Friday, March 01, 2013

பயணத்தினிடையில் பதிவர் (குடும்ப) சந்திப்புகள்!

நாங்க சண்டிகரிலிருந்த சமயம், ஒரு நாள்  அபி அப்பா சேட் லைனில் வந்தவர் தங்கம் பார்த்தீங்களான்னு கேட்டார்.  பார்த்தேன்.ஆனால் வாங்கிக்கலை. விலை கூடி இருக்குன்னேன்.  அந்தத் தங்கமில்லை இது  டிவி சீரியல் என்றார். டிவி  சீரியல்ஸ்  எல்லாம் பார்க்கறதில்லைன்னதுக்கு, குலசேகரனை பாருங்க டீச்சர்.  எதுக்கெடுத்தாலும்  ஒரு அலட்டல் நடிப்புன்னார். சரின்னு சொல்லிட்டுப்  பேசாம இருந்துருக்கலாம். விதி யாரை விட்டது?  எத்தனை மணிக்கு வருதுன்னு கேட்டு வச்சேன்.

எட்டரை மணிக்கு டீச்சர்ன்னார்.  எந்த சேனல்?   சன் டிவி தான். என்ன டீச்சர் இதுகூடத் தெரியாம இருக்கீங்க. குலசேகரனைப் பார்த்துட்டு அந்தாள் நடிப்பைப்பத்திச்  சொல்லுங்கன்னு அப்பாவியா கொளுத்திப்போட்டார். அப்ப இது கொளுத்தல்னு எனக்குத் தெரியலை:(

தினமும் மாலை 7 மணிக்குத்தான் கோபால் வேலையில் இருந்து வருவார். உடனே கிளம்பி  நம்ம சண்டிகர் முருகன் கோவிலுக்குப்போயிட்டு அப்படியே   கடைக்கும்போய் காய்கறி பழங்கள் வாங்கியதும் வீட்டுக்கு வரும்போது  மணி  எட்டு எட்டேகால் ஆகிரும்.  ரொம்ப லேட்டால்லாம் வரமாட்டோம். ட்ரைவரும் காலை ஏழு முதல்  வேலை ஆரம்பிக்கும்போது அவரும்   வீட்டுக்குப்போய் ஓய்வெடுக்க வேணாமா?

எட்டரை  நினைவுக்கு வராதேன்னு வந்தவுடன்  டிவியைப் போட்டு வைப்பேன்.  அப்ப வேறு எதோ ஒரு சீரியல் போய்க்கிட்டு இருக்கும்.  அதுலே ஒரு கண் வச்சுக்கிட்டே  சாப்பிட ரெடியாவோம். தங்கம் ஆரம்பிச்சதும் குலசேகரன் வர்றாரான்னு பார்ப்பேன்.  என்னென்னவோ நடக்குது. குலசேகரன் என்ற கேரக்டரைக்  மட்டும் காணோம்.  இளவஞ்சின்னு ஒரு பாத்திரம் சிலசமயம் அசடு போல, சிலசமயம் அப்பாவி, சில சமயம் பெருமைப்பீத்தலோடு  அலைவதுன்னு  நாளுக்கொன்னாய்  வர்றாங்களே தவிர அந்த குலசேகரனைக் காணோம்.

அபி அப்பாவிடம் சேட் லைனில் கேட்டால்...உங்க அதிர்ஷ்டம் இந்த வாரம் குலசேகரன் வரவே இல்லை டீச்சர். கட்டாயம் திங்கக்கிழமை பாருங்க வருவார்னு  அடிச்சுச் சொல்றார். இந்த ஒரு வாரத்துலேயே    இந்த ரெண்டு தொடரிலும் இருக்கும் மக்கள்ஸ், கதை(??!!) எல்லாம் புரிய ஆரம்பிச்சது.

மாமியார் மச்சினன் கொடுமை, புள்ளைத்தாய்ச்சிப்பொண்ணை அடிச்சு விரட்டுனது ஒரு பக்கமுன்னா..... ரெண்டு பொண்டாட்டிகளை ஞாயப்படுத்திக்கிட்டு  இன்னொண்ணு. காசுக்கு நாலு கலெக்டர்கள்  விக்கறாங்களா என்ன?  குடும்ப ரகசியங்கள் ரெண்டுவச்சுருக்கோமுன்னு  நாச்சியாரம்மா கோடிகாட்டிக்கிட்டே இருக்காங்க:-)

நம்ம கோபாலுக்கு  பகலுணவு  நேரம் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் ராத்திரி  சாப்பாடு டாண்னு எட்டரைக்கு வேணும். சாப்பாட்டின் ருசியை மறக்க இப்போ டிவி ஆப்டுச்சுன்னு  பார்த்துக்கிட்டே சாப்பிடப்போக ... கொஞ்சம் கொஞ்சமா இந்த ரெண்டு சீரியலும் நம்மைக் கொக்கி போட்டு இழுத்துருச்சு. அப்படியும் சில நாட்கள் பயணத்தின்போது பார்க்காமல்தான் இருந்தோம். ஒரு பெரிய கொடுமை என்னன்னா..... விளம்பரங்கள்.   ஒரு விளம்பரத்தை  ஒரு முறை காமிச்சு விட்டுடமாட்டாங்க.  சுவத்துலே ஆணி அடிச்சு இறக்குறமாதிரி  திருப்பித்திருப்பி  இடைவெளிவிடாமப்போட்டு  நம்ம மண்டையில் அடிச்சு அடிச்சு......    கழுத்துக்கு  மேலே தலைமுடியைக் கொத்தாப்பிடிச்சுக்கிட்டு  நுனிப்பகுதியை  விலுக் விலுக்குன்னு  பிடிச்சு  இழுத்து காமிப்பாங்க  பாருங்க ..... உறுதியான முடியாம் !!!   போதுமடா சாமி!

