குதிரேமூக்கிலிருந்து 22 கி.மீ. தூரத்திலே இருக்கும் ஹொரநாடுக்குப் போறோம் இப்ப. கிளம்பி இன்னொரு மலைப்பாதை வழியா கிழக்கு நோக்கிப் போறோம். திடீர்னு தளதளன்னு டீ எஸ்டேட்டுகள். ஒரு எஸ்டேட்டில் புது இலையில் டீ போட்டுத்தரோம் வாங்கன்னு போர்டு இருக்கு. ஆஹா.... திரும்பி வரும்போது இங்கே டீ குடிக்கணுமுன்னு மனசுலே குறிச்சு வச்சேன். சாலை ரொம்பச் சுமார் ரகம். தனியார்களின் எஸ்டேட்டின் வசதிகளைப் பொறுத்து அவுங்கவுங்க ஏரியாவில் சுமாராவும், ரொம்ப மோசமாவும் இருக்கு. இருவது நிமிசப் பயணமுன்னு இருப்பது நமக்கு முக்கால்மணி நேரம் எடுத்துச்சு. ரொம்ப வளைஞ்சும் நெளிஞ்சும் போகும் சாலை:(
ஸ்ரீ ஆதிஷக்தியாத்மகா அன்னபூர்ணேஸ்வரி சிக்மகளூர் வட்டத்தைச்சேர்ந்த ஹொரநாடு என்ற ஊரில் கோவில் கொண்டு பக்தர்களுக்குச் சோறு போட்டுக்கிட்டு இருக்காள். வரும்வழியிலேயே ஸ்ரீ ஈஸ்வரகாஷி அம்ருதேஸ்வரா ஸ்வாமி திருக்கோவில் ஒன்னு கண்ணுலே பட்டாலும், வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டு அம்மா'ன்னு இங்கே ஓடி வந்தோம். மலைத்தொடர்களுக்கிடையில் பள்ளத்தாக்கு அட்டகாசமான வயல்வெளிகளோடு சும்மா சிலுசிலுன்னு ஜொலிக்குது. நெல் போட்டுருக்காங்க.
ஊருக்குள்ளே நுழையும்போதே ஸ்ரீ துர்காம்பா லாட்ஜ், அரண்மனை செட்டிங் போட்டாப்பலே கம்பீரமா நிக்குது. இவ்வளோ பெரிய ஊரா இதுன்னு பிரமிப்புதான் எனக்கு. பேசாம இங்கேயே தங்கிடலாமான்னு நப்பாசையா இருந்ததென்னவோ உண்மை. கோவில் இருக்கும் தெருவுக்குள் நுழையுமுன்பு பளீர் வெள்ளையில் ஒரு அழகான சின்ன கோவில். நம்ம நேயுடு பல இசைக்கருவிகளை வாசிக்கும் ஸ்டைல்களில் வரிசையா மண்டபத்துமேலே உக்கார்ந்துக்கிட்டு கச்சேரியை அமர்க்களப் படுத்துறார். இப்போ மூடி இருக்கு. வரும்போது பார்த்துட்டுப் போகணும்.
சுத்திவர மலைகளும் மரங்களும் தெங்கும் கமுகுமா விளைஞ்சு நிற்க கோவில் கொஞ்சம் உயரமான இடத்தில். அலங்கார தோரணவாயிலில் இருந்து படிக்கட்டுகள் தொடங்குது. மேலே ஏறிப்போனோம். நம்ம வீடுகளில் மொட்டை மாடியில் பாய்களை விரிச்சுப்போட்டு வெய்யிலில் பலசரக்கைக் காயவைப்பதுபோல என்னென்னமோ காயவச்சு இருக்காங்க. அதெல்லாம் 'பாக்கு'ன்னார். பாக்கலாமுன்னு கிட்டே போனால் வெல்லக் கட்டிகள், புளிகள்.
