Tuesday, April 20, 2010

விண்ணைத்தாண்டி வரவா?

ம்ம்ம்ம்ம்ம்ம் வாங்க. நேத்து எங்கெ விட்டேன்? ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரைப் பற்றி நிறைய பாடல்கள் ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் இயற்றி அவைகளைப்பாடி வழிபட்டுக்கிட்டு இருந்தார். நைவேத்தியம் செய்ய இவர் கடலைகளை வேகவச்சுத் தலையில் தூக்கிவச்சுக் கொண்டு போகும்போது நைஸாப் பின்னால் வந்து அந்த ஹயக்ரீவரே அபேஸ் பண்ணிருவாராம். இப்படியாக ஹயக்ரீவருக்கு கடலைன்னு போட்டுருக்கு.

பொதுவாச் சொன்னால் கொள்ளுதான் குதிரைக்கு உணவு. இங்கே கடலைன்னு ஆனது ஒருவேளை 'நம்ம வசதி'க்காக இருக்கலாமோ? கடலையிலும் கொத்துக்கடலை, நிலக்கடலைன்னு ஆகி இருக்கலாம். அதானே...என்னதான் கோவில் ப்ரஸாதமுன்னாலும் நொச்சு நொச்சுன்னு கொள்ளை யாராலே தின்ன முடியும் வாயெல்லாம் வலிக்காதா? ஃபாலோயர்ஸ் ஆஃப் சம்ப்ரதாயம் கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.. கொஞ்சம் மாத்தி யோசிச்சால் தப்பா?


ஆமாம், இந்த ஹயக்ரீவருக்கு அப்படி என்ன விசேஷம்? அச்சச்சோ... கன்னத்துலெ போட்டுக்குங்க. இவர்தான் கல்வி அறிவுக்கான கடவுள். அது எப்படி? அதான் இதுக்குன்னே கலைமகள் ஒருத்தர் கையில் வீணையும், ஓலைச்சுவடியுமா இருக்காங்க. அவுங்களைக் கும்பிட்டு பொரிகடலை(ஹா...மறுபடியும் கடலை!) நம்ம புஸ்தகம் எல்லாம் வச்சுக் கும்புடறோமே. அதுவும் ரொம்பச் சரி. கல்விக்கான தேவியின் குருதான் இந்தப் பரிமுகர். இவரைக் கும்பிட்டா, டைரக்ட்டா சரஸ்வதியின் அருள் கிட்டும். பரிட்சை சமயத்தில் பார்க்கணுமே இவர் கோவிலில் இருக்கும் கூட்டத்தை:-)

அது இருக்கட்டும். இந்த வாதிராஜர் கடந்து போன ஒரு ஜென்மத்துலே நம்ம ருக்மிணிக்கு உதவி செஞ்சுருக்காராம். ருக்குவின் அண்ணன் ருக்மன், தன்னுடைய தங்கை ருக்குவை, சேதி தேசத்து ராஜாவான சிசுபாலனுக்குக் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் செஞ்சுட்டான். ருக்குவோ, நம்ம க்ருஷ்ணனின் புகழைக் கேட்டு, அவனை மனதால் வரிச்சுக் கல்யாணமுன்னா அது அந்தக் கண்ணனோடுதான்னு முடிவு செஞ்சுட்டாள். ஒருதலைக்காதல். இங்கேயோ கல்யாண ஏற்பாடுகள் மும்முரமா நடக்குது. எப்படிக் கண்ணனை 'காண்டாக்ட்' செஞ்சுக் காதலைச் சொல்லலாமுன்னு ருக்குவுக்குப் புரியலை. ரொம்ப யோசனைக்குப்பிறகு ஒரு கடிதம் எழுதி அதை நம்பிக்கையான ஒருத்தர்மூலம் கொடுத்தனுப்புனாள். க்ருஷ்ணாவுக்கு அதைக் கொண்டுபோய்க் கொடுத்தார் அந்த ஒருத்தர். ஆஹா.... நம் மேல் இப்படி ஒருத்தி உயிரை வச்சுருக்காளேன்னு க்ருஷ்ணனுக்குப் புல்லரிச்சுப் போயிருச்சு. தேரை ஓட்டிக்கிட்டு வந்து, கல்யாணப்பொண்ணு சாமி கும்பிடக் கோவிலுக்கு வந்தப்பக் கடத்திக்கிட்டுப்போய் தானே கண்ணாலம் கட்டிக்கிட்டான். இதெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சுதான் இருக்கும். இப்ப எதுக்கு இதைக் கோடி காட்டுறேன்னா.... அந்த கடிதம் கொண்டு போன 'அந்த' ஒருத்தர் இந்த வாதிராஜர்தானாம்!

