Thursday, May 27, 2010

கட்டில் மெத்தை விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்த வீட்டுக்காரர்

"வீடு பரவாயில்லை. நாங்க வாடகைக்கு எடுத்துக்கறோம். எல்லா லைட்டுகளும் ஏர்கண்டிஷனர்களும் வேலை செய்யுதான்னு பார்த்துச் சரி செஞ்சுருங்க. ஒரு அறையிலே ஃபேன் மட்டும்தான் இருக்கு. அங்கே ஒரு ஏஸி போட்டுருங்க."

"இவுங்க அடுத்த ரெண்டு வாரத்துலே காலி செஞ்சுட்டுப் போனதும் எல்லாத்தையும் ஒருக்கா சரிபார்த்து வச்சுடறேன்."

"சமையலறையைச் சுத்தம் செஞ்சு புது பெயிண்ட் அடிச்சுட்டால் நல்லது."

"கவலையே படாதீங்க. செஞ்சுறலாம். உங்களுக்காக ஒரு கட்டிலும் மெத்தையும் கூட இங்கேயே விட்டு வைச்சுடறேன்."

"வேணாங்க. எங்க கட்டிலையே கொண்டுவந்துருவோம்."

"ஏம்மா.... அவர்தான் விட்டுவைக்கிறேன்றார். இருந்துட்டுப் போகட்டுமே. விருந்தினர் வந்தா பயன்படுமில்லே?"

"எதுக்குங்க? அதான் நம்ம சிங்கிள் பெட்ஸ் ரெண்டு இருக்கே. இது ரொம்பப் பெருசா அறை பூராவும் அடைக்குதே......."

"அந்த ரெண்டையும் சென்னையில் ஹோமுக்குக் கொடுத்துடலாம். லக்கேஜுகளைக் குறைச்சுக்கிட்டே வந்தால் நாம் திரும்பிப்போறப்ப எளிதா இருக்கும்."

"நானும் அப்படித்தான் நினைச்சேன். எல்லா ஃபர்னிச்சரையும் ஹோமுக்கே கொடுத்துட்டுத் துணிமணிகளை மட்டும் எடுத்துக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணுமுன்னு."

"சரி. முதல்லே இவுங்க காலி செஞ்சுட்டுப் போகட்டும். நான் அடுத்த ட்ரிப் வரும்போது என்ன ஏதுன்னு பார்க்கிறென்."

அடுத்த சில வாரங்களில் வீட்டுக்காரர் கிட்டே இருந்து ரெண்டு மூணு ஃபோன் வந்துருச்சு, 'எப்ப வர்றீங்க எப்ப வர்றீங்க'ன்னு......

'கொஞ்சம் நிதானமாத்தான் வருவோம். வீட்டை நல்லாச் சுத்தம் செஞ்சு பெயிண்ட் அடிச்சு வச்சுருங்க'ன்னு சொல்லி இருக்கு.

அதான் வாடகை கொடுக்க ஆரம்பிச்சாச்சுல்லே. சாமான்செட்டுகளை மூட்டை கட்ட நேரம் வேணுமே! இதுக்கிடையில் இவர் ரெண்டு முறை இந்த ஊருக்கு வரவேண்டியதாப் போச்சு. அதுலே ஒரு முறை வீட்டைப் போய்ப் பார்த்துருக்கார், சுத்தம் செஞ்சு வச்சுருக்காங்களான்னு.......

"ஏம்மா.... அந்தக் கட்டிலில் மெத்தை இல்லையே......."

"நெசம்மாவாச் சொல்றீங்க? நான் வீடு பார்க்க வந்தப்பச் சரியாக் கவனிக்கலையோ? மெத்தை இருந்துச்சே! அப்புறம் இன்னொரு அறையிலும் இருந்துச்சே, ஒரு தனி மெத்தை அரை ஆள் உசரத்துலே?"

"ஐயோ.... அதையேன் கேக்கறே..... அந்த மெத்தையை அவர் உயிருக்கு உயிரா 'நேசிக்கிறார்'!!!! ரொம்ப அபூர்வமானதாம். ரொம்ப அதிக விலை கொடுத்து வாங்கிவந்துட்டாராம். பத்தாயிரம் ரூபாயாம். மிஸ்டர் பானர்ஜிக்கு அதுமேலே ரொம்ப விருப்பமாம். எப்பவும் அதுலேதான் படுத்துத் தூங்குவாராம்."

