Wednesday, April 14, 2010

கூட்டமான கூட்டம்! இன்னிக்கு அப்படி என்ன விசேஷமாம் ?

பெண்கள் குழு பஜனை பாடிக்கிட்டு இருந்த இடம் சந்த்ரஷாலாவாம். இங்கேயும் சுவற்றில் பெரிய பெரிய படங்கள். நடுவிலே ஒரு ஜன்னல். பாட்டைக் கேட்டுக்கிட்டே கருவறையை வலம்வந்தபோது இடது பக்கம் இருக்கும் வழியில் பக்கத்துக்கொன்னாக ரெண்டு அறைகள் திண்ணைகளின் மேல் . அதுலே நமக்கு வலப்புறம் இருந்ததில் ஸ்வாமிப் படங்கள், ஆச்சார்யன் படங்கள் எல்லாம் வச்சுருக்காங்க. அங்கேயே நின்னு சேவிச்சுக்கிட்டு வரிசை ஆரம்பமாகும் இடத்துக்கு வரலாமுன்னா.... ஏதோ மேஜிக் ஷோ போல அந்த இடமே வேற ஏதோ மாதிரி இருக்கு. தடுப்பு எல்லாம் வச்சு கோவில் பணியாளர் நின்னுக்கிட்டு இருக்கார். ஒரு பெரிய கூட்டம் முட்டிமோதி நெருக்கித் தள்ளிக்கிட்டு அவர்கிட்டே வாதாடுறாங்க. ஒரே பஸ்ஸில் வந்த யாத்ரீகர்களாத் தெரியுது. அங்கே சுவர் மாடத்துலே ஏதோ சாமி இருக்கு. அதைக் கும்பிடும் எண்ணத்தில் அங்கே ஒரு களேபரம். என்னடா வழி தெரியாமல் வேறெங்கோ போயிட்டோமுன்னு சொன்னால்.....'இல்லை. இதுதான் நாம் வரிசையில் முதலில் நின்ன இடம். தடுப்பு இப்போ புதுசா இருக்கு'ன்றார் கோபால். இதுக்குப் பக்கம் இன்னொரு வாசல் வழியா வந்தால் நாம் வெளியே வந்துருக்கோம். பயங்கரக்குறை எனக்கு. இன்னொருக்காப் பார்க்கலையே.......