இந்தியாவை விட்டு நியூஸி திரும்புனதும் சல்லியம் விட்டுச்சுன்னு நிம்மதியா இருந்தேனா.....  நம்ம கோபாலுக்குப் பிடிக்கலை:-) வலையில் அங்கெ இங்கென்னு தேடி தமிழ் டிவி ஷோன்னு  ஒரு இடத்துலே எல்லா டிவி சீரியலும் வருதுன்னு சொல்லி அந்தப் பக்கத்தை காமிச்சார்....  புத்துக்குள்ளே இருந்து ஈசல் வர்றது மாதிரி விதவிதமான பெயர்களில்  கொட்டிக்கிடக்கு. தேடித்தேடி அந்த ரெண்டையும் கண்டு பிடிச்சுட்டார்.   நமக்கு அம்பது ஜிபி  வேற இருக்கே, அதை ஏன் பாழாக்கணுமுன்னு  மீண்டும் குழியில் விழுந்தோம். என்ன ஆறுதலுன்னா....  விளம்பரத்தொல்லை  இல்லை:-)))  நமக்கிஷ்டமான நேரத்தில் பார்த்துக்கலாம், ஒரு நாள் தள்ளி.  அதே எட்டரைக்கு  இங்கேயும் சாப்பாடு  ப்ளஸ் டிவி சீரியல்.  (நல்லவேளை  ஒரு அபத்தம்  முடிஞ்சு தொலைஞ்சது. இன்னுமொன்னு விரைவில்முடியப்போகுதாம். நல்ல சேதி.  ஆனால்புதுசா ஒன்னையும் கோபால் புடிச்சுக்காம இருக்கணுமே! )

இதுக்கெல்லாம் மூல காரணம் யாருன்னு  ஆராய்ந்தால்....   கொலைவெறி வராமல் இருக்குமா? ஞாயமா எனக்கு வரவேண்டியது ,கோபாலுக்கு வந்துருச்சு, அபி அப்பாவை சந்திக்கணும் என்ற வெறி:-))))

சரியா அரைமணி நேரத்துலே  காளியாகுடி கண்ணில் பட்டது. பல பதிவுகளில்  பார்த்துருக்கேன். கட்டாயம் போய்ப் பார்க்கணும். சின்னக்கடைவீதி நோக்கிப்போறோம். இதுக்கிடையில்  நாலைஞ்சு முறை செல்பேசியில்  வழிகள் கேட்டு உறுதி செஞ்சுக்கிட்டோம்.  சித்தி விநாயகர் ஆலயத்தில்  இருந்து ஒரு அஞ்சாறு நிமிசப்பயணத்தில்  அபிஅப்பா வீட்டை அடைஞ்சோம்.  நமக்கு அப்பப்ப செல்லில் வழி சொல்லிக்கிட்டே இருந்த அபி அம்மா  வழியில் எதிர்கொண்டு வந்து வரவேற்றார்கள்.  திருக்கடையூரில் சந்திக்கறதாச் சொன்ன அபி அப்பா  அட்லீஸ்ட்  வீட்டுக்கு வந்துருப்பாருன்னு நினைச்சேன்.  அவர்  சென்னையில்!  வேறொரு வேலை விஷயமாப்போனவர்  இன்னும் திரும்பலையாம். தப்பிச்சார்னு வையுங்க:-)))))

ஆனால்... அபி அம்மாவுக்கு நம்ம வரவைச் சொல்லி பக்காவா எல்லா ஏற்பாடும் செஞ்சுருந்தார்னு சொல்லணும். அபி அம்மா கூடவே நம்ம நட்டுவும்  தன்  இரு சக்கர வாகனத்தில் ஸ்டைலா  வந்து நம்மை வரவேற்றார். அபி அம்மாவைப் பார்த்தவுடன்.... சட் னு எங்கியோ ரொம்ப  நெருக்கமாத் தெரிஞ்ச   உணர்வு.  என்  வாய் மட்டும் நிக்காம  பேசிக்கிட்டே இருந்தாலும்  எங்கே, யார் னு மனசுலே ஒரு ஓட்டம் அலைபாயுது.

கண்கொட்டாமல் பார்த்துக்கிட்டே இருக்கும்போது, ஒரு சின்ன தலை அசைவில் பிடிபட்டது பதில்.  அக்கா! என் பெரியக்கா. ஆமாம்  அப்படியே என் பெரியக்காவேதான்! அப்படியே பொறுமையான பேச்சு.  மூக்கில் ஜொலிக்கும்   அஞ்சு கல் தொங்கட்டான் மூக்குத்தி. மனசே என்னிடம் இல்லை. அக்கா வீட்டுலே உக்கார்ந்திருக்கேன்....  ஒருவேளை அக்காதான்  மறுபிறப்பில் அபி அம்மாவோ!!!!

புது ஆட்களைப் பார்த்த மிரட்சி துளி கூட இல்லாமல் நட்டு வந்து ஒட்டிக்கிட்டு ஆட்டம் பாட்டம் டிவின்னு இன்னொரு பக்கம். அழகான அம்சமான வீடு. அபி அம்மாவின் டிஸைன் & கட்டுமானம். என்ன இருந்தாலும் சிவில் எஞ்சினீயர் இல்லையா!   படிச்ச கர்வம்  இக்கினியூண்டு முகத்தில் காட்டினால் என்னவாம்? ஊஹூம்......

கீழே ஹால்,கிச்சன், பூஜை அறை, ஒரு பாத்ரூம். எனக்கு ரொம்பப்பிடிச்ச வகையில்   மாடிப்படிக்கட்டு  ஹாலின் ஓரமா மேலே போகுது. மாடியில்   ரெண்டு படுக்கை அறைகள். குட்டியா ஒரு பால்கனி. அங்கே சின்னதா ஒரு மண் தொட்டியில் நான் இருக்கேன்னு நினைக்கிறேன். ஒருவேளை அது மல்லியோ? :-)

வீட்டுக்கு எதிரே  காலியா ஒரு பெரிய இடம்.  அநேகமா அக்கம்பக்கத்துப் பசங்க இதை க்ரிக்கெட்  மைதானமா ஆக்கிருவாங்க.  வெட்டவெளியா இருப்பதால் காத்து அப்படியே பிச்சுக்கிட்டுப்போகுது.    வீட்டு முன்கதவையொட்டி  கம்பிகிராதி போட்டு நடுவில்  அகல கேட் வசதியுடன்  ஒரு  இடம். போர்ட்டிகோ .  ஒரு ஓரமா திண்ணை!  முன்வாசக்கதவுக்குமே படிக்கட்டு  நேரா இல்லாம பக்கவாட்டுலே இருக்கு.

புழக்கடையிலும் வீட்டுப்பக்கவாட்டிலும்  கொஞ்சம் வாழைமரங்களுடன் இன்னும் சில மரங்கள்.  திண்ணைப்பகுதியில் மர நிழலும் காற்றுமா ஒரே ஜில்:-)

ஸ்பெஷல் க்ளாஸுக்குப்போன  அபி வந்ததும் இன்னொரு உற்சாக வெள்ளம் பொங்கிப் பெருகியது என்பதே உண்மை.  ஹை அபி!  பேச்சே  எங்கள் மூச்சாகிப் போச்சு.  எத்தனை பதிவர் சந்திப்பு நடந்த ஹால் அது  தெரியுமோ? சாப்பிட உக்கார்ந்தோம்.  தலைவாழை இலையில்   விருந்து!  பரிமாறும் ஸ்டைல்கூட  பெரியக்காவேதான்!  எனக்கு ரொம்பப்பிடிச்ச  புடலைப்பொரியல் சூப்பர்!!!!

