Monday, March 11, 2013

அச்சச்சோ! சௌந்தர்ய ராஜன் இப்படி தன் அழகால் மயக்கிட்டானே.........

இடத்தைக் கடந்தபிறகுதான்  சட்னு தோணுச்சு...அடடா.... கோட்டை விட்டுட்டோமேன்னு. பேசாம  ஒரு ரவுண்டு போய் கிட்டே நின்னாவது பார்த்திருக்கலாம். கெமெராவில்  ரிவ்யூ செஞ்சு மினாராவைப் பார்த்து சேவிச்சுக்கிட்டேன்.   முதலிலேயே சீனிவாசனுக்கு குறிப்பு கொடுத்துருந்தா நிறுத்தி இருப்பார்! அவரும் காலையில் இருந்தே திருநள்ளார் போகலையான்னு கேட்டுக்கிட்டே இருந்தார். நாந்தான்  முந்தியே போய் வந்தாச்சுன்னேன். திரும்பத்திரும்பப்போனா எனக்குப் பிடிச்சிருக்குன்னு நினைச்சு, மீண்டும்  என்னைப் பிடிச்சுக்கிட்டா?


நாகைக்குள் நுழையும்போதே புலியின் நினைவு!  கலகலன்னு நெரியும் பஸ் ஸ்டாண்டு. ஆளைப்பிடிக்கக் காத்திருக்கும் ஆட்டோக்களின் வரிசை,  குடும்பவிழாக்களைப் பெருமிதத்தோடு அறிவிக்கும் வைனல் போஸ்டர், விஸ்வரூபம் காமிக்கும் அம்மான்னு  அமர்க்களம்தான்!


 புத்தகக்கடை கண்ணில் பட்டதும்  போய் தமிழ்நாடு வரைபடமும் road Map ரெண்டு வகை வாங்கிக்கிட்டேன்.  கோவில் பத்தி விசாரிச்சுக்கிட்டு வந்த சீனிவாசன் வழக்கம்போல் இது  எத்தனை நம்பர் என்று கேட்டார். 19 ன்னு சொன்னேன். அஞ்சே நிமிசத்தில் கோவில் முன்!   அக்கம்பக்கம் இருக்கும் கட்டிடங்களுடன் கை கோர்த்து  நிக்குது.

அழகான   ஏழடுக்கு ராஜகோபுரம்.  ஆனால் உயரம் சரியாத்தெரியாதபடி என்னமோஅடக்கி வாசிச்சாப்போல் இருக்கு. காரணம் இண்டு இடுக்கு இடம்  ரெண்டு பக்கமுமில்லாததோ ? இதே ஒரு  பரந்தவெளியில்  நின்னுருந்தால்  அட்டகாசமா இருக்காது?

வாசலிலேயே ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயார் உடனுறை  ஸ்ரீ சௌந்தர்யராஜ  பெருமாள். 19.வது திவ்ய தேசம் என்ற போர்டு!


கோபுரவாசலைக் கடந்து  போறோம்.  வலப்பக்கம்  வாகனங்களுக்குத் தங்கத்தகடு(?) போர்த்தும் வேலை நடக்குது.சில இளைஞர்கள் நகாசு வேலை செய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க, கண்ணெதிரே  நேராப்பார்த்தால் தூரத்தில்  கருவறை .  அட! வெளியே இருந்து இந்தக் கோவிலைப் பார்த்தால்  இவ்வளவு தூரம் உள்ளே  போறது போலத் தெரியலையே!

'ஓம் நமோ நாராயணாய'

வெளி மண்டபத்தைக் கடந்து படிகளேறி  உள்ளே பாய்ஞ்சேன்.   பளீர்னு போகஸ் செய்யும் ஒளி வெள்ளத்தில் ஜிலுஜிலுன்னு  நிக்கிறார் பெருமாள்.  நேரேப்போய் ரொம்பக் கிட்டக்கவே நின்னு பார்க்கும் வசதி!  அடடா..... கண்ணைப் பறிச்சுக்கிட்டுப் போகும் அழகு!  கிழக்கே பார்த்து கையில்  Gகதையுடன் நின்ன கோலத்தில்  ஸேவை  சாதிக்கிறார்.  ஆஜானுபாகுவா ஏழடி உசரம்   இருக்கார்னு நினைக்கிறேன்.  தன்னுடைய  தசாவதாரங்களையே   தகடுகளில் அச்சடிச்சு ஒட்டியாண  மாலையா இடுப்பிலே  அணிஞ்சுருக்கார்!  காணக் கண் கோடி வேணும்!

திருமங்கை ஆழ்வார் இவனுடைய அழகில் மயங்கி  பத்துப்பாடல் பாடி இருக்கார். அச்சோ ஒருவர் அழகியவா  என்று ஒன்பது பாடல்களை முடிச்சுக் கடைசிப்பாடலில்தான்   நாகை அழகியாரை ன்னு  ஊரையும் பேரையுமே சொல்றாருன்னா பாருங்க.