ஹரிஹரனைச் சேவிச்சுக்கிட்டு வெளியே படியேறி வந்தால் லக்ஷ்மிநாராயணனுக்கு ஒரு சந்நிதி வெளிமண்டபத்துலே இருக்கு. கொஞ்சம் தள்ளி சூர்யநாராயணன் கோவிலுக்குப் போகும் வழின்னு அம்பு சொல்லுது. அச்சச்சோ.....நாம் இங்கே வந்ததே அதைப் பார்க்கத்தானேன்னு ஓடுனேன். மண்பாதையா ஒரு ஏத்தம் போகுது. ரொம்ப தூரம் ஏறணுமோன்னு தயக்கம். போகத்தான் வேணுமான்னு ஒரு எண்ணம் எட்டிப் பார்த்துச்சு. கொஞ்சம் 1 ஏறிப்பார்க்கலாம். முடியலைனா.....விட்டுறவேண்டியதுதான். முயற்சி செய்யலைன்னு அவப்பெயர் வந்துறக்கூடாது பாருங்க!

அஞ்சு நிமிசம் ஏறுனதும் முன்னே போய்க்கிட்டு இருந்த கோபால் என் காதில் தேன் ஊத்துனார்.

"இதோ இருக்கு கோவில்"

எதிர்பார்த்தமாதிரி இல்லை. ஆனா அழகா சின்னதா ஒரு சந்நிதி. முன்னால் ஒரு மண்டபம். கோவிலைப் பெருக்கிக்கிட்டு இருந்தாங்க. எட்டிப் பார்த்துச் சேவிச்சுக்கிட்டு வந்தோம்
நேரம் ஆகிக்கிட்டே போகுது. எங்கேயும் நிக்காம நேராப் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே குந்தபுரா (குந்தவர்மா ஆண்ட தேசம்) என்ற ஊரைக் கடந்து 'விர்'னு போனோம். அரபிக் கடலை ஒட்டிப்போகும் சாலையில் ஒரு இடத்தில் நமக்கு இடது பக்கம் கடற்கரை ( கல்லு போட்டு வச்சுருக்கும் பீச்) வலது பக்கம் நதி! சூப்பரா இருக்கு.

கடற்கரையில் ரெண்டு மூணு இடத்துலே பொட்டிக்கடைகள். தண்ணீரில் கால் நனைக்கும் பத்துப்பதினைஞ்சு மக்கள். அம்புட்டுதான். இந்தப் பொட்டிக்கடைகளை அப்புறப்படுத்தினா வருங்காலத்துக்கு நல்லது. வரும்வழியில் இதுக்குள்ளே ஏழெட்டு நதிகளைக் கடந்து வந்துருந்தோம். பாலங்களின் ரெண்டு பக்கமும் அசோகர் ஸ்தூபியில் இருக்கும் சிங்கங்கள் சிரிச்ச முகத்தோடு நிக்குதுகள். நெடுஞ்சாலைத் துறை உபயம்.

நினைச்சது போல நடக்குதா என்ன?

