Tuesday, March 12, 2013

கண்டுபிடி கண்டுபிடி


பால்பிடிச்சுக் கிடக்கும் சூரியகாந்தி  விதைகள் காணாமல் போகும் மர்மம்?

இன்னும்  சிலபடங்களை  இன்னும்  கொஞ்சநேரத்தில் சேர்ப்பேன்.


பிகு: அடுக்களை சன்னல்வழியாப் பிடித்தவை. ரெட்டைக்கண்ணாடி காரணம் படங்கள் பளிச்ன்னு இல்லை கேட்டோ:(37 comments:

said...

வேறன்ன பறைவகள் தான்!

said...

சாப்பிட நல்லா இருக்கும்! கோபால்? இல்லை நீங்களா?

said...

குட்டி எலிகளா :))) இல்லை சிட்டுக்குருவிகளா :))

said...

வாங்க நம்பள்கி.

பறவைதான். சாப்பிட நல்லாத்தான் இருக்கும்போல!

நமக்கு வேணுமுன்னா சூப்பர் மார்கெட்லே இல்லைன்னா ஹெல்த் ஃபுட் ஸ்டோர்லே 100 கிராம் வாங்கிக்கலாம்.

வேலை மெனெக்கெட இதே வேலையா ஒன்னு மாத்தி ஒன்னு வந்து கொத்தித் தின்னுவது பார்க்கவே நல்லா இருக்கு!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஏஞ்சலீன்.

ரெண்டாவதுதான்! குட்டி எலிகளை இந்த வீட்டுத்தோட்டத்தில் பார்த்த நினைவு இல்லை:(

வருகைக்கு நன்றி.

இப்ப இன்னும் பல படங்களை இணைச்சுருக்கேன்.

said...

அருமை...

மேலும் பல படங்களை எதிர்ப்பார்க்கிறேன்...

said...

எங்கப்பா Engineer- ஆக ஒய்வு பெற்று என் அம்மாவுடன் கிராம்த்ரிக்கு சென்று வாழ்ந்தார்;

ஒரு முறை, சூரிய காந்தி செடிகள் போட்ட சமயம்...

ஒரு லட்சம் பறவைகள் ஒர௪உ நாள் அதி காலையில் வந்து அந்த அந்த செடிகளில் அமர்ந்தன. ஒரு அரை மணியில் எல்லா செடிகளும் மொட்டை.

பண்ணையத்தில் வேலை செய்த ஆட்கள் சொல்லி அப்பா அங்கு போவதற்குள்...எல்லாம் காலி.

என் அப்பா பயங்கர தைரியசாலி; இருந்தாலும் அவர் ஆடிவிட்டார்; அவர் அழுதே விட்டார் பறவைகளினால் சூறையாடப் பட்ட நிலங்களைப் பார்த்து...

இந்த நஷ்டம் எங்காளால் தாங்கமுடிந்தது; இதே ஒரு ஏழை விவசாயி நிலத்தில் நடந்தால்? வேறன்ன தற்கொலை தான்!

ஒரு செடியில் உள்ள விதைகளை ஒரு பறவை சாப்பிட்டாடல் அழகு; நமக்கு ஆனந்தம்; ஒரு பத்து ஏக்கரில் உள்ள செடிகளில் உள்ள விதைகளை பறவைகள் சாப்பிட்டாடல்.. துக்கம், தற்கொலை தான்...!

காட்சி ஒன்னு தான்; விளைவுகள் வெவ்வேறு! இது தான் உலகம்.
____________________________
//துளசி கோபால் said...வாங்க நம்பள்கி.

வேலை மெனெக்கெட இதே வேலையா ஒன்னு மாத்தி ஒன்னு வந்து கொத்தித் தின்னுவது பார்க்கவே நல்லா இருக்கு!

வருகைக்கு நன்றி

said...

காக்கை குருவி நம் ஜாதி என்பது சத்தியம்!