 இதுக்கு அச்சோப்பதிகமுன்னே பெயர்.  பத்தும் வேணுமுன்னா இங்கே:-)


மூலவருக்குப்பெயர்  நீலமேகப் பெருமாள். உற்சவ மூர்த்திதான் சௌந்தர்ய ராஜன்.  நாகை அழகியார். ஆனால் ரெண்டு பேருமே  அழகால் நம்மை அசத்திப்புடறாங்க.   ஹைய்யோ ஹைய்யோன்னு வச்ச கண் வாங்காமல் கண்ணாலவன் அழகை உள்வாங்கி மனசில் நிறைக்க முயற்சிக்கிறேன்.  இன்னும் இன்னும்  வேணும் என்றிருக்கே தவிர போதும்  என்று  கண்ணைத் திருப்ப முடியலை. திருப்தியே வரமாட்டேங்குது.  எல்லாம் எனக்கே வேணும் என்ற கொதி( மலையாளம். Greed)

அதுக்குள்ளே கருவறை மண்டபத்தில் நம்முடன் இருந்த சிலர் வெளியேறி இருந்தாங்க. ஏகாந்த ஸேவை லபிச்சது   நமக்கு ! சடாரி ,தீர்த்தம், திருத்துழாய் எல்லாம்  ஆச்சு. அப்போ கோபாலிடம் சொன்னேன்....'இப்ப என்னை வான்னு கூப்புட்டால்  வேறெதையும் யோசிக்காம அப்படியே போயிருவேன்'    சாமி முகம் பார்த்துக்கிட்டே  'கூப்புடுறா....'

"நீ சொன்னா? உடனே அவன் கேட்டுருவானா?"

தாம்பாளத்தை உள்ளே வச்சுட்டுத் திரும்பிய பட்டர் ,  'நம்ம பெருமாள்,  பக்தன் சொன்னபடியெல்லாம் கேட்பார் ' என்று சொல்லியபடி

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும்

நான்   சட்னு ' உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்' னு முடிச்சு வச்சேன்.  பட்டர் கண்ணிலொரு மகிழ்ச்சி. கோபால் கொஞ்சம் திருதிருன்னு முழிச்சார்.

 பட்டர் தொடர்ந்து,  'இதையும் கேட்டான் அப்புறம்....

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள் என்றதும் அதையும் கேட்டானேன்னு  சிரிச்சபடி சொன்னார் .

'சரி நீங்க பிரதக்ஷணம் பண்ணிட்டு வாங்க . பிரஸாதம்  எடுத்துக்கலாம்'னார். வெளியே படம் எடுத்துக்கலாமான்னு கேட்டதுக்கு  சரின்னு தலையை ஆட்டினார்.  பிரகாரம்  சுத்தும்போதே   க்ளிக் ஒரு பக்கம், கோபாலுக்கு  பாயைச் சுருட்டுன கதை ஒருபக்கமா நடந்துச்சு.





சம்பவம் நடந்தது இந்த ஊரில் இல்லை. திரு வெஃப்கா என்ற  ஊர். நம்ம காஞ்சீபுரம் இருக்கு பாருங்க, அங்கே வரதராஜர் கோவிலில் இருந்து  ஒரு கிமீ தூரத்தில் !  சொன்னவண்ணம் செய்த பெருமாள் ! (இவ்ளோ சொல்றேனே தவிர நான் இன்னுமங்கே போகலை)  நம்ம  திருமழிசை   ஆழ்வாருக்கு ஒரு சிஷ்யப்பிள்ளை இருந்தார். பெயர், கணி கண்ணன்.  ஆசானும் சீடருமா காஞ்சியில் இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அப்ப இவுங்க சேவையில் பங்கெடுத்து உதவி செய்த ஒரு  மூதாட்டியை, ஆழ்வார்  தன்னுடைய   சக்தியைப் பயன்படுத்தி   பேரழகுள்ள இள மங்கையா மாத்திடுவார்.

விவரம் தெரியாத  அவ்வூர் மன்னன் பேரழகியைக் கல்யாணம் பண்ணிக்குவார். கொஞ்ச நாள் கழிச்சு பேச்சு வாக்கிலே   மனைவி இந்த அதிசயத்தை  மன்னரிடம் சொல்லப்போக, அவரும் திருமழிசையைப் பார்த்து என்னையும் இளைஞனா மாத்தியே ஆகணுமுன்னு கேட்டுக்கறார்.  முடியாத காரியம்னு திருமழிசை மறுக்க,அப்படீன்னா இந்நாட்டை விட்டு  வெளியேறுன்னு கடுமையா ஆணை போட்டார்.

குரு கிளம்புனதும் சிஷ்யனும் கூடவே கிளம்பறார்.  இவுங்க போயிட்டா நமக்கு யாரு  ஸேவை செய்யப்போறாருன்னு பெருமாள் முழிக்க,

'இதா பாரு...  கணிக்கண்ணன்  (என்னோடு) கிளம்பிட்டான்.நீ என்னத்துக்கு இன்னும் இங்கே படுக்கைப் போட்டபடி கிடக்கே? உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பு'ன்னு  சொன்னதும்  மறு பேச்சுப்பேசாம  பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பிட்டான் எம் பெருமாள். பெருமாள் கிளம்புனதும் கூடவே மஹாலக்ஷ்மியும்  கிளம்பிட்டாள்.  மச்சான் போறதைப்பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியுமா? சிவன் & ஃபேமிலியும்  மூட்டையைக் கட்டிருச்சு. மற்ற தேவர்கள் எல்லாம் படை போல்  கூடவேகிளம்பிப் போறாங்க.