எங்களோடு கூடவே சாப்பிடுங்கன்னு நாங்க  வருந்திக்கேட்டுக்கிட்டாலும் கூட  பரிமாறிட்டு அப்புறம் சாப்பிடறேன்னு (பெரியக்கா ஸ்டைலில்)  சொல்லிட்டாங்க.  நட்டு சாப்பாடு இருந்த பக்கமே திரும்பிப் பார்க்கலை.  ஒரே விளையாட்டுதான்.

நம்ம சீனுவாசனுக்கும் சேர்த்தே சமைச்சுருந்தாங்க அபி அம்மா.  இது தெரியாம நாங்க வழக்கம்போல் சீனுவாசனை சாப்பிட அனுப்பி இருந்தோம்.  எங்க சாப்பாடு ஆனதும் தெருக்கதவுப்பக்கம்  மேடையில் ஒரு நாற்காலியைப்போட்டுக்கிட்டு  ஜாலியா காத்துவாங்கிக்கிட்டு இருந்தார்  கோபால். நானும் அபியும் திண்ணையில் உக்கார்ந்து கதை அடிச்சோம்.

நல்ல மெச்சூரிட்டி இருக்கு அபிக்கு. பயங்கர ஸ்மார்ட்.  மேன்மேலும் நல்லாப்படிச்சு  நல்லா இருக்கணும். அம்மாவுக்கு உதவியாகவும் அனுசரணையாவும் இருப்பதைப் பார்த்து எனக்குப் பெருமையா இருந்துச்சு.  தம்பி மேல்  அப்படி ஒரு பாசம்!

அடிக்கும் சிலுசிலு காத்துக்கு அப்படியே தூக்கம் வந்து கண்ணைக்கட்டுது கோபாலுக்கு. ஊஹூம் தாங்காது. நமக்கு இன்னொரு பதிவர் சந்திப்பு(ம்) இந்த ஊரில் இருக்கே!  கிளம்பினால் சரியா இருக்கும்.  அன்று மாயூரத்தில் தங்குவதாக  ஒரு திட்டம். ஆனால்  இடத்தை முடிவு செய்யலை.   ராத்திரி  வீட்டில் பலகாரம் சாப்பிட வந்துருங்கன்னு கண்டிப்பாச் சொன்னாங்க அபி அம்மா.

அதெல்லாம்  ரொம்ப மெனெக்கெடாதீங்க. கோவில்களைப் பார்த்துட்டு நேரம் இருந்தால் அப்புறமா உங்களுக்கு செல்லில் சொல்றேன்னு பிரியாவிடை பெற்றோம். நட்டுவுக்குத்தான்  கண்ணில் மளமளன்னு கங்கை. இங்கேதான்  இருக்கப்போறோமுன்னு  நினைச்சுக்கிட்டு இருந்துருக்குக் குழந்தை.  முதல்முறை பார்ப்பவர்களிடம் இவ்ளோ பாசமா??  நல்ல அழகான குடும்பம். அபி அப்பா ரொம்பவே கொடுத்து வைத்தவர்.

நியூஸி திரும்பியதும் , அபி அப்பாவுக்கு எழுதிய கடிதம் இது:- )
======================================================================
அன்புள்ள அபி அப்பா,

வணக்கம்.

மாயூரத்தில் உங்கள் வீட்டு உபசரிப்பு அபாரம். அபிஅம்மாவைப் பார்த்ததும் எனக்கு என் பெரியக்கா நினைவு வந்துருச்சு. அதே ஜாடை. அதே பொறுமை. நடை உடை எல்லாம்!!!!!!! மூக்குத்தி கூட அதே ஸ்டைல்!!!!!  சமையல் கூட  அக்காவின் கைப்பக்குவம்தான். சட்னு என் சிறுவயதுக்குப் போயிட்டமாதிரி இருந்துச்சு.

அதிலும் அவுங்க ரொம்ப இயல்பா சாப்பாடு பரிமாறிக்கிட்டே பேசிக்கிட்டு இருந்தது  என்னை எங்கியோ கொண்டு போயிருச்சு. இந்த அனுபவத்துக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்????

குழந்தைகள் நல்லா இருக்காங்க.  நட்டு ரொம்ப  காஷுவல். புது முகம் என்ற  மிரட்சி ஒன்னும் இல்லை:-))))

அபி பயங்கர கெட்டிக்காரப்பொண்ணு. நல்ல ஸ்நேகமுள்ள பெண்ணாக வளர்த்தி இருக்கீங்க. எனக்கு என்னமோ எங்க அக்கா வீட்டில் இருப்பதுபோல்தான் இருந்துச்சு அன்னிக்கு. கோபால் காது புளிக்கும்வரை சொல்லிக்கிட்டே இருந்தேன்.

நேரப் பற்றாக்குறையினால் அன்று மாயூரத்தில் தங்க இயலாமல் போச்சு. .

பயணம் முழுசும் அபிஅம்மாவின் நினைப்பு வந்துக்கிட்டே இருந்துச்சு. இந்தப் பயணத்தில் ஒரு முறை விழாவுக்கு முன் ஒரு சின்ன நகைக்கடையில்  (அபிஅம்மா போட்டுருக்கும்) நாலு முத்து மூக்குத்தியை எடுத்துப் பார்த்துட்டு வேணாமுன்னு வச்சுட்டு வந்தவள் பயணம் முடிச்சு சென்னை திரும்புனதும் ஓடிப்போய் அந்த மூக்குத்தியை வாங்கிக்கிட்டேன். அக்காவின் அண்ட்  அபி அம்மாவின் நினைவா இருக்கட்டுமேன்னு!

என் அன்பும் ஆசிகளும் உங்கள் குடும்பத்துக்கு எப்போதும் உண்டுன்னு சொல்லி மடலை முடிக்கிறேன்.

===========================================================

திருமதி பக்கங்கள் கோமதி அரசு அவர்கள் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.  மாயவரம் ரயில்வே லைனுக்கு  மேல் ' த  ஃபேமஸ் மேம்பாலம்'   கடந்து போறோம். கயல்விழி  முத்துலட்சுமியின் பதிவில் இதைப்பற்றி மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதி இருப்பாங்க.  கோமதி அரசு அவர்கள் செல்லில் சொன்ன வழியை தவறவிட்டு நேராப்போனபோது கண்ணில் பட்டது  சீகாழி ஸ்ரீ சிற்றம்பல  நாடிகள் திருக்கோவில் சித்தர்க்காடு. அச்சச்சோ...காட்டுக்கு வந்துட்டோமேன்னு திரும்ப அவங்களோடு செல்லில் பேசி சரியான வழியைக் கண்டுபிடிச்சுப்போய் சேர்ந்து  வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தும்போதே  எதிர்கொண்டு வந்து மலர்ந்த முகத்துடன் வாங்க வாங்கன்னு வாய் நிறையக் கூப்பிட்டாங்க.

