Sunday, April 25, 2010

பசுவின் காது

78 கிலோமீட்டர்தான் ஒன்னரை மணி நேரம் பயணம். வழியிலே எங்கேயும் நிறுத்தலை. வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்ததுதான். Grand Canyon வந்துட்டோமோன்னு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன். செம்மண் குன்றுகளை பெரிய பெரிய துண்டுகளா வெட்டி எடுத்து அப்படியே ராட்சஸ மைசூர்பாக்காட்டாம் அடுக்கி வச்சுருக்காங்க. இதை அடுக்கி வீடு கட்டிக்கலாம். கேரளாவில் இப்படி கட்டுன வீடுகளைப் பார்த்துருக்கேன். இன்னும் ஒரு நாலைஞ்சு வருசம் போனால்....இந்த செம்மண் குன்றுகள் ஹிஸ்டரி ஆகிரும். இந்தச் செம்மண் காட்டிலே எக்கசக்கமா முந்திரி மரங்கள் நிக்குது.
ஒரு வளைவில் திரும்புனதும் கடலோரப்பாதை வந்துருது. கொஞ்ச தூரத்தில் உப்பளங்கள் தென்பட்டது. கடல் தண்ணீரைப் பாத்திக் கட்டி விட்டுருக்காங்க. அங்கங்கே சின்னச்சின்னக் குவியல்களாக் குவிச்சுருக்கும் உப்பு..

ஊருக்குள் வர்றதுக்கு முன்னாலேயே 'ஓம் பீச்' இந்தப் பக்கம்னு வலதுபக்கம் போகச் சொல்லி ஒரு கைகாட்டி. 'ஓஹோ அப்படியா'ன்னு நாம் இடதுபக்கம் போனோம். ரொம்பப் பழைய ஊர். குறுகிய தெருக்களொடு இருக்கு கோகர்ணம். ஏழு முக்தி ஸ்தலங்களில் ஒன்னு. தக்ஷின் காசி என்ற புகழ். இங்கே பித்ருகடன் செய்தால் முன் பத்துத் தலைமுறை, பின் பத்துத் தலைமுறை, இப்போ இருக்கும் தலைமுறைன்னு 21 தலைமுறைக்குக் கடன் செய்த பலனாம். இங்கே வந்து இறந்தவர்களுக்கு டைரக்டா சொர்கம்தானாம். இன்னொரு பிறவி என்பதே இல்லாமல் போயிருமாம். எப்பேர்ப்பட்டப் படுபாதகம் செய்தவங்களுக்கும் இங்கே உள்ள மஹாபலேஸ்வரரைத் தரிசனம் செய்தால் பாவம் நீங்கி மோக்ஷம் உறுதியாம்.

கோகர்ணம் பெயர்க்காரணம், விளக்கம் ரெண்டு மூணு இருக்கு. அதுலே ஒன்னு ரொம்ப சுவாரசியமானது. வந்து உக்காருங்க. கதையை ஆரம்பிக்கலாம்.


கோடானகோடி யுகங்களுக்கு முன்னே....... ப்ரளயம் வந்து எல்லாமே அழிஞ்சு போன காலக்கட்டம். அப்போ இருந்த ப்ரம்மாவுக்கு புது சிருஷ்டி செய்யவேண்டிய நிர்ப்பந்தம். மனசை ஒருமுகப்படுத்தி த்யானம் செஞ்சுக்கிட்டு இருக்கார். கடுமையான தவத்தின் முடிவில் ப்ரம்மாவின் நெற்றியில் இருந்து ருத்திரன் வெளிப்பட்டு நிக்கிறார். கண் திறந்து பார்த்த ப்ரம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. படைக்கும் தொழிலை ருத்திரரைவிட வேறு யாரால்சிறப்பாகச் செய்யமுடியுமுன்னு சிந்திச்சு, 'நீங்கதான் பொருத்தமானவர். உங்க கையாலே எல்லாத்தையும் படைச்சுருங்க'ன்னு சொல்லி வேண்டிக்கிட்டார். (எப்படியோ வேலையை நைஸா ருத்திரன் தலையில் கட்டியாச்சு)