எல்லாம் கிளம்பி வரிசையாப்போறாங்க. ஸ்ரீதேவி  போனதும் நாட்டின் செல்வம், அழகு எல்லாம்  சட்னு மறைஞ்சுருது.  தரித்திர தேவதையான அக்கா மூதேவி  இடம்பிடிக்க வர்றாள்.  எல்லாத்தையும் பார்த்த மன்னனுக்கு  திகிர்னு கிலி பிடிச்சுக்குது. ஐயோ வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமல்  நானே அழிவைத்  தேடிக்கிட்டேனேன்னு  ஓடிப்போய்  திருமழிசை காலில் விழுந்து என்னை மன்னிச்சுடுங்கோ.அறியாமையால்  இப்படி அசட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்னு அழறார்.

போயிட்டுப்போறது போன்னு மன்னிச்சுட்டு,  சிஷ்யப்பிள்ளையைப்பார்த்து  'வா, நாம் இந்த ஊருலேயே  இருக்கலா'முன்னு சொல்லித் திரும்பி வர்றார். கூடவே போன பெருமாளும்,பாயும், பட்டாளமும்  கூடவே திரும்பி வர்றாங்க.

  கக்கத்துலே சுருட்டிவச்ச பாயுடன் பெருமாள்  இப்ப என்ன செய்யணும்னு தெரியாம திருதிருன்னு முழிக்கிறார்.  சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்லலையே?  இப்படியே நிக்கணுமான்னு யோசனை. ஆழ்வார் பார்த்தார். அடடா....

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

ஓக்கேன்னுட்டு பாயை விரிச்சுட்டு அப்பாடான்னு  கிடந்தான். அவசரமாப் பாயைப்போட்டதில் இடப்பக்கம் இருக்க வேண்டிய தலையணையும் அரவக்குடையும்   வலது பக்கம்  வந்துருச்சு. அப்படியே ஓடிப்போய் படுக்கையில் விழுந்தவன் இன்னிக்கும்  அப்படியே  கிடக்கிறான்.  இதேபோலத்தான் திருவெட்டாறு ஆதிகேசவனும் மேற்கே பார்த்துப் புஜங்க சயனத்தில் கிடக்கான். அவனுக்கு அங்கே கதை வேற போல!:)

எப்பவாவது இந்தியாவுக்கே திரும்பி வந்துடலாமுன்னு நினைச்சால்.... எங்கே போய் செட்டில் ஆகலாமுன்னு ஒரு எண்ணம் வந்துக்கிட்டே இருக்கும். நம்ம ஆக்டிவிட்டீஸ்க்கு சென்னைதான்  சரின்னு கோபால் சொல்வார். ஆனால்.... அழுக்கும் புழுக்கும் கூட்டமும் சீன்னு போகுது. நமக்கான விஷயங்கள் எல்லாம்  மயிலை, தில்லக்கேணி, அடையார்ன்னு  இருக்கு.  அங்கெல்லாம் ரிட்டயர் லைஃப்லே வீட்டுக்கு வாடகை கொடுத்துக் கட்டுப்படி ஆகாது.

ஸ்ரீ  ரங்கம் போயிடலாமுன்னா அம்மாவின் அருளால்   நாளின் முக்கால், இருட்டில்:( அதுவுமில்லாம பெருமாளை தினம் ஸேவிக்க பயங்கர கிராக்கியால்லெ கிடக்கு!

திருப்பதியில் இருட்டுக் கருவறையில்  பெருமாளை வச்சுட்டு, ஒரே  நொடியில் பார்த்துக்கோன்னால்....  கண்ணை ட்ரெயின் செஞ்சு  இருட்டுக்குள்ளே அனுப்புமுன்  என் கண்ணையும் கட்டி விட்டுட்டான்  அந்தப் பெரும் ஆள் :( பளீர்னு ஒரு விளக்குப்போட்டுருந்தால்   கொஞ்ச தூரத்தில் இருந்தாவது முகம் பார்த்துருக்கலாம்.   இப்ப நம்ம அல்லிக்கேணியில் பெருமாள் பார்த்தஸாரதிக்கு இப்படி ஒரு  ஃபோகஸ் லைட் போட்டு வச்சுருக்காங்க.  ரொம்ப தூரத்திலே இருந்துகூட அந்த முட்டைக் கண்களையும் முரட்டு மீசையையும் தரிசிக்க முடியுது!

பேசாம  இங்கே நாகப்பட்டினம் வந்துறலாம்.  கடற்கரை வேற இருக்கு.  மூணு பெரும் மதங்களின் சங்கமம் அக்கம்பக்கத்தில். அழகனை அருகில் நின்னு பார்க்கலாம்.நோ ஜருகு. நோ இருட்டு ஐமீன் கோவிலில்.  ரொம்பவே புராதன ஊர்தான் இது.  சோழர்கள் காலத்தில் பிஸியான துறைமுகநகர்.  பொன்னியின் செல்வனில்  வாசிச்ச நாகை சூடாமணி விஹாரம்,  அப்போ  வந்த கடல் சீற்றம் எல்லாம் மனசுலே அப்படியே பதிஞ்சு கிடக்கு!  பெருமாளும் இங்கே நாலு யுகமா இருக்கார்!


சுத்தமான பிரகாரத்தை வலம் வந்தோம். வடமேற்கு மூலையில் குட்டியா ஒரு கிணறு.  பிரசாதம் சாப்பிடும் சின்னக் குழந்தைகளுடன் ஒரு குடும்பம். சீனிவாசனையும் கூப்பிடலாமேன்னு பார்த்தால் அவர் ஒரு பக்கம் நின்னு பிரசாதம் சாப்புடறார்.   மர பெஞ்சில் அடுக்கி இருக்கும் பளபளன்னு தேய்ச்சு மினுங்கும் பிரசாதப் பாத்திரங்களுக்குப் பின்னால் பட்டர்  உக்கார்ந்துருக்கார்.



