Friday, April 23, 2010

மீட்பு மிஷன் ஃபார் ஆத்மலிங்கம்

சிவனை ஆத்மலிங்க உருவில் இந்திரன் உட்பட எல்லா தேவர்களும் வழிபட்டு என்றுமே அழியாத ஆனந்தமும் புகழும் பெற்று அமோகமா இருக்காங்க. இதைப் பார்த்த(?) இலங்கை மன்னன் ராவணேஸ்வரன், நாமும் போய் ஆத்மலிங்கத்தை வழிபட்டு எல்லாப் புகழுக்கும் ஏற்றவனா மாறணுமுன்னு கயிலைக்குப் போறான்.

கடுந்தவம் இருந்து ஒருமுகமா இறைவனைத் தியானிக்க, ஈசனவன் முன் தோன்றினார். அதுவும் எப்படி? அஞ்சு முகங்களும், மூணு கண்களும், தலையில் கங்கையும் , இளம்பிறையான சந்திரனும் இருக்க, கழுத்தைச் சுற்றிய நல்ல பாம்பும், பாதமளவு நீண்ட கபால மாலையும் ஆட, இடப்பக்கம் மனையாள் பார்வதியுடன் தரிசனம் கொடுத்தார்.

'என்ன வரம் வேண்டுமோ கேள்'னு வேற சொல்லிட்டார். ராவணனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஈசனின் பாதம் பணிஞ்சு பலவகையாகத் துதித்து...................... 'ஆத்மலிங்கம் மட்டும் வேணும். வேறெதுவும் வேணாம்' ன்னு கேட்டதும், 'இது என்னடா வம்பாப்போச்சேன்னு நினைச்சாலும், என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன்னு சொன்னதை வாபஸ் வாங்க முடியாதே'ன்னு கோடி சூர்யப்ரகாசம் உள்ள ஆத்மலிங்கத்தை எடுத்து, கிஃப்ட் ராப் போட்டு நல்லாப் பேக் பண்ணிக் கொடுத்தார். ரெண்டு கைகளையும் நீட்டி பவ்யமா அதை வாங்கினான் இலங்கை வேந்தன்.
'இவருக்கு என்ன சொன்னாலும் தலையிலே ஏறாது. ஒரு வார்த்தை...ஒரே வார்த்தை நம்மைக் கேட்டுருக்கலாமுல்லே? சரி, வாயைத்திறந்து பேச வேணாம் அட்லீஸ்ட் ஒரு பார்வை நம்ம பக்கம் அனுப்பி இருந்தால் கூட கண்ணசைவில் வேணாமுன்னு கோடி காட்டி இருக்கலாம். ஆன்னா ஊன்னா 'பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேணுமுன்னாலும் கேள் னு வாயை விட்டுட்டு அப்புறம் அவதிப்படுவார். பஸ்மாசுரன் கிட்டே பட்டதெல்லாம் மனசுலே உறைக்கலை போல. ஆத்மலிங்கம் வேணுமுன்னு கேட்டுட்டான். இப்பப் பேய்முழி முழி'ன்னு மனசுக்குள்ளே பார்வதி குமுறுவது சிவன் மனசுலே நுழையுது.

"ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் இருக்குப்பா. இதை எங்கேயும் தரையில் வைக்காம கையில் ஏந்தியபடி 'நடந்தே' உன் நாட்டுக்குப் போகணும். இது தரை தொட்டுட்டா அப்புறம் நானே வந்தாலும் பெயர்த்தெடுக்க முடியாது"

'எப்படி சமாளிச்சுட்டேன் பார்த்தியா? வேற வழி எதாச்சும் கண்டு பிடிக்கலாம்'னு பார்வதிக்கு டெலிபதியில் ஒரு பதில் அனுப்பி......

பயபக்தியுடன் ஆத்மலிங்கத்தை மார்போடு சேர்த்துப் பிடிச்சு நடையை ஆரம்பிச்சுப் போய்க்கிட்டே இருக்கான் ராவணன்.


பொதுவா...... வேண்டாததுக்கெல்லாம் 'என்னம்மா சொல்றே'ன்னு அறிவுரை கேட்கும் நம்மாளு, சிலசமயம் நமக்கு மறுப்பு இருக்குமுன்னு கட்டாயம் தெரிஞ்ச சமயங்களில், நம்மோட ஐ காண்டாக்டை கவனமாத் தவிர்த்து, தனக்கு விருப்பட்ட முறையில் காரியங்கள் நடத்திக்கிடுவதில் கில்லாடி. அப்புறம் மாட்டிக்கிட்டு அவஸ்த்தையும் படுவார். ரங்க்ஸ்களுக்கே உள்ள குணம் போல!