இன்னொரு பக்கம் தலையணைகளும்,. ஜமுக்காளங்களும், போர்வைகளுமா வெய்யில் காயுது. ஆஹா.....பக்தர்களுக்குச் சாப்பாடும் போட்டுத் தங்க இடமும் கொடுக்கறாங்க. 'அன்னபூரணி, நல்லா இரும்மா'ன்னு சொல்லிக்கிட்டே கோவிலுக்குள் நுழைஞ்சேன். இங்கே ஆண்கள் மேல்சட்டையைக் கழட்டிறணும். பெண்களுக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லை. பக்தர்கள் வயிறு வாடாமப் பார்த்துக்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்கு. இதுலே புடவை கட்டு, சுடிதார் போடாதேன்னெல்லாம் சொல்லணுமா?
இதுவும் திண்ணைகள் ஓடும் கேரள டிசைன் கோவில்தான். நடுவிலே கருவறை. பக்கவாட்டு வழியாக சந்நிதிக்குள் நுழையணும். கூட்டம் வரிசையா வரணுமுன்னு கம்பித்தடுப்புகள் போட்டு வச்சுருக்காங்க. நாம் போனபோது சொன்னால் நம்புங்கோ..... நாங்கள் ரெண்டே பேர்தான். நல்லா கிட்டக்கப்போய் சேவிக்க முடிஞ்சது. நெடுநெடுன்னு ஆறடிக்குமேலே உசரம். ஒரு பீடத்துலே வேற ஏறி நிக்கிறாள். கையில் சங்கு சக்கரம் தாங்கிய கோலம். புடவையும் பூக்கள் அலங்காரமும் அட்டகாசம். இப்படி மின்னறாளேன்னு பார்த்தால் தங்க விக்ரஹமாம்! சமீபத்துலே கோவிலைப் புதுப்பிச்சுருக்காங்க. இந்த விக்கிரஹமும் புதுசுதானாம். எல்லாம் புதுசுன்றதால் புதுப்பெயரும் கொடுத்துருக்காங்க. நம்ம அன்னபூரணி இப்போ ஸ்ரீ ஆதிஷக்தியாத்மக அன்னபூர்ணேஸ்வரி. மனசாரக் கும்பிட்டுட்டு பிரகாரம் சுத்த வெளியே வந்தோம். கோவிலின் தலவரலாறு கிடைக்குமான்னு விசாரிக்கப்போனால் அரிசி கிலோ 15 ரூபாய்ன்னு போட்டுருக்கு வழிபாடுகள் பட்டியலில்.
வர்றவங்களுக்கெல்லாம் மூணு நேரமும் சோறு போடறாளே, நாமும் . இவளுக்கு எதாவது கொடுக்கணுமுன்னு மனசுலே தோணுச்சு. (ரொம்ப அல்ப்பமா!) ரெண்டு கிலோவுக்குப் பணம் கட்டி ரசீது வாங்கினோம். அதை எடுத்துக்கிட்டுப்போய் வெளிப்பிரகாரம் சுத்தும்போது ஒரு மூலையில் இருக்கும் கோவில் அர்ச்சகரிடம் கொடுக்கச் சொன்னாங்க. அவர் ரசீதை வாங்கிக்கிட்டு எங்க ரெண்டு பேருக்கும் 'அம்மா கொடுத்த வகை'யில் பிடி அரிசி வழங்குனார். வீட்டுலே அரிசிப்பானையில் கொண்டு போய் வச்சுக்குங்கன்னார். என்றைக்கும் நமக்கு சாப்பாட்டுக்குக் குறைவே வராதுன்றது ஐதீகம். நம்ம வீட்டுலே அரிசிப்பானை ஏது? எப்போ கிளம்பறோமுன்னு தெரியாததால் ஒரு கிலோ ரெண்டு கிலோவுக்கு மேலே வாங்கறதே இல்லை இப்பெல்லாம்.இந்த அரிசி ரொம்பவே சாதாரணத் தரத்தில் இருக்கு. ஈர அரிசி வேற. இது ஒரு சிம்பாலிக்காக் கொடுக்கறாங்கன்னு நினைச்சுக்கணுமே தவிர , இதைக் கொண்டுபோய் அரிசிப்பானை/ட்ரம்மில் போட்டுறாதீங்க. இருக்கும் மற்ற அரிசியும் கெட்டுப்போக ச்சான்ஸ் இருக்கு. கோவில் சாமானாச்சேன்னு உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒரு சின்ன டப்பாவில் போட்டு பூஜை அறையிலே வச்சுக்கலாம் என்னைமாதிரி. ஐதீகங்களை நம்புங்க. பிரச்சனை இல்லை. நம்புனாத்தான் கடவுள்.