நெடுநெடுன்னு உசரம். கிள்ளி எடுக்க ஒரு சதை கிடையாது உடம்பில்.   அத்தனை உசரத்துக்கு ஒரு கூன் கீன் போடணுமே! ஊஹூம்... சட்டம்போல் நிமிர்ந்த உடம்பு.   தோளில் தொங்கும் ஒரு அடி நீள சாவிகள் . தினமும் வெயிட் தூக்கிகிட்டே நடக்கறார்  பாருங்க. அதான் உடம்பு ஃபிட்டா இருக்கு!  பட்டர்ஸ்வாமிகள் பெயர் ரெங்கராஜன்.

மூலவரை  சேவிக்க   பக்தர்கள்  யாரும்  வரலைன்னா   உடனே சந்நிதிக்  கம்பிக் கதவை  மூடி பூட்டுப் போட்டுட்டு மற்ற வேலைகளை கவனிக்கப் போயிடறார் .  பெருமாளையுமே  காபந்து பண்ணத்தானேவேண்டி இருக்கு. கலிகாலமில்லையோ!

மந்தாரை இலை நிறைய   சுடச்சுடச் சக்கரைப்பொங்கலும் வெண்பொங்கலுமாய்.....ருசி அபாரம்!   வயிறும் மனமும் நிறைஞ்சு போச்சு. கை கழுவி வந்தபின்  பட்டர் ஸ்வாமிகள் ரெங்கராஜனுக்கு  நன்றி சொல்லி, இன்னிக்கு கோபாலுக்கு  ஆங்கிலத்தேதியின் படி பொறந்தநாள். பெருமாளுடைய  தரிசனம் அற்புதமாய் கிடைச்சதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே.... எத்தனையாவது பொறந்தநாள் என்றார். நாலு நாள் முன்னே சஷ்டியப்த பூர்த்தி சென்னையில் நடந்ததுன்னேன்.  ஆரம்பமா இல்லை கடைசியான்னார். கடைசிதான்னேன்.

அறுபது வயது  பூர்த்தியாகும் பொறந்த நட்சத்திரத்துக்குப் பொதுவா  அறுபதாங் கல்யாணம் என்னும் சஷ்டியப்தபூர்த்தி விழா  செய்வது வழக்கம் என்றாலும்  சில பல காரணங்களால் அன்றைக்குச் செஞ்சுக்க முடியலைன்னா  அடுத்த பிறந்த நாள் வரைக்கும்  இடையில் எந்த ஒரு மாதத்திலாவது  பிறந்த நட்சத்திரம் வரும் தினம் செஞ்சுக்கலாமுன்னு  சாஸ்திரம் விதிமுறைகளைத் தளர்த்தித்தான்   வச்சுருக்கு.  நமக்கும் இது  ரொம்ப  நல்லதாப் போச்சுன்னு வையுங்க.

உடனே உதவியாளரைக் கூப்பிட்டு என்னவோ மெலிதாச் சொல்லி அனுப்புனார். அடுத்த நொடி ஒரு ப்ளாஸ்டிக் பையுடன் அவர் ஆஜர்.  பைக்குள் கையை விட்டு ஒரு லட்டு எடுத்து கோபாலை ஆசீர்வதிச்சுக் கையில் கொடுத்தார். கண்ணா லட்டு திங்க ஆசையா!!!!!

பிரமிச்சு நின்ன என் கையில் அந்தப்பையை அப்படியே கொடுத்து ஆசிகள் வழங்கினார். பெருமாள் சந்நிதியில் கிடைச்ச ஆசிகளை எம்பெருமாளே வழங்குனதா நினைச்சு சந்தோஷத்தோடு அவரை வணங்கிட்டுக் கிளம்பினோம்.

என்னவொரு திவ்யமான தரிசனம்! நின்றும் இருந்தும் கிடந்தும் மூணு விதங்களில்  தனித்தனி சந்நிதிகளில்  இருந்து  அடடா.... எதைச் சொல்ல எதை விடன்னு பண்ணிப்புட்டானே!!!!

வெளி மண்டபத்தைச் சுற்றினால் கோவில் புஷ்கரணி. நல்ல சுத்தமாவும்  அழகாவும் இருக்கு!  இந்தப்பக்கம்  நம்ம பேவரிட் கஜ வாகனத்துக்கு தகடு போர்த்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  பாஸ்கர பத்தர்   உலோகத்தைக் காய்ச்சி ஊத்தி, மோல்ட் பண்ணிப் பத்தவச்சிக்கிட்டு இருக்கார்.










பசுக் கொட்டடியில் கோமாதாவும் குழந்தையும்.!

எல்லாம் அம்சமா நிறைஞ்ச கோயில். நல்ல சுத்தமான பராமரிப்பு.

கிளம்பிப்போகும்போது   எங்க வீட்டு வேளுக்குடிக்கு  (தாம்பரம் அத்தை )  தரிசனம் நல்லபடி கிடைச்சதுன்னு  சொன்னப்ப,  அங்கே பக்கத்துலேதான் திருக்கண்ணபுரம் இருக்கு. அதையும் விட்டுறாதேன்னாங்க.  அதுக்குள்ளே நாங்க   ஒரு பதினைஞ்சு கிலோமீட்டர் போயிருந்தோம். கீழ்வேளூர்.  நாலுபேர் நின்னுக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு, விசாரிக்கிறேன்னு சொல்லி சீனிவாசன் இறங்கிப் போனார்.