"அட! நெசமவாச் சொல்றீங்க? அந்த அறையில் ஏஸி கூட இல்லையே??? "

காலி செஞ்சுட்டுப் போன மிஸஸ் பானர்ஜி, இப்போ நம்ம தோழியர்களில் ஒருத்தரா ஆகிட்டாங்க. அவுங்களோடு மின்மடல் போக்குவரத்து நடந்துக்கிட்டு இருக்கு. விஷயத்தை அவுங்களுக்கு சொன்னா இடிச்சிரிப்பு சிரிச்சாங்க. அந்த மெத்தையை எடுத்து உங்க பகுதியிலே வச்சுக்குங்கன்னு வீட்டுக்காரரைக் கேட்டால்.... போட்டு வைக்க இடமில்லை. உங்களுக்குப் பயன்படுமுன்னு சொல்லி எங்க தலையிலே கட்டிட்டார்ன்னாங்க. 'கட்டில் வேற கொடுத்துருந்தாரே... அதுலே மெத்தை இல்லையாமே' ன்னா..... ' வெறுங்கட்டில்தான் இருந்துச்சு. நான் ஒரு மெத்தை வாங்கிப் போட்டுக்கிட்டேன். இப்போக் காலி செய்யும்போது அதை எடுத்துக்கிட்டுப் போயிட்டேன்' . அட!.... வெரி சிம்பிள்:-)

இப்போ.......... மெத்தையை எப்படியாவது ஒழிச்சுக்கட்டணும். மூளையில் முடிச்சுப்போட்டு வச்சேன். ஒரு அறையிலே மெத்தையில்லாக் கட்டில். இன்னொரு அறையிலே கட்டில் இல்லா மெத்தை! ரெண்டு அறைகள் இப்படிப் போயிருச்சுன்னா நமக்கு இடம்?

நம்மாளு இதுக்குள்ளே ஐடியாக் கண்டுபிடிச்சுச் சொல்லிட்டார் கட்டிலையும் மெத்தையையும் ஒன்னாப் போட்டுருங்கன்னு. ஒரு அறை கிடைச்சுருமே!
சென்னையைவிட்டுக் கிளம்பி ஒருவழியா இங்கே வந்து சேர்ந்து வீட்டுச்சாவியை வாங்கிக்க வந்தால்..... கட்டிலும் மெத்தையும் ஒன்னுமேலே ஒன்னு. ஆனா பக்கத்துலே ஏணி வைக்க மறந்துட்டாங்க.! ஸ்டூல் போட்டு ஏறிப் படுக்கலாமுன்னு வையுங்க. ஆனா.... மெத்தை, கட்டிலைவிடப் பெருசா ஒரு பக்கம் நீட்டிக்கிட்டு வேற இருக்கு. 'இதை எடுத்துருங்க'ன்னு வீட்டுக்காரருக்கு அப்பீல் விட்டேன்.

" இது கேனடாக்கார மேடம் ஸ்பெஷலா வேணுமுன்னு சொன்னதாலே வாங்குனேன்"

" நான் நியூஸிலாந்து மேடம். எனக்கு இது வேணாமுன்னு சொல்றேன்"

" உங்களுக்குத் தெரியாது....வீட்டுக்குக் குடித்தனம் வர்றவங்க கட்டில் மெத்தை வேணும் வேணுமுன்னு கேக்கறாங்க."

" அப்படியா? இப்பக் குடித்தனம் வந்த நான் வேணாம் வேணாமுன்னு சொல்றேன்"

" எடுத்தா..எங்கே போடணுமுன்னு தெரியலை. எங்க வீட்டுலே இடம் இல்லை......"

"அதுக்கு? எங்களுக்கான செர்வெண்ட்ஸ் ரூம் ஒன்னு இருக்கே அதுலே போட்டு வச்சுகுங்க."

" அதுலே ஏற்கெனவே எங்க வேலைக்காரரை இருக்கச் சொல்லிட்டேன்."

