Wednesday, May 05, 2010

தேரடி வீதியில் தேவன் இருக்கார்.......

ரஜதபீடபுரத்தின் கதையைக் கேக்க வாங்க எல்லோரும். த்ரேதா யுகத்துலே ராம போஜர்ன்னு ஒரு ராஜா இருந்தார். அவருக்கு அஸ்வமேத யாகம் செய்ய ஆசை வந்துச்சு. சாயாத்ரி மலைத்தொடருக்கும் அரபிதக் கடலுக்கும் இடைப்பட்ட நாடு அவருது. இதுதான் நம்ம பரசுராமர் கோடாலியை வீசி கடலில் இருந்து மீண்டெடுத்த நிலப்பகுதி.

யாகத்துக்காக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சுத்தம் செய்ய நிலத்தை உழுதப்ப, கலப்பையில் கீழ் மாட்டிக்கிட்ட ஒரு ராஜநாகம் செத்துப்போச்சு. ப்ச்.......நாகத்தைக் கொன்னதால் ஸர்ப்பதோஷம் வந்துருமேன்னு ராஜாவுக்குப் ப்யங்கர கவலை. பரசுராமர் நேரில்வந்து ராஜாவுக்கு ஆறுதல் சொல்றார். ( அட! க்ஷத்ரிய த்வேஷம் எல்லாம் தீர்ந்து போச்சு போல இருக்கு!)
'ராஜன், கவலைப்படாதே. அது உண்மையான ராஜநாகம் இல்லை. ஒரு அரக்கன் உன்னுடைய யாகத்தைக் கலைக்க அந்த நாக உருவெடுத்து வந்துருந்தான். அவனை நீ கொன்னதால் பழி பாவம் உனக்கு வராது'ன்னு சொன்னார். ராமபோஜருக்கு மனசு என்னமோ சமாதானம் ஆகலை!

:"சரி. உனக்குப் பரிகாரம் சொல்றேன், கேட்டுக்கோ. வெள்ளியால் நாலு ஆஸனங்கள் செஞ்சு யாகவேதியின் நாலு மூலைகளிலும் வச்சு அதுலே நாகர்களை ப்ரதிஷ்டை பண்ணிரு. ஒன்னுக்கு நாலாச் செஞ்சால் ஆச்சு!"

அதேபோல் வெள்ளி பீடங்களை நாலுமூலையிலும் நிர்மாணிச்சார் ராஜா. அதன்மேல் ஒவ்வொரு நாகர் வச்சு வழிபாடு நடத்தினார். யாகத்துக்கான வேலைகள் ஜரூரா நடந்து பரசுராமரே முன்னின்று யாகத்தை நல்லமுறையில் நடத்திக்கொடுத்தார். சிவனுக்கு மனசு குளிர்ந்துபோச்சு. இங்கேயே லிங்கரூபத்தில் நான் இருப்பேன்னு வாக்குக் கொடுத்து, இந்த ஊருக்கு இனி ரஜதபீடபுரம்ன்னு பெயர் வச்சுறலாமுன்னு சொல்லிட்டார். அப்படியே ஆச்சு.

கொஞ்ச வருசங்களுக்குப் பிறகு அந்த ஏரியாவில் இருந்த ஒருத்தர் பிள்ளைவரம் வேண்டி மகாவிஷ்ணுவைத் தியானிச்சுக்கிட்டே இருக்கார். ஒருநாள் அவருடைய கனவில்(?) அனந்தாசனா போஸில், ஆதிசேஷன் மேல் உட்கார்ந்த நிலையில் மகாவிஷ்ணு வர்றார். "நீ ரஜதபீடபுரத்துக்கு நடந்துபோய் (நாலு மைல் தூரம்) அங்கே இருக்கும் சிவலிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யணும். உனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்"

"ஏஞ்சாமி. அது சிவனாச்சே. நான் உங்களையல்லவா கும்பிடறேன்"

