Monday, April 26, 2010

சிவன் தலையில் கை வச்சேன்.

'ருத்ரமா? எதுக்கு இதெல்லாம் வேணாமு'ன்னு சொல்ல வாயைத் திறந்த கோபாலிடம் பட்டியலில் கடைசியில் இருக்கும் தொகையைக் கொடுக்கச் சொன்னேன். உடனே அங்கிருந்த பண்டிட் ஒருத்தர் நம்மை உள்ளே கூட்டிக்கிட்டுப்போய் சங்கல்ப்பம் செய்விச்சு, குழந்தைகளின் பெயர்கள் எல்லாம் கேட்டுக் குடும்ப நலனுக்காகப் பிரார்த்தனை செஞ்சு தீர்த்தம் கொடுத்தார். தட்சிணை போடுங்கோன்னு சொல்லவே இல்லை!

பெரிய ஹால். ஒரு பத்திருவது பேர் உக்காந்து ஒன்னுபோல வேதம் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அர்த்தம் ஒன்னும் புரியலைன்னாலும் அதை கேக்கும்போது மனசுக்குள்ளே ஊடுருவிப்போறமாதிரி இருக்கு. சப்தங்களின் ஜாலம்! எழுதாக் கிளவி! இந்தப் பக்கம் ஒரு சின்ன அலங்கார மண்டபத்தில் சந்திரமௌலீஸ்வரர் (மீசையுள்ள முகம்). அவருக்கு முன்னால் மாவிலையோடு கலசம். வெளியே வந்ததும் நமக்கு ஒரு பஞ்சமுக ருத்ராக்ஷம், விபூதி ப்ரசாதம் கொடுத்து ஒரு கவரில் நம்ம விலாசம் எழுதச் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டாங்க. (நான் இதை மறந்தேபோயிட்டேன். போனவாரம் அங்கிருந்து ஸ்வாமி ப்ரஸாதம் வீட்டுக்கு வந்துச்சு)
ப்ரகாரத்தில் நடந்து மகாபலேஷ்வரரைத் தரிசிக்கப்போனோம். அங்கே ஒரு வாசல் இருக்கு. வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லைன்னு அறிவிப்பு வச்சுருக்காங்க. சொல்ல மறந்துட்டேனே..... இங்கே கோவிலில் ஆண்கள் மேல் சட்டையைக் கழட்டிடணும். . உள்பிரகாரத்தில் போனதும் அங்கே ஒரு கருவறை. இந்திய ஆடைகள் தரிசனத்துக்கு உகந்ததுன்னு இன்னுமொரு அறிவிப்பு.

இந்த மாதிரி தெளிவாப் போட்டுவச்சுட்டால் வம்பே இல்லை பாருங்க. அப்பாடா.... இங்கேயும் தப்பிச்சேன். ஆனால் இண்டியன் உடைகளில் தமிழ் சினிமா நாயகிகளின் பாடல் காட்சி உடைகள் வருமான்னு தெரியலையே:(

பெண்களுக்கு 'நாசூக்கா' ஒரு அறிவிப்பு வச்சுருந்தாங்க. அந்த நிலைன்னா யாரும் பொதுவா கோவிலுக்குப் போகமாட்டோம்தான். காலம் மாறுது. மக்கள் மனசுலே இதைப்பற்றியெல்லாம் வேறமாதிரி தோணுதுன்னு நிர்வாகம் நினைக்குது போல.


ஆறடி உயரமுள்ள சிவலிங்க ரூபத்தில் இருக்கும் மூலவர் மஹாபலேஷ்வர். ராவணன் பெயர்தெடுக்கப் பார்த்தும் அசைக்கக்கூட முடியாமல் பலம் பொருந்தியவராக இருந்ததால் இந்தப் பெயர் வந்துருக்கு. கருவறை ரெண்டு பகுதியா இருக்கு. முன்பக்கம் வரிசையில் போகக் கம்பித்தடுப்பு. தரையெல்லாம் ஒரே ஈரம். நசநசன்னு. வழுக்கிவிடாமல் பிடிச்சுக்கவும் அந்தக் கம்பித்தடுப்புப் பயன்படுது. அடுத்த பகுதியில் தரையில் ஒரு சதுரமான பீடம். அதன் நடுவில் சின்னதா ஒரு குழி. மேலே கலசத்தில் இருந்து சொட்டும் அபிஷேக நீர் குழி முழுசும் ரொம்பி இருக்கு, அதில் பூக்களும் வில்வ இலைகளுமா மிதக்குது.

