Thursday, April 29, 2010

கூப்பிட்ட குரலுக்கு.............

இன்னிக்கு 'ராத் தங்கல்' எங்கேன்னு (சீட்டுக் குலுக்கிப்)பார்த்ததில் உடுப்பிக்கு சான்ஸ் அடிச்சது. நெட்லே தேடுனா ஒன்னும் சரியா வரலை. நேரில் போனால் ஆச்சு. யாத்ரக்கார்க்கு சௌகர்யங்கள் கிருஷ்ணன் செஞ்சு தரட்டுமே.
கொல்லூர் டு உடுப்பி மலைப்பாதையா இருக்கு. இருவது நிமிசப் பயணத்துலே வலது பக்கம் அழகா ஒரு தோரண வாசல். புள்ளையார், விஷ்ணு, சிவான்னு இல்லாம நடுநாயகமா ஒரு மாடு! 'அச்சச்சோ..... என்னன்னு தெரியலையே'ன்னு அதுக்குள்ளே நுழைஞ்சோம். புத்தம் புதுசாப் போட்ட சிமெண்டுப் பாதை, மெல்ல மலை ஏறுது. பள்ளிக்கூடம் விட்டு வரும் பசங்க சின்னச்சின்னக் குழுவாப் பேசிக்கிட்டே மலைப்பாதையில் நடந்து போறாங்க. ஒரு ரெண்டு கிலோமீட்டர்வரை போயிட்டு, இன்னும் எவ்வளவு தூரமுன்னே தெரியலையே..... வந்து மாட்டிக்கிட்டோமோன்னு பசங்களைக் கேட்டால் கோவில் ரொம்ப தூரத்துலே இருக்காம். பத்து நிமிசம் ஆகுமாம்! அச்சச்சோ.......
ரெண்டே நிமிசத்துலே கோவில் முன் நின்னோம். gகாயினகுடி. பசுக்களுக்கான கோவில். புதுசாப் பெயிண்ட் அடிச்சு சூப்பரா இருக்கு. விசாரிக்கலாமுன்னா யாரையும் காணோம். போயிட்டுப்போகுது..ம்ம்ம்ம்ம்மா........
ஒரு அரைமணிக்கூறில் இன்னொரு பெருமாள் கோவில் கண்ணில் பட்டது, என்ன ஊர், என்ன இடமுன்னு தெரியலை. எங்கெயாவது பெயரை ஆங்கிலத்திலோ இல்லை ஹிந்தியிலோ எழுதி வைக்கக்கூடாதா? வழிநெடுக பெட்ரோல் பங்குகளைப் பார்த்தாலும், போர்டில், கம்பெனி பெயர் இருக்கே தவிர அது இருக்கும் இடத்தோட பெயரை எழுதிவச்சால் குறைஞ்சா போயிரும்.? தப்பித்தவறி பெயர் எழுதி இருக்கும் கோவில்களில் எல்லாமே ஜிலேபி:( யாத்ரக்காருக்கு பயங்கர புத்திமுட்டு:(

லக்ஷ்மி வெங்கடரமண ஸ்வாமி. கோவில் பண்டிட்டுக்கு என்னமோ நம்மைப் பார்த்தவுடன் அதீத மகிழ்ச்சி. உள்ளே கூட்டிட்டுப்போய் தீபாராதனை காமிச்சுப் பிரஸாதம் கொடுத்தார். கோவிலையும் சுத்திக் காமிச்சார். ஒரு ஆயிரம் வருசமாச்சாம் கோவிலுக்கு வயசு. மூடிவச்சுருக்கும் தேர் ஷெட்டைத் திறந்து தேரைக் காமிச்சார். அவர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். புத்தம் புதுசா ஜொலிக்குது. அட்டகாசமான மரவேலைப்பாடு. ரொம்ப நுணுக்கமாச் செதுக்கி இருக்காங்க.

