Sunday, December 07, 2008

PIT ம் BITS ம்


போட்டோ போட்டிக்கு


மகள் வீட்டு மரம்:-)



ஏ குருவி.... சிட்டுக்குருவி


இன்றலர்ந்த லில்லி



ஆரஞ்சுபருத்திப்பூ?



பட்டு வண்ண ரோசாவாம்.... பார்த்த கண்ணு மூடாதாம்



முள்ளுக்கு ஒரு மலர்க்கிரீடம்







காஸ்மாஸ் ( தமிழில் மாங்காய்நாரி)

ரோசாப்பூ சின்ன ரோசப்பூ



செம்பருத்திப்பூவு...சித்திரத்தைப் போல....



காத்திருப்பான் கமலக் கண்ணன்:-)



பறிக்கவா உன்னை?




என் ரசிகர்களே...... ....என்னை தெரியுமா?

51 comments:

said...

சூப்பருங்கோ

said...

கமலக் கண்ணன் காத்திருப்பாரா என்ன?

said...

போட்டோ போட்டிக்கு



அது இதுதானே,,,,,,,,,,,,

said...

வாங்க SUREஷ்
சூப்பருக்கு ஒரு நன்றி.

கமலத்துக்கு அருகில் நம்ம(கருமை நிறக்) கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் காத்திருப்பதைக் கவனிக்கலையா? :-)

said...

ஆமாங்க Sureஷ்.

அமைதிக்கான லில்லிப்பூ.

Peace Lily :-)

said...

அட ஆமா....


சக்திக்குள்ளே சிவத்தைக் கண்டுவிட்டேன்......

அதனால் தனியே தெரியவில்லை

said...

என்னங்க சுரேஷ்,

ட்ரான்ஸ்லே போயிட்டீங்களா? ஒரே பின்னூட்டம் அஞ்சாறுமுறை வந்துருக்கு:-)))))

Anonymous said...

மகள் வீட்டுல தென்னை மரம் மாதிரி இருக்கு. :)

said...

எல்லாப் படமும் நல்லாயிருக்கு! குறிப்பா, அந்த செம்பருத்தி சூப்பர்!, துளசி மேடம்.

said...

"ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுதே
துளசியின் கேமிராவுக்கே நன்றிகளை!”

நாங்களும் சொல்லிக்கிறோம் மேடம்:)!

said...

அடடா! மலர்களின் தரிசனம்

மனதை சுத்திகரிக்கிறது!

குழந்தையின் சிரிப்பு மாதிரி!


(மாங்காய் நாறி பேரு நல்லவா இருக்கு

நம்மளே அதுக்கு ஒரு பேரு வைச்சா என்ன?)

said...

டீச்சர்...பூக்கள், மரம், சிட்டுக்குருவி எல்லாமே சூப்பர்.

எந்தப் படத்தைப் போட்டிக்கு கொடுத்தீங்க? முதல் படமா? அதிலுள்ள திகதியை அழித்து விட்டுக் கொடுங்க.

போட்டிக்கு என்னோட சாய்ஸ் மகள் வீட்டு மரம் தான்.. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு..

said...

பூக்கள் எல்லாம் அழகா இருக்கு!

said...

ரிஷான் சொலவதே சரி. இரண்டாவது படம் போட்டிக்கு வெகு பொருத்தம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஆக்லாந்து வீட்டுலே இருக்கும் ஒருவகையான ஈச்ச மரம் அது.

said...

வாங்க அமல்.

செம்பருத்தியைக் கண்ணே கண்ணேன்னு கன்ஸர்வேட்டரியில் வச்சு வளர்க்கிறேன். அதுக்கு நன்றிக் 'கடனா' அருமையா போஸ் கொடுத்துச்சு:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்க பின்னூட்டத்தையெல்லாம் காமிச்சுப் புது கேமெராவுக்கு அடி போடணும்!

பாருங்கள் புகைப்பட வித்தகர்கள் எல்லாம் பாராட்டுறாங்கன்னு சொன்னால்.......

ம். முயற்சிக்கணும்.:-)

said...

வாங்க ஜீவன்.