அப்பதான் ஞாபகம் வருது, அன்னபூரணி கையில் கரண்டியைப் பார்க்கலையே! இருந்துச்சா, இல்லையா? இன்னொரு முறை பார்க்கலாமுன்னு சொன்னால் இவர் அதுக்குள்ளே சட்டையைத் திரும்பப் போட்டுக்கிட்டார். நான் மட்டும் சந்நிதிக்குள் பாய்ஞ்சேன். தனி ஒருவளா அவள் முன்னே நிக்கிறேன். மேலே ரெண்டு கையில் சங்கு & சக்கரம். கீழே ரெண்டு கைகளும் அபய ஹஸ்தமா இருக்காள்,
சந்நிதியில் ஒரு ஓரமா பண்டிட் ஒருத்தர் ஏதோ புத்தகத்தைப் படிச்சு உருப் போட்டுக்கிட்டு இருந்தார். 'கரண்டி எங்கேன்னு கேட்டேன். இல்லையாம்! அப்பச் சோறு விளம்ப? "தேவி கி ஹாத் மே(ய்)ன் சமச் நஹி க்யா?" தலையைத் தூக்கிப் பார்த்துட்டு தலையை இடமும் வலமுமா ஆட்டறார். அச்சச்சோ......கரண்டியைத் தொலைச்சுப்பிட்டள்!!!!
பொதுவா அன்னபூரணின்னு நினைச்சாலே ஒரு கையில் பாத்திரமும் மறுகையில் கரண்டியுடனும் உயிர்களுக்கு அன்னம் விளம்பும் உருவம்தானே மனக்கண்ணில் வருது! இப்படித்தான் காசியில் இருக்கும் அன்னபூரணியைப் 'படத்தில்' பார்த்த நினைவு.
வெளியே வந்து நுழைவாசலில் இருக்கும் படத்தைக் கூர்ந்து கவனிச்சேன். 'நோ சம்ச்சா!!!!' மொட்டைமாடியில் சுத்திவர நிறைய கடைகள் பக்திப்பொருட்கள் விற்பனையில். கோவிலுக்கும் வருமானம் வரணுமே...... செலவு கொஞ்சமாவா ஆகும்?
கீழே இறங்கி வந்தவுடன் அங்கேயும் கோவில் வளாகத்துலே கடைகள் இருக்கு. கஷ்டப்பட்டு எதுக்கு நிலத்தில் குழி வெட்டி, பந்தல் போட மூங்கில் நடணும்? இதோ ஒரு 'சுருக்' வழி! ஹனுமன் கோவில் இன்னும் திறந்த பாடில்லை. நமக்கோ இன்னும் ஒரு மணி நேரப் பயணம் இருக்கு. பொழுது சாயுமுன்னே போய்ச்சேரணும், இன்னிக்கு ராத் தங்கலுக்கான இடத்துக்கு.
