Wednesday, March 20, 2013

தஞ்சைப் பெருவுடையார் .........

நல்ல பிஸியான போக்குவரத்து  இருக்கும் சாலைக்கு அந்தாண்டை  கோவில் வளாகம்  கண்ணுக்குத் தெரியுது. இடையில்  காங்க்ரீட் ஸ்லாபுகளை வரிசையா நிக்கவச்சதொரு தடுப்பு.  கடந்து போகும்போதே  தண்ணி இல்லாத அகழியும் மதிலுமா ....

கோபுரவாசலுக்கு நேரெதிரா பொதுமக்கள் கடந்து போகும்  ஸீப்ரா க்ராஸிங், போக்குவரத்துச் சட்டப்படி இருக்கு.  ஆனால் அதெல்லாம் எங்களுக்கில்லை என்பதுபோல்  வாகனங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும்.  நீ பாட்டுக்கு நின்னா...நின்னுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்னு என் கையைப் பிடிச்சு கோபால் விருவிருன்னு  சாலையைக் கடக்க, கூடவே நான் ஓடுறேன்.

சின்னதா அஞ்சுநிலைக் கோபுர வாசல் வழியாக உள்ளே நுழையறோம்.  இதுதான் ராஜகோபுரமா இருக்கணும்.  பெரிய கோவில் கட்டி முடிச்சபிறகு எட்டு வருசம் கழிச்சு இதைக் கட்டியிருக்காங்க. ராஜராஜனின் கேரள வெற்றிக்கு அடையாளமாக் கட்டுனதாம். கேரளாந்தகன் திருவாசல் என்ற அறிவிப்பும் கோவில் அமைப்பு பற்றிய தகவல்களும்  சரித்திரச் சுருக்கமுமா  வச்சுருக்காங்க.

 மனசுக்குள்ளே பூதம் பிராண்டத் தொடங்குச்சு.... அப்போ கேரளநாடுன்னா இருந்துச்சு? சேரநாடுன்னுதானே குறிப்பிடுவாங்க. 1956 இல்தானே  தனித்தனி சமஸ்த்தானங்களா இருந்த திருவாங்கூர், கொச்சி ,மலபார் பகுதி  எல்லாம் சேர்ந்து கேரளான்னு மாநிலமா உருவானதில்லையோ?  இதைத்தானே கேரளாப்பிறவின்னு  இப்பவும் நவம்பர் முதல்தேதி கொண்டாடுறோம்! அதுவுமில்லாம.... ராஜராஜன் பதவியில் இருந்ததே 1014 வரைதானே?  நம்ம பங்குக்கு ஆராயலாமா? 

அதைக் கடந்தால்  வாம்மா என்று அழைக்கும் போஸில் வெள்ளையம்மாள்.  62 வயசுக்காரி. அவளை மறைச்சு நின்னு படம் எடுத்துக்கும் குடும்பம் ஒன்னு.  இவளை நான் '89இல் பார்த்திருக்கேன்.  தஞ்சைக்கோவிலைப் பார்க்கவில்லையே என்ற  என் குறை தீர்க்க  கோவையில் இருந்து  பஸ் பிடிச்சு வந்து  பெருவுடையாரைக் கண்டுக்கிட்டு அடுத்த  பஸ் பிடிச்சு திருச்சிக்கு ஓடுனது  எல்லாம்  .... கனவு மாதிரி இருக்கு!  அப்போ வெள்ளையம்மாள்  இளவயசுக்காரி!

வலது பக்கம் காலணிகள் வைக்கும் இடம்.  டோக்கன் கொடுத்துக்கிட்டு, அங்கேயே  நினைவுப்பொருட்கள், புத்தகம்,சிடின்னு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். இராஜராஜேஸ்வரம் ஒரு செய்தி மாலை.  நாம் அறிந்த- அறியாத  பல சுவையான தகவல்கள்.  விலை ரூ 100. ஒன்னு வாங்கினோம்.


 அடுத்து மூணுநிலை கோபுரம். ஸ்ரீராஜராஜன் திருவாயில் கோபுரவாசலுக்கு ரெண்டு பக்கமும் 18 அடி  துவாரபாலகர்கள். உள்ப்ரகாரத்தின்  மதில்மேல் வரிசையா நந்திகள். நுண்ணிய அழகோடு செதுக்கி இருக்கும் சிற்பங்கள் நிறைஞ்ச அழகான கோபுரம். வண்ணம் ஏதும் பூசாமல்  கல்லின் வண்ணத்திலேயே இயற்கையா இருப்பது(ம்) அழகே!  உட்புறச் சுவரில்   முழுசும் தகவல்கள் கல்வெட்டுகளா செதுக்கி வச்சுருக்கு.  கல்வெட்டு மொழி  ஆராய்ச்சியாளர்களுக்கு சக்கரைப்பொங்கல்.

