Friday, March 08, 2013

காணி நிலத்திடையே ஒரு மாளிகை....

ஊருக்குள்ளே நுழைஞ்சப்ப மணி ஆறேமுக்கால்.  இந்தளூர் விட்டுக் கிளம்பி  வரும்போதே  வழியில்  சிலபல கோவில்கோபுரங்கள் கண்ணில் பட்டுச்சுன்னாலும்  இருட்டுமுன் காரைக்கால் போய்ச்சேரணுமேன்னு  வேறெங்கேயும் இறங்கலை.  இதுக்குள்ளே  காரைக்காலில் தங்க இடம் வேணுமேன்னு வலையில் தேடுன கோபால்  ஒரு  ரிஸார்ட் இருக்குன்னார்.  ஓக்கேன்னு  அதுக்கு செல் பேசுனப்ப  அறை இருக்கு. நீங்க ஊருக்குள்ளே வந்ததும் ஃபோன் செய்யுங்க. சரியான வழி சொல்றோமுன்னாங்க.  அதே போல் செஞ்சு  வழி கேட்டுக்கிட்டாலும் புது இடமா இருப்பதால்  கொஞ்சம் முழிக்கத்தான் செய்தோம். பாரதியார் சாலையில் போய்க்கிட்டு இருக்கும்போது  அங்கிருந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம்  விசாரிச்சால் ( குட் ஈவ்னிங் ஆப்பீஸர்,. ஹாலிடேஸ் ரிஸார்ட் க்கு எந்தப்பக்கம் போகணும்?)அவர் விவரிச்சுக்கிட்டு இருக்கும்போதே அங்கே இருந்து கிளம்பும் ஒரு ஜோடி, அந்தப்பக்கமாத்தான் நாங்க போறோம். எங்களை ஃபாலோ பண்ணுங்கன்னு சொன்னாங்க.

காரைக்கால் பஸ் ஸ்டாண்டுலே இருந்து  ரெண்டு கிலோ மீட்டர் தூரம். கடற்கரையை ஒட்டிய இடம். அக்கரைவட்டம் மெயின் ரோடு.  முன்னே போன ஜோடி நம்மை வாசல் கேட் வரைக்கும் கொண்டு விட்டுட்டுப்போனாங்க. உள்ளே  ரிஸப்ஷன் கந்தரகோளமா இருக்கு.  பெயிண்டிங் வேலை நடக்குதாம். ஃபார்மாலிட்டி முடிச்சதும்   அறைக்குக்கூட்டிப்போனாங்க.  கீழ்தளம். ஊஹூம்..... சரிப்படாது.   அடுத்த கட்டிடத்து மாடியில் ஒரு அறை. இதுவும் எனக்கு ஊஹூம்.....  சுவர் கலர் சரி இல்லை!  அதே மாடியில்  அடுத்த பக்கத்து அறை ஓக்கே ஆச்சு.  லாவண்டர் (Lilac)நிறம்.

வெளியே நிறைய மரஞ்செடிகள். அதனால் கொசு இருக்குமோன்னு பயந்துக்கிட்டு  சுத்திப்பார்க்க வெளியில் வரலை.  ரூம் சர்வீஸ்லே ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம்.   குளியலறை  ஜன்னலில் பார்த்தால் தூரத்தில் கடல் இருக்கும்போல!  லேசான அலை ஓசை!

காலையில் எழுந்து கடமைகளை முடிச்சோம். இப்பெல்லாம்  இமெயில் பார்ப்பதும் அத்யாவசியமான கடமைகளில் ஒன்னு ! டிவியில்  திருமால் பெருமை பாடல்கள் ஓடிக்கிட்டு இருக்கு.  டிவி இல்லாம கோபாலால் இருக்கவே முடியாது:(



