Monday, May 31, 2010

நத்தை மனிதராகிறோம்!!!

அதே நாற்காலி, அதே சோஃபா, அதே எல்லாம்னு இப்ப ஆகிவருது, பார்த்தீங்களா? முந்தியெல்லாம் ஊர் மாற்றிப்போகும்போது சாக்கு மூட்டைகள் நிறைய பண்டபாத்திரங்களும், துணிமணிகள் அடைச்ச நாலைஞ்சு ட்ரங்கு பொட்டிகளும் சுருட்டுன மெத்தைகளுமா 'பஸ் டாப்'லே போட்டுக்கிட்டு போறதுதான். அதுவும் அநேகமா வருசாவருசம் இடமாற்றல் கிடைச்சுக்கிட்டு இருந்த காலம் அப்போ. போற இடங்களில் ஏற்கெனவே நமக்கு குவாட்டர்ஸ் இருக்கும். கொண்டு போன சாமான்களை வச்சுக்கிட்டும்,. அங்கே அப்போதைய தேவைக்குன்னு எதாவது ஏற்பாடு செஞ்சுக்கிட்டும் இருந்துருவோம். அரசாங்க சப்ளையான பூதம்பூதமா இருக்கும் மேசைகளும் நாற்காலிகளுமா ஒரு மாதிரி அலங்காரத்தோடு வீடு இருக்கும். அதைப்பற்றி அப்போ ஒரு கவலையும் கிடையாது. பட்டாம்பூச்சி போல கவலை(??) ஏதுமின்றி பறந்த நாட்கள்.

மூட்டையைப் பிரிச்சால் பாத்திரங்களில் சொட்டைகள் ஏராளமா வந்துருக்கும். எல்லா ஊர்களிலும் பாத்திரத்தின் நசுங்கலை எடுக்கவும், ஈயம் பூசவும் ஆட்கள் தெருவிலே கூவிக்கிட்டு வருவாங்க. அவுங்களை வேலைக்குக் கூப்பிட்டு நம்ம வீட்டு வாசலிலே உக்காரவச்சு தட்டிக்கொட்டி ரிப்பேர் செஞ்சு வாங்கிக்குவோம். சின்னதா அடுப்புக்கரி பத்தவச்ச குழிகளில் தோல்துருத்தி வச்சு புஸ் புஸ்ன்னு காத்தடிச்சு ஈயம் உருக்குவதையெல்லாம் கண்கொட்டாம இருந்து வேடிக்கை பார்ப்பேன். அப்படியே நம்மூட்டுப் பாத்திரங்களுக்கும் காவல்!

சில வருசங்களில் அம்மாவுக்கே போரடிச்சுப்போச்சு போல. இதுலே பலசமயம் அக்காக்களின் ஃபேவரிட் பாத்திரங்களும் அடிபட்டு நசுங்கிப் போயிருதுன்னு அவுங்க கூச்சல் ஒரு பக்கம். அம்மா, தச்சுவேலை செய்யறவரிடம், ஒரு பெரிய மரப்பெட்டி செய்யச் சொன்னாங்க. கட்டில் மாதிரி அதுமேலே ஒரு ஆள் (அது நான் தான்) கால்நீட்டிப் படுக்கலாம்.
யானைப்பெட்டின்னு அதுக்கு நான் பேர் வச்சேன்:-) அதுலேதான் முக்கிய பாத்திரங்கள் இடம்பிடிக்கும். சொட்டையாகும் பாத்திரங்கள் எண்ணிக்கை கொஞ்சம் குறைஞ்சது.

என்னுடைய குடித்தனம் ஆரம்பமான காலக்கட்டங்களில் எண்ணி ஒரு பத்துப் பாத்திரங்கள் இருந்தாலே அதிகம். ஆனாலும் குடும்பப் பெட்டிக் கலாச்சாரத்தை அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். நோ யானைப்பெட்டி:( இது கோகோகோலா கான்ஸண்ட்ரேட் வரும் அட்டைப்பெட்டியா இருந்து, அப்புறம் ஒரு டீ செஸ்ட்க்கு மாத்திக்கிட்டேன். டீசெஸ்ட் செஞ்ச அதிர்ஷ்டம் பாருங்க.... அது பூனா வந்தபிறகு உள்ளூர்லேயே ஆறு மாசத்துக்கு ஒரு வீடுன்னு மாற்றல்தான் முதல் மூணு வருசங்கள். அந்த செஸ்ட்டும்,டைனிங் டேபிள், வரவேற்பறை மேசை, அடுப்பு மேடைன்னு எடுக்காத ரூபம் இல்லை நம்மூட்டுலே!

