Monday, May 03, 2010

ட்யூப் லெஸ்ஸுக்குள்ளே ஒரு ட்யூப் வந்த மாயம்!!!!

எந்தத் தொழில் செஞ்சாலும் அதுலே ஒரு நேர்மை, நியாயம் இருக்கணுமா வேண்டாமான்னு எனக்கு குழப்பம். அதுவும் அது மனித உயிர்களோடு நேரடியாச் சம்பந்தப்பட்டதா இருக்கும்போது மனசாட்சியை அப்படியே அமுக்கிக் குழிதோண்டிப் புதைச்சுட்டு பணம் மட்டுமே ஒரே நோக்கமா இருக்காங்க:(

இது ஒரு புலம்பல் பதிவுன்னு ஒரு டிஸ்கி கொடுத்துக்கறேன்.

இப்பெல்லாம் ட்யூப்லெஸ் டயர்கள்தான். பங்ச்சர் ஒட்டிக்கலாமுன்னு போனோமா....... அங்கேபோனா.....டயருக்குள்ளே ட்யூப் இருக்குன்னு தெரிஞ்சது. ஏற்கெனவே பங்ச்சர் ஆன இடத்தை ஒட்டி, (ஒரு சின்ன துண்டு டயர் பீஸ் வெட்டிவச்சு ) அடைச்சுட்டு ஒரு ட்யூபைக் காத்தடிச்சு உள்ளெ வச்சு ஒரு சமாளிப்பு நடத்தி இருக்காங்க ட்ராவல்ஸ் கம்பெனியில். அந்தச் சின்னத்துண்டு இடம் விட்டு விலகி, அதே ஓட்டையில் ஏதோ குத்தி அந்த ட்யூபைக் கிழிச்சுருக்கு.

கஸ்டமர்களை ஒழுங்காக் கொண்டு போய்ச் சேர்க்கும் எந்த உத்திரவாதமும் இவுங்களுக்கு இல்லையா? அட்லீஸ்ட் ஒரு AA இல் சேர்ந்துருந்தா உதவி வந்துருக்காதா? அதுக்குப்போய் யார் ப்ரிமியம் கட்டுறதுன்னு இருக்காங்க போல. விதிப்படி நடக்கட்டுமே என்ற பெருந்தன்மை!

ட்ராவல் கம்பெனி ஓனர் தினேஷ் ராவுக்கு 'செல்'லடிச்சு விஷயத்தைச் சொல்லுன்னு ப்ரஷாந்த்கிட்டே சொன்னால்........ தேவை இல்லையாம். ஏன்னா.............. இது அவுங்க கம்பெனி வண்டி இல்லை! போச்சுரா...... அப்ப? நாம் இன்னோவாதான் வேணுமுன்னு கண்டிப்பாச் சொன்னதாலே இன்னொரு இடத்துலே அவர் புக் பண்ணி நமக்குக் கொடுத்துட்டு சார்ஜ் வாங்கிக்கிறார். இப்ப நாம் கொடுக்கும் பணத்தில் இவருக்கும் ஒரு பங்கு கிடைக்குமுல்லே? ட்ரைவரையும் வேறெங்கோ இருந்து புடிச்சுப் போட்டுருக்கு.

பங்ச்சர் ஒட்டும் இடத்துலே ரொம்பக்கஷ்டப்பட்டு வேலை நடக்குது. நம்ம இவர் 'நியூஸி'யைக் கம்பேர் பண்ணி, பத்து நிமிச வேலையை எவ்வளோ நேரம் ரெண்டு பேர் சேர்ந்து செய்யறாங்க பார்'ன்னு சொல்றார். 'அங்கே இருக்கும் தொழிலுக்கான சாமான்கள் வசதிகள் எல்லாம் ஒன்னுமே இங்கே இல்லை. பழைய டயர்கள் மட்டுமே குவிஞ்சு கிடக்கு. எல்லாமே உடலுழைப்பாலே நடக்குது. அப்படி ஒரு கராஜ் வைக்க அஞ்சாறு மில்லியன் டாலர் இங்கே யார் முதலீடு செய்வாங்க? ரெண்டு ஆட்களைக் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்கு வச்சுக்கிட்டு தொழில் நடத்தும் 'தொழிலதிபர்கள்'தான் இங்கே கூடுதல்'னு நான் வக்காலத்து வாங்கறேன்.
இதுக்கிடையில் நகர்ந்துபோன சின்னத் துண்டை'' எடுத்துட்டு ஒரு முழு 'வேட்டி'யை உள்ளெ வச்சு அடைச்சார். நான் டயரைச் சொல்றேன்::(
அப்புறம் ட்யூப்லே பங்ச்சர் ஒட்டி, அதை உள்ளெ தள்ளிக் காத்தடைச்சு.....இவ்வளவு வேலையும் செஞ்சு முடிச்சுட்டு அவுங்க கேட்ட கூலியைக் கேட்டு அப்படியே வாயைப்பிளந்து நின்னேன் முப்பது ரூபாய்.
எங்கூர் காசுலே ஒரு டாலர். மனசு கேக்காம அவுங்க ரெண்டு பேருக்கும் நன்றிக்கடனா கொஞ்சம் காசு கொடுத்துட்டுக் கிளம்பினோம்.