"ப்ரஷாந்த், ஸ்டாப் ஸ் டாப் ஸ்டாப்"
'நிறுத்து'ன்னதும் சுமார் கால்கிலோ மீட்டர் போய்த்தான் நிறுத்தும் வழக்கம் இங்கே நம்ம ப்ரஷாந்துக்கு. இதுக்கெல்லாம் கலங்கினால் ஆகுமா? யூ டர்ன் எடுத்து மெதுவா கீழே போகும் மண்பாதையில் போனோம்.
உசரமா இருக்கும் சாலைக்கு இந்தப் பக்கம் கீழே ஒரு கோவிலும் கொடிமரமும். லக்ஷ்மி வெங்கடேஷ்ன்னு பெயர் இருக்கு. எட்டிப் பார்த்துட்டே போகலாம். சாலையில் இருந்து இறங்கிவர படிகளும் இருக்கு. ஊருக்கு பெயர் ஷிராலி. பங்களா டைப்லே கோவில். சும்மா ஒரு பத்து நிமிஷம் ஏகாந்த தரிசனம் செஞ்சுட்டுக் கிளம்பினோம். பெருமாள் நிற்க, அவருக்கு முன்னால் உக்கார்ந்துருக்கும் லக்ஷ்மி. பொதுவா வாசலுக்கு நேரா முன்னாலே மூலவர் இருப்பதால் அங்கங்கே எடுத்த படங்களில் மூலவர் மசமசன்னு தெரியறார்.
பொழுதோடு போய்ச் சேரணும். இன்னிக்கு ஏராளமான இடங்களைப் பார்த்தாச்சு. 'திடுக் திடுக்' ன்னு போகும் வழியில் முளைச்சுருக்கும் கோபுரங்களுக்கு வண்டிக்குள் இருந்தே ஒரு 'ஹை' சொல்லிட்டே போகவேண்டியதுதான். தேசிய நெடுஞ்சாலை 17 இல் சரேல்னு இடது பக்கம் பிரிந்த மண் சாலையில் வண்டி நுழைஞ்சது.. ஒரு ஒன்னேகால் கிலோமீட்டர் வந்துருப்போம்.
அட! இது யாரு நம்ம எல் ஐ சி பில்டிங்கை எடுத்து இங்கே கொண்டுவந்து நட்டது? கோபுரமா? உசரத்துக்குத் தகுந்த அகலம் இல்லையே!!! கோவிலை ஒட்டியே நாம் தங்கப்போகும் ஹொட்டேல் இருக்கு. கடலைப் பார்த்தபடி நிற்கும் கட்டடம்.
"ரூம் வித் அ வ்யூதானே?"

"ஆமாம். "

பால்கனி கதவைத் திறந்ததும் காற்று பிச்சுக்கிட்டுப் போகுது. சின்னச்சின்ன படகுகளை கடலில் அங்கங்கே தூவி வச்சுருக்காங்க. கரை ஓரம் இடுப்பளவு தண்ணீரில் நின்னு உற்சாகத்தால் கூச்சலிடும் கூட்டம். கடலுக்குள் ஒரு ரவுண்ட் போய்வர ஆட்களை ஏத்தும் பெரிய படகு, தண்ணீருக்கு எதிர்ப்புறம் கோட்டைச்சுவர் போல அடர்த்தியா நிற்கும் தெங்கின் கூட்டம். தூரக்கே வெள்ளையா ஒரு கோவில் கோபுரம். பின்புலத்தில் ஓடும் மலைத்தொடர்! வலது பக்கம் தலையைத் திருப்புனால் அந்த எல் ஐ சி.
இன்னும் சீசன் ஆரம்பிக்காததால் ஒரு நாலைஞ்சு அறைகளில் மட்டுமே பயணிகள். இன்னிக்குப் பயணம் செஞ்சது கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர்தான். ஆனாலும் பத்து மணி நேரம் எடுத்துக்கிட்டுச் சுத்தி இருக்கோம். ( ஒரு பத்து இடுகைகள் வேற!) கொஞ்சம் ஃப்ரெஷ்அப் பண்ணிக்கிட்டு கீழே போனோம். நம்ம ப்ரஷாந்திடம் போய் சாப்பிட்டுட்டு வந்து நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லிட்டு அந்த எல் ஐ சியை நோக்கி நடந்தோம். அட்டகாசமான ரெண்டு கொம்பன் யானைகள் வாசலில் நின்னு வரவேற்க முருதேஷ்வரர் கோவிலுக்குள் நுழைஞ்சோம்..
நெடுநெடு வானத்துக்குன்னுப் போகும் ஏணிபோல 249 அடி உயர ராஜகோபுரம். விண்ணைத்தாண்டி வரட்டுமான்னு 'தேவர்களை'க் கேக்குதோ!!!!