மாடியில் இருக்கும் வீட்டுக்குப்போனோம்.  யானைப்படையும்  குதிரைப்படையும் புடை சூழ  புள்ளையார் வரவேற்கிறார்!  வீட்டில் ஒரு அறை முழுக்க பொக்கிஷம்!  நாலைஞ்சு அலமாரிகள் நிறைய....  ஆஹா.......

நேரம் மட்டும் இருந்தால்பேசாம அங்கேயே டேரா போட்டுருப்பேன்.  முழுசும் வாசிக்க முடியாதுன்னாலும் ஒவ்வொரு தலைப்பையும் பார்த்து ஆனந்திக்கலாம். நூத்தியொரு வயசான புத்தகம். தொடவே பயமா இருக்கு:(  நொறுங்கிபோச்சுன்னா!!!!!!!!!


குடும்பமே பல தலைமுறைகளாக  தமிழ்ப்பேராசிரியர்களால்  நிறைஞ்சு வழியுது. திரு. திருநாவுக்கரசு அவர்களும் சமீபத்தில் தான்  தமிழ்த்துறைத் தலைவராக  (பூம்புகார் கல்லூரி) இருந்து பணி ஓய்வு பெற்றுள்ளார்! இந்தத் தம்பதிகளைப் பற்றிய சுவாரசியமான கூடுதல்  தகவல், சிறுமுயற்சி கயல்விழி முத்துலெட்சுமியின் பெற்றோர்!

கயிலை தரிசனம் முடிச்சுவந்த தம்பதியர். இவர்களை வணங்கினாலே  கயிலை போய் வந்த புண்ணியம் கிடைச்சுரும். மானசரோவரில்  இருந்து கொண்டு வந்த  சிறு கற்களைப் பார்த்தேன். கல்பைத்தியமான மகள்  கூட வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பாள்.

கோமதியின்  'அரசரின்' கைவண்ணம் வீட்டுக்கலைப் பொருட்களில்!  அம்மனின் அழகு கொஞ்சும் முகம் அசரடிக்கிறது!  எல்லாம் இவர்  கைவரிசைதான்!

கண்ணும் மனமும் நிறைஞ்சு இருந்தவளை அப்படியே விட்டுடாமல்   இனிப்பு வகைகளும் நொறுக்கு வகைகளும் கூடவே அருமையான ஃபில்ட்டர் காஃபியும் கொடுத்து  ஒரு விழாவே நடத்திட்டாங்க.  பெரும்பேறு!  மொய் இல்லாத (மணி)விழாவா? கிடைச்சதே!!!!



லௌகீக வகையில்  தேவன் எழுதிய சீனுப்பயல், புதுமைப்பித்தன் சிறு கதைகள் தொகுப்பு! இந்த ரெண்டுமே நான்  வாசிக்காததால்... ரெட்டிப்பு மகிழ்ச்சி!  மெனெக்கெட்டு, பக்காவா லேபிள் எல்லாம் ஒட்டி  சிரத்தை எடுத்தது பார்த்து மனசு அப்படியே நெகிழ்ந்து போச்சு.

ஆன்மீக வரிசையில்  அபிராமி அந்தாதி,  குடும்பப் பெரியவரின் (திருநாவுக்கரசின் தந்தை) நூற்றாண்டு விழா மலர், கோமதி & திருநாவுக்கரசின் மணிவிழா மலர்  என்று மற்றுமொரு அரிய பரிசு. கயிலை பிரசாதங்கள், படங்கள் , கங்கைத்தீர்த்தம் என்று இன்னுமொரு பரிசு.

சுமக்கமுடியாமல் அவர்களின் அன்பையும்,பரிசுகளையும்  மனதிலும் கைகளிலும்  ஏந்தி பிரியாவிடை பெற்று  உள்ளூர்  உயர்மட்ட அதிகாரி  மயூரநாதரை தரிசிக்கக் கிளம்பினோம்.

தொடரும்.........:-)






68 comments:

said...

வாவ்.... பயணத்தினிடையில் பதிவர் சந்திப்புகள்....

கோமதிம்மாவை சந்தித்திருக்கிறேன் - தில்லியில்! :)

பயணம் தொடரட்டும். சுகமான நினைவுகளும் தான்.... :)))

said...

Nice to see my mayuram after almost an year...thanks a lot of writing about mayuram don't tell me that you haven't visited my parimala rangan :)

said...

பதிவர் சந்திப்பு வாழ்த்துக்கள்...

said...

வாசிக்கும்போதே நீங்க எவ்ளோ நெகிழ்ந்து போயிருப்பீங்கன்னு புரியுது. அருமையான குழந்தைகள். நட்டுவின் குறும்புகளையும் அபியையும் "அபிஅப்பா"வின் பதிவில் அனேக முறை வாசிச்சு ரசிச்சிருக்கேன்.

கோமதிம்மாவின் அரசரின் கைவண்ணத்தை அவங்க இடுகையிலும் கண்டதுண்டு. என்ன அருமையான அம்மன் முகம்!! அசத்தல்.

இந்த நாலுகல்லு மூக்குத்தியைத்தான் நெல்லைப் பகுதிகளில் 'நத்து'ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். எங்க சித்தியும் இதேதான் போட்டிருப்பாங்க. ஆடிக்கிட்டிருக்கும் முத்துகளை விசேஷ தினங்களில் சேர்த்துப் போட்டுக்கிட்டு மத்த தினங்களில் ஒத்தைக்கல்லு மூக்குத்தியாப்போட்டுக்கலாம். பார்க்க அருமையா இருக்கு.

said...

சாப்பாட்டின் ருசியை மறக்க இப்போ டிவி ஆப்டுச்சுன்னு பார்த்துக்கிட்டே சாப்பிடப்போக ...//

விலைக்கு வாங்கிய இஷ்ட்டமான் கஷ்ட்டம் ..

said...

சுமக்கமுடியாமல் அவர்களின் அன்பையும்,பரிசுகளையும் மனதிலும் கைகளிலும் ஏந்தி /

பதுவு முழுக்க அன்பின் கனத்தை உணரமுடிந்தது ..பாராட்டுக்கள்..

said...

ஆஹா எங்க ஏரியா விசிட்?!!!!!

சூப்பர் டீச்சர்

எங்க பேவரைட் சித்தி விநாயகரை போட்டோவாக்கியதற்கு ரொம்ப நன்றி !

சுட்டு வைச்சுகிடறேன் :)


said...

@ arun nishore

ஹல்லோ எப்டி இருக்கீங்க நலமா சுகமா? அப்பா அம்மா விசாரிச்சேன்னு சொல்லுங்க :)

ஊரு பக்கம் போயிட்டு வந்தீங்களா?

said...