தேவர்களுக்கெல்லாம் விவரம் தெரிஞ்சுபோய் 'குய்யோ முறையோ'ன்னு (வழக்கம்போல்) கூவல். மகாவிஷ்ணுகிட்டே ஓடறாங்க. அவரும் நல்லா 'யோசிச்சு' புள்ளையாரைப்போய் வேண்டிக்கிட்டு, 'உம்மால்தான் ஒரு உதவி ஆகணுமுன்னு பக்காவா தான் போட்ட ப்ளானைச் சொல்றார்.

ராவணன், அனுதினமும் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாக்களை ஒரு போதும் விட்டுவிடாமல் கடைப்பிடிக்கும் குணமுள்ளவன். சந்தியாவந்தனத்தைச் செய்யும் நேரம் வந்தால், தவறாமல் அதை எப்படியாவது செய்து முடிச்சே தீருவான். இந்த குணம்தான் நமக்கு இப்போ நல்லச் சான்ஸ் கொடுக்குது. பிள்ளையாரே, நீர் ஒரு சின்னப் பையனா அந்த நேரத்துக்கு அவன் முன்னால் போகணும். எப்படியும் உம்மிடம் தான் உதவி கேட்பான். செஞ்சுருங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்.

தென்திசை நோக்கி நடக்க ஆரம்பிச்ச ராவணன் அப்போ கோகர்ணம் என்ற இடத்துக்கு வந்துக்கிட்டே இருக்கான். (இந்த இடத்துக்கான கதையை அப்புறம் அடுத்த இடுகைகளில் சொல்றேன். இப்போ ஃப்ளோ தடைப் படவேணாம்) விஷ்ணு தன் கையில் இருக்கும் சக்ராயுதத்தை சூரியனை நோக்கி அனுப்பினார். அவர்போய் சூரியனை மறைச்சதும் கிரஹணசமயம் போல இருட்டிக்கிட்டே வருது. அச்சச்சோ..... பொழுது சாயப்போகுதே. சந்தியா வந்தனம் செய்யணுமே. கையில் உள்ள ஆத்மலிங்கத்தை எங்கேயும் வைக்கக்கூடாதுன்னு கண்டிஷன் இருக்கே. என்ன செய்யலாம். இன்னிக்கு ஒரு பொழுது கடமை தவறிட்டால் என்ன?ன்னு பலவிதமா யோசிக்கிறான். பாழும் மனசு கேக்கமாட்டேங்குது! சமயம் பார்த்து அங்கே ஒரு சின்னப் பையன் வந்துக்கிட்டு இருக்கான்.

"ஏம்ப்பா தம்பி, எனக்கொரு உபகாரம் செய்யுப்பா. இந்த பொதியைக் கொஞ்ச நேரம் கையில் வாங்கி அப்படியே வச்சுக்கோ. நான் பத்தே நிமிசத்துலே சந்தியாவந்தனம் செஞ்சுக்கிட்டு இதைத் திரும்பி வாங்கிக்கிறேன். ரொம்ப டெலிகேட்டான சமாச்சாரம். கீழே தரையில் வைக்கக்கூடாது. பத்தே நிமிசம் ப்ளீஸ்"

"அதெல்லாம் முடியாது. எங்கப்பா தேடுவார். நான் இருட்டுமுன்னே வீட்டுக்குப் போகணும்"

கெஞ்சிக் கூத்தாடிப் பையனைச் சம்மதிக்க வைக்கிறான் ராவணேஸ்வரன். பையன் பதிலுக்கு ஒரு கண்டிஷன் போட்டான்.

"ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருக்க முடியாது. பொதி கனமாவேற இருக்கும்போல! மூணுவாட்டி குரல் கொடுப்பேன். அதுக்குள்ளே நீர் வந்து வாங்கிக்கலைன்னா நான் கீழே வச்சுட்டுப்போயிருவேன். நீர் என்னைக் குத்தம் சொல்லிப் பிரயோசனமில்லை"
"இந்தாப் பிடி. நீ கண்ணை மூடித் திறக்கும் நேரத்துக்குள்ளே..தோ...வந்தேன்"

ராவணன் அப்படிப் போனதும் ஒப்புக்கு மூணு வாட்டி மெல்லக் குரல் கொடுத்துட்டுப் பொதியைத் தரையிலே வச்சுட்டான் பையன். அவதி அவதியா சந்தியாவந்தனம் பண்ணிப்புட்டு ஓடி வர்றான் அரசன். 'அடப்பாவி, கீழே வச்சுட்டு நிக்கறயே'ன்னு பையன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வச்சான். சொன்ன வேலை முடிஞ்சதுன்னு விஷ்ணுவுக்கு பயங்கர மகிழ்ச்சி. சக்ராயுதத்தை, 'திரும்பி என் கைக்கு வா'ன்னார். அது சூர்யனை விட்டு விலகினதும் பளிச்ன்னு வெய்யில் காயுது. பட்டப் பகல் நேரம்.

விண்ணுலகவாசிகள் சூழ்ச்சி பண்ணி நம்மைக் கவுத்துட்டானுங்கன்னு புரிஞ்சதும் கோபம் தலைக்கேறுச்சு. ஆத்மலிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்யறான். ஊஹூம்..... அசையணுமே! மனம் வெறுத்துப்போய் பொதியைச் சுத்தி இருந்த துணி, கயிறு எல்லாத்தையும் பிரிச்சுக் கடாசுறான். நாலாபக்கமும் போய் விழுந்துச்சு. விழுந்த இடங்களில் அவையெல்லாம் லிங்கமா உருமாறி உக்காந்துருச்சு. ப்ராணலிங்கத்தைத் தொட்டுக்கிட்டு இருந்த பொருட்களுக்கும் அதன் சக்தி கொஞ்சம் பாஸ் ஆகியிருக்கு. அவ்வளவு பவர்ஃபுல் சமாச்சாரம். ( இதைப் பற்றிய கதை பின்வரும் இடுகைகளில் வரும் என்று எச்சரிக்கிறேன்)

சொல்லமுடியாத துக்கத்தோடு இடத்தைவிட்டுப் போகும் ராவணன் நிலையை, வாயு பகவான் பார்த்துக்கிட்டுப் போய் சிவனிடத்தில் சொல்றார். அதுவரை குழப்பத்தில் இருந்த சிவன், 'அப்பாடா..... லிங்கத்தை அவன் கையில் இருந்து காப்பாத்திட்டேன்'னு சந்தோஷப்பட்டுக்கிட்டு, பார்வதியிடம் 'பொழுதன்னிக்கும் குறை சொல்வியே இப்பப் பார். லிங்கம் யார் கைக்கும் போகலையாம். வா போய் எங்கே இருக்குன்னு பார்த்துட்டு வரலாமுன்னு சொல்ல கணங்களும் கூடவே கிளம்ப எல்லோரும் வந்து அந்த அஞ்சு இடங்களையும் பார்த்தாங்க. வழிபட்டாங்க. கோகர்ணத்தோடு சேர்த்து அஞ்சு க்ஷேத்ரங்கள். அந்த அஞ்சுலே ஒன்னுதான் இந்த முருதேஷ்வர் ஆத்மலிங்கம். .

காலையில் எழுந்து பீச்சுக்கு ஒரு நடை போகணுமுன்னு நினைச்சது ஒன்னும் நடக்கலை. கோவிலுக்கு இன்னொரு முறை போகணும். நேத்து இருட்டிட்டதால் அங்கே இருக்கும் தீர்த்தங்களை காலையில் வந்து பார்க்கலாமுன்னு தள்ளிப்போட்டதும் நடக்கலை. கிளம்ப நேரமாயிருச்சுன்னு கீழே ரெஸ்டாரண்டுக்குப்போய் ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டோம். அருமையான இடம். பயணம் ப்ரோக்ராம் ஒன்னும் வச்சுக்காம ஒரு வாரம் வந்து அக்கடான்னு தங்கணும். பார்க்கலாம். வாய்க்குதான்னு!


மனசில்லா மனச்சோட கிளம்பி கேட்டுக்கு வெளியே இருக்கும் மலைப்பாதையில் (காரில்) போய் ப்ரமாண்டமா உக்கார்ந்துருக்கும் சிவனையும் சுற்றுப் புற அலங்காரங்களையும் ரசிச்சுட்டு அப்படியே கண்டபடி க்ளிக்கிட்டு, அங்கே சுந்தர் ராமேஷ்வர் என்ற பெயரில் இருக்கும் சிவனை வணங்கிட்டுப் புறப்பட்டோம். (சுடச்சுட புளிசாதம் ப்ரஸாதமாக் கிடைச்சது) நேஷனல் ஹைவே 17 இல் மறுபடி வந்து கலந்துக்கிட்டு வடக்கு நோக்கி நம்ம பயணம் ஆரம்பிச்சது.
கட்டடத்துலே வரிசை கட்டி நிற்கும் தங்க யானைகள்!!!!