" அப்பக் கட்டிலையும் அவருக்கே கொடுத்துருங்களேன்."

வீட்டுக்காரர் முகத்தில் ஈயாடலை. ' மனைவி ஊருக்குப் போயிருக்காங்க. வந்ததும் அவுங்ககிட்டே பேசறேன். அவுங்களுக்குத்தான் தெரியும் இந்த கட்டில் மெத்தை விவரம் எல்லாம்'ன்னார்.

அவர் முகம்போன போக்கைப் பார்த்ததும் நம்ம ரங்க்ஸ்க்கு ஒரே ஃபீலிங்காப் போயிருச்சு. "அதுவேணா இருந்துட்டுப் போகட்டுமேம்மா. மெத்தையை எடுத்துச் சுவரில் சாய்ச்சு வச்சுறலாம்."

"அப்ப கட்டில்?"

" அதுக்கு வேணுமுன்னா பொருத்தமா ஒரு மேட்ரஸ் வாங்கிப் போட்டுக்கலாம்."

" த்தோ...டா...................... ஊருராப்போய் வாங்கிட்டு அங்கேயே போட்டுட்டுப் போறதுக்கா? முந்தி இருந்தவங்க வாங்குன மெத்தை இப்ப முழிக்குது. நாம் வேற ஒன்னு வாங்கணுமா? ஒன்னு வேணாச் செய்யலாம்...."

" கட்டிலைப் பிரிச்சு ஓரமா வச்சுரலாமா?"

" இப்படி எல்லாத்தையும் ஓரமா வச்சா அறையிலே இடம் ஏது? பேசாம நம்ம ட்ரெட்மில்லைக் கட்டிலில் தூக்கி வச்சு அதுலே ஓடலாம்:-) "

ரங்க்ஸ் அப்படியே நடுங்கிப்போயிட்டார். 'ராட்சஸி...செஞ்சாலும் செய்வே'!!!!!

நாலைஞ்சு நாளில் வீட்டுக்காரம்மா ஊருலே இருந்து வந்துட்டாங்க. 'யதேச்சையா' அவுங்களைச் சந்திச்சோம் முதல்முறையா.

" ஹை.... நான் துளசி"

" ஹை.....நான் *****. என்னோட நிக் நேம் ***** நீங்க இப்படியே கூப்பிடலாம். மிஸஸ் பானர்ஜிக்கூட இந்தபேரில்தான் கூப்புடுவாங்க."

எனக்கு வந்த சிரிப்பை அடக்க நான் பட்டபாடு இருக்கே!!!!!! அப்பப்பா..........எப்படிங்க 'அப்படி'க்கூப்பிட முடியும்?????

' அவசரமா நாளைக்கு டெல்லி போகணும். நாலைஞ்சு நாளில் வந்துருவேன். வந்ததும் அந்த கட்டில் மெத்தையைக் கவனிக்கிறேன்'னாங்க. சரின்னு தலை ஆட்டி வச்சோம்.

ஒன்னு சொல்ல விட்டுப்போச்சே..... இந்த நாலைஞ்சு நாளில் மிஸஸ். பானர்ஜி என்ற பெயர் நம்ம ஹௌஸோல்ட்லே அதிகமாப் புழங்கும் பெயராகி இருந்துச்சு.

வீட்டுக்காரரிடம், வேலைக்கு உதவி செய்யும் பெண்ணுக்குச் (இந்தப் பொண்ணு நாம் வீடு பார்க்க வந்தப்ப மிஸஸ். பானர்ஜி வீட்டிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நாம்தான் வரப்போறோமுன்னதும் உங்களுக்கு நானே வந்து வேலைகளைச் செஞ்சு கொடுக்கறேன். வந்தவுடன் கீழ்வீட்டுக்காரரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்க'ன்னாங்க.) சொல்லி அனுப்பணுமுன்னு கேட்டுக்கிட்டேன். இந்த நிமிசம் இங்கே நம்ம வீட்டுலேதான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காள். முடிஞ்சதும் மேலே அனுப்பறேன்னு சொல்லிட்டு, 'வீட்டுலே எல்லாம் செட்டில் பண்ணிட்டீங்களா'ன்னு கேட்டார். 'கிச்சன் கொஞ்சம் ஆச்சு. பூஜை ரூம் அடுக்கிக்கிட்டு இருக்கேன். '

"மிஸஸ். பானர்ஜி ரொம்ப பக்திமான். நல்லா பூஜை செய்வாங்க. தினம் ரெண்டு மணி நேரம்.(??!!) அவுங்க சாமி வச்ச இடத்துலேதானே நீங்களும் வச்சுருக்கீங்க?"