ஒன்பது மணிக்குக் கோவில் மூடிருவாங்க. போயிட்டுப்போகுது போன்னு மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டு ஊருக்குள் வந்து சேரும்போது சரியா எட்டரை மணி. நேராக் கோவிலுக்குப் போயிறலாம். அறை தேடுவது அப்புறம்னு நானும் கோபாலும் ஒரே சமயம் ஒரே மாதிரி நினைச்சோம். (நான் பேச நினைப்பதெல்லாம்..............நீ பேச வேண்டும்..... ஊம்ம்ம்ம்ம்...உ உம்ம்ம்........அது! )

என்னமோ காலங்காலமா இங்கே குடி இருக்காப்லெ.... மடத்துக்குள்ளெ நுழைஞ்சு திடுதிடுன்னு இவர்பாட்டுக்குப் போறார். நான் குடுகுடுன்னு பின்னாலேயே ஓடுறேன்.... கோவிலுக்குள் நுழைஞ்சு ஜன்னலை நோக்கிப் பாய்ச்சல். அட! ராமா! யாருமே இல்லை! ஏகாந்த சேவை! யாராவது வரும்வரை இடம் பிடிச்சுக்கலாமுன்னு நான் ஜன்னலோடு பசைபோட்டு ஒட்டிக்கிட்டேன். முந்தாநாள் பூக்களால் மூடி வச்சுருந்த அலங்காரம் இல்லாமல் தங்கத்துலே ட்ரெஸ் போட்டுக்கிட்டு மின்னறான் திருடன். 'திரை போட்டுத் திடீர்ன்னு மறைச்சது எவண்டா'ன்னு கத்த வாயைத் திறந்தவ . நல்ல காலம் கப்சுப் ஆனேன். என் கண்ணில்தான் நயாக்ரா. கர்ச்சீஃப் எடுத்துக் கொடுத்துட்டு கோபால் போய் மண்டபத்தில் உட்காந்தார்.

இன்னும் பார்த்துக்கிட்டே இருக்கேன். யாரும் வரலை. கொஞ்சநேரத்துலே ஒரு மூணுநாலு பேர் வந்து நின்னாங்க. இடம் விட்டு விலகிப்போய் அவுங்களுக்கு பின்னால் வரிசையில் நின்னேன். அவுங்க போனதும் மறுபடி ஜன்னலில் ஒட்டுன பல்லியாக (சரி.... பெருச்சாளியாக) நான். இப்படியே நாலுமுறை. போதும் போதும் என்ற அளவுக்குப் பார்த்தாச்சு. கோவிலை அடைக்கும் நேரம் ஆகுதுன்னு கிளம்பினோம். அர்த்தஜாமப்பூஜை இருக்கான்னு தெரியலை. இன்னும் ஹொட்டேலை வேறத் தேடணும்.........
"உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே "
ஸ்ரீமாத்வ ஸரோவர்
ஸ்ரீ மாத்வ ஸரோவர்க்குப் பக்கம் வெளியில் வந்தோம். (இந்தக் குளத்தில்தான் கெட்டிமண்ணுக்குள் இருந்த கிருஷ்ணனைக் கழுவி வெளியே எடுத்தாராம் மாத்வர்) மடத்துக்குழந்தைகள் (ஐயோ..... எல்லாம் பால்வடியும் முகங்களோடு பிஞ்சுகள்) வரிசையா வந்துக்கிட்டு இருக்காங்க. கோவில் முன்னால் ஆரவாரம், கூட்டம் ஒன்னுமில்லாமல் ரெண்டு தேர்கள் அமைதியா நிக்குது.

பூனை தூங்கும் அடுப்பு? ஊஹூம்.... பெரிய நாயே தூங்கலாம்!!!!


திரும்ப உள்ளே போனோம். ரெண்டுநாளைக்குமுன்னே ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைச்சுப்போட்ட அடுப்புகளும் பாத்திரங்களும் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில். கழுவிக் கமர்த்திட்டாங்க.

மடத்துக்குள்ளே ஒருசிலர் மட்டுமே அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. யாத்ரீகர்கள்.