 இன்னைக்குத்தான்  ஆங்கிலத்தேதியின் படி கோபாலுக்கும் நம்ம துளசிதளத்துக்கும் பொறந்தநாள்!  வாழ்த்துகளை பரிமாறிக்கிட்டோம். வெளியே வெராந்தாவுக்கு வந்து நின்னால்....  சுத்திவர சூப்பரான பழ மரங்கள்.  அட! மாங்கான்னு நினைச்சுக்கிட்டே  உத்துப்பார்த்தேன்.  இலைகள் வேறமாதிரி இருக்கேன்னு ... இது இலவம்பஞ்சு  மரம்!  முந்தியெல்லாம்  ஸ்பிண்டில் ()போல நீளக்காய்கள் இருக்கும். இப்ப என்னன்னா  மாங்காய் போலக் கொத்துக்கொத்தாய் காய்ச்சுக்கிடக்கு.  பஞ்சில் வேற வகை!

இந்த ஃபார்ம்ஸ் & ரிஸார்ட்லே மொத்தம் 14 அறைகள் . இதுலே பத்து அறைகள் டீலக்ஸ் ரூம்ஸ்.  மூணு ஃபேமிலி  ரூம்ஸ், ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு  ஒரு ஸ்யூட். தனித்தனியா கட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடத்திலும்  மாடியில் ரெண்டு கீழே ரெண்டுன்னு நாலு அறைகள். சுத்திவர அகலமான வெராண்டா, பால்கனி.  நிறைய பூச்செடிகளுக்கிடையில் நடைபாதை, நீச்சல் குளம் இப்படி நல்லாத்தான் இருக்கு.  ஏராளமான தெங்குகள்.



வார இறுதிகளில்  அறைகள் எல்லாம் நிறைஞ்சு போயிருமாம். நாம் ஞாயிறு  மாலை வந்ததால் இடம்  கிடைச்சதாம்.  நடைபாதை வழியா  விடுவிடுன்னு மார்னிங் வாக்  போய்க்கிட்டிருந்தார் ஒருத்தர்.  நம் வீட்டு வாசல் வழியா  ஏழெட்டு ரவுண்டு  வரை  கண்ணில் பட்டார்.  நாங்களும் கீழேவந்து சுத்திப்பார்த்துக்கிட்டே  ரெஸ்ட்டாரண்ட் /டைனிங் ஹால் போனோம்.  அறை வாடகையில்  'ப்ரேக்ஃபாஸ்ட்'ம்  சேர்த்தி.

மற்ற ஹொட்டேல்ஸ் போல இல்லாமல் இங்கே வாகன ஓட்டிகளுக்கும் படுத்துறங்க ஒரு தனி இடம் இருக்கு. வட இந்தியாவில்நாம் பயணம் போனப்ப  எல்லா விடுதிகளிலும்  ஓட்டுனர்களுக்கு உறங்க அறையும்  குளியலறை வசதிகளும் உண்டு.  இது ரொம்ப நல்ல விஷயம்.  ட்ரைவர்கள் தூங்கி ஃப்ரெஷானால் மறுநாள் பயணம்  நல்லதாவே அமைஞ்சுரும். இங்கே தென்னிந்தியாவில்   இந்த வசதிகள் அவ்வளவா இல்லை.  அப்படி இருக்குமிடத்திலும்  நம்ம சீனிவாசன்,  ' வண்டிக்குள்ளேயே படுத்துக்குவேன் மேடம். இதுதான் பழகிப்போச்சு' ன்னுடுவார்.


எட்டரை மணி போல அறையைக் காலி செஞ்சுக்கிட்டு  கிளம்பி ஊருக்குள் போனோம்.  புராதச்சின்னங்களை அப்படியே விட்டு வைக்கணும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கு  உள்ளுர் நகர சபையும், யூனியன் கவர்மெண்ட்டும்:(  வீடுகளுக்கு முன் ஓடும்(!) திறந்த சாக்கடை. யக்:(
சாக்கடையைக் கடந்து வீட்டுக்குப்போக வீடுகளுக்கு முன்னால் மட்டும் கற்பலகை.  குறைஞ்சபட்சம்  இதையே  வரிசையா வச்சு  தெருவோரத்தை மூடி வைக்கலாம்.  திருட்டுபயம்(?) இருக்குன்னா  இப்பதான்  மூணு மீட்டர் நாலு மீட்டர்ன்னு நல்ல நீளமான காங்க்ரீட்  ஸ்லாப்கள் வருதபதையாவது வச்சு மூடலாம்.  கொஞ்சம் கவனிக்கப்டாதோ?  மற்றபடி வாச்ல்பக்கம் சின்னத் திண்ணைகளும் தூண்களும் அமைஞ்ச ஓட்டு வீடுகள் நல்லாத்தான் இருக்கு.  அந்தத் திண்ணையில் உக்கார்ந்து (சுத்தமான) காத்து வாங்க முடியுமா ன்னு இன்னொரு கேள்வி!