அயல்நாட்டுக்குக் கிளம்பி வந்தபோது.... ட்ரங்கு பொட்டிகள் போய் ஸூட்கேஸ் வந்துச்சு. அதே பத்துப் பாத்திரங்களை ஒரு பெரிய லெதர் கேரி பேக்லே போட்டுக்கிட்டுப் போனோம். அந்த நாட்டுலே இருந்து வேறு நாடு போகும் போதுதான் முதல்முறையா பேக்கிங் செய்யும் ஆட்கள் வந்தாங்க. அவுங்க வந்து எடுத்துவைக்குமுன்னேயே நம்மாளு பேக்டரியில் இருந்து பொட்டிகளைக் கொண்டுவந்து 99% சாமான்களை 'அடைச்சு' வச்சுட்டார். திகைச்சு நின்னவங்க, வந்துட்டோமேன்னு அவுங்க பங்குக்கு டிவியை மட்டும் பொதிஞ்சு எல்லாத்தையும் வாரிக்கிட்டுப்போய் அனுப்பி வச்சாங்க.

நியூஸி வந்து சேர்ந்த சாமான்களில் பலதெல்லாம் தூளாகிக் கிடந்தது, நம்ம கைங்கர்யத்தாலேன்னு புரிஞ்சதும் ஆள் கப்சுப்:-) இதுக்கு அப்புறம் இடமாற்றம் வருமுன்னு நான் கனவுகூடக் காணலை. (நான் மட்டும் வெறுங்கையுடன் தனியா ஒவ்வொரு இரவும் இந்தியா வந்து போய்க்கிட்டு இருந்தேன். இது கணக்கில் வராத பயணம்)

போனவருசம் வேலை காரணமா இந்தியா வரவேண்டியதாப் போயிருச்சு. இந்த முறை சாமான்கள் மேலே கையை வைக்கக்கூடாதுன்னு நம்மாளுக்குக் கண்டிஷன் போட்டேன். தொழில்முறையான
பேக்கர்ஸ் வந்து மூணு நாளில் சகலத்தையும் ஒழுங்கா பேக் பண்ணி முடிச்சாங்க. இந்தியா கொண்டுவரவேண்டியவை, அங்கேயே ஸ்டோரேஜ்லே போட்டு வச்சுட்டு வரவேண்டியவைன்னு ரெண்டு பிரிவு. அமர்க்களமா அருமையா வேலையைச் செஞ்சாங்க. நாம் எதையும் தொட்டுப் பார்க்கலை. எது எதுன்னு சொன்னதோடு சரி. நானும் இதையெல்லாம் சுத்திச்சுத்திப் படம் எடுத்துக்கிட்டுக் கிடந்தேன்.

வந்திறங்கி வீடு தேடி எல்லாம் ஒருமாதிரி அமைஞ்சதுக்குப் பிறகு சாமான்கள் வந்து சேரத் தாமதமா ஆகிருச்சு. தாற்காலிக ஏற்பாடா, ஒரு கட்டில், மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷீன், கம்ப்யூட்டர் டேபிள், சில நாற்காலிகள் எல்லாம் வாடகைக்கு எடுத்துப்போட்டு புழங்கிக்கிட்டோம். இதெல்லாம் சென்னையிலே வாடகைக்குக் கிடைக்கும் என்பதே எனக்கு முதலில் தெரியாது. நம்ம கோபால்தான் 'வலைவீசி'த் தேடிக் கண்டுபிடிச்சார். 'ட்ரேடு ஏஜன்ஸீஸ்' ன்னு ஒன்னு, வள்ளுவர் கோட்டம் பக்கத்தில் இருக்கு. போய்ப் பார்த்து நம்ம தேவைகளைச் சொல்லி, சாமான்களைப் பார்வையிட்டு நமக்கு வேணுங்கறதைத் தெரிவு செஞ்சோம். இதன் உரிமையாளர் சம்பத் நல்ல நட்பானவர். 28 வருசமா இந்த பிஸினெஸ் செய்யறாராம். மனைவி மகன்னு குடும்பம் பூராவும் யாவாரத்தைப் பார்த்துக்கறாங்க. வேலை விஷயமா தாற்காலிக இடமாற்றமுன்னு வர்றவங்களும், அமெரிக்காவில் இருந்து முக்கியமா சங்கீத சீசனுக்கு வந்து ஒரு சில மாசங்கள் வீடோ, ஃப்ளாட்டோ வாடகைக்கு எடுத்துத் தங்குற மக்கள்தான் இவருடைய வாடிக்கையாளர்களாம். இப்போ நாமும் அந்த லிஸ்ட்டுலே இருக்கோம்.