நம்மூர் குருவிகளுக்கு காலை உணவு ப்ரெட். என்ன இருந்தாலும் வெள்ளையர்கள் பாருங்க:-)

இப்பதான் சில மாதங்களா வெறும் சாதம் பிற்பகலுக்கு வைக்கிறேன்.

சீனர்கள் அதிகமாகிவிட்டனர் நம்மூரில். அதான் குருவிகளுக்கும் உணவுப்பழக்கம் மாற்றிப்பழக்கணும்.

பர்ட் பாத் தண்ணியிலே குடியலும் குளியலும்.

இந்த பத்து நாளா ஸ்நாக் கிடைக்குது அவுங்களுக்கு. நம் வீட்டு சூரியகாந்திப்பூவில் வரும் விதைகளை வரிசை வரிசையா கொத்தி எடுத்துத் தின்னுகிறார்கள். சட்னு பார்த்தால் பூக்கள் எல்லாம் முன் மண்டை சவரம் செஞ்ச குருக்களாத்து அம்பிகள் தலைபோல் உள்ளன!!!

நேற்று விஸிட் வந்த தோழி ஒரு பேப்பர் பையை மாட்டி விட்டால் சூரியகாந்தி விதைகள் கிடைக்கும் என்றார்கள்.

நமக்குக் கடையில் 100 கிராம் வாங்கினால் ஆச்சு. தினம் ஃப்ரெஷா தின்னணுமுன்னு அவுங்களுக்கு டாக்டர் அட்வைஸ் னு சொன்னேன்:-))))//
மேலே இருப்பது நீங்கள் என் ”மெல்ல விடியும் வைகறை பொழுதில்” பதிவுக்கு வந்து அளித்த பின்னூட்டம்.
அதை நேரில் பார்த்து விட்டேன் இன்றைய உங்கள் பதிவில்.
நீங்கள் காத்து இருந்து போட்டோ எடுத்தீர்களா? பூவும் பறவையும் ஒரே கலரில் அழகு.

said...

//சட்னு பார்த்தால் பூக்கள் எல்லாம் முன் மண்டை சவரம் செஞ்ச குருக்களாத்து அம்பிகள் தலைபோல் உள்ளன!!!//

Excellent..!
நல்ல நகைச்சுவை உணர்வு.!

இதை நாங்கள் அரைவட்டை, சதுர வட்டை, கொன்னவட்டை என்று கூறுவோம்...என் பள்ளிப் படிப்பு [பூர்வீகம் என்றும் சொல்லலாம்] மைலாப்பூர்,மந்தைவெளி, ராஜா அண்ணாமலை, etc.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அடுப்பில் இருப்பதைக் கிளறிக்கிட்டே க்ளிக் க்ளிக்தான் எல்லாம்:-)

நான் படமெடுக்க வெளியே போனால் அது பறந்துருமே!

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

ஆமாங்க நம்பள்கி.

விவசாயிக்கு பறவைகள் எதிரிகளே! தொழில் முறையில் பயிர் செஞ்சால் இங்கே பண்ணைகளில் செய்வதுபோல வலை அடிச்சோ இல்லைன்னா துப்பாக்கி சத்தம் கேக்கறமாதிரியான ஒலிகளை ஸ்பீக்கர் வழியா வெளியிட்டோ பறவைகளைத் துரத்த வேண்டித்தான் இருக்கு.

செர்ரிப்பழத் தோட்டங்களில் இது போன்ற பறவை விரட்டு இருக்கு.

கவண் கல்லை வச்சுக்கிட்டு ஆலோலம் பாட வள்ளி இங்கில்லையே:-)))

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா.... நம்ம பதில் இவ்ளோ நல்லாவா இருந்துருக்கு:-)))))

எடுத்துப்போட்டதுக்கு இனிய நன்றிகள்.

said...