கோவில் முழுசுமே அங்கங்கே ஏகப்பட்ட சமாச்சாரங்கள்  நிறைஞ்ச கல்லெழுத்துக்கள் இருக்கு.  ராஜராஜன் கோவிலுக்குக் கொடுத்த நகைநட்டு பட்டியல் பார்த்தால் அதிர்ந்து போய்விடலாம்.  நிறைய ஆபரணங்களின் பெயரே புதுமையா இருக்கு. அதெல்லாம் என்னவா இருக்குமோ?   எடுத்துக்காட்டா...  லசுநி,பொத்தி, கிம்பிரி, குருவிந்தம்,சோனகச் சிடுக்கி, ஹளஹளமுங்,கொக்கு, நிம்பொளம் இப்படி 55  இருக்கு அந்தப் பட்டியலில்!

தங்கப்பாத்திரங்கள்183 கிலோ, வெள்ளிப்பாத்திரங்கள் 62 கிலோ, செப்புத்திருமேனி 65, கிராமங்கள் 40,  நிலபுலன்களின் இருந்து  வரும் நெல் 1,16,000  கலம், திருவிளக்கு 158, அது எரிய தேவைப்படும் நெய் 158 உழக்கு,  இவைகளை வழங்கும்  பசுக்களும் ஆடுகளும்...

எல்லாம் வாங்குன புத்தகத்தில் இருக்கும் விவரங்கள்தான். வேதவல்லி கண்ணன்,என் தம்பைய்யா ன்னு ரெண்டுபேர் நூலாசிரியர். அவர்களுக்கு என் நன்றிகள்.  தகவல்கள் நம்பிக்கையானதான்னு  கேள்வி வந்தால் நம்பக்கூடியதேன்னு சொல்லலாம்.  புத்தகத்தைத் திறந்தவுடன்  கட்டம்போட்ட இடத்தில் விமானத்தின் நிழல் கீழே விழுமா? விழாதா?  விழும். காலை மாலை ஆகிய வேளைகளில் விமானத்தின் நிழல் முழுவதுமாக விழும். என்று போட்டுருக்காங்க.  ஒரு பானை சோத்துக்கு ஒரு பருக்கைன்னு நினைச்சேன்.

ராஜராஜன் திருவாசல் கடந்து உள்ளே காலடி எடுத்து வச்சால் கண்முன்னே  நந்தி மண்டபமும் பின்னணியில்  பாதி மறைந்து மேல்பாதி மட்டும் தெரியும் விமானமும். சிவசிவ....

கெமெராவுக்கு ஓயாத வேலைதான் இனி!

அஞ்சடி உயர நந்தி மண்டபத்தில் ஏறி அருகில் போய்ப் பார்க்கலாம். 12 அடி உயரம் இருக்கார். போதும்போதாமல் ஒரு வேஷ்டியைச் சுத்திக்கட்டி இருக்கார். அவரைச்சுத்தி ஒரு கம்பி வேலி.அவர் கண்போகும் பாதையில் நேரெதிரா  கொடிமரம்.  சின்ன மேடையில் நாலுபுறமும் நந்திகள் அமர்ந்திருக்க , நாலு பூதகணங்களும்  நாலு யானைகளும் தாங்கிப்பிடிக்க நர்த்தன கணபதி  ஆடும் மண்டபத்தின்மேல் ஓங்கி உயர்ந்து நிக்கும் கொடிமரம். கொடிமரம் நோக்கிக் கைகூப்பும் ராஜராஜன் தனியொரு கற்றூணில்.