ஆறடி அகலம்கூட இல்லாத பாதையிலே நிக்கறோம். இன்னொரு அறைக்குள்ளே ஏதோ பஜனை. எட்டிப் பார்த்தால் கம்பிக்கிராதிக்குள்ளில் ஆஞ்சநேயர் இருக்கார். ஒரே மாதிரி யூனிஃபாரம் போட்டு (ஆரஞ்சு நிறப்புடவை) ஒரு கோஷ்டி ஹனுமான்சாலீஸா பாடிக்கிட்டு இருக்காங்க. (நானும் ஆரஞ்சுதான். கூடப்போய் உக்கார்ந்துக்கலாமான்னு இருக்கு. தெரிஞ்சபாட்டுதானே! அதுவும் என்னை அறியாமலேயே (வெண்ணைக்)குடங்கள் வரைஞ்ச உடையைப் போட்டுக்கிட்டு வந்துருக்கேன்!)எப்பவுமே இப்படியா...இல்லை வேற எதோ விசேஷமான்னு குழப்பம். எங்கே போறோமுன்னு இலக்கு இல்லாமக் கண்ணில் பட்ட வழிகளில் வந்தால் ஒரு மேடையில் ஸாக்ஸஃபோன் கச்சேரி நடக்குது. ஆஹா... மறுபடி கத்ரி நினைவு. தெரிஞ்ச பாட்டா இருக்கேன்னு கொஞ்சநேரம் உக்கார்ந்து கேட்டேன். அங்கங்கே க்ளோஸ்டு சர்க்யூட் டிவியில் மூலவர் நிக்கிறார். மேடையில் பின்பக்கம் ஸ்ரீமாத்வரின் உருவச்சிலை.
தீ அடங்குன யாக குண்டம் ஒன்னு லேசாப் புகைஞ்சுக்கிட்டு இருக்கு. தரையில் அனுமனின் படம் வரைஞ்சு வர்ணம் தீட்டி இருக்காங்க. தரையின் ஒரு பக்கம் செண்டைக் குவியல்! திடுதிடுன்னு மூணு பேர் ரெண்டு பாத்திரங்களின் காதைப் பிடிச்சுக்கிட்டு ஓடுனாங்க. கண்ணை ஓட்டினால் அத்தனையும் லட்டு. அங்கங்கே இருக்கும் சந்நிதிகளில் படம் எடுத்துக்கிட்டுச் சுற்றிவந்தால் ஜன்னலில் பேச்சுச்சத்தம். எட்டிப்பார்த்தேன். வரிசைவரிசையா மக்கள் உக்கார்ந்து இலைபோட்டுச் சாப்பிடறாங்க. இது இந்த க்ருஷ்ணமடத்தோட டைனிங் ஹால். உக்கார மணை போட்டுவச்ச மாதிரி சின்னதா ஒரு ரெண்டு மூணு அங்குல உயரத்துலே நீளமான பளிங்குக் கல்வரிசை. முன்னால் இலை போட்டுக்க கொஞ்சம் லேசானச் சாம்பல் நிறத் தரை. இலை எடுத்ததும் அதைமட்டும் சுத்தம் செஞ்சுக்கலாம். என்ன ஒரு நல்ல ஏற்பாடு பாருங்களேன்!
கோலாகலமா இருக்கேன்னு இந்தப் பக்கம் நினைவுப்பொருட்கள் விற்கும் ஹாலுக்கு வந்தேன். அதுக்கு எதிர்ப்பக்கம் ............... ஹைய்யோ..... இவ்வளவு சாதத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை!!!!! தென்னை ஓலைகளால் செஞ்ச பிரமாண்டமான ஆளுயரத் தொட்டியில் சாதமோ சாதம்.
அள்ளி எடுத்து எடுத்துக் காதுள்ள பெரிய பாத்திரங்களில் போட்டுக்கிட்டே இருக்காங்க ரெண்டு பேர். கீழே தரையில் எல்லாம் வெண் முத்துக்கள் உருண்டோடுனது போலச் சோற்றுப் பருக்கைகள் இந்தப் பக்கம் நாலு பெரிய கோட்டை அடுப்புகள். தீ ஜ்வாலையில் பிரமாண்டமான டேக்ஸாக்களில் சமையல் நடக்குது. சாம்பாரை வாளியில் முகர்ந்து ஊத்தறார் ஒருவர். திகைச்சு நிற்கும்போது இன்னும் ஏழுபேர் ஆறு பாத்திரங்களில் சாதம் எடுத்துக்கிட்டு இன்னொரு பக்கம் ஓடறாங்க. சாதம் பிசுக்குன்னு காலில் ஒட்டி இருக்குமே. வழுக்கி விழுந்துட்டால்.............. மனம் பதைச்சது. அந்தப் பக்கம் என்ன இருக்குன்னு போய்ப் பார்த்தேன்.


ப்ரமாண்டமான பெரிய ஹால். (பிர்லா கட்டிக்கொடுத்துருக்கார்) பந்தியில் ஆட்கள் வரிசையா உக்கார்ந்துருக்காங்க. அண்டா அண்டாவா பாயசம், மோர், சாம்பார், ரசம். கறிவகைகள் எல்லாம் ஒரு பக்கம் அணிவகுத்து நிற்க......

செண்டை கொட்டும் ஆட்கள் வரிசையாப்போய் நின்னு ஒரு பதினைஞ்சு நிமிஷம் அடிச்சுத் தூள் கிளப்பிட்டாங்க. முக்கிய பிரமுகர்கள் போல் இருக்கும் மக்கள் அங்கே அந்த அண்டாக்களின் முன்னே நிற்க வழிபாடு நடந்துச்சு. பரிமாறத் தொடங்கினாங்க. இன்னொரு பக்கம் மலைமலையா வாழை இலைகளை நறுக்கித் தள்ளிக்கிட்டே இருக்கு ஒரு கூட்டம்.

