Wednesday, December 10, 2008

ரத்னேஷ்: சீனியர் & ஜூனியர்.

இந்த வருசம் நம்ம வீட்டுத் தோட்டத்துலே மகசூல் தாராளமா இருக்கு.

டாக்குட்டர் வேற பழங்கள் சாப்புடுங்கன்னு சொல்லிட்டார்.அதுவும் ஃப்ரெஷாச் சாப்புடுங்கன்னு.

இதைவிட ஃப்ரெஷுக்கு எங்கே போறது?



தினம் ஒரே ஒரு கை(அளவா இருக்கணுமுலே?) நிறையப் பறிச்சோமா, தின்னோமா ன்னு இருக்கணும்.

கோபால் வேற ஊருலே இல்லீங்களா.......

தனியாவே முழுங்க வேண்டியதாப் போச்சுங்க(-:








பழுக்காமக் காயா இருக்கும்போது பார்க்க அவ்வளோ அழகா இல்லை(-:

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று. வலது பக்கம் பூ.



ராஸ்பெர்ரி பல நிறங்களில் இருக்குது. ஒரு ஏழெட்டு வகை கறுப்பு, மஞ்சள் ( இதை கோல்டன் ராஸ்பெர்ரின்னு சொல்றாங்க) பர்ப்பிள், லேசா ஆரஞ்சு ன்னு. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த அழுத்தமான பிங்க், ரெட் இதுதான்.

வைட்டமின்கள் ஏ, கே, சி, மாங்கனீஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலெட், பொட்டாசியம், இரும்புச்சத்துன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இந்த ராஸ்பெர்ரியில் அடங்கிக்கிடக்கு. இத்தனைக்கும் ரொம்பச் சின்னப் பழங்கள். ஒவ்வொன்னும் 3 கிராம் எடை இருந்தாவே அதிகம்.

இந்தச் செடிகளில் பூக்கும் பூவுலே, இருக்கும் நெக்டர் (தேன்னு சொல்லலாமா) வண்டுகளுக்கும் தேனீக்களுக்கும் ரொம்பப் பிடிக்குமாம். ஆமாம்ப்பா. ஒரே பம்பிள் பீ கூட்டமா மொய்ச்சுக்கிட்டு இருக்கு அங்கே.

இந்த செடியின் ( செடி என்ன செடி? புதர்ன்னு சொல்லலாம்) இலைகள் மருத்துவ குணம் நிறைஞ்சதாம். மூலிகை தேநீர் போட்டுக் குடிக்கலாமாம். பெண்களுக்கு வரும் மாதவிலக்கு சம்பந்தமான வலிகளுக்கு கைகண்ட நிவாரணியாம் இந்த இலை போட்டுச் செஞ்ச 'டீ'.

இந்தப் பழங்களும் லேசுப்பட்டதில்லை. பட்டியலைப் பாருங்க.
inflammation, pain, cancer, cardiovascular, disease, diabetes ,allergies, age-related cognitive decline, degeneration of eyesight with aging......

பேசாம சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்துன்னு சுருக்கமாச் சொல்லிக்கலாம். தினமும் சாப்பிட்டா மேற்கண்ட வியாதிகள் வராம உடலைப் பேணிக்கிட்டு, உடல் பலத்தோடுத் தினம் தினம் பதிவு எழுதலாம்,இல்லை.

ஆனால் வெறும் கோடைகாலத்துலே மட்டும்தான் பழங்கள் சீஸன். குளிர் வந்தவுடன் இந்தச் செடிகளும் இலைகளை உதிர்த்துட்டுக் குச்சிகுச்சியா நிக்குது. வெறுங்குச்சின்னுட்டு இதையெல்லாம் பிடுங்கிப்போடப் பார்த்தவர்கிட்டே இருந்து நம்ம செடிகளைக் காப்பாத்துன பெருமை யாருக்குன்னு உங்களுக்குத் தனியாச் சொல்லணுமாக்கும்!

இந்தச் செடிகளுக்குத் தானாவே அப்படியே பரவிப் பல்கிப் பெருகும் குணம் இருப்பது நல்லதாப் போச்சு. ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இந்தச் செடிகளை நடணுமாம். சில வருஷங்களில் அப்படியே எல்லா இடத்தையும் அடைச்சுப் புதர்கள் உருவாகிரும். (நம்ம வீட்டுலே முந்தி இருந்த பாட்டி செஞ்ச கைங்கரியம். இப்ப நமக்கு பலன் தருது)


ஆமாம் இப்ப எதுக்கு இப்படி ஒரு தலைப்புன்னு கேக்கறீங்களா?

ம்ம்ம்ம்ம் மாட்டீங்களே..... அதையும் இவளே சொல்லிட்டு போட்டுமுன்னுதானே?


போனவருசம் ராஸ்பெர்ரி பதிவு போட்டப்ப,


RATHNESH said...

மேடம்,

// பழங்களைத் தினம் பறிச்சு ஃப்ரெஷா முழுங்கிக்கிட்டு இருக்கேன், can you ever get fresher than this?னு:-)))'

தினம் பழம் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க:-)//

ஒருவார காலத்துக்குள் உங்களுக்கு உத்தரவாதமாக வயிற்றுவலி வரா விட்டால் ஒர் தமிழ்ப் பழமொழியே தப்பாகிவிடும் அபாயம் இருக்கிறதே!