சென்னைத் துறைமுகத்துக்கு நம்ம கண்டெயினர் வந்து சேர்ந்ததும் இங்கே சென்னையில் க்ளியரிங் ஏஜண்டு நம்மை துறைமுகத்துக்கு வரச்சொல்லி உள்ளே போக ஒரு நாள் அனுமதி பாஸ் வாங்கிக்கொடுத்தார். இது(வும்) ஒரு அனுபவமுன்னு கிளம்பிப்போனோம். கண்டிஷன் ஒன்னுதான் படா பேஜாராப்போச்சு. கேமெரா கொண்டுவந்துறாதீங்கன்னார். (அவருக்கு எப்படித்தெரியும் நம் புகைப்பட ஆர்வம்!!!!!)

நம்ம கண்முன்னால்தான் கண்டெயினர் பூட்டைத் திறந்தாங்க. அதிகாரி ஒருத்தர் வந்து பார்த்தார். லக்னோக்காரர். ஹிந்திமே பாத் ஹுவா. ஒரு கட்டணம் சொல்லி அதை ட்யூட்டியாக் கட்டிட்டு சாமான்களை எடுத்துக்கச் சொல்லிட்டார். நாலைஞ்சு கையெழுத்தும், சின்னக் கட்டணமுமா எல்லாம் அஃபீஸியலா முடிஞ்சது. கண்டெயினர் துறைமுகத்தைவிட்டுக் கிளம்புச்சு. ஆனால் நம்ம வீடு இருந்த பகுதியில் பகலில் கண்டெயினர் வர அனுமதி இல்லையாம். அதனால் ஏஜெண்டுகளின் கிடங்குக்கு(வண்டலூர்) கொண்டுபோய் அங்கிருந்து ரெண்டு ட்ரக்குகளில் நிரப்பி மறுநாள் காலை வீட்டுக்குக் கொண்டுவந்து எல்லாப் பொதிகளையும் பிரிச்சு, சாமான்களை நாம் சொல்லும் இடங்களில் அடுக்கி, அட்டைப்பொட்டிகள், காகிதம், பப்புள்ராப் எல்லாம் எடுத்துச் சுத்தம் செஞ்சுட்டுப்போச்சு ஒரு குழு. ஒரே ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடி மட்டும் விரிசல் விட்டுருந்துச்சு, ஒரு கண்டெயினர் சாமான்களில். இதுலே சாமான்களைப் பிரிக்கும் சிலர், நாங்க இன்னும் இதைவிட அருமையா இங்கே பொதிஞ்சு அடுக்குவோம். எல்லா நாடுகளுக்கும் சாமான்களை அனுப்பி இருக்கோம் அது இதுன்னு சொல்லிக்கிட்டே வேலையைப் பார்த்தாங்க.