யானைக் கொட்டடியை முதல்முறை வந்தப்பக் கவனிக்கலை. அதான் எங்கே பார்த்தாலும் மனிதவெள்ளமா இருந்ததே! அரை இருட்டில் நிற்கும் க்ருஷ்ணனைப் பார்த்தேன். மறுபடி கண்ணுலே தண்ணீர். ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியாமல் வெறும் ஒன்னரை அடிச் சங்கிலி. பாவம். குழந்தை. துதிக்கையை ஆட்டிக் கூப்பிட்டது.
அஞ்சாறு நிமிஷ ட்ரைவில் ஸ்வதேஷ் ஹெரிட்டேஜ் ஹொட்டேல் வந்தோம். ப்ரஷாந்தின் ரெகமெண்டேஷன். 500 ரூபாயில் இருந்து அறைகள் இருக்காம். இருப்பதில் த வெரி பெஸ்ட் ஸ்யூட் கூட ரொம்ப மலிவு. எதுக்கும் கண்ணால் பார்த்து முடிவு செய்யணுமே. ஸிட்டிங் ரூம், பெட் ரூம்ன்னு ரெண்டு அறைகள். நல்ல அருமையான பாத்ரூம். யாரும் அதிகம் புழங்காத அறை. எல்லாமே பளிச்சுன்னு புதுசா இருக்கு. ட்ரைவர்களுக்காக ஒரு டார்மிட்டரி கூட இருக்காம். நல்லதாப் போச்சு. இன்னிக்காவது காலைக் கையை நீட்டித் தூங்கட்டும் ப்ரஷாந்த்.

சாப்பாட்டைத் தேடுதல் அடுத்த வேலை. இங்கேயே கீழே பேஸ்மெண்டில் ஒரு உடுப்பி ரெஸ்டாரண்ட் இருக்காம். 'தாலி' மீல்ஸ். வெறும் முப்பதே ரூபாய்

21 comments:

said...

//உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே//

லீலைகளுக்கு பெயர் போனவனாயிற்றே இந்த கள்ளன் :-))

ட்யூப்லெஸ்ஸில் இவ்வளவு கேர்லெஸ்ஸா!!!!

said...

//அவுங்க கேட்ட கூலியைக் கேட்டு அப்படியே வாயைப்பிளந்து நின்னேன் முப்பது ரூபாய்//
பரவா இல்லையே . சென்னைல நூறு ரூபா வாங்கி இருப்பாங்க. உண்மைலேயே மலிவுதான் .

neenga nalla darishanam pannathan kannan late panni irukkan

said...

மீண்டும் கிருஷ்ணரை நன்றாக தரிசிக்கவே இந்த ஆட்டம் போல சரிதான் டீச்சர். சாப்பாடு விலை மிகவும் குறைவுதான் டீச்சர்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நல்லவேளையா ஊருக்குள்ளே இது நடந்துச்சு. மலைப்பாதைகளில் வரும்போது ஆகி இருந்தால் உதவிக்கு யாரையும் கூப்பிட்டு இருக்கவும் முடியாது. செல் அங்கெல்லாம் வேலையும் செய்யலை.

ட்ராவல் பிஸினெஸ் செய்யும்போது கொஞ்சமாவது நியாயமா இருக்கலையே.....

said...

வாங்க எல் கே.

லேட் பண்ணனுமுன்னா....'காத்தைப் பிடுங்கி'விடணுமா?????

வழியில் ஒரு ஆட்டம் பாட்டமுன்னா நின்னு வேடிக்கை பார்த்துட்டு லேட்டா வந்துருப்போமுல்லே?

'அவனை' புரிஞ்சுக்கவே முடியலைப்பா!!!!

said...

வாங்க சுமதி.

ஆட்டுவிச்சான், நான் 'ஆடிப்போயிட்டேன்' :-))))

சாப்பாடு மட்டுமில்லை. எல்லாமே சென்னை விலையில் பாதிக்கும் குறைவுதான்.

said...

\\]"உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே "\\\

சூப்பர் பஞ்ச் ;))

said...

/.டயருக்குள்ளே ட்யூப் இருக்குன்னு தெரிஞ்சது. ஏற்கெனவே பங்ச்சர் ஆன இடத்தை ஒட்டி, (ஒரு சின்ன துண்டு டயர் பீஸ் வெட்டிவச்சு ) அடைச்சுட்டு ஒரு ட்யூபைக் காத்தடிச்சு உள்ளெ வச்சு ஒரு சமாளிப்பு நடத்தி இருக்காங்க//

நம்ம உடம்புக்குள்ளே இருக்கற உயிரும் அப்படித்தானே கீது. !!!1


சுப்பு ரத்தினம்.

said...

கண்ணன் வந்தான்... அங்கே கண்ணன் வந்தான்... டீச்சர் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணா கண்ணா
இரவினிலும் நடை திருக்கும் உடுப்பியூர் வனம்
நினைவினிலே நிறைந்திருக்கும் மத்வவூர் வனம்
கேட்டதெல்லாம் நிறைத்திருக்கும் பிருந்தாவனம்... பிருந்தாவனம்

இந்தப் பதிவுக்கு இந்தப் பாட்டுதான் பொருத்தம். இன்னொரு பாட்டும் சொல்லலாம்.