அந்தச்சதுர பீடத்துக்குப் பக்கத்திலே ஒரு பண்டிட் உக்கார்ந்துருந்தார். நல்லா கைவிட்டுத் தொட்டுப் பார்த்துக் கும்பிடுங்கன்னு பக்தர்களுக்கு சொல்லிக்கிட்டே இருந்தார். பீடத்தின் மறு பக்கத்துலே ஒரு தட்டுலே கொஞ்சம் ரூபாய்கள் இருந்துச்சு. நமக்கு முன்னே இருந்தவர்கள் எல்லோரும் தட்டுலே கொஞ்சம் காசைப் போட்டுட்டு தரையில் குத்துக்காலிட்டு உக்கார்ந்து குழிக்குக் கைவிட்டுக் குடைஞ்சுட்டு கண்களில் ஒத்திக்கிட்டு எழுந்து போறாங்க. ப்ரஸாதமா அவுங்களுக்குக் கொஞ்சம் வில்வ இலையும் பூவுமா, பண்டிட் கொடுத்து அனுப்புறார். காசு போடுங்கன்னு யாரும் யாரையும் கேக்கலை. கோபாலுக்கு அடுத்தபடி நான். நமக்கோ தரையில் உக்காருவது ஏகப்பட்ட கஷ்டம். சரீரம் அப்படி காத்திரமா இருக்கு!

பெருமாளேன்னு கும்பிட்டுக்கிட்டே கொஞ்சமாக் குனிஞ்சேன். குழிக்குள்ளே தடவுனதில் நடுவிலே சின்னதா ஒரு கல்போல் கைக்கு உணர்ந்துச்சு. சிவனின் தலை முடிச்சு. வழுவழுன்னு இல்லாம கொஞ்சம் கரடுமுரடாவும் ஒரு பக்கம் சின்னதா பிளந்து இருப்பதுபோலவும் உணர்ந்தேன். பார்க்க முடியாது. அதான் தண்ணீரும்(கங்கை?) பூக்களுமா மிதந்துக்கிட்டு இருக்கே. பிரஸாதம் வாங்கி வெளியில் வந்தேன்.
எனக்கு ரொம்ப ஏமாத்தமாவும் அதே சமயம் த்ரில்லிங்காவும் இருந்துச்சு. ஆறடி லிங்கமுன்னு சொன்னாங்க. இப்பப் பார்த்தா ஒரு ரெண்டு அங்குலம்தான் இருக்கு:(

விசாரிக்கணுமே....... ஆறடி என்றது உண்மைதான். அதன் தலைப்புறம் பீடம் எழுப்பி கருவறையாக் கட்டி வச்சுருக்காங்களாம். நாப்பது வருசத்துக்கு ஒருமுறை அஷ்டபந்தன மஹோத்ஸவம் நடக்குமாம். அந்த சமயம் முழு லிங்கத்தையும் தரிசனம் செய்யமுடியுமாம். எப்படி?????

ஏற்கெனவே அறையாக் கட்டிவச்சு இருக்காங்க. ஒருவேளை அந்தத் தரைக்கு அடியில் வழி எதாவது சுரங்கம்போல் அமைச்சு இருப்பாங்களோ???
பொதுவாக் கோவில்களில் பனிரெண்டு வருசத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தணுமுன்னு சாஸ்த்திரங்கள் சொல்லுது. இங்கே வேறமாதிரி சொல்றாங்க. பலவருசங்களா அஷ்டபந்தன விழா நடக்கவே இல்லையாம். போன நூற்றாண்டுலே மூணே முறை 1906, 1930, 1983 ஆண்டுகளில் நடந்துருக்கு. மூணு லட்சம் பக்தர்கள் வந்து போயிருக்காங்க. கர்நாடகா அரசு ரொம்ப சிறப்பாக எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தாங்கன்னு நன்றியோடு நிகழ்ச்சியை நினைவு கூறினார் ஒரு பெரியவர்.

'மனசைச் சாந்தப்படுத்திக்கோ, கோபத்தைக் குறைச்சுக்கோ அமைதியா இரு'ன்னு எத்தனை முறை யார்யாரோ வந்து 'உபதேசிச்சாலும்' ஒருமுறை ஆத்திரம் வந்தா சட்னு அடங்குதா என்ன? கொதிக்குது மனசு அப்படியே......