ஹனுமன் ஜெயந்தியாம்! அட! எப்படி? மார்கழி மாசம் மூல நட்சத்திரம்தானே அவர் பொறந்தநாள்? உள்ளே போய் சாப்புட உக்காருங்கன்னு உபசரிச்சாங்க ஹாலில் நின்னு வரவேற்பு கொடுக்கும் குழுவினர். (எனக்கு, தரையில் உக்கார்ந்து சாப்பிடக் கஷ்டம். சரியாச் சொன்னால் உக்கார்ந்துருவேன். எழுப்பத்தான் நாலு ஆள் வேணும்;-)...) ஹாலில் ஒரு பக்கம் இருக்கும் மேடையில் சங்கீதக் கச்சேரி ஒன்னு நடந்துக்கிட்டு இருக்கு. செவிக்கும் வயிற்றுக்கும் ஒரே சமயம் உணவு!

படங்களைக் கிளிக் செஞ்சுட்டு கீதா மந்திர்ன்னு பெயர் எழுதி இருந்த கட்டிடத்துக்குப் போனோம். நுழைவுச்சீட்டு வாங்கிக்கணும். எவ்வளவாம்? ஒரு ரூபாய்!!! எத்தனை பேர்ன்னு கேட்டுக்கிட்டே ஒருந்தர் வந்தார், கீதா மந்திர் கைடு ஸ்ரீதர் பட்டாச்சார்யா. ரெண்டே பேர். வாங்கன்னு படிகளில் கூப்பிட்டுப்போனார். சரியாப் பதினெட்டுப் படிகள். கீதையின் அத்தியாயம் 18 என்பதால் எல்லாமே இங்கெ பதினெட்டுக்களா இருக்கு!
மேலே போனதும் அழகான மரவேலைப்பாட்டுக்கு நடுவில் பளிங்குச் சுவரில் கீதா தர்ஷன் சபான்னு விவரம் இருக்கு. சுவரின் ரெண்டு பக்கமும் உருளைவடிவத் தூண்கள். 'தூணைச் சுற்றவும்' என்ற எழுத்துக்களுடன்....... இதுக்குள்ளே அங்கே வந்த பெண்மணி ஒருத்தர் இது என்னன்னு கேட்டாங்க. சொர்க்கத்துக்குப் போகும் வழின்னேன்:-)
"சுழலும் தூணைத் திருப்பினால் வரும் இடைவெளியில் நுழைஞ்சு நின்னுக்கிட்டு இன்னொருமுறை திருப்புனால் நாம் காணாமப் போயிருவோம்"

பாவம்..... அவுங்க முகத்தில் ஒரு பீதி!

பயப்படாமல் போங்கன்னேன்.

ஸ்ரீதர்க்கு நம்மை படம் புடிச்சுத்தருவது ரொம்பப் பிடிச்சுருக்கு. நம்ம கேமெராவை வாங்கிக்கிட்டு 'நீங்க ரெண்டு பேரும் இங்கே நில்லுங்க. இங்கே உக்காருங்க'ன்னு சொல்லி டைரக்ட் பண்ணிக்கிட்டே இருந்தார்.

நாமும் உருளையில் நுழைஞ்சு உள்ளே போனோம். கரும்பளிங்குலே வெள்ளை எழுத்துக்களில் கீதையின் பதினெட்டு அத்தியாயங்கள் முழுசும் ;பொறிச்சு' வச்சுருக்கு உள்ளே. பதினெட்டு ஜன்னல்கள்., மேற்கூரையில் பதினெட்டுக்கட்டங்களில் டிஸைன்கள்.அமைதியா உக்கார்ந்து மனசை ஒருவழி(???)ப்படுத்த ஏதுவாக அரை இருட்டா இருக்கு இந்த தியான மண்டபம்.