நேத்து ஊருக்குள்ளே வந்த அதே பாரதியார் சாலை.  இந்தத்தெருவில் பரவாயில்லை. அங்கங்கே சாக்கடை மூடிபோல ஒன்னு இருக்கு. மெயின் ரோடு என்பதால்  கொஞ்சம் கவனிப்பு இருக்குமோ என்னவோ?

இதே சாலையில் கொஞ்ச தூரத்தில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில்!  பெரிய  முன்வாசல்கதவுகள்.  தெருவில் இருந்து பார்த்தாலே  தெரியும் கொடிமரம். கடந்தால் குட்டிவிமானத்தோடு பெரியதிருவடி  பெருமாளைப்பார்த்தபடி.  கோவில் முகப்பின் மேல் அரவணையில் துயிலும் அரங்கன் காட்சி தர்றார்.


சுவையான கோவில் நிகழ்வின் கல்வெட்டு!  போனவருசம்( நம்ம பயணம் 2012 செப்டம்பர்) ஆகஸ்ட் 4 2011 கருடபஞ்சமி. அன்றைக்கு அக்கம்பக்கத்து ஊர்க்கோவில்களில் ஏழில் இருந்து (திவ்ய தேசங்கள்) எம்பெருமான்கள் கருடவாகனத்தில் ஒன்னாய்ச்சேர்ந்து  இங்கே எழுந்தருளி இருக்காங்க. திருமஞ்சனமும் தீபாராதனையுமா அமர்க்களப்பட்டுருக்கு!  ஸப்த கருட சேவைத் திருவிழா!!!!   ஹைய்யோ!!!!  எழு பேரா!!!  இதுவரை நான் கேட்டதும் இல்லை பார்த்ததுமில்லை:(

தெப்பத்திருவிழா வேற 37 வருசமா நின்னு போயிருந்துச்சாம்.அதுவும் அந்த வருசம் (2011)மாசி மாதம்  மீண்டும் தொடங்கியிருக்கு!  ரொம்ப மகிழ்ச்சி!

பிரமாண்டமான அளவில் கோவில் இல்லை என்றாலும்  அழகா அம்சமான கோவில்தான் இது.  மூலவர் ரங்கநாதரை சேவிச்சுக்கிட்டோம். நல்ல தூக்கம்! கிடந்தாரே கிடந்தார்.  நமக்கோ....ஏகாந்த சேவை!  கோவிலில் இருந்த  நபர்கள் எல்லாம்  பக்கத்து சந்நிதியின் முன்னே கூடி  இருந்தனர். ஸ்ரீ ரங்கநாயகித் தாயார்.  முன் மண்டபத்தில்  திரைக்குப்பின் உற்சவர்களுக்கு  அலங்காரங்கள்  நடக்குது. நேற்றுமுதல் நாலு நாளைக்கு  திருப்பவித்ரோத்ஸவம்

ஒரே பிரகாரம்தான் கோவிலை வலம் வந்தோம்.   கருவறை சுவர்களின் வெளிப்புறம் எல்லாம்  புடைப்புச் சிற்பங்கள் , அவை சொல்லும் சேதிகள்!  சூப்பர்.  பிரம்மன்  உலகில்  படைத்த முதல் பெண்ணும் ஆணும் கூட!