பூவுக்கு மேட்ச்சா இருக்கு குருவியோட கலர் :-))

இதுகளைப் பார்த்துட்டிருந்தாலே நல்லா பொழுது போகும் போலிருக்கு :-))))

said...

அப்பளாக் குடுமி சூரிய காந்தி சிரிப்பும் கொடுக்கிறது.
அரை வயிறு நிரம்பிய குருவிகள் முழுமை.
ஒரு கையில் அடுப்பில் கிளறிக் கொண்டே,எந்தக் கை படம் எடுத்ததுப்பா?

அழகான படங்கள்.

said...

வாங்க நம்பள்கி.

நம்ம பூர்வீக கதை ஒன்னு இங்கே.

நேரம் இருந்தால் பாருங்க. எழுதியே ஆச்சு ஒன்பது ஆண்டுகள்.

http://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_17.html

said...

மிகவும் அழகான படங்கள்.குருவி மிக அழகு. சாப்பிட்டு போகட்டும்.

said...

சூப்பர் பூ, சூப்பர் குருவி, (என்ன பறவை ?) எவ்வளவு லாவகமா கீழ விழுநதுடாம கொத்தி சாப்பிடுது :))
சூப்பர் போட்டோ !!!

said...

பால்பிடிச்சுக் கிடக்கும் சூரியகாந்தி விதைகள் காணாமல் போகும் மர்மம்?


சுவாரஸ்யமாக மர்மப்படங்கள் ரசிக்கவைத்தன ..

பாராட்டுக்கள்..

said...

போட்டோ சூப்பர்.

ரொம்ப பொறுமையா படம் பிடிச்சிருக்கீங்க

said...

வாங்க அமைதிச்சாரல்.

தோட்டத்துலேகுருவிகளுக்கு சாப்பாடு போட்டவுடனே எப்படியாவது அதுலே ஒன்னை மடக்கிடணுமுன்னு நம்ம ரஜ்ஜு ஒளிஞ்சு உக்கார்ந்து ஓயாமப் போராடுது.

பூச்செடிகள் பின்னே இருந்து புல்வெளிக்குப்பாயும் ஐடியா. ஆனா அதுவரை குருவிகள் கை என்ன மாங்காயா பறிச்சுக்கிட்டு இருக்கும்?

இத்தனை களேபரத்தின் இடையில்தான் நம்ம எழுத்துப்பணி என்னும்போது அப்படியே கடமை உணர்ச்சியை நினைச்சு உடம்பே சிலிர்த்துப்போகுதுப்பா:-))))))

said...

வாங்க வல்லி.

கிளறும்போது இடைக்கிடை ஒருநிமிசம் இடைவெளி விடலைன்னா.... அடுப்பில் இருப்பது அல்வா ஆகிறாதா???

அப்பதான் நம்ம கலைக்கண் விழிச்சுக்கும் கேட்டோ:-))))

said...

வாங்க ரமா ரவி.

அதிகம் போனால் இனி ஒரு மாசம் காலநிலை சுமாரா இருக்கும். அப்புறம் குளிர்காலத்துலே சாப்பாடு குறைஞ்சுருமே அதுகளுக்கு:(

அதான் இப்பவே தின்னுக்கோன்னு விடறேன்.

said...

வாங்க சசி கலா.

சிட்டுக்குருவிதான். ஆனால் நெஞ்சில் லேசா ஒரு இளமஞ்சள் இருக்குல்லே?

சைலண்டா வந்து பூவில் உக்கார்ந்து காற்றில் அது ஆடும்தோறும் கூடவே ஊஞ்சலாடி கொத்தித் தின்னுவது பார்க்கஒரு அழகுதான்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

இன்னும் நல்ல லென்ஸ் அண்ட் கொஞ்சம் வெய்யில் இருந்துருந்தா க்ளியரா வந்திருக்கும்.

பாராட்டுகளுக்கு நன்றி.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஸ்போர்ட்ஸ் செட்டிங்லே போட்டா அடுத்தடுத்து க்ளிக் செஞ்சுக்க வசதி. அப்புறம் நல்லதைப் பொறுக்கணும்.