"இதுக்குப்போய் ஏன் கவலைப்படறே? சிவனும் விஷ்ணுபக்தர்தான். என் தாமரைத் திருவடிகளில் இருந்து புறப்பட்ட கங்கையைத் தன் தலையில் தாங்கிக்கிட்டு இருக்காரே. அதுவுமில்லாமல் அவர் என்னோட மச்சான்தானே? எங்களுக்குள் வேறுபாடு நாங்கள் பாராட்டுறதில்லை. நானும் அனந்தசயனத்தில் இருக்கும்போது(ம்) மானசீகமா சிவனை வழிபடுவேன். (வேணுமுன்னா அடையாறு ஸ்ரீ அநந்தபத்மநாபன் கோவிலில் போய் மூலவரைப்பார்..வலதுகையால். கீழே இருக்கும் சிவனை வழிபடறேனே!) நான் அந்த லிங்கத்தில் அந்தர்யாமியாக யார் கண்ணுக்கும் புலப்படாமல் வியாபித்து இருப்பேன். கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சமாதிரி சிவன் உடம்பில் விஷ்ணு."

இதுக்கும் ஒரு கதை இருக்கு. பரசுராமர் சிறுவனா இருந்த காலத்தில் மகா ருத்ரர்தான் அவருக்கு சாஸ்த்ர அப்யாஸங்களையும் வில்வித்தைகளையும் கற்றுக் கொடுத்த குரு. பயிற்சிகள் முடிஞ்சு நிபுணரானதும், குருவைப் பயபக்தியுடன் வணங்கி, 'குருதட்சிணையாக என்ன கொடுக்கணுமுன்னு சொல்லுங்க'ன்னு கேட்டார் பரசு. சிறந்த மாணவனைப் பெற்றதைவிட உண்மையான குருவுக்கு வேறெது மகிழ்ச்சியைத் தரமுடியும்? மனம் பூராவும் மகிழ்ச்சி ததும்பிய நிலையில் மஹா ருத்ரர் சொன்னாராம், 'நீ என் கூடவே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேணும்'ன்னு. அப்படியே ஆக இது ஒரு சந்தர்ப்பமா அமைஞ்சது. பரசுராமர், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராச்சே!

கோவிலுக்கு யாரோ வரைஞ்சு கொடுத்த பென்ஸில் ட்ராயிங்

அரசர் மயூரவர்மாவின் காலத்தில் இந்தக் கோவிலுக்குப் பூஜைகள் செய்ய, அஹிச்சத்ரபுரம் என்ற ஊரில் இருந்து சில அந்தணர்களைக் கூப்பிட்டு வந்து அவ்ர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார்களாம். வெள்ளி பீடத்தில் (பெள்ளி பீடா, கன்னடத்தில்) இருக்கும் சிவனை அர்ச்சித்து வந்ததால் இவுங்களுக்கு (ஷிவா + பெள்ளி) ஷிவால்லி அந்தணர்கள்ன்னு பெயர் வந்துருச்சு. இப்பவும் இந்தப்பகுதிகளில் கொவில்களில் எல்லாம் இந்தப் பரம்பரையில் வந்தவர்கள்தான் அர்ச்சகர்களாக இருக்காங்க. உடுபிக்கு அருகில் ஷிவால்லின்னு ஒரு ஊரே இருக்கு.