நாறின்னா நல்லா இல்லேதான் . ஆனா மாங்காய் நல்லா இருக்கே.

நாரின்னு வச்சுக்கிட்டா? நாகரிகம் உள்ள நாரீமணி:-)

இது மலையாளப்பேர். உள்ளூர்லே COSMOS னு சொல்றாங்க.

said...

வாங்க ரிஷான்.

போட்டிக்கு எடுக்கும்போது தேதிய எடுக்க மறந்து போயிருது. போகட்டும். வெற்றி இலக்கு இல்லைப்பா. இருத்தலின் அடையாளம் மட்டுமே.


போட்டி விதிகளின் படி நாமே எடுத்த படம்தானே கொடுக்கணும்.

மகள் வீட்டுப் படம் அவளே எடுத்தது.

பிட் மக்களிடம் கேட்டுருந்தேன், மகளுக்கு வலைப்பதிவு இல்லை. அவள் பெயரில் ஒரு படம் அனுப்பலாமான்னு. ஒன்னும் பதில் வரலை.

சரி. நம்ம மக்கள்ஸ் பார்க்கட்டுமுன்னுதான் இங்கே போட்டுவச்சேன்.

said...

வாங்க தமிழ் பிரியன்.

கொர் கொர் முடிஞ்சதா?

said...

ராமலக்ஷ்மி,

தென்னை மகளோடது:-)

said...

தென்னை மரம் அட்டகாசம் ;))

said...

இரண்டாம் படம் அருமை

said...

பட்டுவண்ண ரோசாவோ ரொம்ப அழகுதான் கண்ணை எடுக்கவே முடியல.. அந்த கண்ணன் இத்தனைநாளா காத்திருக்கார் கண்டுபிடிக்கத்தன் முடியல.. கவனம் கவனம்.. படங்கள் எல்லாமே அழகு..

said...

எல்லாம் ரொம்ப நல்லாருக்கு...ஆனா அந்த பூனை ஃபோட்டோ ரொம்ப டாப்...என்னவோ பாஸ்போர்டுக்கு ஃபோட்டோ எடுக்கற மாதிரி எப்பிடி மொறைக்குது பாருங்க :0)

said...

//என்னவோ பாஸ்போர்டுக்கு ஃபோட்டோ எடுக்கற மாதிரி எப்பிடி மொறைக்குது பாருங்க :0) //

அது சரி...
டீச்சர், நம்ம பூனைக்கு கண்ணு பட்டிடுச்சு..
சீக்கிரம் சுத்திப் போடுங்கோ :)

said...

வாங்க கோபி & திகழ்மிளிர்.

நன்றி. மகளுக்குச் சொல்லிட்டேன். அவளும் உங்களுக்குத் 'தேங்ஸ்'ன்னு சொல்லச் சொன்னாள்.

said...

வாங்க கயலு.

கண்ணன் கண்ணாலேயே கதைகள் பல சொல்லுவார். நான் எங்கே போனாலும் கூடவே வந்து பார்க்கணும். இல்லைனா தூக்கம் பிடிக்காது அவருக்கு:-))))

said...

வாங்க அதுசரி.

அவர்தாங்க நம்ம தளத்தின் அஃபீசியல் மாடல்!

போஸ் கொடுத்துக் கொடுத்துப் பழகிட்டார்:-))))

said...

ரிஷான்,

//நம்ம பூனை.....//
ஹைய்யோ.... இந்த நம்ம எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

நீங்க எல்லாம் பாராட்டுனதும் மகள் தென்னையை 'பிட்'க்கு அனுப்பி இருக்கேன்:-)

said...

படங்கள் எல்லாம் அருமை. முக்கியமா பூனை கொள்ளை அழகு....

said...

வாங்க பிரேம்குமார்.

உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு படம் கடைசியில் சேர்த்துருக்கேன்.

said...