நரசிம்மம் மாதிரி தூணில் இருந்து வெளிப்பட்டு அடுத்த அறைக்குப் போனோம். வழியில் ஹாலில் இஸ்கான் கொடுத்த அருமையான ஓவியங்கள் பலதும் இருக்கு. ஏற்கெனவே அங்கே இங்கேன்னு பல ஊர்களில் இந்தப் படங்களைப் பார்த்திருந்தாலும் த்ரௌபதி வஸ்த்ராபரணம் ஸீன் புதுசாத் தெரிஞ்சது. மானக்கேடு ஆகிருச்சேன்னு தலை குனிஞ்சு நிற்கும் பாண்டவர்கள். அட்டகாசம் செஞ்சு சிரிச்சு மகிழும் துரியோதனன், அநியாயத்தைத் தடுக்க இயலாமையில் பதைக்கும் த்ருதராஷ்ட்ரன் நீயே கதின்னு பூரணமாக் கடவுளை நம்பிட்டப் பாஞ்சாலின்னு அருமையான ஓவியம்.


ஒரு பெரிய அறையில் பல இந்திய மொழிகளில் இதுவரை வெளிவந்த கீதைப்புத்தகங்கள் ஒரு புறம் இருக்க, நடுவிலே ஜனங்கள் தங்கள் கைப்பட கீதையைப் பிரதி எடுத்து எழுதித்தந்த நோட்டுப்புத்தகங்கள் அடுக்கி வச்சுருக்கு. அஞ்சு லட்சம் இருக்காம்!!!! எந்த மொழியானாலும் எழுதித் தரலாமாம். தினம் ரெண்டு மூணு பக்கமுன்னாலும் ஒரு மூணு மாசத்துலே எழுதிடலாமாம். ஸ்ரீராமஜெயம் எழுதுவதைப்போல இதையும் மக்கள்ஸ் எழுதி அனுப்புறாங்க. நடுவிலே புழுதி படிஞ்ச கீதோபதேச மரச்சிலை. உள்ளே போய் சுத்தம் செய்ய வழி இல்லாமக் கிடக்கு. கட்டிடத்தின் பின்பக்கமுள்ள இடங்களில் கொஞ்சம் பழுது பார்க்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்காம். ப்ரமாண்டமான கட்டிடம்தான். அடுத்த கோடி, மஹா த்வார் வரை போயிருக்கே!
வெளியே வந்தோம். கீழே போகும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் பிரமிச்சேன். இன்னிக்கு ரொம்ப விசேஷமான நாள். க்ருஷ்ண தரிசனம் கிடைச்சது பாக்கியம்ன்னு சொன்னார் நம்ம கைடு. விவரம் ஒன்னுமே தெரியாம வெறும் (மூட) பக்தியோடு வந்ததுக்குக் கிடைச்ச போனஸ்ன்னு நினைச்சுக்கிட்டேன். கோவில் காலையில் திறந்தால் ராத்திரி 9 மணிவரை மூடுவதே இல்லையாம்.

ஸ்ரீதர் சொன்னபடி படிக்கட்டில் இருந்து போஸ் கொடுத்துட்டுக் கிளம்பினோம். மணி ஒன்னரை ஆகப்போகுது. பாவம் ப்ரஷாந்த். சாப்பிடாமக் காத்திருப்பாரேன்னு மனசில்லாம இந்த இடத்தைவிட்டுக் கிளம்பினேன். இன்னும் நிறையப் பார்க்கவேண்டி இருக்கு. 'என்னடா க்ருஷ்ணா, அம்மாவை இப்படிப் பண்ணிட்டே?'ன்னால் 'இதுக்குப்போய் அலட்டிக்கலாமா? ப்ளவுஸ் பிரச்சனையில் இருந்து காப்பாத்திட்டேனே, பார்த்தியா? கவலைப்படாமல் போ'ன்னுட்டான்.

மேலும் படங்கள் இங்கே.