இந்தப்பெரிய நந்தியும் மண்டபமும் செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர் காலத்துலே கட்டியவை.  ஒரிஜனல் நந்தி ஆஃப் ராஜராஜன் அளவிலே சின்னவர்.  தனியாக   சின்ன மண்டபம்  ஒன்னில் கோவில் கொண்டு எட்டிப்பார்க்கிறார்.  பெரிய நந்திக்கு இடப்பக்கம் முற்றத்தில் இவரைப்பார்க்கலாம்

திறந்தவெளி முற்றம் கடந்தால் பெருவுடையார் கோவில் முன்மண்டபம். 15 படிகள் ஏறணும். கெமெராவைச் சுருட்டி வச்சுடணும். முகமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் எல்லாம் கடந்து  கருவறைமுன்னே நிக்கறோம்.  சதுர வடிவ அறையில் லிங்கவடிவில்  13 அடி  பரமசாமி. ஆவுடையாருடன் இருக்கார்.  எல்லாம் பெரிய கோவில் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல பெரிய சைஸ்!

தரிசனம் முடிஞ்சதும் இடப்பக்கம் இருக்கும் வாசல்வழியா வெளியே  வர்றோம். கயிறு கட்டி கைடு பண்ணியிருக்கு. வெளிப்புறம் முழுசும்  சிற்பங்களும் கோஷ்ட தேவதைகளுமா காணக்கண் கோடி மட்டுமல்ல, நேரமும் நிறைய வேணும் அனுபவிக்க.



படிகள்விட்டுக்கீழே இறங்கி உட்பிரகாரத்தில் இருக்கும் மற்ற சந்நிதிகளுக்குப் போகலை. பிள்ளையாருக்கும் முருகனுக்கும் கருவூர்தேவருக்கும்  சந்நிதிகள்  இருக்கு.  கருவூர்தேவர் ஆலோசனைகளைக்கேட்டு அதன்படி கோவிலைக் கட்டினான் ராஜராஜன் என்கிறார்கள். நேராப்போய் படி ஏறுனது உள்பிரகாரத்தின்  மதில்சுவரை ஒட்டியே ரெண்டடுக்கில் கட்டி இருக்கும் திருச்சுற்று மாளிகையில். கவிழ்த்துப்போட்ட 'ப' வடிவில் வலம் வரும்போதே  வலதுபக்கம் கருவறை விமானத்தில் ஒரு கண் வச்சுக்கலாம்.

எதுக்கு? ஓடியாப் போகப்போகுது?   எந்தப்பக்கம் பார்த்தாலும்  அழகா இருக்கேன்னு தான். மத்தபடி  கோவிலின் நீள அகலத்தையோ விமானத்தின் உயர அளவையோ  சொல்லப்போறதில்லை.  இது உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கோவில் அம்புட்டுதான்!  ராஜராஜேச்வரம்!   ராஜராஜனின் கனவு!





என்ன ஒரு கம்பீரம்!  ஏழே வருசத்தில் கட்டி முடிச்சுருக்காங்கன்னா எப்பேர்ப்பட்ட அசுர உழைப்பு!  கட்டி முடிச்ச வருசம் 1010 கிபி.  ஆயிரத்தாவது பொறந்த நாளை அமர்க்களமாக் கொண்டாடிட்டாங்க. தொல்லியல் துறையின் பொறுப்பில் கோவிலிருக்கு. பராமரிப்பு  ஓக்கே!  ஆனாலும் நம்மாட்கள் அங்கங்கே எண்ணெய்  வழிய விளக்கு ஏத்துவதையும் கற்பூரப்புகையை பரப்புவதையும்  விடலை. அம்மன் சந்நிதியில்  கோஷ்டத்தில்(மகிஷாசுரமர்த்தினி) கரி பிடிச்சு.....  இப்படி அழுக்குப்பண்ணா அருள் கிடையாதுன்னு  சாமியே நேரில்  வந்து சொன்னாலும்  கேப்பாங்களான்னு சந்தேகம்தான்:(  போதாக்குறைக்கு  ஆட்டோக்ராஃப் போட்டு வச்சுட்டுப் போயிருக்கு சனம்:(

உலகின் பாரம்பரியக் கட்டிடங்கள் பட்டியலில் கோவிலை சேர்த்துருக்காங்க.  திருச்சுற்று முழுசும் இடதுபக்க சுவரில் அருமையான பழங்கால ஓவியங்கள்.  தஞ்சாவூர் பாணி? சிதிலமாக ஆரம்பிச்சுருக்கு. இதில் விஷமிகளின் கைவண்ணம் வேற:(  கொஞ்சம் கூடுதல் கவனிப்பு கிடைச்சால் கொள்ளாம்.