சுந்தர் ராமேஷ்வர் என்ற பெயருக்குத் தகுந்தபடி இங்கே மூணு பக்கச் சுவர்களிலும் கைலாச ஸீன் அழகா வரைஞ்சு வச்சுருக்காங்க. படங்கள் ஆல்பத்தில். நேத்துப்போட்ட இடுகையில்ச் சுட்டி இருக்கு

ஷராவதி நதிப் பாலம் பராமரிப்பு வேலைகள் தொடங்கி இருக்கு. அதைக் கடந்து போகும் வண்டிகள், டோல் சார்ஜ் அஞ்சு ரூபாய் தரணும். இதே வழியாத்தான் நாம் திரும்பி வரப்போறோம் என்றதால் அதுக்கும் சேர்த்து பணம் கட்டிட்டு ரசீது வாங்கிக்கிட்டோம். ரொம்பவே அகலமான நதி. பாலம் நீண்டு கிடக்கு! ஷிமோகாலே இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சிக்குத் தண்ணீர் சப்ளை இந்த நதிதான்

29 comments:

said...

கோகர்ணம் கதை ரொம்ப சுறுக்கமாக முடிச்சிட்டிங்க ... முழுக்கதையும் இங்கே இருக்கு

said...

அக்கா, எனக்கு ஒரு டவுட்டு. இதே மாதிரிதானே உச்சிப்பிள்ளையாருக்கும் கதை சொல்லுவாங்க. ஒருவேளை ஆபரேஷன் 'ஆத்மலிங்கம்' முடிஞ்சதும் மலைக்கோட்டையில் வந்து உக்காந்துட்டாரா!!!(watch tower??)

ரங்க்ஸ்களுக்கான நேரிடையான வெளிக்குத்து அருமை :-)))))

said...

வாங்க கோவியார்.

சமுத்திர ஸ்நானம் செய்ய இயலாமப் பண்ணிட்டீங்களே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

'ஆப்பரேஷன் ஆத்மலிங்கம்' ஐயோ சூப்பர் தலைப்பா இருக்கு. எனக்குத் தோணாமல் போச்சே!!!!!!!

புராணக் கதைகள் ஏகப்பட்டது 'அநேகமா' ஒன்னுபோலவே இருக்கும். கற்பனை வளம் அப்போ ரொம்ப லிமிட்டடா இருந்த காலம்!

said...

ராவணன் சிலை நல்ல கம்பீரம்.எங்கே
சென்றாலும் யானைகள் உங்களுக்கு
காட்சி கொடுத்து விடுகின்றன டீச்சர்.இட்லி,வடை,காரச்சட்னி சூப்பர்
காம்பினேஷன் டீச்சர்.

said...

நல்ல பதிவு டீச்சர், இட்லி வடையுடன் கலக்கி விட்டீர்கள். நல்ல படங்கள் மிக்க நன்றி.

said...

:-) this is for attendance

said...

"கண்டொன்று சொல்லேல்",
"வஞ்சகம் பேசேல்"
என ஒவ்வை ஆத்திசூடியில் சொன்னதை
"கண்டொன்று சொல்",
"வஞ்சகம் பயில்"
என பிள்ளையார் மாற்றி படிச்சிட்டார் போல!

அநீதிதான். ஆனால் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்ததது போலல்லவா. இங்கு பெருமாளே செய்திருக்கார் எவன்(ள்) கேள்வி கேக்க முடியும். தேவர் எல்லாம் ஒன்று கூடி ராவணனை மடையனாக்குவதில் ஒரு அல்ப சந்தோஷமாக கூட இருக்கலாம்.

வணக்கங்கள்
ராஜ்குமார்

said...

வாங்க சுமதி.

//எங்கே எங்கே
சென்றாலும் யானைகள் உங்களுக்கு
காட்சி கொடுத்து விடுகின்றன //

உண்மைதான். வேளாங்கன்னி மாதா கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு யானை கம்பீரமா நிக்குது!