"இல்லையே!!!! வேற அறையில் வச்சுருக்கேன். இது கொஞ்சம் பெருசா இருக்கு"

"ஓ..... வேலைக்காரி வேலை செய்யும்போது கொஞ்சம் பின்னாலே போய் நாம் பார்த்துக்கணும். நாம் கவனிக்கலைன்னா.... கொஞ்சம் ஏமாத்திருவாங்க.; மிஸஸ். பானர்ஜி, ரெண்டு பேரை வேலைக்கு வச்சுருந்தாங்க. ஒருத்தர் வீடுபெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவ. இன்னொருத்தர் ஜன்னல் கதவு எல்லாம் துடைச்சுட்டு, காய்கறி வெட்டிக் கொடுக்க."

'மிஸஸ். பானர்ஜிக்கு மடல் அனுப்புனப்ப, 'வீட்டுக்காரர் உங்க பேர் இங்கே சொல்லாத நாளில்லை. மிஸஸ் பானர்ஜி திஸ், மிஸஸ் பானர்ஜி தட்னு ஒரேதா உங்க புராணம்தான்'. மறுபடி ஒரு இடிச்சிரிப்பு:-))))

வீட்டுக்காரம்மா ஒரு நாள் மாடிக்கு வந்து, ' அம்ரித்ஸார் கோவிலுக்குக் கிளம்பறேன். ஊரில் இருந்து அப்பா வந்துருக்கார். நாளை இரவு திரும்பிருவோம். வந்து கட்டிலைக் கவனிக்கிறேன். மன்னிக்கணும்' னு சொன்னாங்க. 'கோவிலுக்கா? ரொம்ப நல்லது. நானும் போகலாமுன்னு இருக்கேன். எத்தனை மணி நேரப் பயணமு'ன்னு கேட்டேன். அப்பப்ப ஸ்மால் tடாக் வேண்டித்தானே இருக்கு? அஞ்சரை மணி நேரமாம். ஓக்கே.

இன்னும் ஒரு வாரம் போச்சு. வீக் எண்ட். சனிக்கிழமை இவர்கிட்டே, 'எப்பதான் எடுக்கப் போறாங்க?' ன்னா 'எடுப்பாங்க எடுப்பாங்க' ன்றார். 'வீக் எண்ட்லே எடுப்பாங்க. வீக் எண்டா? அது பாதி போயிருச்சே..... 'ஞாயிறு காலை ஒரு பத்துமணிக்கு அவுங்களுக்கு ஃபோன் போட்டால். போனை எடுத்த வீட்டுக்காரம்மா, 'இன்னிக்கு ஆளுக்கு ஏற்பாடு செஞ்சுருவேன். எடுத்தறலாம்' ன்னாங்க. பொணமா என்ன? ஆளாளுக்கு எடுக்கலாம் எடுக்கலாமுன்னு........

கொஞ்ச நேரத்துலேயே திமுதிமுன்னு நாலு ஆளுங்களோடு வீட்டுக்காரம்மா ஆஜர். அக்கம்பக்கத்து வீட்டு வேலையாட்களாம். "மெத்தையை எடுத்துறலாம். இங்கே முந்தி குடி இருந்த அமெரிக்கர் பெரிய பில்ட்ட்ட்ட்ட்டு. இம்மாம் பெரிய மெத்தை வேணுமுன்னு ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து இருபதாயிரம் ரூபாய்க்கு வாங்கினார். எதுக்குத்தான் அவ்ளோ செலவு செஞ்சாரோ? கடைசியில் அவசரமாப் போனதுலே விட்டுட்டுப் போயிட்டார்."