உட்லேண்ட்ஸ் ரெஸ்டாரண்ட்க்குப் போனோம். கோபாலும் ப்ரஷாந்தும் தாலி மீல்ஸ். எனக்கு ரவா இட்லி & காசி ஹல்வா.


இதுவரை இன்னிக்கு இரவு தங்கும் இடத்தை முடிவு செஞ்சுக்கலை. எங்கே தங்கலாமுன்னு இவர் தேடிக்கிட்டு இருக்கார் மடிக்கணினியில். இந்த ஊரைவிட்டுப்போகுமுன் என்ன பார்க்கணுமுன்னு டூரிஸம் கொடுத்த விவரத்தை ஆராய ஆரம்பிச்சேன்..


ஸ்நேகம் நிறஞ்ஞ விஷூ ஆசம்ஸகள்! ஈ கொல்லம் எல்லாவர்க்கும் நன்னாயி வரான் ஈஸ்வரன் அனுக்ரஹிக்கட்டே.

நண்பர்கள் அனைவருக்கும் விஷுப் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்!!!

28 comments:

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

//"சுழலும் தூணைத் திருப்பினால் வரும் இடைவெளியில் நுழைஞ்சு நின்னுக்கிட்டு இன்னொருமுறை திருப்புனால் நாம் காணாமப் போயிருவோம்"//

:)

//நண்பர்கள் அனைவருக்கும் விஷுப் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்!!!//
உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

said...

//கோபாலும் ப்ரஷாந்தும் தாலி மீல்ஸ். எனக்கு ரவா இட்லி & காசி ஹல்வா.//

சித்திரைத் திங்கள் பிறக்கும் இ ந் நன்னாளில்

நல் விருந்து தந்த தங்கள் குடும்பத்தாருக்கு
எங்களது நல் ஆசிகள்.

மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com

said...

வணக்கம், துளசி டீச்சர்

புத்தண்டு வாழ்த்துக்கள்

வெண்னை திங்கும் கண்ணனின் பொம்மை மிகவும் அழகு:)

வாழை இலையில் சாப்பாடு. ம்ம்ம் மிகவும் சுவையான சாப்பாடு.

said...

வாங்க bogy.in,

நன்றி. உங்களுக்கும் வாழ்த்துச் சொல்லிக்கிறோம்.

said...

வாங்க தெய்வா,

இன்னிக்குன்னு பார்த்து க்ருஷ்ணர் பதிவா வந்துருச்சு!

எல்லாம் 'அவர்' செயல்!

said...

வாங்க எல் கே.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

said...

வாங்க மீனாட்சி அக்கா.

அவுங்க ரெண்டு பேருக்கும்தால் தாலி இல்லைன்னு வாங்கிக்கிட்டாங்க:-)

அண்டா அண்டாவாப் பாயசம் பார்த்து அரண்டு போயிட்டேன்க்கா:-)

said...

வாங்க சுமதி.

வாழை இலை சாப்பாடுன்னாவே அருமைதான்ப்பா.

கீழே உக்கார உடம்பு ஒத்துழைப்பதில்லை:(

அதான் மிஸ் பண்ணவேண்டியதாப் போயிருச்சு.

said...

தமிழ்ப்புத்தாண்டு, மற்றும் சித்திரைவிஷூ நல்வாழ்த்துக்கள். விஷூக்கனி கண்டோ?.. கை நீட்டம் எத்ற கிட்டி :-)))))

said...

வணக்கம் டீச்சர், உங்களுக்கு இனிய மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உடுப்பி பதிவு அருமை. மிக்க நன்றி.

said...

அது சாம்பார் இல்லை டீச்சர் கர்னாடகா உளி, கெட்டியாக பூசனிக்காயைப் போட்டு அதன் டேஸ்டே தனி. இரசத்தில் (சாரு) கடாப் பெருங்காயம் போட்டு அசத்திருப்பார்கள். மாத்வாக்கள் ஸ்மையல் பெரும்பாலும் நல்லா இருக்கும்.

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்:)

said...