இனிய சந்திப்பு... சுகமான கனம்...

வாழ்த்துக்கள்...

said...

முத்து மூக்குத்தினு சொல்வோம். நாலு கல் இல்லாமல் மூணு கல்லோடு நான் போட்டிருக்கேன். :))))

அபி அப்பா வீடு இருக்கும் பகுதியெல்லாம் நாலு வருஷத்துக்கு முன்னே பார்த்ததுக்கு இப்போக் கொஞ்சம் கூட மாறவே இல்லை போலிருக்கு. நாங்களும் அரை நாள் தங்கினோம். கத்திரிக்காய் வெங்காயம் போட்டுச் சிதம்பரம் கொத்சு, இட்லி, அப்புறம் இன்னும் என்ன என்னமோ செய்திருந்தாங்க. எங்களுக்குத் தான் சாப்பிட இன்னொரு வயிறு தேவையா இருந்தது. காலம்பர் உப்பிலியப்பன் கோயிலிலே கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுட்டுப் போயிருந்தோம். :))))

said...

நட்டு இப்போ வளர்ந்துட்டான். அபியும் பெரிய பெண்ணாகி இருக்கா/ :))) அபி அப்பா நீங்களும் அபியும் இருக்கும் படம் அனுப்பி வைச்சிருந்தார். :)))))

said...

Teacher Akka, Unga kudave nanum vandu anubachi madirye iruku. vazthukkal.

said...

படிச்ச கர்வம் இக்கினியூண்டு முகத்தில் காட்டினால் என்னவாம்? ஊஹூம்......//

நீங்கள் சொல்வது உண்மை துளசி. அருமையான அன்பான பெண் அபி அம்மா.

நீங்கள் அவ்வளவு பயண திட்டத்திலும் எங்களை மறக்காமல் எங்கள் வீட்டுக்கு வந்ததே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சாப்பாடு சாப்பிடவில்லையே என்று வருத்தம்.

said...

எங்கள் வீட்டுக்கு அன்பாய் வந்து அதை பதிவாக போட்டமைக்கு நன்றி.

said...

பதிவர் சந்திப்புகள் அருமை....

கோமதிம்மாவை இரண்டு முறை தில்லியில் சந்தித்திருக்கிறேன். பிரியமா பழகுவாங்க...ஐயாவும் தான். சென்ற முறை கயல் வீட்டுக்கு போனப் போது கோமதிம்மா புட்டும், ராகி சேவையும் சுவையா செய்து தந்தாங்க...அவர்களின் கயிலை தரிசனம் முடித்த கையோடு நாங்கள் சென்றிருந்ததால் எனக்கும் பிரசாதமும், கல்லும் தந்தார்கள்.

இந்த மூக்குத்திய தான் என்னுடைய மூக்கணாங்கயிறு பதிவில் அம்மாவின் முத்தும் தளுக்கும் என்றும் சொல்லியிருந்தேன். மூன்று கற்கள் அம்மாவோடது.


said...

அன்பின் டீச்சர்,

அபி அப்பாவைச் சந்தித்ததிலும் அவரது வீட்டைச் சுற்றிக் காட்டியதிலும் மகிழ்ச்சி. ரொம்ப அழகா இருக்கு.

வீட்டைச் சுற்றி நல்ல காற்றுன்னு சொல்லியிருக்கீங்க..அப்போ அபி அப்பா அங்கே எப்படியிருக்கார்? ;-)

இன்னும் சில டீவி நிகழ்ச்சிகள் இருக்கு...முடிஞ்சா பாருங்க டீச்சர்.. மனசை ரொம்ப இலகுவாக்கும்..

குட்டி சுட்டீஸ்
வட போச்சே
டொக் டொக் டொக்
கண்டிப்பாப் பாருங்க !

said...

ரீச்சர்

சும்மா கிளாசில் உட்கார்ந்திருக்கும் என் கையில் பிரம்பைக் குடுத்துடாதீங்க.

ஞாயம், ஆன்மீகம்ன்னு எல்லாம் எழுதினா அப்புறம் வாத்தி வேலை பார்க்க ஆரம்பிச்சுடுவேன்.

said...

உங்கள் ‘அக்கா’ தொடர் வாசித்திருக்கிறேன் என்பதால் பெரியக்கா மேல் நீங்கள் வைத்திருந்த பாசம் தெரியும். நடராஜ் நன்றாக வளர்ந்திருக்கிறான். இதுபோன்ற மூக்குத்திதான் என் பெரியத்தை அணிந்திருப்பார்கள்.

கோமதிம்மா, அரசு சார் இருவரையும் பெங்களூர் வந்திருக்கையில் சந்தித்திருக்கிறேன். இனிய சந்திப்புகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்:)!

said...

மிகவும் அருமையான குடும்ப சந்திப்புகள். படங்களை பார்க்கும் பொழுது நாங்களும் கூடவே இருப்பது மாதிரி இருந்தது.

said...

டீச்சர்! எப்படி பதில் போடுவதுன்னு தெரியலை!கிருஷ்ணாவுக்கு பிறந்த நாள் பரிசு இந்த பதிவுன்னு கூட சொல்லலாம். மிக்க நன்றி டீச்சர்! நான் கூட இது பத்தி பதிவு போட்டுட்டேன்!

said...

முதல்ல டீச்சருக்கும் சாருக்கும் ஒரு நலம் விசாரிப்பு...! ;)

அப்படியே என்னை 2007க்கு கூட்டிக்கிட்டு போயிட்டிங்க...அப்போ பார்த்து போலவே இருக்கு வீடு ;))

சந்தோஷம் மகிழ்ச்சி ;))

said...

நானும் மயிலாடுதுறை போகணும்!!

said...

ஆமா, அந்த "குலசேகரனிடம்" என்ன விசேசம் னு சொல்லாமலே விட்டுட்டீங்க! அபி அப்பா விபரம் சொல்லலைனு சொல்லிட்டு நீங்களும் சொல்லாமல் விட்டுட்டீங்களே! :-))

தங்கம் எல்லாம் முடிஞ்சிருச்சு இல்லையா? இன்னுமா நடக்குது?

இப்போ ஏதோ ராஜகுமாரி, வாணி ராணினு சண்ல ஏதேதோ ஓடுது.

ஒரு சில வடநாட்டு சீரியலை தமிழாக்கம் செய்து விஜய் டிவில வெளியிடுறாங்க.. என் கணவன் என் தோழனோ ஏதோ.. சுமாரா இருக்கு. அதையும் பாருங்க டீச்சர் :)))

said...