அங்கே வீட்டுக்குள்ளே இருந்த சாமான்களை அப்படியே இங்கே மாத்தினதால், புது இடம் என்ற 'திடுக்' எல்லாம் அவ்வளவா இல்லை. எங்கே திரும்புனாலும் பழக்கப்பட்ட சாமான்களும், செட்டிங்ஸ்மா இருந்துச்சு. நம்ம வழக்கமான வேலைகள் யதார்த்தமா நடந்துச்சுன்னு வையுங்க. இந்த வீட்டுலே அடுக்களை முக்கியமாச் சொன்னாப் பேண்ட்ரி நியூஸியில் நம்ம வீட்டுலே இருந்த அளவு இருந்ததால் விறுவிறுன்னு சாமான்களை அடுக்கி முடிக்க சவுகரியமாப் போச்சு. அசௌகரியமுன்னு சொன்னால்.....
சிங்காரச்சென்னையின் அருமையான பகுதின்னு எல்லோரும் சொன்னாலும் கூட ஒரே சத்தமும் தெருப்புழுதியுமாத்தான் நாட்கள் போச்சு. இத்தனைக்கும் நமக்கு எதிர்வீடு (கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கும்) சினிமா நடிகர் விக்ரமோடது. நம்ம வீட்டுக்கு முன்னால் எதிர்வரிசையில் ரெண்டு வருசமுன்னால் வீடு கட்ட ஆரம்பிச்சு இன்னும் வேலை நடந்துக்கிட்டே இருக்கு. இழைச்சு இழைச்சுக் கட்டறாங்கன்னு சொல்வதை தினமும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். சரியா ராத்திரி 12 மணிக்கு அங்கே செங்கல் மற்ற சாமான்கள் லோடு இறக்கவரும் லாரிகளின் இரைச்சல் அடங்கவே ரெண்டு மணி ஆகிரும். இதுலே மரவேலை செய்யறவங்க ராத்திரி 11 வரை டொக் டொக்குன்னு சத்தத்தோட வேலை செய்வாங்க. அக்கம்பக்கம் ஆட்களைப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. நம்ம பக்கத்து பில்டிங்லே சரியா பகல் 2 மணிக்கு தச்சுவேலை சத்தம் ஆரம்பிக்கும். வுட் ஒர்க் நடக்குதாம். நம்ம வீட்டுக்குப் பின்னால் இருந்த காலி மனையில் கட்டிடம் முளைக்க ஆரம்பிச்சுருக்கு. காங்க்ரீட் தூண்கள் போட்டுக்கிட்டு இருக்காங்க. இப்படி சத்தமான சத்தம். இத்தனைக்கும் தெருவில் எங்கள் பகுதியில் பத்தே கட்டிடங்கள்தான்!!!!

தினமும் அதிகாலையில் கடற்கரைக்குப்போய் நடக்கணும். நியூஸி திரும்பும்போது இப்போ இருக்கும் உடம்பு பாதியாக் கரைஞ்சு(!!) போகணுமுன்னு என்னென்னவோ மனக்கோட்டை கட்டிக்கிட்டு வந்துருந்தேன். ஆனா......ப்ச் ............விடுங்க.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை.

25 comments:

said...

:-)

-Srini

said...

வீட்டு சாமான்களை பேக்கிங் பண்ற கொடுமையை ஞாபகப்படுத்திட்டீங்களே :-((.

said...

ஹை எங்க வீட்டுலயும் ஒரு பெட்டி இருக்கு அது எடுக்காத அவதாரமே இல்லை..
அதுக்கு’ உன் சீதன பெட்டி’ ’சீதனபெட்டி’ என்று கிண்டல் பேரு இருக்கு.. அது இந்த வீட்டு வேலை சமயத்துல வேற கலராகி புதுப்பொலிவாகி இருக்காக்கும்..

said...

ஷோபா சந்திரசேகர் தாங்கள் கட்டி வைத்துள்ள பிரமாண்டமான வீட்டை பாதுகாக்க கஷ்டப்படுவதை சமீபத்தில் சொல்லியதை விக்ரமும் பின்னாளில் ஏதோ ஒரு சமயத்தில் சொல்வார்.
இங்கு இரண்டு சந்துகளுக்குள் வீடு மாற்றும் போதே அடுத்த ஒரு வாரத்திற்கு சுக்கு மிளகு திப்பிலியுடன் அயோடக்ஸ் தேட வேண்டியுள்ளது. உங்கள் பாடு பெரும்பாடு தான்.
நட்பு, உறவினர்,மகள் எவருக்கும் நீங்கள் கடிதம் எழுத வேண்டியதே இல்லை. உங்கள் இடுகையே போதுமானது.

said...

டீச்சர், சினிமாக்காரருக்கு பக்கத்துல வந்துட்டீங்க..எப்ப உங்களை சினிமால பார்க்கலாம்?

சீரியல்ஸ்ல நடிக்காதீங்க..நான் பார்க்கிறதில்ல.. :-(

said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

said...

//யானைப்பெட்டின்னு அதுக்கு நான் பேர் வச்சேன்:-)//

Appove yaanaiya????

Ammam neenga irundhathu Besant Nagar-a?

said...

வீடு மாறுவதும்,புதுவீடு கட்டும்போது பக்கத்தே வசிப்பதும் அப்பாடா போதுமேன்றே ஆகிவிடும்.:(

said...

வாங்க ஸ்ரீனி,

சிரிப்பாணியா??? நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா........

said...

வாங்க கயலு.

பொட்டிக்குப் புதுவாழ்வா!!!! பேஷ் பேஷ்

said...