எல்லாமே பிரம்மாண்டம்.அண்ட பிரம்மாண்டம். கிருஷ்ணன் நாமம் வாழ்க.
எத்தனை ஆயிரம் பேர் வயிறார சாப்பிட்டு வாழ்த்தறாங்கப்பா.!
அந்த சுத்தற கதவு வழியாப் போகும்போது பயமா இல்லையாப்பா. என்னவோ விக்ரமாதித்யன் கதை மாதிரி இருக்கு.
இவ்வளவு பேர் கீதையை எழுதிவைத்திருக்காங்கன்னா ஒரே அதிசயமா இருக்குப்பா. கீதா பவன் சுவர்ல இருக்கிற கோலங்களும் ரொம்ப அழகா செதுக்கிவச்சிருக்காங்க.
புத்தாண்டுக்கு வீட்டிலியே பகவான் தரிசனம்.

said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
டீச்சர்:)

said...

வாங்க அமைதிச்சாரல்.

கைநீட்டம் இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் இடத்துலே இருந்து கிட்டி!!!!!

தேவலோகத்தில் இருந்து ஒரு ரூபாய்:-))))))

அதுலே கொஞ்சம் துளசியும் வச்சுக் கொடுத்தார் பெருமாள்!

நம்ம கோபால், கொடுப்பதை வழக்கம்போல் கொடுத்துட்டார்.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

இன்னிக்குன்னு அந்த இடுகை வாய்ச்சது எனக்கும் ரொம்ப சந்தோஷமே!


கர்னாடகா உளியா??????

ஓசையே வரலை:-))))))))))))

அது ஹுளி இல்லையோ??????

said...

வாங்க கோபி & சுமதி.

மஞ்ச(துண்டு) அறிக்கையை நீங்க யாரும் 'சட்டை'யே செய்யமாட்டீங்களா?????

இன்னிக்குத் தமிழ்ப் புத்தாண்டு இல்லை(யாம்) சித்திரைத் திருநாளாம்!

said...

வாங்க வல்லி.

எனக்கு வேறொரு பயம் இருந்துச்சு.

உருளையில் 'அடைச்ச புளி'யா ஆகிருவேனோன்னு:-)))


கலெக்ஷன் அஞ்சு லட்சம் ஆகிருச்சாம். நீங்களும் எழுதி அனுப்பலாம்.

அஞ்சு லட்சத்து ஒன்னு!!!!


அண்டா...கா......கஸம்.....

said...

உங்களோடு இந்த இணையப் பயணத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு கனி காணல் செய்ததோடு உங்களையும் கனி காண அழைக்கிறேன்.
http://www.virutcham.com/?p=1343


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . விஷூ ஆசம்ஸகள்

said...

உங்கள் வாசகர்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். எல்லோரும் வாங்க.

said...

வாங்க விருட்சம்..


கணி கண்டேன்.

கைநீட்டம் உடனே அனுப்பவும்:-))))

said...

அருமையான ஓவியம் டீச்ச்ர். தென்னனையில செஞ்ச பாத்திரமா? ஆச்சர்யமா இருக்கே!

said...

வாங்க நான் ஆதவன்.


ஓலைக்கூடையாட்டம் முடைஞ்சுருப்பாங்க போல!

எனக்கும் ஆச்சரியமாத்தான் இருந்துச்சு.

ஆனா வசதி பாருங்க. பாத்திரத்தைக் கழுவி எடுத்து வைக்க வேணாம் இல்லே:-))))

said...

திரௌபதி ஓவியம் அருமை.

"சொர்க்கத்துக்குப் போகும் வழி":)))

சுழலும் தூண் வித்தியாசமாகத்தான் இருக்கு.

said...

Excellent details..
நேர்ல பாத்தா மாதிரியே இருந்தது!

Ram

said...

வாங்க மாதேவி.

பயணங்களில் இப்படிப் புதுமைகள் ஏராளம். கண்ணில் படுவது ஒரு சில மட்டுமே:(

said...

வாங்க ராம்.

ஆதரவுக்கு நன்றி.