வீட்டுக்காரம்மா சொல்லச்சொல்ல விழிச்சேன். அட ராமா!!!! அப்போ கெனேடியன் லேடி???

" கட்டிலை எடுப்பதுதான் கஷ்டம். அதுக்குன்னு ஸ்பெஷலா கருவிகள் வேணும். ஆளுக்குச் சொல்லி அனுப்பறேன்."

" என்ன கருவி வேணும்? சொல்லுங்க. ஈஸியா பிரிச்சுறலாம்.ஸ்பானர் இருந்தாப் போதும். எங்கிட்டேயே இருக்கு" ன்னார் நம்ம வீட்டு 'டிம் த டூல் மேன் டேலர்' :-))))) அதான் பெரிய டூல் பாக்ஸ் ஒன்னு கூடவே பயணப்பட்டு வந்துருக்கே நியூஸியில் இருந்து!

'இங்கே பிரி, அங்கே பிரி'ன்னு இவர் சொல்லிக் கொடுக்க ரெண்டாய் பிரிஞ்சது கட்டில். ஒருவழியா 'தூக்கிட்டு'ப் போனாங்க. இப்ப அந்த இடம் காலி. நம்ம சாமான்களை தாராளமா வச்சுக்கலாம். தலை முழுகித் தொலைக்க மூணு வாரம் ஆகி இருக்கு.
மறுநாள் அந்த அறைக்குப் போனப்ப என்னமோ வெறிச்:( . பேசாம அந்த மெத்தையை மட்டும் வச்சுருந்துருக்கலாம்..................


PIN குறிப்பு: மேற்படி சம்பவத்தை எழுத்துலகத் தோழி ஒருவரிடம் 'சாட்'டிக்கொண்டிருந்தபோது, அவர்கள் சொன்ன தலைப்பு. நன்றி என் இனிய தோழியே!


காலநிலை: கொடூரம். நம்ம எஸ்.ரா.வின் எழுத்துக்களில் எறும்பு போல ஊர்ந்து வரும் வெக்கையும் வெயிலும் சண்டிகர்வரை ஊர்ந்ததோடு சரி. இங்கிருந்து நகராதாம் இன்னும் இரு மாதங்களுக்கு :( 47 C.


34 comments:

said...

:)

காலநிலை மிக மோசம் தான்..

said...

பழய டெனனட் கிட்ட மெயில் தொடர்பு நல்ல வசதியா இருக்க்கு போல.. உங்களுக்கும் அவங்களுக்கும் ந்ல்ல காமெடியா இருக்குபோல

said...

தலைப்பு நல்லா கவர்ச்சிகரமா இருக்கு :-))))) வாடகைவீடுகளில் இதான் கஷ்டம். ஃபர்னிஷ்டு வீடுகளானாலும் சரி, இல்லாம இருந்தாலும் சரி,.. முழி பிதுங்கிரும்.

said...

innnum sila nalla titlegal:

Javvu mittai
Chandigaril oru Chandirani(veettukkarammavai sonnen)
meththai vaanginen thookkaththai vaangala
pulugay un vilai enna
pulugumoottai
asaraamal puluguvadu eppadi? oru india kannottam
How to procrastinate things and win
idu ellam enakkuth thonina sila thalaippukkal. puduchirunda eduththukkunga.
adhu sari anda "nickname" ennannun sollave illiye?

said...

டீச்சர் நீங்கள்லாம் தமிழர்தானா..? இப்படி ஓசில வந்த ஒண்ணை ச்சம்மா விடலாமா..?

ஓசில பினாயில் கிடைத்தாலும் ஒரு சொட்டுவிடாமல் குடிக்கும் நம் இனத்தின் பெருமையை சீக்கியர்களிடம் போய் காட்டாமல் விட்டுவிட்டீர்களே..!

உங்களையெல்லாம் என்ன செய்யறது..?

said...

Madam,

which sector, there are lot of park's are available here for instant help of such things.

Anonymous said...

//மறுநாள் அந்த அறைக்குப் போனப்ப என்னமோ வெறிச்:( . பேசாம அந்த மெத்தையை மட்டும் வச்சுருந்துருக்கலாம்..................//

அதானே . நமக்கெல்லாம் இப்படின்னா அப்படி , அப்படின்னா இப்படி இருக்காதான்னு தான் தோணும் :)

said...

