Monday, March 18, 2013

தஞ்சை மாமணிக் கோவில்.

 மன்னார்குடி தஞ்சாவூர் சாலையில் போகும்போது கண்ணில் பட்ட ஊர் வடுவூர்! அட  நம்ம கட்டுமானத்துறை  குமார்!  இங்கே ஒரு ராமர் கோவில் இருக்கு.  பத்து நிமிசம் பார்த்துட்டுப் போகலாமுன்னு ஊருக்குள்ளே வண்டியைத் திருப்பினோம்.

கோவில் வாசலுக்கருகில் சிலர்  தெருவோரமா இருந்தாங்க. நாங்க விடுவிடுன்னு உள்ளே போனோம்.  கம்பிக்கதவு போட்டு பூட்டி இருந்த சந்நிதியில் நல்ல வெளிச்சத்தில் ராமர் அண்ட் கோ!  எல்லோரும் கொள்ளை அழகு!   ஏகாந்த தரிசனம்.  கோவிலில் ஒரு ஈ காக்கா(??) இல்லை. தனியார் கோவிலோ?  என்னமோ தெரியலை..... வேதாந்த தேசிகர் மடம் நடத்தும் கோவிலோன்னு  மனசுக்குத் தோணுச்சு.

க்ளிக்கப் பரபரத்த கையை அதட்டி அடக்கினேன்.   சாமி பாக்கிறாரே!

ஹயக்ரீவர் சந்நிதியையும்  ஸேவிச்சுக்கிட்டுத் திரும்ப தஞ்சை சாலையைப் பிடிச்சோம்.கொஞ்ச தூரத்தில் வடுவூர் ஏரி. பறவைகள் ஏராளமாவந்து தங்குமுன்னு கேள்விப்பட்டுருக்கேன்.  போய்ப்பார்க்க வாய்க்கலை:(  விர்ர்ர்ரிடும் வண்டியில் இருந்தே ஒரு க்ளிக்.

தஞ்சைக்குள் நுழைஞ்சு   ஹொட்டேல் சங்கம் போய்ச் சேர்ந்ததும்  ரூம் வித் வ்யூ இருந்தால் கொடுங்கன்னு கேட்டதுக்கு டெம்பிள் வியூ இருக்கு வேணுமா மேடம் என்றார் வரவேற்பாளர்.  பழம் நழுவிப் பாலில் விழுந்துச்சு.

மாடிக்குப்போனதும்  பெட்டிகளை இழுத்து வந்த பணியாளர்  அகலமான பெரிய ஜன்னலில் திரைச்சீலையை சர்ன்னு இழுத்து விட்டதும்..........ட்டடா......

ஒரே இருட்டு!!!! என்னப்பா... எங்கே  கோவில்?

 அந்தப்பக்கம் நேரா இருக்குது மேடம்.  மேலே லைட் எரியும்.  இன்னிக்கு என்னமோ எரியலை.... பவர் கட்டு.

ரெண்டு நிமிசம் இருட்டையே பார்த்துக்கிட்டு நின்னேன். ...  அம்மா.............

கொஞ்ச நேர ஓய்வு.  அண்ணன்,  அத்தை , தோழின்னு  சிலபல  அலைபேசி  அழைப்பு உரையாடல்கள்,  மடிக்கணினியில் இ மெயில்கள் எல்லாம் ஆச்சு. சட்னு ஒரு ஷவர் எடுத்து  ப்ரெஷானதும்  தில்லானாவுக்குப் போனோம்.இது சங்கத்தின்  ரெஸ்ட்டாரண்டு. இந்த சங்கம்  குறிப்பது  சங்கு. பாஞ்சஜன்யம்?



கதவைத் திறக்கும்போதே  பூனையின் ஹீனக்குரல்!   அடடா.... என்ன ஆச்சு? பிரசவ வேதனையோ?

குட்டியூண்டு மேடையில்  இசைக் கலைஞர்கள்  இருவர்  வயலினும் தபேலாவுமா ட்யூன் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

இங்கொன்னும் அங்கொன்னுமா  மூலைகளில்  ஒவ்வொருத்தர்.  எண்ணி மூணே பேர்!