'அதுக்கென்ன, செஞ்சுறலாம். நான் படைக்கும் ஜீவராசிகள் எல்லாம் நற்குணங்கள் மட்டுமே பொருந்தியதாகவும், என்றென்றைக்கும் அழியாமல் நிலைத்து வாழ்வதாகவும் இருக்கப்போகுது பார்'ன்னு சொல்லிக்கிட்டே பாதாள லோகத்துக்குப்போய் தவம் இருக்க ஆரம்பிச்சார் ருத்திரர். (ஆன்னா ஊன்னா தவம் இருந்துவாங்களே!)

இதோ அதோன்னு காலம் கடந்து போய்க்கிட்டே இருக்கு. இங்கே ப்ரம்மா வெயிட்டீஸ். மூணு யுகாந்திரங்கள் போயிருச்சு ஒன்னும் நடக்கலை. இவர்வேற சத்வம் , ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் ஆன உயிர்களைப் படைக்காமல் எல்லாமே சாத்வீக குணமுள்ளவையாக படைக்கறேன்னு போயிருக்கார். இப்படி இருந்தால் சமுதாயத்துலே கலவரமும் ஒழுங்கீனமும் பெருகித் தாறுமாறா ஆகிருமேன்னு கவலையா வேற இருக்கு. ருத்திரனுடைய ஆவேசத்தை நினைச்சுப் பார்த்தால் வாயைத் திறந்து ஒன்னும் சொல்ல முடியலைன்னு கவலைப்பட்ட ப்ரம்மா, தாமே படைக்கும் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சுட்டார். முக்குணங்களும் உள்ள பல்வேறு ஜீவராசிகள் பொறந்தாச்சு பூமியில் நிகழ்ந்த மாறுதல்கள் எல்லாம் தவத்தில் இருந்த ருத்திரனுக்கு ப்ரகிருதி மூலம் தெரியவந்துச்சு. 'என்கிட்டே ஒரு வேலையை ஒப்படைச்சுட்டு, நான் செஞ்சு முடிக்கறதுக்குள்ளே அப்படி என்ன அவசரம்'னு ஆவேசமாக் கிளம்பி வர்றார்.

பாதாள லோகத்துலே இருந்து பூலோகம் வர்ற வழி தடைபட்டுப்போய் பெருசா பூமி தலைக்குமேலே நிக்குது. தலையாலே முட்டி ஒரே இடி.யில் இடிச்சுப் பிளந்துட்டு வெளிவரப்போகும் சமயம். பூமாதேவி, ருத்திரனை வணங்கி பணிவாகச் சொல்றாள். "தயவு செய்யுங்க. உங்க கோபத்தையும் வேகத்தையும் என்னால் தாங்க முடியாது. உங்க உருவைச் சுருக்கிச் சின்னதாக மாற்றி என் காது வழியாக மெதுவாக வெளியே வந்தால் உங்க பாரத்தைத் தாங்கிக்கொள்ள என்னால் முடியும். கருணை காட்டுங்க."

பூமாதேவி பசுவைப்போல் பொறுமையுடன் வணங்கிச் சொன்னது ருத்திரனுக்குப்பிடிச்சுப்போச்சு. சரின்னு சம்மதிக்கிறார். பூதேவியும் பசுவாகவே உருவம் எடுத்து நிக்கறாள். உடனே தன் உடலைச்சுருக்கிக் கட்டைவிரல் அளவான ரூபம் எடுத்து அவள் காது வழியாக மெதுவே ருத்திரன் வெளிப்பட்டார். உன்னுடைய 'ஆட்டிட்யூட்' ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்று முதல் பூமியின் இந்த நிலப்பகுதிக்கு கோ கர்ணம் (பசுவின் காது) என்ற பெயர் இருக்கட்டும். இந்த இடத்தைச் சுற்றி பதினைஞ்சு மைல் அளவுள்ள இடங்களுக்கு க்ஷேத்ரம் என்ற புகழ் இருக்கட்டும்னு சொல்லி பூமாதேவியை ஆசீர்வதிச்சுட்டுக் கோபத்தோடு ப்ரம்மனை நோக்கிப்போறார்.