நாகப்பட்டினத்துக்கு வருமுன்னேயே ரைட்டுலே போயிருக்கணுமாம்!  இனி  என்ன செய்யமுடியும்? சரி அப்புறம் எப்பவாவது ஆகட்டும்.  அப்பப்பார்த்து நம்மை செல்லில் கூப்பிட்டாங்க ஹாலிடேய்ஸ் ரிஸார்ட்டில் இருந்து.  கோபால்  வார்ட்ரோபிலொரு ஷர்ட்டை விட்டுட்டு வந்துருக்கார்.

புதுசான்னேன். ஆமான்னு தலையாட்டிட்டு, அங்கே   யாருக்காவது கொடுத்துருங்கன்னார்.

இன்னும் அரைமணியில்  திருவாரூர்!

தொடரும்...............:-)






42 comments:

said...

அச்சச்சோ, இப்படி புது ஷர்ட்ட கோட்டை விட்டாச்சு.

said...

கனிகண்ணனுக்குப் பின்னால போன பெருமாளைப் பத்திப் படிச்சிருக்க்கேன். அழகழகான படங்களோட நிறைய கூடுதல் தகவல்களும் சேகரமாச்சு எனக்கு. பயணம் அற்புதம்!

said...

அற்புதமான தகவல்கள். சிறப்பான புகைப்படங்கள். அசத்தும் விவரங்கள்....

நல்ல பகிர்வுக்கு நன்றி டீச்சர். எத்தனை எத்தனை கோவில்கள், தலங்கள்.... பார்க்க வேண்டும்! பார்க்கிறேன். :)

said...

திரும்பத்திரும்பப்போனா எனக்குப் பிடிச்சிருக்குன்னு நினைச்சு, மீண்டும் என்னைப் பிடிச்சுக்கிட்டா? --

! அருமையன மரகத லிங்க தரிசன்ம் கிடைத்தது அங்கே..

சிறப்பான தகவல்கள்.. அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

said...

கோயில் மிக அழகாகவும் துப்புரவாகவும் இருக்குதே. நல்ல பராமரிப்பு. ஸ்ரீரங்கம் திருப்பதியில் கூட இந்த அளவுக்கு துப்புரவு இல்லை. போகும் கூட்டந்தான் குப்பைக்குக் காரணம்.

திவ்ய தேசங்களைப் பத்தி நீங்க இன்னைக்கு பதிவு போட்டிருக்கிங்க. நான் நேத்து ஒரு பதிவு போட்டேன். அது இங்கே.
http://4varinote.wordpress.com/2013/03/10/099/

said...

நாகை சௌந்திரராஜ பெருமாள் அழகை ஆயுசு பர்யந்தம் வர்ணனை செய்துகொண்டே போகலாம்.
இந்த கோவில் இருக்கும் தெருவிற்கு பின்னே இருக்கும் மேலப்பெருமாள் கோவில் தெருவில் தான்
நாங்கள் 1977 முதல் 1980 வரை இருந்தோம். அப்போது நான் நாகை கிளை உதவி மேலாளராக
இருந்த காலம்.

அது சரி. சௌந்திர ராஜ பெருமாள் கோவிலுக்கு சற்று முன்னதாக தேசிகர் சன்னதி இருக்குமே...
அதை ஒட்டி வந்தால் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், அங்கே வருசா வருசம் செடில் உற்சவம்
அதை ஒட்டி கடற்கரை பக்கமாக சென்றால் நீலாயதாட்சி அம்மன் கோவில். ....

ஆஹா. நாகையை பற்றிய உங்கள் கட்டுரை அந்த நாள் வந்ததே ஞாபகம். ..

சுப்பு ரத்தினம்.

said...

ஆன்மீக ரசம் சொட்டச்சொட்ட நிறைவா இருந்தது வாசிக்கறதுக்கு.

said...

// ஹைய்யோ ஹைய்யோன்னு வச்ச கண் வாங்காமல் கண்ணாலவன் அழகை உள்வாங்கி மனசில் நிறைக்க முயற்சிக்கிறேன். இன்னும் இன்னும் வேணும் என்றிருக்கே தவிர போதும் என்று கண்ணைத் திருப்ப முடியலை. திருப்தியே வரமாட்டேங்குது. எல்லாம் எனக்கே வேணும் என்ற கொதி .//

ஆமாங்க !! எனக்கும் திருப்பதி போயிட்டு வரப்பலாம் இப்படி தான் இருக்கும் . இன்னும் கொஞ்ச நேரம் பாத்துருக்கலாம் போல ....
கையில் g கதையுட ன் பெருமாள் !!
உங்க புண்ணியத்துல நாங்களும் தரிசித்து மகிழ்ந்தோம் நன்றி !!!நன்றி .!!!
பாய சுருட்டுன கதை ..... நிறைய தெரிஞ்சுகறேன் மீண்டும் தேங்க்ஸ் .

இ த எழுதும் போது தான் உங்க பதில் வர (திருப்பதி பதிவு ) :))))
(நாய் கடிச் சுருச்சு பா ) பின்னூட் டம் ......