மேடைக்கு  சமீபமா முன்பக்கம்  இருக்கும்  இருக்கையில் போய் அமர்ந்தோம். ம்ம்..... ஆரம்பிக்கலாம் என்று ஒரு தலையசைப்பு! (வேற யாரு? எல்லாம் நாம்தான்!)

ஆலாபனை விஸ்தரிப்பு இப்படி ஒன்னும் இல்லாமல் சட்னு ஆரம்பிச்சது கீர்த்தனை. நல்லாவே தெரிஞ்ச பாட்டு.   பம்டுரீத்தி கொலு   வியவைய்ய  .....   ராமா............ . தலையை  ஆட்டி ரசிக்க நமக்குத்  தனியாச்சொல்லித்தரணுமா?

கீர்த்தனை முடிஞ்சதும்  கையைத்தட்டிக் குஷிப்படுத்திட்டு  ராகம் ஹம்ஸநாதம் தானே?ன்னதும்  வயலின்காரர்  முகத்தில் ஆயிரம் வாட்ஸ்!

சின்னஞ்சிறுகிளியே ஆரம்பிச்சார்.  வம்பு இல்லாத செலக்‌ஷன்!   முடிச்சதும்  நம்மை ஏறிட்டுப் பார்த்தவரிடம்  கண்டநாள்முதலாய்  .... மதுவந்தின்னதும்  பாடம் இல்லைன்னார்.  போட்டும்.

என்னை நீ மறவாதே    ஆகிக்கோட்டே.... அமிர்த வர்ஷிணி! ஓக்கேன்னு தலையாட்டலோடு வாசிக்க ஆரம்பிச்சார்.  கோபால் உடனே நீ பாட்டுக்கு  அது இதுன்னு  கேட்டுக்கிட்டே இருக்கே. அவர் பாட்டுக்குத் தன்னிஷ்டப்படி வாசிக்கட்டுமேன்னார்.  கலைஞர்களுக்கு  ரசிகர்கள் ஆர்வத்தோடு  கேட்பது  பிடிக்கும்.  சுருக்கமா உங்களுக்குப் புரியும்படிச் சொன்னால் பதிவர்களுக்கு பின்னூட்டம் மாதிரின்னேன். அப்பதான் பின்னூட்டப்ரேமிக்கு மனசிலாச்சு:-))))

செவிக்கு இசையும் வயித்துக்கு உணவுமா   சங்கீதசபை  அருமையா அமைஞ்சு போச்சு, பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முத்தாய்ப்பு  வச்சது போல்!!

உள்ளூர்க் கலைஞர்கள் தானாம். விஜயன் வயலின் .  ரவி  தப்லா!  சுமாரான வாசிப்புதான் என்றாலும் இது தானாகக் கிடைச்சதில்லையோ? ரெண்டு பேரையும் பாராட்டிட்டு ஒரு சன்மானம் கொடுத்ததும்   எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மறுநாள் பொழுது விடிஞ்சதும்  வியூ பார்க்க  ஜன்னலில் கண்ணை நட்டத்தில்  கோபுரம்  தெரிஞ்சது. ப்ரேக்ஃபாஸ்டுக்கு  தில்லானா போனோம். அறை வாடகையில்  இது சேர்த்தி.  ஒரு அஞ்சாறு ஆர்மி ஆஃபீஸர்ஸ்  கூடிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒருத்தர் உயர் அதிகாரி. மற்றவர்கள் காமிச்ச பவ்யத்தைப் பார்த்தால்  தெரிஞ்சுருது.   தென்னிந்திய  உணவுப்பகுதி நல்லா இருந்துச்சு.