குடும்பப் பதிவா இருக்கெ. சந்தோஷம் ஆக இருக்கு துளசி. கிருஷ்ணா மாதிரி மனைவி கிடைத்தது அபிஅப்பாவின் பாக்கியம். அவரும் பதிவு போட்டு இருக்கார்.
இந்த மாதிரி உபசரிப்புகளால் மனம் நெகிழாமல் என்ன செய்யும்.
குழந்தைகள் என்ன சமத்து!!!!அபி அம்மா உபசாரம் உலகப் புகழ் பெற்றதாச்சே.நன்றாக இருக்கணும். கோமதிஅரசு குடும்பப் புத்தகங்கள் மலைக்க வைக்கின்றன,.
பாரம்பர்யம் மிகுந்த குடும்பம்.இது போலக் குடும்பங்கள் இன்னும் தழைக்கணும்.
உங்கள் பயணங்கள் மூலமா இத்தனை நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. கோபாலும் நீங்களும் நன்றாக இருக்கணும்.

said...

ஆஹா... இரண்டு பதிவர்களுடனும் நடந்த இனிய சந்திப்பை உணர்வுபூர்வமா நீங்க எழுதியிருக்கறதைப் படிச்சதும் மனசுல மகிழ்ச்சி பெருகிச்சு டீச்சர்! கூடவே கொஞ்சம் கோபமும்... நம்ம வீ்ட்டுக்கு மட்டும் இந்த துள்ஸி டீச்சர் வராம விட்டுட்டாங்களேன்னு...! ஹி... ஹி...

said...

Nice post... :)

said...

Nice post.. :)

said...

@ Aayilyan
கண்டிப்பா சொல்றேன்...நீங்க எப்படி இருக்கீங்க...வீட்ல எல்லாரும் நலமா.

ஊருக்கு மே மாசம் தங்கமணி கூட போனது அதுக்கப்பறம் இங்க US வந்தாச்சு.

said...

கிருஷ்ணா வின் உபசரிப்பு உலகப் புகழ் பெற்றது. நான் அதை நிறையவே பெற்றிருக்கிறேன் . அபி அப்பாவை விட கிருஷ்ணா எனக்கு நெருக்கம் ஆகிவிட்டாள் . நடராஜ் முதல் சந்திப்பிலேயே, அப்போது இரண்டு வயது என்னிடம் ஒட்டிக்கொண்டு விட்டான். அபி யை பற்றி எவளவு புகழ்ந்தாலும் தகும். மொத்தத்தில் மிக நல்ல குடும்பம், அவர்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்க மயூரநாதரும் , அபாயாம்பிகையும் அருளட்டும். அபி அப்பாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் கிருஷ்ணா

said...

சுவாரஸ்யம்.

said...

எப்போ தேவியர் இல்லத்திற்கு?

said...

பதிவு உலகம் எத்தனை நட்பையும், அன்பையும் பெற்றுத் தருகிறது!

திருமதி கோமதி மாயவரத்தில் இருக்கிறார்களா? தெரியாமல் போய் விட்டது. அடுத்தமுறை போது போகும்போது பார்த்துவிட்டு வருகிறேன்.

நீங்களும் நெகிழ்ந்து எங்களையும் நெகிழ வைத்துவிட்டீர்கள், துளசி!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோமதியம்மாவை கோபால் முத்துலெட்சுமி வீட்டில் ஒருமுறை சந்தித்திருக்கிறார்.

ஒரு நாலைஞ்சு வருசம் இருக்கலாம். அப்போ அவுங்க பதிவராகலை. மகளிடம் ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டு இருந்த காலம் என்று நினைக்கிறேன்.:-)

நினைவுகள் சுகமே!!!

said...

வாங்க அருண்.

மாயூரம் வந்ததே ரங்கனுக்காகத்தான்.

நூத்து எட்டு லட்சியம். அவனே அங்கெல்லாம் கூப்பிட்டுப் போவது நிச்சயம்.

இதுவரை ஒரு முப்பத்தியஞ்சு ஆச்சு.

ரொம்ப லேட்டா ஆரம்பிச்சுட்டோம்:( அதுவும் ஒவ்வொரு இந்தியப் பயணங்களில் ஒரு சில என்று.

பதிவர் கோபி ராமமூர்த்தி 97 பார்த்துருக்கார். நம்ம பதிவர் லதானந்த்தான் டாப் மோஸ்ட். 103 ஆச்சு!!!!

said...

வாங்க கோவை நேரம்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்த அபூர்வ நட்பு இணையமும் தமிழ்மணமும் தந்த கொடை!!

ஆமாம்... நத்துன்னா அது வளையம்போல் இருக்குமேப்பா!!

இதை தொங்கட்டான் மூக்குத்தின்னு சொல்வாங்களோ?

டூ இன் ஒன் ஐடியா அபாரம்:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஒரு காலத்தில் சாப்பாட்டுக்குத் தொட்டுக்க புத்தகம்தான். ஹாஸ்டல் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக்கிட்டது.

பாட்டி வீட்டுலேன்னா முதுகுத்தோல் உரிஞ்சுரும், அதென்ன சாப்பாட்டுக்கு மரியாதை இல்லாமல்னு!

பதிவர் சந்திப்புகளில் எல்லையில்லாத அன்பும் பரிவும் உணரும்போது மனசுக்குள் மாயவித்தை!!!

said...

வாங்க ஆயில்யன்.

உங்களையும், நம்ம கொக்கரக்கோவையும் நினைச்சுக்கிட்டாலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலை.

உங்க சித்தி விநாயகர் சூப்பரா இருக்கார்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கீதா.

அபி அம்மாவோடு பேசும்போது உங்க விஸிட்டையும் பற்றி நினைவுஇ கூர்ந்தோம்.அதான் எத்தனை பதிவர் சந்திப்பு நடந்த ஹால்:-)))

கல் இல்லாமல் வெறும் தங்கமுத்து வச்ச மூக்குத்திகூட பார்த்துருக்கேன். எண்ணெய் இறங்குமேன்னு கழட்டி வைக்க வேணாம் .சின்னக்கா இதுமாதிரி மூணு முத்து போட்டுருந்தாங்க.

said...

வாங்க கருணாகரன்.

கூடவே வர்றதுக்கு நன்றீஸ்.

said...

வாங்க கோமதி அரசு.

துளசிதளத்தில் வருவது எல்லாம் உண்மைகளே!!!

அபி அம்மாவின் அன்பு உள்பட!