அனந்தேஸ்வரர் கோவிலுக்குள் நுழைஞ்சோம். பெரிய பிரகாரங்களோடு வித்தியாசமா இருக்கு. வெளியே தேரடிவீதியில் இருந்து பார்க்கும்போது உள்ளெ இவ்வளவு விஸ்தாரமா இருக்கும் என்ற எண்ணமே வரலை. இந்தக்கோவிலை அரசர் ராம போஜர், த்ரேதா யுகத்தில் கட்டினாருன்னு சொன்னாலும் இப்போ இருக்கும் இந்த அமைப்பு பஞ்சபாண்டவர்களால் த்வாபர யுகத்தில் புனரமைப்பு செய்யப்பட்டதுன்னு தலப்புராணம் அடிச்சுச் சொல்லுது! கோவிலில் இருக்கும் பெரிய ஸ்தம்பத்துக்கு மானஸ்தம்பமுன்னு பெயர். இது சமணக்கோவில்களின் கட்டிடக் கலையையொட்டிக் கட்டப்பட்டுருக்குன்னு சொல்றாங்க.
கருவறையில் மீசையுள்ள தங்க முகமூடியுடன் மூலவர் பெரியலிங்க ரூபத்தில் இருக்கார், பிரகாரம் சுற்றிவரும்போது ஒருமூலையில் நாகதேவதை, அஞ்சுதலைகளுடன் தங்கமா நிக்கிறாள். அடுத்து ஸ்ரீ தர்மஸாஸ்த்ராவுக்கு சின்னதா ஒரு சந்நிதி.. மஹாகணபதிக்கு, ராமர் & கோ (லக்ஷ்மணர், சீதா, ஹனுமன்)வுக்குன்னு சந்நிதிகள் இருக்கு. இந்தக் கோவிலுக்கு ஆதிகாலத்தில் ஒரு கோட்டையைப்போல் ஏழு ப்ரகாரமாம். இப்போ கொஞ்சம் சுருங்கித்தான் போயிருக்கு.
கருவறைக்கூரைகள் பெரிய காங்க்ரீட் ஸ்லாப் எடுத்து அடுக்கிவச்சதைப்போல் இருக்கு. பாண்டவர் காலத்துலே காங்க்ரீட் ஏதப்பா? கருங்கல் பாளங்களாத்தான் இருக்கணும். இவ்வளவு கனத்தைத் தாங்கணுமுன்னா அதுக்கு எப்பேர்ப்பட்ட அஸ்திவாரமும் தூண்களும் அமைச்சுருப்பாங்க? பார்க்கக் கவர்ச்சியா இல்லாத கட்டிடமுன்னாலும் யோசிச்சுப் பார்த்தால் இது கட்டிடக்கலையில் ஒரு அற்புதம் என்றுதான் சொல்லணும். வாயைப் பொளந்துக்கிட்டே ப்ரகாரம் சுத்துனதை யாரும் பார்த்துருக்கமாட்டாங்கன்னு நம்பறேன்:-)

ஸ்ரீ மாத்வர் இந்தப் பூவுலகைவிட்டு 'மறைஞ்சு' போனதும் இந்தக் கோவிலில்தான்னு சொல்றாங்க. ஒருநாள் சிஷ்யர்களுக்கு இங்கே பாடம் நடத்திக்கொண்டிருந்தப்ப, திடீர்னு மாத்வர் மேல் பூமாரி பொழிஞ்சு அவரை அப்படியே மூடிருச்சாம். பூவையெல்லாம் ஒதுக்கி அவரை வெளியில் டீச்சரைக் காணோ(மா)ம். இது நடந்தது 1317 வருசம்
முன்னூறு வருசத்துக்கு முதல் 'புட்டிகே' மடத்துலே அப்போ அதிபதியா இருந்த ஸ்ரீ புவனேந்திர தீர்த்தா ஸ்வாமிகள், நம்ம மாத்வருக்கு இங்கே அனந்தேஸ்வரா கோவிலில் ஒரு சந்நிதி வைக்கணுமுன்னு ஏற்பாடுகள் செஞ்சுட்டார். அப்போ ஒரு நாள் ஸ்ரீ மாத்வர் அவர் கனவில் வந்து, 'என் தலைமேல் எந்தக்கல்லையும் வைக்காதே. நானே இங்கேதான் இருக்கேன்'ன்னாராம். அப்புறம் அந்தச் சந்நிதி அப்படியே காலியாவே நின்னு போயிருச்சு. அந்த நிலைப்படிக்கு மேல் ரொம்பச்சின்னதா சிலை ஒன்னை சுவத்துலே பதிச்சுவச்சுட்டாங்க.
நாலு மாடவீதிகளில் அனந்தேஸ்வரனுக்கு நேர் எதிரா இருக்கு ஸ்ரீசந்த்ரமௌலீச்வரருக்கு ஒரு கோவில் இருக்கு. நேரம் அதிகமா ஆயிருச்சுன்னு வெளியில் நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டுக் கிளம்பினோம்.
கோவிலைச்சுற்றியுள்ள மாடவீதிகளில் நடக்கும்போது மடங்கள் அங்கங்கே கண்ணில் பட்டது. ஸ்ரீமாத்வர் சரோவருக்கு அருகில் தேர்போல் ஒன்னு. அதுமுழுக்க விறகுக் கட்டைகள் அடுக்கி வச்சுருக்கு. திருக்குளத்தில் நித்ய அனுஷடானங்கள் செய்துகொண்டு சிலர்.
கட்டை மேட்டர் கொஞ்சம் சுவையானதுதான். இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்லவா?