தஞ்சை மாமணிக்கோவிலுக்குக்  கிளம்பினோம்.  வரவேற்பில் வழி கேட்டதுதான்  நாம் செஞ்ச தவறு. எங்கெங்கோ  அரைமணி  கும்பகோணம் நெடுஞ்சாலையில் போய் ஆற்றுப்பாலம் கடந்து  இடது புறம் திரும்பி  உள்ளே பயணிச்சு  அங்கேயும்  இன்னொரு பாலம் ரிப்பேர் வேலை நடக்குதுன்னு வந்த வழியே திரும்பி கண்ணில் பட்ட ஆளையெல்லாம் விடாம சீனிவாசன்  போய் விசாரிச்சு கோவிலைக் கண்டோம்.  நூத்தி எட்டின் வரிசையில் இது மூணாவது.   தஞ்சை  மாமணிக்கோவில், மணிக்குன்றம், யாழிநகர் என்று  மொத்தம்  தனித்தனியா மூணு கோவில்கள்  இது எல்லாம் சேர்ந்தேதான் திவ்யதேசக்கோவில்களில் ஒன்றாய் இருக்கு. தஞ்சை அரண்மனை தேவஸ்தானம்.


.  நீலமேகப்பெருமாள், மணிக்குன்றப்பெருமாள் ,வீர நரசிம்ஹப்பெருமாள்  என்ற பெயர்களில்  இங்கே சேவை சாதிக்கிறார் எம்பெருமாள்.  பராசர முனிவர் இங்கே தவம் செய்யும் காலத்தில்  தஞ்சகன், தண்டகன், தாரகன் என்ற மூன்று அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தார்கள்.  அவர்களை அழிக்க  ஸ்ரீ மஹாவிஷ்ணு , நீலமேகப்பெருமாளாக இங்கே அவதாரம் செஞ்சார். தஞ்சகன் யானை உருவம் எடுத்து சண்டைபோடவும், பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்து அவனை அழித்தார்.  அவந்தான் அழிஞ்சானே தவிர  அவன் பெயர்  எப்படி நிலைச்சுப்போச்சு பாருங்க!  தஞ்சை!

பயந்து போன தண்டகன் பூமியைப் பிளந்து கொண்டு ஓட,  பெருமாள் வராக அவதாரம் எடுத்துப்போய் அவனை மாய்த்தார். அங்கே இருந்த காளிகா தேவி  அரக்கன்  தாரகன் கதையை முடிச்சு  உதவினாள். அப்புறம்  எல்லாம் சுகமேன்னு பரசார முனிவர்  அங்கே இருந்து  தன் தவத்தை வெற்றிகரமாக முடிச்சார். வராக க்ஷேத்ரம் என்ற சிறப்பும் இதுக்கு உண்டு. இந்தத் தலப் புராணத்தை  கோவில்  உள்பிரகாரத்தில்  எழுதிவச்சுருக்காங்க.  மூணு கோவில்களுக்கும் ஒரே பட்டர்ஸ்வாமிகள்தான்.  நாம் போய் சொன்னால் அவரே வந்து  மூன்று கோவில்களிலும் தரிசனம் பண்ணி வைப்பாராம்.

நாம் போய்ச் சேர்ந்தப்ப  முதல் கோவிலில் யாரும் இல்லை.  நின்றபடி இருந்த நீலமேகனை  வணங்கிட்டுப் பிரகாரத்தை  ஒரு சுத்து சுத்திட்டு அடுத்த கோவில் போனோம்.   அங்கேயும் பட்டரைக் காணோம்.  சாமி தன்னந்தனியா இருந்தார்.  தரிசனம்செஞ்சுக்கிட்டு இன்னும்கொஞ்ச தூரத்திலிருந்த மூனாவது கோவிலுக்குப் போனோம். அங்கேயும் ஏகாந்த ஸேவை.  கம்பிக்கதவுக்குப்பின்  வீர நரசிம்ஹர்.

மூலவரை விட்டுட்டு  அங்கங்கே சில க்ளிக்குகள். திரும்பி முதல் கோவிலில் எட்டிப்பார்த்தால்  யாருமே இல்லை பெருமாளைத் தவிர. கோவில் முன்னால் இருக்கும் தெருவோடு போனால்  ஒரு தார்ச்சாலையில் கொண்டுவிட்டது. தஞ்சாவூர்  என்று அம்புக்குறி.  சரியா 3.7 கிலோ மீட்டர். ஆறே நிமிசத்தில்  தஞ்சை நகரத்துக்குள் வந்துட்டோம்.