கோவிலுக்கு மூணு குளம் இருக்கு. நல்ல சுத்தமானவைகள். அதுலே ஒன்னு வித்தியாசமான டிஸைனில் படிக்கட்டுகளோடு. அதுக்குப் பக்கத்துலே நாகர்களுக்கு ஒரு சந்நிதி. இது தனிக் கட்டிடமா இருக்கு. உள்ளே நிறைய கல்நாகங்கள். அதுக்குப் பின்னே பெரியபெரிய புத்துகள். இங்கேயும் அபிஷேகத்துக்குன்னு தண்ணீர் சொட்டும் அமைப்பு. புற்றுகளில் 'பெரியவங்க ' இருக்காங்களாம். சில சமயம் ச்சும்மாக் காத்தாட வெளியே வந்து உக்காருவாங்களாம். இந்தப் பக்கம் பிள்ளைகுட்டிகளோடு பண்டிட்டின் குடும்பம் வசிக்குது..... என்னதான் கோவில் நாகமுன்னாலும்..... குலை நடுங்கத்தான் செய்யுது! ( வீடுகளில் மனைப்பாம்புன்னுகூட புத்துகளைப் பார்த்துருக்கேன். ஒரு சமயம், ஒரு வீட்டுலே நடு ஹாலில் கூரைவரை உயரமான புத்து இருந்துச்சு.நாகத்தோடு சம்பந்தப்பட்ட நம்ம குடும்பக் கதை ஒன்னு இருக்கு. அதை அந்த 1500லே போடத்தான் வேணும்)


நாகரஹாவு

தாகத்துக்கு எதாவது குடிச்சுட்டுப் போங்க. சாயா இல்லே காஃபி தயாரிக்கச் சொல்றேன்னு விருந்தோம்பல் வேற! பரவாயில்லையே. கோவில் பண்டிட்கள் அதிதி சல்காரம் கூடச் செய்யறாங்களே!!!!! அதெல்லாம் ஒன்னும்வேணாம். கோவில் நல்லா சுத்தமா இருக்குன்னு சொல்லிப் பாராட்டிட்டு வந்தேன். நாலைஞ்சு சிறுவர்களும் சிறுமிகளும் கோவில் வெளிப்புறத்தில் குப்பைகள் இல்லாமல் பொறுக்கிப் போட்டுக்கிட்டும், அங்கங்கே தரையில் முளைச்சுருக்கும் புல்பூண்டுகளை எடுத்துச் சுத்தம் பண்ணிக்கிட்டும் இருந்தாங்க. உண்மையான சேவை.

யாராவது காஃபின்னு சொன்னதும் நமக்கும் காஃபித் தாகம் வந்துருமே. இதுக்குள்ளெ மலைப்பாதையிலிருந்து ஹைவே 17 இல் வந்து கலந்துருந்தோம். ஒரு இடத்துலே நிறுத்தி காஃபி ஆச்சு. ப்ரஷாந்துக்கு மட்டும் செட் தோசை. அது என்ன செட் தோசைன்னு நம்ம இவருக்கு ஒரு ஆர்வம். ஆனால்.....பசி இல்லை இப்போ வேணாமுன்னுட்டார். இனி நேரா உடுப்பிதான்.

வண்டி ஓடும்போது என்னவோ விசித்திரமா ஒரு சத்தம். நிறுத்திப் பார்க்கணுமுன்னு கோபால் கண்டிப்பாச் சொன்னார். பார்த்தா...... சந்தேகம் சரி. பின் சக்கரத்தில் பங்ச்சர். அதுவும் என் பக்கம்:( மெயின்ரோடைவிட்டுக் கீழிறங்கி நிறுத்துன்னு சொன்னதைக் கேக்காம நல்லா பிஸியா இருக்கும் ஹைவேயில் நிறுத்துனதும் நல்லதாத்தான் போச்சுன்னு சொல்லணும். ஸ்டெப்னி இருக்கு. மாத்திக்கலாமுன்னு ஜாக்கை எடுத்து தப்பான இடத்தில் வைக்கும் ப்ரஷாந்தைப் பார்த்துக் குலை நடுங்குனதென்னவோ நிஜம். வண்டி பேலன்ஸ் இல்லாமத் தரையில் உக்காரப்போகுது. சும்மா அப்படியே வண்டியை நிறுத்துனா ஆச்சா? ஹஸார்டு லேம்ப் போடணும் போடணுமுன்னு அதுவும் ஆச்சு. வண்டிக்குப் பக்கத்தில் நின்னாதான் 2 விபத்துகள் பலதும் நடக்கும். கீழே இறங்கி அந்தப் பக்கம் போய் நில்லுன்னு நம்ம இவர்வேற என்னிடம் உறுமுறார்.
ஸ்டெப்னி டயரை எடுக்க முயற்சித்தால் முடியலை. இந்த இன்னோவா வண்டிகளில் அது டிக்கியில் இல்லை. வண்டிக்கு அடியில் ஒரு சங்கிலி ஊஞ்சலுடன் இருக்காம். மேலே இருக்கும் ஒரு துளையில் நீண்ட கம்பிபோல ஒன்னு போட்டுச் சுத்துனா அது அப்படியே ஊஞ்சலாடி கீழே வருமாம். கனவு சீன்களில் மேலே இருந்து நாயகி & நாயகன் ஊஞ்சலில் வந்து இறங்குவது சமயாசந்தர்ப்பம் இல்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்குது.
ஒரு முறை சுத்துனவுடன் அந்தக்கம்பி ரெண்டாய் பிட்டுக்கிச்சு:(