கருவறையின் மேல் குட்டி விமானம்.  ஏதோ விழா நடந்து முடிஞ்சுருக்கு.  மக்களை வரிசை கட்டி அனுப்பக் கட்டிவைத்த மூங்கில்கள்   இன்னும் அங்கங்கே!

சக்கரத்தாழ்வார் சந்நிதி  சேவித்து மறுபக்கம் திரும்பினால் நம்ம ஆண்டாளம்மா.  கருவறைச் சுவர்களில்  பளிங்கில் செதுக்கிய  திருப்பாவைகள் முப்பதும். எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது.  அல்லிக்கேணியில் கல்லில்  செதுக்கியது  உள்பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதிப்பக்கம்   மேற்கூரையுள்ள மண்டபச் சுவரில். சிங்கை ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில்  கருவறைச் சுற்றும்போதே  மூணு பக்கமும்  பாட்டு ஸீன்களுடன் புடைப்புச் சிற்பங்களோடு  வெள்ளைப்பளிங்கில் கருப்பெழுத்துக்களாய் இருந்ததை  சமீபகாலமாக் காணோம். வெறும் சிற்பங்கள் மட்டுமே இருக்கு. புண்ணியவான்கள் எவரோட ஆலோசனையோ எழுத்து மிஸ்ஸிங்:(

தசாவதார வரிசையில்  புத்தரும் இருக்கார். அப்ப ஏகாதசாவதாரமோ ?  குருவாயூரப்பன், பாண்டு ரங்கன், , திருப்பதி வெங்கடாசலபதி,  பூரி ஜகந்நாதன் இப்படி யாரையும் விட்டு வைக்கலை.  ஸ்ரீ வைகுண்டத்தில் பரமபத நாதர் நித்யசூரிகளுடன் காட்சி தருகிறார்.



சின்னதா ஆஃபீஸ் போல இருந்த இடத்தில் நின்னுருந்தவரிடம் படம் எடுக்கலாமான்னு அனுமதி கேட்டதுக்கு அவர் இன்னொரு பெரியவரைக் கை காமிச்சார்.   அவர் திரு ரங்கநாதன். தலைமை பட்டர்.  மூலவரை விட்டுட்டு  படம் எடுத்துக்க அனுமதித்தார்.

கோவிலுக்கு இடப்பக்கம்  புஷ்கரணி. சந்திர தீர்த்தம்.   நல்ல அழகான பெரிய, சுத்தமான குளம். சுத்திவர  கல்பாவிய தரையும்  ஒழுங்கான படிக்கட்டுகளுமா  அருமை. நடுவிலே ஒரு நீராழி மண்டபம். நடைப்பயிற்சி செய்ய வர்றவங்களுக்கு  நடந்த தூரம் தெரியும் வகையில்  ஒரு தகவல் பலகை. மூணுதரம் சுத்துனா ஒரு கிலோ மீட்டர்!

 மூணுமுறை கண்ணால் சுத்திட்டு குளத்தைத் தாண்டி அடுத்தபக்கம் போனால்  இன்னொரு கோவில் இருக்கு.  என்னன்னு பார்க்கலாமேன்னு  கம்பிக்கதவைத் திறந்து போனோம். ஆஹா....என்ன ஒரு இன்ப அதிர்ச்சி!  காரைக்கால் அம்மையாரின் சந்நிதி!!!!   இந்தப்பக்கம்  இன்னொரு சந்நிதியில் புள்ளையார்  இருக்கார்.

காரைக்கால் அம்மையார் புனிதவதியின் சரிதம் சொல்லும் ஓவியங்கள்.  சொன்ன கதையைப் படம் பார்த்துப் புரிஞ்சுக்கிட்டார் கோபால். மாங்கனித் திருவிழாவின் முக்கியத்துவம் சொன்னேன்.  மாங்கனித் திருவிழான்னதும்  அவர் பாட்டுக்கு  ஹரியானாவின் மேங்கோ ஃபெஸ்டிவலை நினைச்சுக்கப்போறாரேன்னு .... எனக்குக் கவலை.