'நீ சிருஷ்டித்தவைகளை அடியோடு அழிப்பதுதான் முதல்வேலை'ன்னு போகும்போது மகாவிஷ்ணு எதிரில் வந்து, 'எதுக்காக இத்தனை கோபம்? கொஞ்சம் மனசை அமைதிபடுத்திக்குங்க. ப்ரம்மன் ஏதோ தெரியாத்தனமா செஞ்ச பிழையைப் பொறுத்தருளணும். ப்ரம்மன் ஒருமுறை படைச்சுட்டான்னா அது பிரளயம் வந்துதான் அழியணும் என்பது விதி. அதை மாற்ற யாருக்குமே அதிகாரம் இல்லை. பெரியமனசோடு ப்ரம்மனை மன்னிக்கணுமு'ன்னு வேண்டி, 'இந்த இடம் இனி ருத்திரபூமின்னு அழைக்கப்படும் என்றார்'

. பூஜைப் பாத்திரங்கள், சாமி விக்கிரஹங்கள் விற்கும் கடைகள் வீடுகளையொட்டிய திண்ணைப்பகுதிகளில் ஆரம்பிச்சு ரோடுவரை வந்து, ஏற்கெனவே சின்னதா இருக்கும் ரோட்டை இன்னும் குறுக்கி வச்சுருக்கு.



கீக்கிடமான ஒரு இடத்துலே கோவில் தேர் ஒன்னு நிக்குது. மக்கள் கூட்டத்தைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் ஏராளமான கோக்களும் கோப்பாப்பாக்களுமா ஜேஜேன்னு இருக்கும் பகுதியில் கோவிலின் நுழைவாசல் இருக்கு. உள்ளே போனால் விஸ்தாரமான வெளிப்ரகாரம். வாங்கன்னு வரவேற்றார் ஒரு பண்டிட். எதாவது பித்ரு கார்யங்கள் செய்யணுமான்னு விசாரிச்சார். ' 'இல்லை'ன்னதும், இப்படியே போய் வலதுபக்கம் திரும்புனால் மூலவர் சந்நிதி. நீங்களே தொட்டுக் கும்பிடலாம்.னு சொல்லிட்டுப் போனார். இங்கே இடது பக்கம் மந்திரங்கள் சொல்லும் சப்தம் கேட்டுச்சு. கோடிமுறை ருத்ரம் சொல்றாங்களாம். . .

அங்கே வெளியே பட்டியல் போட்டு வச்சு நமக்கிஷ்டமான தொகையைக் கட்டி இதுக்கு உதவலாமுன்னு அறிவிப்பு பார்த்தேன். வழக்கமா இப்படியெல்லாம் பார்த்தால் அறிவிப்பைப் படிச்சுக்கிட்டேக் கடந்து போகும் பழக்கம்தான் நமக்கு. இன்னிக்கு என்னமோ...மனசுலே ஒரு தோணல். என்ன ஏதுன்னு விவரம் கேட்டேன்.

இது ஏறக்குறைய ஒரு வருசப் ப்ரோக்ராம். ஒரு நாளைக்கு 27,951 முறை ருத்ரம் சொல்றாங்களாம். வருசம் முடியும்போது ஒரு கோடியே ஏழு லக்ஷத்து எழுபதாயிரத்து நூத்தி முப்பத்தி அஞ்சு முறை ஓதி முடிஞ்சுருக்குமாம். போன வருசம் ஏப்ரல் மாசம் 27க்கு ஆரம்பிச்சது. இந்தவருசம் மே மாசம் 16 தேதிக்கு முடியப்போகுது. உலக 3 சரித்திரத்தில் இது முதல்முறையாச் செய்யப்படுது. ஆஹா.... 'சரித்திரம்' என்றதால்தான் மனசு சரின்னு சொல்லுது!