ப்ரஷாந்துக்கு என்னமோ ஆயிருச்சு! வயசுப்பையனை டீ எஸ்டேட் மோகினி ஏதாவது வர்ற வழியில் பிடிச்சுருச்சோ! வந்தவழியே குதிரேமுக் வரை போகப்போறோமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தவளுக்கு அந்தப்பக்கம் போய் புது 'டீ' குடிக்கும் அதிர்ஷ்டம் இல்லாமப்போச்சு. மலைப்பாதையிலேதான் போறோமுன்னாலும் வேற ஒரு புதுவழியா இருக்கு. இதுலே தப்பான ஒரு வழியில் போயிட்டு மறுபடித் திரும்பி வந்தோம். 'வாயிலே இருக்கு வழி'ன்னு வாயைத் திறந்து கேட்டால்தானே? என்னவோ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி 'சர் சர்'ன் னு திருப்பிக்கிட்டே போனால் எப்படி? வளைவுகளோ இந்தப் பாதையில் கொஞ்சம் அபாயமா இருக்கு. 'மெதுவாப் போ'ன்னாலும் சாதாரண இடத்துலே மெள்ளப் போறதும், கரெக்ட்டா ஹேர்ப்பின் பெண்ட் இருக்கும் இடத்தில் சர்னு வேகமாத் திருப்புறதுமா இருந்ததுலே எனக்கு பேஜாராப் போயிருச்சு. நீங்களே பாருங்க படம் எடுக்கலாமுன்னா எப்படி விழுந்துருக்குன்னு:( .வேகம் வேகம் வேகம். 'ஸ்பீடு கில்ஸ்'ன்னு எங்க நாட்டுலே எல்லா இடத்துலேயும் போட்டுருப்பாங்க. இங்கே? போனா போகட்டும். விதி முடிஞ்சது. அம்புட்டுதான் இல்லையா?
இந்தப் பாதையில் ஏற்கெனவே வந்துருக்காரான்னு கேட்டால் இல்லையாம்! இந்தப் பாதையில் ஒன்னுரெண்டு டீ எஸ்டேட்டுகள் இருந்தாலும் காப்பிச் செடிகள் ஏராளமா நிக்குது! கோபாலுக்குப் பயங்கர மகிழ்ச்சி. அவருக்குக் கொசுவத்தி ஏத்தியிருக்கு இந்தச் செடிகள்! 'இங்கே பாரு, அங்கே பாரு'ன்னு ரொம்ப உற்சாகமா வர்றார்.
'ஏம்ப்பா ப்ரஷாந்து, இப்போ போகப்போகும் இடத்துக்கு நீர் போனதுண்டா?' ன்னு கேட்டால், பதில் வருது 'ஆமாம்'ன்னு. எப்போ போனாராம்? குழந்தையா இருந்தப்ப அப்பா அம்மாகூட! விடிஞ்சது வெள்ளாமை!
சின்னச்சின்ன கிராமங்கள் கடந்து போறோம். நாலைஞ்சு வீடுகள் அவ்ளோதான். ஆனால் குற்றங்கள் இல்லாத சமூகம். சின்னப் பிள்ளைகள் கூட பள்ளிக்கூடப் பையைத் தோளில் போட்டுக்கிட்டு தன்னந்தனியா ரோடோரமா விளையாடிக்கிட்டே போகுதுகள்! நகரத்துலே யாரையாவது நம்ப முடியுதா? எங்க நாட்டுலே ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்ன்னு சொல்லி வளர்க்கிறோம். நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப ரொம்ப கேர்ஃப்ரீ லைஃப்தான். அப்ப சொஸைட்டி கொஞ்சம் ஒழுங்கா இருந்துச்சுன்னுதான் நினைக்கிறேன். இல்லேன்னா நான் போட்ட ஆட்டத்துக்கு...... என்னென்னமோ நடந்துருக்கணும்!