//. ஆனால்.... அழுக்கும் புழுக்கும் கூட்டமும் சீன்னு போகுது. நமக்கான விஷயங்கள் எல்லாம் மயிலை, தில்லக்கேணி, அடையார்ன்னு இருக்கு. அங்கெல்லாம் ரிட்டயர் லைஃப்லே வீட்டுக்கு வாடகை கொடுத்துக் கட்டுப்படி ஆகாது.//
எல்லாம் கட்டுபடியாவும் . நீங்க இங்க வந்துட்டா இன்னொரு தோழி எனக்கு சென்னைல !!!!!!!

திருப்பி திருப்பிசென்னைய கொற சொல்லாதீங்க:( pl. நெறய்ய்ய்ய்ய்ய்ய நல்ல விஷயமும் இருக்கு சென்னைல .

said...

திருப்திகரமாக இருந்தது பகிர்வு... பாராட்டுக்கள்..

said...

செளந்தர்யராஜனையும், செளந்தர்யநாயகியையும் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது தங்களது பதிவால்.

பார்க்க வேண்டிய கோவில்களின் லிள்ட் ஏறிக்கிட்டே போகுதே டீச்சர்...:)

ஸ்ரீரங்கம் கோவிலில் மணல்வெளியிலிருந்து பெருமாள் சன்னிதிக்கு செல்லும் வழியில் மணல் வெளியின் கோடியில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சன்னிதி உள்ளது. கதை கொஞ்சம் வேறாக இங்கு சொல்லப்படுகிறது.

said...

பிரமிச்சு நின்ன என் கையில் அந்தப்பையை அப்படியே கொடுத்து ஆசிகள் வழங்கினார். பெருமாள் சந்நிதியில் கிடைச்ச ஆசிகளை எம்பெருமாளே வழங்குனதா நினைச்சு சந்தோஷத்தோடு அவரை வணங்கிட்டுக் கிளம்பினோம்.//

செளந்தர்ய ராஜன் தன் பக்தைக்கு ஆசிகள் வழங்காமல் விட்டுவிடுவாரா!
செளந்தர்ய் ராஜன் அழகாய் இருப்பார் நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து விடுவார்.
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்,
நீலாயதாட்சி அம்மன் கோவில். எல்லாம் நன்றாக இருக்கும் சூரிசார் சொல்வது போல்.
திருக்க்ண்ணபுரம் போனலும் அங்கு இருந்து வர மனசு வராது.

said...

நான் விழுந்து புரண்ட வீதிகள் தான் இக்கோவிலை சுற்றி.உங்கள் ஒவ்வொரு படமும் பல கனவுகளை காண வைக்கிறது. அந்த பட்டாச்சாரியர் நாகை தேசிய மேல் நிலை பள்ளியில் வேலை பார்த்தவர்.எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்.அவர் அப்பா தான் முன்பு பட்டராக இருந்தவர் அவருடைய ஒரே மகன் அந்த குளத்தில் மூழ்கி இறந்தது இன்னொரு சோகம்.பிரகாரத்தில் வைகுண்ட ஏகாதேசியில் போட்ட நாடகங்கள் என்று பல கொசு வத்திகளை சுற்றலாம்.FB யில் கோவிலின் அழகான நகர்படம் ஒன்று கூட இருக்கு.

said...

\\மந்தாரை இலை நிறைய சுடச்சுடச் சக்கரைப்பொங்கலும் வெண்பொங்கலுமாய்.....ருசி அபாரம்! \\ ஆஹா ............ பிராசாதம்........... சாப்பிடனும் போல இருக்கே!!

said...

திருநாகை செளந்தர ராஜனை மனம் குளிர தரிசித்தோம் மேடம். மிகவும் அழகிய படங்கள் அற்புதமான பதிவு.

திரு வெக்காவைப் பற்றிய குறிப்பு அருமை.

said...

அழகிய விவரிப்பு அம்மா. உங்களுடனேயே தரிசனம் செய்த திருப்தி வருகிறது.

said...

சௌந்தரராஜன் அத்தனை அழகா. நாயகி கொடுத்துவைத்தவள் தான்.
படு சுத்தமா இருக்குப் ப்பா கோவில்.
மாடும் கன்றும்,சுற்றுப் பிரகாரமும் பட்டாச்சாரியரும் சூப்பர்.
கம்பீரம்.
ஒவ்வொரு படமும் கண்ணில ஒத்திக்கற மாதிரி இருக்குப்பா. நம்ம குமார் சொல்றதைப் பார்க்கும் போது இந்த மாதிரிப் பாரம்பர்யம் மிக்க ஊர்ல நாம இல்லையேன்னு தோணுகிறது.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அந்த ஷர்ட்லே கோபாலின் பெயரை 'சாமி' எழுதலை!!!!

said...

வாங்க பால கணேஷ்.

ரசிப்புக்கு நன்றிகள். மீண்டும் வருக.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இதுவரை கண்டது கடுகளவுதான்.

ஒரு ஜன்மம் போதாது! ஆனால் பயணத்தை நல்லா அனுபவிக்கணுமுன்னா இன்னும் கொஞ்சம் 'நல்ல வசதிகள்' இருக்கணும்.

நாடும், அரசும், மக்களும் இதைப் பொருட்படுத்துவது மாதிரி தெரியலை:(

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஏழில் ஒன்னு அங்கெதானே இருக்கு!

நாங்க போனபோது ஒரே ஓட்டம்தான். ரெண்டுங்கெட்டான் நேரத்துலே அரக்கப்பரக்க தரிசனம் செஞ்சு 'அவரை' மகிழ்வித்தோம்.