கீதா சொன்னதுபோல் இன்னொரு வயிறு மட்டும் இருந்திருந்தால் உங்க வீட்டு சாப்பாட்டை ஒரு கை பார்த்திருப்போம்:-)

ஆனா...ஒன்னு. மனம் நிறைஞ்சு வழிஞ்சதில் பசியே காணாமப்போச்சு என்பதே உண்மை. (ஆனாலும் ரசகுல்லாவையும் பாதாம் பர்ஃபியையும் ஸ்வாகா செஞ்சுட்டேனே:-))))

அன்பான உபசரிப்புக்கு எங்கள் மனமார்ந்த இனிய நன்றிகள்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

என்ன ஒரு அழகான அமைதியான இனிய தம்பதிகள்!!! ஆசி வாங்காம விட்டால் நமக்குத்தான் நஷ்டம் கேட்டோ:-)

எனக்கும் கங்கைத்தீர்த்தம் கொடுத்தாங்க. நியூஸிக்குக் கொண்டு வர முடியாது:( அதனால் வல்லியம்மாவுக்குக் கொடுத்து புண்ணீயம் தேடிக்கிட்டேன்:-)))

குட்டியூண்டு நகை எப்படியெல்லாம் கொசுவத்தி ஏத்துது பாருங்க!!!

said...

வாங்க ரிஷான்.

காத்துக்குப் பயந்துதான் ஆளே ஊரில் இல்லை!!!!

வேறெந்த டிவி நிகழ்ச்சியும் வேணாம்ப்பா.

பின்னே நானே கொலைவெறியோடு இலங்கைக்கு வரணும்.

கெட்டதில் நல்லதுன்னா...

அப்படி வந்தால் யானைக்குட்டிகள் பார்க்கலாம்!

said...

வாங்க கொத்ஸ்.

அதென்ன அமெரிக்காவில் ஃபிஸிகல் வயலென்ஸ்க்கு அனுபதி உண்டா!!!!

மாணவரையே அடிக்கமுடியாதுன்னும்போது மாணவர் கையில் பிரம்புன்னா 'அநியாயம்' இல்லையோ???

அடுத்த பயணத்தில் உங்க புத்தகம் வாங்கியபின்தான் நியாயமா ஒரு முடிவுக்கு வருவேன். அதுதான் ஞாயம்:-))))))

ஆமாம்...பிரம்புக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்? பிட்டுக்கு மண் சுமந்த கதையா?

உங்க பிரப்பம்பழம் பார்த்து கோபால் நடுங்கிப்போயிட்டார்!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உருவத்தில் சின்னது, புகழில் பெரியது என்ன?

இந்த மூக்குத்தியேதான்:-)))

said...

வாங்க ரமா ரவி.

சந்திப்புகளில் மட்டுமா? பயணத்திலும் கூடவே வர்றீங்களே!

நன்றிப்பா.

said...

வாங்க அபி அப்பா.

நல்லவங்களுக்கு எல்லாமே தானாகவே நல்லது நடக்கும். நடக்கணும்.

அபி அம்மாவுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ளை இங்கேயும் சொல்லிக் கொள்கிறோம்.

நல்லா இருங்க.

said...

வாங்க கோபி.

ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!! நலம்தானே?

2014 லே ஒரு முறை நாம் போகலாம்.

ரெண்டாவது மாடியில் இன்னொரு பெரிய ஹால் பதிவர் சந்திப்புக்குன்னே கட்டுவாங்களா இருக்கும்!

said...

வாங்க பழமைபேசி.

ஊரும் அருமை அங்குள்ள நம்மாட்களும் அருமை.

கட்டாயம் போகத்தான் வேணும்!

said...

வாங்க வருண்.

என் கணவன் என் தோழனேதான். அதை டிவியில் பார்த்து தெரிஞ்சுக்கணுமா:-))))

குலசேகரன்கள் எப்படி எல்லாம் விபரீதமா சிந்திக்கறாங்கன்னு பார்த்தேன்.

வில்லன்கள் இல்லைன்னா வாழ்க்கையும் ருசிக்காது. கதையும் ஓடாது!

said...

வாங்க வல்லி.

உங்களுக்கும் மனம் நெகிழ்ச்சியா ஆயிருச்சா?

அது என்ன கெமிஸ்ட்ரிப்பா?????

ஆசிகளுக்கு நன்றிகள்.

said...

வாங்க பாலகணேஷ்.

நேரம் வாகா அமையலையேன்னுதான் சரிதா சந்திப்பு தள்ளிப்போயிருச்சு.

அடுத்தமுறை நிச்சயம் வச்சுக்கணும்தான்.

புத்தக அலமாரின்ற கொக்கி பலமா இழுக்குதே!!!!

said...

வாங்க சரிதா.

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக!

said...

வாங்க சரிதா.

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக!

said...

வாங்க ஷோபா.

//அபி அப்பாவை விட கிருஷ்ணா எனக்கு நெருக்கம் ஆகிவிட்டாள் //

அதே அதே! யாரால் மறக்கமுடியும் சொல்லுங்க!!!!

குழந்தைகளும் அருமையானவர்கள்.

இன்னும் ரெண்டு நாள் கூட இருக்கத்தான் நேரம் இல்லாமல் போச்சு:(

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசிப்புக்கு நன்றி!

said...

வாங்க ஜோதிஜி.

வேளை வரணும் அதுவும் நடக்கும்!

தேவியருக்கு என் அன்பு.

said...

வாங்க ரஞ்ஜனி.

இணையமும் தமிழ்மணமும், தமிழும் தந்த கொடை!!!!

அடுத்த மாயவரம் ட்ரிப் எப்போ?

said...

உங்களின் அக்காவை நீங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறீர்கள் என்று தான் நான் நினைத்தேன் ஆனால் ராமலக்ஷ்மியின் பின்னூட்டத்தை படித்தபின் தான் அக்கா தொடர்களை( ஒரே மூச்சில் ) படித்து முடித்து கனத்த இதயத்தோடு இதை எழுதுகிறேன் . இன்னும் முழு தாக உங்கள் பதிவுகளை படிக்கவில்லை . இன்னும் சில நாட்களில் படித்து முடித்து விடுவேன் . மனதிற்கு மிக பக்கத்தில் வந்துவிட் டீர்கள். ஏன் அக்காவை பார்க்கவில்லை . ராணி , ரேணு எல்லாரும் எங்க எப்பிடி இருக்காங்க .

நீங்கள் எழுதிய ஆனந்த விகடன் ஜோக்ஸ் ,( நானும் அப்படியே ) அப்புறம் உங்களது போலவே நடுவீடு
என் அம்மா வீட்டிலும் இன்னமும் (என் தம்பி மனைவி மஞ்சள் பூசி தான் வெள்ளிகிழமைகளில் ) பூஜை செய்வார்கள் . அக்கா போலவே என் அம்மாவும் மூக்குத்தி போட்டு இருப்பாங்க . அது இப்போ அவங்க நினைவா என்னிடம் தான் இருக்கு . (ஆனால் நான் மூக்கு குத்தவிலை )நான் ஏன் இதெல்லாம் உங்களுக்கு சொல்கிறேன் என்று தெரியவில்லை .
நான் சென்னைவாசி . பிறந்து வளர்ந்து பின் சிறிது நாட்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து 5 வருடத்தில் மீண்டும் மெட்ராஸ் வந்து சேர்ந்து விட்டேன்
நீங்கள் மெட்ராஸில் எங்கு படித்தீர்கள் . ? மீண்டும் மெட்ராஸ் வரும் போது தெரிய படுத்தினால் போன் செய்து பேசலாம் என்று எண்ணுகிறேன் .