சாலையில் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு (100 மீட்டர்தூரம்) கொஞ்சம் கீழே இறங்கிப்போகும் மண்பாதையில் இருக்கும் கடைகளில் வாசலில் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தவர் வந்தார். அசப்பில் நம்ம ஜெய்கணேஷ் மாதிரி இருந்தார். மனிதர் பாவம், அந்த ஸ்டெப்னியை எடுக்கச் சாலையில் வண்டிக்கடியில் படுத்தெல்லாம் முயற்சி செஞ்சார். பொழுது சாயும் முன்னே அடுத்த ஊருக்குப் போயிறணும் என்ற திட்டம் அம்பேல்.

சாலையில் போய்க்கிட்டே இருந்த ஒரு மோட்டர்பைக் தடதடன்னு உறுமிக்கிட்டே வட்டமடிச்சு நம்ம வண்டிக்குப் பக்கம் வந்து நின்னுச்சு. ஹெல்மெட்டைக் கழட்டினார் ஒரு இளைஞர். அவர் பங்குக்கு அவரும் சாலையில் உருண்டு அங்கப்ரதக்ஷணம் செஞ்சும் ஒன்னும் நடக்கலை. எப்படியும் ரெண்டா உடைஞ்ச கம்பியை எங்கியாவது வெல்ட் செஞ்சால் வேலை நடக்கும்னு ஒரு தியரி. அதோ அங்கே ஒரு கடை இருக்குன்னு நம்ம ஜெய்கணேஷ் கை காட்ட , வெல்டிங் கடையைத் தேடி தன்னுடைய பைக்கிலே ப்ரஷாந்தைக் கூப்பிட்டுப் போனார். ஜெய்கணேஷும் தன்னுடைய கடைக்குப் போயிட்டார்.
உடுப்பிக்குப் போய் கிருஷ்ணனை இன்னொரு முறை பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவளை இப்படி நட்டாத்துலே விட்டுட்டாயேடா..........
சூரியன் மலைவாயில் விழுந்தான். இருட்டு வரப்போகுது. எங்கேதான் இருக்கோமுன்னும் தெரியலை.சுத்துமுத்தும் கண்ணை ஓட்டினேன். கோபாலடி ரோடு! தேவுடு காக்க வச்சுட்டான்ய்யா........

நாங்க ரெண்டு பேரும் பேய் முழியோடு நிக்கிறோம். ஒரு கால்மணி நேரத்துலே வெல்டு பண்ணக் கம்பி வந்தாச்சு. பார்த்துக்கிட்டே இருந்தார் போல நம்ம ஜெய் கணேஷ். அவரும் எழுந்து வந்தார். நல்லா டைட்டா வச்சுத் திருப்புன்னு கோபால் லெக்சர் கொடுத்துக்கிட்டு நிக்க..... ஆளாளுக்குக் கம்பியைத் திருப்ப ஒரு அனக்கமும் இல்லை. இதுக்கு நடுவில் போற வர்ற ஆட்கள் நின்னு பார்த்துட்டு, எங்கமேல் ஒரு (பரிதாப) லுக் விட்டுட்டுப் போறாங்க. போகட்டும், சக்கரத்தைக் கழட்டிப் பஞ்சர் ஒட்டிக்கலாமுன்னா..... அதையும் கழட்ட முடியலை ப்ரஷாந்துக்கு. மும்மூர்த்திகள் உதவலாமுன்னு போனா....

பைக் வாலிபர் சர்னு கிளம்பிப்போயிட்டார். பக்கத்துலே யாரையாவது கராஜ்லே இருந்து கொண்டுவரேன்னு போயிருக்கார் புண்ணியவான். நல்லா இருக்கணும். பத்தே நிமிசத்துலே ஒரு பையனோடு திரும்பி வந்தார். சின்னப் பையன். ஆனா எண்ணிப் பத்தே நிமிசத்தில் ஸ்டெப்னியை இறக்கி, டயர் மாத்தியாச்சு!!!! எல்லார் முகத்திலும் நிம்மதியான சிரிப்பு.