 நாலு கிலோ  மீட்டர் கூட  இல்லாத தூரத்தை  நாப்பது நிமிசமாய் அலைஞ்சு  கடந்ததை என்னன்னு சொல்ல?  இந்த மாமணிக்கோவில் வெண்ணாற்றங்கரையை ஒட்டி இருக்கு.

 பெரிய கோவில் விஸிட் ஒன்னு  இருக்கு.  எதிர்வாடையில்  வண்டியைப் பார்க்கிங் செஞ்சுட்டு கோவில் வளாகத்துக்குள் நுழைகிறோம் இப்போ.

தொடரும்.................:-)






29 comments:

said...

படங்கள் அருமை... ரசிக்க வைக்கும் பிறந்த நாள் கொண்டாட்டம்...

கட்டுமானத்துறை குமார் அவர்களை பார்க்கவில்லையா...?

சிறிய கோவில்களின் தகவல்களுக்கு நன்றி... பயணத்தின் கூடவே வருகிறோம்...

said...

//செவிக்கு இசையும் வயித்துக்கு உணவுமா சங்கீதசபை அருமையா அமைஞ்சு போச்சு, //

சுகமான அனுபவம்.
பதிவும் படங்களும் அருமை.

said...

எங்கள் மண்ணிற்கு துளசி தாயாரை வரவேற்பதில் மகிழ்ச்சி.

said...

வராகர் கதை இது தானா?
மூணு கோவிலுக்கு ஒரு பட்டர் - நீங்க குடுக்குற பப்லிசிடி கூட யாரும் தரலியா? sad.
படங்கள் பிரமாதம்.
fawlty டவர்ஸ் பார்த்திருக்கீங்களா? அதுல ரூம் வித் வ்யூனு ஒரு எபிசோட் - வயிற்று வலி (சிரித்து) கேரன்டி.

said...

வடுவூர் ராமன் ரொம்ப ரொம்ப பிரபலமாச்சே.தேசிகர் என்று யூகிச்சது சரியே. வடகலைக் கோவில் என்று நம்புகிறேன்.
மன்னைராஜா இடுப்பொசித்து நிற்பது போல,இந்த ராமரும் நிற்பதைப் பார்த்தீர்களா. அழகுக்குப் பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் ராமனாச்சே.
தஞ்சை மாமணிக் கோவில் அழகோ அழகு.
சங்கீத சபை,சன்மானம் எல்லாமே சூப்பர்.

said...

அருமையான பயணம். ஏகாந்த சேவை நிறைவா இருந்துருக்குமே.

said...

கன்னு குட்டி அழகா பாக்குது!!!!

said...

நல்ல தகவல்கள். அடுத்த தஞ்சை பயணத்தின் போது போகணும்.. பார்க்கலாம்! :)

said...

கோயிலின் படங்கள் மிக அழகு. அந்தப் பசுவும் கன்றும். ஆகா. இயற்கையோடு இருக்கும் வாழ்க்கை.

ரொம்பப் பெரிய கோயில்களை விட இந்தச் சின்னச் சின்ன கோயில்கள் அருமை. ரொம்ப கூட்டமும் இல்லாம தள்ளுமுள்ளுல மாட்டாம ஆண்டவனைக் கும்பிடலாம்.

தஞ்சாவூர் கோபுர வியூ ரூம் அருமை.

பின்னூட்டம் பத்திச் சொன்னது எவ்வளவு நியாயமான பேச்சு. உறுதியா அவங்க ரசிச்சிருப்பாங்கன்னுதான் தோணுது. முந்தி அடையாறு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல இப்படி யாராவது வாசிப்பாங்க. ஆனா அதை யாருமே கவனிக்காமப் போகவே நிறுத்திட்டாங்க.

said...