ஏகப்பட்ட சிவலிங்கங்கள். அக்னிமூலையில் சின்னதா தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு. தீ இருந்தால் புகை. புகை இருந்தால்  கரிபிடிச்சுரும்.... பிடிச்சிருக்கு:(

ஒரு மணிநேரம் போதாதுதான். ஆனால் ........ இன்னும் ஒரு இடம் கட்டாயம் போகவேண்டியது பாக்கி.




மனசில்லா மனசோடுதான் கிளம்பினேன் என்பதே உண்மை. வாசலில் வருவிருந்து பார்த்து காத்திருந்தாள், வெள்ளையம்மாள்.



தொடரும் ...........:-)





51 comments:

said...

படங்கள் நல்லா வந்திருக்கு.

said...

மனசில்லா மனசோடுதான் கிளம்பினேன் என்பதே உண்மை.//


உண்மை உண்மை, கோவிலை விட்டு வர மனசே இருக்காது.

said...

எத்தனை முறை சென்றாலும் அலுக்காத கோவில்...

படங்கள் சூப்பர்ப்...

said...

படிக்கப் படிக்கப் பிரமிப்பு. அறியாத வயதில் இரு தடவை,.அறிந்த வயதில் ஒருதடவை,
இரு பொழுதுகளும் சரியாகப் பார்த்த திருப்தியில்லை.
வெகு நேர்த்தியான படங்கள் துளசி. வெள்ளையம்மாவுக்கு உங்களை நினைவு இருந்திருக்கும்!!

said...

http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_17.html

தமிழரின் பெருமை பேசும் ஆயிரம் ரூபாய் காசில் தஞ்சை பெரிய கோவிலை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறது அரசு ..

தங்கள் பதிவும் அருமையாக பெருமையை எடுத்துரைக்கிறது ,, பாராட்டுக்கள்..

டச் ஸ்கிரீன் அமைத்து கோவிலைப்பற்றி பல மொழிகளில் விபரம் தெரிவிக்கிறார்கள்.. பார்த்தீர்களா!!??

said...

எங்க ஊருக்கு வந்து எங்க பெரிய கோவிலை சுத்தி வந்திருக்கீங்க...

அதுலேந்து கொஞ்ச தூரத்திலே மெடிகல் காலேஜ் ரோடுலே அதாவது கோவில்லேந்து ஒரு அரை கிலோ தூரத்திலே தான்
திருபுர சுந்தரி நகர் இருக்கிறது. அங்கே தான் எங்க வூடு.

அங்கன தான் செங்கமல நாச்சியம்மன் கோவில். சரித்திர பிரசித்தி பெற்ற கோவில் .

திருச்சிக்கு போற வழியிலே தான் வல்லம் அப்படின்னு ஒரு சின்ன ஊர் அங்கிருந்து தான் சாரம் கட்டி இந்த பெரிய கோவிலுக்கு
மேலே வச்சு இருக்கற கும்பத்தை உருட்டி எடுத்துட்டு போனாகளாம்.

சின்னச்சின்ன டீடைலஸ் கூட் விடாம எழுதியிருக்கீங்க..

பெரிய கோவில் சன்னதிலேந்து வெளிலே வந்தீகன்னா, வெளிப்பக்கம் லஃப்ட்லே ஒரு ஆராய்ச்சிக்கூடம் பழைய தொல்பொருள் சிற்பக்
கண்காட்சி இருக்கிறது. அதுக்குள்ளே போய் பார்த்தீங்களா ?

சுப்பு ரத்தினம்.

said...

நல்ல படங்கள்.

சென்ற முறை சென்றபோது மாலை நேரம் ஆகிவிட்டது. ஆதிக்கும் அதில் வருத்தம். காலையில் சென்று வர வேண்டும்!

said...

கோவிலின் தென் பிரகாரத்தில் இருக்கும் லிங்கங்கள் இருக்குமிடந்தான் நான் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு இளைப்பாறும் இடம்:)

said...

எப்பேர்ப்பட்ட ராஜாக்களும் மஹாராஜாக்களும் ஞானிகளும் நின்ன இடத்துல நாம நிக்கிறோம் என்ற பிரமிப்பு பெருவுடையார் சன்னிதியில் ஏற்படுவது நிஜம். இவ்வளவு பெரிய உடையாருக்கு பக்கத்திலேயே மேலே ஏறி நின்னு அபிஷேகம் செய்ய வசதியா பரண் கட்டி விட்டிருப்பாங்க கவனிச்சீங்களா..

சிற்பக்குவியலும் சித்திரங்களும் பார்க்கப்பார்க்க அலுக்காதவை.