அது காரச் சட்டினி இல்லைப்பா. சாம்பார்!

said...

வாங்க நன்மனம்.

ஆஜர் ஹோ!!!!

said...

வாங்க ராஜ்குமார்.

வணக்கம். முதல் வருகை போல? நலமா?


தேவர்களுக்குரிய உயர்ந்த குணமில்லாமல் கீழ்த்தரமா நடந்துக்கும்
தேவர்களும் 'அங்கே' இருக்காங்க:(

said...

வாங்க பித்தனின் வாக்கு.

'கலங்காமல்' இருக்கத்தான் வெறும் இட்டிலி & வடை:-)

said...

யானை அணிவகுப்பு பிரமாதம். முருதீஸ்வரரும் சுந்தரமாக இருக்கிறார்! இருக்கிறதிலியே அழகு இட்லிவடைதான்.
அப்புறம் அந்த டைனிங் ரூம். இன்னா அழகுப்பா!!நயகரா போன போதும் அருவிக்கு மேலிருந்த பார்க்கிற மாதிரி டைனிங் டேபிள் கிடைச்சது. கண்ணாடித் தடுப்பையும் மீறி அந்தகாட்டு வெள்ளத்தின் சத்தம். அப்பாடா! பிள்ளையார் தான்பா உலகம் சுற்றும் பிள்ளை. எல்லா இடத்தில் வாங்கிக் கீழ வைக்கவே அவருக்கு நிறைய தக்ஷிணை கொடுக்கணும்:)

said...

எனக்கு ஒரு டவுட்டு...அதான் எப்பாவும் வரம் வாங்கிட்டு ஆப்பு வாங்குறாங்களே..அந்த கதை எல்லாம் அடுத்த வாங்குற ஆளுங்களுக்கு தெரியாதா...எப்படி எல்லாரும் வாங்கிட்டு இப்படி முழிக்கிறாங்க ! ! ;))

said...

வாங்க வல்லி.

'இட்லிவடை' அழகா!!!!!! ஓஹோ....அப்படியா!!!!!

டைனிங் ரூம் மட்டுமில்லைப்பா, அந்த ஹொட்டேலின் அறைகள் மற்ற பகுதிகள், வெளிப்புறத் தோட்டங்கள் எல்லாமே நல்ல சுத்தமா இருக்கு.

said...

வாங்க கோபி.

"உலகில் எது பெரிய ஆச்சரியம்?"

"நாள்தோறும் ஜீவராசிகள் எமன் வீட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்தும் மிஞ்சி உள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றனர். இதுவே பெரிய ஆச்சரியம்."

இது தருமதேவனின் கேள்விக்குத் தருமனின் பதில்.

நமக்கோ மறதி அதிகம். வேற ஒருத்தர் அனுபவத்திலிருந்து நாம் பாடம் படிக்க மாட்டோம்!

(கெட்டதையெல்லாம் மறந்துட்டுத் திரும்பத்திரும்ப ஒரே கட்சியை தூக்கி அரசுக்கட்டிலில் 'படுக்க' வைக்கிறோமில்லை!)

said...

பொதுவா...... வேண்டாததுக்கெல்லாம் 'என்னம்மா சொல்றே'ன்னு அறிவுரை கேட்கும் நம்மாளு, சிலசமயம் நமக்கு மறுப்பு இருக்குமுன்னு கட்டாயம் தெரிஞ்ச சமயங்களில், நம்மோட ஐ காண்டாக்டை கவனமாத் தவிர்த்து, தனக்கு விருப்பட்ட முறையில் காரியங்கள் நடத்திக்கிடுவதில் கில்லாடி. அப்புறம் மாட்டிக்கிட்டு அவஸ்த்தையும் படுவார். ரங்க்ஸ்களுக்கே உள்ள குணம் போல!


உங்க போன பதிவிலேயே இதுக்கு ஒரு பதிலும் இருக்கு போலே இருக்கே !!

கடந்து போன ஜென்மாவில் கோபால் என்னவா இருந்துருப்பார்? வேறென்ன. பருந்துதான். சந்தேகமே இல்லை எனக்கு.

// நம்ம்மோட ஐ காண்டாக்டை கவனமாத் தவிர்த்து, ....//

விடாதீங்க... முன்னாடி முன்னாடி போய் நில்லுங்க....

மீனாட்சி பாட்டி.
(செல் அதே தானா ? )

said...