போன முறை என்னுடைய மலேஷியா மருமகன் வந்திருந்தபோது வேளாங்கண்ணிக்கு போய்விட்டு வருகிற வழியில் தஞ்சை போயிருந்தோம். பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்பதை மருமகன் நம்ப மறுத்ததால் உச்சி வெயிலில் கூட்டிக்கொண்டு போய் காட்டினோம். ஆனால் செருப்பில்லாம் கருங்கல் தரையில் பரதநாட்டியமே போட வேண்டியாகிவிட்டது. ஆனாலும் கோபுரத்தின் நிழல் கோபுரத்திலேயே விழும் அதிசயத்தை மருமகன் பார்த்து வியந்துதான் போனார். நான் சுமார் 2 1/2 ஆண்டுகாலம் தஞ்சையிலேயே பணியாற்றியிருந்தாலும் இந்த மணிக்கோவிலைப் பற்றி கேட்டதில்லை.

said...

ஏகாந்த சேவையுடன் கோயில் தர்சனம்.

அடுத்து பெரிய கோயிலா ?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிக்க வைத்த கொண்டாட்டம் தானாக அமைஞ்சு போச்சு!

வடுவூர்குமாரை ஒரு அஞ்சு நாட்களுக்கு முன் பார்த்தேன். நம் இல்ல விழாவுக்கு மனைவியுடன் வந்து சிறப்பித்தார். கூடவே ரெண்டு யானைகளுமாய்!!!

said...

வாங்க ரமா ரவி.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க அப்பாதுரை.

தேவைப்படும்போது பன்றியா மாறவும் தயங்கமாட்டாராம்!

ஒரு சமயம் பூமாதேவியை ஒரு அரக்கன் கொண்டுபோய் ஒளிச்சு வச்சுடறான். அப்பவும் இவர் வராஹமாப் போய் மீட்டுக்கொண்டு வந்து, பூமாவை மடியில் இருத்தி பூவராஹானா காட்சி கொடுக்கறார் திருவிடந்தை என்னும் க்ஷேத்திரத்தில்.

மகாபலிபுரம் போகும் வழியில்தான் இருக்கு இந்தக்கோவில். அனுதினம் கல்யாணம். இதைப்பற்றி கொஞ்சம் இங்கே இருக்கு. நேரம் கிடைக்குபோது பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2009/07/2009-38.html

ஃபால்ட்டி டவர்ஸ், மைண்ட் யுவர் லேங்வேஜ், ஓப்பன் ஆல் அவர்ஸ், ஸம் மதர்ஸ் டூ ஹேவ் தெம் இப்படி எல்லாம் ரசிச்ச காலங்கள் க்ரேட் இல்லையா? எல்லாம் க்ளாஸிக்.

இப்போ வரும் டிவி ஷோக்கள் .... ஒன்னும் சொல்றதுக்கில்லை:(

said...

வாங்க வல்லி.

ராமனின் அழகுக்குக் கேட்பனேன்!!!!


அன்றைக்குக் காலையில் உங்களிடம் தொலை பேசுனப்ப, நீங்க மாமணிக்கூடம் போய்ப் பாருன்னு ஞாபகப்படுத்தலைன்னா நான் போய் இருக்கச் சான்ஸே இல்லை!

நன்றின்னா உங்களுக்குத்தான் முதலில் சொல்லிக்கணும்.

நம்ம தாம்பரம் அத்தை கூட இதைப்பற்றிச் சொல்லலைப்பா!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

உண்மையான ஏகாந்த ஸேவைதான் லபிச்சது. பட்டரைக்கூடக் காணோமுன்னா பாருங்க!!!

said...

வாங்க சசி கலா.

இளங்கன்று! வேற்றுமுகம் இல்லைப்பா:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கட்டாயம் போயிட்டு வாங்க.108லே ஒன்னுக்கு மூணு இது!!!

வெண்ணாற்றங்கரைக் கோவில்.

said...

வாங்க ஜிரா.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ரசம் என்ற பெயரில் ஒரு ரெஸ்ட்டாரண்ட், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தறாங்க பாருங்க. அங்கே ஒரு நாள் சாப்பிடப் போனப்ப இப்படித்தான் கச்சேரி நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரே சோகப்பாட்டா புழிஞ்சு தள்ளிட்டார். போதுமடா சாமின்னு ஆகிப்போச்சு:-)

சின்னக்கோவில்களில் நிம்மதியா சாமி கும்பிடலாம். மனசுக்கும் திருப்தியா இருக்கும். தள்ளுமுள்ளுன்னா சாமியே வந்து தள்ளுனாத்தான் உண்டு அங்கெல்லாம்:-)

சாமியும் விடுவிட்டுன்னு தனியா உக்காந்துக்கிட்டு யாராவது ஆசாமி வரமாட்டானான்னு ஏக்கத்தோடு பார்க்குமே!!!!

said...