இந்தக்கோயிலுக்கு இன்னொரு சரித்திர முக்கியத்துவம் இருக்கு தெரியுமோ.. டும் டும் டும் படத்துல வரும் 'தேசிங்கு ராஜா" பாடலின் ஒரு பகுதி இங்கேதான் படமாக்கப்பட்டது. கைடுன்னா இதெல்லாம்தான் சொல்லணுமாக்கும். ராஜாக்களை விட எந்த சினிமாவில் வந்ததுன்னு சொன்னாத்தான் மக்கள் கப்புன்னு பிடிச்சுக்கறாங்க இப்பல்லாம் :-)) எல்லாம் பப்பனாரம் கொட்டாரத்துல கிடைச்ச அனுபவம்தான்..

said...

நானும் வெள்ளையம்மாளை 2004ல் சந்தித்துள்ளேன். அப்போது நேரம் பற்றாக்குறையால் முழுமையாகப் பார்க்கமுடியவில்லை.இப்படியான இடங்களுக்குச் செல்லும் போது ,நானும் தமிழன் எனும் பெருமிதம் தலைக்காட்டும். அருமையான படங்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது.

said...

அட ! அடடா !!!! படங்கள் அருமைப்பா !! இன்னும் படிக்கலை அதுக்குள்ள தாங்க முடியாம பாராட்ட ஓடிவந்துட்டேன் . படிச்சுட்டு திரும்ப வரேன் .

said...

நிறைவான பதிவு . சின்ன வயசுல போனது . இன்னொரு தடவை மகள்களை கூட்டிட்டு போகணும்னு எண்ணம் . உங்க பதிவை சின்னவளிடம் காண்பித்தேன் . wow!!! ( அவதான் )
நல்ல விவரமா எழுதி இருக்கீங்க . இந்த லீவ்லையே கூட்டிட்டு போனும்னு ஒரு உந்துதல் வந்த்டுச்சு .

said...

தஞ்சைப் பெரிய கோயில் ஒரு கட்டடக்கலை அதிசயம் என்பது சிறப்பு.

ஒருவித சிவந்த கற்களைக் கொண்டு இவ்வளவு உயரத்தில் கட்டப்பட்ட கோயில். பெருவுடையாரை உண்மையிலேயே பெரும் உடையாராக வைத்த சிறப்பு.

அந்த நந்தி மண்டபத்தின் கூரையிலிருக்கும் ஓவியங்கள் மிக அழகு. அதே போல முருகன் கோயிலில் முருகனுடைய திருக்கோலம் கண்களில் ஒத்திக்கொள்ளலாம். முருகா!

நீங்கள் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் ஓவியங்கள் தஞ்சை நாயக்கர் கால ஓவியங்களாம். ஆனால் இன்று சிதைந்து போயுள்ளது. பெருமை புரியாமல் கையெழுத்தும் காதலெழுத்தும் போட்டவர்களை என்ன சொல்வது!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

அனுபவிச்சுப் பார்க்கணுமுன்னு நினைச்சுப்போனாலும் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்களை முழுசும் பார்த்து முடிக்க ஒரு ஆயுள் போதுமான்னு சந்தேகமே!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எப்படிங்க அலுக்கும்? அத்தனையும் கண்ணில் ஒத்திக்கவைக்கும் அபூர்வங்களாச்சே!

said...

வாங்க வல்லி.

எத்தனை முறை பார்த்தாலுமே திருப்தி வர சான்ஸே இல்லைப்பா!

ஒரு பத்து நாள் தங்கி தினமும் போய் பகுதி பகுதியாப் பார்க்கணும்.

முடியும் காரியமா?

தினமலர் புண்ணியத்தில் மேலோட்டமா இங்கே பாருங்க.

http://www.dinamalar.com/360_view_detail.asp?id=213&cat=226#top

13 பகுதிகளா வருது.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சுட்டிக்கு நன்றி.

இப்பதான் போய்ப் பார்த்தேன். காசுமழையாப் பொழியுதே!!!

படங்கள் ஒவ்வொன்னும்.... அற்புதம்!

அதுவும் அந்த ட்வைலைட் படம் அதி சூப்பர்!!!!

பகிர்வுக்கு நன்றி.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

உங்கூரைச் சுத்திப்பார்க்க நேரமில்லாமல் போச்சுதே:( அங்கே இருந்ததே 20 மணி நேரம்தான்.