கம்பியை விட்டு முடுக்கறார். க்ருஷ்ணான்னு நான் மனசுலே கூப்புடவும், டடக் னு ஒரு சத்தத்தோடு ஸ்டெப்னி கீழே இறங்கவும் சரியா இருந்துச்சு. அடப்பாவி. எவ்வளோ அரற்றினேன். அப்பெல்லாம் பேசாம இருந்துட்டு இப்போ.....உதவும் பாவனையா?

எதுக்கும் அந்த டயருக்குப் பங்ச்சர் ஒட்டிக்கிட்டுப் போயிருங்க. இந்த பையன் ஒட்டித் தருவார்ன்னு சொன்னார் பைக் வாலிபர். ஆமாம் இவர் யார்? எதுக்கு வேலை மெனெக்கெட நம்மோடு ஒன்னரை மணிநேரம் மாரடிச்சு இருக்கார்?

இன்னோவா வண்டி ஏன் இப்படி ரோடோரத்தில் வாயைப் பிளந்துக்கிட்டு நிக்குது? கூடாதேன்னு பார்க்க வந்தாராம். இங்கே காபு (Kaup) ஏரியாவில் டொயோட்டாவுக்கான சேல்ஸ் மேனேஜராம். உடுப்பியிலிருந்து திரும்பி வந்துக்கிட்டு இருந்துருக்கார். அப்பத்தான் அவர் பெயரைக் கேக்கணுமுன்னு தோணி இருக்கு எனக்கு. அஷ்வத்.

நம்ம ஜெய்கணேஷ்க்கு நன்றி சொல்லிப் பெயரைக் கேட்டால்..... நாராயணா!!!!

25 comments:

said...

ஸ்டெப்னி டயரை எடுக்கும் போது உங்களுக்கு தோன்றிய கனவு சீன் சூப்பர் டீச்சர். நாங்களும் சிறுவயதில் கேரளா சென்றபோது நடு இரவில் தவித்தது நினைவுக்கு வந்தது டீச்சர். உங்களுடைய திருப்பதி சென்று வந்த பதிவும் நினைவுக்கு வருகிறது. துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும் டீச்சர் உங்களை பார்த்து.

said...

நலல்வங்களுக்கு எப்பவும் கடவுள் உதவுவர்

said...

நாராயணா!!.. அஷ்வத்தாமா!!.. கிருஷ்ண கிருஷ்ணா.. டீச்சரை நட்டாத்திலிருந்து காப்பாத்தினதுக்கு நமஸ்காரம்.

அக்கா.. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா.. கைவிட மாட்டான்.

said...

வாங்க சுமதி.

தெரியாத ஊர்லே நேரங்கெட்ட நேரத்துலே மாட்டிக்கிட்டால் வம்புதான்:(

அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.......

வேறவழி?

said...

வாங்க எல் கே.

கடவுள் மறுப்புக் கொள்கை உள்ள என் தோழி ஒருத்தர், 'இதுலே கடவுள் எங்கெ வர்றார்? அது என்ன எதுக்கெடுத்தாலும் கடவுளை இழுக்கறீங்க?'ன்னார்.
கஷ்டம் வருவது இயற்கை. அது வரும் போகுமுன்னார்.

யம்மாடி..... அந்த இயற்கைதான் கடவுள்ன்னு சொன்னேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆதிமூலமேன்னு ஒரு குரலுக்கு ஓடிவர இப்பெல்லாம் முடியாதாம். கூட்டம் பெருகி வழியுதே. டிமாண்ட் ஜாஸ்தியாம்.

சோதிக்கட்டும். பொழுதோட சோதிக்கக்கூடாதா?

எப்படியோ எஞ்சி இருந்தவரை அனுப்பினான்.

அசுவதாமன்.

said...

துளசி,
என்ன ஒரு அற்புதம்பா. வேற ஒண்ணுமே மனசில நிக்கலை.எத்தனை திகிலா இருந்திருக்கும்!

மிச்ச கதையைத் திருப்பிப் படிச்சுட்டு வரேன்.

said...

//அப்பத்தான் அவர் பெயரைக் கேக்கணுமுன்னு தோணி இருக்கு எனக்கு. அஷ்வத்.