25 comments:

said...

வழக்கம் போல் படங்களும் விவரிப்பும் அருமை
//'நிறுத்து'ன்னதும் சுமார் கால்கிலோ மீட்டர் போய்த்தான் நிறுத்தும் வழக்கம் இங்கே நம்ம ப்ரஷாந்துக்//
அது வாலிப வயசு .....
உண்மையிலேயே மிக பிரம்மாண்டமான கோபுரம்தான்

said...

நீங்கள் தேடிய சூர்யநாராயணன் அகப்பட்டதில் மகிழ்ச்சி.

விண்ணைத்தாண்டும் கோ..ஓ...ஓ..புரம்.!!!

"ரூம் வித் அ வ்யூ" வாவ்..

said...

ம்ம்ம்ம் ரெண்டு நாள் க்ளாஸூக்கு வரலைன்னா வீட்டுப்பாடம் மலை போல குமுஞ்சிடுதே டீச்சர்!

said...

படங்கள் எல்லாம் கொள்ளை அழகு டீச்சர்

said...

// ஃபாலோயர்ஸ் ஆஃப் சம்ப்ரதாயம் கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.. கொஞ்சம் மாத்தி யோசிச்சால் தப்பா? //

தப்பா !! தப்புன்னு நினைக்கிறதுதான் தப்பு.

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் எதுவேணுமானாலும் கொடு அப்படின்னு இருக்கு.

பாக்கப்போனா நமக்கு எது பிடிக்கிறதோ அத நம்ம இஷட தெய்வத்துக்கு நைய்வேத்யம் செய்யலாம். தப்பே
கிடையாது. பாக்கப்போனா அது ஸ்ரேஷ்டம்.

ஆக, கொள்ளு பிடிக்கிறதுன்னா கொள்ளு கொடுங்க. இல்ல, கடலை பிடிக்கும் அப்படின்னா கடலை கொடுங்க.

( ஸப்ஜக்ட் டு ஹயக்ரீவர்ஸ் அப்ரூவல் )

உங்களுக்கு ஒரு உண்மையில் நடந்த நிகழ்ச்சி சொல்லட்டுமா ?

ரொம்ப வருசத்துக்கு முன்னாடி, க்ருஷ்ண ஜயந்தின்னிக்கு, ஒரு பக்தை தனது வீட்டில் , தனது இஷட தெய்வமான கோபாலனுக்கு பால், தயிர், தேன், அப்படி எல்லாம் அபிஷேகம் செய்துகிட்டே இருந்தவங்க, க்டைசியா சோப் வாடராலேயும் அபிஷேகம் செய்தாங்களாம். அத ஸ்ரத்தையா பாத்துகிட்டு இருந்த, இன்னொரு பக்தர், தனது குரு கிட்டே போய், ஸ்வாமி இப்படி நடக்கிறதே ! அபசாரமில்லையா ! எனக்கேட்டாராம்.

அதற்கு அந்த ஆசார்யர் சொன்னாராம்: "அந்த பக்தை தன்னையும் கோபாலனையும் தனித்தனியாக பார்க்கவில்லை.
அந்த பக்தி பிரேமையில் அவள் கோபாலனாகவே ஆகி, தான் எந்த சோப் குளியலில் சுகிப்ப்பாளோ அதிலேயே தன் இறைவனுக்கும் அபிஷேகம் செய்தது, அந்த பக்தையின் நெஞ்சம் எவ்வாறு கிருஷண் பக்தியில் ஆழ்ந்த பக்தியில்
ஊன்றிப்போய் இருக்கிறது என்பத்றகு அடையாளமே. இதில் அபசாரம் என்ன இருக்கிறது ? அந்த பக்தி நமக்கு
வரவில்லையே என்று ஆதங்கப்படவேண்டும். அவ்வளவுதான்."