பெரிய கோவிலில்கூட முழுசாப் பார்க்க முடியலை.

அடுத்த முறை என்று ஒன்று இருந்தால்......... இருந்தால்..... ஹ்ஹும்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

காலையில் வெயிலுக்கு முன் போனால் ஆற அமர ரசிச்சுப் பார்க்கலாம். ஆனால் குறைஞ்சபட்சம் ஒரு முழுநாள் இங்கே இதுக்கு மட்டுமுன்னு ப்ளான் செஞ்சுக்குங்க.

said...

வாங்க குடுகுடுப்பை.

இளைப்பாறிய இடத்தில் ஆட்டோகிராஃப் போட்டு வைக்கலைன்னு நான் நம்பறேன். சரியா?

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்மூர்களிலே எங்கேப்பா சிந்திக்க விடறாங்க? எல்லா இடத்திலும் கூச்சலும் தள்ளுமுள்ளும்தான்:( எத்தனை விசாலமான இடமிருந்தால்தான் என்ன?

பரண் பார்த்தேன்!

பப்பனாரம் கொட்டாரத்துலே மணிச்சித்ரதாழ் விவரம் சொன்னதுபோல் இங்கே யாரும் நமக்குச் சொல்லலையேப்பா:(

நீங்க சொன்னபிறகுதான் தேசிங்கு ராஜா ஸீனையே பார்த்தேன். அட! ஆமாம்லெ!!!!இந்தக் கோயில்தான்!!!!

டாங்கீஸ்ப்பா:-)

said...

வாங்க யோகன் தம்பி.

நேரம் இருந்தாலுமே முழுமையாகப் பார்த்து முடிக்கமுடியுமான்னு ஒரு சந்தேகம்தான்!

வெள்ளையம்மாளைக் கொடுமைப்படுத்திய பாகன்னு ஒரு சேதி முந்தி வாசிச்சதும் மனசு கசந்து போனது உண்மை. என்ன மனுசன்களோ:(

said...

வாங்க சசி கலா.

ஆஹா..பயணம் முடிவாகிருச்சா!!!!

நிறைய நேரம் ஒதுக்கி நல்லாப் பார்த்து ரசிச்சுட்டு வாங்க.

said...

வாங்க ஜிரா.

சொன்னது அத்தனையும் சரியே!
எப்பேர்ப்பட்ட அர்ப்பணிப்பு இதைச் செதுக்கிய சிற்பிகளுக்கு!

பொதுவா இந்தியாவுக்கு வரும் வெள்ளைக்காரப் பயணிகள் தாஜ்மகாலையும் வாரணாசியையும், ராஜஸ்தானையும் பார்த்ததோடு திரும்பிடறாங்க. எப்பேர்ப்பட்ட கலை அம்சம் இங்கே இருப்பதை சரிவர விளம்பரப்படுத்தாததை என்னன்னு சொல்ல?

said...

இந்திய சுற்றுலாவில் ரொம்பவே ரசித்தகோயில். பெயருக்கேற்ப கவர்ந்து நிற்பதில் ஆச்சரியம் இல்லை. எத்தனை தடவை பார்த்தாலும் புதுமைபோல் தோன்றுவது சிறப்பு.

தஞ்சாவூர் ஓவியங்கள் சிதிலமடைவது வருத்தமாக இருக்கின்றது.

said...

சில சினிமாப் படங்கள், பார்த்ததே தான்-ன்னாலும், எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை;
தில்லானா மோகனாம்பாள், திசை மாறிய பறவைகள்...
அது போலத் தான் பெரிய கோயில் படங்களும்!

பதிவில் படங்களை ரொம்ப நேரம் பாத்துக்கிட்டே இருந்தேன்! நன்றி டீச்சர்..

அந்த முக்குல, வடக்காலத் திரும்பும் போது, நீங்க வலம் வரப்போ, எனக்குத் திக் திக் -ன்னு இருந்துச்சி... முருகன் இருக்கும் எடமாச்சே..

சோழர் கலைக்கு நடுவால, நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில்...முதற் கலையை மறைக்காம, சிறுசா, அதே சமயம், சிறுசுலயே, மெல்லீசா, இழைச்சி இழைச்சிச் செஞ்சிருப்பாங்க, முருகன் கோயிலை! படியேறும் போதே ரொம்ப அழகா இருக்கும்!