வாங்க ஜோதிஜி.

எந்த வீட்டைச் சொல்றாங்க ஷோபா?
சாலிக்ராம வீட்டையா? அதுதான்னா அதை நான் பார்த்துருக்கேன். பெரிய வீடுதான்.

கடிதம் எழுதும் கலைதான் இந்தக் காலத்துலே அடியோடு நின்னு போச்சே:(

நம்ம இடுகை(யும்) ஒரு புலம்பெயர்ந்த 'வரலாறு' தான். சரித்திரம் முக்கியம் பாருங்க:-))))

மகளுக்குத் தமிழ் படிக்கத்தெரியாது. பேசமட்டுமே தெரியும். இதுவும் புலம்பெயர்ந்ததால் ஏற்பட்ட நிலமைகளில் ஒன்னு:(

said...

வாங்க ரிஷான்.

சான்ஸ் கிடைக்கச் சான்ஸே இல்லாம அங்கிருந்து கிளம்பி வந்துட்டேனே:(

நானும் சீரியல்ஸ் பார்க்கறதில்லைப்பா!!!

said...

வாங்க தலைவன் குழுமம்.

அப்டீங்கறீங்க????

செஞ்சுருவோம்!!!

said...

வாங்க ப்ரசன்னா.

அப்ப ஒருபேச்சு இப்ப ஒரு பேச்சு என்பது இல்லைன்னு தெளிவாயிச்சு:-)))


பெஸண்ட் நகரே தான். கலாக்ஷேத்ரா காலனி.

said...

வாங்க மாதேவி.

புதுவீடு கட்டுவதில் இங்கே ஒன்னு கவனிச்சேங்க. அதான் பேஜாரு. பொது இடங்களைக் கொஞ்சம்கூடக் கூசாம ஆக்ரமிப்புச் செஞ்சு வீடுகட்டும் பொருட்களைப் போட்டு வச்சுக்கறாங்க.

பாதித் தெருவை இவுங்க எடுத்துக்கிட்டா எப்படி?

said...

:)

said...

தகவலுக்கு நன்றி

said...

தற்போது இதேபோல் நாங்களும் வீடு மாறிக்கொண்டே இருக்கிறோம் டீச்சர்.

said...

வாங்க லோகன்.

தகவலைக் 'கண்டுக்கிட்டதுக்கு' நன்றி.

பதிவுலக நண்பர் அப்போ வீட்டுக்கு வந்துருந்தார். பலமாசங்களுக்குப் பிறகு, அவரது நண்பருக்காக இந்த வாடகை'சமாச்சாரம் பற்றிவிவரம் கேட்டப்பதான் இதைப் பதிவு செஞ்சால் யாருக்காவது பயனாகுமேன்னு தோணுச்சு.

said...

வாங்க சுமதி.

இளவயசுலே அவ்வளவாத் தெரியாது. விளையாட்டுப்போல வீடு மாறிடுவோம்.

இப்ப ஓய்வு நெருங்கும் சமயம் இதையெல்லாம் கட்டிவலிச்சுப் போகும்போதுதான் ......

சுமைகள் வேற கூடிப்போயிருக்கு:(

said...

நீங்க வந்ததும் இருந்ததும் கதையாப் போச்சா/
:( போட்டோவைப் பார்க்கும் போது மனசுக்குக் கஷ்டமாப் போச்சு துளசி.
எதையும் சுலபமா எடுத்துக்கிறதனாலதான் உங்களால எழுத முடியறது. என்னிக்கும் இந்தத் துணிச்சல் ,பொறுமை உங்களோட இருக்கணும்.

said...

வாங்க வல்லி.

எங்கே எல்லாத்தையும் சுலபமா எடுத்துக்க?
அப்பப்ப சாமியாடி முடிச்சுடறதுதான்.

இல்லேன்னா..... தாங்காது கேட்டோ:-))))

said...

//எண்ணி ஒரு பத்துப் பாத்திரங்கள் இருந்தாலே அதிகம்//

அப்ப நீங்க வெறுமனே பாத்திரம் தேச்சாலும் பத்து பாத்திரம் தேச்சதாதானே சொல்வாங்க ?

said...

வாங்க செந்தழல்.

இல்லையா பின்னே? அதான்.....

எப்பவுமே பத்துப் பாத்திரத்துக்கு மேலே சிங்லே இருக்கவிடமாட்டேன்:-))))