நம்ம ஜெய்கணேஷ்க்கு நன்றி சொல்லிப் பெயரைக் கேட்டால்..... நாராயணா!!!!//

Nallavagalai aandavan sodhippan kai vida maattan. - Sonnathu naan illai.

said...

படங்கள் அனைத்தும் அருமை....

நல்லது நினைப்பவர்களுக்கு எப்பவும் நல்லதே நடக்கும்...

said...

//...யாத்ரக்கார்க்கு சௌகர்யங்கள் கிருஷ்ணன் செஞ்சு தரட்டுமே.//

கிருஷ்ணன் எண்ணம் போல அருளுவான் அப்படிங்கறதுக்கு இதுவே நிதர்சனம்.

யாத்ரக்"கார்க்கு" விஸ்ராந்தி எடுக்க சௌகர்யம் செஞ்சு கொடுத்திருக்கான்.

:-)

said...

When all the doors are closed,
God opens His
வென் ஆல் த டோர்ஸ் ஆர் க்ளோஸ்டு, காட் ஓபன்ஸ் ஹிஸ்
என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

மீனாட்சி பாட்டி.

said...

வாவ் !!! ;))

said...

டீச்சர், நீங்கள் இந்தப் பதிவுகளை பயனத்தின்போதே எழுதியதா? இல்லை பிறகு நிணைவுகூர்ந்து எழுதியதா? I love the details and wit. இன்னோவா மட்டுமில்லை என் Scorpio மற்றும் Tavera கூட ஸ்டெப்னி இதே ஸ்டைல்தான். Easy-தான்.

said...

இம்மாதிரிப் பல உயிருக்கும் ஆபத்தான சமயங்களில் இறைவன் வந்து கைகொடுப்பதை உணர்ந்திருக்கிறோம். அப்படி ஒரு பதிவு இது. அவன் இல்லாமல் ஓரணுவும் அசைவதில்லை.

said...

தாமதமான பதிலுக்கு எல்லோரும் மன்னிக்கணும். மீண்டும் பயணத்தில் இருக்கேன்.

இணையத் தொடர்பு கிடைக்கும்போதுதான் எழுதமுடிகிறது.

said...

வாங்க வல்லி.

ஆமாம்ப்பா த்ரில்தான். அதுவும் கோபால் சொன்னதுபோல கீழே மண் ரோடில் இறக்கி நிறுத்தி இருந்தால் அஷ்வத் கண்ணில் பட்டிருக்க முடியாதுல்லையா????

said...

வாங்க ப்ரசன்னா.

நமக்கு எதுக்குப்பா இந்த சோதனையும் வேதனையும்?

கூட்டத்துலே கோவிந்தான்னு இருக்கோம்.

said...

வாங்க சங்கவி.

நல்லது நடக்கணுமுன்னுதானே நாம் எல்லோரும் நினைக்கிறோம்.

said...

வாங்க நன்மனம்.

காருக்கு விஸ்ராந்தி கொடுத்து நம்மை ஆவலாதி ஆக்கிட்டானே:-)))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

நட்ட நடு ரோடுலே எல்லாக் கதவையும் சாத்துனா நடக்குமா?

said...

வாங்க கோபி.

இப்போ வாவ்.

அப்போ ..... ஆ........(வ்)

said...

வாங்க சுகுமார்.

சுலபமா திருப்பவேண்டியதுதான் யாரோ இதுக்கு முன்னால் ஸ்டெப்னியை வச்சவங்க திருக்கைகளால் எக்குத்தப்பா மாட்டி இருக்கு.

செய்யும் வேலையில் கவனம் இல்லைன்னா இப்படித்தான்:(

பயணத்தின் போது எழுத நேரம் இருக்காது. காலைமுதல் இரவு வரை ஓட்டம்தான்.

இப்போதான் எழுதிக்கிட்டு இருக்கேன்.

said...

வாங்க கீதா.

சரியாச் சொன்னீங்க. பலவிஷயங்களில் இப்படி அனுபவப் பட்டுட்டேன்.

said...

பைக் வாலிபர்,நாராயணா போன்ற ஆபத்பாந்தவாக்கள் இருப்பதால்தான் தப்பிக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

said...

வாங்க மாதேவி.

கருடவாகனத்தில் வராமல் பைக் வாகனத்தில் வந்து உதவிட்டார்ப்பா.