(நேத்து மாலை  காரைக்கால் வந்துட்டியான்னு கேட்ட கோபாலுக்கு  வந்துட்டேன்னு சொல்லி, காரைக்கால் அம்மையார் யாருன்னு கேட்டால்.... பனிரெண்டு அவதாரங்களில் ஒன்னுன்னார். ஆமாம். உங்களையும் சேர்த்துன்னேன். வாத்தியார் வூட்டு ஆளுங்க மக்குன்னு சும்மாவா சொல்லி இருப்பாங்க:-)))))))))

நம்பதிவர்களில் யாருக்காவது காரைக்கால் அம்மையாரைப்பற்றித் தெரியலைன்னா இங்கேபாருங்க. பதிவின் நீளம் கருதி நம்ம நடையில்  இங்கே இந்த முறை கதை சொல்லலை:(  அடிச்சுச்சொல்லணுமுன்னு  நாக்கு துடிக்குது. அப்புறம் ஒரு 'தனி'  வாசிக்கலாம்)

 நன்றி விக்கியண்ணன்.


சந்நிதிகள் ரெண்டும்  ஒரு மூலையில் இருக்க , இந்த இடம் ஒரு பெரிய  ஹால் போல பரந்து கிடக்கு.  ஒரு பக்கம்  மேடை.  ,  ஆஹா....   ஆன்மிகச் சொற்பொழிவு, திருமணம் போன்ற  நிகழ்ச்சி, விசேஷங்களுக்கான அரங்கம்.  என்ன ஒரு ஐடியா !!!  இப்படி இந்த ரெண்டு இடத்துக்கும் நடுவில்  குளம் அமைச்சது!  குளத்து நேரடியா வர  ஒரு பெரிய  கம்பி கேட் தெருவைப் பார்த்தபடி.  சாமி கும்பிட வேணாமுன்னா  நடக்கவாவது வந்து போன்னு சொல்றமாதிரி இல்லே?



சாலையின் எதிர் சாரியில்  இன்னுமொரு கோவில். அஞ்சு நிலை கோபுரத்துடன்  ஸ்ரீ கயிலாசநாத சுவாமி திருக்கோவில். சாலையைக் கடந்து போகலாமான்னு  நினைக்கும்போதே  மேள வாத்தியம்  கேட்டுச்சு. ஆஹா... அலங்காரம் முடிஞ்சுருச்சு போல ! அங்கே ஓடினேன்.  பெருமாள் தாயார்களுடன் ஜொலிக்கிறார்.  கோஷ்டி சொல்லி தீபாரதனை முடிஞ்சதும்  ஆரத்தியை கண்ணில் ஒத்திக்கிட்டுக் கிளம்பினோம்.



தலைமைப் பட்டர் திரு ரங்கநாதன் அவர்களிடம் கோவிலைப்பற்றி எழுதப்போறேன். உங்கள் படம் போடலாமான்னு அனுமதி கேட்டதுக்கு, தாராளமாப் போடுங்க. நீங்க சொல்லாமலே போட்டாலும் எனெக்கென்ன தெரியவா போகுதுன்னு சொல்லிச் சிரிச்சார்.  ரெங்கனின்   முத்தங்கி படம் ஒன்றையும் கொடுத்து வாழ்த்தினார்.

 அழகா  ..  தோ..... வந்துக்கிட்டே இருக்கேன்.   பரிமளன்  செஞ்சதுபோல  கதவைச் சாத்திராதே......

ஆமாம்...பெரிய திருமங்கைன்னு நினைப்பு!

தொடரும்.........:-)


அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்து(க்)கள்.


35 comments:

said...

காரைக்கால் பற்றிய தகவல் தெரிவித்தமைக்கு நன்றி

said...

//மூணுமுறை கண்ணால் சுத்திட்டு//
நல்ல உடல் பயிற்சி. இன்னும் மூணு முறை சுத்தியிருக்கலாமே?

said...

'தள' பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

படங்கள் அருமை...

அறிவிப்பு பலகை பலருக்கும் உதவும்...

said...