குறைஞ்சபட்சம் பாலாக இருந்தால் கொதிச்சுப் பொங்கும்போது ஒருகை பச்சத்தண்ணீ(ர் தெளிச்சா கொஞ்சமாவது அடங்கும். நம்ம சிவனுக்குக் கொதிக்குது மனசு அப்படியே.......... இந்த ப்ரம்மா இப்படிப் பண்ணிட்டானே....... அவனையும் அழிச்சுறலாமுன்னா..... இந்த விஷ்ணுவேற சமாதானப் புறாவாட்டம் வந்து...அமைதி அமைதி..... கூல் டவுன் கூல் டவுன்னு ஒரு பக்கம்.....

ஒரு இடத்துலே உக்காந்து யோசிக்கிறார் சிவன். இனி செய்ய வேண்டியதென்னன்னு ஒரு முடிவுக்கு வரணும்....... பேசாம வீட்டைப் பார்த்துப் போகவேண்டியதுதான். கிளம்புனவர், வெறுங்கையோடா போறதுன்னு....தன்னுடைய சக்தி, பிரம்மனுடைய சக்தி, அவன் படைச்ச ஜீவராசிகளின் சக்தி, விஷ்ணுவின் சக்தின்னு எல்லாத்தையும் சேர்த்து அதை ஒரு பொன்மானா உருவாக்கினார். அதுக்கு நாலு கால்கள், மூணு கொம்புகள், மூணு கண்கள். மானைக் கையில் பிடிச்சுக்கிட்டுக் கயிலைக்குப் போய்ச் சேர்ந்தார்.

இதுவரை படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் திடீர்னு ஜீவனே இல்லாம நடைப்பிணமா இருக்கு. தேவர்களுக்குச் செய்ய வேண்டி பூஜை புனஸ்காரங்களைச் செய்ய சக்தியில்லாமக் கிடக்குது சனம். ஏன் இப்படின்னு மறுபடி ஒரு ஆலோசனைக்கூட்டம் நடக்குது. விஷ்ணுதான் இந்தக் கமிட்டிக்குத் தலை. 'ருத்திரர்தான் சக்தியெல்லாம் திரட்டி எடுத்துக்கிட்டுப் போயிட்டார்ன்னு தெரியுது. நாமெல்லாம் அவர்கிட்டே போய் திருப்பித்தாங்கன்னு கேக்கலாம்'ன்னார்.

கைலாயத்துக்கு எல்லோரும் கூட்டமாப் போனாங்க. ருத்திரரை வணங்கி, (முகத்)துதிகள் எல்லாம் பாடி மன்றாடிக் கேட்டதும் மனம் இரங்கிருச்சு. பொன் மானில் இருந்த சக்திகளை மீண்டும் அவரவருக்குச் சேரவேண்டியதைப் பிரிச்சுக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கக் கொடுக்க அந்தப் பொன்மான் கரைஞ்சுக்கிட்டே போகுது. கடைசியா மிஞ்சி இருந்தது அந்த மூணு கொம்பில் ஒரு கொம்பு. அதுலேதான் ருத்திரனின் சக்தி முழுசும் திரண்டு இருக்கு. இந்தக் கொம்புதான் ப்ராணலிங்கம். ரொம்பப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் இதை ருத்திரரே வச்சு வழிபட்டு வந்தார். பெரியவரே கும்பிடும் அளவுக்கு இது இருக்குன்னா..... இதன் சக்தி மகத்தானதுன்னு விண்ணுலகவாசிகளும் இதை வணங்கி என்றும் அழியா ஆனந்தத்துடன் இருக்காங்க.

இந்த ப்ராணலிங்கம் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் ராவணனும் கயிலைக்கு போறான். துண்டு துண்டா வெட்டப்பட்டு முந்தைய பதிவுகளில் வந்ததையெல்லாம் படிச்சவங்களுக்கு இப்ப முழுக்கதையும் தெரிஞ்சுருக்குமே!

20 comments:

said...

நல்ல கதை . நம்ம வீடு பக்கமும் நேரம் கிடைக்கறப்ப வாங்க

said...

கதை நன்றாக உள்ளது டீச்சர்.

said...

ப்ராணலிங்கர் நட்பு கிடைச்சாச்சு போலருக்கு கடோசில!