ஸோ, பக்தி சம்ப்ரதாயத்துக்கு அப்பாற்பட்டது அப்படின்னு தான் நினைக்கிறேன். கீதா மேடம் என்ன சொல்வாங்களோ? தெரியல்ல.

அது சரி. உங்க இடது கைப்பக்கம் அரபிக்கடல் இருக்கா ? நான் பார்த்தேன். எனக்கு வலது பக்கம் அரபிக்கடல் இருக்கு.
அங்கேந்து பைனாகுலர்லே பாத்தீங்கன்னா, ஒரு கிழவனும் கிழவியும் பீச்லே காத்து வாங்கிணு இருக்கறத பாருங்க.
நாங்க தான் அது.

சுப்பு தாத்தா.

said...

// ப்ளீஸ்.. கொஞ்சம் மாத்தி யோசிச்சால் தப்பா? //

தப்புதான் டீச்சர், அப்புறம் எல்லாம் மாத்தி மாத்தி யோசிக்க ஆரம்பிச்சுடுவா!!!

// பாக்கப்போனா நமக்கு எது பிடிக்கிறதோ அத நம்ம இஷட தெய்வத்துக்கு நைய்வேத்யம் செய்யலாம். தப்பே
கிடையாது. பாக்கப்போனா அது ஸ்ரேஷ்டம். //

இப்படி எல்லாம் அந்தக் காலத்துல சொன்னாக் கேட்டுக்குவாங்க. ஆனா இப்ப இல்லை. எனக்கு டாஸ்மார்க்தான் பிடிக்கும் என்று விதாண்டாவாதக் கும்பல்கள் (என்னை மாதிரி) நிறைய ஆகிடுச்சு. ஒரு கஸ்மால நடிகர் சலங்கை ஒலி படத்தில சரக்குக் சுத்திக் கட்டுமோ அதுபோல.
இதுவும் இல்லை என்றால் எனக்கு பிசா பர்கேர்தான் பிடிக்கும்(என்னமோ பொறந்தவுடனே பாலுக்கு பதிலா பிசா சாப்பிட்ட மாதிரி அலட்டும்) என்று அலட்டும் அல்ட்ரா மாடல் கும்பல், அதை வைத்துவிடும்.
அதுனால எது நல்லதே, எது பகவானுக்குப் பிரியமோ, எது சிறப்புடையதே. எது அவனுக்குப் ப்ரிதியானதோ அதை நாம் அவனுக்கு சமர்ப்பணம் செய்வது நல்லது.
இதில் எல்லாம் தெளிவா சொல்லவில்லை என்றால் நமக்குத்தான் டேஞ்சர். குதிரை என்றால் கொள்ளு என்ற டீச்சருக்கு எண்னம் வந்தது ஓகே. ஆனா அதுக்காக சிம்மம் என்றால் மான் வைக்கனும் நினைக்காதிங்க டீச்சர், அப்புறம் வனத்துறையினர் கொத்திக்கிட்டு போயிடுவாங்க. கூர்மத்திக்கு மீனும், மச்சத்திற்கும் புழுவும் வைச்ச அப்புறம் பொருமாள் கோவில் ஒரு மினி முனியாண்டி விலாஸ் ஆகிவிடும்.
இதுக்கும் கண்ணப்பனையும், குகனையும் ஒரு கும்பல் உதாரணம் காட்டும்
சில இடங்களில் நமது அதீத கற்பனையும், ஆர்வக் கோளாறையும் அடக்கி,கடிவாளம் போடுவது நல்லது,. நன்றி.

said...

// ஃபாலோயர்ஸ் ஆஃப் சம்ப்ரதாயம் கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.. கொஞ்சம் மாத்தி யோசிச்சால் தப்பா? //



// சில இடங்களில் நமது அதீத கற்பனையும், ஆர்வக் கோளாறையும் அடக்கி,கடிவாளம் போடுவது நல்லது,. நன்றி.//

பித்தன் சரியாத்தான் சொல்றார். கொஞ்சம் மாடிஃபை பண்ணி,

" திங்க். திங்க் டிஃபரன்ட்லி. பட் ஹாவ் ஆல்வேஸ் எ செக். " அப்படின்னு பாத்தா பெஸ்ட் அட்வைஸ்.
தேங்க் யூ பித்தனின் வாக்கு.