புஷ்கரணி சந்திர தீர்த்தத்துல தண்ணீயப் பாக்கறப்பவே சந்தோஷமா இருக்கு. ஆலயத்துக்கு உங்களோட சேர்ந்து தரிசனம் செய்த எஃபெக்ட் கிடைச்சுட்டுது எனக்கு. உங்களுக்கு என் மனம் நிறைந்த மகளிர்தின நல்வாழ்த்துகள்!

said...

அப்போதைக்கு இப்போ சொல்கிறேன். வாழ்த்துகள் நோய் நொடியில்லாமல் இருவரும் நன்றாக இருக்கணும்.
அத்தனை படங்களும் வர்ணனையும் அமிர்தம்.

அந்த நாள் ஹரப்பாவுலயே 5000 வருஷங்களுக்கு முன்னால் மூடியிட்ட ட்ரெயினேஜ் சிஸ்டம் இருந்ததாம்.
நாம்தான் கற்கால மனிதர்கள்:(


அன்பு நிறைந்த மங்கையர் தின வாழ்த்துகள் மா.

said...

முத்தங்கி சேவையில் படத்துலயே இவ்ளோ அழகா இருக்கானே.. நேர்ல பார்த்த கண்கள் புண்ணியம் செஞ்சவைதான்.

செல்ஃப் ஷூட் அபாரம் :-)))

கோயிலும் புஷ்கரணியும் ரொம்பவே சுத்தமா அழகாருக்கு.

said...

சுத்திவர கல்பாவிய தரையும் ஒழுங்கான படிக்கட்டுகளுமா அருமை. நடுவிலே ஒரு நீராழி மண்டபம். நடைப்பயிற்சி செய்ய வர்றவங்களுக்கு நடந்த தூரம் தெரியும் வகையில் ஒரு தகவல் பலகை. மூணுதரம் சுத்துனா ஒரு கிலோ மீட்டர்!//

ஆஹா! அருமை. இப்படி எல்லா ஊர் குளக்கரைகளை சுத்தம் செய்து நடைப்பயிற்சி செய்ய அறிவித்தால் குளக்கரையை இயற்கை உபாதைகளை தீர்க்கும் இடமாக மாற்ற மாட்டார்கள் மக்கள்.
உடலும் நலம் பெறும், ஊரும் நலம் பெறும்.
மகளிர்தின வாழ்த்துக்கள்.

said...

ஸப்த கருட சேவைத் திருவிழா இதுவரை கேள்விபட்டதில்லை.

புஷ்கரணி மிக அழகாக இருக்கு.

கோவில் மற்றும் பெருமாள் படங்கள் அனைத்தும் மிக அருமை.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாருக்கும்,பதிவுக்கும்.

said...

துளசி தளத்தின் பிறந்தநாள் , தங்கள் துணைவரின் பிறந்தநாளுக்கு இனிய நல்வாழத்துகள்...


பெருமாள் தாயார்களுடன் ஜொலிக்கும் அருமையான கோவிலைக்காட்சிப்படுத்தியதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

மகளிர்தின வாழ்த்துகள்...

said...

wishes for both of you . இருவரின் போட்டோ சூப்பர்
சதரூபை ,ஸ்வாயம்புவ மனு வையும் சந்தித்ததில் மகிழ்ச்சி .
படங்களும் விவரங்களும் அருமை . படு சுத்தமான குளம் ,சுற்றி வர நடைபாதை .
இதற்காகவே வாக்கிங் போகலாமே !!


//காரைக்கால் அம்மையார் யாருன்னு கேட்டால்.... பனிரெண்டு அவதாரங்களில் ஒன்னுன்னார் // ப்ச் :(

காரைக்கால் அம்மையார் பற்றி தெரியும்னாலும் உங்க ஸ்டைல்ல படிச்சா இன்னும் சுவாரஸ்யம் கூடுமே .
மகளிர் தின வாழ்த்துக்கள் .

said...

காரைக்கால் கோயில்களும் வீடுகளும் நன்றாக இருக்கின்றது.

