு நமக்கு நாள் சரி இல்லை. மாவோவைப் பார்த்துட்டு வந்ததுலே இருந்து ஏமாந்துக்கிட்டே இருக்கோம்.
நாளையப் பொழுது நல்லதா இருக்கட்டும்!
சாப்பாடு ஆனதும்  சின்ன நடையில்  அஞ்சு மாடு பார்க்கப்போனோம்.  விளக்கு போட்டுருக்காங்க. ஆனால் மாடுகளைச் சுத்திதான்.

நல்ல கூட்டம் இந்த நடக்கும் தெருவில்.  இந்த நேரத்திலும்  குப்பை இருந்தால் சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளி  ட்யூட்டியில் இருக்கார்.  காவல்துறையினரும்  கண்காணிச்சுக்கிட்டு இருக்காங்க.  மக்களும் அவுங்களுக்குக் கிடைச்ச கட்டுப்பாடான சுதந்திரத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க.நாங்களும் கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செஞ்சுக்கிட்டுக் காலாற நடந்துட்டு வந்தோம்.

நாளைக்கு ஒரு முக்கியமான இடம் போகலாமுன்னு......

தொடரும்...:-)


10 comments:

said...

பிரயாண விவரங்கள் அருமை.

பர்சேசை நீங்களும் விடமாட்டேன் என்கிறீர்கள்.

இடங்கள் கண்களைக் கவர்கின்றன. தொடர்கிறேன்

said...

ள் தண்டு தாமரை புத்தர் சிலை அருமை.

பாவம் அந்த நாலுகால் செல்லம். இனி வரும் நாட்களில் அவருடன் அது நடைப்பயிற்சி வருவதை நிறுத்திவிடவேண்டும்!!

said...

நீள் தண்டு தாமரை புத்தர் சிலை அருமை.

பாவம் அந்த நாலுகால் செல்லம். இனி வரும் நாட்களில் அவருடன் அது நடைப்பயிற்சி வருவதை நிறுத்திவிடவேண்டும்!!

said...

நானூற்றி எண்பதிலிருந்து முப்பதுக்கும், முப்பத்தி ஐந்துக்கும் பேரமா?!!!

60 எங்கே? 800 எங்கே? அம்மாடி.. நம்மூர் வியாபாரிகள் தேவலாம் போல!

கடைசியில் அந்த டாக்சிவாலாவுக்குக் கொடுத்தது எவ்வளவு? 60ஆ? 200ஆ?

said...

வாங்க நெ.த.

பாக்கற எல்லாத்தையுமா வாங்கறேன்.... மனசுக்குத் தெரியும் எதை செலக்ட் பண்ணனுமுன்னு :-)

பச்சை, ஆரஞ்சு, பிங்க்ன்னு விதவிதமான யானைகள் இருந்தன........... ஆனாலும்......... :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

எப்படியும் இந்தக் கடைகளுக்கு வாடகை அதிகமாத்தான் இருக்கும். அதுதான் எல்லாத்துக்கும் விலையை ஒரேடியா ஏத்தி வைக்கிறது! ஏமாற விரும்புகிறவர் ஏமாறட்டுமேன்னு....

மூணு தந்த யானை எனக்கும் புடிச்சுருந்தது, அதான்.... ஹிஹி

டாக்ஸிவாலாவுக்கு 60தான். அதுவே அதிகம்..... மீட்டர் போட்டுருந்தால் முப்பதுதான் வந்துருக்கும்.

said...

மிக அருமை. நன்றி

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

பேரம் பேசிதான் எதையும் வாங்கனும்னு நல்லா புரிஞ்சு போச்சு.

அந்த குட்டி புத்தர்கள் அழகோ அழகு. மங்கி கிங் சனோகாங் கூட ஜம்முன்னு இருக்காரு.

ஒருவழியா வெண்ணெய் கிடைச்சிருச்சு. அது கெடைக்காமதான் நீங்க திண்டாடுனீங்க. பாவம்.

விண்டோ ஷாப்பிங் பர்சுக்கும் லக்கேஜுக்கும் நல்லது :)

said...

அந்த குட்டி குட்டி புத்தாஸ் எல்லாம் ரொம்ப cute...பார்க்கவே ஆசையா இருக்கு...