20 comments:

said...

ரொம்ப நல்ல அனுபவம்!

Anonymous said...

இந்த கோகர்ணம் எங்கே இருக்கு டீச்சர்

said...

நாங்க கதை கேட்க ரெடி டீச்சர்.

said...

naan poganumnu ninaikira oru idam ithu. innum nerama amayala

said...

ஆகா காது வழியா வந்தனால கோகர்ணமா! :)

உண்மையோ கட்டுக்கதையோ இந்த மாதிரி கதைகள் படிக்க சுவாரஸியமா இருக்கு டீச்சர் :)

said...

கோகர்ணத்துக்கு இதுதான் விளக்கமா.
நல்லா இருக்குப்பா கதை. ருத்ர ஜபம் நடக்கிறது நல்ல விசேஷம் . மங்களமான கடவுள். ஏன் பதிவு சுருங்கிப் போச்சு!!?உள்வாங்கிச் சொல்கிறதில உங்களை யாரும் மிஞ்ச முடியலையே:(
ஒரு வகுப்பு நடத்துங்களேன்.
இப்படித்தான் எழுதணும்னு. சரித்திர வகுப்புக்கு கொத்ஸ் இருக்கார். விஜிம்மா இருக்காங்க.
பதிவு வகுப்புக்கு எனக்கு முதல் சீட் கொடுத்தாப் போதும்:)

said...

வாங்க ராம்.

அடுத்த ட்ரிப் உங்களுக்கு அந்தப் பக்கம்தான்!

said...

வாங்க சின்ன அம்மிணி.

விடியவிடிய கதை கேட்டு......

மங்களூரில் இருந்து ஒரு 235 கிலோமீட்டர். கோவா எல்லைக்கு அருகில் இருக்கு. ன்னும் ஒரு 152 கி.மீ போனா கோவா மாநிலம் வந்துரும்

said...

வாங்க சுமதி.

உங்களையெல்லாம் நம்பித்தான்..... ஆறமர எழுதிக்கிட்டு இருக்கேன்.
நன்றிப்பா

said...

வாங்க எல் கே.

நேரம் வந்தா எதுவும் வழியில் நிக்காது.

நம்ம பயணத்திட்டத்துலே இதெல்லாம் ஆரம்பத்துலே இல்லவே இல்லை. வெறும் உடுப்பி மட்டும்தான் போகணுமுன்னு இருந்தேன்.

said...

வாங்க நான் ஆதவன்.

Tom Thumb னு ஒரு கதை இருக்கு. கட்டைவிரல் அளவுள்ள பையன்.

நம்ம நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு பையன் இப்படி இருந்து கடைசியில் ராஜகுமாரியை கண்ணாலம் கட்டுவான்!

said...

வாங்க வல்லி.

ஆனானப்பட்ட சிவனே சுருங்கிட்டார். பதிவு சுருங்குனா என்ன????????

( வழக்கம் போல் மூணு பக்கம்தான். படங்கள் குறைவா இருக்கு, அதுதான் காரணமா இருக்குமோ என்னவோ!)

ஒரு வாரமா நெட் கனெக்ஷன் தகராறு:(

said...

கதை நல்லா இருக்கு டீச்சர், படங்களுகும் அருமை. மிக்க நன்றி.

said...

வழக்கம் போல கதை சூப்பரு ;)

said...

வாங்க பித்தனின் வாக்கு.

கதைகள் இன்னும் தொடர்ந்து வரும். நிறைய ஸ்கோப் இருக்கு:-)))))

said...

வாங்க கோபி.

ஒருகதைக்குள் ஒரு கதைன்னு முடிவில்லாமப் போகப்போகுது. அப்பச் சொல்லுங்க இதே பதிலை:-))))

said...

கதையை நானும் காதுகொடுத்து கேட்டுக்கிட்டேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கதைகேட்ட காதுக்கு ஒரு வைரத்தோடு:-)

said...

கோகர்ணம் பார்த்தாயிற்று.நன்றி.

said...

வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றி.