நஞ்சு அமுதாய் உணும் அரனார் தம்
நன் குமரா உமை அருள் பாலா!
தஞ்சென வரும் அடியவர் வாழ
தஞ்சையில் மேவிய பெருமாளே!
(தஞ்சைத் திருப்புகழ்)

said...

பிரமிப்பை தரும் கோவில். நிதானமாக ஒருமுறை சென்று வர வேண்டும்.

ஆட்டோக்ராஃப் இல்லாத இடமே எங்கு இல்லை....:((

படங்கள் பிரமாதமாக உள்ளது டீச்சர்.

said...

வாங்க மாதேவி.

வரவர நம்ம சனத்துக்கு கலைகளின் அருமை தெரியாமப் பாழாப்போகுதேன்னு கவலையா இருக்குப்பா:(

said...

வாங்க கே ஆர் எஸ்.

தில்லானா மோகனாம்பாளா? சரி என்றாலும் எனெக்கென்னமோ கடல், யானை,ரயில் இப்படி அலுக்காத காட்சிகள் போலத்தான் இந்தக் கோவிலுமிருக்கு.

கோபுரத்துலே இருக்கும் சிற்பங்களை ஒவ்வொன்னாப் பார்த்து ரசிக்கணும். கொட்டிக்கிடக்கே!!!!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பகல் பொழுதாகவும் வெய்யில் அதிகமாக இல்லாத நாளாகவும் அன்னிக்கு நாம் அங்கே இருப்பதாகவும் எல்லாம் சரிவர அமைஞ்சு போச்சுன்னா..... நாம் ரசனையோடு ஒருநாள் சொர்க்கத்தில் இருக்கலாம்.

said...

அழ‌கான‌ பட‌ங்க‌ள், ந‌ல்ல‌ ப‌திவு. த‌ஞ்சாவூர்க் கோயிலில் நுழைந்த‌தும் த‌மிழ‌ர்க‌ளுக்கு பெருமித‌ம் ஏற்ப‌டுகிற‌து என்ப‌தை நேரில் உண‌ர்ந்தேன்.

said...

வாங்க வியாசன்.

சரியாச் சொன்னீங்க. பெருமிதம் ஏற்படுவதைத் தடுக்கமுடியுமா?

வருகைக்கு நன்றிகள்.

said...

தஞ்சாவூர் பெரிய கோவில் பாத்துட்டு வந்தோம்
சரியான அக்னி வெய்யில் அதனால ரொம்ப நேரம் செலவிடமுடியலை .2 மணி நேரம் இருந்தோம் .. போறத்துக்கு முன்னாடி உங்க பதிவு பாத்து பின் வந்ததும் இன்னோர் முறை படிச்சு ரசிச்சேன் . நன்றி
போட்டோ எடுத்து மாளலை என் பெண்களுக்கு .
செருப்பு stand பக்கத்துல உள்ள புக்ஸ் என் மூத்த பெண் வாங்கினா ....
என் பெரிய பெண்ணிடம் உங்களை பத்தியும் உங்க ப்ளாக் பத்தியும் சொல்லி டைம் இருக்கப்ப தஞ்சாவூர் கோவில் பத்திஇன்னும் விவரம் துளசிதளம் படிச்சு தெரிஞ்சுக்கொனு சொல்லி இருக்கேன் .

said...

வாங்க சசி கலா.

ஆஹா அப்போ...... பயன் தரும் பதிவு துளசிதளத்தில் இருக்கு:-))))

said...

கண்டிப்பா !!!! என்ன இப்டி சொல்லிட்டீங்க .இனிமே எங்க போனாலும் துளசி என்ன எழுதி இருக்காங்கனு தான் போகும் எனக்கு .
;))

said...

ஆஹா.... தன்யளானேன் சசி கலா.

said...

அந்த பெரிய கோபுரம்ல dutch மனிதர் ஒருத்தறின் முகம் செதுக்கி இருக்கும்.உங்களுக்கு அதைப் பற்றி எதாவது தெரியுமா? நான் இப்போது தான் ஒரு வாரத்திற்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலிற்கு சென்று வந்தேன்.
நான் சசி கலாவின் இரண்டாவது மகள் ரம்யா. நான் பத்தாம் வகுப்பு முடித்து இருக்கிறேன். result காக காத்திருக்கிறேன். நான் அம்மாவை அந்த dutch ஆளின் போட்டோவை அனுப்பச் சொல்கிறேன்.

நன்றி!
ரம்யா

said...

அன்புள்ள ரம்யாகீதாஞ்சலி.