ஸ்டூல் போட்டு ஏறிப் படுக்கலாமா:)
துளசி உங்களுக்குத் தான் இப்படி எழுத வரும். மஹா சண்டி போல இந்த ''வீட்டுக்காரர்'':) ஆமாம் மெத்தை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் வந்திருந்தால் உபயோகப் பட்டிருக்கும்!!

said...

//இங்கிருந்து நகராதாம் இன்னும் இரு மாதங்களுக்கு//
தலைப்பை படிச்சுட்டு டர்ர்ராக்கிட்டேன்..

//இங்கிருந்து நகராதாம் இன்னும் இரு மாதங்களுக்கு//
அவ்ளொதானா? அதுக்கா இந்த பில்டப்பு, ரீச்சர் உங்களுக்கு கொஞ்சம் ஓவராத் தெரியால?

said...

எங்கே போனாலும் வீடு என்றால் பிரச்சனைதான் போலருக்கு.பரவாயில்லை ஒருவழியாக வீடு செட் ஆயிடிச்சு:))))

said...

சூடான இடுகையில் சிக்கிக்கொண்டதைப் பார்த்த போது தலைப்பு செய்த மாயம் என்று உணர்ந்து கொண்டேன்.

வேறென்ன சிறப்பானதுக்கு வாழ்த்துகள்........

said...

வாங்க கயலு.

காலநிலை....நீங்களும் நானும் ஒரே அடுப்பில்:(

பழைய டெனண்ட் பெங்காலி. அதுலே அவுங்க சொன்னதுதான் இன்னும் வேடிக்கை. அக்கம்பக்கம் நல்ல நட்புணர்வு இருக்கான்னு கேட்டதுக்கு,

"நான் தினம் மாலையில் வாக் போவேன். யாரும் என்கூடப் பேசமாட்டாங்க. நான் பெங்காலி இல்லையா?"

இது எப்படி இருக்கு!!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.


கவர்ச்சித் தலைப்பு தோழியின் உபயம்.


வீடு மாறுவதே ஒரு கஷ்டம்தான்:(

said...

வாங்க குலோ.


தலைப்புகளுக்கு நன்றி.
எடுத்து வச்சுக்கிட்டேன்.

'குச் காம் கோ ஆயேகா':-)))))

said...

வாங்க உண்மைத்தமிழன்,

அச்சச்சோ..... தமிழர்பண்பாட்டைத் தொலைத்த இந்தப் பாவியை 'மன்னிச்சேன்'னு ஒரு சொல் சொல்லுங்க.....!!!!

எப்படி மறந்தேன்னு நொந்துக்கவா?????

said...

வாங்க சுடலை.

நீங்க இங்கேயா இருக்கீங்க??????

உதவி ஆள் பிரச்சனை இல்லை. எடுத்த கட்டிலை எங்கே போடுவது என்பதுதான் வீட்டுக்காரருக்குப் பிரச்சனை:(

அது அவர் தலைவலி!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

அதே அதே. இப்பப் பாருங்க வல்லி இங்கே வந்தா மெத்தை இல்லை!!!!!

said...

வாங்க வல்லி.

கட்டில் இல்லாத வெறும் மெத்தையில் படுத்தாலும் நல்லாத்தான் இருந்துருக்கும். உசரம் அப்படி!!!!

நீங்க வாங்க. நானும் மற்ற குடித்தனக்காரர்கள் கேக்குறமாதிரி மெத்தை இருக்கான்னு கேட்டுக் கடன் வாங்கிப்போடறேன்:-)))

said...

வாங்க இளா.

நலமா? பார்த்து எவ்வளோ நாளாச்சு!!!!!

கட்டிலும் மெத்தையும் இழுத்து வந்துருக்கு உங்களை:-)))))

கொஞ்சம் ஓவரா? வேற வழி? இப்ப நிஜமாவே 'ஓவர்':-)))

ரெண்டு மாசம் நகராம இருக்கப்போவது 'வெய்யில்'தான்.

said...

வாங்க சுமதி.