ஒரு மூணு சின்ன மண்சாலை பிரியும் சந்திப்பில் சில கடைகள் கண்ணில் பட்டது. அதுலே ஒன்னு டீக்கடை. ப்ரஷாந்துக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்துச் சரிப்படுத்தலாமுன்னு வண்டியை நிறுத்தி இறங்கினால், ஆ ச்சாயா பீடிகை ஒரு சேட்டண்டே! ஆயிக்கோட்டே! நமக்கு ஒரு விரோதமும் இல்லா.! கொறச்சு சம்சாரிச்ச சேஷம் ப்ரஷாந்தும் கோபாலும் சாய குடிச்சு. எனிக்கு ஒரு கருக்கு. பின்னேயாணு போத்யப்பட்டது ப்ரஷாந்த் செல்லுன்ன வழி தெற்றா:( சரிக்குள்ள வழி ஈ ச்சாயாப் பீfடிகையிண்டே இடத்து வசம் திரிச்சு மறிச்சுப் போகேணும்.
ஈ ப்ரஷாந்த் சக்கன், காரை தெற்றாய வழியிலே திரிச்சு நிறுத்தி இருந்நு. எண்டே ஈச்வரா.... ரக்ஷிச்சோ...... க்ஷமிக்கணும் கேட்டோ..... எந்தாணு அறியாத்தே மலையாளம் வந்நு...... போகட்டே...மனசிலாயிக்காணும் அல்லே?
சில டீ எஸ்டேட்டுகளைக் கடந்தப்ப டீ இலை சேகரிக்கும் தொழிலாளிகள் ரெண்டு பேர் வேலையை முடிச்சுக்கிட்டு பையைத் தலையில் தொங்கவிட்டுக்கிட்டுப் போனாங்க. ஒரு சின்ன ஊரை அடுத்து சாலை ஓரமா ஒரு கோவில் படிக்கட்டுகல். பார்க்க அம்சமா இருக்கு. ஆனால் இனி அங்கெல்லாம் போய்வர நேரம் இல்லை. ரெண்டு க்ளிக்கோடு முடிச்சுக்கிட்டேன். இன்னும் 21 கி.மீ போகணும்.
'தீரே ச்சலோ..... ஹஸ்தே ஹஸ்தே'ன்னு ஜெபம் பண்ணுவதுபோலச் சொல்லிக்கிட்டே ஒன்னரை மணி நேரம் கடந்து ஊருக்குள் நுழைஞ்சோம். பட்ட கஷ்டம் எல்லாம் பாழாப்போகட்டுமுன்னு நம்மளை வரவேற்க ரெண்டு பேர் ரெடியா நிக்கறாங்க.
அவுங்களைப் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தச் சொன்னேன். அதுக்குள்ளே கோபால் ஜன்னலைத் திறந்து கை நீட்டுனவருக்குக் காசு கொடுத்தார். அப்போ இன்னொருத்தர் தனக்கும் வேணுமுன்னு காருக்குள்ளே ஜன்னல் வழியா 'கை'யை உள்ளேயே விட்டுட்டார். இருடா.... எடுத்துத்தரேன்னு கைப்பையைத் திறந்து எடுக்கும்வரை பொறுமையா நீட்டுன கை நீட்டியபடி! அடடா....என் செல்லமே!
மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு.
Thursday, May 13, 2010
கரண்டி எங்கே போச்சு? சொல்லேம்மா, அன்னபூரணேஸ்வரி!
Posted by துளசி கோபால் at 5/13/2010 04:59:00 AM
Labels: Annapoorani, Horanadu, அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
பொட்டிச் செக்கிங் 1 2 3
//அச்சச்சோ......கரண்டியைத் தொலைச்சுப்பிட்டள்!!!!//
அன்னபூரணி பாத்திரத்தோட தான் சாப்படு தருவாள். கரண்டில கஞ்சத்தனமா தரமாட்டாள் :)
அச்சோ யானை யானை யானை. அடச் செல்லமே. எங்க ஊருக்கும் வாயேண்டா.:)
என்னாச்சுப்பா பிரஷாந்துக்கு!