வருக வருக.

அழகான பெயர் உங்களுக்கு சூட்டிய அம்மாவுக்கு நன்றிகள் சொல்லத்தான் வேணும்.

அந்த டச்சு மனிதர் சிற்பம், ராஜராஜன் காலத்தில் செதுக்கப்பட்டது அல்ல.
தஞ்சை ரகுநாத நாயக்கமன்னர், தரங்கம்பாடியில் டென்மார்க் தேசத்து வணிகர்களுக்கு வாணிபம் செய்து கொள்ள அனுமதி அளித்தார.

அவர்களது விநோதமான ஆடை அலங்காரத்தைக் கண்ட நாயக்கர் காலத்துச் சிற்பிகள், தஞ்சை கோபுரம் பழுது பார்க்கும் சமயம் அவர்களை செதுக்கி இருக்கிறார்கள் என்று 'இராஜராஜேஸ்வரம்' சொல்கிறது.

பின்னூட்டத்திற்கு நன்றி ரம்யா.

said...

குழந்தையின் சந்தேகத்தை தீர்த்தமைக்கு நன்றி !!!!
என் மெயில் ID கிடைத்ததா .

said...

சசி கலா,

உங்க மெயில் பாக்ஸ் செக் பண்ணுங்க.:-)

said...

அன்புள்ள துளசி aunty
denmark man பற்றி எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி.
உங்களுடைய ரஜ்ஜு வும் நீங்கள் வளர்க்கும் பூக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் .
ரம்யா

said...

ரம்யா,

எனக்கும் உங்களை ரொம்பப் பிடிக்குது. எங்க வீட்டிலும் ஒரு ரம்யா உண்டு. அதனால் நீங்க குட்டி ரம்யா எனக்கு:-)

பள்ளிக்கூட விடுமுறைக்கு ஓய்வு நேர வாசிப்பு துளசிதளத்திலா!!!!

said...

ஆமாம் ஆன்டி அப்பபோ அம்மா எனக்கு பிடித்ததை பற்றி நீங்க எழுதும் போது எனக்கு சொல்வாங்க அப்போ படிப்பேன் உங்க photos எல்லாம் ரொம்ப பிடிக்கும் எனக்கும் photography ல interest உண்டு .
அந்த பெரிய ரம்யா யாரு . என்னை
வா , போ ன்னே சொல்லுங்க pl

said...

குட்டி ரம்மு,

பெரிய ரம்மு என் அண்ணாவின் மகள். அமெரிக்காவில் இருக்காள். அவளுக்கு ரெண்டு பிள்ளைகள்.

கம்ப்யூட்டர் ஆளுங்கதான் அவளும் அவள் கணவரும். ஆனால் ஹார்ட் வேர்:-)))

சரிப்பா.கிளம்பறேன். ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு!

நம்ம வீட்டுலே நான் மட்டும்தான் அவளை ரம்முன்னு கூப்பிடுவேன். இப்ப நீ நம்ம வீட்டுப்பொண்ணாகிட்ட படியால் நீயும் எனக்கினி ரம்முதான். ஓக்கே:-)

said...

ok aunty :)

said...

அருமையான பதிவு ஐயா. தங்களின் எழுத்து மட்டுமல்ல, தங்களின் படங்கள் கூட ஒவ்வொன்றும் பேசுகின்றன.நன்றி ஐயா

said...

வாங்க கரந்தை ஜெயக்குமார்.

வருகைக்கு நன்றிகள்.

ஆமாம்.... இப்பெல்லாம் ஐயாக்கள் மட்டுமல்ல அம்மாக்களும் பதிவு எழுதாறங்க தெரியுமோ!!!!

கரந்தை என்றால் என்ன ஊர்? எங்கே இருக்கு? ஐயம் தெளிவிப்பீர்!

said...

தஞ்சை கோயிலின் படங்கள்
நெஞ்சை அள்ளுகின்றன
மனதை வருடும்
இதமான வர்ணனை
பாராட்டுக்கள்.

said...

வாங்க பட்டாபி ராமன்.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத அமைப்பு!

ரசனைக்கு நன்றிகள்.

said...

I liked your post. I am also a blogger on blogger.com. http://hodentek.blogspot.com.
I was trying to get more details. I have no pictures of the interior.
I am hugely pleased that they did not apply rainbow colors to gopurams. I felt sad about this in many temples I visited in Madurai recently.

Excellent post!

Jayaram Krishnaswamy