கொசுறுத்தகவல்: கட்டைன்னதும் சந்தனக்கட்டை நினைவுக்கு வருது. உடுபி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வருசம் நாலு டன் சந்தனம் தேவைப்படுது. இந்த்த் தேவையை நிறைவேற்றித் தருவது கர்னாடகா அரசுதான்.

-------------------------------------------------------------------------------------
கிருஷ்ணன் கொடுத்த கமுகுப்பூச் சரம் !

14 comments:

said...

ரொம்ப பொறாமையா இருக்குன்னு தான் சொல்லணும்.. கண்ணு பட்டுற போவுது நல்லா சுத்தி போட்டுக்கோங்க டீச்சர், ரொம்ப நாளைக்கு இப்படி நல்லா சுத்தி பாத்து எங்களுக்கும் காமிக்கணும்!

said...

கருவறையில் தங்கமுகமூடீயில் மீசையுள்ள மூலவர் அழகு. பென்சில் ஓவியமும் அழகு:)))

said...

//பார்க்கக் கவர்ச்சியா இல்லாத கட்டிடமுன்னாலும் யோசிச்சுப் பார்த்தால் இது கட்டிடக்கலையில் ஒரு அற்புதம் என்றுதான் சொல்லணும்//

நிஜமா அப்படித்தான் தோணுது. கட்டை மேட்டர் சுவாரஸ்யமானதுதான்.படிச்சது லேசா மறந்தாப்ல இருக்கு. அடுத்த இடுகைக்கு காத்திருக்கேன்.

said...

pencil drawing super..

//கட்டை மேட்டர் கொஞ்சம் சுவையானதுதான். இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்லவா?//

Eagerly waiting.

said...

ரஜதசபைன்னா வெள்ளியம்பலம். கனகசபைன்னா பொன்னம்பலம். வெள்ளி பொன்னம்பலம்னு சொன்னா நமக்குப் புரிஞ்சிரும்னுதான் ரஜத கனக்கன்னு சொல்லிக்கிறது.

ரஜத பீடம்னா வெள்ளி மேடை. கன்னடத்துல பெள்ளி. அவ்ளோதான்.

பெரும்பாலும் கருநாடகத்துல உள்ள சிவங்கோயில்கள்ள சிவலிங்கத்துக்கு மீசையிருக்கும். கண்ணு மூக்கெல்லாம் வெச்சிருக்கும். தர்மஸ்தலா போனாலும் அப்படித்தான் இருக்கும்.

இப்ப என்ன டிரெண்டுன்னா கொளத்தப் பாத்தாப்புல கூர மேல சிவனோட செலைய வெக்கிறது. பெங்களூர்லயே ரெண்டெடத்துல அப்படிப் பாத்தேன்.

அப்புறம் சமணக்கோயில் மாதிரின்னு சொன்னீங்க பாருங்க. அது ரொம்ப நுணுக்கமான சங்கதி. பெங்களூர்ல இருந்து பொறப்பட்டு மங்களூர் போற வழியில ஹாசனுக்குக் கொஞ்சம் முன்னாடி ஷ்ரவணபெளகோளாவுக்கு வழி பிரியும். அங்க மல மேல பகுபலி இருக்காரு. துணியில்லாம பெருசா நிப்பாரு. அங்க நெறைய சமணர்கள் இருக்காங்க இன்னமும். அந்த மலைக்குப் பேரு சூரியகிரி. அதுக்கு எதுத்தாப்புல சந்திரகிரி. அந்த மலையிலயும் சமணக் கோயில்கள் இருக்கு.