" பித்தா பிறைசூடி, பெருமானே அருளாளா...."... என சும்மாவா சொல்லியிருக்கு !!

சுப்பு தாத்தா.
தோஹா.

Anonymous said...

குதிரை அபேஸ் பண்ற படம் அழகா இருக்கு

said...

\\அதுவும் ரொம்பச் சரி. கல்விக்கான தேவியின் குருதான் இந்தப் பரிமுகர். இவரைக் கும்பிட்டா, டைரக்ட்டா சரஸ்வதியின் அருள் கிட்டும்\\

தகவலுக்கு நன்றி..வரபோற பரிட்சைக்கு உதவும் ;)))

\நம் மேல் இப்படி ஒருத்தி உயிரை வச்சுருக்காளேன்னு க்ருஷ்ணனுக்குப் புல்லரிச்சுப் போயிருச்சு. தேரை ஓட்டிக்கிட்டு வந்து, கல்யாணப்பொண்ணு சாமி கும்பிடக் கோவிலுக்கு வந்தப்பக் கடத்திக்கிட்டுப்போய் தானே கண்ணாலம் கட்டிக்கிட்டான்\\

சினிமாவுல கடைசியில அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு ஆப்பு வைக்கிற சீன் எல்லாம் இங்க இருந்து தான் காத்துக்கிட்டாங்க போல..;))

படங்கள் எல்லாம் தூள். அந்த கோபுரம் நல்லா வந்திருக்கு ;)

said...

டீச்சர், இந்த ஹயக்ரீவர் கோயில் எங்கே இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
அப்படியே இந்த எடங்களுக்குக்கெல்லாம் எப்படி போகணும், நீங்க உபயோகிச்சா ரூட் மேப் இதெல்லாமும் சிலபஸ்ல சேர்த்தீங்கன்னா பிள்ளைகளுக்கு உபயோகமா இருக்கும்.
ஆன்மிகம் மற்றும் வரலாறு பாடங்கள் அருமையா போய்க்கிட்டிருக்கு.
நன்றி டீச்சர்!

said...

It does appears to be a very good view from the hotel. That tall Gopuram picture has really come out well.

said...

கடற்கரை சாலை, மற்றும் கோபுரம்
அந்த ஹோட்டல் ரூம் வ்யூ அனைத்தும் அருமை.

said...

வாங்க எல் கே.

//அது வாலிப வயசு .....//

ரொம்பச்சரி:-)))))

ஆசியாவிலேயே உயர்ந்த, கோவில் கோபுரமாம்!

said...

வாங்க மாதேவி.

பால்கனிக் கதவைத் திறந்ததும், இதே 'வாவ்' தான்:-)))))

said...

வாங்க நான் ஆதவன்.

முக்கியமான சில விஷயங்கள் வாழ்வில் குறுக்கிடப்போவதால் இந்தப் பயணத்தொடரை வேகமா முடிக்கணும். அதுக்காக நோ 'சுருக்':-)

வாரம் அஞ்சு பதிவுன்னு போட்டு உங்களை ஹிம்சிக்கும் எண்ணம்:-)))))

இடமே கொள்ளை அழகு. அதான் படங்களும் அழகாவே வந்துருது!

said...

வாங்க சுப்பு ஐயா.

நம்ம வீட்டுலேயும் நைவேத்தியத்துக்கு அன்னிக்கு என்ன செய்யறோமோ அதுதான்.

ஆனால் புள்ளையாருக்கு மட்டும் கோணாமாணான்னு வந்தாலும் கொழுக்கட்டை செஞ்சுருவேன். வெளியே எப்படி இருந்தால் என்ன? உள்ளே பூரணம் தித்திக்குதே:-))))

சாமி நம்ம வீட்டுலே ஒருந்தந்தான். பிள்ளைகளுக்குக் கொடுக்கும் செல்லம், மொத்து உள்பட எல்லாமே அவனுக்கும் கொடுக்கறதுதான்

said...