இதுக்காகவே ஒளவையார் சொன்ன நகையை அணிஞ்சுக்கிட்டேன்:-)

said...

செடியின் கலருக்கே பறவை....:) என்னமா உட்கார்ந்து சுவாரசியமா சாப்பிடுறது...:))

படங்கள் வெகுவே அழகு. அடுப்பில் கிளறிக்கிட்டே க்ளிக்கினது, நல்லாவே வந்திருக்கு...

said...

படங்கள் அனைத்தும் அருமை! அதுவும் அந்த குருவி ‘இது என்னுடைய ராஜ்யம்’ என சொல்வதுபோல் கொடுக்கும் கம்பீரமான Pose அபாரம்!

said...

adaptation பாருங்க அக்கா ..அந்த சிட்டு உக்காந்து சாபிடுவது சாதரணமா பார்த்தா தெரியாது ..லெட் them என்ஜாய் :))..நான் ஜெர்மனியில் இருக்கும்போது பக்கத்து வீட்டு தோட்டத்தில் சின்ன குட்டி எலிகள் விறு விறுன்னு இப்படி செடிகளில் ஏறுவதை பார்த்தேன் :))....ராஜலக்ஷ்மி கைக்கு இவங்க மாட்ட மாட்டாங்க ..
எங்க பக்கத்து வீட்ல அனுஷ்கா இருக்கு அதுவும் ரஜ்ஜூ மாதிரிதான் ..காத்துக்கிட்டே இருக்கு :))

said...

அருமையா இருக்கு.. இப்படி ரகசியமா எடுத்தாத்தானே உண்டு..

said...

அக்கா ..இவர் டார்வின் finches இல் ஒருவர் !!!என்று நினைக்கிறேன்

said...

நல்ல படங்கள்....

அது சரி, ”சாப்பிடறதை இப்படியா வேடிக்கை பார்த்து ஃபோட்டோ எடுப்பீங்க”ன்னு பறவைகள் உங்க மேலே கேஸ் போட்டுட போகுது டீச்சர்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இங்கே நம்மூரில் அடுப்புக்கு ஜஸ்ட் பின்னால் ஜன்னல் வைக்க அனுமதி இல்லை. அதான் வலக்கைப் பக்கம் அடுப்பு இடக்கைப் பக்கம் ஜன்னல். அதான் வாகாப் போயிருச்சு:-))))

said...

வாங்க நடனசபாபதி ஐயா.

'உலகம் பிறந்தது எனக்காக!' ன்னு அது பாடுதோன்னு எனக்கு ஒரு சம்ஸயம்:-)))

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

said...

வாங்க ஏஞ்சலீன்.

பக்கத்து வீட்டுலே அனுஷ்காவா!!! பேஷ் பேஷ். எப்படி இருக்காள்? என்ன குலமோ? என்ன நிறமோ? சொல்லுங்களேன்.

நீங்க சொன்னது ரொம்பச்சரி. க்ரீன் ஃபின்ச் வகைதான் இது.

இன்னும் ஒரு நாலுநாள் விஸிட் இருக்கலாம்.

அப்புறம் மொட்டை!

said...

வாங்க கயலு.

ஜலக்ரீடைகூட ஒளிஞ்சுருந்துதான் பார்க்கணும். வேற வழி? நம்ம தலையைக் கண்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம்தான்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

என்னைப் பார்க்கவச்சுட்டுத் தின்னதுக்கு அதுகளுக்கு வயித்து வலி வராம இருக்கணுமே முதலில்!

அப்புறம் தானே 'கேஸ்':-))))

said...

வாவ்! நல்ல விருந்தாளிகள்.

உங்களுக்கு சமைக்க சிரமம்தராமல் :))) தாங்களாகவே விருந்துண்டுவிட்டார்கள்.