ஆரஞ்சு பருதிப் பூ என்று சொன்னீர்கள் ஒண்ணே ஒண்ணுதானே தெரியுது?[எனக்கு வண்ணக் குருடுநஸ் இல்லை ]
அந்த கேக்டஸ் மலர்கள் அவ்வளவு அழகு .ஊட்டியில் இருந்த காலத்தில் ,அவைகளைப் பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன்.துரு பிடித்த தகரப்பெட்டியிலிருந்து சிதறி விழும் வைரக் கற்கள் என்று சொல்லிகொள்வேன் .
----
வண்ண மலர்களும் கேமராவும் கிடைத்தால் போதுமே,க்ளிக் க்ளிக்தான்..பளிச் பளிச்தான்.தோட்டத்தையே பதிவு போட்டு விட்டீர்கள்

said...

தென்னை மரத்தில் நிழல் ஓகே.ஆனால் ந்ழல் கீழே விழுந்தால் அதன் அழகு தனி.அந்த சின்ன குருவியைப் பாருங்கள்....வெயிலுக்கு இதமாய் தன் நிழலில் தானே நின்று கொண்டிருப்பதை...அது, எனக்கு பிடித்த க்ளிக்.
____
உங்கள் பூனை கூட நிழல் மாதிரிதான் ஒரு படத்தில் தெரிகிறது.
மேடத்துக்கு உதவி செய்கிறது என்று நினைக்கிறேன்.
........
ஹட்ச் டாக் மாதிரி உங்கள் மியாவ் கூட,நீங்கள் எங்கே போனாலும் வருமோ

said...

உங்க பூனை நல்லா இருக்கு..

இந்த மாதிரி ஒரு புஸ் புஸ் பூனைய எங்க மாமா வீட்ல வளத்தாங்க... நல்லா இருக்கும்... இது குட்டியா இருக்கும் போது, தானா வாசல்ல வந்து நின்னது... நாந்தான் அதுக்கு கொஞ்சம் சோறு போட்டேன். எங்க அத்தைப் பையன் பார்த்துட்டு பயந்து கத்திட்டான்...


ஒல்லியா எலும்பும் தோலுமாய் வந்தது.. அத நான் எங்க வீட்டுக்கு கொண்டு போய் வளர்க்கணும்னு(பள்ளி விடுமுறைக்கு தாத்தா/பாட்டி ஊர்லதான் இருப்பேன்) பிளான் பண்ணி பெரிய அத்தை வீட்ல வச்சியிருந்தேன்... அது அவங்க கூட நல்லா பழகி, எனக்கும் அவங்களுக்கு சண்டையாயிட்டு, பூனைக்கு சொந்தம் கொண்டாடுறதுல...

வால்தான் அந்த பூனையோட ஹைலைட். சும்மா சிங்க வால் மாதிரி ஜம்முன்னு பெரிசா, புஸ் புஸ்ஸுனு இருக்கும்..

பின்னால கொழு கொழுன்னு வளர்ந்து குட்டி எல்லாம் போட்டது ஒரு தனி கதை...


ஹ்ம்ம்...... இப்ப அந்த பூனையும் இல்ல, அந்த அத்தையும் இல்ல :-(

said...

என் ரசிகர்களே...... ....என்னை தெரியுமா?


தெரியாம எங்க போறது, அதான் உங்க வீட்டு கொலுவுல சூப்பர்வைசரா இருந்தாரே.

said...

படங்களும், அதற்கு உங்களின் வாக்கியங்களும் அருமை.

said...

வாங்க கோமா.

ஹைபிஸ்கஸ் நம்ம வீட்டுலே ரெண்டு நிறத்தில் இருக்கு. ஒன்னு 'செம்'பருத்தின்னா இன்னொன்னு 'ஆரஞ்சு'பருத்தின்னு....:-)

(ரெண்டு படமும் போட்டுருக்கேனேப்பா)

நம்ம ஜிகேதான் வீட்டுக்கு ஆம்பளையா இருக்கான். மெய்க்காப்பாளன்.

கோபால் டூருக்குக் கிளம்பும்போது,
'ஜிகே, யூ ஆர் மேன் ஆஃப் த ஹௌஸ் ஃப்ரம் நௌ ஆன்' சொன்னதும் புரிஞ்சுக்குவான் போல. ஒரு வினாடியும் என்னைப் பிரிஞ்சே இருக்கமாட்டான்ப்பா.

said...