வாழ்த்துகள்.


விடுபட்டதை படித்துக்கொள்வேன்.

said...

மூணு முறை கண்ணால் சுத்தி.... :)))

சிறப்பான கோவில் பற்றிய தகவல்கள்.... மற்றும் அருமையான படங்கள்.

தொடரட்டும் பயணப் பகிர்வுகள்.

said...

தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_9.html ) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

said...

புஷ்கரணியின் - சுத்தம் ஆச்சர்யம்+சந்தோஷம்.

கோவில் அழகு. தளத்துக்கும் சாருக்கும் நேற்றுதான் பிறந்தநாளா.... பிறந்தநாள் வாழ்த்துகள்.

காரைக்கால் அம்மையார்னா கே பி சுந்தராம்பாள்தான் நினைவுக்கு வர்றார்!

said...

கோவிலின் சிறப்புகளும், படங்களும் அருமை.
புஷ்கரணியின் அழகும், சுத்தமும் கண்ணைக் கவர்கிறது.

முத்தங்கி சேவை தரிசனத்துக்கு நன்றி.


said...

என்னாது நம்மூரு போலீசு போலருக்கேனு பாத்தா அட, காரைக்காலே தான்!

ரிசார்ட்டெல்லாம் வந்துருச்சா இப்போ? பலே.

படங்கள் பிரமாதம். ஊர்க் கோவில்கள் இத்தனை சுத்தமா இருக்கிறதா, இல்லே சுத்தமான இடங்களை மட்டும் படம் பிடிச்சீங்களா? எப்படியிருந்தாலும் சரி, விவரம் நிறைய பழைய நினைவுகளைக் கிளறிவிட்டிருச்சு. காரைக்கால் மில்க் சொசைடிலே உலகத்துலயே சிறந்த பசும்பால் சூடா காய்ச்சி சர்க்கரை போட்டு குடுப்பாங்க.. இப்ப இருக்குதா தெரியலே.

(பன்னிரண்டாவது அவதாரம் இல்லேன்னு உங்களால நிரூபிக்க முடியுமா? வாத்தியார் என்ன சொன்னாலும் ரைட்டா, கதையா இருக்குதே?)

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

வாங்க கவிஞரே!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இன்னும் மூணு கண்ணால் சுத்தலாமுன்னா....கால் வலி வந்துட்டா என்ன செய்யறதுன்ற பயம்தான்:-)))

அப்பதான் நாள் ஆரம்பிச்சுருக்கு. நாலு இடம் பார்க்க ஓடவேணாமா?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. பயணத்தில் இருந்ததால் பதிவு போடமுடியலையேன்ற குறையை நம்ம வல்லியம்மா நாச்சியாரில் தீர்த்து வச்சுட்டாங்க!

http://naachiyaar.blogspot.co.nz/2012/09/24.html

இவ்வளவு அன்பு கிடைச்சதே என்ன ஒரு கொடுப்பினை!!!

நன்றி வல்லியம்மா.

said...

வாங்க பாலகணேஷ்.

நீங்கெல்லாம் மனதில் கூடவே வர்றதாலேதான் பயணமும் பயமில்லாமப்போக முடியுது!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

சுத்தமே கடவுள்தானேப்பா. அதான் நல்லா இருப்பதைப்பார்த்தால் மகிழ்ச்சி கூடிப்போகுது.

உங்கள் அன்புக்கும் ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அறைக்குள்ளேயே எடுத்தது. Tripod கொண்டு போகலை:(

அதான் நம்ம மூளையைப் பயன்படுத்தி (???? !!) எடுத்த படம். ஐடியா ஒர்க்கவுட் ஆகிருச்சு:-)))

பெரும் ஆள் அழகுக்குக் கேக்கணுமா!!!!

said...

வாங்க கோமதி அரசு.

முதல்லே மக்களுக்கே நம்ம ஊர் நம்ம கோவில் நம்ம தெரு என்ற அன்பு இருந்தால் அதைச் சுத்தமா வச்சுக்கத் தோணும் இல்லையா?