எங்க போயித் தங்கினீங்க அப்புறம். கொள்ளை அழகு படங்களேல்லாம். வளர நன்னி சேச்சி.
தங்கச்சி:0)
எவ்வளவு பிரயாசம் எடுத்துக் கொண்டு கோவில் கோவிலா சுத்தி பதிவும் எழுதி அதை சுவை படவும்
டீச்சர் வாழ்க.அதென்னப்பா ஒரெ பச்சை செழித்து இந்த ஊரு கண்ணைப் பறிக்கிறதே.
படிக்கும் போதே அமைதி கொடுக்கிறது.
நேயுடு கோவில் அடுத்தபதிவிலா?
//பொதுவா அன்னபூரணின்னு நினைச்சாலே ஒரு கையில் பாத்திரமும் மறுகையில் கரண்டியுடனும் உயிர்களுக்கு அன்னம் விளம்பும் உருவம்தானே மனக்கண்ணில் வருது! இப்படித்தான் காசியில் இருக்கும் அன்னபூரணியைப் 'படத்தில்' பார்த்த நினைவு.//
Oru kaiyil anna paathiramum maru kaiyil karandiyum irundhal thaane anna poorani. Idhu enna karandi illatha anna poorani? Also teacher you have highlighted the word 'padathil' that means your next trip is to kasi right?
வாங்க சின்ன அம்மிணி.
பாத்திரத்தைத் தூக்கி உங்களுக்கு மட்டும் தந்துட்டா..... மத்தவங்களுக்கு? பட்டை (நாமமா):-)))
கரண்டியில்தானே எடுத்துப்போடணும்? ஸெர்விங் ஸ்பூன் இல்லைன்னா எப்படிப்பா?
இங்கே பூரணி கையில் பாத்திரம் வேற மிஸ்ஸிங்!!!
வாங்க வல்லி.
வரப்புயரன்னு அவ்வை இவுங்களுக்குப் பாடிட்டாங்க போல! நீர்வளம் அப்படி!!!
அதான் எங்கும் பசுமை.
நேயடு கோவில் மூடி இருந்துச்சுப்பா. ஜஸ்ட் வெளியே இருந்து 'க்ளிக்'
ப்ரஷாந்தை மோஹினி பிடிச்சுக்கிச்சு:-)
வாங்க ப்ரசன்னா.
கரண்டியைத் தொலைச்சுட்டாப்பா!!!
காசி? அது நம்ம விச்சு & விசா மனசு வச்சுக் கூப்புடணும். எப்படியும் ஹர்த்வார் ஒரு பயணம் (நேர்த்திக்கடன்) பாக்கி இருக்கு. பார்க்கலாம் கிடைக்குதான்னு.
நான் ஆகாயகங்கையை நியூஸியில் பார்த்துட்டேன். அதுலே குளியல்மாதிரி ஒன்னு கிடைச்சது. அப்ப அந்தக் கணம், ஒரிஜனல் கங்கையைப் பார்த்த திருப்தி மனசுலே வந்துச்சு.
சங்கு சக்கரம் - இது விஷ்ணு துர்கை style அப்படீன்னு நினைக்கிறேன். மிக அழகான பசுமையான இடம் தான்
இந்த வார ஸஸரிரி பதிவர் விருது உங்க பதிவுக்கு .
http://www.virutcham.com
இப்பல்லாம் எங்கயும் பில்ளைங்களை தனியா விட யோசனையாத் தானே இருக்கு..அதெல்லாம் அந்தக்காலம்
//'நோ சம்ச்சா!!//
அதான் நாட்டுல நிறையபேர் இருக்காங்களே சம்ச்சாகிரி பண்றதுக்கு. அதான் கையில பிடிக்கமுடியாம விட்டுட்டா போலிருக்கு :-)))))
ஹேர்ப்பின் பெண்டுல சர்னு வேகமா போறது நல்லா போட்டோவுல தெரியுது டீச்சர். மலையாளம் தான் புரியவில்லை டீச்சர். சாலை ஒரமா படிக்கட்டுடன் கூடிய கோவில் நன்றாக உள்ளது டீச்சர்.