இந்தவருசம் என்னன்னா அவரை ஆளையே காணோம். அஸாம்லே இணையம் இணைப்பு எல்லாம் சரியாச்சோ என்னவோ..........

இந்தப் பதிவுதான் நம்ம ரத்னேஷுக்கு நாமெல்லாம் சேர்ந்து அனுப்பும் ஃப்ரெண்ட்ஷிப் கார்ட்.

வாங்கப்பா எல்லாரும். கார்டுலே (பின்னூட்டக்)கையெழுத்துப் போட்டுப்போங்க.

17 comments:

said...

me the first?:):):)

said...

//வாங்கப்பா எல்லாரும். கார்டுலே (பின்னூட்டக்)கையெழுத்துப் போட்டுப்போங்க.//

:):):)

said...

இந்த ராஸ்பெரி பழம் ஏனோ ஹரிணிக்கு பிடிக்காது,ராஸ்பெரி பேர சொன்னாலே சிரிப்புதான்,கூடிய சீக்கிரம் ஒரு வாய்ஸ் பதிவு போடறேன் இத வெச்சு.

said...

கோபால் சார் இருந்தாலும் வேடிக்கைத்தான் பார்க்கப்போறாரு.

Anonymous said...

எனக்கு இந்த ராஸ்பெரி சாப்பிட அவ்வளவு பிடிக்காது. சின்ன வயசில சாப்பிட்ட இருமல் மருந்து ஞாபகம் வந்திரும்.(நமக்குத்தான் நல்லதுன்னா ஆகாதே)

said...

/*(பின்னூட்டக்)கையெழுத்துப் போட்டுப்போங்க*/
போட்டாச்சு

said...

வாங்க ராப்.

ரெண்டு கையெழுத்தா? பேஷ் பேஷ்
வெல் டன்:-)

said...

வாங்க குடுகுடுப்பை.

வாய்ஸ் பதிவா?

போட்டுருங்க. கேட்டுருவோம்.

said...

வாங்க இளா.

ஒரேதா இப்படிச் சொல்லப்பிடாது....

அப்பப்ப ஒன்னு ரெண்டு கொடுக்கறதுண்டு.

பார்க்க வச்சுத் தின்னா வயிறு வலிக்குமுல்லே!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

இருமல் மருந்து செர்ரி வாசனையாச்சேப்பா....

மூக்கைப் பிடிச்சுக்கிட்டு நாலு ராஸ்பெரி முழுங்கி வையுங்க, மணம் தெரியாது. குணம் நிறைஞ்சது.

said...

வாங்க நசரேயன்.

நன்றி:-)

said...

ரொம்பப்புதரா இருந்தா 'பேர் சொல்லாதது' வரும்..

said...

வாங்க தங்ஸ்.

பேரைச் சத்தமாச் சொன்னாலும் அது வராது:-)))

'அது' இல்லாத நாடு இது:-)

said...

இந்த பழங்களை முஸ்தபா கடையில் பழங்கள் இருக்கும் இடத்தில் பார்த்து இருக்கிறேன். ரசபெர்ரி ஐஸ்கிரீம் கூட சாப்பிட்டு இருக்கிறேன். ஸ்டாபெர்ரி சுவைக்கும் ரசபெர்ரிக்கும் அவ்வளவாக வேறுபாடு கண்டுபிடிக்க எனக்குத் தெரியல.

இன்னிக்கு செடியோட நீங்கள் போட்டிருக்கும் படமும் விளக்கமும் நிறைய தகவல்களாக தெரிந்து கொண்டேன்.

******

சீனியர் ரத்னேஷ் எப்படி இருக்காருன்னு தெரியல, எனக்கு அதன் பிறகு மின் அஞ்சல் எதுவும் வரலை.

நானும் உங்க கார்டில் கையெழுத்துப் போட்டுக்கொள்கிறேன்.

நாள் சென்றால் நல்ல நட்புகள் நினைவுக்கு வருது இல்லையா ? உங்களின் தூய உள்ளம் இந்த இடுகையால் சிறிதேனும் புரிகிறது.

said...

நானும் போட்டுட்டேன் கையெழுத்து!!!இங்க கலர் கலரா பார்திருக்கேன்..ஆனா ருசி எப்படினு தெரியாது...இனி ஒரு கை பார்க்கணும்.

said...

வாங்க கோவியாரே.

ஸ்ட்ராபெர்ரி, கொஞ்சம் லேசான புளிப்பு. செடியும் குத்துச் செடியாத் தரையோடு இருக்கும். ரெண்டு மூணு நாள் வச்சுத் திங்கலாம்

ராஸ்பெர்ரி இனிப்பான பழம்தான். நல்ல அழுத்தமான் பிங்க் சிகப்பில் இருந்தால் இனிப்பு கூடுதல்.
ஒருநாளுக்கு மேல் தாங்காது.

ரத்னேஷுக்கு அனுப்புன தனிமடலுக்கு பதில் வரலை.

பார்க்கலாம்.

said...

வாங்க சிந்து.

தின்னு பார்த்துத் தீர்ப்பு சொல்லுங்க:-)