இதுதான் ஆயிரத்து ஒண்ணா அல்லது தாண்டிருச்சா?

ஆயிரக்கூட்டத்துல கோவிந்தா போடாம 1001 க்கு வாழ்த்து சொல்லலாம்னு(வித்தியாசமா!)நினைச்சேன்..

விட்டுட்டேனோ?

said...

வாங்க எல் கே.

நமக்கு இடப்பெயர்ச்சி. அதான் வேற எங்கேயும் பின்னூட்டமுடியாம ஜஸ்ட் வாசிப்பு மட்டும்தான்னு இருக்கேன்.

said...

வாங்க சுமதி.

ம் போட்டுக் கேக்கணும் ஆமா:-)

said...

வாங்க அறிவன்.

இது ஆயிரத்து ஏழு.

நமக்கு மறுபிறவி இல்லை. ஆனந்தமே ஆனந்தம்தான்.

ப்ராணாலிங்கம் பற்றிப் படிச்சவங்களும்

டைரக்ட்டா சொர்க்கம்தான்.

அங்கே வருங்காலத்திலே பதிவர் சந்திப்பு நடக்கும்.

said...

அதெப்படித் தரையில் பதிஞ்சதை வெளியில கொண்டு வருவாங்க துளசி. மௌலி யைக் கேட்டாத் தெரியுமோ. இருந்தாலும் நல்ல அனுபவங்கள் கிடைச்சிருக்கு. கதையும் புரிஞ்சுது.ஆத்மலிங்கமும் ப்ராணலிங்கமும் ஒண்ணுதானே?

said...

ஆகா...கதைக்கு ஒரு கதையாக எல்லாமே அருமை ;)

said...

சிவன் தலையிலேயே கையை வச்சுட்டீங்களா ?
ஏன் அப்படி ஒரு அமைப்புன்னு ஏதாவது தெரிஞ்சுதா? அதுக்கு ஒன்னும் கதை இல்லையா ?

http://www.virutcham.com

said...

வாங்க வல்லி.

எனக்கும் இதுதான் புதிரா இருக்கு! அடுத்தமுறை அஷ்டபந்தனப்பூஜை நடக்கும்போது கவனிக்கணும். யாராவது ஒளிபரப்புவாங்கதானே?

said...

வாங்க கோபி.

நன்றி நன்றி!

said...

"வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை"
நான் வெளியிலிருந்தே தரிசிக்கிறேன்.:))

"மஹாபலேஷ்வர்" இவரை வணங்கியவர்களுக்கும் பலம் வந்திடுமே,:))

said...

//...துண்டு துண்டா வெட்டப்பட்டு முந்தைய பதிவுகளில் வந்ததையெல்லாம் படிச்சவங்களுக்கு இப்ப முழுக்கதையும் தெரிஞ்சுருக்குமே!
...//

டீச்சர், இத்தன நாளா வந்து ஆஜர் சொல்லிட்டு முழுசா படிக்காம டிமிக்கி கொடுத்திட்ருந்தேன் ஆனா இன்னிக்கு முழுசா படிச்சது வீண் போகல, முழு கதையும் தெரிஞ்சுது, நன்றி. :-)

said...

டீச்சர்... இவ்ளோ கோயில் போயிருக்கீங்க... கர்நாடகாவுல குக்கே சுப்ரமண்யா முருகன் கோயில் போகலையா? மங்களூர் பக்கத்துலதான இருக்கு.

அதென்ன வெளிநாட்டுக்காரங்களுக்கு அனுமதி இல்லை? ஆண்டவன் எல்லாருக்கும் பொது. வாடிகன் சிஸ்ட்டென் சாப்பெல் உள்ள நான் போக முடியுறப்போ... இது ஏன் கூடாது? மத்த மதங்கள விடுங்க. நம்மதானே அடுத்தவங்களுக்கு எடுத்துக்காட்ட்டா இருக்கனும்!

சட்டைய்யக் கழட்டச் சொல்றதுக்கு உருப்படியா ஒரு ஆன்மீகவாதியும் காரணம் சொல்லலை.

said...

வாங்க மாதேவி.

வெளிநாட்டுலே இருந்து வரும் உள்நாட்டுக்காரர்களுக்கு அனுமதி இருக்கு:-)))))

said...

வாங்க நன்மனம்.