ஃபாஸ்ட் ஃபுட் போல நவகிரக கோவில்கள் தரிசனம் ஒரே நாளில்.

அனுபவிச்சுப் பார்க்க எங்கே விடறாங்க:(

said...

வாங்க ஜிரா.

நோ ஜருகு இல்லைப்பா. அரக்கிகள் கை பிடிச்சு இழுத்துத் தள்ளுவதும் இல்லை.

நிதானமா நின்னு போதுமுன்னு தோணும்வரை தரிசிக்கலாம். அதுவே மனசுக்குத் திருப்தியா இருக்கு.

திருப்பதியில் கூட பெருமாள் என்ன செய்வார் பாவம்!

பரிவாரங்கள் போட்டு வச்சுருக்கும் நியதிகள் பெருமாளையும் ஆட்டுவிக்குது:(

உங்க திவ்யதேசம் பதிவுக்கும் வந்து அடையாளம் வச்சுட்டேன்:-)

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நாகையில் வேறெங்கும் போகலை. கடற்கரையைக் கூட எட்டிப்பார்க்கத் தோணலை.

இன்னொரு விஸிட் மனசுலே இருக்கு. ஒரு நாள் இருந்து அக்கம்பக்கம் பார்க்கணும்.

நாலு வருசம் அழகை ரசிச்ச பாக்கியம் செஞ்சுருக்கீங்க.வணங்குகிறேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அனுபவத்தில் உணர்ந்து பங்கேற்றதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சசிகலா.

குறையாச் சொல்லலைப்பா. ஆதங்கம்தான். ரெண்டு வருசம் முந்தி ஒரு ரெண்டரை வருசம் அதில் சென்னையில் ஒரு ஆண்டு இருந்து பார்த்தேன்.

இது நான் விட்டு வந்த ஊர் இல்லை.ரொம்பவே மாறிக்கிடக்கு.
எனக்கும் பொருத்தப்படலை:(

சரியாக் கணக்குச் சொன்னால் நான் சென்னையை விட்டே 39 வருசம் ஆகப்போகுது. இனி எப்படி.....

ஒருவேளை அங்கேயே இருந்திருந்தால் இப்படியெல்லாம் மாற்றம் மனசுக்குப் புரிஞ்சுருக்காது. பழகி இருக்கும் இல்லே?

இன்னும் கொஞ்சம் பார்க்கும் கதையெல்லாம் திருப்பதியில் இல்லவே இல்லை:(

இழுத்துக் கடாசறாங்க:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா.... திருப்திக்கு துளசிதளம்!! டடாய்ங்.. (விளம்பரம் போடலாமா!!)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

லிஸ்ட்.... அது அனுமன் வால்:-)))

குறையும் என்ற நம்பிக்கை அறவே இல்லை கேட்டோ:-)

ஸ்ரீரங்க சமாச்சாரம் புதுசா இருக்கேப்பா? கதையை சொன்னால் கேட்டுப்பேன்.

said...

வாங்க கோமதி அரசு.

வேற கோவில்கள் ஒன்னையும் பார்க்கத்தோணலை....... அப்படியே கிளம்பிட்டோம்.

அடுத்தமுறைக்கு வச்சுக்கலாம்,இல்லே?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க குமார்.

அடடா.... அவருக்கு இப்படி ஒரு சோகமா? பெருமாளைப் புரிஞ்சுக்க முடியலை:(

பழைய நினைவுகளை அசைபோடுவதும் ஒரு சுகம்தான்.

அன்றைக்கு மாலையில் உங்களை நினைக்கும்படியா ஆச்சு! உண்மை:-)

said...

வாங்க ஜயதேவ் தாஸ்.

படத்துலேயே மின்னுது அந்த சக்கரைப்பொங்கல், அளவான நெய்யுடன்!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரமா ரவி.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிப்பா.

said...

வாங்க அமர பாரதி.

நலமா? இங்கே பார்த்து நிறைய நாளாச்சே?

பதிவு உங்களுக்கு திருப்தி தந்ததே எனக்கும் திருப்திதான்:-)))

said...

வாங்க வல்லி.

சில ஊர்களையும் கோவில்களையும் பார்த்தால் இங்கே இருந்துடலாமான்னு தோணும் பாருங்க... அப்படி ஒரு கோவில் இது.

ஆனால் எல்லாம் ஒரு சில நாட்களுக்குத்தான். நமக்குன்னு உள்ள இடத்திலிருந்தால்தான் நமக்குத் திருப்தி.

இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!!!!

said...

நீங்க சொல்றது சரிதான் . இங்கயே இருக்கற எனக்குமே ப்ச் என்ன நம்ம ஊரு முன்ன போல இல்லையே :( ன்னு இருக்கு . அப்பப்போ என் மகள்களிடம் சொல்லுவேன் . முன்னலாம் மெட்ராஸ் இப்பிடி இல்ல . கொஞ்சம் மாறித்தான் போச்சுனு.

சரி, நீங்கஇந்தியால எங்க செட்டில் ஆனாலும் பரவால்ல , துளசிதளம் மூலம் ஒரு நல்ல தோழி கெடச்சது சந்தோசம் :))))

said...