வாங்க பித்தனின் வாக்கு.

யோசிக்காமல் இருந்தால் மூளைக்கு துரு ஏறிடும்.



ஆமாம். மனசை அடக்கிக் கடிவாளம் போடும் வித்தை இன்னும் கைவசம் வரலையேப்பா:(

ப்ரச்சனையே அங்கேதான்:-)))

said...

சுப்பு ஐயா.

ஓ ...பீச்லே அந்த ரெண்டு பேர் நீங்கதானா!!!!!!

பித்தனுக்குச் சொல்லணும் ஒரு விஷயம்.

எது கிடைக்குதோ அதுன்ற கணக்குலே

ஆப்பிள்= வெற்றிலை

ஆரஞ்சு = பாக்கு.

நம்ம நியூஸி வாழ்க்கையில்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

நைஸாக் காலைத் தூக்கி அவர் தோளில் வச்சுக்கிட்டு சாப்பிடும் அழகு..ஆஹா....

நான் குதிரையைச் சொன்னேன்:-)

said...

வாங்க கோபி.

உங்களுக்காக பரிமுகனுக்கு ஒரு பரிந்துரை அனுப்பவா?

பெரிய பெரிய(??!!!) சினிமாக்காரர்கள் செய்யும் படங்களுக்குக்கூட கதைகள் இங்கே ராமாயணம், மகாபாரதத்தில் இருந்து உருவப்பட்டதுதான்.

ஆனால் கதை திரைக்கதை, டைரக்ஷன்ன்னு அவுங்க பெயர் போட்டுக்கும்போதுதான்.......


ப்ச்....என்னமோ போங்க.

said...

வாங்க விஜி.

ஹயக்ரீவர் கோவில் இப்போப் பல இடங்களில் இருந்தாலும், திருவஹீந்திரபுரம் (கடலூர் மாவட்டம்) என்ற ஊரில் இருக்கும் மருந்து மலையில் இருக்கும் கோவில் ரொம்பப் புகழும் பழமையும் வாய்ந்ததாம். (நான் இதுவரை போகலை)

நம்ம பயணத்துலே ரூட் மேப்ன்னு ஒன்னும் தனியாப் போட்டுக்கலை. இந்தப் பயணத்தைப் பொறுத்தவரை உடுப்பிதான் செண்டர் ஆஃப் அட்ராக்ஷன்.

மங்களூரில் இருந்து வடக்கே நூல் பிடிச்சமாதிரி கோகர்ணம் வரை போய் திரும்பினோம். வழியில் அங்கங்கே கிளை பிரிஞ்சு போய் பார்த்ததுதான் எல்லாம்.

டூரிஸ்ட் பஸ்களில் போகாம நாமே சொந்தமா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு வண்டி வச்சுக்கிட்டோமுன்னா....விசேஷம்.

போனஸா ஏராளமான இடங்களைப் பார்க்கலாம்.

said...

வாங்க சந்தியா.

இன்னும் நாலுநாள் தங்கலாமான்னு ஆசை வந்ததென்னமோ உண்மை.

said...

வாங்க சுமதி.

அருமையான இடம்தான். சான்ஸ் கிடைச்சால் விட்டுறாதீங்க.

said...

டீச்சர் இதே போல எங்க கடலூரில் திருவஹீந்தபுரத்தில் மலையில ஒரு ஹயகீரிவ சாமி் இருக்காரு .. நேரம் கிடைச்சா போய் சேவிச்சிட்டு வாங்க...

said...

வாங்க ஜாக்கி.

கட்டாயம் போகத்தான் வேணும். நம்ம விஜிக்கு இதே விவரம் கொடுத்துருக்கேன் பாருங்க முந்திய பின்னூட்டங்களில்.

புது வீடு எப்படி இருக்கு? செட்டில் ஆகிட்டீங்களா?