// இருக்கிறதிலியே அழகு இட்லிவடைதான்.//

வல்லி நரசிம்ஹன் சொல்வது நூற்றுக்கு நூறு ரைட்.
ஆஹா...ஆஹா...


எனக்கு ஒரு நாலு வடை எட்டு இட்லி பாக் பண்ணி தோஹாவுக்கு பார்ஸல் செய்யச்சொல்லுங்க.

சுப்பு தாத்தா.

said...

ஆத்மா லிங்கத்துக்கு ஆவுடையப்பர் கிடையாதுன்னு சொல்லுவாங்களே.

இந்த பிள்ளையார் கதை திருச்சியில் ஸ்ரீரங்க பெருமான் பள்ளி கொண்டு எழுந்தருள காரணமான தல புராணதிலேயும் வருமே. விபீஷணன் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து இலங்கை செல்லும் போது ராமர் கொடுத்த பள்ளி கொண்ட பெரும்மனை கையில் எடுத்துச் செல்ல ( same condition கீழே வைக்கக் கூடாது)
காவேரியின் அழகில் மயங்கி குளிக்க ஆசை கொள்ள வந்தார் நம்ம தும்பிக்கையான். only 3 times. same condition வச்சுட்டார் கீழே. விபீஷணன் விரட்டியதில் ஓடிச் சென்று மலை மேல் உட்கார விடாமல் தலையில் விட்டான் ஒரு குட்டு . இப்போவும் இருக்காம் தலையில் தழும்பு மலைப்பிள்ளையாருக்கு.
பாருங்க மாமனும் மருமகனும் கூட்டு சேர்ந்து செய்யற வேலையை. அண்ணனையும் தம்பியையும் இப்படியா ஏமாத்தறது? அண்ணன் ஏமாந்த கதை தம்பிக்கு தெரியாதா? உஷாராக வேண்டாம்

http://www.virutcham.com

said...

வாங்க மீனாட்சி அக்கா.

முன்னாலே போய் நின்னாலும் நாம் ஏதோ கண்ணாடிச்சுவர் போலத்தான்.....

ஆமாம். பருந்துக்குப் பார்வை ரொம்ப கூர்மை. வேணும் என்பதை(மட்டும்) எங்கே இருந்தாலும் கவனிச்சிரும்:-)

said...

வாங்க சுப்பு ஐயா.

ஊசினால் பரவாயில்லையா????????????

said...

வாங்க விருட்சம்.

புள்ளை(யார்)க்கு இதே சோலி! நல்லா ட்ரெய்னிங் ஆகி இருக்கார்.

பல கதைகள் இப்படி இருக்கு.

பொட்டியில் வச்சு ஆத்துலே விடுவதுகூட சிலபல கதைகளில் இருக்கே! (வேற்று மதத்தில் கூட)

said...

மிக சுவாரசியமான கதை. இந்த இடம் எங்க இருக்குனு சொல்ல முடியுமா?

Ram

said...

வாங்க ராம்.

உங்க கெமெராவுக்குச் சரியான தீனி கிடைக்கும் இங்கே!

மங்களூரில் இருந்து ஒரு 180 கிலோமீட்டர் இருக்கும். நேஷனல் ஹைவே 17 இல் நூல்பிடிச்ச மாதிரி போய்க்கிட்டே இருங்க:-)

said...

கொஞ்சம் miss பண்ணிட்டேனோ? இத பாருங்க ௧௦௦ கிலோமீட்டர் இந்த பக்கம் வந்தேன் ஆனா அங்க வரலே..

http://www.photography-travel.com/2010/04/agumbe-cherrapunji-of-south-india.html

Ram

said...

கொஞ்சம் miss பண்ணிட்டேனோ? இத பாருங்க ௧௦௦ கிலோமீட்டர் இந்த பக்கம் வந்தேன் ஆனா அங்க வரலே..

Ram

said...

ராம்,

நாங்கதான் ஆகம்பே மிஸ் செஞ்சுட்டோம். நாலரை நாளுலே இதுக்கு நேரம் இல்லாமப்போச்சு.

said...

"பயணம் ப்ரோக்ராம் ஒன்னும் வச்சுக்காம ஒரு வாரம் வந்து அக்கடான்னு தங்கணும்"

ஆமாம் அவ்வளவு அருமையாக இருக்கிறது.

said...

வாங்க மாதேவி.

பேசாம ஒரு பதிவர் சந்திப்பு வச்சுக்கலாம்:-)