. தாளிக்கும் ஓசை மூலம் உங்கள் தளம் சமீபத்தில் பார்த்து அன்றிலிருந்து தினமும் உங்கள் தளம் பார்க்காமல் இருப் பதிலை . உங்களுக்குதான் என் முதல் பின்னூ ட் டம் எழுதினேன் . உங்களிடமிருந்து பதில் வந்ததும் . மிகவும்
சந்தோஷித்து தொடர்ந்து படித்து வருகிறேன் .
தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ ஏன் எழுதுவதில்லை . நீங்கள் பதில் எழுதியதும் அவர்களுக்கு நீங்கள் ஏன் இப்போதெலாம் எழுதுவதில்லை என்று கேtடு எழுதினேன் . ஆனால் பதில் இல்லை . ( உங்களுக்கு தெரியுமா . )
உங்களுடைய புத்தகங்களை படிக்க ஆவலாய் உள்ளேன் . இப்போதைக்கு வாங்க முடியாது . அதனால் இணையதளத்தில் வேறு எங்கும் பதிகிறீர்களா என்று சொல்லவும் .
உங்களின் இந்திய கட்டுரைகள் தான் என்னை மிகவும் ஈர்க்கிறது . பிறகு உங்களின் தோட்டம் :)
பதில் அனுப்புவீர்கள் என்றால் மிகவும் சந்தோஷம் அடைவேன் .
gmail inbox ல் type செய்து எதை அனுப்புகிறேன் . வேறு வழியில் type செய்ய வழி இல்லை . அதனால் கொஞ்சம் சரியாய் இருக்காது . கண்டுக் காமல் விட்டுடுங்கோ pl .

said...

>>சீகாழி ஸ்ரீ சிற்றம்பல நாடிகள் திருக்கோவில் சித்தர்க்காடு >>

15 வருடமாய் தமிழகம், குறிப்பாக நீங்கள் தற்போது எழுதி வரும் இடங்களுக்கு போக முடிய வில்லையே என்றிருந்தேன். போகிற போக்கில் குறை தீர்ந்துவிடும் போலுள்ளது, உளமார்ந்த நன்றி உங்களுக்கு. "சித்தர்காடு" : எங்கள் குடும்பத்தார்களுக்கு வேரான ஊர். நினைவில் வாழும் என் 2 தாத்தாக்களும் சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து உறவினர்களால் வளர்க்கப்பட்ட ஊர் சித்தர்க்காடு. ரொம்ப மகிழ்ச்சி. இன்னும் பல உறவுகள் உள்ள ஊர். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை மறைந்து வருகிறது.

said...

வாங்க சசிகலா.

பத்து பதிவுக்கான மேட்டரை இப்படி படபடன்னு கேட்டால் எப்படி:-))))))

சென்னை வரும்போது தகவல் சொல்றேன். நாம் உக்கார்ந்து பேசலாம்!

தாளிக்கும் ஓசையில் இப்பெல்லாம் தாளிக்காமலே சமையல் ஆகுதோ என்னவோ!!! ச்சும்மா..:-)

மகளும் வளர்ந்திருப்பாள். படிப்பு குடும்பம் என்று எதாவது பிஸியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

என் மரத்தடி காலத்தோழி அவுங்க. இடையில் கொஞ்சம் எழுதலைன்னு எடுத்துக்கலாம். ஆனால் அவுங்க திரும்ப வரத்தான் போறாங்கன்னு பட்சி சொல்லுது.

இப்பெல்லாம் ட்விட்டர், ஃபேஸ்புக்ன்னு ஏகப்பட்ட சைடு என்டர்டெய்ன்மென்ட் வந்துருச்சேப்பா.

இப்போதைக்கு இணையம்தவிர வேறெங்கும் எழுதலை. இங்கே துளசிதளத்தில் 1423 இடுகைகள் உள்ளன.

இந்தியப்பயணம் அதில் ஏராளம். ஒரு பத்துப்பதினைஞ்சு வெளிநாட்டுப் பயணங்களும் இருக்கு.

நேரம் கிடைக்கும்போது வாசிச்சுட்டு ஒரு வரி எழுதுங்க.

உங்க பின்னூட்டம் எனக்கு அளவிலா மகிழ்ச்சியைத் தந்தது என்பதே நிஜம்.

நன்றீஸ்.

said...

வாங்க வாசன்.

எப்படி ஒரே ஒரு சொல், கொசுவர்த்தி ஏத்தி வச்சுருதுன்னு பார்த்தால் வியப்புதான்.

ரத்த உறவுகள் சுருங்கும் காலம் இது. அதே சமயம் இணைய உறவுகள் பெருகி வருவதைக் கவனிச்சீங்களா!!!

said...

ஒவ்வொரு பதிவும் படிச்சுட்டு பின்னூட் டம் எழுத தோணுது :) அந்தந்த பதிவில் எழுதணுமா அல்லது current பதிவில் எழுதணுமா .. அந்தந்த பதிவில் என்றால் தான் effective ஆ இருக்கும் ஆனா நீங்க பதில் போட்டீங்கனு எனக்கு எப்படி தெரியும் சிரமம் பாக்காம சொல்லு ங்களேன் .

said...

வாங்க சசி கலா.

இது ஒரு பிரச்சனையே இல்லை. பின்னூட்டப்பெட்டியில் எழுதி முடிச்சதும் அதை பப்ளிஷ் செய்யுமுன் இமெயில் ஃபாலோ அப் கமெண்ட்ஸ்ன்னு இருக்கும் இடத்தில் (அந்த சின்னக்கட்டத்துக்குள்) க்ளிக் செஞ்சுட்டீங்கன்னா, அந்தப்பதிவில் யார் என்ன பின்னூட்டம் கொடுத்தாலும் அதை பதிவின் ஓனர் பப்ளிஷ் செயததுமே அதுவும்கூட உங்க மெயிலுக்கும் வந்துரும்.

நாம் என்ன சொன்னோம், அதுக்கு பதிவர் என்ன பதில் கொடுத்தார் எல்லாம் ஒரே இடத்துலே கிடைச்சுரும்.

ஒருமுறை முயற்சி செஞ்சு பாருங்க.

said...

thank you:))))

said...

thank you:))))

said...

அன்புள்ளங்களை சந்தித்து பகிர்ந்துள்ளீர்கள்.

நேரடியாக நாங்களும் கலந்துகொண்ட உணர்வைத் தருகின்றது பகிர்வு.