வாங்க வித்யா.
விருதா? எனக்கா? ஆஹா..... நன்றி நன்றி.
சரியான சுட்டியைக் கொடுங்கப்பா.
பார்த்து மகிழணும்:-)
வாங்க கயலு.
அப்போதும் கொஞ்சம் வக்கிரமானவர்கள் இருந்தாலும், இப்போ வன்முறைகள் கூடிப்போயிருக்கு. ஒரு காரணம்.....
தொலைக்காட்சிகளும், சினிமாக்களும்தானோ?
வாங்க அமைதிச்ச்சரல்.
ஜால்ரா சத்தம் கேட்டுக் காதே செவிடாகிருச்சு:(
அதுவும் அரசியல் வியாதிகளுக்கும் சினிமாக்காரகளுக்கும் சம்ச்சாகிரிகள் இல்லைன்னா வேலையே ஓடாதாம்:-)
வாங்க சுமதி.
அச்சச்சோ..... புரியலையா? நோ ஒர்ரீஸ். தமிழ்ப்படுத்திடலாம்.
கோபாலுக்கும் ப்ரஷாந்துக்கும் டீ. எனக்கு ஒரு இளநீர்.
பிரஷாந்த் தவறான வழியில் போய்க்கிட்டே இருப்பது இப்பத்தான் தெரிஞ்சது. டீக்கடையின் பக்கத்துலே போற தெருவில் நாம் திரும்பி இருக்கணும்.
ஓக்கேவா:-))))
இப்போ புரியுது ஓக்கே டீச்சர்:)))
பக்தர்களுக்குச் சாப்பாடும் போட்டுத் தங்க 1 இடமும் கொடுக்கறாங்க. '//
காலம்பரக் காப்பியும் உண்டாக்கும்! :D
நல்லா இருக்காங்களே, நம்ம ஸ்நிகிதப் பசங்க எல்லாம் அவங்களை மட்டும் எத்தனை வேணாப் படம் எடுக்கலாம். நல்லா போஸும் கொடுப்பாங்க. :D
சுமதி,
இப்படித்தான் தெரியலைன்னா டீச்சர்கிட்டே கேட்டு விளங்கிக்கிட்டு படிக்கணும். குட் கேர்ள்!
வாங்க கீதா.
மூணுவேளையும் சாப்பாடும் காஃபியுமா?
ஆஹா..... நமக்குத்தான் பயணங்களில் எந்தக் கோவிலிலும் சாப்பிடக் கொடுத்துவைக்கலை:(
பசங்க, சாயங்காலம் வாக்கிங் போயி கலெக்ஷனை முடிச்சுக்கிட்டு ஒரு எட்டுமணிக்கு வளாகத்துக்குள்ளே ஓசைப்படாமத் திரும்பிவந்ததைப் பார்த்தோம்:-))))
"ஸ்ரீ ஆதிஷக்தியாத்மக அன்னபூர்ணேஸ்வரி" கோவில். மலைப்பாதை பிரயாணம் மகிழவைக்கிறது.
வாங்க மாதேவி.
இப்போ நினைச்சால் மனம் மகிழ்ச்சிதான். ஆனால் 'சம்பவம்' நடந்தபோது.........
கலக்கல் போங்க! (நான் வயித்தைச் சொன்னேன்)
படங்களும் கட்டுரையும் ரொம்ப நல்லாயிருக்கு.
வாங்க புவனேஸ்வரி.
வருகைக்கு நன்றிப்பா.
Thanks for ur info
வாங்க முத்துபாலகிருஷ்ணன்.
முதல் வருகை!!!
வணக்கம். மீண்டும் வரணும்.
ரொம்ப நன்றிங்க.
Post a Comment