வாங்க ரமேஷ்.

உங்க பாராட்டை நம்ம ஜிகேவுக்குச் சொன்னதும் சிரிக்கிறான்.

இவனும் வந்தவந்தான்.

இங்கே பாருங்க

said...

சித்திரக்கவிதையா? நன்றாய் இருந்தது
www.sugumar.com

said...

வாங்க சுகுமார்.
வணக்கம். நலமா?

முதல் வருகைக்கான வரவேற்புதான்.

அடிக்கடி வந்து போகணும். நன்றி.

said...

வாங்க அமித்து அம்மா.

நினைவில் நின்றவன் நன்றி சொல்கின்றான்:-))))

said...

துளசி, சாரிப்பா, பார்க்காம விட்டுட்டேன்.
இத்தனை படங்களா வசந்தகாலத்துக்கு. எல்லாமே புது வண்ணம்.
ஒரு ஒரு கதை சொல்லற மாதிரி இருக்கு.
ஆத்தங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே,பூத்த மென்மலரோடு காத்திருக்கும் கண்ணனே மலர்களை விட அழகு.

தென்னங்கீற்றுக்குத் தனி கவர்ச்சிதான்.

எல்லாப்படமும் நல்லா இருக்குப்பா.

said...

ஐயோடா நான் கேட்டது ,
"ஒரே ஒரு பருத்திதானே இருக்கு, நீங்க ,6-5 பருத்திப் பூன்னு சொல்லீட்டீங்களே

said...

வாங்க வல்லி.

தென்னங்கீத்துக்கு நிழல் இல்லாத படத்தைத் தவறுதலா அனுப்பிட்டேன்ப்பா.

கோடை காலப்பூக்கள் தோட்டத்தில் மலர ஆரம்பிச்சாச்சு. அதான்..... கொஞ்சம் இங்கே ஷோ காமிச்சேன்:-)

தீர்த்தக் கரையினிலே.....காத்திருந்தான் ஒருவன்:-))))

போன வாரம் வெட் செக்கப் கொண்டு போனோம். மானத்தை வாங்கிட்டான்:-)

said...

கோமா,

இங்கே மழைப்பா. வத்திக்குச்சி நனைஞ்சுபோச்சு அதான் பத்திக்கலை.

ஆரஞ்சு இப்படி என் காலை வாருமா? :-)))))

said...

அக்கா வீட்டில் பூத்துக் குலுங்கிய இன்க்கி பின்க்கி பான்க்கி...உங்கள் பார்வைக்கு.உங்கள் FLOWER POT ல் சொருக இன்னொரு மலர்
[செப்/மாதம் எடுத்தது.]

http://picasaweb.google.com/ngomathi/Sembaruththi?authkey=D1NAnEslGNc#

said...

இங்கே மட்டும் என்னன்னு நனைஞ்சீங்க[சாரி சாரி ]நினைச்சீங்க?ஒரே கொட்டு கொட்டுன்னு கொட்டுதாக்கும்.வாழ்க வளமுடன்னு வாழ்த்துறவங்கெல்லாம்,வாழ்க வெள்ளமுடன்னு வாழ்த்திட்டு நீச்சக் அடிக்கிறாங்க ...ஆனாலும் வத்திக்குச்சி தொட்ட உடனே பத்திக்கிச்சுன்னு சொல்றாப்லே வச்சிருக்கொம்லே.....

said...

கடைசியில இருக்கிற கருப்பு ரோஜாவ - ராஜாவ எங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

said...

பிங்கியை அனுப்புனதுக்கு நன்றி கோமா.

இந்த நிறம் இங்கே கிடைக்குதான்னு பார்த்துக்கிட்டே இருக்கணும். ஒரு குறிப்பிட்ட கடையில்தான் ஹைபிஸ்கஸ் கிடைக்கும். அது கிடைக்கும் சமயம், டிஸ்கவுண்ட் ஆஃபரும் வேணும்.

லக் இருக்கான்னு பார்க்கலாம்:-)

said...

வாங்க வெயிலான்.

ராஜாவின் பார்வையைக் கவனிச்சீங்களா? :--)))))