//ஸ்ரீரங்க சமாச்சாரம் புதுசா இருக்கேப்பா? கதையை சொன்னால் கேட்டுப்பேன்.//

அரசர் தன்னைப் பற்றி பாடல் பாடச் சொல்கிறார். பெருமாளைப் பாடும் வாயால், அரசரை பற்றிப் பாட முடியாது என சொல்லவும். நாடு கடத்தப் படுகிறார். கிளம்பும் போது பெருமாளை பாயை சுருட்டிக் கொண்டு வரும்படி சொல்ல, பெருமாளோடு நாட்டின் செல்வங்களும் செல்லவே மூதேவி குடி புகுகிறாள். அதன் பின் அரசர் உண்மையை உணர்ந்து நாட்டுக்கு திரும்ப வரச் சொல்லவும் பெருமாளும் பாயை சுருட்டிக் கொண்டு வருகிறார்.

இது பலர் சொல்லிக் கேள்விப்பட்டது...:)

said...

சசி கலா,

உலகம் ரொம்பச் சுருங்கிருச்சு இப்போ!

எங்கே இருந்தால் என்ன.... நட்பு பாராட்ட என்ன தடை இருக்கு?

உங்களுக்கு இப்போ ஒரு நியூஸித்தோழி கிடைச்சுருக்காள்:-)))

said...

ரோஷ்ணியம்மா,

ஆஹா.... அப்படிப்போகுதா கதை!!!

பாய் சுருட்டப் பாடலுண்டோ?

said...

பல தலங்களை தர்சிக்கும் பாக்கியம் பெற்றோம்.

மிக்கநன்றி.

said...

பல வருடங்களுக்கு முன் நாகப்பட்டினம் போகும்போது 'பொன்னியின் செல்வனில் வரும் சூறாவளிக் காற்று நினைவுக்கு வந்தது. மனதிற்குள் இப்போது அதைப்போல மழை வந்தால்....(.கல்கி எழுதியிருப்பார்:'ஒரு கருப்பு சுவர் நகருவது போல அலை திரண்டு வந்தது...' என்று.) நினைத்தவுடனே மழை வர உண்மையில் பயந்தே போனேன்!

உங்கள் இந்தப் பதிவு அந்த நினைவை மலரச் செய்தது.
அத்தனை தூரம் போய்விட்டு எங்கள் சௌரிராஜப் பெருமாளை சேவிக்காமல் வந்துவிட்டீர்களே!
யார் அழகு என்று நாமிருவரும் ஒரு பதிவு எழுதலாம்!
என் திருக்கண்ணபுரம் பதிவு இதோ:
http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/11/blog-post_17.html

said...

வாங்க ரஞ்ஜனி.

ஹைய்யோ!!! விட்டுப்போன எபிஸோடை இங்கே பிடிச்சேன்:-) ஏகாந்த ஸேவை பரமானந்தம்தான். ஜாலியா அவனோடு பேசலாம். யாரும் மறை கழண்ட கேஸ் என்று நினைக்க சான்ஸே இல்லையாக்கும்!

உங்க பதிவும் படங்களும் சூப்பர் கேட்டோ!

ஸ்ரீரங்கம் ஒரு வருசம் என்ற புலம்பல் இப்பதான் கொஞ்சம் குறைஞ்சு ஒரு மாசம் இருந்தாலும் போதுமுன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்கேன். கோபாலும் இப்படித்தான்..... ஆஸ்பத்திரி வேணும் என்பதில் குறியாக இருக்கார். அதென்னவோ.... அவுங்களுக்கு வருமானம் வேணுமேன்னு அப்படி ஒரு துடிப்பு. ஸீட்டுக்குக் கொடுத்த காசு வேறெப்படி கிடைக்கும் என்ற வாதம்:(

அடுத்த முறைன்னு ஒருபட்டியல் வளர்ந்துக்கிட்டே போகுது.....

said...

வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.

said...

திருநாகையில் சவுத்தரராஜ பெருமாள் புகழ்வாய்ந்த கோவில், மொத்தம் 5 -6 தடவை உள்ளே சென்றிருப்பேன், எங்கப்பா என்னுடைய தம்பிக்கு இந்த கோவிலை வைத்து தான் சவுத்தரராஜன் என்று பெயர் வைத்தார், நாகை காயாரோகணம்(சிவன்) - பெயர் அண்ணனுக்கு வைத்தார், நாகையில் இன்னொரு பெருமாள் கோவிலும் உண்டு.

ஊர் பொதுவாக அமைதியானது, விலைவாசியும் பிற ஊர்களை ஒப்பிட குறைவு. பேருந்து நிலைய கடைகளிலும் கூடுதல் விலைகள் கிடையாது.

நகரம், சிறுநகரம், கிராமம் எப்படிப்பட்ட வாழ்க்கையும் வாழ முடியும். அழகான கடற்கரையும் உண்டு. நான் மிகவும் நேசிக்கும் ஊர்களில் பிறந்த ஊரான நாகைக்கு தான் முதலிடம். மனிதர்களை மரியாதைக் குறைவாக பேச மாட்டார்கள்.

said...

வாங்க கோவியாரே.

உங்க ஊரை நின்னு நிதானமா ரசிக்க நேரமில்லாமப் போச்சு:(

மற்ற கோவில்களுக்குன்னு இன்னும் ஒருமுறை வந்துதான் ஆகணும். அப்போ அழகனை மீண்டும் ஒருக்கில் காணலாம் இல்லே!

மரியாதை உள்ள மனிதர்கள்தான் அங்கே. ஒரு பானைக்கு ஒரு சோறாய் நீங்களே இருக்கீங்களே!!!