வாங்க டிபிஆர் ஜோ.

மட்டமத்தியானமுன்னா உச்சி வெய்யில் நேரம் விமான நிழல், நேரா அதன் அடிப்பாகத்துக்குள்ளேயே விழும்தான். அகலம் அதிகமா இருக்கே!

நீங்க சொன்னதுபோல் தீமிதி டான்ஸ் ஆடத்தான் வேணும் அப்போ:(

இந்த மாமணிக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்னு என்பதால் 108 பார்க்கும் ஆசை உள்ளவர்கள் மட்டுமே போவாங்களா இருக்கும்.

ஊருக்கு வெளியில்வேற இருக்கு பாருங்க....

said...

வாங்க மாதேவி.

சரியான ஊகம்தான்:-)

பெரிய கோவில் பதிவு இன்னிக்குப் போட்டாச்சு.

said...

வாங்க குடுகுடுப்பை.

ஆஹா.,.... தஞ்சாவூரு ஜக்கம்மாளா?

வரவேற்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

said...

அடாடா! என்ன அழகு அந்த ராமர்.படம் அட்டகாசமாக இருக்கு.
அங்கிருந்த போது என்னை ஞாபகம் வைத்து அழைத்தை இன்றும் மறக்கமுடியவில்லை.
இன்றைய தேதியில் ஏரியில் தண்ணீரும் இல்லை பறவைகளும் இல்லை. :-(
ஒரிஜினல் படத்தை கொஞ்சம் இந்த பக்கம் தட்டிவிடுங்களேன்.நன்றி.

said...

அப்படியே கொஞ்சம் எம்பெருமான் ஈசனைப் பற்றியும் எழுதலாமே! கோபாலோட முக்கால் வாசி படங்கள் சாப்பிடறா மாதிரயே எடுத்து இருக்கரீர்கள்? நம்மள மாதிரி போல!

தஞ்சை கோவில் விமானத்தின் நிழல் மாலையில் பூமியில் விழும் என்பதே உண்மை...!

said...

படங்களுடன் பதிவு அருமை. தஞ்சைக்கு போகும் போது மறக்காமல் சென்று பார்க்க வேண்டும்.

said...

வாங்க குமார்.

உங்க ராமர் கொள்ளை அழகு. பிரமிச்சுப் போயிட்டேன்.

பதிவில் உள்ள படம் நான் எடுக்கலை. யாருமில்லாத சந்நிதி என்றாலும் அனுமதி இல்லாமல் எடுக்க மனசு வரலை.

அப்புறம் வலையில் இருந்து சுட்டேன்.

சனாதன தர்மா என்ற பதிவு.

said...

வாங்க நம்பள்கி.

ஈசனைப் பற்றி எழுதாமலென்ன? ஹரித்வார், கோகர்ணம், ம்ருதேஷ்வர் இன்னும் சில கோவில்கள் பற்றித் தெரிஞ்சவரை சுமாராச் சொல்லி இருக்கேன் என்றே நினைப்பு.

சாம்பிளுக்கு ரெண்டு இங்கே:-)

குடும்பசண்டையில் மனைவி தீக்குளிப்பு பார்க்கலையா?
http://thulasidhalam.blogspot.com/2010/03/blog-post_27.html
மாமனார் வீட்டுக்கு வந்து...ஆடித் தீர்த்துட்டார்.
http://thulasidhalam.blogspot.com/2011/03/blog-post_18.html

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

சந்தர்ப்பம் அமைஞ்சால் விட்டுடாதீங்க.

said...

படங்கள் ஒவ்வொன்றும் அருமை. ஊரின் வாசனை முதல் தெரிகிறது, especially தொழுவத்தில்!