புராணப் புளுகுகளை ஓரங்கட்டுங்க. நீங்க போன கோயில் அனேகமா சமணக் கோயிலா இருந்து மாத்தப்பட்டதா இருக்க வாய்ப்பு இருக்கு.

காளிதாசரோட மாளவிக்காக்னி மித்ரம் அப்படீங்குற நாடகத்தின் மொழி பெயர்ப்பைப் படிக்குறப்போ பல உண்மைகள் தெரிஞ்சது. அக்னிமித்ரன் ஒரு அரசன். பிராமணனும் கூட. பரம்பரையா அவன் அரசன் கெடையாது. அவனுடடய அப்பா... புத்தர்களையும் சமணர்களளயும் அழிக்க என்னெல்லாம் பண்ண முடியுமோ அத்தனையும் செஞ்சிருக்காரு. பிக்கோ பிக்குணியோ வந்தா வெட்டுறது. விகாரைகளைப் பள்ளிகளை இடிக்கிறது. இப்பிடி நெறைய. இதுதான் உண்மையிலேயே நடந்தது.

said...

ஏயப்பா எவ்வளவு விஷயம்!. நிஜமாவே
அந்தக் கூரையை நினைச்சா படு அதிசயமா இருக்கு.
கூடவே ராகவன் சார் சொல்கிற கதையும் யோசிக்க வைக்கிறது.
ஹ்ம்ம்.சரித்திரம் காவுகள் கொன்டுதான் படைக்கப் படுகிறதோ.

said...

வாங்க பொற்கொடி.

பொறாமையா? ஹாஹா

அதான் புண்ணியத்தை எல்லோருக்கும் பங்கு போட்டுக் கொடுத்துட்டேனே!

said...

வாங்க சுமதி.

எனக்கும் அந்த பென்ஸில் ஓவியம் ரொம்பப் பிடிச்சுப் போச்சுப்பா. படம் எடுத்துக்கலாமான்னு கேட்டதுக்கு, நம்ம அதிர்ஷ்டம் சரின்னுட்டாங்க.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கட்டை மேட்டர் போட்டாச்சு. யாரும் கட்டையை எடுத்துக்கிட்டு அடிக்கவராமல் இருக்கணும்:-))))

said...

வாங்க ப்ரசன்னா.

தெரிஞ்சவரையில் மேட்டர் போட்டுருக்கேன். பார்த்துட்டுச் சொல்லுங்க.

said...

வாங்க ஜீரா.

பெரிய பெரிய சிலைகள் இப்பெல்லாம் ஏராளமா அங்கங்கே இருக்கு! ஏதோ பக்தர்களை எண்டர்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க. டெல்லி ஏர்ப்போர்ட் போகும் வழியில் (கூர்காவ்லே இருந்து) பெரிய செம்புச்சிலையா சிவன் தண்டத்தோடு உக்கார்ந்துருக்கார்.

சமணக்கோவில் ஸ்டைல் என்பது ரொம்பச் சரி. இன்னும் சில கோவில்களைப் பார்த்தேன். அதெல்லாம் பின்னால் வரப்போகும் இடுகைகளில்.

ஒன்றை அழிச்சால்தான் இன்னொன்று நிக்கும் என்ற எண்ணத்தில் என்னெல்லாமோ செஞ்சுருக்காங்க அப்போ:(

said...

வாங்க வல்லி.

உண்மையான சரித்திரம் நடந்தது நடந்தபடி எழுதி வைக்கலை பாருங்க:(

சார்பு எடுத்துத்தான் பலதும் எழுதப்பட்டிருக்கு சமீபகாலச் சரித்திரம் முதல்:(

நேர்மை போதாதுப்பா.

said...

மீசையுள்ள மூலவர், கோயில் கூரை எல்லாமே வித்தியாசமாக இருக்கு.

said...

வாங்க மாதேவி.

வித்யாசமா இருக்கேன்னுதான் இங்கே படங்காமிக்கிறேன்:-))))