டிமிக்கி கொடுத்தவங்க அவுங்களே தண்டனை கொடுத்துக்கலாம். பெஞ்சுமேல் பத்து நிமிஷம் ஏறிநின்னாப் போதும்.ஆனால் பரண்மேல் இருந்து சாமானெல்லாம் எடுக்கக்கூடாது:-)

said...

வாங்க ஜீரா.

நலமா? எங்கே ஆளை ரொம்ப நாளாக் காணோம்?

அந்தக் காலத்துலே (தீண்டாமை இருந்த சமயம்) சட்டைக்குள் பூ நூல் இருக்கான்னு பார்க்கவும் இந்த ஐடியா வந்துருக்கும்! இப்ப அதுவே சம்பிரதாயமா ஆகிப்போச்சுன்னு நினைக்கிறேன்.

பயணத்துலே இதுதான் ரெண்டரையாவது நாள். இன்னும் இருக்கு. அதுலே நீங்க சொன்ன இடம் வந்தாலும் வரலாம்!!!!!!

said...

சட்டை கழட்டுவதற்கு பூணுல் பார்க்க என்பது காரணமாக இருக்க வாய்பில்லை.
கோவில்களை கட்டியதே பெரும்பாலும் சத்ரியர்கள் தான். அவர்களுக்கே கோவிலில் தனி மரியாதையும் தரப் பட்டு வந்தது.
ஆண்கள் மேல் சட்டை அணியும் பழக்கம் நம் நாட்டில் முதலில் இல்லை.அரசர் உட்பட மேல் துண்டு அணியும் பழக்கமே இருந்தது. தெய்வத்தின் முன் பெரியவர் முன் என்று வரும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் வழக்கம் இருந்தது(பின்னால் இதுவே தீண்டாமையில் ஒரு முறையாக மாறிப் போனது) . கோவிலுக்கு செல்லும் போது மேலாடை என்பது மரியாதை குறைவாக கருதப் பட்டது. இப்போதும் கேரளாவில் கோவிலில் ஆண்கள் மேல் உடை அணிந்து செல்ல பல கோவில்களில் அனுமதி இல்லை. மங்களாபுரம் - கன்யாகுமரி (பழைய கேரளம் ) இந்த பழக்கம் இன்னும் இருக்கிறது.
ஒரு ஆன்மீக காரணம் - கோவிலில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு அதிகமாக உடல் மேல் பட இது உதவும் என்று எங்கோ படித்தேன் (சுவாமி ஓம்கார் தளமா ) இப்போ கூட்ட நெரிசலில் வேர்வை தான் கிடைக்கும் என்று நினைக்கத்தோன்றுகிறது

உபரித் தகவல் :
முன் காலத்தில் பூணுல் எல்லோருக்கும் இருந்தது, பெண்கள் உட்பட

said...

தமிழ் நாட்டில் கூட பல கோவில்களில் வெளிநாட்டவர் மட்டும் இல்லை வேற்று மதத்தவர் உள்ளே வரவேண்டாம் என்று ஒரு குறிப்பிட்ட எல்லையில் எழுதி வைத்து இருக்கும். சிறு வயதில் எனக்கு இது தவறாகத் தெரிந்தது. நானே என் பிற மத்தது நண்பர்களை தாராளமாக உள்ளே அழைத்துச் சென்று இருக்கிறேன். பின் வேறு சமயத்தில் அவர்கள் கோவில் வழிபாடுகள் குறித்து கிண்டலாகவும் கேவலமாகவும் பேசக் கேட்டு அதிர்த்து போய் நானே காரணம் புரிந்து கொண்டேன் பெரியவங்க ஏன் இப்படி செய்து வைத்திருக்காங்க அப்படீன்னு.
ஆனன இப்போ தொ. கா எல்லா சடங்குகளும் ஒளியும் ஒலியும் live ஆக காட்டும் காலத்தில் இந்த தடை தேவை இல்லை.என்று தான் நினைக்கிறேன்.
http://www.virutcham.com

said...

வாங்க விருட்சம்.

உங்க பாய்ண்ட் ரொம்பச்சரி.

அந்தக் காலத்துலே சட்டை இருந்துருக்க வாய்ப்பே இல்லைதானே?

பெண்கள் ப்ளவுஸ் எல்லாம் இப்போ ஒரு இருநூறு, முன்னூறு வருசத்துச் சமாச்சாரமாத்தான் இருக்கணும்.