வீடு செட் ஆனதும்தான் நாலுவரி எழுதவே முடிஞ்சதுப்பா!!!

said...

வாங்க ஜோதிஜி.

சூடான இடுகையில் சிக்கியதா?

அட! எப்போ? நான் கவனிக்கவே இல்லை.

எழுதுவதோடு நம்ம கடமை முடிஞ்சதுன்னு இருந்துடறேன்:(

எல்லாப் புகழும் வாசகருக்கே!!!!

said...

Teacher, Mrs. Banerjee-yum blog ezhuthuvaangala?

said...

வாங்க ப்ரசன்னா.

இதுவரை அவுங்க பதிவர் இல்லை. ஆனா அவுங்களை எழுத வச்சுறலாம். ஆனா பிரச்சனை...... எனக்கு பெங்காலி படிக்கத்தெரியாதே:(

said...

டீச்சர்....சென்னை வெயிலில் இருந்து எஸ்கேப்பா..! ரைட்டு ;))

said...

வாங்க கோபி.

எஸ்கேப்????

நோ..........

அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்த கதைதான்:(

said...

Ithai pondra kelvikalukku ithuthan en bathilaga irukkum.

http://en.wikipedia.org/wiki/Mu_%28negative%29

Came across this in the year 1993 - The year of many firsts in my life. Hope it is of use for ya in this situation and your landlord understands your reply.

said...

"கட்டிலும் மெத்தையும்"
சண்டி ஆகிட்டாங்க :)

said...

And if they doesn't get the diplomatic -NO- said in the above message, just tell them bluntly to wrap up their leftover crap and take a hike.

Amen!

said...

வாங்க ராஜ்.

முதல்முறையா வந்துருக்கீங்க போல?

வணக்கம். நலமா?

சுட்டிக்கு நன்றி. அவரும் நைஸா விட்டுவைக்கப் பார்த்தார். நாம் விட்டுருவோமா? மத்ராஸிங்க ஷ்ரூடுன்னு வெளியே போய்ச் சொல்லாம இருக்கணும்:-))))

said...

வாங்க மாதேவி.

சண்டித்தனம் செஞ்சு ஒழிச்சுக் கட்டிட்டோமுல்லெ:-))))

said...

முதல் வருகை இல்லைங்க. 2007ல் இருந்து படித்து கொண்டு இருக்கிறேன்.

பதில் எழுதும் அளவுக்கு 2007‍‍, 2008, 2009 வருடங்களில் மன நிம்மதி, நேரம் முதலியவை இல்லை.

ஒரே வாக்கியத்தில் சொன்னால் அந்த வருடங்களில் "என் தனி மனித சுதந்திரத்திர்க்காக பல எதிரிகளுடன் ஒரே நேர‌த்தில் சமர் புரிந்து கொண்டு இருந்தேன்".

said...

ராஜ்,

சமரில் வெற்றியடைஞ்சதுக்கு வாழ்த்து(க்)கள்.

வாழ்க்கையே ஒரு 'போர்'தான். வெற்றியை நோக்கித்தான் நம் பயணமும்.

said...

ஏற்கெனவே உணவுவிடுதிகளைப் பற்றிய பதிவு ஒன்றைப் படித்தேன். இப்போது இந்தப் பதிவு. இரண்டுமே பிடித்திருந்தன. எப்போதும் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை கவனித்து அதனை அப்படியே எழுத்தில் கொண்டுவர முயலும்போது நாம் நினைக்காத சில அழகிய படப்பிடிப்புகள், சில அழகிய வார்த்தைப் பதிவுகள் வந்துவிழுந்து நம்மையே ஆச்சரியப்படுத்தும். அந்த ஆச்சரியம் படிக்கிறவர்களுக்கும் வந்தால் வெற்றிதான்.

said...

வாங்க அமுதவன்.

முதல் வருகைக்கு நன்றி.

//அந்த ஆச்சரியம் படிக்கிறவர்களுக்கும் வந்தால் வெற்றிதான்.//

ஆஹா.... அந்த ஆச்சரியம் உங்களுக்கும் வந்ததா??????

அடிக்கடி வந்து போகணுமுன்னு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.