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா!

இந்தப் பாட்டோட வீடியோ இங்க இருக்கு.
http://www.youtube.com/watch?v=tDnFpt7bTTY

said...

ட்யூப்லெஸ்ஸுக்குள் ட்யூப் வந்ததெல்லாம் மாயமா? கோழிக்குள் முட்டை வைத்தான். முட்டைக்குள் கோழி வைத்தான். பிரியாணிக்குள்ளும் முட்டையை வைத்தான். அந்த ஆண்டவனின் மாயத்தாலே டியூப்லெஸ்ஸுக்குள்ளும் ட்யூப் வந்தது. :)

said...

என்னன்னு சொல்றது துளசி.
இப்படியெல்லாம் தான் நம்ம ஊரு.
கண்ணன் கூடவே வந்து காத்தி இருக்கான். உண்மையாவே மலைப் பாதையில் டயர் வெடிக்காம இருந்திச்சே:(
கிருஷ்ணன் தரிசனம் துளசி கண் வழியே அமிர்தமா இருக்கு.
இந்த மாதிரி க்ஹிவ்ய தரிசனக்களை நீங்கள் இன்னும் பார்க்கணும். நாங்க அதைக் கேட்கணும் படிக்கணும்.
கண்ணன் வந்த பிறகு கண்ணீர் விடும் துளசியை இங்கதான் பார்க்க முடியும்,.
கோபால் கைவசம் ஒரு பத்து கர்சீஃப் ஆவது வச்சிருக்கணும். ரொம்ப நன்றி துளசிம்மா. படங்கள்
வெகு அழகு. ஆரவாரமில்லாத அழகு.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அதுதான் பெரிய ஆச்சரியம். உடலில் ஒன்பது ஓட்டைகள் இருந்தும் ட்யூப் காத்து எப்படித் தப்பிக்குது பாருங்க!!!!

said...

வாங்க கோபி.

எப்பவாவது இப்படி முத்து உதிர்வது சகஜம்:-))))))

said...

வாங்க ஜீரா.

ஹைய்யோ............ அருமையான பாட்டு! நன்றி நன்றி.

மாயக்கள்வன் இப்படி முட்டையை பிரியாணியில் ஒளிச்சு வைக்கலாமோ?:-))))

said...

வாங்க வல்லி.

சொல்லத்தெரியாமல் சொன்னதுக்கே இப்படி நெகிழ்ந்தா எப்படிப்பா?

எல்லாம் அவன் செயல்ன்னு நிச்சிந்தையா இருக்க முடியுதா?

கிடைச்சவரை லாபமுன்னுதான் இருக்கேன் கோவில்களைப் பொறுத்தவரை.

said...

நல்ல பதிவு. நல்ல விவரிப்பு. நேரில் கண்ட, அனுபவித்த உணர்வு.

இந்த வார விருதை என் தளத்தில் உங்களுக்கு வழங்கியிருக்கேன். என் தளத்துக்கு வந்து வாங்கிக்கங்க...!!!

http://sasariri.com

said...

வாங்க கிரி.

விருது??? ஆஹா.... விருது!!!!!

நன்றி கிரி. மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குப்பா.

said...

தங்களுக்கு விருது வழங்குமளவிற்கு நான் பெரியவன் இல்லை. நான் வழங்கிய சின்ன மரியாதையின் மூலமாக நான் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டதாய் உணர்ந்தேன்.

இண்டி பிளாக்கர் சந்திப்பில் தங்களைப் பார்த்ததிலிருந்து உங்கள் தளத்தைத் தொடர்ந்து வருகிறேன். உங்களுக்கு hats off !

said...

கிரி,

நம்மில் பெரியவர் சின்னவர் என்ற ஒன்னும் இல்லை. வேணுமுன்னா வயசில் மட்டும் பெரியவர்ன்னு வச்சுக்கலாம்.

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓரிடம் இப்படி பதிவர்கள் & தமிழ்மணம்/தமிழ்வலைப்பதிவுகள் என்பதுதான் சரி:-)

எனக்கு ஒரு வாசகர் கிடைச்சுட்டார் இண்டிப்ளொக் மூலம். நன்றி

said...

"தங்கத்துலே ட்ரெஸ் போட்டுக்கிட்டு மின்னறான்"
கண்ணனின் அழகில் நீங்களும் உருகி படிக்கும் எங்களையும் சொக்கவைத்துவிட்டீர்கள்.

said...

வாங்க மாதேவி.

உண்மையில் உணர்ந்ததைச் சொல்ல சொற்கள் இல்லாமல் என்னமோ எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்.

கூடவே வந்து ஆதரவா இருப்பதுக்கு நன்றிப்பா.