மனவளர்ச்சி போதாது என்பதுதான் பெரிய குறை:(

said...

வாங்க ரமா ரவி.

நானும் முதல்முறையாகத்தான் ஸப்த கருடசேவை என்ற ஒன்னு இருக்குன்றதையே தெரிஞ்சுக்கிட்டேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. அரை வருசத்துக்குப்பின் சொன்னேன். அதுவும் வீணாகலை:-)))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அனைத்து வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

உங்க ஆர்வம் பார்த்தா ஒருநாள் கதாகாலக்ஷேபக் கச்சேரி வச்சுத்தான் ஆகணும் போல இருக்கே!!!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

டேக் யுவர் ஓன் டைம்!

நோ ஒர்ரீஸ்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

//மூணு முறை கண்ணால் சுத்தி.... :)))//


இப்படிச் சுத்தியும் உடம்பு இளைக்கலை :(

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க நடனசபாபதி ஐயா.

தங்கள் பார்வை துளசிதளத்தில் விழுந்தது எனக்கு அளவிலா மகிழ்ச்சி தந்தது.

நன்றிகள்.

said...

வாங்க ஸ்ரீராம்.

வாழ்த்துகளுக்கு நன்றி. கிடைக்கணும் என்பது கிடைக்குது பாருங்க:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தங்கள் வருகையும் கருத்தும் மனமகிழ்வைத் தந்தன.

நன்றி.

said...

வாங்க அப்பாதுரை.

வராதவுங்க வந்துருக்கீங்க.... கையும் ஓடலை காலும் ஓடலை!!

நாங்கள் பார்த்த அந்த நிமிசம் கோவில் சுத்தமாத்தான் இருந்தது. இன்னும் மக்கள் நடமாட்டம் ஆரம்பிக்கலை பாருங்க:-)))

கொசுவத்தி ஏத்தும் பழைய நினைவுகளை
அப்படியே கண்ணைமூடி கவனிச்சால்..... அட! என்னவெல்லாம் நடந்துருக்குன்னு பிரமிப்பு வருதுல்லே?

இன்னும் நாலைஞ்சு ரிஸார்ட் இருப்பதாக் கேள்வி. ஆரோக்கிய மூலிகை எண்ணெய் மஸாஜ் கூட இருக்கு!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

கொசு வத்தி நீங்கள் ஏத்தி வச்சது, என் தப்பில்லை :)

காரைக்காலில், அந்த ஊர்ல பிறந்த Vassane Govindarajene எப்படி இருக்கான்னு யாரும் கேட்கலயா :) பிறந்தநாள் சான்றிதழில் என் பெயர் அப்படித்தான் இருக்கு. நான் பிறந்த போது காரைக்காலில் கைராசிக்காரரான பிரசவ மருத்துவர் இருந்ததனால் அங்கு பிறந்தேன்! சான்றிதழில் ஃப்ரெஞ்சில் மேலுள்ள மாதிரி பெயர்.

பல வருடங்களுக்கு முன்பு என் முன்னோர்களில் ஒருவரான சீனிவாசன் என்பவர் பெயரில் சீனுவாச பண்டகச்சாலை எனும் கிடங்கு கடற்கரை சாலையில் இருந்ததாம், காரைக்காலில். கப்பல் வணிகர் அவர். 20 வயது அளவில் கடலில் காலரா வந்து இறக்க, கடலிலேயே முடிந்தது அவர் கதை.

விதவையான அவர் மனைவி - என் தாத்தாவின் அத்தை, அவருக்கு அப்போது வயது 12. சிறுமி. என் தம்பி பிறந்த 1963 ல் 90+ வயதில் இறந்தவர்.

திருக்கண்ணபுரம் பற்றி நேரம் கிடைக்கும் போது உளறுவேன்.

said...

வாங்க வாசன்.

உங்க உளறலுக்குக் காத்திருக்கின்றேன்.

நல்லாரொவர் உளறேல்....... னு சொல்லி வச்சுருக்கார் நம்ம 'தாடி':-)